Subramania Bharati

Carnatic composers (other than performing vidwans)
arasi
Posts: 16872
Joined: 22 Jun 2006, 09:30

Post by arasi »

As human beings, when we speak of aruL (grace), I would imagine it to be an ongoing process. Grace of God is a continuing thing for us as we live on earth. In that sense--not considering SaraNAgathi as a finale or a gesture, it is a state of mind for me. Grace continues to be there, if only we focus on it. Thus, while we get grace (fleeting and recurring, in our feeble perception), it is only fitting that we praise what is divine over and over again. We don't stop singing praise!
mahakavi,
I do not mean to say that 'vAzhththiDuvOm' alone is correct. For all I know, it could be a typo. Still, I do not see anything wrong with the word...

mahakavi

Post by mahakavi »

nolo contendere!

ragam-talam
Posts: 1896
Joined: 28 Sep 2006, 02:15

Post by ragam-talam »

Interesting Bharatiyar song, rendered by Rajkumar Bharathi.
nalla kAlam varugutu
http://www.youtube.com/watch?v=TLB4LOpWxlo

Btw, towards the end of this song, there's mention of 'Malayala Bhagavati' - wonder why.
Last edited by ragam-talam on 08 Sep 2008, 04:06, edited 1 time in total.

vasanthakokilam
Posts: 10958
Joined: 03 Feb 2010, 00:01

Post by vasanthakokilam »

Nice and powerful rendition. Devi, Bagavathi are all invocations of Bharathi's favorite (ishta) devine entity Sakthi: http://hindusaktha.jagaddhatri.com/bagavathi.html

arasi
Posts: 16872
Joined: 22 Jun 2006, 09:30

Post by arasi »

VK,
With bArati's universal view about everything--it is not surprising that Sakti to him comes from everywhere! By the way, the vEdapuram here refers to Pondycheri.
An aside: someone you know from pANdi nADu narrated this song as a kuDu kuDup pANDi in a school skit, reciting it as a true kuDukuDup PANDI :)
Last edited by arasi on 08 Sep 2008, 08:46, edited 1 time in total.

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Post by erode14 »

A.V.K. Rajasimman, disciple of of shrI O.V.S and bro-in-law of shrI O.S.T., sings on 10.9.08, a concert with the compositions of bhArathiyAr in the music academy . He is also a popular bhAgavathar in the sampradhAya bajanai...

http://www.musicacademymadras.in/2008-w ... Sep08.html

ragam-talam
Posts: 1896
Joined: 28 Sep 2006, 02:15

Post by ragam-talam »

vasanthakokilam wrote:Devi, Bagavathi are all invocations of Bharathi's favorite (ishta) devine entity Sakthi:
VK, my question was more on why he chose Malayala bhagavathi, not Tamizh devi. I was trying to find out if there was any special significance in the context of this song.

ragam-talam
Posts: 1896
Joined: 28 Sep 2006, 02:15

Post by ragam-talam »

Sikkil Gurucharan sings mostly Bharatiyar songs in this concert:
http://www.sangeethamshare.org/tvg/UPLO ... URUCHARAN/

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Post by rshankar »

ragam-talam wrote:Sikkil Gurucharan sings mostly Bharatiyar songs in this concert:
http://www.sangeethamshare.org/tvg/UPLO ... URUCHARAN/
LOL at gaNapti tAyai instead of gaNapati tALai!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Post by rshankar »

A very touching and moving article:
http://www.hindu.com/fr/2008/09/26/stor ... 070400.htm

arasi
Posts: 16872
Joined: 22 Jun 2006, 09:30

Post by arasi »

Look at him! His arm around her shoulder--and thoes were bygone days! balE pANDiyA! Sollilum Seyalilum enbadu unakkE tagum!
Bravo, bArati! You were a pANDiyan who practiced what you preached :)

arasi
Posts: 16872
Joined: 22 Jun 2006, 09:30

Re: Subramania Bharati

Post by arasi »

I don't believe I'm reviving this thread after two and a half years!
Rajesh,
Thanks for suggesting that I should post the sanskrit translation of the poem 'pAyum oLi nI enakku' here. There is a thread in the Sahitya thread about this song and Ravi has done a lovely translation, as he always does.
I request one of you to give the dEvanAgari version of it here since I don't know how to.
This is from a book published in 1963 by Srirama Desikan, a scholar in sanskrit . It was a novel attempt of course, half a century ago to translate from tamizh to sanskrit--and not the other way round!

