தனிச் செய்யுட்கள்

Post Reply
Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
மூன்றும் சிறப்பு.

முதல் இரண்டும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 03 Feb 2024, 09:01 .
மூன்றும் சிறப்பு.

முதல் இரண்டும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
thanks.

சில பிழைகள் எப்படியேனும் வந்து விடுகின்றன. தளை சந்தம் தவற

சேவடிக்கு அடிப -> சேவடிக்க டிப
நாயகர்க்கு இடது -> நாயகர்க்கி டது

எழுதும் போதே புணர்ச்சியுடன் எழுதிப் பழகவேண்டும்

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஐம்பா அந்தாதி

மதிமுகத் தாள்மலர்க்க ணையாள் மதனை
விதிவசத் தாலுயிரெ ரித்தா னிடப்புறமே
வவ்வினாள் தன்னை யகத்துள்ளே வைத்திருக்கக்
கவ்வாதே தீமை நமை

மைத்தடங் கண்ணினாய் மானேர் விழியாளே
பொய்த்தேவை யெண்ணாதே யெப்போது மெந்நாளும்
உள்ளுவோ மெஞ்ஞான்று மன்னை யுமையவளை
வள்ளன்மை தான்படைத் தாள்

தாளிணைச் செய்குமே தூயதாய் நம்மனம்
தாளிணை நல்குமே கல்வியுஞ் செல்வமும்
தாளிணை நல்குமே ஞானமும் வீடுமே
தாளிணைச் செய்குவோந்து தி

திகட்டா தவள்பேர் தினந்தோறுஞ் சொல்லப்
பகட்டாய்ப் பலபூ சனைவேண்டாம் மிக்கெளிதே
தூய மனத்தோடு நாமம் நவின்றிட
மாயம் விலகிடு மே/மாய மழிந்திடு மே

மேலென்றும் கீழென்று மெண்ணாது யாவரும்
வேலெறிந்தான் தாய்முன்னே யொன்றா முணர்வோம்
இகவாழ்வி லன்பைப் பொழிவதாம் மாந்தர்
சுகப்படும் பாதை மதி

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தனிப் பாடல்கள்

வாரணத் தோலணி கண்ணுதல் கற்பகா
பூரண ஞானனே போதிது நின்னருள்
தாரணி மங்கள வாரிதி செஞ்சடை
நீரணி நல்லனே தா

மாலொடு நான்முகன் தேடிய மூலமே
பாலொடு தேன்தனை யான்கலந் தூட்டுவன்
நீயதைத் தானுகந் தேற்பதே வேண்டுவன்
தாயுமா யானவ னே

ஊனிலே வந்ததே ஊழியா லிப்பிறப்
பானிரை மேய்ப்பவன் நெஞ்சிலே யாடிடும்
தாழ்சடை நீறணி செல்வனேத் தெய்வமே
வாழ்விதிற் பூப்பனோ யான்

வாவியில் பூத்ததோர் மாமலர்க் கொண்டுனை
தாவியே வந்துயான் வந்தனை செய்வனே
பாவியேன் செய்வன நல்லதா யாக்குவாய்
தேவியை வாமமா யுற்றவா நற்றவா

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

நனிசிறப் புத்தமிழ்ப் பாடற் சுவைக்க
வினிதினி தேகாந்த மே

கருங்கூந்தற் றான்மிளிருங் கன்னக் குழியோய்த்
திரும்பியேப் பாரா யெனை

மின்னற் றரையிறங்கி வந்ததோ பெண்ணாய்நின்
மின்னல் நகையே நகை

கன்னல் மொழியாளே விற்புருவ யேந்திழையேப்
பின்னற் குழலாற் பிணை

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கண்ணிரண்டு பெற்றுவிட்டா லாமோவன் பில்லையே(ல்)ற்
புண்ணிரண்டுக் கொப்பே யவை

மன்ன னெனநினைந்துச் செய்யுங்கொ டுங்கோன்மை
மண்ணாக் குமேயு றுதி

மன்னர்க் கழகொன்றே செங்கோன்மை மாட்சியு
மன்னவர்க் கேயுறு தி

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஒரு பதிகம்

தூய நிறத்த விடர்களை வெள்விடையா
மாயத் திலேயா னழுந்திடக்கா வாமற்
பரிகசித் தீரோ மனங்குளிரக் காட்டுக்
கரித்தோலீ ரென்செய்தீர் நீர்? (௧)

நீர்மலி செஞ்சடை போழ்ந்த* நுதற்கண்ணோய்
போர்ப்படை பாண்டவர்க் கீந்தவாயென் றன்னைச்
சிரிப்பாய்ச் சிரிக்கவைத் தீரேய தன்றிக்
கரித்தோலீ ரென்செய்தீர் நீர்? (௨)

ஆனாத செல்வந்தாங் கேட்டனோ வல்லையே
கோணாத நின்னினைப்பு வேண்டினே னையே
சலித்தீரோ வெம்பாலே(ல்) மான்மழு வேந்தீப்
புலித்தோலீ ரென்செய்தீர் நீர்? (௩)

ஐமுகத் தையனே யெம்மைப் புறந்தள்ளிப்
பைமுக நஞ்சரவை நச்சினீர் நன்றோ
களித்தீரோ யாம்படும் பாடெல்லாங் கண்டீர்
புலித்தோலீ ரென்செய்தீர் நீர்? (௪)

முப்புரஞ் செற்றீர் மறைநான்கு மேத்தியேச்
செப்பு மறியானே யெம்மைக்கை விட்டீர்
புலமிலை யோவன்னை யங்கயற் கண்ணி
வலங்கொண்டீ ரென்செய்தீர் நீர்? (௫)

