Short Stories (in Tamil script)

Post Reply
Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Multifaceted personalities of the Rasikas forum

Post by Ponbhairavi »

கொலைக்குற்றம்


இந்த கற்பனை கட்டுரைக்கு inspiration ஆக இருந்தது இன்றைய (16-9- 2012) “தினமலரில்” இரண்டாம் பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு செய்தி. அதன் தலைப்பு: “ ஸ்ரீ வி .. அருகே கடிக்க வந்த மலைப் பாம்பை கொன்றவர் கைது . If possible Pl read that news item before reading this article.




அரசு வக்கீல் – கனம் கோர்ட்டார் அவர்களே, இதோ உங்கள் முன் கூண்டில் நிற்கும் வீரையன் ஒரு மிகப் பெரிய குற்றவாளி ..சாதாரண குற்றமல்ல. கொலைக்குற்றம்.கொல்ல வேண்டும் என்கிற கொடிய எண்ணத்துடன் செய்யப்பட்ட படுகொலை .அதுவும் எப்படி?
மிகவும் குரூரமான முறையில் கைத்தடியால் அடித்தே கொன்றிருக்கிறார்.உயிர் துடிக்க துடிக்க தப்பி போக விடாமல் மேலும் மேலும் அடித்தே கொன்ற , ஈவு இரக்கம் இல்லாத , அரக்க மனம் கொண்ட படு பாவி இவர்.. மேலும் கொன்ற அப்பிணத்தை ,யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தர தர என்று இழுத்துச்சென்று வாய்க்கால் கரையில் புதைத் துள்ளார். இவரைப்போன்ற கொலைகாரர்களுக்கு மரண தண்டனை கொடுத்து சட்டத்தின் மேன்மையை நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீதிபதி –புதைக்கப்பட்ட உடல் எப்படி கண்டு பிடிக்க பட்டது?
வக்கீல் – நம் வனத்துறை ஊழியர்களின் புத்தி சாதுர்யத்தினால் தான்.- கொன்ற பின் பிணத்தை இக்குற்றவாளி மணலில் சுமார் 200௦௦ அடிதூரம் இழுத்து கொண்டு சென்ற தடத்தை வைத்துக் கண்டுபிடித்துவிட்டர்கள்.அவர்களுடைய திறமையைப் போற்றும் வகையில் 4 அரசாங்க வனத்துறை ஊழியர்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் சன்மானத்துக்கும் பத்மஸ்ரீ விருதுக்கும் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீதிபதி- அடித்து கொன்றதை நீ ஒப்புகொள்கிறாயா?
வீரையன் –ஆமாங்க நான் தான் அடித்து கொன்றேன்.
நீதிபதி – ஏன்கொன்றாய் ?
வீரையன் – நான் கொல்லாவிட்டால் அது என்னைக் கொன்று இருக்குமுங்க. பெரிய ராஜ நாக பாம்புங்க .கிராமத்திலே புகுந்தால் ஆடு மாடு குழைந்தை குட்டி ஆளுங்க அப்படீன்னு 100 பேரைக் கொன்று விடும் விஷம் உள்ளதுங்க
வக்கீல் –உனக்கு எப்படி தெரியும், நீ என்ன zoologist ஆ ? herpetologist ஆ ? cardiotoxin க்கும் neurotoxin க்கும் வித்தியாசம் தெரியுமா?
வீரையன் –அதெல்லாம் தெரியாதுங்க ஆனால் பாத்தா விஷப் பாம்புன்னு தெரியுமுங்க.
வக்கீல் –பாம்புகளில் நூற்றுக்கு தொண்ணுறு சத வீ தம்விஷம் இல்லாதவை என்பது உனக்குத் தெரியுமா?
வீரையன்-சத வீதம் தெரியாதுங்க .ஆனால் இது கடிச்சா சதை வீங்கிபோகும் கருத்து வெந்து போயிடும்க
வக்கீல் - செத்துப் போன இந்த குறிப்பிட்ட பாம்பு அப்படிப் பட்டது தான் என்று எப்படித் தெரியும்?
வீரையன் – எனக்கு பாம்புக்கும் புடலங்காயிக்கும் வித்தியாசம் தெரியுமுங்க. பாத்தா சொல்லிடுவேன்.
நீதிபதி – நீ அதை கொல்ல காரணம் ?
வீரையன்- அது என்னை கடிக்க வந்ததுங்க
வக்கீல் – உன்னை கடிக்க வந்தது என்று எப்படி கூறுகிறாய் ? அதன் வழியே அது போயிகொண்டிருக்கலாம் அல்லவா?
வீரையன் –இல்லைங்க. மரத்து மேலிருந்து இறங்கி என்னை நோக்கி சீறிக்கொண்டு வந்தது
வக்கீல – ஆதாரம்? அப்போது நீ அதை போட்டோ எடுத்து இருக்கிறாயா? உனக்குப் பின்னால் இருந்திருக்கக் கூடிய அணில், குருவி அவற்றை நோக்கி வந்திருக்க கூடும் அல்லவா?
வீரையன் – எனக்கு பின்னாலே என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாதுங்க.. ஆனால் அதன் பிளந்த வாயிக்கு நேர் எதிரே நான் தான் இருந்தேன்,. கம்பாலே ரெண்டு போட்டேன் அதுவும் என்னைக் காப்பாத்திகொள்ள
வக்கீல்- உன்னைக் காப்பாத்திக்க நீ ஓட்டம் பிடித்திருக்கலாமே? உனக்கு தான் இரண்டு கால் இருக்கிறதே . பாவம் அந்த பாம்புக்குதான் கால் இல்லை
வீரையன்- நாக பாம்பு வேகம் நம்மாலே ஓட முடியாதுங்க.
வக்கீல் –அல்லது கூச்சல் போட்டிருக்கலாமே /
வீரையன் –காட்டிலே அண்டை அசல் யாரும் இல்லைங்க .
வக்கீல் –போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணியிருக்கலாம் . தீயணைப்புத்துறை அல்லது வனத்துறைக்கு செல் போன் பண்ணியிருக்கலாமே ?
வீரையன்- என்கிட்டே அதெல்லாம் இல்லைங்க தடி கம்பு தான் இருந்தது.
வக்கீல்.- இந்த வகை ராஜ நாகம் பாதுகாக்க பட வேண்டிய இனம் என்று அரசாங்கத்தால் notify பண்ணப் பட்டிருப்பது உனக்கு தெரியாதா? நீ அதை பத்திரமாக பிடித்து அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்து ரசீது பெற்றுகொண்டிருக்க வேண்டும்
வீரையன் – மனுசனும் பாது காக்கப் பட வேண்டிய இனம் தானுங்களே .
வக்கீல் – ஒரு கொலைக் குற்றம் புரிந்து விட்டு மனதில் எந்த வித வருத்தமோ துக்க உணர்வோ இல்லாமல் இவர் பெசுவதிலிருந்து இவருடைய அரக்க மனதை கோர்ட்டார் கவனிக்க வேண்டும்.
நீதிபதி –இந்த கொலை செய்ததற்கு நீ தக்க காரணம் கூற வேண்டும்.
வீரையன் –தன்னை கொல்ல வரும் பசுவை கொல் என்று எங்க அம்மா ஒரு பழ மொழி சொல்லுவாங்க .நான் பசுவை கொல்ல வில்லை பாம்பைத்தான் கொன்றேன்.
வக்கீல்-ஒரு பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை கொல் என்ற பழமொழி தெரியாதா.? யாராவது அங்கிருந்த பார்ப்பானைக் கொன்றிருக்கலாமே ?
வீரையன் –அந்த காட்டிலே யாருமே இல்லைங்க. நான் தனி ஆள்.

