KavithaigaL by Rasikas
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
803
தேவை
(கலித் தாழிசை)
ஓயாத வேலையும்,
காயாத வயிறும்,
வாயாரச் சிரிப்பும்,
சாயாத வரையில் வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
03.01.2023.
தேவை
(கலித் தாழிசை)
ஓயாத வேலையும்,
காயாத வயிறும்,
வாயாரச் சிரிப்பும்,
சாயாத வரையில் வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
03.01.2023.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
324R
நமச்சிவாய !
(கலி விருத்தம்)
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை தூக்கி
பழுத்த தீயைப் பாங்குடன் ஏந்தும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2014.
நமச்சிவாய !
(கலி விருத்தம்)
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை தூக்கி
பழுத்த தீயைப் பாங்குடன் ஏந்தும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2014.
-
- Posts: 2444
- Joined: 16 Dec 2008, 09:10
Re: KavithaigaL by Rasikas
நன்று!Pratyaksham Bala wrote: ↑25 Jul 2023, 15:17 324R
நமச்சிவாய !
(கலி விருத்தம்)
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை தூக்கி
பழுத்த தீயைப் பாங்குடன் ஏந்தும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2014.
விரலிடைத் - ஒற்று மிகவேண்டுமல்லவா?
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
இது எப்படி?
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை ஏந்தி
பழுத்த தீயைப் பாங்குடன் தாங்கும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு
இது எப்படி?
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை ஏந்தி
பழுத்த தீயைப் பாங்குடன் தாங்கும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு
-
- Posts: 2444
- Joined: 16 Dec 2008, 09:10
Re: KavithaigaL by Rasikas
இதுவும் நன்று. அதில் ஒற்று மிகுந்தாலும் தளை மாறாதே!Pratyaksham Bala wrote: ↑27 Jul 2023, 22:19 .
இது எப்படி?
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை ஏந்தி
பழுத்த தீயைப் பாங்குடன் தாங்கும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
௸ மாற்றம் மற்ற வரிகளுக்கு ஒத்த ஓசை நயத்திற்காக.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
இனிமை
(கலிவிருத்தம்)
சிவந்தெழும் கதிரவன் சுடர்மிகு ஒளியில்,
தவழ்ந்திடும் முகிலிடைத் தண்ணில வொளியில்,
அவனியில் நடைபெறும் அரியபல் நிகழ்வில்,
நவநவ உணர்வினில் நலமொடு மலர்வோம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
14 .03 .2005.
(கலிவிருத்தம்)
சிவந்தெழும் கதிரவன் சுடர்மிகு ஒளியில்,
தவழ்ந்திடும் முகிலிடைத் தண்ணில வொளியில்,
அவனியில் நடைபெறும் அரியபல் நிகழ்வில்,
நவநவ உணர்வினில் நலமொடு மலர்வோம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
14 .03 .2005.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
உண்மை
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அப்பனே என்பர்; எங்கள்
ஆருயிர் அரசே என்பர்.
சுப்பனே என்பர்; தங்கச்
சுப்பிர மணியே என்பர்.
ஒப்பிலா உருவே என்பர்;
உயர்தகு ஒளியே என்பர்.
எப்படி அழைத்தா லென்ன ?
எதுவுமே அவனே அன்றோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
17.09.2003
உண்மை
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அப்பனே என்பர்; எங்கள்
ஆருயிர் அரசே என்பர்.
சுப்பனே என்பர்; தங்கச்
சுப்பிர மணியே என்பர்.
ஒப்பிலா உருவே என்பர்;
உயர்தகு ஒளியே என்பர்.
எப்படி அழைத்தா லென்ன ?
எதுவுமே அவனே அன்றோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
17.09.2003
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
தெய்வம் கண்டேன் !
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பெண்மையின் மென்மை வேண்டேன்;
பிறவியில் செம்மை வேண்டேன்.
அண்மையின் இனிமை வேண்டேன்;
அறிஞர்தம் அருமை வேண்டேன். ... ...
உண்மையின் உருவைக் கண்டேன்;
உணர்ச்சியின் கருவைக் கண்டேன் !
தண்மையில் தனிமை கொண்டேன்;
தவிப்பினில் தெய்வம் கண்டேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
18.09.2003
தெய்வம் கண்டேன் !
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பெண்மையின் மென்மை வேண்டேன்;
பிறவியில் செம்மை வேண்டேன்.
அண்மையின் இனிமை வேண்டேன்;
அறிஞர்தம் அருமை வேண்டேன். ... ...
உண்மையின் உருவைக் கண்டேன்;
உணர்ச்சியின் கருவைக் கண்டேன் !
தண்மையில் தனிமை கொண்டேன்;
தவிப்பினில் தெய்வம் கண்டேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
18.09.2003
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
செய்யம்மா அருள் !
