KavithaigaL by Rasikas
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi:
Thanks!
Thanks!
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
PB
சேர இரு மாதமுண்டு
அச்சம் தவிர்
ஆடி அடங்கும் முன்னே
ஆட்கொள்வான் பெருமானே!

சித்திரைதான் பிறந்துளதுஆடி அடங்கும் முன்னே ஆட்கொள்வாய் பெருமானே!
சேர இரு மாதமுண்டு
அச்சம் தவிர்
ஆடி அடங்கும் முன்னே
ஆட்கொள்வான் பெருமானே!
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
அகரமுதல் ஒவ் வரை ஈராறு உயிராய் குமரனை விழித்தல்:
அகர முதலாகி அங்கை மென்குழலால் மைந்தனே
ஆறுதல் அளித்து காக்க வேண்டும் என் ஈசா..
இயில் இசை பேர்இன்ப கடலில் முழ்கி
ஈரமுடன் நெஞ்சில் நாத கீதம் ஒலிக்க
உள்ளம் மகிந்து உவந்து உன்னிடம் உரிமையுடன் விழய்ந்து
ஊனே நானென்று அவலமாய் நினைத்து
எதிரில்லாத அன்பை பகைவரிடமும் காட்டிட
ஏகமுமாகி பலவுமாகி அனுபூதியுமாகி
ஐங்கரனின் துணைவா!
ஒரு பொழுதும் நின் திருவடிகளை மறவாது
ஓது முத்தமிழில் நின் புகழ் பாடி உள்ளம் நிறைய …
ஒவுடதமாகி என் துயர் தீர்ப்பாய் ..
மயில் ஏறும் மன்னவா இரு மங்கையருக்கு உகந்த குமார..
அகர முதலாகி அங்கை மென்குழலால் மைந்தனே
ஆறுதல் அளித்து காக்க வேண்டும் என் ஈசா..
இயில் இசை பேர்இன்ப கடலில் முழ்கி
ஈரமுடன் நெஞ்சில் நாத கீதம் ஒலிக்க
உள்ளம் மகிந்து உவந்து உன்னிடம் உரிமையுடன் விழய்ந்து
ஊனே நானென்று அவலமாய் நினைத்து
எதிரில்லாத அன்பை பகைவரிடமும் காட்டிட
ஏகமுமாகி பலவுமாகி அனுபூதியுமாகி
ஐங்கரனின் துணைவா!
ஒரு பொழுதும் நின் திருவடிகளை மறவாது
ஓது முத்தமிழில் நின் புகழ் பாடி உள்ளம் நிறைய …
ஒவுடதமாகி என் துயர் தீர்ப்பாய் ..
மயில் ஏறும் மன்னவா இரு மங்கையருக்கு உகந்த குமார..
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
Shri VK, I do not know which is more beautiful-the photo or the kavithai. Each and every photo/kavithai is a gem. Thank you so much.
It is like going for a dance performance where both the dance and the music are brilliant and one does not know where to concentrate.
It is like going for a dance performance where both the dance and the music are brilliant and one does not know where to concentrate.
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Shri punarvasu..thank you so much.. You are the one of very few persons...
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
cumulative thanks to cml.Arasi and P.B.because of your constant encouragement i feel I have substantially improved.
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
Markandeyanukku iRavA varamaLitha
neelakanthA!
Emakku inip piravA varum tharuveerO ?
vAzhum ippiraviyilum
nAn vEnDum varamonDrunDu
emmanadhil ini AsaiyEdhum
unDAhAdhirukka vEnDum
munDahakkaNNi nAthA
dhanDanitEn dhayAnidhiyE
isayE angamaikkonDavanE
maNmisai vErEdhu puhal
kandhanum ganapatiyum maTTumA
un maindhar
ammayappan neeranDro emakkum
kAntimathiyin arul petrAl
dhurmathi OdippOm
nirmala manadhuDan
paNivEne
parvatha rAjakumAriyai
emmeedhu nee iranga
emakku endrum iRakkamillai
ETramE !
neelakanthA!
Emakku inip piravA varum tharuveerO ?
vAzhum ippiraviyilum
nAn vEnDum varamonDrunDu
emmanadhil ini AsaiyEdhum
unDAhAdhirukka vEnDum
munDahakkaNNi nAthA
dhanDanitEn dhayAnidhiyE
isayE angamaikkonDavanE
maNmisai vErEdhu puhal
kandhanum ganapatiyum maTTumA
un maindhar
ammayappan neeranDro emakkum
kAntimathiyin arul petrAl
dhurmathi OdippOm
nirmala manadhuDan
paNivEne
parvatha rAjakumAriyai
emmeedhu nee iranga
emakku endrum iRakkamillai
ETramE !
