KavithaigaL by Rasikas
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
602
கூத்தாடும் கைலாசா
(கலித் தாழிசை)
தில்லைச் சரம்ஒத்த செஞ்சடை மீது
ஆகாச கங்கையொடு பிறையும் தாங்கி
இடியோசை டமரொடு மானும் தூக்கி
அண்டங்கள் அதிர அடியார்கள் குளிர
குஞ்சிதம் தூக்கிக் கூத்தாடும் கைலாசா ! -– போற்றி போற்றி !
ப்ரத்யக்ஷம் பாலா,
04.02.2011.
602
கூத்தாடும் கைலாசா
(கலித் தாழிசை)
தில்லைச் சரம்ஒத்த செஞ்சடை மீது
ஆகாச கங்கையொடு பிறையும் தாங்கி
இடியோசை டமரொடு மானும் தூக்கி
அண்டங்கள் அதிர அடியார்கள் குளிர
குஞ்சிதம் தூக்கிக் கூத்தாடும் கைலாசா ! -– போற்றி போற்றி !
ப்ரத்யக்ஷம் பாலா,
04.02.2011.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
307
சிவனருள்
(கலி விருத்தம்)
திருநீறு அணிந்தபடி தினந்தோறும் பாடு;
திருவோடு அருளெல்லாம் தருமாறு வேண்டு.
திருமூலர் உருவிலவன் வந்திடுவான் பாரு;
திருநாடு அளித்துனக்கு வழங்கிடுவான் பேறு !
ப்ரத்யக்ஷம் பாலா,
14.12.2013.
307
சிவனருள்
(கலி விருத்தம்)
திருநீறு அணிந்தபடி தினந்தோறும் பாடு;
திருவோடு அருளெல்லாம் தருமாறு வேண்டு.
திருமூலர் உருவிலவன் வந்திடுவான் பாரு;
திருநாடு அளித்துனக்கு வழங்கிடுவான் பேறு !
ப்ரத்யக்ஷம் பாலா,
14.12.2013.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
500
துதி
(குறள் வெண்செந்துறை)
அஞ்சாத நெஞ்சம் வேண்டும்; அறிவுடை எண்ணம் வேண்டும்;
நெஞ்சாரக் கனவு கண்டு நினைத்ததை நடத்த வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003.
500
துதி
(குறள் வெண்செந்துறை)
அஞ்சாத நெஞ்சம் வேண்டும்; அறிவுடை எண்ணம் வேண்டும்;
நெஞ்சாரக் கனவு கண்டு நினைத்ததை நடத்த வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
172
அழகு
(வஞ்சி விருத்தம்)
அலையிடை ஆதவன் எழவும்
இலையிடைச் சிந்திய ஒளியில்
கலையெழில் கோலம் கண்டேன்
சிலையெனச் சிலிர்த்து நின்றேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.04.2012.
172
அழகு
(வஞ்சி விருத்தம்)
அலையிடை ஆதவன் எழவும்
இலையிடைச் சிந்திய ஒளியில்
கலையெழில் கோலம் கண்டேன்
சிலையெனச் சிலிர்த்து நின்றேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.04.2012.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
034
திட்டம்
(கலித் தாழிசை)
உணர்ச்சியின் வேகம் மட்டும் உயர்வினைத் தந்திடாது.
முறையான முயற்சி வேண்டும்; சரியான பயிற்சி வேண்டும்.
தோல்வியை மூட்டை கட்டித் தொலைவிலே போட வேண்டும்;
மனதிலே கோட்டை கட்டி முனைப்பாக முயல வேண்டும்.
துல்லிய எண்ணம் வேண்டும்; துடிப்பான செயலும் வேண்டும்
துவளாமல் இருக்க வேண்டும்; அளவாகப் பேச வேண்டும்.
மற்றவர் தோளில் நின்றால் பொய்யாக உயர்ந்திருப்போம்;
மற்றவர் போன பின்னர் மறுபடி தாழக் கூடும்.
நாமுயர வேண்டுமெனில் நாமேதான் முயல வேண்டும்.