நால்வர்க்கும் நன்றே நவின்றீர் நலஞ்செய்யும்
நாவல நாடினே னும்மை (நலஞ்செய்யா) துனித்த
வுளங்கொண்டீர் போலுங் கயல்விழி யாளின்
வலங்கொண்டீ ரென்செய்தீர் நீர்? (௬)

தாராமற் போனீர் நிகரிலி எஞ்ஞான்றும்
வாராமற் போமோ கடைத்தேறும் பாதை
விடமுண்ட கண்டத்தீ ரின்றெனக் காய்நின்
னிடந்தந்தீ ரென்செய்தீர் நீர்? (௭)

பூமகற் கேள்வனும் நாமகற் கேள்வனும்
சேகம லத்தாள் பணிந்தா லெனைத்தான்
விடலாமோ தாளேனே மீளேனே நின்ற
னிடந்தந்தீ ரென்செய்தீர் நீர்? (௮)

இம்மைத் தனல கலவும தின்னரு
ளெம்மிற் குவிய விதுபோது செஞ்சோதீ
அம்மையே அத்தனே பைந்தமி ழீந்தவா
செம்மையேச் செய்குவீர் நீர் (௯)

மும்மலம் விட்டொழிந் தொன்றிடச் செய்யெமை
நிம்மலா நீறனே நல்குவா யிச்சகம்
யாவுமே யானவா காலமுந் தாண்டினாய்
மேவினைப்* போக்குவீர் நீர் (௰/௧௦)

போழ்ந்த - பிளந்த
மேவு - விருப்பம்/ஆசை
Last edited by sankark on 04 Mar 2024, 22:57, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
(௩) வெம்பால் மான்மழு -- ஆசிரியத் தளை
(௬) நலஞ்செய்யா வுளங்கொண்டீர் -- கலித் தளை

இந்த இரு இடங்களிலும் வெண்டளை இருப்பின், அனைத்தும் இன்னிசை வெண்பா எனலாம்.

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 04 Mar 2024, 22:03 .
(௩) வெம்பால் மான்மழு -- ஆசிரியத் தளை
(௬) நலஞ்செய்யா வுளங்கொண்டீர் -- கலித் தளை

இந்த இரு இடங்களிலும் வெண்டளை இருப்பின், அனைத்தும் இன்னிசை வெண்பா எனலாம்.
:o நன்றி!

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

இருபுற மணைசெயும் குறமகள் கரிமக
ளிருவிழி அருள்சொரி முருகுடை குமரநின்
னிருமல ரடியினி லெனதுளஞ் சரணடை
வரமருள் தருணமு மிதுவிது விதுவே

மலைமகள் மகவெனு மதிமுக முருகனை
யலைகடற் கரைதனி லருள்புரி யெழிலனை
உலையறு நிலைதர விருகர மலர்மிக
கலைமிகு தமிழினிற் றொழுதிடு மனமே

கருவளர் பொழுதிலும் சிறுநடை பொழுதிலு
மிருமன மிணைந்தொரு திருவளர் பொழுதிலும்
அறுமுக வழகநின் மலரிணைத் திருவடித்
தருவதென் மனதினி லுனதொரு கடனே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பூமகளின் நாயகத்தை நாவினிக்கப் பாடிடுவோந்
தேமதுரத் தீந்தமிழால் பாவியற்றி பார்களிக்க
வாமனனாய் வந்துதித்து மாபலிக்கு வீடளித்தக்
காமனவன் தந்தையை யே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கார்வண்ண னின்னமுதைக் காணாத நாளெல்லாம்
பார்மீதில் யாமொழித்த வீணான நாளேயாம்
நீர்மலரும் நன்மலரா லண்ணல்தாள் நாந்தொழுவோம்
கூர்மதியுஞ் செல்வமுமே நற்கதியுந் தான்பெறவே

Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 12 Mar 2024, 23:19 இருபுற மணைசெயும் குறமகள் கரிமக
ளிருவிழி அருள்சொரி முருகுடை குமரநின்
னிருமல ரடியினி லெனதுளஞ் சரணடை
வரமருள் தருணமு மிதுவிது விதுவே

மலைமகள் மகவெனு மதிமுக முருகனை
யலைகடற் கரைதனி லருள்புரி யெழிலனை
உலையறு நிலைதர விருகர மலர்மிக
கலைமிகு தமிழினிற் றொழுதிடு மனமே
கலி விருத்தம்
கலி விருத்தம்

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 13 Mar 2024, 06:53
sankark wrote: 12 Mar 2024, 23:19 இருபுற மணைசெயும் குறமகள் கரிமக
ளிருவிழி அருள்சொரி முருகுடை குமரநின்
னிருமல ரடியினி லெனதுளஞ் சரணடை
வரமருள் தருணமு மிதுவிது விதுவே

மலைமகள் மகவெனு மதிமுக முருகனை
யலைகடற் கரைதனி லருள்புரி யெழிலனை
உலையறு நிலைதர விருகர மலர்மிக
கலைமிகு தமிழினிற் றொழுதிடு மனமே
கலி விருத்தம்
கலி விருத்தம்
🙏🏽

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தமிழில் ஒரு முயற்சி

https://sanskritdocuments.org/doc_z_mis ... hashl.html

நிலனோப் புனலோ வனலோ மருதோ
உணரங் கமோநான் தனியோ வனைத்தோ
அலனே நிலைக்கா தனவே யிவையே
மனமொன் றுதுயில் தனிலே யுணர்வாய்
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௧)