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(165)
புத்தாண்டு
சுந்தர 'நந்தன' ஆண்டு வரும் - நல்ல
சந்தனச் செய்திகள் கொண்டு வரும் - பெரு
விந்தைகள் புரிந்திட வாய்ப்பு வரும்!
சந்ததம் மங்களம் நிறைந்திருக்கும் - நற்
சிந்தனைச் சீருடன் பாடல் வரும் - நம்
தொந்தி கணபதி துணை இருப்பார்!
ப்ரத்யக்ஷம் பாலா
12.04.2012.
..
புத்தாண்டு
சுந்தர 'நந்தன' ஆண்டு வரும் - நல்ல
சந்தனச் செய்திகள் கொண்டு வரும் - பெரு
விந்தைகள் புரிந்திட வாய்ப்பு வரும்!
சந்ததம் மங்களம் நிறைந்திருக்கும் - நற்
சிந்தனைச் சீருடன் பாடல் வரும் - நம்
தொந்தி கணபதி துணை இருப்பார்!
ப்ரத்யக்ஷம் பாலா
12.04.2012.
..
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அந்தமிகு பல சந்தக் கவிதைகள்
சொந்தமுடன் பல் ரசிகர் படைப்பர்
பந்தமுடன் அவைதமை ருசித்து
சிந்தை மகிழ்ந்து வாழ்த்துவம் தினமே
நந்தனம் நம்தனம் நம்தனமே!
சொந்தமுடன் பல் ரசிகர் படைப்பர்
பந்தமுடன் அவைதமை ருசித்து
சிந்தை மகிழ்ந்து வாழ்த்துவம் தினமே
நந்தனம் நம்தனம் நம்தனமே!
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
azhagAna iru kavidaigaL thamakku
vaDivAna um pOTRudal--aduvum,
tuLLi nardanamiDum muththAiyppuDanE!
vAzhga kavidai, vaLarga nam kavigaL!
vaDivAna um pOTRudal--aduvum,
tuLLi nardanamiDum muththAiyppuDanE!
vAzhga kavidai, vaLarga nam kavigaL!
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
விழிகளை குளந்களாக்கி வேண்டி நின்றேன் !
வழி காட்டிய இறைவனே
தடைகளை நீக்கினாய்
முதல்வனாய் நின்றாய்
எல்லாம் அறிந்தவன் ஆனாய்
மறை ஓதும் மறையவனே
இமவான்னுக்கு பேரன் ஆனாய்
இளையவனுக்கு மூத்தவனும் ஆனாய்
மாதவனுக்கு மருகனானாய்
அடியவர்களுக்கு ஆப்தனானானை
கைத்தலத்தில் நின்ற வாரண குருவே
கவலைகளை நீக்கிய மோதகப்ரியனே
யாவர்க்கும் எளிய முஷிகவஹனனே
கற்பகத்ருவான வேழ முகத்தவனே
நன்வாழ்வு ஈந்த தெய்வமே !!!
வழி காட்டிய இறைவனே
தடைகளை நீக்கினாய்
முதல்வனாய் நின்றாய்
எல்லாம் அறிந்தவன் ஆனாய்
மறை ஓதும் மறையவனே
இமவான்னுக்கு பேரன் ஆனாய்
இளையவனுக்கு மூத்தவனும் ஆனாய்
மாதவனுக்கு மருகனானாய்
அடியவர்களுக்கு ஆப்தனானானை
கைத்தலத்தில் நின்ற வாரண குருவே
கவலைகளை நீக்கிய மோதகப்ரியனே
யாவர்க்கும் எளிய முஷிகவஹனனே
கற்பகத்ருவான வேழ முகத்தவனே
நன்வாழ்வு ஈந்த தெய்வமே !!!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(166)
சுவர்க்கம்
கீரைபறித்து கடைந்ததை உண்டு பின்னர்
காரை பெயர்ந்த கதவிடுக்கில் சாய்ந்து
கூரைக் குடிசையில் குலைந்திருந்த குலமணி
தேரைக்குழவி சிரிப்பினில் சுவர்க்கம் கண்டாள்.