நமக்கிவை தெரிய வேண்டும்; ஒருபோதும் மறக்காது இருக்க வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
23.06.2004 .
034
திட்டம்
(கலித் தாழிசை)
உணர்ச்சியின் வேகம் மட்டும் உயர்வினைத் தந்திடாது.
முறையான முயற்சி வேண்டும்; சரியான பயிற்சி வேண்டும்.
தோல்வியை மூட்டை கட்டித் தொலைவிலே போட வேண்டும்;
மனதிலே கோட்டை கட்டி முனைப்பாக முயல வேண்டும்.
துல்லிய எண்ணம் வேண்டும்; துடிப்பான செயலும் வேண்டும்
துவளாமல் இருக்க வேண்டும்; அளவாகப் பேச வேண்டும்.
மற்றவர் தோளில் நின்றால் பொய்யாக உயர்ந்திருப்போம்;
மற்றவர் போன பின்னர் மறுபடி தாழக் கூடும்.
நாமுயர வேண்டுமெனில் நாமேதான் முயல வேண்டும்.
நமக்கிவை தெரிய வேண்டும்; ஒருபோதும் மறக்காது இருக்க வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
23.06.2004 .
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
517
அன்னையே !
(கலி விருத்தம்)
ஆயி கருமாரி ! ஆனந்த ஓங்காரி !
மாயி மகாமாயி ! மாங்காடு மாகாளி !
கோயில் கடுவெளியே குடிகொண்ட நாயகியே !
சேயென் குரல்கேட்டு செயமெனக்கு அருள்தாயே !
ப்ரத்யக்ஷம் பாலா,
24.11.2016.
517
அன்னையே !
(கலி விருத்தம்)
ஆயி கருமாரி ! ஆனந்த ஓங்காரி !
மாயி மகாமாயி ! மாங்காடு மாகாளி !
கோயில் கடுவெளியே குடிகொண்ட நாயகியே !
சேயென் குரல்கேட்டு செயமெனக்கு அருள்தாயே !
ப்ரத்யக்ஷம் பாலா,
24.11.2016.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
085
முன்னேற்றம்
(கலித் தாழிசை)
ஏக்கம் மறைத்திடு,
தாக்கம் தவிர்த்திடு,
ஊக்கம் விளைத்திடு,
ஆக்கப் பொறுத்திடு.
நோக்கம் நிறைவேறும்! உண்மை!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.
085
முன்னேற்றம்
(கலித் தாழிசை)
ஏக்கம் மறைத்திடு,
தாக்கம் தவிர்த்திடு,
ஊக்கம் விளைத்திடு,
ஆக்கப் பொறுத்திடு.
நோக்கம் நிறைவேறும்! உண்மை!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
224
பணி மனமே
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓம்கார ரூபன் ! ஓரொளி வதனன் !
காங்கேயத் தலைவன் ! கடம்பனி னத்தன் !
ஆனந்தக் கூத்தன் ! அகிலங்க ளரசன் !
கானப்ரிய லோலன் ! தாள்பணி மனமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.07.2012.
224
பணி மனமே
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓம்கார ரூபன் ! ஓரொளி வதனன் !
காங்கேயத் தலைவன் ! கடம்பனி னத்தன் !
ஆனந்தக் கூத்தன் ! அகிலங்க ளரசன் !
கானப்ரிய லோலன் ! தாள்பணி மனமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.07.2012.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
091
குறி
(வஞ்சித் துறை)
மனம்உறுதி கொள்வோம்.
சினம்மறுத்துச் சிறப்போம்.
தனம்தேடிக் குவிப்போம்.
தினம்மகிழ்ந்து திளைப்போம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
01.07.2003.
091
குறி
(வஞ்சித் துறை)
மனம்உறுதி கொள்வோம்.
சினம்மறுத்துச் சிறப்போம்.
தனம்தேடிக் குவிப்போம்.
தினம்மகிழ்ந்து திளைப்போம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
01.07.2003.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
403
போற்றி ! போற்றி !!
(கலித் தாழிசை)
குழலூதி குறவள்ளி கரம்கொண்ட கந்தா !
மழைதூவும் குற்றால மலைகொண்ட குமரா !
