KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi:
THANKS.

(89)
அப்பாடி,
'நமது அரும் கவி-அரசி திரும்ப வந்தாச்சு!'
இதுவே இப்போது எங்கெங்கும் பேச்சு.
இவ்வளவு நாள் எப்படியோ ஒருவாறு போச்சு.
நாம் எல்லோரும் சேர்ந்து அடம்பிடித்தால் போச்சு:
'அரசி! தினமும் ஒரு கவிதை தந்தால்தான் ஆச்சு!'


ப்ரத்யக்ஷம் பாலா,
18.03.2011.

.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

She already has enough in stock..
If she starts posting one a day it can last some of our lifetime!

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: KavithaigaL by Rasikas

Post by ganeshkant »

Thanks PB.I regularly read ur poems and keep them coming pl.
Arasi,my special thanks to you.In fact I felt the other way about CML's comments.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

கர்னாடக சங்கீதவிரும்பியும்

கண்ணெதிர் தெரி பாலாவும்

எழுது கவிதை, எழுது கவிதை,

உன்னால் முடியும் தங்கை என் கிறார்கள்

கனம் பொருந்திய அரசியாரோ அன்புக்கட்டளையிடுகிறார்

கற்பனைக்குதிரையை தட்டி எழுப்பினால்

எழுவேனா என்கிறது அது

கணினி எலியை கை பிடித்து அழைத்துப்போனால்

நகர்வேனா என்று முறைக்கிறது

காற்று வாங்கப்போகலாம் கவிதையும்

வாங்கி வரலாம் என்று போனால்

காற்றும் காணோம் கவிதையும் காணோம்

கண்டதெல்லாம் புழுதியும் புகையும்

தும்பும் தூசியும் தான்

வரண்ட மண்ணோ ?

நிலத்தடி நீர் இல்லையோ?

என்று நினைக்கும்போது

தாடிப்புலவன் கூற்று நினைவில் வந்தது-

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது

பட்ட மரம் துளிர்க்கும் காய்ந்த கிணறு சுரக்கும்

என்று மீண்டும் முயற்சிக்கிறேன்

கவிதை மழை இல்லாவிடிலும்

கவிதைத்துளியாவது தர
Last edited by PUNARVASU on 19 Mar 2011, 06:59, edited 1 time in total.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Little drops of water are promising a mighty ocean, sis! Keep on!

kai vaittAlum nIr kANA vaigaiyilum ('vai kai' to feel the water)
vaLam uNDu--maNARkENiyilE nIr surakkum--nIr pArum,
ezhuda ezhuda ezhuttu, ettanai pEr Ukkam, um ettanaikku!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

'எத்தனை பேர் ஊக்கம் உம் எத்தனைக்கு!'
Wow!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

ஆஹா! புதுப்புனல் சுரக்கிறது
மண் மணம் கவிகிறது
இதயம் வரை நனைகிறது
புனர்வசுவின் புனர் ஜன்மம்!

ஊற்று ஆறாகட்டும்....

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover:
ஆஹா! துடிப்பு மிக்க சொற்கட்டுகள்!
தாங்களும் தரவேண்டும் தினமும் ஒரு கவிதை.
.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

Arasi, PB, CML-For fear of turning into a 'MAS', I am keeping quiet. :)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

'ganam' porundiya arasiyAr kURuvadu:
Am, saTRu iLaikka vENDumdAn...
adODu...
kaLimaN maNDaiyAnAlum,
adu ganam aRiyAdirukka vENDum...

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

The Joy of MAS

MAS
Me allAda Self
maTRavar arumai sollum
mikka Ananda state

MAS
muzhumai aDaiyum Sangati
madiuDaiyOr anubavikkum sugam
sat sangam...

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(90)
திட்டம்

ஏடுகள் பற்பல கற்போம்.
தேடிக் கலைபல ஏற்போம்.
பாடுபட்டுத் தினம் நிற்போம்.
கூடிவரும் புகழ் சேர்ப்போம்!


ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.



tiTTam
EDukaL paRpala kaRpOm.
tEDik kalaipala ERpOm.
pADupaTTut tinam niRpOm.
kUDivarum pugazh shErppOm!
Pratyaksham Bala.
.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(91)
குறி

மனம் உறுதி கொள்வோம்.
சினம் மறுத்துச் சிறப்போம்.
தனம் தேடிக் குவிப்போம்.
தினம் மகிழ்ந்து திளைப்போம்.


ப்ரத்யக்ஷம் பாலா,
01.07.2003.


kuRi
manam uRudi kolvOm.
shinam maRuttuc chirappOm.
dhanam tEdik kuvippOm.
dhinam magizhndu tiLaippOm.
Pratyaksham Bala.
.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Nice poem by VGV
(from) http://www.rasikas.org/forums/viewtopic. ... 27#p191927

sollattuDikkinREn
solla nA varavillai
nallOr vAzhnda nADidu
nallOr azhum nEramidu

anRu nI sonnadai meippikka
inRu nEram vandadu
unRannaik kANOm
uRangukinRAyO pArkkaDalil?

vgovindan

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(92)
விவசாயி கூற்று

"கானம் பயின்றிருப்பேன்;

. . . . . . . . . களம் தழை அளித்திருப்பேன்.
வானம் பார்த்திருப்பேன்;

. . . . . . . . . வரும் மழை காத்திருப்பேன்.
மோனம் பயின்றிருப்பேன்;

. . . . . . . . . மூர்க்கம் தவிர்த்திருப்பேன்.
தானம் கொடுத்திருப்பேன்;

. . . . . . . . . தனம் தழைத்தோடிவரும்!"

ப்ரத்யக்ஷம் பாலா,
08.11.2006.



vivashAyi kUTRu
"gAnam payinDRiruppEn;
kaLam tazhai aLittiruppEn.
vAnam pArttiruppen;
varum mazhai kAttiruppEn.
mOnam payinDRiruppEn;
mUrkkam tavirttiruppEn.
dAnam koDuttiruppEn;
dhanam tazhaittODivarum!
Pratyaksham Bala.
.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(93)
சிறு விவசாயியின் குறிப்பு

கட்டுப் பெட்டி வேடம் போட்டு
குட்டக் குட்டக் குனிந்திருந்து
கட்டம் போட்டுக் காய் நகர்த்தி
சட்டம் பேசிச் சண்டை யிட்டேன்!

கோட்டை விட்ட நிலம் மீட்டு
குட்டை வெட்டிக் குளமும் வெட்டி
மேட்டை வெட்டிக் களம் திருத்தி
ஆட்டைக் கட்டி பட்டி போட்டேன்!

மோட்டார் செட்டு வாங்கிப் போட்டு
முட்ட முட்டத் தண்ணீர் பாய்ச்சி
மாட்டைப் பூட்டி ஏரை ஓட்டி
கட்டைச் சம்பா நாத்து நட்டேன்!

பொட்டு பூச்சி மருந்தடித்து
திட்டப்படி விளைந்த பொன்னை
மூட்டை கட்டி விற்றுவந்தேன்;
கட்டு கட்டா நோட்டு கண்டேன்!

ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2006.

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(94)
துடிப்பு

ஆடித் திரிந்திருக்க வேண்டும்;
பாடிச் சிரித்திருக்க வேண்டும்.
ஓடிக் களித்திருக்க வேண்டும்;
கூடித் திளைத்திருக்க வேண்டும்.

. . . . . . . . . நீடிக்குமா இந்த ஆசை?
. . . . . . . . . சூடிக் கொடுத்திட்ட பூவும்
. . . . . . . . . வாடிவிடும்; இது நியதி!

