Aanmeekam...

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Aanmeekam...

Post by venkatakailasam »

கஜ + அஜ + கோ கர்ணம் .கிருபானந்த வாரியார்

கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல் பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள். அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
அஜகர்ணம் : ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
கோகர்ணம் : பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
--- கிருபானந்த வாரியார்
from net...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

லிங்கம்

ஏன் லிங்க வடிவம் ?.
வடிவற்ற நிலையிலிருந்து சக்தி ஒரு வடிவெடுக்கும்போது , அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான் . அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் தியான லிங்கம் !
தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்படி ?
ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை; பிராணப் பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன . ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து , பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை . உயிர் சக்தி கொண்டு நேரிடையாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை . தியான லிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது . அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது . நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்...தியான லிங்கம் யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு .
தியான லிங்கம்.... சில சிறப்புத் தகவல்கள் !
தியான லிங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்குவதற்காக , நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தம்பத்தில் இந்து , இஸ்லாம் , கிறிஸ்துவம் , ஜைனம் , புத்தம் , தாயிஸம் போன்ற உலகின் முக்கியமான எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .
மூன்று உயரமான படிகளில் ஏறியதும் , ' பரிக்கிரமா ' என்னும் திறந்தவெளிப் பாதை . இருபுறமும் நீள் மண்டபங்கள் .உடனடியாக கவனத்தைக் கவர்வது , யோகக் கலையின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பதஞ்சலியின் அற்புத வடிவம் . அவருக்கு நேரெதிரில் வனஸ்ரீ என்னும் பெண் தெய்வத்தின் வடிவம் . ஒரு பொன் இலை வடிவத்தில் , வனஸ்ரீ அன்பையும் , செல்வத்தையும் குறிக்கிறாள் . தவிர கண்ணப்பர் , மெய்ப்பொருள் நாயனார் , ஷிவயோகி , சதாசிவ பிரம்மானந்தா , அக்கா மகாதேவி , பூசலார் போன்ற தெய்வப் பிறவிகளின் சிற்ப வடிவங்கள் . எங்கும் சக்தி நிலையை விளக்கும் சர்ப்ப வடிவங்கள் .
இவற்றைக் கடந்ததும் , பிரமிக்க வைக்கும் வட்ட வடிவக் கருவறை . மையத்தில் கம்பீர அழகுடன் பரவசப்படுத்தும் தியான லிங்கம் . 33 அடி உயர வட்ட வடிவமான அபாரமான கருவறையில் கான்க்ரீட் , இரும்பு போன்ற பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன . செங்கல்லும் , மண்ணும் , பாறையும் ,இயற்கையான பிணைப்புப் பொருட்களும் ம்ட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன .
இந்தக் கருவறைக் கூடத்தின் சுற்று வெளியில் , லிங்கத்தை நோக்கியபடி 28 தியானப் பிறைகள் அமைக்கப்பட்டுள்ளன .
தியான லிங்கம் அடர்த்தியான கருங்கல் கொண்டு அமைக்கப் பெற்றது . தியான லிங்கத்தின் உயரம் 13 அடி , 9 அங்குலம் .
ஆவுடையார் என்று சொல்லப்படும் அதன் பீடம் , சுருண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது . லிங்கத்தைவிட 30 சதவீதம் அடர்த்தி குறைவான வெண்பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது அது .
ஆவுடையார் சர்ப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் , 3 அடி 3 அங்குலம் . மொத்த நீளம் 13 அடி , 9 அங்குலம் .
தியான லிங்கத்தில் ஏழு சக்கரங்களின் சக்தி நிலைகளில் ஏழு பித்தளை வ்ளையங்கள் . ஆவுடையார் சர்ப்பத்துக்கு ஏழு சுருள்கள் . தியான லிங்கத்தைச் சுற்றிலும் ஜல சீமை .
வட்டக் கருவறையில் மைய உச்சியில் , லிங்க வடிவில் தொங்கவிடப்பட்டு இருக்கும் பித்தளை அமைப்பு நேரடியாகச் சூரியக் கதிர்கள் நுழைவதைத் தடுத்து , கருவறைக்கூடத்தை எப்போதும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது .
லிங்கத்தின் உச்சியில் துளித் துளியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும் . ஒலி , வெளிச்சம் , விளையாடும் எண்ணெய் விளக்குகள் , உள் வரை ஊடுருவும் அமைதி எல்லாமாகச் சேர்ந்து தியான லிங்கத்தின் அண்மையில் இருக்கையில் , விவரிக்க முடியாததொரு தெய்வீக உணர்வை உள் செலித்துகின்றன
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 18-04-2007 )

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?

விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன.....

மேலும் படிக்க : http://www.dinakaran.com/Aanmeegam_Deta ... 3169&cat=3

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் "அதமன்".
தான் இறந்த பிறகு தனக்கு கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் "மத்திமன்"
தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"

கருமம் செய்ய யாருமில்லை
என கதராதே மனமே...
ஊழ் வினையையும் செய்யும்
வினையையும் இப்பிறவியில்
கழித்த பின் கருமம் செய்ய
மற்றவர் எதற்கு?
ஐயன் திருவடிகளுண்டு
வேங்கடவன் நான்
பற்றி கொள்ள
அவன் அருளுண்டு
தெருளமுண்டு
மருள வேண்டாம் மனமே!!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

மதுரை மீனாட்சி குங்குமம் ...

Image

மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்...

A share from Malathi Rajendran...

Meenakshime moothem dhehime(Ambal song2),Ragam-Gamagakriya...

Listen to Santhanam..

http://www.youtube.com/watch?v=iJSLLHLlHnc

Pratyaksham Bala
Posts: 4179
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Read about சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர் (Charles W. Leadbeater) :-
http://en.wikipedia.org/wiki/Charles_Webster_Leadbeater

thanjavooran
Posts: 3025
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை

தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார். அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.

இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.


தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.

மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்துகொள்ளலாம். அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.

நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.


ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது. இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.

உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.

சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.

சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.

நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிபுங்கவர்கள் தமது தவவலிமையினால் கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.

-- உளவியல் நிபுணர்

Pratyaksham Bala
Posts: 4179
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

திரு எமோதோ:-
http://en.wikipedia.org/wiki/Masaru_Emoto

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

18 HILLS ASSOCIATED WITH SABARIMALA
1.Ponambalam medu
2.Kundall mamala
3.Sundara mamala
4.Nagranezum mala
5.Ingiparakota
6.Karinira mamala
7.Mayiladum mamala
8.Chittambalamala
9.Sripadam mala
10.Pudhusheri mamala
11.Madangga mala
12.Kalkimaleshwara mamala
13.Nelakkal shivamala
14.Thalapara mala
15.Devar mala
16.Kalakatti mala
17.Neelimala
18.Sabariponnmala Sabarimala

Swamiye sharanam ayyappa

thanjavooran
Posts: 3025
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam... Dharbam

Post by thanjavooran »