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
நயமான சொற்களுடன் நல்லிணக்கக் கவிதைகள்
நாளும்நான் நல்கல் வேண்டும்.
சுயமான சிந்தனைகள் சுடர்மிக்கச் சொற்களில்
சுவைகூட்டி வருதல் வேண்டும்.
பயமென்று சொல்லிடுமோர் நிலைவொன்றெப் போதுமே
பற்றாம லிருக்க வேண்டும்.
செயமென்ற நற்செய்தி நித்தமுமே வந்திட
செய்யம்மா அருளெ னக்கே !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.09.2003
செய்யம்மா அருள் !
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
நயமான சொற்களுடன் நல்லிணக்கக் கவிதைகள்
நாளும்நான் நல்கல் வேண்டும்.
சுயமான சிந்தனைகள் சுடர்மிக்கச் சொற்களில்
சுவைகூட்டி வருதல் வேண்டும்.
பயமென்று சொல்லிடுமோர் நிலைவொன்றெப் போதுமே
பற்றாம லிருக்க வேண்டும்.
செயமென்ற நற்செய்தி நித்தமுமே வந்திட
செய்யம்மா அருளெ னக்கே !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.09.2003
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
மருத வேள் !
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கருவறை நிறைந்து நிற்கும்
கருப்பொருள் அருளை வேண்டி
இருமுடி தலையில் தாங்கி
இரவிலும் மலையில் ஏகி
உருவிலாத் திருவின் சீராய்
உயரிய பொருளாய் ஆன
மருவிலா மருத வேளை
மயங்கியே கண்டு நின்றேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.09.2003.
மருத வேள் !
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கருவறை நிறைந்து நிற்கும்
கருப்பொருள் அருளை வேண்டி
இருமுடி தலையில் தாங்கி
இரவிலும் மலையில் ஏகி
உருவிலாத் திருவின் சீராய்
உயரிய பொருளாய் ஆன
மருவிலா மருத வேளை
மயங்கியே கண்டு நின்றேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.09.2003.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
paDithu varugiREn, rasikkiREn... 

-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
37
கோபியின் புலம்பல்
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
குட்டிக் கண்ணன் வந்தே என்னைக்
கட்டிப் போட்டுச் சென்று விட்டான்.
கட்டித் தங்கம் கொண்டு தந்து
கெட்டி முத்தம் கொட்டி விட்டான்.
கட்டிக் கொண்டு மோக வீணை
கவிதை சொல்லிச் சென்று விட்டான்.
விட்டி லாகத் துடிக்க விட்டு
விட்டு விட்டு ஓடி விட்டான்.
ப்ரத்யக்ஷம் பாலா,
24.06.2004.
கோபியின் புலம்பல்
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
குட்டிக் கண்ணன் வந்தே என்னைக்
கட்டிப் போட்டுச் சென்று விட்டான்.
கட்டித் தங்கம் கொண்டு தந்து
கெட்டி முத்தம் கொட்டி விட்டான்.
கட்டிக் கொண்டு மோக வீணை
கவிதை சொல்லிச் சென்று விட்டான்.
விட்டி லாகத் துடிக்க விட்டு
விட்டு விட்டு ஓடி விட்டான்.
ப்ரத்யக்ஷம் பாலா,
24.06.2004.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
80
புரவலன்
(கலி விருத்தம்)
படுத்துறங்கும் பேர்களுக்கும் பணம்கொடுக்க வேண்டும்.
அடுத்துவரும் ஆட்களுக்கும் அமுதளிக்க வேண்டும்.
நடுப்பகலில் துட்டுக்கு நானலைய வேண்டும்.
கொடுத்தவர்க்குச் செல்வங்கள் கொட்டுமென்ப துண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.09.2003.
புரவலன்
(கலி விருத்தம்)
படுத்துறங்கும் பேர்களுக்கும் பணம்கொடுக்க வேண்டும்.
அடுத்துவரும் ஆட்களுக்கும் அமுதளிக்க வேண்டும்.
நடுப்பகலில் துட்டுக்கு நானலைய வேண்டும்.
கொடுத்தவர்க்குச் செல்வங்கள் கொட்டுமென்ப துண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.09.2003.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ChatGPT created the following song, in response to my query :
“WRITE A NEW SONG ON OIL PAINTING”
(Verse 1)
In a world of colors, on a canvas so wide,
Brush strokes dancing, with a palette by my side,
I dip my brush in hues, a vibrant array,
Creating stories, in an oil painting's display.
(Chorus)
Oh, let the pigments flow, on this canvas, let it sing,
A symphony of colors, where imagination takes wing,
Through every stroke and shade, a masterpiece we'll find,
In this artful journey, the beauty of oil painting shines.