ப்ரத்யக்ஷம் பாலா,
01.06.2006.


tuDippu
ADit tirindirukka vEnDum;
pADic cirittirukka vEnDum.
ODik kaLittirukka vEnDum;
kUDit tiLaittirukka vEnDum.
nIdikkumA inda Ashai?
cUDik koDuttiTTa pUvum
vADiviDum; idu niyati!
Pratyaksham Bala.
.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

SUDikkoDutta SuDar pAvaiyO tol pAvai!
VADumun avaL aNindavanukkaLittAL mAlai--
avanum kaLittAn!

nAmum avanaip pOl ADit tirivOm
pAdic chirittiDuvOm, ODik kaLippOm--
'muDiyum' varai, avaLaip pOl
vADA malar muDindu magizhndiruppOm,
Am, yAm tol pAvaiyarumtAn :)

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

நான் அல்லாத தன்னை மலராக்கி
நாதன் தாள்களில் - மார்பிலல்ல -
நாளும் சூட்டி - மற்றெதும் பணி துறந்து
நாவினால் அவன் புகழொன்றே பாடிட
நான் ஆசைகொண்டேன் தோழி.


(நான் அல்லாத தான் - அரசியாரின் 'Me allAda Self')

பி.கு. அவன் மார்பு மற்றொருத்திக்குச் சொந்தம்.

nAn allAda tannai malarAkki
nAdan tALkaLil - mArbilalla -
nALum cUTTi - maTredum paNi tuRandu
nAvinAl avan pugazhonRE pADiDa
nAn AsaikoNDEn tOzhi.
Last edited by vgovindan on 24 Mar 2011, 08:11, edited 1 time in total.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

gOvindarE,


avanait toTTE
anaittu sondamum!
avaninRip piRarellAm engE?

anda avanum avaLum aduvum Ana
adan sondamE engum--
avaLenRum avanenRum nAm
nammai aDaiyALam kATTik koNDAlum...

evaLO oruvaL avan talaiyilum
maTRavaL mArbilum
innorutti pakkattilum
pinnorutti pAdamadanilum
tangiyirundAlum enna?

avan viSva rUpan--
avanil ellAm aDakkam
avaniyil uLLa anaivarukkum
avanil tangum iDamuNDE!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

மொட்டெல்லாம் மலர்வதில்லை
மலரெல்லாம் காய்ப்பதில்லை
காயெல்லாம் பழுப்பதில்லை
பழமெல்லாம் கிளி கொத்துவதில்லை

செடியில் மலர்ந்த மலர்களிலே
சென்றொன்று பாவை கூந்தலிலும்
பிறிதொன்று பிணத்தின் மார்பினிலும்
மற்றொன்று மாலவன் திருவடியிலும்
இன்னொன்றுதிர்ந்து நிலத்திலும் துவள்வதேன்?
இந்த மலர்களுக்கும் கோள் வலிமையுண்டோ?
'தன் கையே தனக்குதவும்' என்றான் அன்றொருவன்;
கையன்றி, கோளை நம்பும் பேதமையை என்னென்பேன்?

மொட்டும், மலரும், காயும், கனியும்
தனதென்று மரம் நினைப்பதில்லை
[*]'பிறருக்குதவவே மரங்கள் காய்க்கும்' என
மரத்திற்கு யார் சொல்லிக் கொடுத்தது?

மனிதன் இயற்கையின் படைப்பென்றால்
இயற்கையினின்றும் மனிதன் விலகியதேன்?
மனிதனின் செயல்களினால் இயற்கை சீறினால்
மனிதனின் குற்றமா? இயற்கையின் குற்றமா?

moTTellAm malarvadillai
malarellAm kAippadillai
kAyellAm pazhuppadillai
pazhamellAm kiLi kottuvadillai

ceDiyil malarnda malargaLilE
cenRonRu pAvai kUndalilum
piRidonRu piNattin mArbinilum
maTronRu mAlavan tiruvaDiyilum
innonRudirndu nilattilum tuvaLvadEn?
inda malargaLukkum kOL valimaiyuNDO?
'tan kaiyE tanakkudavum' enRAn anRoruvan
kaiyanRi kOLai nambum pEdamaiyai ennenbEn?

moTTum, malarum, kAyum, kaniyum
tanadenRu maram ninaippadillai
[*]piRarukkudavavE marangaL kAikkum' ena
marattiRku yAr collikkoDuttadu?

manidan iyaRkaiyin paDaippenRAl
iyaRkaiyininRum manidan vilagiyadEn?
manidanin ceyalgaLinAl iyaRkai cIRinAl
manidanin kuTramA? iyaRkaiyin kuTramA?

