Arut perum Jothi Thani perum Karunai

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

முக்தி வேண்டும் ....
முக்தியே வேண்டும்..!

வாடகை வீட்டில் குடியிருந்தவன் வீட்டை மாற்றி வேறுவீட்டுக்குக் குடிபோகின்றபோது, பழையவீட்டில் தான் கையாண்ட உடைமைகளை யெல்லாம் புதிய வீட்டில் கோண்டு போய்ச் சேர்க்கிறான். இப்படி மனிதன் ஒரு பிறவியில் தேடிக்கொண்ட கர்மபந்தங்களா
கிய வினைப் பதிவுகளை எல்லாம் இன்னொரு பிறவிக்குக் கொண்டு செல்கிறான். உடம்பும் ஒரு வாடகை வீடு தான். வாடகை அதிக தொகையானால் அதற்கேற்ற நல்ல வசதிகளோடு கூடிய வீடுகிடைக்கிறது. தாழ்ந்த தொகையானால் வாடகையானால் குடிசைவீடு கிடைக்கிறது. வசதிகள் இருக்க மாட்டா.

இதைப் போல நல்வினைகளும், புண்ணியங்களும் இருப்பானால் நல்ல சுகதேகமும், சுகவாழ்வும் கிட்டுகிறது. தாழ்ந்த பாவங்கள் இருப்பானால் மனிதனுக்கு வாதைப்படுகின்ற வாழ்வு கிட்டுகிறது. அழுகணி சித்தர் உயர்வும், தாழ்வும் வேண்டாம் ஜீவன் விடுதலை வேண்டும் என்கிறார். ஆகவே, சித்திரமும் வேண்டாம், சிலையும் வேண்டாம் உத்திரம் ஓங்கித் தூய்மை பெற்று ஊரம்பலமாகிய முக்தியே வேண்டும் என்று கேட்கிறார்.
Last edited by venkatakailasam on 07 Oct 2012, 18:33, edited 1 time in total.

mohan
Posts: 2807
Joined: 03 Feb 2010, 16:52

Re: அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை

Post by mohan »

Please put the subject in English and provide a translational!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

Heading changed to English as suggested.....

Translation is optional..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம்.

தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம்

மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல்
தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம்.

கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம்.

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே
ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம்.

நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்
பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்.

வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று
சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம்.

ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்
ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம்.

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்
புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம்.

பத்ரகிரியார்...

Sidhar Sinthanai

from a FB friend

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

Image

சென்னை ஏழுகிணறு பகுதியில், எண் 31, வீராசாமி தெருவில், 1825-ஆம் ஆண்டு முதல் 1858-ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார். இராமலிங்க அடிகளாரை மக்கள் திருவருட் பிரகாச வள்ளலார் என அழைத்து வந்தனர். அவர் பெயரிலேயே ஏழு கிணறு பகுதி வள்ளலார் நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழ்ந்தபோதுதான் அவருக்கு ஞானம் கிடைத்ததாகவும்; ஐந்து திருமுறைகள் இந்த வீட்டில்தான் இயற்றியதாகவும் கூறப் படுகிறது.
'வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி, மக்களின் பசி போக்கிய, உருவ வழிபாட்டை ஒதுக்கி ஜோதி வழிபாட்டை நடைமுறைப்படுத்திய வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார், தன் 51 ஆண்டு கால வாழ்க்கையில் 33 ஆண்டுகள் சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் உள்ள வீட்டில்தான் கழித்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் ஜோதி வடிவமான தைப்பூச நாள், இந்த வீட்டில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வள்ளலார் வாழ்ந்த இந்த வீட்டைப் பற்றி என் விகடனில் எழுதினால் அது பலருக்கும் பயனுள்ள கட்டுரையாக அமையும்!'' - இப்படித் தன் ஆவலை வாய்ஸ்நாபில் பதிவுசெய்து இருந்தார் ராயபுரம் ஆர்.கிருஷ்ணன்.



ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள வள்ளலார் வாழ்ந்த அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர் ஸ்ரீபதி, வள்ளலார் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