வக்கீல் –கனம் கோர்ட்டார் அவர்களே,
வங்கி மற்றும் நகை கடைகளில் புகுந்து துப்பாக்கியால் பலரை சுட்டு கொன்று பணத்தை கொள்ளை அடித்து போகிறார்கள் . அவை பணத்துக்காக செய்யப்பட்ட கொலைகள் பணம் சம்பாதிப்பது கடினம் என்பதால் அக்கொலைகளுக்கு வலுவான காரணம் இருக்கிறது
கள்ள காதலர்கள் கொலை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் உணர்ச்சி மிகுதியும் தூய அன்பும்.
அரசியல் வாதிகள் கொலைகள் செய்யக் காரணம் அவர்களின் குடும்பத்தினரும் சந்ததியினரும் பல தலைமுறைகள் சுகமாக வாழ வேண்டும் என்னும் மனிதாபிமான நல்ல எண்ணமே.
இவை எல்லாவற்றையும் மன்னித்து விடலாம் தகுந்த காரணம் இருப்பதால். ஆனால் இந்த வீரையன் செய்த கொலைக்கு எந்த காரணமும் இல்லை, ஆகையால் இவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்குமாறு அதுவும் குறிப்பாக எத்தனை தலைவர்களின் பிறந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் இடையே வந்தாலும் வெளியே வரமுடியாத தண்டனை விதிக்குமாறு மிகத் தாழ்மையுடன் இக்கோர்ட்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்
நீதிபதி ;- இந்த விஷயத்தில் அதிக பக்ஷமாக ஏழு ஆண்டுகள் தண்டனை கொடுக்கத் தானே சட்டத்தில் இடமிருக்கிறது
வக்கீல்:-போதவே போதாது இப்படியே விட்டால் உலகத்தில் பாம்பு இனமே அழிந்துவிடும் .கிடுக்கி பிடியில்லாத அந்த சட்டத்தில் உரிய திருத்தும் கொண்டுவர இதுவே ஒரு நல்ல case என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
நீதிபதி ;- சாப்பாட்டு நேரம் வந்து விட்டதால் இந்த வழக்கு 30 நாட்களுக்கு தள்ளி வைக்க படுகிறது .
-----௦௦-----









பின் குறிப்பு. நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கினார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? – எனக்கும்தான்.

PuduvaiSivam
Posts: 7
Joined: 12 Sep 2012, 09:43

Re: Multifaceted personalities of the Rasikas forum

Post by PuduvaiSivam »

I am not at all keen to know the judgement for 2 reasons:there will be so many adjournments that I will be dead before it comes or even if veerayan is given capital punishment his mercy petition will take many yugams to be decided upon.By the way is there any provision for getting anticipatory bail for snake killing?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Multifaceted personalities of the Rasikas forum

Post by cmlover »

LOL! Ponbhairavi
Superb imagination.
Adding that
ஒரு பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை கொல்
Is a superb DK (DMK) நயம்...