வருணங் களத னொழுக்க மொழுக
லிவையன் றுவாழ்வின் நிலைக ளிலையே
ஒருநா லுநிலை வழியு மிலனே
எனது வுனது வழிந்த நிலையே
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௨)

பெறுவா ருமில்லைக் கடவு ளுலகம்
முயர்வே தவேள்விப் புனிதத் தலங்க
ளசைவின் றியொன்றி நிலைக்கும் பொழுதி
லிவையா வுமற்ற வுணரா வெளியே
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௩)

பலவா யுளதாந் தடங்கள் விளக்க
மவையா வுமல வலவே யுறுதி
யுளதொன் றுமட்டு மதுவு மிதுவே
யதன்தூ யதன்மை தனையே யறிவாந்
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௪)

உடைத்தல் லதுமே லெதிருள் புறமும்
உடைத்தல் லகுணக் குடக்கும் நடுவும்
இறையா மிதுவே ஒருதன் மையதே
பிரியாப் பொருளா மிதுவே யிதுவே
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௫)

வெளுப்போக் கருப்போச் சிவப்போப் பிறவோ
சிறிதோப் பெரிதோக் குறிலோ நெடிலோ
உருவில் லதல்லே ஒளிவை யவையோ
உருவற் றதன்மை யதற்கே யியல்பே
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௬)

விதிக ளிலையே யதைச்சார் வதில்லை
குருவு மிலையே பயில்வோ னுமில்லை
அடியேன் பிறரென் றுவேறொன் றிலையே
பிரிவே துமில்லா ததுவே யிதுவே
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௭)

விழிப்போக் கனவோ வலையே துயிலின்
நிலைக்கா னதர மதுவல் லதுவே
ஒருமோ னத்துயில் தனிலா ழும்நிலை
யதுவே யதுவே எனச்சொல் லிடலாம்
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௮)

தனிலே நிலைக்கு மொருவண் டமிதே
விதற்குப் பிறிதா யெதுவொன் றுமில்லை
அனைத்தாய் விரியுங் கரந்து மிருக்கு
மிதற்கொ ருசான்றெ துவிண் டுரைக்க
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௯)


பிரிதொன் றுமில்லா முழுதா யவிதைப்
பிரிதாய் வுரைக்குஞ் செயலும் முடிமோ
தனியென் றுசொல முடியாப் பொருளை
மறையந் தமெலாம் விரித்தே மொழிந்து
முரைக்கு வழியோ யறியா திதுவே (௰)

Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

Commendable contribution!

And thanks for the link.

---

இதுவுமதுவே !
(கலித் தாழிசை)

நிலமல்ல; நீரல்ல. அனலல்ல; காற்றல்ல.
அங்கங்கள் எதுவுமல்ல; ஒன்றான உடலுமல்ல.
எதுவென உணரலாம் ஆழ் நித்திரையிலே.
அது நானே! ஒன்றே! கடைநிலையே! சிவமே!

மூலம் ஸம்ஸ்க்ருதம்: தசஸ்லோகீ, ஸ்ரீ சங்கராச்சார்ய
மொழியாக்கம்: ப்ரத்யக்ஷம் பாலா,
15.03.2024.

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 15 Mar 2024, 19:39
Commendable contribution!

And thanks for the link.

---

இதுவுமதுவே !
(கலித் தாழிசை)

நிலமல்ல; நீரல்ல. அனலல்ல; காற்றல்ல.
அங்கங்கள் எதுவுமல்ல; ஒன்றான உடலுமல்ல.
எதுவென உணரலாம் ஆழ் நித்திரையிலே.
அது நானே! ஒன்றே! கடைநிலையே! சிவமே!

மூலம் ஸம்ஸ்க்ருதம்: தசஸ்லோகீ, ஸ்ரீ சங்கராச்சார்ய
மொழியாக்கம்: ப்ரத்யக்ஷம் பாலா,
15.03.2024.
wow! need to learn more about thaazhisai and other thurais etc.

தனிலே நிலைக்கு மொருவண் டமிதே
விதற்குப் பிறிதா யெதுவொன் றுமில்லை
அனைத்தாய் விரியுங் கரந்து மிருக்கு
மிதற்கொ ருசான்றெ துவுரைப் பதுவே
தனிமிஞ் சியதாஞ் சிவமே யிதுவே (௯)

௯ ஒரு சிறிய மாற்றதுடன்

Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
எனது உனது அழிந்த OR எனதுனதழிந்த

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 16 Mar 2024, 19:19 .
எனது உனது அழிந்த OR எனதுனதழிந்த
எனது முனது மழிந்த didn't feel apt. per punarchi vidhigal, it should be எனதுனதழிந்த but then took a unauthorized license to go with as it is written

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தினைப்புனத்திலே வனக்குறத்தியைக்
கரம்பிடித்தவன் மலைமகள்மகன்
வினையொழிப்பவ னிருமலரடி
சரண்புகுவதே நலந்தரும்வழி
இணையிலாதவன் கரமுரர்களை
யழித்தவனுடை மருகனின்விழித்
தினையளவிலே விழவிதிவில
குமேயதையுண ருவோமடா

the forum doesn't allow to bring the indent to bring the edhugai explicit
as a வஞ்சிப்பா? ஒன்றிய வஞ்சித்தளை.