அழைக்காத பேர்களுக்கும் அருள்பொழியும் அன்பா !
பழம்பெரும் திருப்பதி பழநிமலை வாசா ! -- போற்றி ! போற்றி !!
ப்ரத்யக்ஷம் பாலா,
09.03.2015.
403
போற்றி ! போற்றி !!
(கலித் தாழிசை)
குழலூதி குறவள்ளி கரம்கொண்ட கந்தா !
மழைதூவும் குற்றால மலைகொண்ட குமரா !
அழைக்காத பேர்களுக்கும் அருள்பொழியும் அன்பா !
பழம்பெரும் திருப்பதி பழநிமலை வாசா ! -- போற்றி ! போற்றி !!
ப்ரத்யக்ஷம் பாலா,
09.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
209
சக்தி நடனம்
(கலி விருத்தம்)
கொட்டும் மழையின் புத்தொரு தாளத்தில்
வெட்டும் கீற்றின் பளிச்சிடும் வெள்ளத்தில்
கொட்டும் மேளக் கலைஞரின் தீரத்தில்
வெட்டித் துள்ளும் வனிதைநம் திருமகளே !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2012.
209
சக்தி நடனம்
(கலி விருத்தம்)
கொட்டும் மழையின் புத்தொரு தாளத்தில்
வெட்டும் கீற்றின் பளிச்சிடும் வெள்ளத்தில்
கொட்டும் மேளக் கலைஞரின் தீரத்தில்
வெட்டித் துள்ளும் வனிதைநம் திருமகளே !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2012.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
550
அருளாளன்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தில்லைச் சிதம்பர நாதா,
திக்கெல்லாம் போற்றிடும் தேவா !
முல்லை மலரணி மேதா,
மூவுலகும் காத்திடும் வீரா !
வில்லை அணி மலர்த் தோளா,
வீரக்கண் ஏற்றிடும் தேவா !
எல்லை இலா அருளாளா,
எமதுள்ளம் சிலிர்க்குது ஈசா !
ப்ரத்யக்ஷம் பாலா,
26.10.2019.
550
அருளாளன்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தில்லைச் சிதம்பர நாதா,
திக்கெல்லாம் போற்றிடும் தேவா !
முல்லை மலரணி மேதா,
மூவுலகும் காத்திடும் வீரா !
வில்லை அணி மலர்த் தோளா,
வீரக்கண் ஏற்றிடும் தேவா !
எல்லை இலா அருளாளா,
எமதுள்ளம் சிலிர்க்குது ஈசா !
ப்ரத்யக்ஷம் பாலா,
26.10.2019.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
560
பக்திக் கிரக்கம்
(கலி விருத்தம்)
சின்னக் கந்தனுக்குச் சிங்காரமாய் மையிட்டு
இன்னும் அழகூட்ட இன்னம்ஒரு பொட்டுவைத்து
கன்னம் கண்படாதிருக்கக் கரும்குறியும் இட்டேன் !
கண்மூடித் திறக்கும்முன் கள்வனைக் காணவில்லை !
ப்ரத்யக்ஷம் பாலா,
18.11.2019.
560
பக்திக் கிரக்கம்
(கலி விருத்தம்)
சின்னக் கந்தனுக்குச் சிங்காரமாய் மையிட்டு
இன்னும் அழகூட்ட இன்னம்ஒரு பொட்டுவைத்து
கன்னம் கண்படாதிருக்கக் கரும்குறியும் இட்டேன் !
கண்மூடித் திறக்கும்முன் கள்வனைக் காணவில்லை !
ப்ரத்யக்ஷம் பாலா,
18.11.2019.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
337
மாற்றம்
(கலி விருத்தம்)
மந்திரம் சொல்லும் முறையொடு கூட
எந்திரம் இயக்கும் எழுச்சியும் வேண்டும்.
முந்தைய முறைகள் முடங்கிடும் போது
விந்தைகள் செய்து விஞ்சிட வேண்டும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2014.
337
மாற்றம்
(கலி விருத்தம்)
மந்திரம் சொல்லும் முறையொடு கூட
எந்திரம் இயக்கும் எழுச்சியும் வேண்டும்.