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Multifaceted personalities of the Rasikas forum

Post by Ponbhairavi »

thanks CML. I meant to give my own sample of what modern literature calls theory of Absurd in the New Theater( Ionesco, Samuel Beckett )

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Short Stories (in Tamil script)

Post by cmlover »

Pl post your precious creations here.
Let your imaginations soar!
You may post in Roman scripts too. But it is preferable to use Arun's software and convert it to Tamil,,,
Thanks

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

Thank you very much CML. I feel elated.
I am a total ignorant in computer matters.Since it matters a lot I am trying to learn. By roman scripts I guess you mean my writings in english. I do not know what is Arun's software for conversion. At present I am using google transliteration. In the WORDS, I slowly type and verify the transliteration for every word.. many unwanted rectangles creep in and make the reading painful. If there is anything simpler it will help a lot.If there is any software to convert tamil into roman scripts may be it may be useful for those who do not follow tamil scripts. Advance thanks for any advice from anyone.
rajagopalan.

kvchellappa
Posts: 3603
Joined: 04 Aug 2011, 13:54

Re: Short Stories (in Tamil script)

Post by kvchellappa »

It is really amusing and thought-provoking.
The proverb re. paambu and paarppaan, it was explained that paarppan is a small paambu, more venomous than paambu, but i do not find that meaning in Lifco online dictionary. someone may throw light.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

Paarpan means Brahmin..ஒரு பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை கொல் as pointed by cml is coined by Dravidar Kazaham of Shri EV Ramaswamy Naiacker in Tamil nadu during anti brahmin agitations in 1950's implying that brahmin's are dangerous than a snake...and they deserved to be killed...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

I am sorry.
I assumed all our members are aware of Arun's excellent Transliterator.
here it is
http://arunk.freepgs.com/cmtranslit/editor.php
and for the letters
http://arunk.freepgs.com/cmtranslit/legend.html
If you already know Tamil typing post as such.
But if you don't know Tamil script but type in Roman script use
Arun's software to convert to Tamil script.
It is easy for us to read (Arasi please note :D

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

CML,
My problem is not in typing. I have done a lot of it for my book of poems in tamizh and for printing out songs. It is posting them on the forum which I cannot do :(

Of course, I have been following Arun's transliteration to the best of my ability in typing tamizh in english script.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

Most use full tamil type writer..

http://www.lexilogos.com/keyboard/tamil.htm

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Thx
VKailasam.
Arun's is more generic addressing all south indian scripts..

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Arasi
Just use the link Vkailasam has provided and copy the writing in Tamil scripts (ctrl-c) and paste them over here to the forum (ctrl-v).
But do please use Roman transliterations (with translations preferably)elsewhere except here and the kavithaikaL thread....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

பாம்பையும் பாப்பானையும் பார்த்தால்......
இந்த கட்டுரை முழுவதும் கற்பனையே
பல வருடங்களுக்கு முன்னர் நான் Forumல் ஆங்கிலத்தில் எழுதியது.
Disclaimer
நோக்கம் ஹாஸ்யமும் மனிதாபிமானம் மட்டுமே
எவர் கொள்கையையும் குறைப்பதுவோ கொச்சைப்படுத்துவதோ அல்ல!

திருச்சியில் கட்சி கூட்டம் முடிந்து பெரியார் தோழர்களுடன் வாகனத்தில்
திரும்பி சென்னை சென்றுகொண்டிருக்கிறார். நேரம் நடு நிசி. மாலையிலிருந்து
ஏதும் உண்ணாததால் அனைவருக்கும் அகோரப் பசி. வழியில் உணவகங்கள் இல்லை, இருப்பவையும் மூடப்பட்டிருகின்றன.

ஒரு குக்கிராமம். முணுக்கென்று விளக்கு வெளிச்ச்த்தில் ஒரு உணவகம்.
அனைவரும் கதவை தட்ட பூணூல் அணிந்த ஒரு முதிய பிராமணர் வருகிறார்.
"கடை மூடியாச்சு, இனிமேல் நாளைக்குத்தான்" முதியவர்
"பசி வயிற்றை குடைகிறது, எதுவானாலும் போதும்" பெரியார்
"காலைலே செஞ்ச இட்லி இருக்கு, ரொம்ப ஆறிப்போயிருக்கும்
காப்பியெல்லாம் போட பால் இல்லை..." முதியவர்.
"பரவாயில்லை உள்ளது போதும்" பெரியார்
அனைவரும் உள்ளே சென்று அமருகிறார்கள்

முதியவர் ஒவ்வொருவராக சிறு இலை போட்டு இரண்டு இட்டிலியும் சிறிது
சட்ணியும் பருமாறுகிறார்.
பெரியார் அருகில் வந்ததும் அவர் உடம்பு வெட வெடவென நடுங்குகிறது.
பயத்தில் வெலவெலத்து நெற்றியில் வியர்வை அரும்ப நிற்கிறார்.
உரத்த குரலில் சிரித்த பெரியார்: "என்ன ஐயரே! எதற்காக பயப்படுகிறீர்.."
முதியவர்: "நீங்கள் பெரியார் ராமசாமி நாயக்கர் தானே.."
பெரியார் சிரித்துகொண்டே : "ஆமாம். அதற்கென்ன?"
முதியவர்: " பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் முதலில் பாப்பானை கொல்லணம், அப்படீன்னு சொல்லி இருக்கேள் இல்லையா.."
பெரியார் : "ஆமாம், அதுக்கு இப்போ என்ன?"
முதியவர் அரண்டு கொண்டு " உங்க பின்னாலே ஒரு பெரிய நாகப்பாம்பு படமெடுத்து சீறிண்டிருக்கு.."
துள்ளி எழுகிறார் பெரியார்..
பாம்பும் வந்த வேலை முடிந்ததென்று படத்தை சுருட்டிக்கொண்டு விரைவாக
பக்கத்தில் உள்ள பொந்தில் நுழைகிறது.
பெரியார் முகத்தில் ஈயாடவில்லை....

