காவிரி வடகரை தலங்கள்
ஏழாவது தலம்
தென்திருமுல்லைவாயில் தற்போது திருமுல்லைவாசல்
மூலவர் - முல்லைவனேஸ்வரர் ,
மாசிலாமணீசர் ,
( யூதிகா பரமேஸ்வரர் )
அம்பாள் - அணி கொண்ட கோதையம்மை ,
( சத்தியானந்த சவுந்தரி )
தலமரம் - முல்லைக்கொடி
தீர்த்தம் - சக்கர, பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்
புராண பெயர் - தென் திருமுல்லைவாயில்
தற்போதைய பெயர் - திருமுல்லைவாசல்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 7வது தலம்
* சோழ மன்னனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்
* இங்கு சிவனார் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட இரு காயத்தழும்புகளை இன்றும் காணலாம்.
* பள்ளியறையே இல்லாத சிவத்தலம். பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது.
* சோழர்களால் திருப்பணி செய்யப்பட்ட தலம்
* அம்மைக்கு சிவஞானம் கைவரப் பெற்ற தலம்
* சந்திரன் நோய் தீர்ந்த தலம் ( பிரம்ம தீர்த்தம் )
* பிதுர்கடன் செய்ய சிறந்த தலம் ( விஷ்ணு தீர்த்தம் )
* பரத்தை ஒருவருக்கு சிவனார் முக்தி அளித்த தலம்
* இந்திரன் , கார்க்கோடகன் வழிபட்ட தலம்
* கடற்கரைக் கோயில்
* மகோதயம், சூரிய-சந்திர கிரகணம் மற்றும் அமாவாசை காலங்களில் நமசிவாய மந்திரத்தை சொல்வோர்க்கு பல நன்மை அளிக்கும் தலம்
* மாசி மகத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது
* சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.
* தற்போது சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இத்தலத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் கடற்கரை அமைந்துள்ளது.
* சுசாவி என்பவரின் மூத்தபிள்ளை வாமதேவர். தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டார். அப்படி போட்டு வரும் போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும்போது அந்த எலும்பு, ரத்தினக்கல்லாக மாறியது. உடனே தந்தைக்கு இங்கு பிதுர் கடனாற்றினார். அத்துடன் தந்தைக்கு முக்தியளித்த தனயரானார்
* கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவனின் சரும நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தபோது , இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்ததாகவும் , குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டதாகவும் , முல்லைக்கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியதாகவும் , வருந்திய வளவன், தன்னைத்தானே வெட்டிக் கொள்ள முற்பட்டபோது சிவனார் உமையம்மையுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றியதாகவும் தலவரலாறு சொல்லப்படுகிறது .எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது.
தரிசன நேரம்
காலை 08:00 - 12:30 &
மாலை 04:00 - 08:00
தொடர்புக்கு
94863 - 39538 ,
94865 - 24626
சீர்காழியிலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்