BhArati's pAyum oLi nI enakku rendered in sanskrit:

tvam mE prabhA drushTiraham tavAsmi
svayam madhu tvambhramarastavAham I
vaktum na shaktOsmi tava prabhAvam
pIyUsha rUpE! nabhasaha prakASE! II

vINA mama tvam, tava chAsmi hastaha
hArO mama tvam, tava ratnamasmi I
tvannEtrakAntih paritaha prabhAti
hE krushNamAtaha! sthirajIvanA tvam II

vrushTirmama tvam tava chAsmi kEkA
tvam mE jalam pAtramaham tavAsmi I
gnAnaprakASO vadanE tavAsti
lAvaNya rUpE! madhurE! hi krushNE! II

tvam chandrikA mE jaladhistavAham
tvam mE svarastE madhugAnamasmi I
ruchyAvarA tvam suvimruSyamAnE
mannEtratArE! hyamrutAyamAnE! II

tvam mE sugandhaha kusumam tvAham
tvam SabdavAchyastvahamasmi Sabdaha I
kim vA vadEyam tava dEha kAntim
priyE! phalE! svAdyatamE cha krushNE! II

prItir mama tvam tava chAsmi kAntaha
tvam mEsi vEdattava chAsmi vidyA I
ruchisva rUpE! varajIva rUpE!
mamapriyE!nAda mayE manOgnyE II

prANA mama tvam chAsmi nADyaha
sampanna mamatvam nidhirasmi tubhyam I
avAchya rUpE! cha suvarNarEkhE!
hE mandahAsE! paripUrNa bhOgE! II

tArA mama tvam chAsmi sOmaha
vIryam mam tvam vijayastavAham I
bhUsvarga lOkasthita sarva sowkhya-
sanghAta rUpE! madhrE! nu krushNE! II

Please make corrections. Thanks!

Pratyaksham Bala
Posts: 4201
Joined: 21 May 2010, 16:57

Re: Subramania Bharati

Post by Pratyaksham Bala »

A casual attempt. Hope most of the words are correct!

त्वं मे प्रभा दृष्टिरहं तवास्मि
स्वयं मधु त्वं भ्रमरस्तवाहं I
वक्तुं न शक्तोस्मि तव प्रभावं
पीयूष रूपे ! नभसहा प्रकासे ! II

वीणा मम त्वं , तव चास्मि हस्ताः
हारो मम त्वं , तव रत्नमस्मि I
त्वन्नेत्रकान्तिः परितः प्रभाती
हे कृष्णमातः! स्थिरजीवना त्वं II

वृष्टिर्मम त्वं तव चास्मि केका
त्वं मे जलं पात्रमहं तवास्मि I
ग्ज्ञानप्रकाशो वदने तवास्ति
लावण्य रूपे ! मधुरे ! ही कृष्णे ! II

त्वं चन्द्रिका मे जलधिस्तवाहं
त्वं मे स्वरस्ते मधुगानमस्मि I
रुच्यावरा त्वं सुविमृश्यामने
मन्नेत्रतारे ! ह्यमृतायमाने ! II

त्वं मे सुगन्धाः कुसुमं तवाहं
त्वं शब्दवाच्यस्त्वहमस्मि शब्दः I
किं वा वदेयं तव देह कान्तिं
प्रिये ! फले ! स्वाद्यतमे च कृष्णे ! II

प्रीतिर मम त्वं तव चास्मि कान्ता:
त्वं मेसि वेदत्तव चास्मि विद्या I
रुचिस्व रूपे ! वरजीव रूपे !
ममप्रिये ! नाद मये मनोग्न्ये II

प्राणा मम त्वं चास्मि नाद्या:
संपन्न ममत्वं निधिरस्मि तुभ्यं I
अवाच्य रूपे ! च सुवर्णरेखे !
हे मन्दहासे ! परिपूर्ण भोगे ! II

तारा मम त्वं चास्मि सोम:
वीर्यं मम त्वं विजयस्तवाहं I
भूस्वर्ग लोकस्थित सर्व सोव्ख्य -
संघात रूपे ! मध्रे ! नु कृष्णे ! II
.

arasi
Posts: 16872
Joined: 22 Jun 2006, 09:30

Re: Subramania Bharati

Post by arasi »

Thanks P Bala!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Subramania Bharati

Post by rshankar »

Arasi - it is lovely, but, call me biased if you will, it doesn't trip off the tongue like the mahAkavi's original ....