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

A good one! Also like your style of writing ;)


VKailasam and CML,
Thanks for the suggestion.
Tried it immediately, but...

nAda nAmakriyai Adi

araik kiNaRu thANDinEn-- aDaDA! (nAn)

ArvamuaDanE andak kiLi moZhiyaith thEDi,
arai nimiDam thanilE, aDithEn in thamizhilE, Am! (araik kiNaRu)

andO inda vindaiyAm technology!
adil ALumai illAdavarku enna gati?
cut enbaRAm paste enbArAm, enna solla?
viTTathil pAinda kuruTTup pUnaithAn en qualification! (araik kiNaRu)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

I don't believe you!
lethargy?
Vkailasam's ref is extremely easy to use and it takes the same effort to type therein.
A Journalist genius like you having trouble!
Perhaps துரைச்சானி அம்மா in her vanity has forgotten 'Tamil scripts' :D

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

Thank you CML, venkata kailasam, chellappa and Arasi.I will try to learn the technique soon.
in the meantime CML I am inspired by your story. Pl excuse me for taking your central idea and adding some frills- my adaptation.


நல்ல பாம்பு

நகர் புறத்துக்கு வெளியே.-நெடுஞ்சாலை -.இரவு 11 மணிக்கு மேலிருக்கும்..நல்ல இருட்டு. ஆறு பகுத்தறிவாளர்கள் .உரக்கப் பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தனர் .ஒரு பகுத்தறிவு கொள்கை விளக்க மாநாட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தனர் .மாநாட்டில் சாப்பாடு ஏற்பாடுகள் சரியில்லை . எல்லோருக்கும் நல்ல பசி. அதுவும் “ஒழிக ” கோஷம் போட்டு தொண்டையும் குடலும் வறண்டு போயிருந்தன

தெருவோரம் ஒரு கீற்று கொட்டகை “ மினுக் மினுக்” என்று எரியும் ஒரு லாந்தர் விளக்கு.வெளிச்சத்தில் “பிராமணர்ள் ஹோட்டல் “ என்று ஒரு பலகை ஆடிக்கொண்டிருந்தது..இளைத்த ஒல்லியான உடல்.-அறுபது வயதுக்கு மேலிருக்கும்.. மெல்ல கதவை சாத்திக்கொண்டு வாசலில் வந்து உழைத்து களைத்த அலுப்பில் அப்பாடா என்று கயிற்று கட்டிலில் உட்கார்ந்தார் .. கிழவர் வாழ்வின் பின் பகுதியில் அனைவரையும் இழந்து ஒற்றை மரமாய் தனியாக வயிற்றுப் பிழைப்புக்காக “ ஹோட்டல்” நடத்தி நாட்களை தள்ளிக் கொண்டிருந்தார்.. முதலாளி முதல் பாத்திரம் தேய்க்கும் சிப்பந்தி வரை எல்லாம் அவரே தான் ..”உண்மையான “தனியார் நிறுவனம் “.

-ஐயரே பசிக்குது சாப்பாடு இருக்கா ? .
-அடடா ஒன்றும் இல்லையே .எல்லாம் தீர்ந்து போய் கடை சாத் தியாகி விட்டதே.
- ராத்திரி சாப்பாடு எதாவது மிச்சம் இருக்குமே.!
- எல்லாம் ஒழித்து போட்டு பாத்திரம் கழுவி வைத்தாகிவிட்டதே.
-அதெல்லாம் கேள்வியில்லை . எங்களுக்கு பசிக்கிறது .. சும்மா தர வேண்டாம் . வேண்டிய பணத்தை வாங்கிக்க ..
- இதோ பானையில் தண்ணீர் தான் இருக்கு..
- அடுத்த நிமிடம் பானை காலியாகிவிட்டது..
- இப்போது குரலில் தெம்பு வந்துவிட்டது. . நாளை காலைக்கு வேண்டிய இட்டிலி மாவு இருக்குமே . இப்போது அதை எடுத்து எங்களுக்கு இட்டிலி வார்த்து கொண்டுவா. ஐயரே
- மாவு புளிக்கவில்லை . மேலும் அடுப்பெல்லாம் அணைத்து கழுவி மெழுகி ஆகிவிட்டது.. திரும்ப அடுப்பை மூட்டி இட்டிலி வார்த்து அது வெந்து கொடுப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும் .எனக்கு உடம்பு ஒரே அசதி.. படுத்தால் போதும் என்று இருக்கிறது ..


-இதோ பார் இந்த கதை எல்லாம் இங்கே வேண்டாம் . மரியாதையாக நீ யே இட்டிலி வார்த்து தறியா இல்லே நாங்களே உள்ளே போய்.......
ஐயயோ வேண்டாம் . வேறு வழியில்லாமல் கிழவர் எழுந்தார்.
-அப்படி வா வழிக்கு. கோலை எடுத்தால் தான் குரங்கு ஆடும் என்று தலைவர் சும்மாவா சொன்னார் .
ஆறுபேரும், லாந்தர் விளக்கைத் தூண்டி கையில் எடுத்துக்கொண்டு உடனே உள்ளே நுழைந்து அங்கே இருந்த ஒரு ஆட்டங்கண்ட பெஞ்சை சுற்றி அமர்நதனர்..
- அதோ பாருடா கூரையில் ஒரு நல்ல பாம்புடா-ஏடு கம்பை
கிழவர் சொன்னார்:: “. வேண்டாம் அடிக்காதீர்கள் அது தானே போய்விடும் – வாழும் பாம்பு “
- ஏன் ஐயரே துணைக்கு பாம்பு வளர்க்கிறாயா. உன்னை கடித்தால் என்ன செய்வே ?
- இவரைக் கடித்தால் அய்யர் விஷத்தாலே அந்த பாம்பு தான் செத்துபோகும் .
- எல்லோரும் சிரித்தனர்.-.பாம்பு ஓடி மறைந்தது .
- நீ போய் வேலையை பாரு அய்யரே. ஒன்னைப் பார்த்த பிறகு நாங்க ஏன் பாம்பை அடிக்கிறோம் . .அர்த்தபுஷ்டி யோடு சொல்லிவிட்டு மற்றவர்களை பார்த்து சிரித்தான்.
கிழவர் இவர்களுக்கு இலையை போட்டுவிட்டு , இட்டிலி பானை கரண்டி முதலியவற்றை எடுத்துக்கொண்டு சமையல் கட்டில் நுழைந்தார்.அங்கு இருட்டு. தனிவிளக்கு இல்லை. கதவின் இடுக்கு வழியே வந்த லாந்தர் வெளிச்சம்தான்... அடுப்பை பற்ற வைத்தார். பின்னால் உஸ்ஸ் என்ற சப்தம் .
- உம் சீக்கிரம் ஆகட்டும்..... .
- மாநாட்டு கதைகளை பேசிகொண்டிருந்ததில் நேரம் ஓடியது..
ஒரு பகுத்தறிவாளர் (குரலைத்தாழ்த்திக்கொண்டு )”-ஏன் அண்ணே ?தலைவர் சொன்னாரே ஒரு பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தா பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை அடி” என்று . நாம அவரு கட்டளைப்படி நடக்கலையே .. வந்து”... “
-“நடக்கலை என்று யார் சொன்னது.. பாம்பைத் தான் விட்டுவிட்டோமே! அடுத்த விஷயத்துக்கு கொஞ்சம் பொறுமையா இரு. –இட்டிலி நீ போய் வார்க்த் தயாரா./ பின்னே? “
- சரி சரி இப்போ புரியுது.. எல்லோரும் “ கெக்கெக்கே “ என்று சிரித்தார்கள்.