AN ARTICLE BY TRS IYENGAR
This article is on one of the practices widely used by Indian Brahmins all over using a Holy Grass named Dharbham or Dharbai
In all functions, auspicious or inauspicious, a performing person needs to wear a ring made of this Dharbham. But many have lost the reason of why it is to be used in the first place.
What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner.
A Doctor named Sadhashiv Rao, once visited my home. When the topic turned to many subjects, I needed to tell him about the Holy Grass named Dharbham. When I told him about the usage and the values, he could not just believe my words.
So, he took out a bunch of the Dharbham from me, went straight to the clinic to take an x-ray of his palm, by covering his hand with the Dharbham. To his utter surprise, he found that the grass absorbed about 60% of the radiation!
When the so powerful X-ray radiation can be absorbed by the Holy Grass, why can it not absorb the ill radiations spread over the atmosphere?
While chanting and reciting some Vedic phrases and verses, one needs to wear a ring made of Dharbham on his right hand ring finger.
The count of leaves depends upon the ceremony that is held viz.: for some ceremonies related to death only Single leafed Dharbham is used; for Auspicious and daily routine a ring made of two leaves is used; for inauspicious but not death related functions, (i.e. Amavasya Tharppanam, Pithru Pooja etc) a three leaf Dharbham ring is used.
And for the Temple Prayer and Pooja, a Four-leaf Dharbham ring is used.
Also, when a fire ritual known as Agni Santana is performed, these Dharbham are spread all the four sides of the Agni Kundam. Also, during the Eclipse time, these Dharbham are used to cover all food items to protect them from the harmful ultra violet radiation.
Whenever any function is held, firstly they perform a site-cleansing act known as “Sudhhi Punyaahavachanam”. While reciting the selective verses, they hold the Dharbham bunch in their hand and placing the tip point of it over the vessel containing water.
Thus the recited vibration values are absorbed by water in the vessel through the Dharbham.
They found that the Holy Grass known as Dharbham has the highest value in conducting the phonetic vibrations through its tip.
Later, they sprinkle the Holy water at every nook and corner of the place, where the ceremony or function is held.
A Dharbham without the tip is considered of no value, as the conductor-type value is lost in it.
My father, Late Shri Ramabathrachariar of Mukkur, fondly called by everyone as Sriraman, has given me the immense values of Dharbham and its usage. With Sanskrit phonetic sound and vibration, using the Dharbham increases its value.
The usage varies according to the functions. It is really a marvel, that in those days of Vedic Era, the Sages & Saints of Hindu land used to control the Magnetic path disturbances, just by simply using this Dharbham!
Apart from the above, Dharbham cannot be planted and grown everywhere.
It only grows naturally at selective places and available almost in every state in India. Some learned scholars name it after Saint Vishwaamitra - hence Dharbham is known and called as Vishwaamitra.
If it is kept for a longer time, say for more than six months, then it loses it value and the power of absorbing the radiation or magnetic path control values.
Dharbham cannot just be plucked straight or cut on any day; There is a specific Slokha that is to be recited before cutting it; That too it can be cut only on the day next to Full Moon - known as Krishna Paksha Pradamai.
A Dharbham without its tip portion is not to be used for making a Ring like item known as "Pavithram".

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ராம நாமம் நாட்டை காக்கும் சக்தி..

ராமபிரானின் வில்லைக் கண்டு நடுங்காதவர்களே உலகில் கிடையாது. ராமபாணம் தப்பாது என்பார்கள். ஆனால், ஒரே ஒருவன் மட்டும் அதைக் கண்டு பயப்படவில்லை. யார் அவன்?

இலங்கை செல்வதற்காக சேதுவில் பாலம் கட்ட ஏற்படாயிற்று. கடலோ பெரும் கொந்தளிப்புடன் இருந்தது. சமுத்திரராஜா! ஒரு நல்ல காரியத்துக்காக இலங்கை செல்கிறோம். அமைதியாக இரு! என்று ராமன் சொல்லிப்பார்த்தார். அவனோ, அடங்குவதாக இல்லை. கோபத்துடன் ராமபிரான், தன் பாணத்தை எடுத்து விட்டார். உடனே சமுத்திரராஜன் வெளியே வந்தான். சாதாரணமாக அல்ல! கைதட்டிக்கொண்டே, எக்காளமான சிரிப்புடன்! ராமனுக்கு ரொம்ப ஆச்சரியம்!

என் வில்லின் பலம் தெரியாமல், மமதையில் அட்டகாசமாகவா சிரிக்கிறாய்! இது கனல் கொழுந்து. உன்மேல் பட்டால் தீய்ந்து போவாய். சொட்டு தண்ணீர் இல்லாமல் செய்து விடுவேன், என எச்சரித்தார்.

அப்போதும் சமுத்திரராஜன் கலங்கவில்லை. ராமா! நீ யாரிடம் என்ன பேசுகிறாய். இந்த பூலோகத்தை ஆளும் பரதன், உனது பாதுகையைப் பெற்று வந்தான் அல்லவா! அதற்கு அவன் தினமும் அபிஷேகம் செய்கிறான். அந்த நீர் தமஸா நதியில் விழுந்து, அது சரயூ நதியில் கலந்து என்னுள் வந்து ஐக்கியமாகிறது. அந்த தீர்த்தத்தைக் குடித்து குடித்து என் உடல் வஜ்ரம் பாய்ந்து வலிமையாக இருக்கிறது. என்னை, உன்னால் கொன்று விட முடியுமா என்ன! என்றான்...

ராமபாணத்தை விட விசேஷமானது ராமபாதுகை.ராமபாதுகையை விட விசேஷமானது ராம நாமம்.. ராம நாமம் சொல்ல சொல்ல நமது நாட்டை எந்த சக்தியும் எதுவும் செய்து விட முடியாது...

ராம ராம ஜெய சீதா ராம..

A share from a friend..

thanjavooran
Posts: 3025
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

முக சுவடியிலிருந்து பகிர்ந்து கொண்ட தகவல்

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரி...ன் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.

உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.

உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.

மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.

அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா?

டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.

ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.

சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.

இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.

அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.

மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.

இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு,மானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே!

இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!”

இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.

அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.

ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.

அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.

இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

thanjavooran...nice...to learn..

காசியும் வியாசரும்!

காசிக்குச் சென்றால் கர்ம வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. 'இது எவ்வளவு தூரம் உண்மை?’ என்று சோதிக்க நினைத்தார் வியாசர். அதற்காக சீடர்களுடன் காசிக்குப் புறப்பட்டார். ஆனால், அங்கு அவர்களுக்கு ஒரு வாரமாக உணவு கிடைக்கவில்லை. ஒருநாள் ஓர் இல்லத்தின் முன் நின்று குரல்கொடுத்தார் வியாசர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப் படவில்லை. பொறுமை இழந்த வியாசர், காசி மக்களைச் சபிக்க முற்பட்டார். அப்போது இல்லத்தின் கதவு திறந்தது. வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட பெண்மணி, ''நிறுத்துங்கள்'' என்றாள். சாபமிடுவதற்காகத் தூக்கிய வியாசரின் கைஅப்படியே நின்றுவிட்டது. பின்னர், அந்தப் பெண்மணி வியாசரைப் பார்த்துப் புன்னகைத்ததும்தான் அவரால் கையைக் கீழே இறக்க முடிந்தது.

வியாசர் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து எல்லோருக்கும் இலை போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர், ''எல்லோரும் சாப்பிடுங்கள்'' என்றாள். வியாசர் திகைத்தார். ''இலையில் எதையும் பரிமாறவில்லையே!'' என்று கேட்டார். தொடர்ந்து ஏதோ சொல்ல அவர் வாயைத் திறப்பதற்குள், இலை முழுதும் விதவிதமான உணவு வகைகள் நிறைந்திருந்தன. வியப்பு மேலிட அனைவரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நிமிர்ந்தால், சாக்ஷ£த் அன்னபூரணியே காட்சியளித்து மறைந்தாள்.
இந்தத் திருவிளையாடல் எதற்காக எனும் கேள்வி வியாசரை துளைத்தெடுத்தது. இதற்கான பதிலை சிவனாரைத் தரிசித்து கேட்டார் வியாசர். ''உங்களில் எவருமே சிரத்தையாக காசிக்கு வரவில்லை. இந்த ஊரைச் சோதிக்க வந்தீர்கள். அதனால் ஏற்பட்டதுதான் இந்த ஒரு வாரப் பட்டினி'' என்றார் சிவபெருமான். உண்மைதான்! நோக்கங்கள் உயர்வாக இருந்தால்தான், அனுபவமும் முறையாக இருக்கும்.

thanjavooran
Posts: 3025
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend's mail

T H E E R T H A M
We often visit temples and after worshipping the Lord and offering our prayers, we are given tiirtham or holy water and prasaad (food offered to the Lord). After having that holy water and prasaad with great reverence & devotion we feel great happiness. This "tiirtham" is the holy water used for the Abhisheka(bath) of the Idol of the temple. After doing the abhishekam that particular water becomes "tiirtham".