அதையே இயற்சீராகப் பிரித்ததால்

தினைப்புனத் திலேவனக் குறத்தியைக் கரம்பிடித் தவன்மலை மகள்மகன்
வினையொழிப் பவனிரு மலரடி சரண்புகு வதேநலந் தரும்வழி
இணையிலா தவன்கர முரர்களை யழித்தவ னுடைமருக னின்விழித்
தினையள விலேவிழ விதிவில குமேயதை யுணருவோ மடா

அனைத்தும் நிறையொன்றாசிரியத் தளை. பா வகை? aruseerk kazhinediladi aasiriya viruththam?

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

நிருத்தஞ் செய்யுநாதனுக் குநன்மலரைத் தூவியிட்
டொருத்தன் பையராவணிந் தசெஞ்சடையான் தாள்பணிந்
தொறுத்தல் நீக்கவோங்குயர்ந் தநற்கதியை நல்குமே
மறுப்பவர்க் குந்திருவடி பயப்பதன்றோ நன்னிலை

Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
தினைப்புனத்திலே வனக்குறத்தியைக் கரம்பிடித்தவன் மலைமகள்மகன்
வினையொழிப்பவ னிருமலரடி சரண்புகுவதே நலந்தரும்வழி
இணையிலாதவன் கரமுரர்களை யழித்தவனுடை மருகனின்விழித்
தினையளவிலே விழவிதிவில குமேயதையுண ருவோமடா
கலி விருத்தம்

தினைப்புனத் திலேவனக் குறத்தியைக் கரம்பிடித் தவன்மலை மகள்மகன்
வினையொழிப் பவனிரு மலரடி சரண்புகு வதேநலந் தரும்வழி
இணையிலா தவன்கர முரர்களை யழித்தவ னுடைமருக னின்விழித்
தினையள விலேவிழ விதிவில குமேயதை யுணருவோ மடா
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நிருத்தஞ் செய்யுநாதனுக் குநன்மலரைத் தூவியிட்
டொருத்தன் பையராவணிந் தசெஞ்சடையான் தாள்பணிந்
தொறுத்தல் நீக்கவோங்குயர்ந் தநற்கதியை நல்குமே
மறுப்பவர்க் குந்திருவடி பயப்பதன்றோ நன்னிலை
கலி விருத்தம்

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

செம்மையாய் நின்னைத் தொழுதிடச் செய்தெனைத்
தம்மையே யேத்திப் புகழ்ந்திடாத் தன்மையா
யிம்மையிற் வைப்பது நின்கட னாகையா
லம்மையே யென்செய லென் (௧)

உண்மையே பேசிடுந் தன்மையைத் தந்தெனை
யுன்மலர்த் தாளிலே தோய்ந்திடச் செய்வது
வும்பரு மேத்திடும் நின்கட னன்றரோ
வம்மையே யென்செய லென் (௨)

மும்மலம் நீக்கியென் னூழ்வினை நீக்குவா
யெம்மையு மிப்புவி தன்னிலே தோற்றினை*
நம்பினேன் நின்னையே யென்பணி தீர்ந்ததே
யம்மையே யென்செய லென் (௩)

பெற்றவ ளுன்னையே நம்புவ தென்கடன்
கற்றலும் மற்றது மீவது நின்கடன்
நிம்மதி தந்தெனை நல்லவ னாக்குவா
யம்மையே யென்செய லென் (௪)

கொற்றவை நீயலோக் கொற்றமும் நின்னதே
யுற்றதோ ரிப்பிறப் பீதிலே பெற்றிடும்
விம்மிதம் நீக்கியென் பக்கலில் நிற்கவே
யம்மையே யென்செய லென் (௫)

குற்றமு மென்னதோ வல்லவே வல்லவே
பெற்றமும் நின்னதேக் குற்றமும் நின்னதே
மெய்ம்மையில் நின்றிடுந் தன்மையை வேண்டுவ
னம்மையே யென்செய லென் (௬)

ஐந்தொழில் செய்வரை மஞ்சமா யாக்கியச்
செய்கையை யாருமே தானறி வாரதோ
வுய்தலும் நின்னரு ளென்றுணர் தன்மைதாச்
செய்தலு மென்தொழி லென் (௭)

கற்பனை யெட்டிடு மெல்லையைத் தாண்டியே
பற்பல தோற்றமு முண்டுநீ செய்தனை
நைவது நீக்கியெங் கைதனைப் பற்றுவாய்
செய்தலு மென்தொழி லென் (௮)

மோதலுங் காமமும் பாசமு மாசையும்
நாள்தொறு மிப்புவி மீதிலே யாடுதே
பெய்வளைக் கையளே மெய்ம்மையைக் காட்டுவாய்ச்
செய்தலு மென்தொழி லென் (௯)

செய்தலு மென்தொழி லொன்றுமே யில்லையே
வையமுந் தோற்றினா யென்றனக் கம்மையாய்த்
தையலே யன்புடன் நிற்பது நின்கடன்
வைதலே யென்னுரி மை (௰)

அல்லது

செய்தலு மென்தொழி லொன்றுமே யில்லையே
வையமுந் தோற்றினா யெம்புகல் நீயரோத்
தையலேத் தோழியாய் வந்தெனை யன்புடன்
பையவேப் பாங்குறக் கா (௰)

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மஞ்சுலா மாமலைத் தேவனின் தூக்கிய
குஞ்சிதத் தாளினை வைத்திடு வேனரோ
நெஞ்சிலே யென்றுமே நீங்கலா வாரணன்
தஞ்சமே என்றவன் பொன்னடிச் சேருவாம்

ஈசனை பற்பல ஞாயிறின் தேசனைப்
பூசனை செய்யலால் வேறெது நங்கடன்
நேசனைத் தன்னிலேத் தானிறை எம்முள
வாசனை வெம்புலித் தோலனைப் போற்றுவாம்