ஒருவன் குடிசையின் நாலு புறமும் நோட்டம் விட்டான்.. கூடத்து பிறையில் ஒரு சாமி படம். அதன் கீழே கொஞ்சம் பணம். அன்று கல்லா கட்டியது.
ஒருத்தன் அர்த்த புஷ்டியுடன் பார்த்தான்.. ஒருத்தன் மெல்ல போய் அதை எடுத்துக்கொண்டு வந்தான் “–தலைக்கு அஞ்சு ரூபாய் ஆச்சு.”-

கிழவர் வெளியே வந்தார். சூடான ஆவி பறக்கும் இட்டிலியை பரிமாறினார்.. தொட்டு கொள்வதற்கு ஏதோ ஊறுகாய் ..
“என்ன இருந்தாலும் பார்பான் இட்டிலிகடை வைப்பதற்கே பிறந்தவண்டா.”
- “எனக்கு என்னவோ அடி நாக்கிலே கொஞ்சம் கசக்குது .”
- “அதான் சொன்னாறேடா – மாவு புளிச்சது போதாதுன்னு”
பசி வேகத்தில் எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டனர்..
அய்யர், இலைகளை எடுத்து போட்டு விட்டு பெஞ்ச்சை துடை த்துவிட்டு , பில் பத்து ரூபாய் என்றார்.
- “ அய்யருக்கு பணம் வேண்டுமாம்டா !”
- அர்த்த புஷ்டியுடன் ஒருவன்- “ அதற்கென்ன. – உன் கையாலேயே இன்னிக்கு இவர் கணக்கை தீர்த்துவிடு.”
டேபிள் துடைத்த கையை அலம்பிக்கொண்டு வர திரும்பினார் கிழவர்.. அடுத்த விநாடி “ ஐயோ அம்மா” என்று அலறிக்கொண்டு இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இரத்தம் தோய்ந்த தேங்காய் உரிக்கும் அரிவாளை அவர் மேலேயே போட்டான்.
“ஓஹோஹோ “ என்று ஆறு பேர் சிரிப்பது நள்ளிரவின் அமைதியை கிழித்துக்கொண்டு கேட்டது.
மறு நொடியே “ தலையை சுற்றுகிறதே” என்றான் ஒருவன்.
- “வயிற்றிலே நெருப்பு போல எரிகிறதே” என்றான் இன்னொருவன்-“.நிற்க முடியவில்லையே” என்று தள்ளாடி விழுந்தான் ஒருவன் –உடல் நீலம் பூத்து சாய்ந்தான் ஒருவன்.. வாயில் இரத்தம் கக்கி விழுந்தான் ஒருவன் தூண்டில் புழுவாய் துடிதுடித்து துள்ளி துவண்டான் ஒருவன்.

நல்ல பாம்பு சமையல் அறையிலிருந்து வந்து ஒரு ஓரமாய் சென்று மறைந்தது.. அது சென்ற தடம் வெள்ளையாய் இழை கோலம போட்டது போல் –இட்டிலி மாவு .

மறு நாள் செய்தி தாள்களில் இது முக்கிய செய்தி.;
ஒரு பேப்பர் இல் இப்படி: “ நடு நிசியில் ஹோட்டலில் புகுந்து கிருஷ்ண அய்யரை வெட்டி கொன்று அங்கிருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓட முயன்ற ஆறு பேர்கள் பாம்பு கடித்து அங்கேயே விழுந்து இறந்தனர்.”

இன்னொரு பேப்பர் இப்படி : “பகுத்தறிவு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பி சென்ற தொண்டர்கள் ஆறு பேரை இட்டிலி மாவில் விஷம் வைத்து கொன்ற பார்பன சூழ்ச்சி –அப்படியும் அஞ்சாமல் பார்ப்பனப் பதரை வெட்டி தீர்த்து வீர மரணம் அடைந்த கொள்கை வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

இது வேறு ஒரு நாளிதழ் : “தனக்குப் பால் வார்த்து வளர்த்த எஜமானரை ஆறு பேர்கள் தாக்குவதை கண்ட நாகராஜன் எனும் வாழும் பாம்பு அந்த ஆறு பேர்களையும் அதே இடத்தில கடித்து கொன்றது.,

சில நாட்களுக்கு பிறகு அந்த ஹோட்டல் இருந்த இடத்தில ஒரு சிறு கோயில் . ஒரு பாம்பு புற்று தான் மூலஸ்தானம் ..நூற்று கணக்கானோர் வரிசையில் வந்து பால் நிவேதனம் செய்து நாகராஜனை வணங்கிசென்றனர்.