முந்தைய முறைகள் முடங்கிடும் போது
விந்தைகள் செய்து விஞ்சிட வேண்டும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2014.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
032
திரிலோக மாமணியே !
(தரவு கொச்சகக் கலிப்பா)
திருநீறு குழைத்தெழுதி, திருவீதி வலம்வந்து,
திருநாளில் மனமுருக திருப்புகழை நின்றோதி,
திருவேலன் திறனறிந்த திருவாளர் அடிதொழுவேன்;
திருவேர கத்தொளிரும் திரிலோக மாமணியே !
ப்ரத்யக்ஷம் பாலா,
26.09.2006.
032
திரிலோக மாமணியே !
(தரவு கொச்சகக் கலிப்பா)
திருநீறு குழைத்தெழுதி, திருவீதி வலம்வந்து,
திருநாளில் மனமுருக திருப்புகழை நின்றோதி,
திருவேலன் திறனறிந்த திருவாளர் அடிதொழுவேன்;
திருவேர கத்தொளிரும் திரிலோக மாமணியே !
ப்ரத்யக்ஷம் பாலா,
26.09.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
002
திகைப்பு
(கலித் தாழிசை)
அள்ளிமுடி கூட்டி, அல்லிமலர் சூடி,
கள்ளமை இட்டு, வில்லினுரு தீட்டி,
வெள்ளிப்ப னிநெற்றி, வைத்துச்சீர் பொட்டு,
கிள்ளுமிடை காட்டி, கீரைநடை போட்டு,
கள்ளவிழி கொண்டு, கன்னவொளி கூட்டி,
துள்ளித் துயில்வெட்டத், திகைத்தேன், சிரித்தேன்! பகற்கனவா?!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2003.
002
திகைப்பு
(கலித் தாழிசை)
அள்ளிமுடி கூட்டி, அல்லிமலர் சூடி,
கள்ளமை இட்டு, வில்லினுரு தீட்டி,
வெள்ளிப்ப னிநெற்றி, வைத்துச்சீர் பொட்டு,
கிள்ளுமிடை காட்டி, கீரைநடை போட்டு,
கள்ளவிழி கொண்டு, கன்னவொளி கூட்டி,
துள்ளித் துயில்வெட்டத், திகைத்தேன், சிரித்தேன்! பகற்கனவா?!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2003.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
435
வருவான் !
(கலி விருத்தம்)
கருத்தில் மறைத்துநீ கலங்கியே கிடப்பதேன் ?
கருத்த திரைகிழி ! கனவுலகு தெரியும் !
கருணா ! காவென கதறிடு ! விளித்திரு !
வருவான்; அருளுவான் ! வரும்வரை பொறுத்திரு !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2015.
435
வருவான் !
(கலி விருத்தம்)
கருத்தில் மறைத்துநீ கலங்கியே கிடப்பதேன் ?
கருத்த திரைகிழி ! கனவுலகு தெரியும் !
கருணா ! காவென கதறிடு ! விளித்திரு !
வருவான்; அருளுவான் ! வரும்வரை பொறுத்திரு !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
108
பக்தன் !
(வஞ்சி விருத்தம்)
சுழல்அலைகள் சூழ்கடலின் கரையோரம்
எழில்ஒழுகும் ஆல்படரும் தரைமீது
தழல்ஒளிரும் வேல்ஏந்திக் குதித்தாடும்
கழல்ஒலிக்கும் கால்பிடித்துக் கதறேனோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
26.12.2006.
108
பக்தன் !
(வஞ்சி விருத்தம்)
சுழல்அலைகள் சூழ்கடலின் கரையோரம்
எழில்ஒழுகும் ஆல்படரும் தரைமீது
தழல்ஒளிரும் வேல்ஏந்திக் குதித்தாடும்
கழல்ஒலிக்கும் கால்பிடித்துக் கதறேனோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
26.12.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
036A
பிறவா நிலை
(குறள் வெண்செந்துறை)
அருகினில் வந்தெனை ஆட்கொள வேண்டும்;
அனைத்தெனது ஆசையும் அவித்திட வேண்டும்.