(Verse 2)
With every stroke, a story starts to unfold,
Layers of emotion, in each tale that's told,
From landscapes serene, to portraits so alive,
With every stroke of brush, a world comes to life.
(Chorus)
Oh, let the pigments flow, on this canvas, let it sing,
A symphony of colors, where imagination takes wing,
Through every stroke and shade, a masterpiece we'll find,
In this artful journey, the beauty of oil painting shines.
(Bridge)
In the blending of colors, secrets are unveiled,
Textures and depths, intricately detailed,
The artist's soul, captured in each stroke,
A window to their heart, where emotions spoke.
(Verse 3)
From vibrant sunsets, to city streets at night,
Stillness and motion, captured with delight,
The canvas whispers stories, as the colors intertwine,
In the world of oil painting, inspiration we find.
(Chorus)
Oh, let the pigments flow, on this canvas, let it sing,
A symphony of colors, where imagination takes wing,
Through every stroke and shade, a masterpiece we'll find,
In this artful journey, the beauty of oil painting shines.
(Outro)
In the realm of oil painting, dreams come alive,
With each stroke I take, a piece of me survives,
So let us celebrate, this art form so divine,
In the realm of oil painting, let our spirits shine.
“WRITE A NEW SONG ON OIL PAINTING”
(Verse 1)
In a world of colors, on a canvas so wide,
Brush strokes dancing, with a palette by my side,
I dip my brush in hues, a vibrant array,
Creating stories, in an oil painting's display.
(Chorus)
Oh, let the pigments flow, on this canvas, let it sing,
A symphony of colors, where imagination takes wing,
Through every stroke and shade, a masterpiece we'll find,
In this artful journey, the beauty of oil painting shines.
(Verse 2)
With every stroke, a story starts to unfold,
Layers of emotion, in each tale that's told,
From landscapes serene, to portraits so alive,
With every stroke of brush, a world comes to life.
(Chorus)
Oh, let the pigments flow, on this canvas, let it sing,
A symphony of colors, where imagination takes wing,
Through every stroke and shade, a masterpiece we'll find,
In this artful journey, the beauty of oil painting shines.
(Bridge)
In the blending of colors, secrets are unveiled,
Textures and depths, intricately detailed,
The artist's soul, captured in each stroke,
A window to their heart, where emotions spoke.
(Verse 3)
From vibrant sunsets, to city streets at night,
Stillness and motion, captured with delight,
The canvas whispers stories, as the colors intertwine,
In the world of oil painting, inspiration we find.
(Chorus)
Oh, let the pigments flow, on this canvas, let it sing,
A symphony of colors, where imagination takes wing,
Through every stroke and shade, a masterpiece we'll find,
In this artful journey, the beauty of oil painting shines.
(Outro)
In the realm of oil painting, dreams come alive,
With each stroke I take, a piece of me survives,
So let us celebrate, this art form so divine,
In the realm of oil painting, let our spirits shine.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
496
உறுதி
(வஞ்சித் துறை)
சென்றதை மறந்துவிடு.
இன்றொரு சபதமிடு.
குன்றனைத் தடைகளையும்
வென்று விடுவேனென்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2016.
496
உறுதி
(வஞ்சித் துறை)
சென்றதை மறந்துவிடு.
இன்றொரு சபதமிடு.
குன்றனைத் தடைகளையும்
வென்று விடுவேனென்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2016.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
506
அப்பனே !
(கலி விருத்தம்)
பொன்னம்பல வானரே ! புன்னாக நாதரே !
குன்னக்குடி அப்பனே ! கோனேரி ராசனே !
தென்னங்கரைத் தெய்வமே ! தேவாதி தேவனே !
என்னப்பன் அல்லவா ? அரும் எந்தாயும் அல்லவா ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.09.2016.
506
அப்பனே !
(கலி விருத்தம்)
பொன்னம்பல வானரே ! புன்னாக நாதரே !
குன்னக்குடி அப்பனே ! கோனேரி ராசனே !
தென்னங்கரைத் தெய்வமே ! தேவாதி தேவனே !
என்னப்பன் அல்லவா ? அரும் எந்தாயும் அல்லவா ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.09.2016.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
370
வரும்காலம் பொன்னாகும் !
(கலி விருத்தம்)
பந்திக்குக் காத்திருந்து பசியோடு கிடக்காதே.
அந்திக்காலம்வரையில் அழுதழுது சாவாதே.
சந்திசிரித்ததை எல்லாம் சட்டென்று மறந்துதொலை.
நிந்தனைகள் செய்தவரை நினைவில்நீ வைக்காதே.
சிந்தித்தால் தெளிவுவரும் சக்தியெலாம் உனக்குண்டு !
சொந்தமெல்லாம் சிரிக்கட்டும் சுமைதூக்கு. தப்பில்லை !
முந்தைநிலை மாறுமடா ! மனநிறைவு வந்துசேரும் !!