- --௦--௦ ௦0----
Last edited by Ponbhairavi on 23 Sep 2012, 22:57, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Great Ponbhairavi!
You have embellished the story and made it more realistic as to what woulld have happened in those times as those of us who lived it know!

The News flashes are super!

kvchellappa
Posts: 3603
Joined: 04 Aug 2011, 13:54

Re: Short Stories (in Tamil script)

Post by kvchellappa »

Rich imagination, bringing out the traits of different people and shades of belief.

Pratyaksham Bala
Posts: 4169
Joined: 21 May 2010, 16:57

Re: Short Stories (in Tamil script)

Post by Pratyaksham Bala »

பிற்குறிப்பு:
புதிய கோயிலின் ஸ்தல புராணத்தில், ஸ்ரீமான் கிருஷ்ண அய்யர் சாட்சாத் சிவபெருமானின் அவதாரம் என்றும், சிவபெருமானின் பாம்புதான் அராஜகர்களை வதம் செய்தது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. கோயிலில் இவருக்கு ஒரு சிலை ஸ்தாபிதம் செய்யப் பட்டுள்ளது. அங்கே தினமும் அதிஷ்டான பூஜையும் விமரிசையாக நடைபெற்று வருகிறது!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

பி பின் குறிப்பு
புதிய ஆட்சியின் தலைமையில் தினமும் அன்னதானம் ஏற்பாடாகி இருக்கிறது.
எதிர் கட்சிகள் கிருஷ்ண அய்யருக்கு சிலை வைப்பதில் எதிர்ப்பு தெரிவித்து இறந்த கட்சி தியாகிகள் அறுவருக்கு அங்கேயே சிலை வைக்க வேண்டுமென்று கலவரம் செய்ததால் போலீஸ் தடியடி நடத்தி நிலவரம் சென்னை உயர் நீதிமன்றம் சென்றிருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன் நீதி வழங்குமாறு சுப்றீம் கோர்ட் ஆணை பிறப்பித்திருக்கிறது.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

Thanks CML chellapa and Bala

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: Short Stories (in Tamil script)

Post by Govindaswamy »

Is it possile to download Arun's transliterator and use it offline
Govindaswamy

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

post #16..

"Perhaps துரைச்சானி அம்மா in her vanity has forgotten 'Tamil scripts'

Instead of 'in her vanity'........use the words.."Due to involvement in work connected with English translation"

as I see no vanity in that simple and modest 'girl'...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

You missed my joke :(
I am sure she got it !
...and she is not a "simple and modest girl"
She is the Modern symbol of the Womanhood that Bharathy dreamed about.....

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

I am in trisangu svargam now, this 'simple'ton, with the tamizh script thing!

I wish I were writing something worthwhile, but the world is too much with me at present that concentrating on anything other than what's at hand has been difficult. If I glance over a few threads at Rasikas.org, it's because I need to divert myself from the nitty gritty, at least momentarily.

My friend one day will demote me enough rungs--from queen to doraisAni and so forth, and I'd finally be called a peasant--which I truly am!

VKailasam,
Thanks for your using the word 'girl'! Will strive to be as carefree as a little girl!
CML's words are uttered in jest, and speak of how much he cares about the quality of my life--'sila vEDikkai manidaraip pOlE ivaL vIzhndiDAlAmO?' enRu. Shows a brother's concern for his sister, a friend caring for another...;)

Mon ami,
Our posts crossed, as you can see!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

cml...

due to advancing age, I think all of us are missing jokes....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

well said arasi!
Take it easy. Every storm blows and passes over and calmness will prevail. I too am only now settling down, but have not lost my humour vein :D
By the by Doraisani as we know from our times was higher than Queen since in those days the Dorais were the King-makers :D

Vkailasam
You are doing fine, but stop taking words literally.
I thought I was the slow-wit in our company :D

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

Joke is something which makes one at least smile...wit is one which may hurt..and depends on one who takes it...
Better always to be a low witted person...
Here I am not taking your orders to stop literally...

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

Stop literally perhaps, but not 'literary'--ly. We need more stories which will keep this thread going ;)


I also have a suggestion, to srkris and the moderators.
We have so many literary threads. Will a separate section work under the heading Literary Matters? Then, the General Discussions needn't stay top-heavy with literary threads.

archa
Posts: 36
Joined: 22 Sep 2012, 11:46

Re: Short Stories (in Tamil script)

Post by archa »

That's right. Now the General Discussions are heavy with literary threads. There is very little space for discussions on music which compulsorily take a back seat. It would be good if literary discussions have a separate heading. There may be members who might not be interested in literary matters.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

A good suggestion...arasiji...

can by under other forums...literary forum.......and can be an open forum...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Thx arasi:
Passed your comment to the admin who will decide and do the needful...

srkris
Site Admin
Posts: 3497
Joined: 02 Feb 2010, 03:34

Re: Short Stories (in Tamil script)

Post by srkris »

Created 5 subforums under 'Languages' (after renaming it Languages and Literature), one each for Tamil, Kannada, Telugu, Malayalam & Hindi. Please check and suggest any changes if necessary.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

சும்மா இருக்க முடியுமா ?