வாரணம் முட்டிய மார்பனின் சீர்கெடத்
தாரணி பத்துமே தோய்த்தவன் பாற்கடல்
நாரணன் நெஞ்சிலே நன்னடஞ் செய்பவன்
சீரிணைச் செங்கழ லேத்துவ மென்றுமே

கண்ணுதல் செஞ்சடை நீர்மலி வேணிய
னெண்ணிடா வொவ்வொரு நாளுமே வீணதே
பண்ணிலே நெய்தபா நித்தமும் பாடியே
விண்ணவர் தம்முடி வீழ்ந்ததா ளெண்ணுவாம்

தூக்கிய பாதமேக் காவலாய் நிற்குமே
தீய்க்குமே தீவினைப் பாவமும் மெம்மிறை
நோக்கினா லொப்பவும் மிக்கவு முள்ளதோ
நாக்கிலே வைந்தெழுத் தானதே நிற்கவே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கற்பகக் கொடியா ளோடேதா னுறையீச னெந்தை
யுற்றவ னுலகந் தன்னையூ னுயிரீந்தான் தன்னைக்
கற்றலு மறியா நானும்பா டுதல்கேளீர் விந்தை
பெற்றனோக் கபாலி தன்றன்பே ரருள்பார்வை மாதோ

வில்லடி பட்டாய்ப் பார்த்தன் கைகளாலன் றுமேரு
வில்லினாற் சுட்டா யன்றோ முப்புரம்வீ ழயின்று
சொல்லினால் யானும் பாடக் கற்பகநா தநீயே
நல்லருள் செய்தா யையே தாள்பணிந்தேத் துவேனே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

எடுத்த மலரடி யேர்புகழ் போற்றித்
தொடுத்த மலரது கொண்டுனைப் பூசை
யடுத்த யெளியனை நல்வழி யாற்றித்
தடுத்த ருளுவது நின்கடன் தானே

கடுத்த முகத்தொடு நிலவா (வாழா) தென்னைக்
கொடுத்த பிறப்பிதில் நின்னரு ளென்னில்
மடுத்து பெருகிடச் செய்மழு வேந்தீத்
தடுத்த ருளுவது நின்கடன் தானே

வடித்த சிலையென நின்றனைத் தூக்கி
எடுத்த வொருபதந் தஞ்சமென் பேனே
உடுத்த கரிபுலித் தோலுடை வேந்தே/தோற்சடை யானே
தடுத்து ருளுவது நின்கடன் தானே

தொடுத்த கணைகொடு முப்புரஞ் செற்றாய்
அடித்த விசயனுக் கம்பதை யீந்தாய்
நடுக்கும் வல்வினை நீக்கியேக் காவாய்
தடுத்து ருளுவது நின்கடன் தானே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அடிமல ரிணைகளைத் தொழுதெழு மனமே
இடரினுந் தளரினும் அவளடித் துணையே
உடலினை யுயிரினை யுணர்வினை யளித்தாள்
தடங்கடல் புவியிதை யுலகெலாம் படைத்தாள்

மலர்மிசை யுறைபவள் திருமக ளவளும்
வளர்கலை திறத்தவ ளிருவருந் தொழுத
மலைமக ளவளது மலரடித் தொழுவாம்
கலைகளுந் திருவுமே யருளுவ ளவளே

ஒருபுறம் குறமக லொசிந்தியே நிற்பாள்
மறுபுறம் கரிமக ளணுகியே நிற்பாள்
அறுமுக வரதனைப் பொழுதொறும் போற்றி
இருளற நலமெலாம் பெருகிடக் கொள்வோம்

மயிலினி லாடிடும் மலரடி சரணம்
ஒயில்மிகு முருகனின் திருவடி சரணம்
எயிலெரி வளவனின் குமரனின் கழலிணை
பயில்தமி ழதுகொடு பரவுதல் கடனே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

என்னே புகல்வேன் முடியுமோ ஓர்பிறவி
யன்னை புகழே புகழ்

பெண்ணை யொருகரையான் பித்த னிடமுகந்தா
ளன்னை யவளை யடை

முன்னை வினையெல்லாம் நீக்கும் மடநெஞ்சே
யன்னை மலர டியே

தன்னை யறிந்தார்க்குத் தாழ்வில்லைப் பார்தனி
லன்னை யடிசேர் வரே

தன்னை யடுத்தார்க்குத் தாழ்வின்றி வாரித்தா
னன்னை கொடுப்பாள் நலம்

வாராத துண்டோ வவளருட் சேவடித்
தாராத துண்டோ வரோ

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

காற்றாகி நீராகி மற்றாகி நிற்பாளின்
மாற்றாக வுண்டோ புகல்

உலகெலாந் தானுடையாள் கஞ்ச மலர்த்தாள்
நலமெலாம் நல்கிடு மே

கண்ணுத லாள்கடைப் பார்வை யுயர்த்துமே
பெண்ணவட் தாளைத் தொழு

பாராக்கி வைத்தாளைப் போற்றியே யெப்போதும்
தீராத பத்தியே செய்

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

got a forward in WA on account of pradosham and thats the catalyst for these 2 venpAs

அடிமலரி ணையே யிருத்தி மனத்தே
கடிமலர் தூவித் தொழுவன் - கடியாதே
தண்ணார் மதிசூடீ முக்கண் முதல்வநீ
யென்னுள் நிலையா யிரு