Ranganayaki
Posts: 1763
Joined: 02 Jan 2011, 06:23

Re: Subramania Bharati

Post by Ranganayaki »

I will look at the whole thing later, but I notice that the "Paayum" has not been translated into the sanskrit.. I feel that being part of the title of the poem and such an important word in the first line, it needs to figure in the translation. May be not in the exact same terms, but some kind of impressive adjective for the "prabha" is needed. Just my two cents. But folks, I think we (I, especially) need to remember that a translation can ALMOST NEVER be as good as the original. After all the original inspiration came to the original writer in that language, and the translator is lucky if he can manage even shadow of that. A good translation is a lucky thing, I think. I don't know how hard this translator was trying to be poetic. I agree with Shankar at this point.

arasi
Posts: 16872
Joined: 22 Jun 2006, 09:30

Re: Subramania Bharati

Post by arasi »

Ravi,
You do know that I'm very much with you in the biased group ;)
I thought this would draw a few more to Bharati--the non-tamizh speaking ones. In the Intro, V.V. Giri (former president of India) says the same, but a translation into hindi is more useful, I'd think.

Pratyaksham Bala
Posts: 4201
Joined: 21 May 2010, 16:57

Re: Subramania Bharati

Post by Pratyaksham Bala »

Translation of a verse.

It is wonderful if the translation is done as a verse, subject to the poetic rules, and without diluting/distorting the meaning. The expression or conveyance of the meaning is equally important.

Even then, the impact will be lost if there is improper structuring. For Dohas In Hindi, for example, there is a letter-count. In Tamil, there are edugai-monai-iyalbu as well as chandas rules. In Sanskrit we have a good number of chandas and letter-counts. Additional important requirements are the flow and the beat.

Subject to all these restrictions, difficulties and expectations, if one can succeed in a verse-to-verse translation, that will surely earn a 'wow!' not only to the original poet but also to the translator.

Example: Shri A.K. Ramanujam and his English translations of Tamil and Kannada poetry.

Sivaramakrishnan
Posts: 1582
Joined: 02 Jan 2010, 08:29

Re: Subramania Bharati

Post by Sivaramakrishnan »

I suggest music lovers to read a highly informative feature on Bharati in SRUTI magazine (Sep 2011 issue).

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

i understand that Subramanya Bharathy had good access to carnatic music and for many of his poems had suggested suitable raagams. He was an active political worker, journalist, editor, poet and orator , and so could not concentrate on music.

Many of his poems were set to music by the singers and their friends and a few by famous music directors like Sudarsanam of AVM studiois.

D.K,PattammaaL had popularized many of the poems through 78 rpm records. That was in 1940 period when she was barely 20 years in age.

Other musicians like Madurai MaNi Iyer, MSSubbulakshmi, NCVasanthakokilam,and CSjayaraman had also done their share.

This thread is being revived with the aim of sharing the lyrics and rendering of atleast 20 such great poems and lyrics as sung.

Though, Bharathy himself had suggested and sung some of the songs in chosen raagams, latter day vocalists rendered the poems in tunes set by themselves.
-

1
Let us begin with the ever famous raagamaalika by N.C.VASANTHAKOKILAM,
,the poem on Goddess Saraswathy.
Who set the glorious music for this poem?
Was it done by NCV herself?
-

https://youtu.be/IxkyKHMzPJM
-
N.C.VASANTHAKOKILAM
பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல்-அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம்-கண்டேன்
வெள்ளை மனம் பறிகொடுத் தேன், அம்மா!..