இருவரும் ஒன்றெனச் சொலும்நிலை வேண்டும்;
இம்மையும் மறுமையும் மறைந்திட வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
29.06.2004.
036A
பிறவா நிலை
(குறள் வெண்செந்துறை)
அருகினில் வந்தெனை ஆட்கொள வேண்டும்;
அனைத்தெனது ஆசையும் அவித்திட வேண்டும்.
இருவரும் ஒன்றெனச் சொலும்நிலை வேண்டும்;
இம்மையும் மறுமையும் மறைந்திட வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
29.06.2004.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
584
வாரிசு
(வஞ்சித் துறை)
நெற்றியிலே திலகமிட்டு
மத்தாப்பூ கதைசொல்லி
கண்மூடித் திறக்கையிலே
தெருக்கோடி தாண்டிவிட்டான் !
ப்ரத்யக்ஷம் பாலா,
27.01.2005.
584
வாரிசு
(வஞ்சித் துறை)
நெற்றியிலே திலகமிட்டு
மத்தாப்பூ கதைசொல்லி
கண்மூடித் திறக்கையிலே
தெருக்கோடி தாண்டிவிட்டான் !
ப்ரத்யக்ஷம் பாலா,
27.01.2005.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
230
சேர்ந்திசை
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தொந்தி கணபதி துணையிருப்பான் - அவனை
வந்தனை செய்து வாழ்த்துங்கடீ!
செந்தில் வேலவன் துணையிருப்பான் - அவனை
சித்தியி லிருத்தி வாழ்த்துங்கடீ!
அன்னை பார்வதி துணையிருப்பாள் - அவளை
அனுதினம் போற்றிப் பாடுங்கடீ!
பொன்னம் பலத்தவன் துணையிருப்பான் - அவனைப்
போற்றியும் புகழ்ந்தும் பாடுங்கடீ!
ப்ரத்யக்ஷம் பாலா,
25.07.2012.
230
சேர்ந்திசை
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தொந்தி கணபதி துணையிருப்பான் - அவனை
வந்தனை செய்து வாழ்த்துங்கடீ!
செந்தில் வேலவன் துணையிருப்பான் - அவனை
சித்தியி லிருத்தி வாழ்த்துங்கடீ!
அன்னை பார்வதி துணையிருப்பாள் - அவளை
அனுதினம் போற்றிப் பாடுங்கடீ!
பொன்னம் பலத்தவன் துணையிருப்பான் - அவனைப்
போற்றியும் புகழ்ந்தும் பாடுங்கடீ!
ப்ரத்யக்ஷம் பாலா,
25.07.2012.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
385
சுடு தேங்காய்
(குறள் வெண்செந்துறை)
சுட்டெரிக்கும் வெய்யிலில் சுள்ளி அலைந்தெடுத்து
இட்டெரித்து சுட்டகாயின் இனிமைக்கு ஈடுண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.
385
சுடு தேங்காய்
(குறள் வெண்செந்துறை)
சுட்டெரிக்கும் வெய்யிலில் சுள்ளி அலைந்தெடுத்து
இட்டெரித்து சுட்டகாயின் இனிமைக்கு ஈடுண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
281
வேலனருள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
காலை, மதியம், மாலை வேளையென
வேலனைப் போற்றும் வேள்வியை நடத்திடு !
கலைத்திறன் கூடும்; கவலைகள் மறைந்திடும் !
அலையெனத் தொடரும் அல்லல்கள் அகன்றிடும் !
இலையெனா தளிக்க இன்னருள் கிடைத்திடும் !
நிலைபெறும் நிம்மதி ! கிட்டிடும் வெற்றியே !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.11.2013.
281
வேலனருள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
காலை, மதியம், மாலை வேளையென
வேலனைப் போற்றும் வேள்வியை நடத்திடு !
கலைத்திறன் கூடும்; கவலைகள் மறைந்திடும் !
அலையெனத் தொடரும் அல்லல்கள் அகன்றிடும் !
இலையெனா தளிக்க இன்னருள் கிடைத்திடும் !