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2012.
..
சுவர்க்கம்
கீரைபறித்து கடைந்ததை உண்டு பின்னர்
காரை பெயர்ந்த கதவிடுக்கில் சாய்ந்து
கூரைக் குடிசையில் குலைந்திருந்த குலமணி
தேரைக்குழவி சிரிப்பினில் சுவர்க்கம் கண்டாள்.
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2012.
..
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
நுகர்வாய் என காத்திருந்து இரைந்துவிட்ட மலர்களை போல
கேட்பாய் என மரங்களின் நடுவினில் புகுந்து இசைத்து ஓய்ந்த வேனிற் காற்றினை போல
உள்ளம் உருகி இசைத்த இசையின் சுருதி இறங்கியதை போல
தவிழ வேண்டி நின்று மறைந்து விட்ட நிம்மதியை போல
பருகி சுவைக்க விழுந்து காய்ந்துவிட்ட கண்ணீர் துளிகளின் சுவை போல.......
என் பக்தி அணையாதிருக்க காப்பது உன் கடமை ...இறைவா..............
"You are what your deep, driving desire is
As your desire is, so is your will
As your will is, so is your deed
As your deed is, so is your destiny........."
கேட்பாய் என மரங்களின் நடுவினில் புகுந்து இசைத்து ஓய்ந்த வேனிற் காற்றினை போல
உள்ளம் உருகி இசைத்த இசையின் சுருதி இறங்கியதை போல
தவிழ வேண்டி நின்று மறைந்து விட்ட நிம்மதியை போல
பருகி சுவைக்க விழுந்து காய்ந்துவிட்ட கண்ணீர் துளிகளின் சுவை போல.......
என் பக்தி அணையாதிருக்க காப்பது உன் கடமை ...இறைவா..............
"You are what your deep, driving desire is
As your desire is, so is your will
As your will is, so is your deed
As your deed is, so is your destiny........."
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
ஊரைக் கூறவேண்டாம் (அவள்)
பேரைக் கூறவும் வேண்டாம்
யாரைக் குறை கூறல் வேண்டும் (அம்மாதின் வாழ்க்கைப்)
போரை நினைக்கும் போது
Vkailasam!
Even our spring is not yet fully in!
You are reminding us of the Autumn
"when Fall comes can Winter be far behind"
பேரைக் கூறவும் வேண்டாம்
யாரைக் குறை கூறல் வேண்டும் (அம்மாதின் வாழ்க்கைப்)
போரை நினைக்கும் போது
Vkailasam!
Even our spring is not yet fully in!
You are reminding us of the Autumn
"when Fall comes can Winter be far behind"
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(167)
ஏழைப் பெருமக்கள்
மோரைக்கரைத்து அருந்தி ஒருநாளைக் கடத்தி
கோரைப்பாய் விரித்து மயக்கத்தை விரட்டி
பேரைச்சொல்ல நாதியில்லா பெருமக்கள் பலருண்டு
யாரைக் குறை கூற? யமனே விடிவெள்ளி!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2012.
.
ஏழைப் பெருமக்கள்
மோரைக்கரைத்து அருந்தி ஒருநாளைக் கடத்தி
கோரைப்பாய் விரித்து மயக்கத்தை விரட்டி
பேரைச்சொல்ல நாதியில்லா பெருமக்கள் பலருண்டு
யாரைக் குறை கூற? யமனே விடிவெள்ளி!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2012.
.
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
cml "You are reminding us of the Autumn"
It is not about the season --It is about the breeze of the season..Am I correct??
It is not about the season --It is about the breeze of the season..Am I correct??
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
The riot of colors beats the blooms of spring,
Ripening of everything, fruit, very life--Ah,
A reminder of glorious times of precious youth!
Yet, bringing back the richness of all
Our well-spent lives back to us to live again
To live again, live again, even richer
Ripening of everything, fruit, very life--Ah,
A reminder of glorious times of precious youth!
Yet, bringing back the richness of all
Our well-spent lives back to us to live again
To live again, live again, even richer
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Of course to our Arasi who is a citizen of the world (who hops continents, the pristine successful Agni -5 of TN) it is alway the best of seasons!
"age does not wither her enthusiasm nor custom stale her artistic contributions* !
"age does not wither her enthusiasm nor custom stale her artistic contributions* !