KEERWAANI?
----------------------------

ஆடி வருகையிலே அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்ப்பாள் !
கையில் ஏடு தரித்திருப்பாள் ,
அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் !
நாடி அருகனைந்தால் பல்
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் !
கூடி மகிழவோம் என்றால் விழிக்கோணத்திலே
நகை காட்டி செ லவாள் !
( பீம்ப்ளாஸ் )
------
ஆற்றங்கரைதனிலே
தனியானதோர் மண்டப மீதினிலே
காற்றை நுகர்ந்திருந்தேன் ,
கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் !
ஏற்று மனம் மகிழ்ந்தே
" அடி! என்னோடிணங்கி மண்ம் புரிவாய் என்று
கேட்டிட்ட போதினிலே
இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாள் !
(கமாஜ் )
------------
----
Last edited by sam on 18 Mar 2025, 05:29, edited 1 time in total.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

2
veLLaith thaamaraip poovil iruppaaL
BEEMPLAS
---
MADURAI MaNi Iyer

https://www.youtube.com/watch?v=aqAnvHlxIYU

-
வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
.......... வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
............கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
............ஓதும் வேதத்தி னுண்ணின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
...........கருணை வாசகத் துட்பொரு ளாவாள்

மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்
...........மக்கள் பேசும் மழலையி லுல்லாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
..........கிளியி னாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
.........குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
..........இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்

--
Last edited by sam on 18 Mar 2025, 05:31, edited 1 time in total.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

VeLLaith thaamaraip poovikl iruppaaL

M.S.SUBBULAKSHMI


https://www.youtube.com/watch?v=9GjBEzkzMY4&t=3s

வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
.......... வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
............கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
............ஓதும் வேதத்தி னுண்ணின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
...........கருணை வாசகத் துட்பொரு ளாவாள்

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

3
KaaNi Nilam vendum
..
C.S.JAYARAMAN and M.L.VASANTHAKUMARI

https://youtu.be/E_X7I18BeK0?si=v3G100SrgPoEkc5V

காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும்,
– அங்கு தூணில் அழகியதாய் –
நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் –
அந்தக் காணி நிலத்தினிடையே –
ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் –
அங்கு கேணியருகினிலே –
தென்னைமரம் கீற்று மிளநீரும்*.
பக்கத்திலே வேணும் –
நல்ல முத்துச் சுடர்போலே
– நிலாவொளி முன்பு வரவேணும்,
அங்கு கத்துங் குயிலோசை –
சற்றே வந்து காதிற் படவேணும், –
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே –
நன்றாயிளந் தென்றல் வரவேணும்...

பாட்டுக் கலந்திடவே –
அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் –
எங்கள் கூட்டுக் களியினிலே –
கவிதைகள் கொண்டுதர வேணும் –
அந்தக் காட்டு வெளியினிலே –
அம்மா! நின்றன் காவலுற வேணும், –
என்றன் பாட்டுத் திறத்தாலே –
இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.
Last edited by sam on 18 Mar 2025, 05:32, edited 1 time in total.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

4
தூண்டிற் புழுவினைப்போல்

D.K.PATTAMMAL

https://drive.google.com/file/d/1yLvkP6 ... sp=sharing

தூண்டிற் புழுவினைப்போல் -
வெளியே சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ!

கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--
மனது வெறுத்து விட்டதடீ!

பாயின்மிசை நானும் --தனியே படுத்திருக்கையிலே, தாயினைக்கண்டாலும்,--சகியே! சலிப்பு வந்த
தடீ!

வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே! வளர்த்து
ப் பேசிடுவீர்; நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!.
நுங்களுறவையெல்லாம் . உணவு செல்லவில்லை ;--சகி

உறக்கங் கொள்ளவில்லை.


மணம் விரும்பவில்லை;--சகியே! மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும் குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே காணக் கிடைத்ததில்லை.
பாலுங் கசந்ததடீ!--சகியே! படுக்கை நொந்ததடீ!

கோலக்கிளி மொழியும் --செவியில் குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல் நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம் படுத்துமென்றுவிட்டான்
கனவு கண்டதிலே-- ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்,

இனம் விளங்கவில்லை --எவனோ என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--
சகியே! மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ !

உச்சி குளிர்ந்ததடீ;--சகியே! உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ! இச்சை பிறந்ததடீ!--
எதிலும் இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ!--சகியே!
அழகு வந்ததடீ ! எண்ணும் பொழுதிலெல்லாம் -
-அவன்கை இட்ட விடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ !-
-புதிதோர் சாந்தி பிறந்ததடீ!

எண்ணி எண்ணிப் பார்த்தேன் ;-
-அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --
அங்கனே கண்ணின் முன் நின்றதடீ
Last edited by sam on 18 Mar 2025, 05:33, edited 1 time in total.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

5
"Vedhala Ulagam -
Theeratha Vilayattu Pillai Song"
1948
D.K.PATTAMMAL
dance by kumari Kamala

https://youtu.be/YyjoNQgQTAE?si=pkPFGC1V0iFAwveg


தீராத விளையாட்டுப் பிள்ளை ,
கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை

தின்னப் பழம் கொண்டு தருவான் ,
பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்னைய்யன் என்றால்
அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(SINDHUBAIRAVI)
...
அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;

குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.

(KAMAJ) (தீராத)

பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;

வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.

(SHANMUGAPRIYA)

(தீராத
புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,

கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.

(MAAND)
Last edited by sam on 18 Mar 2025, 05:34, edited 1 time in total.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

6
Dhikku Theriyaadha Kaattil
78 rpm Pts 1 & 2"
G N Balasubramaniam-
----
https://youtu.be/yYlgCeVFgc8?si=HEt1GWAJEJSZZqr9
--
Behag
திக்குத் தெரியாத காட்டில் — உன்னை
தேடித் தேடி இளைத்தேனே
Revagupti
கால் கை சோர்ந்துவிழலானேன் – இரு
கண்ணுந் துயில்படரலானேன் – ஒரு
வேட்கை கொண்டு கொலை வேடன் – உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் nbsp;
kuntalavaraali
“பெண்ணே, உனதழகைக் கண்டு – மனம்
பித்தங் கொள்ளு” தென்று நகைத்தான் – “அடி
கண்ணே, எனதிரு கண் மணியே – உன்னை
கட்டித் தழுவ மனம் கொண்டேன்
sahana
“அண்ணா, உனதடியில் வீழ்வேன் – என்னை
அஞ்சக் கொடுமை சொல்ல வேண்டாம் – பிறன்
கண்ணாலம் செய்து விட்ட பெண்ணை – உந்தன்
கண்ணாற்ப் பார்த்திடவுந் தகுமோ?
kaapi
“ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன் – நினது
இன்பம் வேண்டுமடி, கனியே!
மோடி கிருக்குதடி தலையை நல்ல
மொந்தைப் பழைய கள்ளைப் போலே.”
paraj
காதால் இந்த உரை கேட்டேன் – ‘அட
கண்ணா!’ என்று அலறி வீழ்ந்தேன் – மிகப்
alternate : கண்ணா!’ என்று தாவி அணைத்தேன் – மிகப்
போதாகவில்லை இதற்குள்ளே – எந்தன்
போதம் தெளிய நினைக் கண்டேன்

Transliteration

dikku teriyAda kATTil unait-tEdit-tEdi iLaittEnE

kAl kai sOrndu vizhalAnEn iru kaNNUm tuyil paDaralAnEn – oru
vEtkaik koNDu kolai vEDan uLLam veTkam koNDozhiya vizhittAn

peNNE unadazhagaik-kaNDu manam pittam koLLudendru nagaittAn aDi
kaNNE enadiru kaN maNiyE unnaik-kaTTit-tazhuva manam koNDEn

aNNA unadaDiyil vIzhvEn ennai anjak-koDumai solla vENDAm – piran
kaNNAlam seiduviTTa peNNai undan kaNNArp-pArttiDavun-tagumO

EDI sAttirangaL vENDEn ninadu inbam vENDumaDi kaniyE
mODi kirukkudaDi talaiyai nalla mondaip-pazhaiya kaLLaip-pOlE

kAdAl inda urai kETTEn aDa kaNNA endru alari vIzhndEn -migap-
alternate : kAdAl inda urai kETTEn aDa kaNNA endru tAvi aNaitten -migap-
pOdAgavillai idarkkuLLE endan bOdam teLiya ninaik-kaNDEn

Translation

In a forest through which I couldn’t find the way,
I grew tired in my search for you.