விந்தையடா இவ்வாழ்க்கை ! வரும்காலம் பொன்னாகும் !!
ப்ரத்யக்ஷம் பாலா,
15.02.2015.
370
வரும்காலம் பொன்னாகும் !
(கலி விருத்தம்)
பந்திக்குக் காத்திருந்து பசியோடு கிடக்காதே.
அந்திக்காலம்வரையில் அழுதழுது சாவாதே.
சந்திசிரித்ததை எல்லாம் சட்டென்று மறந்துதொலை.
நிந்தனைகள் செய்தவரை நினைவில்நீ வைக்காதே.
சிந்தித்தால் தெளிவுவரும் சக்தியெலாம் உனக்குண்டு !
சொந்தமெல்லாம் சிரிக்கட்டும் சுமைதூக்கு. தப்பில்லை !
முந்தைநிலை மாறுமடா ! மனநிறைவு வந்துசேரும் !!
விந்தையடா இவ்வாழ்க்கை ! வரும்காலம் பொன்னாகும் !!
ப்ரத்யக்ஷம் பாலா,
15.02.2015.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
153
தங்க மனசு
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஊருக்கே மகிழ்ச்சி உண்டு
உனக்கது இல்லை எனினும்
பாருக்கு சேதம் என்றால்
பதறிடும் மனத்தைக் கொள்நீ.
வேருக்கு சிதையும் நேரம்
விரைவிலே வருமென் றாலும்
யாருக்கோ இடுக்கண் எனினும்
யாதெனும் செய்ய ஓடு.
ப்ரத்யக்ஷம் பாலா,
03.08.2011.
153
தங்க மனசு
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஊருக்கே மகிழ்ச்சி உண்டு
உனக்கது இல்லை எனினும்
பாருக்கு சேதம் என்றால்
பதறிடும் மனத்தைக் கொள்நீ.
வேருக்கு சிதையும் நேரம்
விரைவிலே வருமென் றாலும்
யாருக்கோ இடுக்கண் எனினும்
யாதெனும் செய்ய ஓடு.
ப்ரத்யக்ஷம் பாலா,
03.08.2011.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
214
தலைவன்
(வஞ்சி விருத்தம்)
ஆறுபடை வீடுடையோன் இங்கிருக்க
வேறுவிடை தேடுவதும் சரியாமோ ?
கூறுகுகன் குருநாதன் கோலமயில்
ஏறிவரும் வேலவனே தலைவனென !
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.
214
தலைவன்
(வஞ்சி விருத்தம்)
ஆறுபடை வீடுடையோன் இங்கிருக்க
வேறுவிடை தேடுவதும் சரியாமோ ?
கூறுகுகன் குருநாதன் கோலமயில்
ஏறிவரும் வேலவனே தலைவனென !
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
316
போற்றி !
(கலி விருத்தம்)
கயிலைமலை மீதமர்ந்த காரணனே போற்றி !
இயலிசைக்கு உயிரளிக்கும் ஈஸ்வரியே போற்றி !
பயில்பவர்க்குத் துணையிருக்கும் பாலகனே போற்றி !
மயிலொடுநல் அரவமுடை மாயவனே போற்றி !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.12.2013.
316
போற்றி !
(கலி விருத்தம்)
கயிலைமலை மீதமர்ந்த காரணனே போற்றி !
இயலிசைக்கு உயிரளிக்கும் ஈஸ்வரியே போற்றி !
பயில்பவர்க்குத் துணையிருக்கும் பாலகனே போற்றி !
மயிலொடுநல் அரவமுடை மாயவனே போற்றி !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.12.2013.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
295
கூத்தன்
(வஞ்சி விருத்தம்)
கோடித் தேனுடை மலர்கள்
தேடி, கார்குழல் சடையில்
சூடி, செந்தழல் கையோன்
ஆடும் கூத்துகள் பலகோடி!
ப்ரத்யக்ஷம் பாலா,
03.12.2013.
295
கூத்தன்
(வஞ்சி விருத்தம்)
கோடித் தேனுடை மலர்கள்
தேடி, கார்குழல் சடையில்
சூடி, செந்தழல் கையோன்
ஆடும் கூத்துகள் பலகோடி!
ப்ரத்யக்ஷம் பாலா,
03.12.2013.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
374
காட்சி
(கலி விருத்தம்)
அந்திப் பொழுதினில் ஆடிடும் களத்தில்
நந்தி மேலொரு நாதனைக் கண்டேன் !
மந்திரகோஷமும் மேளமும் கொட்டும்
விந்தைக் காட்சிகள் வீசுவ தென்னே !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.02.2015.
374
காட்சி
(கலி விருத்தம்)
அந்திப் பொழுதினில் ஆடிடும் களத்தில்
நந்தி மேலொரு நாதனைக் கண்டேன் !