In Srimad Bhaagavatham, there is a story of Lord Mahavishnu, in his avatar of vamana. When he started measuring the BrahmaanDa (the universe), his toe reached the Brahmaloka (the abode of Brahma). On seeing this toe of the Lord of Lords, the creator of the universe, Brahma, took water and poured it on the Lord’s feet for washing it. This water that flows from the Brahmaloka became the holy river Ganges. The Bhagavatam also talks about Bhageeratha who did a rigorous penance for the sake of salvation and peace of his forefathers. Bhageeratha did a 1000 year penance and brought the river Ganges to earth. The holy water of the Ganges is also called "tiirtha"

When devotees are given the holy water, the following Sloka is often chanted:

akaala mrityu haranam, sarva vyaadhi nivaaranam, samastha paapa kshayakaram,
sarva dhuritopashamanam Vishhnu paadodakam paavanam shubham.

Prevention of untimely death, cure for all diseases, remedy for all miseries, are all possible by this water that has washed Lord Vishnu’s feet.

akaala mR^ityu means untimely death. When a person dies before the completion of an average life span, by causes such as road accidents, building collapse, fire etc., it will be called akaala mR^ityu. This Sloka says that the holy water has the power to destroy the akaala mR^ityu or untimely death and get rid of all miseries and diseases.

shariire jarjarii bhuute, vyaadhi graste kaLebhare
aushadaM jaahnavii toyaM vaidhyo naaraayaNo hariH


In this Sloka we say that this holy water is like medicine. When we become old and have diseases due to old age, this holy water has the power to reenergize us. Lord Narayana and Sree Hari are the doctors who protect us. This is the greatness of the "tiirtha."

The Bhagavatam, also tells the story of Devaahuti. Devaahuti is the wife of Kardamamuni who is the father of Lord Kapiladeva and a great sage. In this story, Devaahuti regains her beauty and youth by taking a bath in the Bindusaras, which is a part of the river Sarasvati. The Bhagavatam also explains how the Bindusaras originated. The word Bindu means a drop. The story goes that the lord was happy with his devotee in a particular moment and in that place, a drop of water fell from his eye due to this happiness and it became Bindusaras. Kardamamuni was performing a great penance near this river, and due to the association with this great sage, the river is said to have attained its power of purification. Even today, the river Sarasvati is greatly revered in India.

A pilgrimage or visit to holy places such as Kaashi, prayaag etc. in India is called "tiirtha yaatra". These places and rivers became holy only because great saints have stayed in such places in days of yore and conducted penance and puja to the Lord. When we visit such places, we feel the lord’s presence there and we get peace of mind and happiness.

Before we go on a pilgrimage to holy places, it is good to understand the importance and holiness of that place, river or temple so that we can offer prayers with a pure mind and be inspired to offer everything to the Lord with faith and devotion. The great saints and sages have done many years of penance and have attained knowledge from the Lord. From this knowledge all the sR^iti, smR^iti, shaastraas and puraaNas (all the scriptural texts), have been given by these sages for the benefit of mankind. So when we reach these holy places with the knowledge of the greatness of such places, it will invoke greater reverence and devotion in our minds.

Many great saints and sages are referred to by the name "tiirtha", such as Srimad madhavatiirtha. This is because of their great penance, sacrifice and unflinching devotional service to the Lord and to mankind. These saints are considered holy, because of the way they lead their lives and hence they are referred to as "tiirtha swamis". This can be explained by the following Sloka from Srimad Bhagavatam
bhavadvidhaa bhaagavathaasthiirthaa bhuutaaH svayaM vibho
tiirti kurvanti tiirtaani svaanthaH stengathaadbhrataH


yudhishtra says to sage vidura, "You are a great devotee of Lord KrishhNa and you yourself represent all holiness. In your heart, the Lord is ever present. When a person like you has a bath in rivers, ponds or lakes, they also become sacred or holy. Thus, by your presence and companionship, we also become pure. When Ordinary people who commit many sins take bath in rivers they become impure, but when great people such as you take bath in such rivers, again these waters becomes pure and holy.

Many people might not be able to visit holy places. The scriptures say that for all people their parents and teachers are the sacred and holy places or rivers. For a noble woman, her family is itself the holy place. The Bhagavatam and the Bhagavad Gita also talk about the mental pilgrimages, which help to purify our hearts and minds. When a pot is filled with liquor, cleaning it externally will not really cleanse it and it will continue to be impure as long as it is filled with something impure. Similarly, when a person visits the holy places with an impure mind, such a visit cannot cleanse him thoroughly. Only when our hearts are pure, we can get mental peace and happiness while visiting holy places.

In the 17th chapter of the Bhagavad Gita, the lord talks about "triimaana tapas" (threeway penance of body, words and mind). An intelligent and attentive person should control his desires and purify his mind by removing the impurities and only then he will get the benefit of the pilgrimages. It is said in the scriptures that wealth is lost in three ways. It is either used for worldly enjoyments or for charitable and noble actions or taken/stolen by others or used for wrong actions. Of these ways, when wealth is used for charitable and noble actions, it is the best way and is called "uttamaM". If it is used for worldly enjoyments, it is "madhyamaM" or the middle way. The last category where it is used for wrong actions is called "adhamaM" or the wrong way. Hence it is necessary to use wealth in the right way, in charities and noble actions, because this is the way to reach the lord.

Normally, we do actions with some selfish motive. Instead we should try and dedicate all actions to the Lord and understand that we are only instruments and He is the doer. Our long journey of life is a pilgrimage towards God. There is a confluence of the three rivers (triveni sangamam) of yaGYa (noble actions), daana (charity) and tapas (penance). When we offer all our actions to the Lord and pray only for his blessings, then we can feel the happiness of God realization. This is the most ripened fruit of the tiirtha yaatra (pilgrimage) of life.

thanjavooran
Posts: 3025
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ஏழரைச்சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும்.
சனி பகவான் சிவபெருமானை அணுகி “பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன்” என்றதும் (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அவர் “உன்னையும்,சர்வ உலகத்தையும் படைத்த என்னை நீ பிடிக்க முடியுமா? ” என்றதற்கு “எவரும் எனக்கு விதிவிலக்கல்ல” என்று சனிபகவான் கூற..
சனி கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஈசன் பூமிக்கு வந்து ஒரு சாக்கடையின் அடியில் ஏழரை நிமிடம் ஒளிந்து கொண்டு, பிறகு வெளிவந்து எகத்தாளமாய் “பார்த்தாயா...என்னை உன்னால் பிடிக்க முடியவில்லை” என்றதும், சனி பகவான் பணிவுடன் “என்னையும், சர்வ உலகங்களையும் படைத்த நீர் எதற்காக கேவலம் பூமியில் ஒரு சாக்கடையின் கீழ் ஒளிய வேண்டும்? அந்த ஏழரை நிமிடமே நான் உம்மைப் பிடித்தேன்” என்ற கூறியதாய் ஒரு கதை இருக்கிறது.
சரி... அனைவரும் இவ்வளவு பயப்படுமளவிற்கு ஏழரைச் சனிக்காலம் அவ்வளவு கொடியதா? சனி பகவான் கொடுமைப் படுத்துவதையே குணமாகக் கொண்டவரா? என்றால் பதில் வேறாக இருக்கும்.
தவறு செய்த ஒருவனை காவல்துறை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்துகிறது. அவன் செய்த தவறினுக்கேற்ப நீதிபதி அவனுக்கு தண்டனை விதிக்கிறார். அதாவது அவன் திருந்துவதற்கு, செய்த தவறைப் பற்றி சிந்திப்பதற்கு தண்டனை என்ற வாய்ப்பினை அளிக்கிறார். அதற்காக நீங்கள் நீதிபதியின் பேரில் குறை சொல்வீர்களா?
அதேபோல் தான் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு ஏழரைச்சனி எனும் தலை சிறந்த நீதிபதியினை குறை கூறுவது என்பது!
ஏழரைச்சனி ஒருவருடைய வாழ்வில் முதல் முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார். (சிலருக்கு பிறக்கும் போதே ஏழரை இருக்கும். அவர்களுக்கு முப்பது வயதுகளில் இரண்டாம் சனியாக வரும். ஆனால், அதுவும் முதல் சனி கணக்குத்தான்.) அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். படித்தது பரீட்சை ஹாலுக்குள் போனதும் மறந்து போகும்.சோம்பல் வரும்.எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.
கூடா நட்பு கேடாய் முடியும். உயிர் நண்பனுக்கு உதவுகிறேன் என்று சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். காதல் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச்செய்து கடைசியில் தோல்வியில் முடியும். படிப்பை முடிக்க முடியாமல் அரியர்ஸ் வரும். பணம் இன்றி திண்டாடுவீர்கள்.