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
You forget to mention that we need the fuel of enthusiasm and encouragement from others who are connected to us--in order for us to thrive. We are all ciitizens of the world, so long as our enthusiasm buoys us and keeps others anywhere on earth happy. Here on Rasikas.org we do that most of the time!
Ah! MAS springs anew in spring
Ah! MAS springs anew in spring
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
You are 100% correct!
We are a bonded Family..
Aren't we lucky?
We are a bonded Family..
Aren't we lucky?
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(168)
சுவர்க்கம்!
மாற்றத் துணியில்லை; மறைப்பிலே குளித்தான்.
சோற்றுக்கு வழியில்லை; ஆற்றுநீர் குடித்தான்.
காற்றாட நடந்தான்; கடுவெளி கடந்தான்.
வேற்றூர் கோயிலில் சுடுசோறு கிடைத்தது!
காற்றாட படுக்கவோ பெரியதொரு பிராகாரம்!
ஊற்றுக் குளத்திலே ஊறிக் குளித்திட்டான்!
"ஐயனே! உன்தாள் அடைந்தேன்! உவகை கொண்டேன்!
மெய்ப்பொருள் கண்டேன்! இதுவே சுவர்க்கம்!"
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2012.
.
சுவர்க்கம்!
மாற்றத் துணியில்லை; மறைப்பிலே குளித்தான்.
சோற்றுக்கு வழியில்லை; ஆற்றுநீர் குடித்தான்.
காற்றாட நடந்தான்; கடுவெளி கடந்தான்.
வேற்றூர் கோயிலில் சுடுசோறு கிடைத்தது!
காற்றாட படுக்கவோ பெரியதொரு பிராகாரம்!
ஊற்றுக் குளத்திலே ஊறிக் குளித்திட்டான்!
"ஐயனே! உன்தாள் அடைந்தேன்! உவகை கொண்டேன்!
மெய்ப்பொருள் கண்டேன்! இதுவே சுவர்க்கம்!"
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2012.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
70% of the people in India are in சுவர்க்கம் 
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றான்
அதனால் தானே 'கஞ்சி வரதப்பா'
என்று கேட்டதும்
எங்கு வரதப்பா என்றான்.
பசி வந்திட பத்தும்
பறந்து போம்
பசி முற்றிட அந்த
ஐந்தும் பறந்தே போமே!
அதனால் தானே 'கஞ்சி வரதப்பா'
என்று கேட்டதும்
எங்கு வரதப்பா என்றான்.
பசி வந்திட பத்தும்
பறந்து போம்
பசி முற்றிட அந்த
ஐந்தும் பறந்தே போமே!
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Punarvasu,
I was looking for you, and there you are!
VKailasam,
When you address our Punarvasu, you need to add mathi to the Shri you have typed in your post!
I was looking for you, and there you are!
VKailasam,
When you address our Punarvasu, you need to add mathi to the Shri you have typed in your post!
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
#824...
I am sorry..
I am not aware of it..
Thank you..arasiji..
I am sorry..
I am not aware of it..
Thank you..arasiji..
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
I am the last van in the poets train. a slow coach it is now crossing the platform of the tamil New Year when others have gone far ahead.
வந்தனையோ நந்தனமே?
நந்தனுக் குவந்தவன் அந்தமில் சோதியன் செந்தழல் ஏந்தும் கூத்தன்
மைந்தருள்மூத்தவன் தந்தம் சுகந்தம்கமழ் ஐந்துகரத் தானைமுகத்தோன
சிந்தை மகிழ் செந்திலுறை மயிலேறிவேலேந்தும் சந்த தமிழ்கந்தனுக்கும்
வந்தனைகள்அனந்தமாய் ஆர்வமுடன் செய்திடவந்த இந்நந்தனம் வாழ்க
வந்தனையோ நந்தனமே?
நந்தனுக் குவந்தவன் அந்தமில் சோதியன் செந்தழல் ஏந்தும் கூத்தன்
மைந்தருள்மூத்தவன் தந்தம் சுகந்தம்கமழ் ஐந்துகரத் தானைமுகத்தோன
சிந்தை மகிழ் செந்திலுறை மயிலேறிவேலேந்தும் சந்த தமிழ்கந்தனுக்கும்
வந்தனைகள்அனந்தமாய் ஆர்வமுடன் செய்திடவந்த இந்நந்தனம் வாழ்க
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Surprise, Surprise!
An excellent poem, indeed.
You should use your expertise to 'train' others!
An excellent poem, indeed.
You should use your expertise to 'train' others!