மந்திரகோஷமும் மேளமும் கொட்டும்
விந்தைக் காட்சிகள் வீசுவ தென்னே !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.02.2015.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
045
இனிமை
(வஞ்சித் துறை)
காலைக் குளிர் இதமும்,
சாலை மர நிழலும்,
சோலைக் குயில் ஒலியும்,
வேலைச் சுமை குறைக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
26 .09 .2006
045
இனிமை
(வஞ்சித் துறை)
காலைக் குளிர் இதமும்,
சாலை மர நிழலும்,
சோலைக் குயில் ஒலியும்,
வேலைச் சுமை குறைக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
26 .09 .2006
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
288
சுவாமியே ஐயப்பா!
(கலித் தாழிசை)
வண்ணநல் ஆடை கட்டி
எண்ணமும் சீராய் வைத்து
தலையிலே மூட்டை தூக்கி
தொலைவிலே காட்டை நோக்கி
நடையிலே வேகம் கூட்டி
தடையெலாம் நேரே தாண்டி
வழியெலாம் கோஷம் போட்டு
எழிலுடை மலையை ஏகி
பதினெட்டு படியை எட்டி
கதிபெறக் கதறி நிற்போம்! சுவாமியே ஐயப்பா !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.013.
288
சுவாமியே ஐயப்பா!
(கலித் தாழிசை)
வண்ணநல் ஆடை கட்டி
எண்ணமும் சீராய் வைத்து
தலையிலே மூட்டை தூக்கி
தொலைவிலே காட்டை நோக்கி
நடையிலே வேகம் கூட்டி
தடையெலாம் நேரே தாண்டி
வழியெலாம் கோஷம் போட்டு
எழிலுடை மலையை ஏகி
பதினெட்டு படியை எட்டி
கதிபெறக் கதறி நிற்போம்! சுவாமியே ஐயப்பா !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.013.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
040
பஜ கோவிந்தம் - 25
(குறள் வெண் செந்துறை)
பகையோ நட்போ, மகவோ உறவோ,
பகையும் வேண்டா; பரிவும் வேண்டா.
அனைவ ரிடத்தும் உனையே கண்டிரு;
பிரிவு உணர்வை வேருடன் களைந்திடு.
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
29.04.2007.
040
பஜ கோவிந்தம் - 25
(குறள் வெண் செந்துறை)
பகையோ நட்போ, மகவோ உறவோ,
பகையும் வேண்டா; பரிவும் வேண்டா.
அனைவ ரிடத்தும் உனையே கண்டிரு;
பிரிவு உணர்வை வேருடன் களைந்திடு.
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
29.04.2007.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
208
திருச்சிவனார்
(கலி விருத்தம்)
செஞ்சடை சுருண்டு சழக்கரை விரட்ட
நஞ்சுடை கண்டம் நமனையும் மிரட்ட
குஞ்சித பதங்கள் குவலயம் காக்கும் !
தஞ்சமடைந்தோர் துயர்களைத் தீர்க்கும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
08.07.2012.
208
திருச்சிவனார்
(கலி விருத்தம்)
செஞ்சடை சுருண்டு சழக்கரை விரட்ட
நஞ்சுடை கண்டம் நமனையும் மிரட்ட
குஞ்சித பதங்கள் குவலயம் காக்கும் !
தஞ்சமடைந்தோர் துயர்களைத் தீர்க்கும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
08.07.2012.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
051
பிறவிப் பயன்
(வஞ்சித்துறை)
உரியதொரு பிரியகுரு
சொரியஅருள் பிரியுமிருள்.
அரியதொரு கரியதிரு
பெரியஉரு தெரியவரும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2006.
051
பிறவிப் பயன்
(வஞ்சித்துறை)
உரியதொரு பிரியகுரு
சொரியஅருள் பிரியுமிருள்.
அரியதொரு கரியதிரு
பெரியஉரு தெரியவரும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2006.
-
- Posts: 2444
- Joined: 16 Dec 2008, 09:10
Re: KavithaigaL by Rasikas
v nice!Pratyaksham Bala wrote: ↑07 Nov 2023, 05:11 .
051
பிறவிப் பயன்
(வஞ்சித்துறை)
உரியதொரு பிரியகுரு
சொரியஅருள் பிரியுமிருள்.
அரியதொரு கரியதிரு
பெரியஉரு தெரியவரும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2006.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
448
சிவ சிவ !
(வஞ்சி விருத்தம்)
குழல்சடையிற் கொன்றை கொண்டோனை
தழல்கையுடை தகைமை கொண்டோனை
எழில்நடன இமய வரையோனை
தொழு ! வலம்வா ! திறனெல்லாம் அருள்வான் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.05.2015.
448
சிவ சிவ !