I started falling as my legs tired, and my eyes grew sleepy,
when a lustful hunter stared at me to my embarrassment.
‘”Girl, I am maddened by your beauty!” he said and laughed.
”Oh my darling, I want to embrace you”

Elder brother, I fall at your feet, do not say such cruel things to frighten me!
Is it correct to even to look in such a way at a woman married to another?

”Don’t speak of rules! I seek only your pleasure, my sweet!
An enchantment intoxicates me like a bowl of aged liquor”

Hearing these words, I cried out ‘Kanna’ and fell.
alternate : Hearing these words, I cried out ‘Kanna’ and leapt to embrace him.
Before long my faintness cleared and I woke to see You!
-
courtesy
https://sujamusic.wordpress.com/201
3/02/28/dikku-teriyada-kattil
-----
quote
=====
On yet another level, I love the ragas the song has been set to, each verse infused with its own mood.
It starts with Behag, lilting and light as she traipses through the forest.
As she tires, we switch to Revagupti, a gentle and somnolent raga.
The hunter seduces in Kuntalavarali and
she begs him for mercy in Sahana.
He talks cheerfully of his intoxication in Kapi and
she loses consciousness in Paras.
A gem of a song.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

7
சின்னஞ்சிறு கிளியே !

RARE!
DKP-VINTAGE-78RPM-சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
D.K.PATTAMMAL
===
https://www.youtube.com/watch?v=WGk1nkqodf0
-
கமாஸ்
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
காபி
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே
சிம்மேந்திரமத்யமம்
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
அடாணா
உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
ஹுசேனி
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உதிரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? - கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

8
Asai Mugam Marandhu Pochae
Jonpuri
Semmangudi Srinivasa Iyer"

https://youtu.be/Rvpq0RsI8Dk?si=dRId8iLw6iP835rO

.
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)
.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

9
நெஞ்சுக்கு நீதியும்

MS.SUBBULAKSHMI

https://drive.google.com/file/d/0B0dfsl ... SpWfyQ0rOg

நெஞ்சுக்கு நீதியும் ,தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண் !.

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம்
இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ! ..

வஞ்சனையின்றிப் பகையின்றி சூதின்றி
வையக மாந்தரெலாம் ,

தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர்
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!.

நம்புவதே வழி என்ற மறைதனை
நாமின்று நம்பிவிட்டோம்

கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால்
உனைக் கும்பிடுவேன் மனமே!

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
சக்தி ஓம். ஓம் ஓம்

வெள்ளை மலர் மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய் ..

தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்!

எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதெந்தன நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய்
சக்தி ஓம், சக்தி ஓம், சக்தி ஓம்

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

10
நல்லதோர் வீணை செய்தே.

https://youtu.be/9guE2xSdgdE?si=Uhn4RcopY6oeD5s9
ILAYARAJA

நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி – நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் – நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் – சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் – இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

11

நின்னைச் சரணடைந்தேன் — கண்ணம்மா
https://youtu.be/xVTSlYVJiRI?si=qw87RXPuWENMDFNj
Music by Ilayaraja
Jayasree

நின்னைச் சரணடைந்தேன் — கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வண்ணம் (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட (நின்னை)

நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)
.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

12
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே பேதம் இன்றி வாழ்க என்று கொட்டு முரசே
D.K.PATTAMMAL
MOHANAM
MUSIC-AVM SUDHARSANAM

https://drive.google.com/file/d/0Bwm19l ... lKHXzLs1ew
.
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட
கொட்டு முரசே
பேதம் இன்றி வாழ்க
என்று கொட்டு முரசே ----

நெற்றி ஒற்றைக் கண்ணனோடு
நர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்கவென்று
கொட்டு முரசே

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

13
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி
.
SIRKAZHI GOVINDARAJAN
.
( a few stanzas only)

https://youtu.be/iW63TxXQHYQ?si=-SoilLIJAhCsTZZz.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

14
"Kaakki Siraginiley with Lyrics |
K.J. Yesudas,
Subramania Bharati,
Raghuvaran
https://youtu.be/bXZOcjqCY-8?si=zq8sC5iTWjG8nEPS

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

15.
சிந்து நதியின் மிசை நிலவினிலே

https://youtu.be/AKLzxSGhVyw?si=gwoTDxqvx5TEDP3X


சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரன நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்.


கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்.

சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்
.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Bharathiyar Songs
By
M.S. Subbulakshmi.
Music by kadayanallor Venkataraman
.
https://youtu.be/DmzIXMNr-iI?si=Z4DirMnMbMC9fWyg

Song List:

00:00​ - Karpaga Vinayaka
03:46​ - Villinaiyotta Puruvam
07:01​ - Ettanai Koti Inbam
11:04​ - Vande Mataram
17:04​ - Bharata Desamenru
25:09​ - Sentamizh Nadenum
28:30​ - Vazhiya Sentamizh
29:29​ - Kalamam Vanattil

கற்பக விநாயகக் கடவுளே,போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன் 5
இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்; 10
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு 15
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;
அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே. 20

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

வில்லினை ஒத்த புருவம்
A song about velavan

Song sung by
MSSUBBULAKSHMI
( see previous post)
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
வேலவா வடிவேலவா

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
வேலவா வடிவேலவா

அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது
வேலவா வடிவேலவா

சொல்லினை தேனில் குழைத்துரைப்பாள்
சிறு வள்ளியைக் குறவள்ளியை

கண்டு சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே மலைக்காட்டிலே

கல்லினை ஒத்த வலிய மனம்கொண்ட
பாதகன் சிங்கன் பாதகன்

அவன் கண்ணிறண்டாயிரம் காக்கைக்கிரையிட்ட
வேலவா வடிவேலவா

பல்லினைக்காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியைக் குறவள்ளியை

ஒரு பார்ப்பனக்கோலம் தரித்துக்கரம் தொட்ட
வேலவா வடிவேலவா

வேலவா வடிவேலவா ... வேலவா வடிவேலவா.

வெற்றிவேல் முருகனுக்கு ... அரோஹரா!

.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

17
காலமாம் வனத்திலண்டக்...
MSSUBBULAKSHMI
Anandabairavi

Kalamam Vanattil | M.S. Subbulakshm

https://youtu.be/EbIbQY_na34?si=CyooHN78KQZTqF9N

காலமாம் வனத்திலண்டக்
கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு - தழல்

காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு - மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.

மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த

வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.

விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் – பழ

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

19
Ethanai Kodi Inba
M.S. Subbulakshmi

https://youtu.be/Tt5tZd9wtjU?si=fGT2vgc1dGN7bpxs

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

20
Kakkai Siraginile with Lyrics
K J Yesudas

https://youtu.be/5Ex8Kiuc-vo?si=GNt0djVSfwhSMQhP

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

21
பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்.
"M S Subbulakshmi -
Pozhudhu Pularndhadhu -
Ragamalika -
https://youtu.be/pCZbLFpTZJI?si=Mm0aJQII1IaLIkcD

பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவ
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;

விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!
.
புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே!
...
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயி ரே! பள்ளி யெழுந்தரு ளாயே! 4


மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய றுஉனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
.

.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

22

M S Subbulakshmi -
Paarukulle Nallanaadu -
Jaunpuri -

https://youtu.be/ZEk3_SfmpJU?si=iYo99OE4J4bgB3vv
.
HOMAGE2MS-VINTAGE CLASSICS

homage2mssubbulakshmi
74-பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
https://youtu.be/ZEk3_SfmpJU


from (/www.lakshmansruthi.com/)

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்

பாரத நாடு

சரணங்கள்

1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

2.

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)
3.

நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

4.

