இடுக்கன் வருங்கால் நகுக...
தெருக்குறள்---வெள்ளத்துப்பால்
---------------------------------------------------------------------------------------
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'டினில் பின் செல்பவர்
----------
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
---------------------
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்...இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
-------------------------
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
-----------------------------
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
-------------------------
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
----------------------------
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
---------------------------------
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி.
----------------------------------------------
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்,
----------------------------------------------
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
------------------------------------------------------------
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை
Theruk KuraL
-
- Posts: 3609
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Theruk KuraL
Nalla kuraLkaL. Kosurudan (10+1) kodutthathu tamizhar vazhakkatthai nilai niRutthiyathu! Mudalil kural (olakkural) enru ninaitthen.
Kadukkan theriyum (kAthil aNivathu, இடுக்கன் enRAl enna?
Kadukkan theriyum (kAthil aNivathu, இடுக்கன் enRAl enna?
-
- Posts: 3029
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Theruk KuraL
வெகு அருமை. காலத்தே தொடுத்துள்ள குறள். மிக்க நன்றி.
வாழ்க [ மழை ] வளமுடன்
தஞ்சாவூரான்
05 12 2015
வாழ்க [ மழை ] வளமுடன்
தஞ்சாவூரான்
05 12 2015
-
- Posts: 1819
- Joined: 06 Feb 2007, 21:43
Re: Theruk KuraL
Should have been இடுக்கண் (Means problem).kvchellappa wrote: Kadukkan theriyum (kAthil aNivathu, இடுக்கன் enRAl enna?
-
- Posts: 16852
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Theruk KuraL
புலிக்கும் பதம் சறுக்கும்
அருமை போம், 'இரு வரி'ப் புலியாரே...
அருமை போம், 'இரு வரி'ப் புலியாரே...
-
- Posts: 3609
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Theruk KuraL
இருவர் இப்புலியாரே.. (Jekyll and Hyde). தமிழில் புலி; காரணமின்றி சீறுவதிலும் புலி.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Theruk KuraL
தண்ணீரை காசாக்கி நற்குலப்பெண்டிர்
கண்ணீர் வடிக்கும் பாழ் குடியாக்கி
மண்ணுக்குள் சேமிக்கா ஊதாரித்தனம்
எண்ணி பழி தீர்த்து கொண்டாயோ H2O ?
கண்ணீர் வடிக்கும் பாழ் குடியாக்கி
மண்ணுக்குள் சேமிக்கா ஊதாரித்தனம்
எண்ணி பழி தீர்த்து கொண்டாயோ H2O ?
-
- Posts: 3029
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Theruk KuraL
எங்கேயோ கேட்ட [சுட்ட ] குரல் [குறள்]
பொறுப்பு துறப்பு. கண்டிப்பாக படைப்பு என்னுடையது அல்ல. பகிர்வு மட்டுமே.
தஞ்சாவூரான்
26 07 2016
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!!
1. செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன்,
அப்போன் செல்போனில் எல்லாம் தலை...
2. தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில்
ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்...
3. மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன்
செல்போனை நோண்டாதிருத்தல்...
4. 2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே 3G யில் போட்ட டேட்டா...
5. உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் சார்ஜர்...
6. பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு...
7. முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு...
8. மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண
கால் செய்து பேசி விடல்...
9. ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
பில் கட்டியே சாவார்
பொறுப்பு துறப்பு. கண்டிப்பாக படைப்பு என்னுடையது அல்ல. பகிர்வு மட்டுமே.
தஞ்சாவூரான்
26 07 2016
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!!
1. செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன்,
அப்போன் செல்போனில் எல்லாம் தலை...
2. தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில்
ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்...
3. மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன்
செல்போனை நோண்டாதிருத்தல்...
4. 2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே 3G யில் போட்ட டேட்டா...
5. உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் சார்ஜர்...
6. பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு...
7. முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு...
8. மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண
கால் செய்து பேசி விடல்...
9. ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
பில் கட்டியே சாவார்