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
gUDsu vaNDigaL yAm,
vayadilE mUthavar--
bhAiravi--ponnAna kavidhai
koNarum ponbhairavi!
innum ethanai ANDugaL!
ethanai ALumai!
athanaiyum num pOnRa
muthuk kavi koNravar
methap paDithup paNbAna
kaviyum payilum pulavarkku
idu chithu viddhai AgaTTum,
engaL sindhaiyellAm niRaiyaTTum!
nanda nanda Ananda vAzhthukkaL!
vayadilE mUthavar--
bhAiravi--ponnAna kavidhai
koNarum ponbhairavi!
innum ethanai ANDugaL!
ethanai ALumai!
athanaiyum num pOnRa
muthuk kavi koNravar
methap paDithup paNbAna
kaviyum payilum pulavarkku
idu chithu viddhai AgaTTum,
engaL sindhaiyellAm niRaiyaTTum!
nanda nanda Ananda vAzhthukkaL!
Last edited by arasi on 21 Apr 2012, 06:36, edited 5 times in total.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
வந்தனம் தந்தனம் பொன்பைரவி ஐயா!
सदा नन्दति इति नन्दनं (Always it pleases/makes you happy hence Nandanam)
तत्र विलंबं किं? (where is the delay there?)
விளம்புவீர் ஐயா!
सदा नन्दति इति नन्दनं (Always it pleases/makes you happy hence Nandanam)
तत्र विलंबं किं? (where is the delay there?)
விளம்புவீர் ஐயா!
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
பாட்டிசைக்கும் நேரத்திலே குயில் வந்து கூவுதம்மா
ஆனந்த ராக அலர்பிலே மயில் தோகை விரித்து ஆடுதம்மா
குருவியும் கிளியும் இசைக்கும் இசையில் மனமும் மயங்குதம்மா
வண்டினத்தின் ரீங்காரமும் கூடவே கேட்குதம்மா
பூவின் மணமும் வீசுதம்மா
நிலவின் ஒளியிலே நல்லரவம் சீருதம்மா
எழும்பி ஓயும் அலையின் நாதம் இனிக்குதம்மா
அவன் இயக்கும் இம்மேடையிலே நானும் ஒரு நடிகனம்மா
எழுதும் கவிதையிலே குறையும் தெரியுது அம்மா .......
ஆனந்த ராக அலர்பிலே மயில் தோகை விரித்து ஆடுதம்மா
குருவியும் கிளியும் இசைக்கும் இசையில் மனமும் மயங்குதம்மா
வண்டினத்தின் ரீங்காரமும் கூடவே கேட்குதம்மா
பூவின் மணமும் வீசுதம்மா
நிலவின் ஒளியிலே நல்லரவம் சீருதம்மா
எழும்பி ஓயும் அலையின் நாதம் இனிக்குதம்மா
அவன் இயக்கும் இம்மேடையிலே நானும் ஒரு நடிகனம்மா
எழுதும் கவிதையிலே குறையும் தெரியுது அம்மா .......
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
niRaivaik kuRai enbOmO?
niRaivoDu niRam pala vaNNamAik kUTTi
iRaiyum, iyaRkaiyum maTRavaiyum sErthu
viraindODik koNarvIr vEngaDanum viDai
ERiya malaiyOnum orungAna nIr--
ovvoruvarum oru niRam, taram--
idilE inbamO pala vidam
*taram is meant here as high quality.
niRaivoDu niRam pala vaNNamAik kUTTi
iRaiyum, iyaRkaiyum maTRavaiyum sErthu
viraindODik koNarvIr vEngaDanum viDai
ERiya malaiyOnum orungAna nIr--
ovvoruvarum oru niRam, taram--
idilE inbamO pala vidam
*taram is meant here as high quality.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
மயிலேறும் வடிவேலனே
இந்த வயதான கிழவி(வர்) முன்
மயில் தனியாக வரவேண்டுமோ?
இந்த தவக்கோலம் (colourless) எமக்காகவோ!
அழகான வடிவோடு
இருமாதர் புடைசூழ
வரவேணும் மயில் மீதிலே!
இந்த வயதான கிழவி(வர்) முன்
மயில் தனியாக வரவேண்டுமோ?
இந்த தவக்கோலம் (colourless) எமக்காகவோ!
அழகான வடிவோடு
இருமாதர் புடைசூழ
வரவேணும் மயில் மீதிலே!