இருப்பு மிறப்பு முனதருளே காலா
நெருப்பாய்த் திருமேனி யானே - விருப்பும்
வெறுப்பு மிலனே யெனதுள்ளம் நின்பால்
நிறுத்தி வழுநீக்கு வாய்

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

and 1 more

வாய்மை வரமருள் மெய்ப்பொருளே என்னுள்ள
நோய்மை தனைநீக்கும் மாமருந்தே - சேய்தனைத்
தாய்மை யுடையானே முக்கண்ணா காவாம
லேய்த்தல் முறையா குமா

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கோலங்கண் ணுற்றனே யவ்விறையை யுன்வடிவில்
ஞாலத்தே நீயன்றி யாருண்டுக் - காலமெலா
மீரைந்து திங்கள் சுமந்தெடுத்த தாயேநின்
பேரையே தாங்கிடு வன்

என்விதை யுண்டதா லோருயி ரையிரு
தன்னுடல் தங்கின திங்களே தாங்கினை
நின்னையே போற்றுவன் நின்னையே யேத்துவனென்
கண்மணி நீயலை யோ

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கருவாக வுருவாகி வுயிராக வுருமாறிப்
பருவாகிப் பிறந்தாலு முனைநானு மறவாத
வரமேநீ தருவாயே வுலகேழும் படைத்தாயே
சிரமேலே வைப்பாயே மலர்ச்சேவ டிதனையே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வைப்பாயே --> பதிப்பாயே அனைத்தையும் புளிமாங்காய்ச் சீராக மாற்ற

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

புரியா விடயம் பலவுண் டறிந்தேன்
தெரியா நிலையே நிலையா யிருக்கு
மறியா தவகை யிதுவாழ் வுமலே
கரிமா முகவ னிளைய னடிசேர்

தருவா னறிவா யிருநன் னிலையே
குருவா யுரைத்தா னவன்பொன் னடிசேர்
தருவாய் நிழலீந் தருள்தான் பொழிவான்
மருவும் மடந்தை யிரண்டா யுடையான்

குருவே திருவே சரணஞ் சரணம்
அருளு மடிகள் சரணஞ் சரணம்
இருள்நீக் கியெமை யுயரப் புரிவாய்
தருவாய் நலமே மயிலே றுபவா

பருவா னவெலாம் முதற்கா ரணனே
செருவேல் விடுத்த மயில்வா கனனே
உருகா வுணரா மிகநைந் தவெனை
மறுகா தநிலை தனில்சேர்ப் பதுவே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அமிழ்தா கியநின் சரணந் தனையே
தமிழாற் றொழுவேன் திருமால் மருகா
தமியேன் தனைச்சூ ழிடரா கியவை
உமிபோ லெரிய வருளே புரிவாய்

இகழ்வேன் நினையேப் புகழ்வேன் நினையே
மகவா யுளனுக் கொருதா யலவோ
தகவா யருளுஞ் சுரவேல் முருகா
சகமா யையெனுந் தெளிவைத் தருவாய்

நினது புகழே தினமு முரைப்பன்
நினது வடிவி னழகே வுரைப்பன்
நினதென் றெனதென் றவொரு நிலையை
நினது கருணை மழையாற் கடக்க
Last edited by sankark on 28 Jun 2024, 17:20, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 28 Jun 2024, 12:38 குருவே திருவே சரணஞ் சரணம்
அருளு மடிகள் சரணஞ் சரணம்
இருள்நீக் கியெமை யுயரப் புரிவாய்
தருவாய் நலமே மயிலே றுபவா
அருமை !
தினந்தோறும் படிக்கத்தக்கது !

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 28 Jun 2024, 16:31
sankark wrote: 28 Jun 2024, 12:38 குருவே திருவே சரணஞ் சரணம்
அருளு மடிகள் சரணஞ் சரணம்
இருள்நீக் கியெமை யுயரப் புரிவாய்
தருவாய் நலமே மயிலே றுபவா
அருமை !
தினந்தோறும் படிக்கத்தக்கது !
நன்றி பல!

மேலும் ஒன்று அறுபடையைத் தொடுத்து

திருவே ரகத்திற் றணிகை தனிலே
ஒருசெந் திற்பதி யழுவக் கரையில்
பரங்குன் றமதிற் பழனி தனிலே
ஒருசோ லையிலே யிறையா னவனே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

திருவே ரகமும் தணிகை மலையும்
ஒருசெந் திற்பதி யழுவக் கரையும்
பரங்குன் றமதும் பழனி மலையும்
நறுஞ்சோ லையுமே முருகா நினதே

one variation

Pratyaksham Bala
Posts: 4176
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

குறிப்பு :

இலக்கணப்படி கவிதை அமைந்துள்ளதா என அறிய சந்தி சேர்ப்பது அவசியமாகிறது.

ஆனால் மக்களுக்கு அளிக்கும்போது கவிதையை சந்தி பிரித்து அமைப்பதே சிறந்தது. அப்போதுதான் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், ரசிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 28 Jun 2024, 20:22 குறிப்பு :

இலக்கணப்படி கவிதை அமைந்துள்ளதா என அறிய சந்தி சேர்ப்பது அவசியமாகிறது.

ஆனால் மக்களுக்கு அளிக்கும்போது கவிதையை சந்தி பிரித்து அமைப்பதே சிறந்தது. அப்போதுதான் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், ரசிப்பதற்கும் எளிதாக இருக்கும்.
yeah makes sense;

actually this is quite a good use case for LLMs - feed it and train it with a very good set of sandhi serththa seyyuls + padham piriththavai and then one can easily feed it any seyyul and have it spit out (a) alignment to pA/pAvina vagai including highlighting thalai thatradhu (b) padham piriththa version!