(வஞ்சி விருத்தம்)
குழல்சடையிற் கொன்றை கொண்டோனை
தழல்கையுடை தகைமை கொண்டோனை
எழில்நடன இமய வரையோனை
தொழு ! வலம்வா ! திறனெல்லாம் அருள்வான் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.05.2015.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
460
பிறவி
(கலி விருத்தம்)
தொல்லைப் பணிகள் துணிந்து சுமந்து
நில்லாது உழைத்து நிதியம் குவித்து
இல்லாதவரின் இடர்கள் துடைத்து
பல்லாண்டு போச்சு; பலவாறு இனித்தே.
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2015.
460
பிறவி
(கலி விருத்தம்)
தொல்லைப் பணிகள் துணிந்து சுமந்து
நில்லாது உழைத்து நிதியம் குவித்து
இல்லாதவரின் இடர்கள் துடைத்து
பல்லாண்டு போச்சு; பலவாறு இனித்தே.
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2015.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
806
இளவேனில்
(கலித் தாழிசை)
தொட்டு விளையாடி, இளம்தென்றல் குதித்தோடும்.
கட்டுக் கடங்காத கரும்காளை துள்ளிஓடும்.
சிட்டுக் கிளிக்கூட்டம் சுற்றிவந்து கதைக்கும்.
துட்டும் மணிரத்தினமும் இவைதரும் மகிழ்ச்சிக்கு ஈடாமோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.01.2023.
806
இளவேனில்
(கலித் தாழிசை)
தொட்டு விளையாடி, இளம்தென்றல் குதித்தோடும்.
கட்டுக் கடங்காத கரும்காளை துள்ளிஓடும்.
சிட்டுக் கிளிக்கூட்டம் சுற்றிவந்து கதைக்கும்.
துட்டும் மணிரத்தினமும் இவைதரும் மகிழ்ச்சிக்கு ஈடாமோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.01.2023.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
807
துணிவு கொள்
(குறள் வெண்செந்துறை)
எள்ளி நகையாடும் கூட்டம் ஏசிக் கலக்கும்; தடுக்கும்.
துள்ளி முன்னேறு நண்பா ! துணிந்துநீ செயலாற்று ! வெல் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.01.2023.
807
துணிவு கொள்
(குறள் வெண்செந்துறை)
எள்ளி நகையாடும் கூட்டம் ஏசிக் கலக்கும்; தடுக்கும்.
துள்ளி முன்னேறு நண்பா ! துணிந்துநீ செயலாற்று ! வெல் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.01.2023.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
099
வெற்றி
(வஞ்சி விருத்தம்)
வெல்லத் துடிக்குதா நெஞ்சம்?
கொல்லத் துடிக்குதா கைகள்?
வல்லவனாய் இருந்திடினும்
மெல்ல அவைற்றை நீ அடக்கு.
நல்லோர் நட்பினை நாடு;
நல்லது மட்டுமே தேடு.
எல்லை இலா பல வெற்றி
எல்லாம் கைவரக் கூடும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2006.
099
வெற்றி
(வஞ்சி விருத்தம்)
வெல்லத் துடிக்குதா நெஞ்சம்?
கொல்லத் துடிக்குதா கைகள்?
வல்லவனாய் இருந்திடினும்
மெல்ல அவைற்றை நீ அடக்கு.
நல்லோர் நட்பினை நாடு;
நல்லது மட்டுமே தேடு.
எல்லை இலா பல வெற்றி
எல்லாம் கைவரக் கூடும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2006.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
420
அடியார் கூற்று
(கலி விருத்தம்)
நடையாய் நடப்பேன்; நாளும் அலைவேன் !
விடைமேல் இருக்கும் வேதப் பொருளை
கடைநாள் வரையில் கருத்தில் கொள்வேன் !
அடைவேன் அவனை ! அதுவே சொர்க்கம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
24.03.2015.
420
அடியார் கூற்று
(கலி விருத்தம்)
நடையாய் நடப்பேன்; நாளும் அலைவேன் !
விடைமேல் இருக்கும் வேதப் பொருளை
கடைநாள் வரையில் கருத்தில் கொள்வேன் !
அடைவேன் அவனை ! அதுவே சொர்க்கம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
24.03.2015.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
583
குறி
(குறள் வெண்செந்துறை)
எய்தவனை விடுத்து
அம்பைநீ நோகாதே.
செய்தவனைப் பிடித்துச்
செம்மைசெயச் செய்திடு.
ப்ரத்யக்ஷம் பாலா,
03.04.2003
583
குறி
(குறள் வெண்செந்துறை)
எய்தவனை விடுத்து
அம்பைநீ நோகாதே.
செய்தவனைப் பிடித்துச்
செம்மைசெயச் செய்திடு.
ப்ரத்யக்ஷம் பாலா,
03.04.2003
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
222
அறி அறி !