ஏழரைச்சனி காலத்தில் படிப்பில் கவனம் குறைவது என்பது பிற்பாடு நீங்கள் அதை உணர்ந்து, படிப்பு முடிந்ததும் சேரும் வேலையில் திறம்பட செயல்பட்டு பெயர்வாங்க வேண்டும் என்பதற்காகவே. காதல் தோல்வி என்பது எதிர் பாலினத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு அந்த அனுபவத்தைக் கொண்டு திருமண வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.கூடா நட்பும் அப்படித்தான். பணத் திண்டாட்டம் வருவது எதற்காக என்றால், பிற்பாடு நீங்கள் ஏராளமாய் சம்பாதிக்க போகும் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சனி பகவான்

ஏழரைச்சனி காலத்தில் உங்களை திண்டாடச் செய்கிறார்.
சுருக்கமாய்ச் சொல்லப் போனால் அந்த ஏழரை ஆண்டு காலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அடுத்த முப்பது ஆண்டு காலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சனி பகவான் உங்களுக்கு இந்த படிப்பினைகளைத் தருகிறார்.
ஏழரைச்சனிக்காலத்தில் முதலில் பனிரெண்டாமிடத்தில் விரயச் சனியாக வரும் சனி பகவான் தன ஸ்தானத்தையும், பாக்ய ஸ்தானத்தையும், ருண ஸ்தானத்தையும் பார்வையிட்டு பணத்தால் பிரச்சனைகளையும், அலைச்சல்களையும் உண்டு பண்ணுவார்.

அடுத்து ஜென்மத்தில் அமர்பவர் ஜாதகரின் மனதை ஆளுவார். மன உளைச்சல் தந்து தடுமாற வைப்பார். துவள வைப்பார். வாய் விட்டு கதற வைப்பார். (அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் போது மிகவும் கஷ்டப்படுத்துவார்.கடுமையான பலன்களைத் தருவார்.)

ஏழாமிடம் என்பது எதிர்பாலினத்தின் இடம் (கணவன் – மனைவி). வாழ்க்கைத் துணை பற்றிய இடம். ஜென்மத்தில் இருக்கும் போது ஏழாமிடத்தைப் பார்வையிட்டு காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர வைப்பார்.அதாவது காதலிப்பவரின் உண்மையான முகத்தைப் புரிய வைப்பார். பத்தாமிடத்தையும் பார்வையிட்டு தொழிலில் அல்லது வேலையில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவார்.அல்லது வேலையை விட்டு நீக்குவார்.
இறுதியாக இரண்டாமிடத்தில் அமருபவர் எட்டாமிடத்தையும், நான்காமிடத்தையும் பார்வையிட்டு இதுவரை கொடுத்த அனுபவங்களின் கடுமையைக் சற்று குறைப்பார். எட்டாமிடத்தை தனது பார்வையால் கெடுத்து இதுவரை இருந்து வந்த தலைகுனிவை தடுத்து நிறுத்துவார். மீண்டும் மனிதனாக மாறத் துணைப் புரிவார். பறிபோன கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஏழரைச்சனி முடிவில் திரும்பக் கிடைக்கச் செய்வார்.
சனி பகவானை சனீஸ்வரன் என்று மற்ற எட்டு கிரகத்திற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ பட்டம் சிலர் அளிக்கிறார்கள். அது தவறு. ‘சனைச்சர’ என்றால் சம்ஸ்கிருதத்தில் ‘மெதுவாக நகர்பவர்’ என்று பொருள். அதுவே மருவி சனீஸ்வரர் ஆகியுள்ளது.

சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோ, சந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும்.

ராகு தசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன.

வேதனைகளைத் தரும் சனி பகவானை எப்படி சாந்தப் படுத்தலாம்?

• திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூர் போன்ற சனி பகவானின் திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானுக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.

• இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு எள்ளை தலைக்கு கீழே வைத்து படுத்து உறங்கி காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். (ஒன்பது சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.)

• சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

• சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். (எள் தீபம் கூடாது.எள்ளை எரிப்பது தோஷம். எரிக்கக் கூடாது)

• சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.

• பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்

ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே.அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி பகவான். அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன் பின்வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனிபகவான் அருளுகிறார்.

அனுபவங்களைப் பற்றிய கவியரசு கண்ணதாசனின் கவிதை இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.


பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்

அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து

அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்


- கண்ணதாசன்
[ஜூலை 13-19, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

தேவ லோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்படும் ஐந்து மரங்களுள் ஓன்று வில்வமரம். மற்றவை, பாதிரி, வன்னி, மா, மந்தாரை. லக்ஷ்மி தேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.

உன் அனுக்ரஹத்தால் உண்டான வில்வமரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும், என்று மகாலக்ஷ்மியை பிரார்த்திப்பதாக ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் பூரண அருள் கிட்டும். அதோடு சிவனுக்கும் மிகவும் விருப்பமானது வில்வம்.

வில்வ இலைகளை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும், வேர்கள் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகின்றது.

சிவபூஜையின்போது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதால், சகல தோஷங்களும் விலகும். வில்வ இலை தீய சக்திகள் நம்மை நெருங்காதவாறு காக்கும்.

Shared from Sivaraman Ramachandran

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

பகவத் கீதை

பல வருடங்களுக்கு முன் ஸ்வாமி சின்மயானந்தா அவர்களின் பிரசங்கத்திலிருந்து ஒரு ஸ்வாரஸ்யமான பகுதியை என் ஞாபகத்திலிருந்து சுருக்கமாக பதிவு செய்கிறேன். :

யாரோ ஒருவர் திடீரென்று உங்களிடம் “ஸார், ட்ரெயினைப் பிடிக்கணும், ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ? “ என்கிறார்.

தயங்கவே வேண்டாம், “ஐந்து நிமிடம் இருக்கா ? இரண்டே நிமிடம் போதுமே “ என்று சொல்லுங்கள். “விடு - பிடி. அல்லது பிடி - விடு. அவ்வளவுதான் “ என்று சொல்லுங்கள். - என்று சொல்லி விட்டு சிரி்துக்கொணடே கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தது. பிறகு அவரே விளக்கினார் :

இந்த உலக பந்தங்களையெல்லாம் உதரித் தள்ளுங்கள். பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள்.

ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதரித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ?

கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. முதலில் பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். அந்தப பிடி இறுக, இறுக, இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.

ஒரு உபமானம் சொல்லுகிறேன். சில விறகு குச்சிகள் ஒரு கயிற்றால்
இறுக்கமாகக் கட்டபபட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை ( இது நம் உலக பந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே கட்டி, ஒரு குலுக்கு குலுக்கி இறுக்குங்கள். ( இந்த புதிய கட்டு பகவானின் பாதம பற்றிய பிடி.) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிறு இருக்கம் தளர்ந்து கழன்று விடும்.

உலக பந்தங்களை விட்டு, பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞான மார்கம். ஞானிகளுக்கானது.

பரந்தாமன் பாதங்களைப் பற்றி, உலக பந்தங்களை விடுவது பக்தி மார்கம். சாமானிய மக்களுக்கானது.

எவ்வளவு எளிமையான விளக்கம் !!!

- Sethuram Krishnamurthy

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

சனிக்கிழமை விரதம் ... வைகுண்டம் நிச்சயம்.