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
nALai oyil mayil varum, kAththirum--
namakku iravi unDu vAnil--
aviDam iravidu, maRavIr!
uRangum nEram...
thOgai mayilukku sOgai En engiRIr, uNmai--
vAgai sUDi vA, vaLLi dEvAnai maNavALA!
technicolor-il engiRir, AgaTTum
color-ilE mUzhgi ezhubvarukku--give him a break!
monochromatic-ilum Or azhaguNDE!
namakku iravi unDu vAnil--
aviDam iravidu, maRavIr!
uRangum nEram...
thOgai mayilukku sOgai En engiRIr, uNmai--
vAgai sUDi vA, vaLLi dEvAnai maNavALA!
technicolor-il engiRir, AgaTTum
color-ilE mUzhgi ezhubvarukku--give him a break!
monochromatic-ilum Or azhaguNDE!
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Idho vandhen Sankara...
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
nArAyaNA!
sUriyanAga ezhundu kATchi tharuginRAn kOla mayilOn!
sUriyanAga ezhundu kATchi tharuginRAn kOla mayilOn!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(169)
முக்தி
தமிழ்நாட்டில் பக்திக்கு புத்துயிர் வந்திருக்கு!
அமிழ்தென ஓதுவோரின் எண்ணிக்கை கூடுதையா!
புத்தாக்க கோயில்களில் கூட்டம் அலை மோதுதையா!
பத்தாறு பூண்டுவரும் பக்தரும் பலருண்டு.
குத்தாட்டம் போட்டுவரும் கூட்டமும் சிலவுண்டு.
மத்தாப்பு கொளுத்தியே மகிழ்வோரும் சிலருண்டு.
சக்தி பெருகுது; பணத்துக்கும் குறைவில்லை - எனவே
முக்தி கிடைத்தாலும் முந்திக்க ஆளில்லை!
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2012.
.
முக்தி
தமிழ்நாட்டில் பக்திக்கு புத்துயிர் வந்திருக்கு!
அமிழ்தென ஓதுவோரின் எண்ணிக்கை கூடுதையா!
புத்தாக்க கோயில்களில் கூட்டம் அலை மோதுதையா!
பத்தாறு பூண்டுவரும் பக்தரும் பலருண்டு.
குத்தாட்டம் போட்டுவரும் கூட்டமும் சிலவுண்டு.
மத்தாப்பு கொளுத்தியே மகிழ்வோரும் சிலருண்டு.
சக்தி பெருகுது; பணத்துக்கும் குறைவில்லை - எனவே
முக்தி கிடைத்தாலும் முந்திக்க ஆளில்லை!
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2012.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
தோகை மயில்மீது தோகையருடன்
வாகைசூடி வரு ஆறுமுகா - நன்றி
அஞ்சுமுகம் தோன்றில்
ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் வேல் தோன்றும்
முருகாவென்றொருகால் அழைத்தால்
எக்காலும் தோன்றும்!
வாகைசூடி வரு ஆறுமுகா - நன்றி
அஞ்சுமுகம் தோன்றில்
ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் வேல் தோன்றும்
முருகாவென்றொருகால் அழைத்தால்
எக்காலும் தோன்றும்!
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
பத்தர்க் கொரு குறைவிலை என்றும்
எத்தர்க் கதுவே வினையாகும்
சித்தர்க் கொரு மருத்தான பெருமாளே
நித்தம் உன் பத்திப் புகழ்பாட அருள்வாயே!
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
பத்தர்க் கொரு குறைவிலை என்றும்
எத்தர்க் கதுவே வினையாகும்
சித்தர்க் கொரு மருத்தான பெருமாளே
நித்தம் உன் பத்திப் புகழ்பாட அருள்வாயே!
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
கதறினாலும் கிட்டாத பெண் தெய்வம்-பச்சிளம் சிசு
'அப்ரீனுக்கு நேர்ந்த துன்பம் ..அம்மா..
கண் கலங்குது நெஞ்சம் பதைக்குது
பிஞ்சு மகள் அடைந்த கொடூரத்தை கேட்டு ..
கதறி கதறி அழும் சிசுவை தீயிர் சுட்டு வாயினால் கடித்த தந்தை ...
பெண்ணாய் பிறந்தது.... பிறந்தது யார் செய்த பாபம் ?
இந்த மண்ணில் வந்தது யார் செய்த குற்றம்?