(கலி விருத்தம்)
அறிஅறி சிவனை, அனைத்துலகு மேய்ப்பவனை !
அறிகரி குகனை, அனைத்துலகு காப்பவனை !
அறிகரி முகனை, அனைத்துகலி தீர்ப்பவனை !
அறிகிரி மகளை, அனைத்துநலம் புரிபவளை !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2012.
222
அறி அறி !
(கலி விருத்தம்)
அறிஅறி சிவனை, அனைத்துலகு மேய்ப்பவனை !
அறிகரி குகனை, அனைத்துலகு காப்பவனை !
அறிகரி முகனை, அனைத்துகலி தீர்ப்பவனை !
அறிகிரி மகளை, அனைத்துநலம் புரிபவளை !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2012.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
222
அறி அறி !
(கலி விருத்தம்)
அறிஅறி சிவனை, அனைத்துலகு மேய்ப்பவனை !
அறிகிரி மகளை, அனைத்துநலம் புரிபவளை !
அறிகரி முகனை, அனைத்துகலி தீர்ப்பவனை !
அறிபரி குகனை, அனைத்துலகு காப்பவனை !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2012.
222
அறி அறி !
(கலி விருத்தம்)
அறிஅறி சிவனை, அனைத்துலகு மேய்ப்பவனை !
அறிகிரி மகளை, அனைத்துநலம் புரிபவளை !
அறிகரி முகனை, அனைத்துகலி தீர்ப்பவனை !
அறிபரி குகனை, அனைத்துலகு காப்பவனை !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2012.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
136
செல் ! செல் !
(ஆசிரியத் தாழிசை)
கரையேற வேண்டுமெனில் களைந்திடு பிறப்பிடத்தை !
விரைவாக முன்னேற வேறிடம் சென்றுவிடு;
கரைந்திடாத ஊர்நினைவைக் கூட்டிவை அசைபோட !
ப்ரத்யக்ஷம் பாலா,
13.06.2011.
136
செல் ! செல் !
(ஆசிரியத் தாழிசை)
கரையேற வேண்டுமெனில் களைந்திடு பிறப்பிடத்தை !
விரைவாக முன்னேற வேறிடம் சென்றுவிடு;
கரைந்திடாத ஊர்நினைவைக் கூட்டிவை அசைபோட !
ப்ரத்யக்ஷம் பாலா,
13.06.2011.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
461
அருள்
(கலி விருத்தம்)
திக்காய்ச் சுழலுவேன். தலமெலாம் புரள்வேன்.
செக்காய்ச் சுற்றுவேன். சிவனடி கிடப்பேன் !
சுக்காய்க் காயினும் சுழிமழை வேண்டேன்.
சொக்கா ! உன்னருள் செல்வமே போதும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.06.2015.
461
அருள்
(கலி விருத்தம்)
திக்காய்ச் சுழலுவேன். தலமெலாம் புரள்வேன்.
செக்காய்ச் சுற்றுவேன். சிவனடி கிடப்பேன் !
சுக்காய்க் காயினும் சுழிமழை வேண்டேன்.
சொக்கா ! உன்னருள் செல்வமே போதும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.06.2015.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
381
விழிப்பு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி
அண்டை நடப்பு அறியா திருப்பின்
சுண்டைக் காயென ஒதுக்கி விடுவர்.
உண்டு களித்து உருண்டது போதும்.
பண்டை முறைகளைக் கொண்டது போதும்.
உண்டு பலவழி ! உணர்ந்தால் வெற்றியே !
ப்ரத்யக்ஷம் பாலா
26.02.2015.
381
விழிப்பு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி
அண்டை நடப்பு அறியா திருப்பின்
சுண்டைக் காயென ஒதுக்கி விடுவர்.
உண்டு களித்து உருண்டது போதும்.
பண்டை முறைகளைக் கொண்டது போதும்.
உண்டு பலவழி ! உணர்ந்தால் வெற்றியே !
ப்ரத்யக்ஷம் பாலா
26.02.2015.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
104
திடம்
(வெண்டுறை)
தடைகளைத் தகர்த்து, சடைமுடி தரித்து,
அலைகடல் தாண்டி, மலைகளைக் கடந்து,
தனிமையைத் தேடி, தனியிடம் அமைத்து,
தவமிருந்திடுவேன்; அவன் வருவானே !
ப்ரத்யக்ஷம் பாலா,
10.11.2008.
104
திடம்
(வெண்டுறை)
தடைகளைத் தகர்த்து, சடைமுடி தரித்து,
அலைகடல் தாண்டி, மலைகளைக் கடந்து,
தனிமையைத் தேடி, தனியிடம் அமைத்து,
தவமிருந்திடுவேன்; அவன் வருவானே !