நித்தமும் என் கருவறைக்கு வந்து தங்கத்தால் ஆன பூக்களால் என்னை அர்ச்சித்து வழிபடுகிறாய் அப்படி இருக்கும்போது அந்தத் தங்கப் பூக்கள் நேற்று எப்படி மண்ணால் ஆன பூக்களால் மாறிப் போயின என்பதுதானே உன் குழப்பத்துக்குக் காரணம்? உன் தூக்கத்தைத் தொலைத்து தவிப்பதற்கும் அதுதானே காரணம்? என்று கேட்டான் வேங்கடவன். ஆமாம் பகவானே... இந்த நாடும் மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்தான் தினமும் உன் சன்னிதிக்கு வந்து தங்கத்தால் ஆன புஷ்பங்களை அர்ப்பணித்து வழிபடுகிறேன். என் வழிபாட்டில் திடீரென்று இந்தக் கோளாறு எப்படி ஏற்பட்டது? என் பக்தியில் ஏதேனும் தவறு நடந்து விட்டதா என்றெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து தவித்துக் கொண்டிருக்கிறேன் குரலில் சோகம் ததும்ப தொண்டைமான் சொன்னான். ஏழுமலையான் சிரித்தான். நீ அளிக்கும் தங்க புஷ்பங்களை ஏற்றுக்கொண்டால் மகிழ்கிறாய். அதை ஏற்க மறுத்தால் துக்கப்படுகிறாய். இது மனிதர்களின் இயல்பாக இருந்து வருகிறது. ஏற்க மறுத்ததன் காரணம் உனக்குத் தெரியாதல்லவா? மன்னனே... உன்னைப் போன்ற பல பக்தர்கள் என்னை நித்தமும் ஆத்மார்த்தமாக வழிபடுகிறார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுள் பீமய்யா என்கிற ஏழையும் ஒருவன். இதோ, இந்த ஆலயத்தில் இருந்து சற்றுத் öõதலைவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் அவன் வசித்து வருகிறான். அவன் ஒரு குயவன். மண்பானைகளையும் பாண்டங்களையும் தயாரித்து தினமும் அதை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறான்.

ஏழையான அவன் தினமும் திருக்கோயிலுக்கு வந்து என்னைத் தரிசிக்க நேரம் கிடைக்கவில்லையே என்று வருந்தி, தான் வசிக்கும் குடிசையிலேயே என் உருவத்தை மண்ணில் வடித்து வைத்திருக்கிறான். திருமலை கருவறையில் உள்ள என்னை பூஜிப்பது போல் நினைத்துக்கொண்டு, தினமும் மண்ணால் ஆன பூக்களைக் கொண்டு அந்த விக்கிரகத்துக்கு வழிபாடு நடத்துகிறான். அது தவிர, எந்த நேரமும் அவனுக்கு என் சிந்தனைதான். மண்பாண்டம் செய்யும்போது, உணவு உண்ணும் போதும், உறக்கத்திலும் எனது திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருப்பான். அவனது பக்தி என்னை நெகிழச் செய்துவிட்டது. அதைப் போற்றும் விதமாகவும் இந்த உலகத்தோர் அறியும் விதமாகவும் அவன் எனக்கு அளித்த மண் பூக்களை நான் மனமாற ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உன் தங்கப் பூக்களும் மண் பூக்களாகி விட்டன என்றார் பெருமாள். கனவு கலைந்தது. தொண்டைமானுக்குக் காரணம் புரிந்தது. தங்கப் பூக்களை அர்ச்சித்து வணங்கும் தனது பக்தியையே விஞ்சிய ஏழையின் பக்தி, அவனை வியக்கச் செய்து விட்டது. அந்த ஏழையின் பக்தித்திறனை பகவானை வணங்கும் காட்சி கண்டு பரவசம் கொள்ளவேண்டும் என்று விரும்பனாள். எனவே, அன்றைய தினம் காலை பீமய்யாவின் குடிசைக்குச் சென்றான். அது ஒரு சனிக்கிழமை. பெருமாளின் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வழிபடுபவன் பீமய்யா. எனவே, வழக்கம்போல் பெருமாளின் திருநாமங்கள் சொல்லி, மண்ணால் ஆன பூக்கள் கொண்டு பெருமாளை வழிபட்டான் பீமய்யா. இந்த பூஜையை மறைந்திருந்து பார்த்தான் மன்னன்.

பெருமாளே... பொன்னையும் பொருளையும் கொடுத்து என்னை ஆட்கொள்ள நினைத்தாய். எனக்கு பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம். உன் திருவடிகளை நிரந்தரமாகப் பற்ற வேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. இதை நான் அடையும் விதமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வருகிறேன். உன் திருவடி நிழலை அடையும் பாக்கியத்தை விரைவில் எனக்குத் தா என்று வேண்டிக் கொண்டிருந்தான். அருகிலேயே அவனது மனைவியும் மெய்யுருகி வழிபட்டுக் கொண்டிருந்தான். பீமய்யாவின் முன்னால் திருப்பதி வேங்கடாசலபதியின் மண்ணால் ஆன விக்கிரகம் தங்கம்போல் ஜ்வலித்து மன்னனின் கண்களைக் கவர்ந்தது. பகவானின் திருப்பாதங்களில் பீமய்யா அர்ச்சித்த மண்ணால் ஆன பூக்கள் இறைந்து கிடந்தன. இனியும் மறைந்திருந்து பார்ப்பதில் மன்னனுக்கு விருப்பம் இல்லை. எனவே, பீமய்யா தம்பதியரின் முன்னால் போய் திடுமென நின்றான். நாட்டை ஆளும் மன்னன், திடீரென தங்களுக்கு முன்னால் வந்து நிற்பதைப் பார்த்ததும் அவர்கள் மிரண்டனர். தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோம். அதைக் கண்டிக்கவே மன்னன் இங்கு நேரில் வந்திருக்கிறான் என்று கணவனும் மனைவியும் அஞ்சினர். மன்னன் எதுவும் சொல்வதற்கு முன்னதாக ஓடிவந்து அவன் காலடியில் விழுந்தனர். தொண்டைமான் பதறிப்போய் சற்றே விலகி நின்றான். பிறகு தழுதழுக்கிற குரலில் பீமய்யா... உன் பக்தித்திறனைக் கண்டு வியந்தேன். உன்னைக் காணவே நான் இங்கு வந்தேன். என்னை நெகிழச் செய்துவிட்டாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே. அங்கே கோடி ரூபாய் பிரகாச ஒளியுடன் வேங்கடவன் தோன்றினார். அதே வேளையில் வானவர்கள் வீற்றிருக்க, ஒரு புஷ்பக விமானம் வந்து இறங்கியது.

கண்களைக் கவரும் அலங்காரத்துடன் காணப்பட்ட அந்த புஷ்பக விமானத்தில் இருந்து வானவர்கள் இருவர் இறங்கினர். பீமய்யாவையும் அவனது மனைவியையும் நோக்கிச் சென்றவர்கள். உங்கள் இருவரையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். இது பெருமாள் உத்தரவு, வாருங்கள். என்று இரு கரங்களையும் விரித்து சகல மரியாதையுடன் அழைத்தனர். கண்களில் நீர் கசிய ஆனந்தத்துடன் பீமய்யாவும் அவன் மனைவியும் அந்த விமானத்தில் ஏறிக் கொண்டனர். தொண்டைமான் நெகிழந்து போனான். பகவானே... வைகுண்டத்துக்கு என்னையும் அழைத்துச்செல்ல மாட்டீர்களா? என்று வேங்கடவனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டான். அகம்பாவம் இல்லாத பக்தியோடு என்னை வழிபடு. உனக்கும் ஒருநாள் வைகுண்டம் வாய்க்கும். என்று சொல்லி அடுத்த நொடியில் பகவான் மறைந்து போனார். புஷ்பக விமானமும் கண்களை விட்டு மறைந்தது. தொண்டைமானும் வேங்கடவனை தூய அன்புடன் வழிபட்டு, ஒரு நாள் வைகுண்டம் போய்ச் சேர்ந்தான். ஏழை பீமய்யாவின் பக்தித்திறத்தை உலகுக்குத் தெரிவிப்பதற்காகவே அவனை ஆட்கொண்டு அருளினார் வேங்கடவன். பீமய்யாவுக்கு சனிக்கிழமை அன்று விரதம் இருக்குமாறு பெருமாள் அருளினார் என்பதாலும், புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் பெருமாள் இவனுக்கு வைகுண்டப் பதவி அளித்தார் என்பதாலும், சனிக்கிழமை தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடும் வழக்கம் உருவானது என்பர்.