நிலைபெறும் நிம்மதி ! கிட்டிடும் வெற்றியே !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.11.2013.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
001
திருமண நினைவுகள்
(கலித் தாழிசை)
கட்டுக் குடுமியும், கல்யாண கோஷமும்,
பட்டு வேஷ்டியும், பல்லாண்டு முழக்கமும்,
கொட்டும் மேளமும், கும்மாளக் கூட்டமும்,
சிட்டும் சிறாரும், சிங்காரப் பெண்டிரும்,
பொட்டும் பூவும், பொங்கும் சிரிப்பும்,
நட்டும் நகையும், நலங்குச் சிவப்பும்,
லட்டும் முறுக்கும், 'லாலி' பாடலும் --
ஒட்டியே இருக்கும் மனதில் ! விட்டு அகலாவே !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.02.2006.
001
திருமண நினைவுகள்
(கலித் தாழிசை)
கட்டுக் குடுமியும், கல்யாண கோஷமும்,
பட்டு வேஷ்டியும், பல்லாண்டு முழக்கமும்,
கொட்டும் மேளமும், கும்மாளக் கூட்டமும்,
சிட்டும் சிறாரும், சிங்காரப் பெண்டிரும்,
பொட்டும் பூவும், பொங்கும் சிரிப்பும்,
நட்டும் நகையும், நலங்குச் சிவப்பும்,
லட்டும் முறுக்கும், 'லாலி' பாடலும் --
ஒட்டியே இருக்கும் மனதில் ! விட்டு அகலாவே !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.02.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
105
அருள்
(வஞ்சித் துறை)
எட்டுபட்டி சனம்கூட்டி
தொட்டிகட்டி கஞ்சிவார்த்தால்
கோட்டைத்தாய் கண்திறப்பாள் !
பட்டமரமும் பூப்பூக்கும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
03.06.2006.
அருள்
(வஞ்சித் துறை)
எட்டுபட்டி சனம்கூட்டி
தொட்டிகட்டி கஞ்சிவார்த்தால்
கோட்டைத்தாய் கண்திறப்பாள் !
பட்டமரமும் பூப்பூக்கும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
03.06.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
053R
சேவிப்போம் வாருங்கள் !
(கலி விருத்தம்)
பல்லாண்டு பாடுவோம் ! பரமனைப் போற்றுவோம் !
நல்லோர்கள் கூடியே நாதனை நாடுவோம் !
வல்லானின் பாசுரம் வானதிர ஓதுவோம் !
தில்லைநகர் தேவனின் திருவருள் சூடுவோம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.05.2015.
சேவிப்போம் வாருங்கள் !
(கலி விருத்தம்)
பல்லாண்டு பாடுவோம் ! பரமனைப் போற்றுவோம் !
நல்லோர்கள் கூடியே நாதனை நாடுவோம் !
வல்லானின் பாசுரம் வானதிர ஓதுவோம் !
தில்லைநகர் தேவனின் திருவருள் சூடுவோம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.05.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
076
தோடுடைய சிவனார் !
(கலித் தாழிசை)
காடுசெல்ல வேண்டாம்.
சூடுகொள்ள வேண்டாம்.
சாடுபவர் சிதைய,
நாடுபவர் நிலைக்க,
தோடுடைய சிவனார்
நீடுநமக் கருள்வார் !
ஈடுஏது நமக்கு? பாடுஅவர் புகழை !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
தோடுடைய சிவனார் !
(கலித் தாழிசை)
காடுசெல்ல வேண்டாம்.
சூடுகொள்ள வேண்டாம்.
சாடுபவர் சிதைய,
நாடுபவர் நிலைக்க,
தோடுடைய சிவனார்
நீடுநமக் கருள்வார் !
ஈடுஏது நமக்கு? பாடுஅவர் புகழை !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
009
திறமையைக் கூட்டு !
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பத்திரங் களென்ன செய்யும்
போட்டிகள் வந்திடும் போது ?
எத்திப் பறித்திட்ட விருதால்
ஏற்றம் ஏதும் உண்டோ ?
தொத்திச் செல்வது எளிதே ;
தருமம் உண்டோ அதிலே ?