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"


Courtesy....அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை......Face Book

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை!
கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.
இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்ற
ு, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.
''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று கேட்டார்.
''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.
உடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்!
'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ? தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ? இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.
அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.
'என்ன?' என்பது போல் பார்த்தார் அவர்!
''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!
''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்?''
''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!
அவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.
நம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
மெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!'' என்றான் நெகிழ்ச்சியுடன்.
உடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி? ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது!'' என்றார்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா? நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்!'' என்றார் சிரித்தபடி.
நண்பர்களே! இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது. சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள். வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்.
அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

நன்றி!
மிக தத்வார்த்தம் உள்ள சிறு கதைகள்.
...ஹாஸ்யமும் கூட..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

ராம ஜபத்தின் மகிமை....

ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார். அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப் போனது. கொடும் வனம், அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது. ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்து "ராம ராம" என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத் தொடங்கினார்.அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி, ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற, பீர்பாலோ, அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி அக்பரை மனம் மகிழ்ந்து வரவேற்று, அறுசுவை உணவளித்து உபசரித்தனர் அவ்வீட்டினர்.அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவரை அணுகி அதை கொடுத்துவிட்டு ஏளனத்தோடு கேட்டார். "பீர்பால், இப்போதாவது தெரிந்ததா, நான் எடுத்த சரியான முடிவால் தான் இன்று உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்கிறீர்களே இந்த ராமஜபம், அதுவா உங்களை பசியாற்றியது?"இதற்கு உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால், 'அரசே ! உணவிற்காக மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இதுதான் ராம ஜபத்தின் மகிமை' என்று கூற, அக்பர் வாயடைத்துப் போய் நின்றார்.

courtesy...FB friend..Viddu Srini

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

சிக்கல் நகரில் கற்சிலை மயில் பறந்த அதிசயம்....நிரஞ்சனா.....


சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது.
சிக்கல் என்று ஊரின் பெயருக்கு காரணமானவர்
சிவனை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வசிஷ்ட முனிவர் பல ஊர்களுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஓர் அடர்ந்த காட்டுபகுதியை கண்ட முனிவர், இந்த இடம் தவம் செய்ய ஏற்றது என்பதை உணர்ந்து அந்த இடத்தில் தவம் செய்ய துவங்கினார். தவம் செய்வதற்கு முன்னதாக சிவலிங்கத்தை செய்து வழிப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினார். மண்ணில் லிங்கம் செய்யலாம் என்றால், பலரும் அவ்வாறு அதை செய்துவிட்டார்கள். நாம் புதுமையாக ஒரு உணவு பண்டத்தில் சிவலிங்கம் செய்து வழிபட்டால் நன்றாக இருக்குமே என்று கருதி, காமதேனு பசுவின் பாலை எடுத்து வெண்ணையாக கடைந்து, அந்த வெண்ணையில் லிங்கம் செய்து வழிப்பட்டு தவம் செய்தார் வசிஷ்டர்.
வசிஷ்டரின் தவத்தை ஏற்ற சிவபெருமான், முனிவருக்கு காட்சி தந்து, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார்....

more here...http://bhakthiplanet.com/2011/07/%E0%AE ... %E0%AE%AE/

Pratyaksham Bala
Posts: 4169
Joined: 21 May 2010, 16:57

Re: Short Stories (in Tamil script)

Post by Pratyaksham Bala »

Vashishta Muni, Kamadenu and Lord Shiva - all make interesting reading.
Sikkal refers to magnetite stone.
Most probably the main deity at Sikkal is made of magnetite stone.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

சின்ன வயதில் நான் கேள்விப்பட்ட சம்பவம் இது. அந்த நாளில் தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் என்று ஒருவர் இருந்தார். "ஹரிகதை' என்கிற கதா காலட்சேப நிகழ்ச்சியின் முன்னோடி அவர்தான் என்பார்கள். "சீதா கல்யாணம்', "வள்ளி திருமணம்' என்று ஏதாவது ஒரு கதையைப் பாட்டுப் பாடி அவர் கதாகாலட்சேபம் செய்வதைக் கேட்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

அற்புதமான சாரீரம் அவருக்கு. அவர் கதை சொல்லும் பாணி அதைவிட அற்புதமாக இருக்குமாம். அறந்தாங்கியில் ஒரு பெரிய தனவான் தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதரின் கதாகாலட்சேபத்தை ஏற்பாடு செய்திருந்தார். கூட்டமோ கூட்டம். பிரமாதமாக அமைந்தது நிகழ்ச்சி. அந்த தனவான் கிருஷ்ண பாகவதருக்கு ஒரு பையில் பொற்காசுகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

கச்சேரி முடிந்ததும் உடனே ஊருக்குப் போயாக வேண்டும் என்று கிளம்பினார் பாகவதர். அப்போதெல்லாம் அறந்தாங்கி, புதுக்கோட்டை பகுதிகளில் காடுகள் உண்டு. இரவு நேரத்தில் வனாந்திரத்தில் மாட்டு வண்டியில் போவது ஆபத்து என்றும், காட்டில் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் உண்டு என்றும் எல்லோரும் எச்சரித்தும் பாகவதர் கேட்கவில்லை. அவருக்கு அப்படி என்னவோ அவசரம்.

மாட்டு வண்டி காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பார்த்தது போலவே தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் பாகவதரையும் குழுவினரையும் வழிமறித்தனர். பாகவதர் போட்டுக் கொண்டிருந்த தங்க நகைகளை எல்லாம் பறித்துக் கொண்டு அவரிடமிருந்த பொற்கிழியையும் பிடுங்கினான் அந்தக் கூட்டத்தின் தலைவன்.

