
சித்திரை பிறந் தது..!!
வசந்தத்தை நினைவூட்டும்
பூத்து குலுங்கும் செடி கொடிகளும்
மலர்ந்த தாமரையும்
கரையும் புள்ளினங்களின் இறைச்சலும்
பட்டாம் பூச்சிகளின் சிறகசைப்பும்
வேங்கடவன் என் நெஞ்சத்தை நிறைத்தது!
பேரானந்தம் பெற்றானை
சீரளிக்க வல்லானை
தீவினைகள் தீர்பானை
தத்வமறியாமல் நிம்மதியை
அங்கும் இங்கும் ஓடி தேடி திரியாமல்
உன்னுள் தேடினால்
தன்னுள் உன்னை காட்டி அருள்வான்!
இதயம் கசிந்துருகி ஜய வருட நன்நாளில்
சேவிக்க வேண்டும் என் ஐயனை!
venkat k