[*]parOpakArthAya phalanti vRkshaH
Last edited by vgovindan on 24 Mar 2011, 17:38, edited 2 times in total.

VK RAMAN
Posts: 5009
Joined: 03 Feb 2010, 00:29

Re: KavithaigaL by Rasikas

Post by VK RAMAN »

gOvindarE: amakkaLam. Thanks for sharing with us.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

VG, excellent. PB's thread is bringing out more and more kavithaigaL.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

vgovindan:
நன்றி.
சிந்திக்க வைக்கும் வரிகள்.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(95)
வருக! மீண்டும் வருக!

காட்சி 1:-
தானம் பெரிதென்று தனமனைத்தும் இறைத்தேன்.
பணம் பறந்ததும் பந்துக்கள் பறந்தனர்!
செல்வம் மறைந்ததும் சுற்றமும் மறைந்தது!
தர்மம் தவிக்கவிடத் தனியே தத்தளித்தேன்.

காட்சி 2:-
உயிர் கொடுப்பேன் என்று கூறி ஓடி ஒளிந்தோரே!
துயர்வந்து துடித்தபோது தயக்கமின்றித் தவிர்த்தோரே!
பணம் உண்டு இப்போது பயமின்றி வாருங்கள்;
தனம் உண்டு இப்போது தயங்கத் தேவையில்லை!


ப்ரத்யக்ஷம் பாலா,
18.10.2007.



varuga! mINDum varuga!
kATci 1:-
dAnam peridenDRu dhanamanaittum iRaittEn.
paNam paRandadum bandukkaL paRandanar!
shelvam maRaindadum shuTRamum maRaindadu!
dharmam thavikkaiDat taniyE tattaLittEn.
kATci 2:-
uyir koDuppEn enDRu kURi ODi oLindOrE!
tuyarvandu tuDittapOdu tayakkaminDRit tavirttOrE!
paNam uNDu ippOdu bhayaminDRi vArungaL;
dhanam uNDu ippOdu tayangat tEvaiyillai!
Pratyaksham Bala.
.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

பணமுடையோரை பந்துக்கள் நாடுவர்
பணமுடை உடையோரை விட்டு பந்துக்கள் ஓடுவர்
சினமடையாரை நண்பர்கள் நாடுவர்
சினமுடையோரை விட்டு நண்பர்கள் ஓடுவர்
மனையுடையாரை மக்கள் போற்றுவர்
மனையடியாரை மக்கள் தூற்றுவர்

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

paNa mUDai* uDaiyOraik kaLLar vazhi maRippar
kaLLattanam uDaiyOr ovvi vandu kavvuvar--
kavidai solvEnO? kAlam nEram pArAdu
kadai aDippEnO--kavidai enum peyaril ;)

* mUTTai

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

kaLLap-paNa mUTTai uDaiyOrukku
eLLattanaiyum kavaliyillai inRu
Mauritiusum Switzerlandum
mAlaiyiTTu varavERkum

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(96)
அன்னை

பொட்டிழந்த தாய்முகம்

. . . . . . . . . போய்விட்ட பத்தாம்நாள்
சட்டமிட்ட அட்டையில்

. . . . . . . . . பொட்டிட்டுச் சிரித்தது.

ப்ரத்யக்ஷம் பாலா,
04.04.2003.