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

came across this while surfing https://www.maalaimalar.com/devotional/ ... tar-528966; as a verse (நேரிசை ஆசிரியப்பா) till ambaal brought the six faced god forth!

கரிமுக வரதனின் திருவடி பணிந்திட
அருளினன் திறமிது துணிந்தன னெழுதவே
ஒருமுனி கசிபனுக் கசுரம களுடன்
வருமக னெனசுர பதுமனும் பிறந்தனன்
மிகக்கடுந் தவமிருந் தடைவரங் கெடுத்ததே
ககணமும் நடுங்கிட அறங்கெட தவறிட
சிவனுடை வரம்பெறு அசுரனின் திறங்கெட
தவம்புரி முனிவரும் மனிதரும் நலம்பெற
சுரர்களும் அடைக்கல மெனச்சொல வெழுந்ததே
அரனவன் விழிதனில் அறுபொறி யொளிமிக
பரவிடு மருதவ னணைத்தனன் பொலிவுறுஞ்
சரவணச் சுனையதில் எழிலுறப் பிறந்தனர்
திருமிகு பொழுதினில் அழகறு குழவியர்
பருத்தவிவ் வுலகினுக் கினியதோர் பொழுததே
ஆர்த்தனர் தேவரும் மனிதரும் முனிவரும்
வேர்த்தனர் அறநிலை தவறிய அனைவரும்
சீர்மிகு வறுவரைச் சரவண மகளிரும்
போர்த்தியே விளமுலை கொடுத்தனர் வளர்த்தனர்
உமையவ ளொருதின மணைத்தன ளறுவரை
இமையவர் படைத்தலை யறுமுக னுதித்தனன்
முருகனாய்க் கடம்பனாய் கதிர்வடி வேலனாய்
ஒருபுறங் குறமகள் கரிமகள் மறுபுறம்
மருவிடு மறுபடை யரசனைத்
நறுந்தமி ழிசையொடு துதித்திடு மனமே

கரிமுக வரதனின் திருவடி பணிந்திட
அருளினன் திறமிது துணிந்தனன் எழுதவே
ஒரு முனி கசிபனுக்கு அசுர மகளுடன்
வரு மகன் என சுரபதுமனும் பிறந்தனன்
மிகக் கடுந்தவமிருந் தடை வரங் கெடுத்ததே
ககணமும் நடுங்கிட அறங்கெட தவறிட
சிவனுடை வரம்பெறு அசுரனின் திறங்கெட
தவம்புரி முனிவரும் மனிதரும் நலம்பெற
சுரர்களும் அடைக்கலம் எனச்சொல எழுந்ததே
அரனவன் விழிதனில் அறுபொறி ஒளிமிக
பரவிடு மருதவன் அணைத்தனன் பொலிவுறுஞ்
சரவணச் சுனையதில் எழிலுறப் பிறந்தனர்
திருமிகு பொழுதினில் அழகு அறுகுழவியர்
பருத்த இவ்வுலகினுக்கு இனியதோர் பொழுததே
ஆர்த்தனர் தேவரும் மனிதரும் முனிவரும்
வேர்த்தனர் அறநிலை தவறிய அனைவரும்
சீர்மிகு அறுவரைச் சரவண மகளிரும்
போர்த்தியே இளமுலை கொடுத்தனர் வளர்த்தனர்
உமையவள் ஒருதினம் அணைத்தனள் அறுவரை
இமையவர் படைத்தலை அறுமுகன் உதித்தனன்
முருகனாய்க் கடம்பனாய் கதிர்வடி வேலனாய்
ஒருபுறங் குறமகள் கரிமகள் மறுபுறம்
மருவிடு மறுபடை அரசனைத்
நறுந் தமிழிசையொடு துதித்திடு மனமே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அடுத்த மற்றும் கடைப் பகுதி

அறுபொறி வமயமே நடத்தின ளயர்ந்ததாய்
சிறுவினை உமையவள் அதுவொரு நடிப்பலோ
அவளணி கழல்மணி பறந்ததே அதிலொரு
நவமணி சிவனவ னருள்விழி படர்ந்திட
பிறந்தனர் நவமென அறுமுகத் துணையென
உடனொரு இலக்கமும் படையென வுருபெற
திருமகள் கலைமகள் பணிந்திடும் மலைமகள்
திருவுடை யெழிலனுக் கருளினள் படைக்கலம்
தனிலுறை திறமெலாங் கலந்ததை படைத்தன
ளெனிலதன் புகழெலா மிவன்சொலப் புகுவதோ
சிவனுடை பதினொரு உருத்திரத் திறமதை
யவன்றனக் கருளினார் படைக்கல மெனவரோ
படையுடன் பறந்தனன் ஒருபெருந் தேரினில்
கடைமகன் முருகனும் வடதிசைக் கெதிரிலே
கயமுக வசுரனும் திருமகன் படைதனை
மயக்கியே யழுத்திட கடிசுரப் படைகொடு
சமரதில் கிரௌஞ்சமா யிருந்தவ னவன்றனை
நமனுல கனுப்பினன் கரிமுக னிளையவன்
உடன்பிறந் தவனழிந் தனனெனத் தெரிந்திட
துடித்தனன் பதுமனு மலறின னழுதனன்
வரும்படை முருகனை அழிப்பதா யெரிப்பதாய்த்
திறம்பட எனப்பல புலம்பினன் புழுங்கினன்
முருகனும் அவன்படை யுடனடை யழகிய
ஒருகடற் கரைதனில் பதியது செந்திலே
பிரமனின் மனம்பிறந் தவரவர் நால்வரும்
வரமருள் சிவகுரு தனைவர வேற்றனர்
பெருஞ்சமர் நடந்தது மலைகளும் நடுங்கிட
ஒருபுறம் மலைமகள் மனங்குளி ரழகனே
மறுபுறம் சிவன்வரம் பெறுசுர பதுமனும்
பொருதியே தனதுயிர் தனைவிடு நாளது
திங்களுங் கருத்தபின் னறுபிறை கடந்ததே
திங்களும் ஐப்பசி கடிவடி வேலிடம்
சுரர்களும் மகிழ்ந்தனர் மனிதரும் முனிவரும்
பெருஞ்சுமை யழிந்தது எனப்பல புகழ்ந்தனர்
கருமுகில் நிறத்தவன் திருமக ளிறையவன்
மருகனின் திறமதைப் பொழுதெலா
முருகியேப் பாடுவோந் திருவடித் துணையே