கத்தியின் கூர்தனை ஒட்டி
வகுக்கும் திறனும் இருக்கும்.
சுத்தியின் எடைதனை ஒட்டி
சிதைக்கும் பலமும் இருக்கும்.
புத்தியை வலிதாய் மாற்று !
புரட்சி முயற்சியை நாட்டு !
தித்திக்கும் சொற்களை ஈட்டு !
திறமையை நாளும் கூட்டு !
எத்திசையும் புகழ் நாட்ட
ஒத்திகை நித்தமும் தேவை !
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.
திறமையைக் கூட்டு !
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பத்திரங் களென்ன செய்யும்
போட்டிகள் வந்திடும் போது ?
எத்திப் பறித்திட்ட விருதால்
ஏற்றம் ஏதும் உண்டோ ?
தொத்திச் செல்வது எளிதே ;
தருமம் உண்டோ அதிலே ?
கத்தியின் கூர்தனை ஒட்டி
வகுக்கும் திறனும் இருக்கும்.
சுத்தியின் எடைதனை ஒட்டி
சிதைக்கும் பலமும் இருக்கும்.
புத்தியை வலிதாய் மாற்று !
புரட்சி முயற்சியை நாட்டு !
தித்திக்கும் சொற்களை ஈட்டு !
திறமையை நாளும் கூட்டு !
எத்திசையும் புகழ் நாட்ட
ஒத்திகை நித்தமும் தேவை !
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
170
முருகா !
(வெண்டுறை)
அருவே ! அத்தனுக்கும் குருவே !
திருவே ! திகட்டாத உருவே !
கருவே ! கருணாகரத் தருவே !
வருவாய் ! வரம்தருவாய் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2012.
முருகா !
(வெண்டுறை)
அருவே ! அத்தனுக்கும் குருவே !
திருவே ! திகட்டாத உருவே !
கருவே ! கருணாகரத் தருவே !
வருவாய் ! வரம்தருவாய் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2012.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
435A
பொன்னுலகு !
(குறள் வெண்செந்துறை)
கருத்தில் திரைசூடி குமைந்து கிடக்காதே !
கருத்த திரை கிழி ! பொன்னுலகு தெரியும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2015.
பொன்னுலகு !
(குறள் வெண்செந்துறை)
கருத்தில் திரைசூடி குமைந்து கிடக்காதே !
கருத்த திரை கிழி ! பொன்னுலகு தெரியும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
012
தைத் திருநாள்
(கலி விருத்தம்)
குலைவாழை மஞ்சள் இஞ்சி குடியெங்கும் குவித்து,
இலைகொண்டு தோரணங்கள் இல்லமெங்கும் தொடுத்து,
வலைப்பின்னல் கோலங்கள் வழியெங்கும் வரைந்து,
உலைப்பொங்கல் ஊர்மணக்க உளம்பொங்கத் திளைப்போம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
13.01.2007.
தைத் திருநாள்
(கலி விருத்தம்)
குலைவாழை மஞ்சள் இஞ்சி குடியெங்கும் குவித்து,
இலைகொண்டு தோரணங்கள் இல்லமெங்கும் தொடுத்து,
வலைப்பின்னல் கோலங்கள் வழியெங்கும் வரைந்து,
உலைப்பொங்கல் ஊர்மணக்க உளம்பொங்கத் திளைப்போம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
13.01.2007.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
087
எழுச்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பட்டது போதும்; பதறியெழ வேண்டும்.
விட்டவை யாவும் வென்றுவர வேண்டும்.
தொட்டவை யாவும் துள்ளியெழ வேண்டும் !
ஒளிமயம், ஒளிமயம், ஒளிமயம் இனியே !
ப்ரத்யக்ஷம் பாலா,
28.10.2006.
எழுச்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பட்டது போதும்; பதறியெழ வேண்டும்.
விட்டவை யாவும் வென்றுவர வேண்டும்.
தொட்டவை யாவும் துள்ளியெழ வேண்டும் !
ஒளிமயம், ஒளிமயம், ஒளிமயம் இனியே !
ப்ரத்யக்ஷம் பாலா,
28.10.2006.