அதேபோல் பீமய்யாவுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அவன் குயவன் என்பதால் மண்ணால் ஆன சட்டியிலேயே தனது நைவேத்தியத்தைப் பெருமாள் ஏற்கும் வழக்கமும் ஏற்பட்டது என்பர். நவகிரகங்களுள் எல்லோரையும் அச்சுறுத்தும் சனிபகவான் ஆயுள்காரகன் ஆவார். அதாவது, ஒருவரது பூரண ஆயுளுக்கு இவரே காரணம் ஆனால், அந்த சனி பகவானையே தன் கட்டுக்குள் கொண்டு வருபவர் பெருமாள். எனவேதான். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், சனியின் தாக்கம் குறையும். ஒருவரைப் பிடித்த பிணி, பீடைகள் திருஷ்டி போன்றவை விலகும் என்று சொல்லப்படுகிறது. வேங்கடவனைத் தியானித்து, சனிக்கிழமை விரதம் இருந்து அவனை வழிபட்டால், நலம் பெருகும்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

courtesy: Mannargudi Sitaraman Srinivasan

வருட ஆரம்பம் தையா? இல்லை சித்திரையா?

தமிழ் மாதக் கணக்கீட்டு முறை மிகத் துல்லியமாக சூரியனின் சுழற்சியைக் கணக்கிடும் முறை. 12 ராசிகள் மேஷத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே மேஷமே இந்தக் கணக்கீட்டின் துவக்கம்.

மேஷம்தான் சூரியனின் ராசித் தொடக்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்?

நக்கீரரின் நெடுநல்வாடை

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி
திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய

மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமனின்ற,உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து

அவற்றைப் பார்த்து

பிங்கள நிகண்டு ராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியுன் துலாமு தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.

கல்வெட்டுகள் நான்கு சூரிய சம்பந்தமான விழாக்களைச் சொல்கின்றன.
அயன சங்கராந்தி இரண்டு,
சித்திரை – ஐப்பசி விஷு இரண்டு.
ஆக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழா.
ஆடியும் தையும் முறையே தக்ஷிணாயன – உத்தராயண சங்கராந்திகள்.
சூரியன் உச்சம் அடைவது மேஷத்தில், அதாவது சித்திரையில்.
சூரியன் நீச்சம் அடைவது துலாத்தில் – அதாவது ஐப்பசியில். ஆக இந்த நான்கு மாதத் தொடக்கத்திலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்தச் சூரியனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதக் கணக்கானது தமிழ் நாட்டுக்கே உள்ள ஒரு தனிப்பட்ட கணக்கு என்பதும், சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

செட்டிக்குளம்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உறையூரை தலைநகராகக் கொண்டு பராந்தக சோழன் ஆட்சி செய்து வந்த காலம் அது. வணிகர் ஒருவர் உறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி பயணித்தார். பெரம்பலூருக்கு முன்னால், செட்டிக்குளம் என்ற கிராமம் வழியாக வந்துகொண்டிருந்தபோது இருட்டத் தொடங்கியது. காட்டுப் பகுதியாக இருந்ததால் பயணத்தை தொடர முடியாமல் காட்டுக்குள்ளேயே தங்க முடிவெடுத்தார். காட்டிலுள்ள மரம் ஒன்றில் ஏறி அதிலுள்ள கிளையில் சாய்ந்து ஓய்வெடுக்க துவங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு அற்புத காட்சி ஒன்று தென்பட்டது. திடீரென தோன்றிய தீப்பிழம்புக்கு நடுவே ஒரு லிங்கம் இருந்தது. அதற்கு தேவர்களும் யோகிகளும் முனிவர்களும் பூஜை செய்வதும் தெரிந்தது.

சில நிமிட நேரங்களே தோன்றிய இந்த அரிய காட்சியைக் கண்ட வணிகர், உடனே, தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, உறையூர் திரும்பினார். மன்னனை சந்தித்து தான் கண்ட காட்சியை விவரித்தார். குலசேகர பாண்டிய மன்னன் அதனைக் கேட்டு ஆச்சர்யமடைந்தான். உடனே சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் இருவரும் செட்டிக்குளம் நோக்கி புறப்பட்டனர். தான் தங்கியிருந்த வனாந்தரப் பகுதியில் சென்று சிவலிங்கம் கண்ட இடத்தை காட்டினார். ஆனால், அங்கு லிங்கம் காணப்படவில்லை. மன்னர் படையினர் அந்த வனப்பகுதியில் லிங்கத்தை தேடினர். அப்போது கையில் கரும்பைப் பிடித்துக்கொண்டு ஒரு முதியவர் அந்தப் பகுதிக்கு வந்தார்.

அவரிடம் படைவீரர்கள் விஷயம் கூறியதும், ‘அதுவா! இங்கே வாருங்கள்,’ எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்று ஒரு சிவலிங்கத்தை காண்பித்தார். அனைவரும் மகிழ்ச்சி பொங்க அந்த லிங்கத்தை வழிபட முற்பட்டபோது, திடீரென மின்னல் போல ஒரு வெளிச்சம் தோன்றியது. உடனே அந்த முதியவர் கிழக்கு திசையில் ஜோதி வடிவாய் மறைந்தார். மன்னரும், மற்றவரும் திகைப்புடன் பார்த்தபோது எதிரேயிருந்த மலைமீது கையில் கரும்புடன் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சியளித்தார். இதனைக் கண்ட அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து செட்டிக்குளத்தில் ஏகாம் பரேஸ்வரருக்கு ஒரு ஆலயமும், எதிரே மலைமீது முருகனுக்கு ஒரு ஆலயமும் அமைக்க முடிவெடுத்தனர். ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளுக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டது.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, குபேர வழிபாடாகும். ஏகாம்பரேஸ்வரர் மற்றும் அம்பாள் சந்நதிகளைச் சுற்றிலும் 12 ராசிக்காரர்களும் வழிபடும் வகையில் 12 தூண்களில் குபேரன் சிலை மீன் ஆசனத்தின் மீது அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இவை அந்தந்த ராசிக்காரர்கள், அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் வழிபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கும் காணக்கிடைக்காத அபூர்வமான அமைப்பு. அம்பாள் சந்நதிக்கு எதிரே குபேரனுக்கு தனிச் சந்நதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குபேரன், தன் மனைவி சித்திரலேகாவுடன் காட்சியளிக்கிறான். குபேரனின் நவநிதிகளான சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, கற்பக விருட்சம், மச்சநிதி, நீலநிதி, நந்தநிதி, முகுந்த நிதி, கச்சப நிதி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமர்ந்திருக்கிறார்கள்.

குபேரன் பரமேஸ்வரனை நோக்கி பல நூறு ஆண்டுகள் கடும் தவமிருந்து அவரது ஆசியைப் பெற்றவர். வடக்கு திசைக்கும், தனம், தானியம் மற்றும் அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகவும், அழகாபுரியின் அரசனாகவும் விளங்குபவர். தீராக்கடன் தொல்லை, பொருளாதார நெருக்கடி, தொழிலில் அபிவிருத்தி முதலான பொருளாதார பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு இங்கு நடைபெறும் குபேர வழிபாடு துயர் துடைக்கும் அருமருந்தாக விளங்குகிறது. தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தவிப்பவர்கள், இங்கு நடைபெறும் பூரட்டாதி நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டால், கடன் தீர்ந்து, செல்வாக்கு உயர்ந்து, குபேர சம்பத்து பெறலாம் என்பது ஐதீகம்.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள மலைமீது முருகன் கரும்பை கையில் பிடித்தபடி அருள் பாலிக்கின்றார். இந்த இரு கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மலைமீது உள்ள முருகன், தனது அம்மை அப்பனை வணங்கும் வகையில் சிறப்பான கலையம்சத்துடன் விளங்குகிறார். அதாவது ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திவாகனம், முருகன் தன் அம்மையப்பனைக் காண சற்று தலைசாய்த்து வழிவிட்டதாம்! அதன்படி, கோயில் வாயிலில் துவங்கி கருவறை வரை முன்புறமுள்ள அனைத்து நந்திகளும் தலைசாய்த்திருப்பதைக் காணலாம். வேளாண் தொழில் செழிக்கவும், குழந்தை பாக்யம் கிட்டவும், வளம் பெறவும் பங்குனி உத்திரப் பெருநாளில் முருகனுக்கு விரதமிருந்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, சூரிய பூஜை. ஆண்டுதோறும் மாசி 19, 20, 21 தேதிகளில் காலையில் ஏகாம்பரேஸ்வரர்-அம்பாள் மீதும், மாலையில் முருகன் மீதும் சூரிய ஒளி விழுகிறது. இதனையொட்டி இந்த 3 நாட்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்த அற்புதங்கள், பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றன. திருச்சி-சென்னை சாலையில் 44 கி.மீ. தொலைவிலும், பெரம்பலூருக்கு 15 கி.மீ. முன்னதாகவும் கோயிலின் நுழைவாயில் வளைவு உள்ள ஆலத்தூர் கேட் அமைந்துள்ளது. உள்ளே 8. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செட்டிக்குளம்...