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

5.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

23
நெஞ்சு பொறுக்குதில்லையே.
C.S.JAYARAMAN
music by AVM Sudharsanam
Sindhubairavi



https://youtu.be/YwL4egpxW8s?si=IkxDaXvkz4Y2MtLQ

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென்பார்-இந்த
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)
.
கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்
பரிதவித் தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே -இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)
.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

24

மன்னும இமயமலை எங்கள் மலையே

RARE AND WONDERFUL TREASURE. .MUSIC BY S.V.VENKATARAMAN. SPECIALLY SUNG FOR THE FIRST REPUBLIC DAY . CHENCHRUTTI. LOVELY ORCHESTRATION. .NOT AVAILABLE ANYWHERE IN THE WEB..

https://youtu.be/N5ejc-H09io?si=WqMQm9w9R0gKxcFq

மன்னும இமயமலை எங்கள் மலையே !
மாநிலமீததுபோல் பிரிதில்லையே !
.இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே !
இங்கிதன் மாணபிற்கு எதிர் எது வேறே ?

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே !
பார் மிசை ஏதொரு நூலிது போலே !
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே !

மாரத வீரர் மலிந்த நன் நாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு
நாரத கான நலம் திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு !

பூரண ஞானம் பொலிந்த நன் நாடு
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே!
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

25
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா.
1949
MSSUBBULAKSHMI
.
https://youtu.be/g8zUUHJCZaQ?si=61ePnPmBHKJ3OP21
.

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா

.

இளையபார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும்
உதய ஞாயிரறோப்ப வா வா வா
களையிழந்த நாட்டிலே-முன்போலே
கலைசிறக்க வந்தனை
விளையுமாண்பு யாவையும் -பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா
4.விந யநின்ற நாவினாய் வா வா வா

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

26
பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!.
DK.PATTAMMAL
Music AVM Sudharsanam
Film Vaazhkjai 1949
.
https://youtu.be/g3epDRQ0UCY?si=yyqubGxT41PXhawe

பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)

மனிதருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?.

இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க




.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

27
யாமறிந்த மொழிகளிலே
MS SJBBULAKSHMI
.
Avery rare 78 RPM record.
Raagamaalika viruttham
Possibly issued in 1945 tamizh isai controversy.

https://youtu.be/0NvkU_HzndM

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்
இகழ்ச்சிசொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
1
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க்
குருடர்களாய் வாழ்கின்றோம்;
ஒருசொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
தமிழ்முழக்கம்
தமிழ்முழக்கம்
தமிழ்முழக்கம்
செழிக்கச் செய்வீர்!

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

28
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

MS SUBBULAKSHMI
1945 78 RPM RECORD.
Chenchurutti
.
https://youtu.be/0NTAU_jJvoY?si=o7BlsbW7GF8x_JrO

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே..

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு..

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
.
Madhyamaavathy follows
.
.வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!

வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
.


.



.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

29
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
D.K.PATTAMMAL
.
MAANJI./BAIRAVI..

https://www.youtube.com/watch?v=zpSsxYj9dwo

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்..

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய். 2

முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
.
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்..
.
வெண்மை வளர் இமாச்சலம் தந்த
விரான் மகளாம் எங்கள் தாய்.
அவள் திண்மை மறையினும் தான் மறையாள்
நித்தம் சீர் உருவாள் எங்கள் தாய் !

எங்கள் தாய் !
எங்கள் தாய் !
.

.
.

sam
Posts: 954
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

30
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி.
D.K.PATTAMMAL
Vintage 78 RPM record
1945
.
https://www.youtube.com/watch?v=bXMaYZ6HioE .
.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -அதன்

முந்தைய ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே -இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி ,என்
வாயுற வாழ்த்தேனோ -இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
.இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே -எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே -அவர்

கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே -தங்கள்

பொன்னுடலின்புற நீர்விளையாடி இல்
போந்ததும் இந்நாடே -இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே -அவர்

தங்க மதலைகள் ஈன்று அமுதூட்டித்
தழுவியதும் இந்நாடே -மக்கள்

துங்கமுயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே -பின்னர்

அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே -இதை

வந்தே மாதரம்,வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?"

Post Reply