தாயே ஏன் இந்த வெறி ? குடி வெறி
கண் கலங்குது நெஞ்சம் அழுகுது
பிஞ்சு சிசு அடைந்த துன்பத்தை கேட்டு..
பெண்கள் சுதந்திரம் என ஓலமிடுபவர்கள்
கண் விழித்து விடை கூறவேண்டும் .......
'அப்ரீனுக்கு நேர்ந்த துன்பம் ..அம்மா..
கண் கலங்குது நெஞ்சம் பதைக்குது
பிஞ்சு மகள் அடைந்த கொடூரத்தை கேட்டு ..
கதறி கதறி அழும் சிசுவை தீயிர் சுட்டு வாயினால் கடித்த தந்தை ...
பெண்ணாய் பிறந்தது.... பிறந்தது யார் செய்த பாபம் ?
இந்த மண்ணில் வந்தது யார் செய்த குற்றம்?
தாயே ஏன் இந்த வெறி ? குடி வெறி
கண் கலங்குது நெஞ்சம் அழுகுது
பிஞ்சு சிசு அடைந்த துன்பத்தை கேட்டு..
பெண்கள் சுதந்திரம் என ஓலமிடுபவர்கள்
கண் விழித்து விடை கூறவேண்டும் .......
Last edited by venkatakailasam on 21 Apr 2012, 11:30, edited 2 times in total.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(170)
முருகா!
அருவே! அத்தனுக்கும் குருவே!
திருவே! திகட்டாத உருவே!
கருவே! கருணாகரத் தருவே!
வருவாய் வரம் தருவாய்!
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2012.
.
முருகா!
அருவே! அத்தனுக்கும் குருவே!
திருவே! திகட்டாத உருவே!
கருவே! கருணாகரத் தருவே!
வருவாய் வரம் தருவாய்!
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2012.
.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
kuzhundaiyaik karukkiya thIk kozhundu
.......................................
kObath thI kuzhandaiyaiyum konRadu
anbilAth thandai uNDA?
anbu nandA viLakku--
adu aNaiyumA?
adu thI AgumA, suDumA?
thAi kETkiRAL--
nAm ETRiya viLakkil piRanda
jOthi aduvallavA?
adaip pOTRI magizhAdu
posukkinAyE! un buddiyai suTTerikkavA
alladu unnaiyEyA?
nIdAnE adu?
nAnumdAnE?
ennai viTTAi
adai chADinAi
nAn iRandEn
unakku adanilum koDiyadonRu
uNDenil--
aduvE unaku,
AmAm,
aduvE unakku,
solliviTTEn!
.......................................
kObath thI kuzhandaiyaiyum konRadu
anbilAth thandai uNDA?
anbu nandA viLakku--
adu aNaiyumA?
adu thI AgumA, suDumA?
thAi kETkiRAL--
nAm ETRiya viLakkil piRanda
jOthi aduvallavA?
adaip pOTRI magizhAdu
posukkinAyE! un buddiyai suTTerikkavA
alladu unnaiyEyA?
nIdAnE adu?
nAnumdAnE?
ennai viTTAi
adai chADinAi
nAn iRandEn
unakku adanilum koDiyadonRu
uNDenil--
aduvE unaku,
AmAm,
aduvE unakku,
solliviTTEn!
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
நயமோ நயம !
அன்னத்தின் வண்ணத்தில்
ஆடு மயில் வரக்கண்டு
கன்னத்தில் கை வைத்து
கலங்கினார் CML.
அமெரிக்க வெண் பனி
அன்னத்தை மூடவில்லை
அஞ்சேல்
anemia சோகை இது
தோகையில் பழுதில்லை
நாளை வரும் கோல மயில்.
அரசியார் தேற்றினார்
CML அரசியார் சீலர்V K ஆகியோர்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் !
E-mail போல் விரைவாய்
வண்ணகோலமாய்
வந்த அம் மயில் மீது
இலவச இணைப்பாய் போனஸ் போல்
வந்தனர் பெண் மயிலிருவர்
தம் பதி சமேதராய்
அன்னத்தின் வண்ணத்தில்
ஆடு மயில் வரக்கண்டு
கன்னத்தில் கை வைத்து
கலங்கினார் CML.
அமெரிக்க வெண் பனி
அன்னத்தை மூடவில்லை
அஞ்சேல்
anemia சோகை இது
தோகையில் பழுதில்லை
நாளை வரும் கோல மயில்.