""இவ்வளவு பரிசுகள், பட்டாடைகள், பொற்கிழி எல்லாம் உனக்கு எதற்காகத் தந்திருக்கிறார்கள்?' என்று அந்தக் கொள்ளைக்காரன் கேட்டபோது, தாங்கள் கதாகாலட்சேபம் செய்பவர்கள் என்றும், அறந்தாங்கியில் ஒரு நிகழ்ச்சி முடித்து ஊருக்குப் போவதாகவும் சொன்னாராம் பாகவதர். அப்படியானால், "எங்களுக்காக நீ கொஞ்ச நேரம் கதாகாலட்சேபம் நடத்து' என்று தலைவனிடமிருந்து உத்தரவு பிறந்தது.

அந்த நடுக்காட்டில் தீவட்டி வெளிச்சத்தில் "வள்ளி திருமணம்' நிகழ்ச்சி நடத்தினாராம் தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர். மிருதங்க வித்வானுக்குக் கையும் காலும் உதறல் எடுத்தது. பயத்தில் விளாசித் தள்ளிவிட்டார். அற்புதமாகவும் உருக்கமாகவும் நடந்ததாம் "வள்ளி திருமணம்'. ஏழெட்டு கொள்ளைக்காரர்களும் கதையிலும் பாட்டிலும் சொக்கிப் போய் உட்கார்ந்து விட்டனராம்.

""சாமி, உங்க பாட்டுக்கு இதுவும் தரலாம், இதுக்கு மேலயும் தரலாம். சங்கீதமே தெரியாத என்னையே உங்க பாட்டு உருக்கிடுச்சுனா, சங்கீதம் தெரிஞ்சவன் ஏன் பொன்னும் பணமும் தர மாட்டான்'' என்று சொல்லி அவருடைய நகைகளையும் பொற்கிழியையும் திருப்பிக் கொடுத்தது மட்டுமல்ல, தான் கொள்ளையடித்து வைத்திருந்த சில நகைகளையும் அன்பளிப்பாகக் கொடுத்துப் பத்திரமாக காட்டைக் கடப்பதற்குத் துணையாகவும் இருந்தானாம்.

கிருஷ்ண பாகவதர் தனக்குத் தரப்பட்ட பொற்கிழியையும் தனது பொருள்களையும் மட்டும் வைத்துக் கொண்டு, திருடர்கள் அன்பளிப்பாகத் தந்ததை ஆவுடையார் கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தாராம்....

There are two more stories here...

http://dinamani.com/music/article1382996.ece

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

ரெண்டு பிசினெஸ்மேன் பேசிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.
‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர்’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

Read in the Net...
Last edited by venkatakailasam on 17 Apr 2013, 13:21, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

:lol:

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

VKailasam,
Good story ;)!

'sel!' enRAr, selgiREn--

un sellaRitha mULai mudalALiyum
'ennavO' sonnAr--kadai naDakkumA
kaDaiyE aDithirundAl? muTTALgaL!
namakku vAitha mEdAvigaL!
Last edited by arasi on 17 Apr 2013, 18:58, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

இரு பகுத்தறிவாளர்கள் தேர்தல் ஒட்டு போட்டுவிட்டு வந்துகொண்டிருந்தர்கள்.
-ஒருத்தன் கேட்டான் :நீ யாருக்கு ஒட்டு போட்டாய் ?
-சந்தேகமென்ன ?” “ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் பசுவையாவது வாலறுப்பேன் “ என்று வாக்கு தந்த தலைவருக்குதான் ‘
-காரணம் ?
-அவர்தான் உண்மையான சோஷியலிஸ்ட்
-எப்படி?
“ஆட்டுக்கும் நாயிக்கும் ஆறு inch வாலிருக்க -பசு
மாட்டுக்கு எதற்கு நாலடி வால்? என்று தெரு தெருவாய் முழங்கினாரே எதிர் கட்சியினர் பதில் சொல்ல முடியவில்லையே . அது சரி நீ யாருக்கு போட்டாய் ?
- “”ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் யானையையாவது கொல்வேன்” என்று முழங்கிய மாவீரனக்குத்தான்
- காரணம் ?
- அவர்தான் உண்மையான SECULARIST.
- எப்படி ?
- யானைக்கு மதம் பிடிக்கும் என்ற காரணத்தால்
-

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

;)

oTTup pOTTa arasiyal virippu
------------------------------------

OTTu, OTTu!
edir kaTchi'yAnai' OTTu!
oTTu motham athanai pEraiyum
OTTu! veRum 'pasa(u)'ppu!

OTTup pODuRArAm--
edaRku?
en appanum, pin nAnum, avan pErap paDaiyum
ANDirundAl adu pOdumE emakku!

maTRavanellAm?
irukkaTTumE,
edaRkA?
OTTup pODathAnE? ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

oTTup pOTTa arasiyin veRuppu
En?
parmbarai aatchi pOyviDumE :D

Ponbhairavi:
யானைக்கு மதம் பிடிக்கும் என்ற காரணத்தால்
nice punch line..

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

'ch'onnIr sariyAga!
I meant to mention it too.

'chO'-vin Suvai nam sabhaiyilum.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Ponbhairavi
The 'pun' is possible onlu in Tamil!
In sanskrit 'madam' (intoxication/madness/..) is different from 'matam' (opinion/religious sect/...) .
By unifying the letters Tamil has a 'poetic' advantage!
Is there a word for it in
aNi alankaaram ?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

CML
thanks for your nice words Sorry.My knowledge of tamil is empirical only. I did not study systematic tamil yappu.( my high school optional language was latin.!!). The rich vista of our sledai ani ilakkiyam(kalamegam et all) and the alliteration wealth of our manipravala nadai(Arunaigirinathar ) owe i think a lot to this ambivalence in addition to what you have pointed out.We have better yaapilakkana experts in Sankar and Sridhar who may pl clarify. Ki va jagannathan was a master in pun writings. May be pasupathy can give us some specimen.

Post Reply