Temple..

Image

shared from a friend...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ஒரேழுத்து மந்திரத்தை ஓம் என்று சொல்லுவோம்
இரெழுத்து மந்திரத்தை ராமா என்று சொல்லுவோம்
மூன்றெழுத்து மந்திரத்தை முருகா என்று சொல்லுவோம்
நான்கெழுத்து மந்திரத்தை நாராயணா என்று சொல்லுவோம்
ஐந்தெழுத்து மந்திரத்தை நமசிவாயா என்று சொல்லுவோம்
ஆறெழுத்து மந்திரத்தை சரவணபவா என்று சொல்லுவோம்
ஏழு எழுத்து மந்திரத்தை ஸ்ரீ ராம் ஜெயராம் என்று சொல்லுவோம்
எட்டெழுத்து மந்திரத்தை ஸ்ரீ குருவாயுரப்பா என்று சொல்லுவோம்

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

எதற்காக கடைசி நேரத்தில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது ...??

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். ‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்’ என்பதே அது.

பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.

சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர்.

உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி, ‘சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக’ என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது.

பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.

இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.....



courtesy: ----Ramanathan Panchapakesan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

What I liked from what I read.....

பிறவி என்பதே துன்ப மயமானது என்பதை யாவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரத் தொடங்குகிறோம்.

தாயுமானவர் கூற்றின்படி சொல்ல வேண்டுமானால்

....மெய்ஞான சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு
தூங்க வைத்தவர் ஆர்கொலோ
தந்தைதாய் முதலான அகிலப் பிரபஞ்சம்
தனைத் தந்தது எனது ஆசையோ
தன்னையே நோவனோ பிறரையே நோவனோ
தற்காலமதை நோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
...... (பரிபூர்ணானந்தம் -7)

(பரமார்த்தம் =பரம அர்த்தம், உட்பொருள்)

சோற்றுத் துருத்தி என்று இந்த உடலை வருணிக்கிறார் தாயுமான சுவாமிகள். இதை நிலையானதாகக் கருதி உண்பதும் தூங்குவதுமாக மெய்ஞானத்தைப் பற்றிய சிந்தையின்றி பொழுதை கழிக்கிறேனே; இந்த உடலை எடுப்பதற்கு காரணம் என்று நான் எதையெதையெல்லாம் நொந்து கொள்வது என்று பரிதவிக்கிறார்.

இதே பரிதவிப்பை கபீரின் வரிகளிலும் காணலாம்.

मैं अपराधी जन्म का, नख-सिख भरा विकार ।
तुम धाता दुःख भंजना,मेरी करो सम्हार ॥

மேன் அபராதி ஜன்ம் கா, நக்-ஸிக் பரா விகார் |
தும் தாதா து:க் பஞ்சனா, மேரீ கரோ ஸம்ஹார் ||

பாதாதி கேசம் என்னுள் பேதமை,தந்ததே பிறவி என்னும் மாமை
தாதா! நீயும் தீ்ர் என் துன்பம்,தொலைத்திடு இத்துயர் தரும் சென்மம்

(மாமை =துன்பம் ; தாதா= பெருங்கொடையாளன்,அளவின்றி தருபவன்)

'காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார்.

அருணகிரிநாதரும் கந்தரனுபூதியில் இதைப் போன்றே

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ ...25

('மெய்யே என'= உண்மையானது என்று; உகந்து =மிக்க விருப்புடன்)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?.....27

(மின்னே நிகர் = மின்னலைப் போன்று தோன்றி மறைவது)

பாழ்வாழ்வெனும் இப்படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ .... 31

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய் .....35

என்று பலவாறாக பிறவியெனும் பிணிக்கானக் காரணத்தை எண்ணியெண்ணி கந்தனிடம் முறையிடுகிறார்.

'விதி காணும் உடம்பை விடா வினையேன்' என்பதில் “மே அபராதி ஜன்ம் கா” என்று சொல்லும் கபீரின் கருத்தொற்றுமை நன்கு விளங்குகிறது.

வித்திலிருந்து மரமும் பின்னர் அதிலிருந்து பலநூறு வித்துகளும் மீண்டும் அவற்றிலிருந்து மரங்கள் உற்பத்தியாவதும் தொடர் நிகழ்ச்சி போல உடல் எடுத்ததன் காரணமாய் வினைபுரிதலும் பின்னர் அவ்வினைகளே அடுத்தடுத்து பிறவிகளுக்கு காரணமாய் அமைவதையும் 'வெவ்வினை' என்று உரைக்கிறார் அருணகிரியார்.

தலைப்பட்டார் தீரத்துறந்தார் ;மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் .....348

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு ..........358

'மயங்கி வலைப்பட்டார்' என்பதிலும் 'பிறப்பென்னும் பேதமை'என்பதிலும் வள்ளுவர் அறியாமையில் சிக்கித்தவிப்பவர்கள் நிலையை சொல்வது போலவே கபீரும் 'நக்-ஸிக் பரா விகார்' என்று உணர்த்துகிறார். பரா விகார் என்பது 'மன விகாரங்கள் நிறைந்த' என்று பொருள்படும்.

'கதி காண மலர்கழல் என்று அருள்வாய்'என வேண்டும் அருணகிரி போல் 'மேரீ கரோ ஸம்ஹார்' என்று விடுதலைக்காக இறைஞ்சுவதிலும் கபீர், ஞானிகளின் கருத்து ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறார்.

http://kabeeran.blogspot.in/2008/03/blog-post.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?
தம்முடைய நியதிப்படி, சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கவேண்டிய காலம். சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கத் தொடர்ந்தார். அனுமன் ஓர் அறையில் கதவைத் தள்ளி நுழைந்தார். அப்போது அனுமனின் வால் மட்டும் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. எனினும், அந்த வாலும் சனியின் கையில் சிக்கவில்லை. கடைசியில் சனியிடம் அனுமன் கேட்டார்: பிடிப்பது எத்தனை ஆண்டுகள்? சனி, ஏழரை ஆண்டுகள் என்றார். ஏழரை ஆண்டுகளும் இங்கேயே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பேன். உன்னால் முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்றார் அனுமன். அவரின் பக்தியை மெச்சி, வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் சனீஸ்வரன். இதற்குப் பின்தான் ஆஞ்சநேயரின் வாலை வழிபடும் வழக்கம் உருவாயிற்று. 41 நாட்கள் அனுமனின் வாலில் குங்குமம் வைத்து துளசி மாலை சாத்தி வழிபட, எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

ஹனுமாருக்கு ஏன் வெண்ணை சாத்துகிறார்கள்?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

shared from Mannargudi Sitaraman Srinivasan

ராமன் கர்பவதியான சீதையை காட்டில் விட சொல்லும் இடத்தில் உங்கள் மனதில் என்ன பட்டது?

என்னால் எவ்வளவு சரியான காரணங்கள் சொன்னாலும் இதை மட்டும் ஏற்றுகொள்ளவே முடியலை"

இது ராமாயணத்தை படிக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் ஏற்படும் உறுத்தல் தான். எனக்கும் அது ஏற்பட்டது. அன்னை சீதையை தீக் குளிக்கும் காட்சி வந்தது. அப்பொழுது என் மனதில் எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. அதற்கு மூன்று காரணங்கள்.

முதல் காரணம்.
மனதில் சந்தேகத்தை ஒளித்து வைத்துக் கொண்டு அன்பாக இருப்பது போல நடிப்பது ஒவ்வாது. அதனால் அவர் தன் சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டதில் தவறிருப்பதாக தோன்றவில்லை.