.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Beautiful idea!
When we cross the void we get reunited!
There is no need to grieve for the departed...

veeyens3
Posts: 424
Joined: 09 May 2010, 23:19

Re: KavithaigaL by Rasikas

Post by veeyens3 »

#379 Bagavath Gita chapter 2 condenced to petite tamil stanza !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Sri veeyens3,
Namaskarams.

cmlover:
Thanks!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(97)
தாயின் உள்ளம்

அருமைப் பிள்ளை விரும்பிய தெல்லாம்
அள்ளி அளித்துச் செல்லம் கொடுத்து
பள்ளி சேர்த்துப் பாடம் படித்தே
இளமை நாட்களில் இனியவை புகட்டி
வளரும் வேகம் கண்டு மகிழ்ந்து
பெரியவனாகி நிலைத்த பின்னும்
பெரிதும் உவக்கும் தாயின் உளமே!


ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2007.

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(98)
வாழ்க்கை வேடம் -1

'மரத்துக்கு எத்தனை நல்லெண்ணம்!' என்று கூறி
மரத்தைச் சூறையாடி காய் பறிப்பார், கனி பறிப்பார்.
கிளை ஒடித்து வீட்டுக்கு வேலி அமைத்திடுவார்;
இலை பறித்துக் குவித்து மாட்டுக்கு அளித்திடுவார்!


ப்ரத்யக்ஷம் பாலா,
24.03.2011.



vAzhkkai vEDam - 1
'marattukku ettanai nalleNNam!' enDRu kURi
marattaic cooRaiyADi kAi paRippAr, kani paRippAr.
kiLai oDittu vITTukku vEli amaittiDuvAr;
ilai paRittuk kuvittu mATTukku aLittiDuvAr!
Pratyaksham Bala.
...10

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(99)
வெற்றி

வெல்லத் துடிக்குதா நெஞ்சம்?
கொல்லத் துடிக்குதா கைகள்?
வல்லவனாய் இருந்திடினும்
மெல்ல அவைற்றை நீ அடக்கு.

நல்லோர் துணையை நாடு;
நல்லதை மட்டுமே தேடு.
எல்லை இல்லா பல வெற்றி
எல்லாம் கைவரக் கூடும்!


ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2006.



veTRi
vellat tuDikkudA nenjam?
kollat tuDikkudA kaikaL?
vallavanAi irundiDinum
mella avaTRai nI aDakku.
nallOr tuNaiyai nADu;
nalladai maTTumE tEDu.
ellai illA pala veTRi
ellAm kaivarak kUDum!
Pratyaksham Bala.
...9

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: KavithaigaL by Rasikas

Post by ganeshkant »

Yesterday I had been to my relative’s house.Their neighbor works for a hospital in Tambaram and she wanted some songs to be sung as prayer songs on different deities each day.I wrote 3 songs on Siva,Saraswathi and Hanuman and tuned them,all within approx.30 mins and teach(?)them also.

Pl.forgive me for this.Because the condition was the lyrics and tune should be simple which would be sung by all the staff.

The first song below.I tuned it based on Mohanam in Misra-capu.This tune will have IR’s influence.


ThAyum nEye thandhaiyum nEye MahAdevanE
Ammai appanAi Anavan nEye Adhi kArananE

mahEsanE papa vinAsanE mahimai porundhiya
mahaththuvanE (ThAyum..)

Etrath thAzhvu pArkAmal ellorkum aruLbavanE
iruLil irundhu emmai kAkka
jothiyAi vandhavanE

EngaL manadhu Ettram petrida
thangAbharanam pOl jolithida
vandhu ninravanE
vazhvu thandavanE ( ThAyum…)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Yes I can see the IR influence.
Pl post your audio too..

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(100)
ஒளிமிக்க எதிர்காலம்

எத்தனையோ உள நல்வழிகள்
. . . . . . . . . பொன்னான நற்பெயர் கொள்ள.
உத்திகள் பற்பல உண்டு;

. . . . . . . . . உணர்ந்து செயல்பட வேண்டும்.
நித்தமும் சிந்தித்தல் நன்று;

. . . . . . . . . நீடித்த நம்பிக்கை வேண்டும்.
எத்திசையும் நம் புகழ் மணக்க -- நாம்

. . . . . . . . . ஏற்றம் அடைந்திடுவோம்!

ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.


oLimikka edirkAlam
ettanaiyo uLa nalvazhigaL
ponnAna naRpeyar koLLa.
uttigaL paRpala uNdu;
uNarndu sheyalpaDa vEnDum.
nittamum shindittal nanDRu;
nIDitta nambikkai vEnDum.
ettishaiyum nam pugazh maNakka -- nAm
ETRam aDaindiDuvOm!
Pratyaksham Bala.
...8

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

I have translated into tamil 50 famous French poems and published it as a book. The plus point is the audio recording.Interested in listening to authentic french poetic diction? Pl visit :frenchliterature.angelfire.com

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Very nice Ponbhairavi. Started sampling some of them. Very beautiful translations replete with nice ideas in 'authentic french diction'. Your narration is good and it will help to be able to read them in print to digest and ruminate. If possible do post some of the verses here...

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

thanks cml. the whole book in written form (french and tamil) can be read in the site and with the text in front of your eyes you can enjoy the audio version.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Dear ganeshkant
I have attempted your lyrics (amateurish) in my style (IR like :D)
http://www.mediafire.com/?cbsmlagn7a79vuw
Check it out! Could not adapt to mohanam..
Await your audio...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Thanks Ponbhairavi! Located the text link
http://media.angelfire.lycos.com/2734881/1439988.pdf

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: KavithaigaL by Rasikas

Post by ganeshkant »

CML,

I don't have the facilities to record and up load.Can U kindly give me ur phone no.so that I shall sing it for U.Then U can either record as it is or U can sing and up load.

Ur tuning is also good.

Thanks.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(101)
சலிப்பு

இச்சையுடன் பச்சைக்கிளி
கொச்சைமொழி பேசிடும்;
வட்டமிடும் துட்டனொன்று
எட்டவரப் பறந்திடும் ...

அஞ்சிடாத குஞ்சு ஒன்று
கொஞ்சிக்கொஞ்சி சுற்றிடும்;
சத்தமிட்டுக் கத்திக்கொண்டு
அத்தனையும் கொத்திடும் ...


. . . . . . . . . இத்தனையே எத்தனை நாள்
. . . . . . . . . பித்தனாகப் பார்த்திருப்பேன்?
. . . . . . . . . மாறியிடம் போகவேண்டும்;
. . . . . . . . . வேறுபல காணவேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
07.04.2003.



shalippu
iccaiyuDan paccaikkiLi
koccaimozhi pEshiDum;
vaTTamiDum tuTTanonDRu
eTTaparap paRandiDum ...

anjiData kunju onDRu
konjikkonji shuTRiDum;
shattamiTTuk kattikkonDu
attanaiyum kottiDum ...

ittanaiyE ettanai nAL
pittanAgap pArttiruppEn?
mARiyiDam pOgavEnDum;
vERupala kANavEnDum.
Pratyaksham Bala.
...7

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: KavithaigaL by Rasikas

Post by ganeshkant »

CML,
Pl.listen to my tuning and comment,
http://www.mediafire.com/?dtnk5rz7or9oy68

VK RAMAN
Posts: 5009
Joined: 03 Feb 2010, 00:29

Re: KavithaigaL by Rasikas

Post by VK RAMAN »

Thayum niyE - nice tuning. I like to hear more of the sruti merging with your voice.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

well donE ganeshkant
Beautifully executed. You have a nice pleasing gamakam-prone voice.
My only comment is for you to slow down and not rush the lyrics.
The rhythm and the pace are just right.
And though short I liked your initial aalaapana...
Thanks

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

ganeshkant:
Shabash! :clap:

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: KavithaigaL by Rasikas

Post by ganeshkant »

CML,PB,VKR

Thanks for ur support.

VKR,I didn't use any sruthi and just sang it.My neighbor Mr.Aksar Shaik who is a software engr.helped me to up load this.We enjoyed yesterday's India vs Pak.match and along with did this recording also.

Post Reply