அரசியார் தேற்றினார்
CML அரசியார் சீலர்V K ஆகியோர்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் !
E-mail போல் விரைவாய்
வண்ணகோலமாய்
வந்த அம் மயில் மீது
இலவச இணைப்பாய் போனஸ் போல்
வந்தனர் பெண் மயிலிருவர்
தம் பதி சமேதராய்
Last edited by Ponbhairavi on 21 Apr 2012, 11:41, edited 1 time in total.
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
அரசியார்-
சீற்றத்தில் விடுத்த சாபத்திலும் நல கவிதை நயம !
PB.
வருவாயை வரமாக கேட்கவேண்டும் ?
சீற்றத்தில் விடுத்த சாபத்திலும் நல கவிதை நயம !
PB.
வருவாயை வரமாக கேட்கவேண்டும் ?
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
ஒரு நல்ல கீர்த்தனதுக்கு என்ன criteria என்று யோசித்தேன்.
கிடைத்த விடை:
ராகவிநயம் (elegant raga)
கவிநயம் (poetic beauty)
விநயம் (humility)
நயம்(simplicity)
யம்
கோபுச்சம்( cow's tail)?
கிடைத்த விடை:
ராகவிநயம் (elegant raga)
கவிநயம் (poetic beauty)
விநயம் (humility)
நயம்(simplicity)
யம்
கோபுச்சம்( cow's tail)?
-
sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
வேல்முருகன் வீற்றிருக்கும் வண்ணமயில் தானொன்று
ஆல்பீனோ* வாயிருத்தல் ஆகாதோ? - மால்மருகன்
தெய்வானை வள்ளிக்கு டெக்னிகலர் வாகனம்தான்
ஒய்யாரம் என்பானோ ஓர்ந்து?
* ஆல்பீனோ = Albino
ஆல்பீனோ* வாயிருத்தல் ஆகாதோ? - மால்மருகன்
தெய்வானை வள்ளிக்கு டெக்னிகலர் வாகனம்தான்
ஒய்யாரம் என்பானோ ஓர்ந்து?
* ஆல்பீனோ = Albino
-
venkatakailasam
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
#846
Shri ponbairavi.....
ராகவிநயம்
கவிநயம்
விநயம்
நயம்
யம்
This is like Thyagaraja yoga vaibavam which has a unique structure in pallavi of inverted temple structure :
Thyagaraja yoga vaibhavam
Agaraja yoga vaibhavam
raja yoga vaibhavam
yoga vaibhavam
vaibhavam
bhavam
vam
Another one is Swrnakala vibhavam
Swrnakala vibhavam
Kala vaibhavam
Vaibhavam
Bhavam
vam
Shri ponbairavi.....
ராகவிநயம்
கவிநயம்
விநயம்
நயம்
யம்
This is like Thyagaraja yoga vaibavam which has a unique structure in pallavi of inverted temple structure :
Thyagaraja yoga vaibhavam
Agaraja yoga vaibhavam
raja yoga vaibhavam
yoga vaibhavam
vaibhavam
bhavam
vam
Another one is Swrnakala vibhavam
Swrnakala vibhavam
Kala vaibhavam
Vaibhavam
Bhavam
vam
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
வண்ணமயிலுக்கு வண்ணமீவான் முருகன்
வண்ணம் நீங்குமே முருகன் நீங்கில் - திண்ணமாய்
நெஞ்சில் நீங்காதவன் இருப்பின் வண்ணமலம்
பஞ்சாய் பறந்துவிடும் பார்மிசை.
வண்ணம் = அழகு (முருகு = அழகு hence he is முருகன்)
வண்ணமலம் = மூவாசை (மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை)
வண்ணம் நீங்குமே முருகன் நீங்கில் - திண்ணமாய்
நெஞ்சில் நீங்காதவன் இருப்பின் வண்ணமலம்
பஞ்சாய் பறந்துவிடும் பார்மிசை.
வண்ணம் = அழகு (முருகு = அழகு hence he is முருகன்)
வண்ணமலம் = மூவாசை (மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை)
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
murugu, murugu, anithu kavidaiyilumE azhagu, azhagu 
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
மனம் உருகு = (மன)முருகு =முருகு
= Philosophicaly an abbreviation for = முகுந்தன்+ருத்ரன் +குயவன்(பிரமன்)
= Philosophicaly an abbreviation for = முகுந்தன்+ருத்ரன் +குயவன்(பிரமன்)