ப்ரத்யக்ஷம் பாலா,
10.11.2008.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
253
மயக்கம்
(குறள் வெண் செந்துறை)
பிடித்தவர் சேட்டை எல்லாம்
பொருள்செறி செயலாய்த் தோன்றும்.
மடித்தவர் கூற்று எல்லாம்
மதிநிறை அருளாய்த் தோன்றும்.
விழித்தெழும் குரங்கு மனம்
வேறிடம் நாடும் போது
பழையதை மறக்கத் தோன்றும்.
பழுதென சிரிக்கத் தோன்றும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
16.09.2012.
253
மயக்கம்
(குறள் வெண் செந்துறை)
பிடித்தவர் சேட்டை எல்லாம்
பொருள்செறி செயலாய்த் தோன்றும்.
மடித்தவர் கூற்று எல்லாம்
மதிநிறை அருளாய்த் தோன்றும்.
விழித்தெழும் குரங்கு மனம்
வேறிடம் நாடும் போது
பழையதை மறக்கத் தோன்றும்.
பழுதென சிரிக்கத் தோன்றும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
16.09.2012.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
162
புயலடித்து ஓய்ந்தது !
(கலித் தாழிசை)
தலைவிரித்து, சீறிவந்து,
இலைஉருவி நிலைகுலைத்து,
கிளைமுறித்து, காய்உதிர்த்து,
விளைநிலத்தை வீணடித்து,
அருஞ்செடிகளை அலைக்கழித்து,
பெருமரங்களைப் பாழ்படுத்தி,
ஆடிஅடங்கி ஓடிப்போனது
தேடிவந்த புயலொன்று தானே !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.04.2012.
162
புயலடித்து ஓய்ந்தது !
(கலித் தாழிசை)
தலைவிரித்து, சீறிவந்து,
இலைஉருவி நிலைகுலைத்து,
கிளைமுறித்து, காய்உதிர்த்து,
விளைநிலத்தை வீணடித்து,
அருஞ்செடிகளை அலைக்கழித்து,
பெருமரங்களைப் பாழ்படுத்தி,
ஆடிஅடங்கி ஓடிப்போனது
தேடிவந்த புயலொன்று தானே !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.04.2012.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
038
பஜ கோவிந்தம் 12
(குறள் வெண் செந்துறை)
காலையும் மாலையும், இரவும் பகலும்,
கோடையும் குளிரும், சென்றிடும்; வந்திடும்.
காலமும் கரையும்; ஆயுளும் குறையும்.
ஆசை மட்டும் நிலைத்து நிற்பதேன் ?
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.
038
பஜ கோவிந்தம் 12
(குறள் வெண் செந்துறை)
காலையும் மாலையும், இரவும் பகலும்,
கோடையும் குளிரும், சென்றிடும்; வந்திடும்.
காலமும் கரையும்; ஆயுளும் குறையும்.
ஆசை மட்டும் நிலைத்து நிற்பதேன் ?
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
804
ஏக்கம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தெருதுடைத்துப் படைத்திட்ட மாக்கோலம்
தேமதுர பூச்சூடி சிரித்திருக்கும்.
பெருதில்லை மலர்கொண்டு படைத்தவொரு
பூமாலை சுழன்றாடி மனம்கவரும்.
அருகம்புல் நற்சாறில் கூட்டியஓர்
அச்சுவெல்லம் வாயூறி மதிமயக்கும்
வரும்காலம் இவையெல்லாம் மறைந்துபோகும் ;
வாராதோ திரும்பவுமே ஒருகாலம் ?
ப்ரத்யக்ஷம் பாலா,
04.01.2023.
804
ஏக்கம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தெருதுடைத்துப் படைத்திட்ட மாக்கோலம்
தேமதுர பூச்சூடி சிரித்திருக்கும்.
பெருதில்லை மலர்கொண்டு படைத்தவொரு
பூமாலை சுழன்றாடி மனம்கவரும்.
அருகம்புல் நற்சாறில் கூட்டியஓர்
அச்சுவெல்லம் வாயூறி மதிமயக்கும்
வரும்காலம் இவையெல்லாம் மறைந்துபோகும் ;
வாராதோ திரும்பவுமே ஒருகாலம் ?
ப்ரத்யக்ஷம் பாலா,
04.01.2023.
-
- Posts: 4202
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
090
திட்டம்
(வஞ்சி விருத்தம்)
ஏடுகள் பற்பல கற்போம்.
தேடிக் கலைபல ஏற்போம்.
பாடுபட்டுத் தினம் நிற்போம்.
கூடிவரும் புகழ் சேர்ப்போம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
090
திட்டம்
(வஞ்சி விருத்தம்)
ஏடுகள் பற்பல கற்போம்.
தேடிக் கலைபல ஏற்போம்.
பாடுபட்டுத் தினம் நிற்போம்.
கூடிவரும் புகழ் சேர்ப்போம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.