'அடிகளார், சிதம்பரம் அருகில் உள்ள மருதூரில் தோன்றினாலும், தன் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அவருடைய அண்ணன் சபாபதியால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டார். இந்த வீட்டின் மேல்பகுதியில்தான் அவர் 33 வருடங்கள் வாழ்ந்தார். தன் அறையைப் பூட்டிக்கொண்டு பல மணி நேரங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருப்பாராம். தியானத்தில்தான் ஜோதி வடிவில் இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி ஒருநாள் ஜோதியை வணங்கிவிட்டு கண்ணாடியைப் பார்த்தபோது திருத்தணி முருகன் காட்சித் தந்ததாகத் தன் பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார். தூக்கத்தில் தவறி விழப் போனவரை இறைவன் தாங்கிப் பிடித்ததும் இங்கேதான் நடந்ததாகச் சொல்கிறார்கள். இதேபோல் இங்கு இரவில் பசியோடு படுத்த நாட்களில் இவருடைய அண்ணியின் உருவில் வடிவுடை அம்மன் தோன்றி, தனக்கு அமுது ஊட்டியதாகவும் தன் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். உலகமே கொண்டாடும் திருஅருட்பாவின் முதல் ஐந்து திருமுறைகளை அவர் இந்த வீட்டில்தான் எழுதினார். மனதுக்குத் தோன்றும்போது எல்லாம் இங்கு இருந்து காலாறக் கந்தக்கோட்டம் முருகன், திருவொற்றியூர் சிவன் கோயில்களுக்குச் நடந்து செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

காலப்போக்கில் அவர் உருவ வழிபாட்டை மறுத்து, இறைவனை ஜோதி வடிவாக வழிபட வேண்டும் என, வலியுறுத்த ஆரம்பித்தார். 'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்’ எனக் கூறியவர், சென்னையில் பல அற்புதங்களை நிகழ்த்த அவருக்குப் பல தொல்லைகள் வரவே இங்கு இருந்து வெளியேறி கருங்குழிக்குப் போய்விட்டார். அவர் இந்த வீட்டில் இருந்து சென்றாலும் இங்கு அவரின் தாக்கத்தை இன்னமும் உணர்கிறோம். அய்யாவின் முக்தி நாளான தைப்பூசம் அன்று அவர் தங்கி இருந்த அறையின் முன் அகவல், அருட்பா பாடல்களைப் பாடி வழி படுகிறோம். தொடர்ந்து திருஅருட்பா பற்றிய சொற்பொழிவு நடக்கும். இதையடுத்து பல திரைகளை நீக்கிப் பல்வேறு முறை ஜோதி வழிபாடு நிகழும். 'நம் மன அகந்தைகளை நீக்கி இறைவனை உணர்தல்’ என்பதே இதன் பின் உள்ள தத்துவம். வேறு எந்தத் தெய்வங்களின் உருவமும் இங்கு இல்லை. அய்யா அமர்ந்து இருந்த இடத்தில் ஜோதி மட்டும் விடாது எரிந்துகொண்டே இருக்கும். மக்கள் தொடர்ந்து வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

வள்ளலாரின் கையெழுத்துப் பிரதி, அவர் அமர்ந்த அறை, பயன்படுத்திய கிணறு என, முடிந்த அளவுக்கு இந்த வீட்டைப் பழமை மாறாமல் பராமரித்துவருகிறோம். தைப்பூச விழாவின்போது நாள் முழுதும் மக்களுக்கு அன்னதானம் நடக்கும். அவருடைய வழிகாட்டுதலின்படி இங்கு எல்லா மதத்தவரும் வழிபடலாம். இவ்வளவு ஏன் இந்த அறையில் பூஜைகளைச் செய்பவர் ஒரு பெண்மணிதான். இறைவன் முன் ஆண், பெண் பாகுபாடு ஏது?'' என்கிறார் ஸ்ரீபதி.
FB friend…அருட்பெரும்ஜோதி

Further...

ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம். மிகச் சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் சற்றும் குறைவது இல்லை.

…அருட்பெரும்ஜோதி


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.

தாயன்பில்
தெய்வம் கண்டேன்.
இப்படி தான் கடவுள் அன்பும்
இருக்குமென்று...
நானறிந்தேன்..

பிறவா நிலையை அடைய சிவாயநம என்போம்.


ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.


All postings.....Courtesy...அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை... Face Book

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by Pratyaksham Bala »

Dinamalar, 25.2.2011.
http://www.dinamalar.com/aanmeegamNews_ ... ws_id=1951
Scroll down for 'மேலும் பல ஆன்மீக கட்டுரைகள்'.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

( http://www.vallalar.org/Tamil)

பரசிவ வணக்கம்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிரொளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே

அன்புருவாம் பரசிவமே ! (திரு அருட்பா)


அருள்நெறி

கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்? அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.

அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.

More at http://www.vallalar.org/ArticlesTamil/43

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்றுஎன்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும்முள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,



சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.


வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும்.


http://www.vallalar.org/Tamil

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

You can listen to some Arutpa songs here...

http://audios.vallalarspace.com/ThiruArutpaAudio

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by venkatakailasam »

படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே..

-vadalur Vallar..ThiruArutpa

rendered by SV Subbaiah....

http://www.youtube.com/watch?v=Lj9ACggYq-c


All postings are made from Face Book " Arut perum Jothi Thani perum Karunai "

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Arut perum Jothi Thani perum Karunai

Post by rshankar »

Sri Ventakailasam - good to see that you have recovered and have resumed your psotings!

Post Reply