அறுபொறி வமயமே நடத்தின ளயர்ந்ததாய்
சிறுவினை உமையவள் அதுவொரு நடிப்பலோ
அவளணி கழல்மணி பறந்ததே அதிலொரு
நவமணி சிவனவன் அருள்விழி படர்ந்திட
பிறந்தனர் நவமென அறுமுகத் துணையென
உடனொரு இலக்கமும் படையென உருபெற
திருமகள் கலைமகள் பணிந்திடும் மலைமகள்
திருவுடை எழிலனுக்கு அருளினள் படைக்கலம்
தனிலுறை திறமெலாம் கலந்ததை படைத்தனள்
எனிலதன் புகழெலா மிவன்சொலப் புகுவதோ
சிவனுடை பதினொரு உருத்திரத் திறமதை
அவன்றனக்கு அருளினார் படைக்கலம் என அரோ
படையுடன் பறந்தனன் ஒருபெருந் தேரினில்
கடைமகன் முருகனும் வடதிசைக் கெதிரிலே
கயமுக வசுரனும் திருமகன் படைதனை
மயக்கியே யழுத்திட கடிசுரப் படைகொடு
சமரதில் கிரௌஞ்சமாய் இருந்தவன் அவன்றனை
நமனுலகு அனுப்பினன் கரிமுகன் இளையவன்
உடன்பிறந்தவன் அழிந்தனன் எனத் தெரிந்திட
துடித்தனன் பதுமனும் அலறினன் அழுதனன்
வரும்படை முருகனை அழிப்பதாய் எரிப்பதாய்த்
திறம்பட எனப்பல புலம்பினன் புழுங்கினன்
முருகனும் அவன்படையுடன் அடை அழகிய
ஒருகடற்கரைதனில் பதியது செந்திலே
பிரமனின் மனம்பிறந்தவர் அவர் நால்வரும்
வரமருள் சிவகுரு தனை வரவேற்றனர்
பெருஞ்சமர் நடந்தது மலைகளும் நடுங்கிட
ஒருபுறம் மலைமகள் மனங்குளிர் அழகனே
மறுபுறம் சிவன்வரம் பெறு சுரபதுமனும்
பொருதியே தனதுயிர் தனைவிடு நாளது
திங்களுங் கருத்தபின் னறுபிறை கடந்ததே
திங்களும் ஐப்பசி கடிவடிவேலிடம்
சுரர்களும் மகிழ்ந்தனர் மனிதரும் முனிவரும்
பெருஞ்சுமை அழிந்தது எனப்பல புகழ்ந்தனர்
கருமுகில் நிறத்தவன் திருமகள் இ றையவன்
மருகனின் திறமதைப் பொழுதெலா
முருகியேப் பாடுவோந் திருவடித் துணையே

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

போற்றிநின் பூங்கழல் பொன்னம் பலத்தவா
போற்றிநின் வார்கழல் வெள்விடை யூர்பவா
போற்றிநின் பெய்கழல் வெள்வரை மன்னவா
போற்றிநின் சேவடி செஞ்சடைச் செல்வனே
போற்றிநின் தாளிணைத் தாயுமா யானவா
போற்றிநின் தாள்மலர் தென்டிசைத் தெய்வமே
போற்றிநின் தாள்களே தூக்கியே யாடுவோய்
போற்றியே போற்றிநின் பேர்தனைப் பாடுவாம்

#ஆனித்திருமஞ்சனம்

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

போற்றிநின் தாள்களேத் தில்லையின் வள்ளலே
போற்றிநின் தாள்களே மான்மழு வேந்தியே
போற்றிநின் தாள்களே எல்லையில் தேசனே*
பற்றுவாம் நின்னடி பற்றுகள் நீங்கவே

*புணர்ச்சி விதிப்படி எல்லையிற் றேசனே?

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

போற்றிநின் தாளிணைத் தாண்டவ மாடுவோய்
போற்றிநின் தாளிணை செம்மொழித் தோற்றினாய்
போற்றிநின் தாள்மலர் ஆலமே யுண்டவா
போற்றியே பாடுவாம் நின்னடி யார்களை
தோற்றமா யானவை யாவுமே நீயரோ

sankark
Posts: 2364
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

போற்றிநின் உய்யடி ஒப்பிலாத் தூயவா
போற்றிநின் பொன்னடி பொங்குநீர்ச் சென்னியா
போற்றிநின் பூவடிப் புவனமேப் பூத்தவா
போற்றியே போற்றிநின் மீபுகழ்க் கூறுவாம்

Post Reply