இரண்டாம் காரணம்.
ராமர் ஏகபத்தினி விரதன். அவர், தன் மனைவி ஒழுக்கத்தில் தனக்கு இணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

மூன்றாம் காரணம்.
ராமருக்கு சீதையை நன்றாக தெரியும். அவருக்கு அன்னை சீதை தன் மீது கொண்டுள்ள நேசம் தெரியும். சீதையின் கற்பு நெறி நன்றாக தெரியும். ஆனால் இவ்வுலகம் அப்படிப்பட்டதல்ல. அது யாரைப் பற்றியும் எதுவும் பேசும். அப்படியிருக்கும் பொழுது தன் மனைவியின் மேன்மையை பிறருக்கு எடுத்துக் காட்டுவது அவர் கடமையாகிறது. சீதையிடம் ராமர், "எனக்கு உன்னைப் பற்றி நன்றாக தெரியும். ஆனால் உலகம் உன்னைப் பற்றி தவறாக நினைக்க கூடாது. ஒரு முறை உன் கற்பின் வலிமையை காட்டுவதற்காக நீ தீக் குளிக்க வேண்டுமென்று" சொன்னால். சீதைக்கு தீக் குளிக்கும் வைராக்கியம் ஏற்படாது. ஏனென்றால் சீதைக்கு ராமர் தான் உலகம். சீதை ஏன் மற்றவர்களைப் பற்றி கவலைப் பட போகிறார்?

ராமர் சீதையிடம் அந்த இடத்தில் காட்டிய கோபம் உண்மையானதாக இருக்கலாம், பொய்யானதாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அது நியாயமானது தான் .

ராமர் தன் தூதுவர்களிடம் நாட்டின் நிலைப் பற்றி விசாரிக்கும் காட்சி வருகிறது. அப்பொழுது பத்ரன் என்கிற ஒரு ஒற்றன் சொல்கிறான், "நான் மக்கள் பேசுவதை ஒளிவு மறைவின்றி சொல்கிறேன். உங்கள் ஆட்சியில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உங்கள் பராக்ரமங்களை வியக்கிறார்கள். நீங்கள் கடலைக் கடக்க பாலம் அமைத்தது பற்றி அதிசயப்படுகிறார்கள். ராவணனையும் அவன் படைகளையும் அழித்தது குறித்து பிரமிப்போடு பேசிக்கொள்கிறார்கள். ராமர் கசப்பான பல நினைவுகளை கூட மறந்து விட்டு சீதையோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார். ராவணனால் கொண்டு செல்லப் பட்டது தெரிந்தும் அவரால் எப்படி சீதையொடு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என்கிறார்கள். நமக்கு அந்நிலை ஏற்பட்டால் நாமும் அதையே செய்ய வேண்டியிருக்கும். அரசன் எவ்வழியோ நாமும் அவ்வழியே" என்கிறார்கள்."

இதைக் கேட்டதும் ராமர் மனம் உடைந்து போகிறார். தன் மூன்று தம்பிகளை மட்டும் அழைக்கிறார். அவர்களிடம்," நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். நீங்கள் மூவரும் அதை மறுக்காமல் ஏற்க வேண்டும்" என சொல்கிறார். அவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். அப்பொழுது லக்ஷ்மணரிடம் சீதையை அழைத்துக் கொண்டு போய் காட்டில் விட்டு விடும் படி சொல்கிறார். முதலில் மூவரும் அதைக் கேட்டு அதிர்ச்சியாகி அது பற்றி விவாதிக்க முயல்கிறார்கள். அவர் அவர்களை தடுத்து விடுகிறார்.

லக்ஷ்மணர் மறுநாள் அன்னையை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கிறார். லக்ஷ்மணர் சோகம் தாங்காமல் ரகசியமாக அழுத படி ஒன்றும் பேசாமல் தேரை ஓட்டிச் செல்கிறார். வழி நெடிகிலும் தன்னை காட்டில் விடப் போகிறார்கள் என்பதே தெரியாமல் அனனை வெகுளியாக ஏதேதோ பேசி வருகிறார்.

காட்டிற்கு சென்றவுடன் லக்ஷ்மணர் அன்னையின் காலில் விழுந்தபடி கதறி அழுகிறார். ராமரின் முடிவைப் பற்றி அன்னையிடம் தெரிவித்து தன்னால் தன் அண்ணனின் வார்த்தைகளை எதிர்க்க முடியவில்லை எனக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். அன்னை அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அன்னையை அழுதபடி கங்கைக் கரையில் விட்டு விட்டு லக்ஷ்மணர் தேரில் ஏறி திரும்பி விடுகிறார்.

அது தான் ஒரு முறை தன்னை நிரூபித்துக் காட்டினாளே மீண்டும் மீண்டும் இது என்ன பைத்தியக்காரத்தனம்

கிருஷ்ணரை விடவும், நரசிம்மரை விடவும், சிவ பெருமானை விடவும் எனக்கு ராமர் மீது தான் பிடிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவர்களெல்லாம் ஆற்றல்களாலேயே பெரும்பாலும் தங்கள் மேன்மையை நிரூபித்து இருந்தார்கள். ராமரோ எந்த ஒரு இடத்திலும் தன் ஆற்றல்களால் தன் மேன்மையை நிரூபிக்கவில்லை.

ராமர் அஸ்வமேத யாகம் நடத்தும் பொழுது அன்னை மீண்டும் ராமரை சந்திப்பார். அப்பொழுது வால்மீகி ராமரிடம் அன்னையை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வார். அப்பொழுது மீண்டும் அன்னை தன்னை நீரூபிக்க வேண்டும் என்று ராமர் கூறுவார். அன்னை அப்படியே பூமி பிளக்க உள்ளே சென்று மறைந்து விடுவார்.
"நீங்க நினைச்சா தீக்குளிக்க சொல்வீங்க. அவங்களுக்கு வேற வேலையில்லையா?" என்றேன். அப்பொழுது ராமரின் அந்த கருணை விழிகள் உள்ளத்தில் தைத்தது. இந்த ராமரா இப்படிச் செய்தார் என்று தோன்றியது.

ஐம்பூதங்களிலும் அசுத்தப் படுத்த முடியாத ஆகாயம் ராமர் .
ராமர் அன்னை சீதையை வனத்திற்கு அனுப்பிய செயல் கல் மனம் கொண்டு செய்த செயலாக தோன்றலாம். ஆனால் அந்தக் கல்லுக்குள் கசிந்த ஈரத்தை நாம் கவனிப்பதில்லை.

ராமர் இன்றைய ஆட்சியாளர்கள் போல ஆட்சி நடத்தவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் எதை செய்கிறார்களோ இல்லையோ வாய் கிழிய நன்றாக பேசுகிறார்கள். எல்லா தவறுகளையும் செய்துவிட்டு தவறே செய்யவில்லையென பேசுகிறார்கள். ராமர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் செயல் வீரராக இருந்தார். தன்னிடம் உண்மையிலேயே எந்த தவறும் இல்லாதவாறு நடந்து கொண்டார். அதற்குக் காரணம் மக்கள் தன்னை நல்ல முன் உதாரணமாக கொண்டு வாழ வேண்டும் என்பது தான். அது ஒரு அரசனின் கடமை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

இப்பொழுது ராமர் சீதையிடம் குறையிருந்தும் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படி மக்கள் நினைத்தால் மக்களிடம் குற்றங்களை சகித்துக் கொள்ளும் மன நிலை ஏற்படும். இதை ராமர் விரும்பவில்லை. அன்னையிடம் குறையில்லை என்பதையும் ராமரால் மக்களிடம் நிரூபிக்க முடியவில்லை. காரணம் அக்னிப் பரீக்ஷை இலங்கையில் நடந்திருந்தது. அதுப் பற்றி இங்கு சொன்னால் சிலர் நம்பாமலும் போகலாம். அதனால் அவருக்கு இருந்த ஓரே வழி அன்னையை துறப்பது தான். அப்படி அன்னையை அவர் துறந்து விட்டால் ராமர் குறையோடு அன்னையை ஏற்றார் என்பது பொய்யாகி விடும். குறையொடு அன்னையை ராமர் ஏற்றார் என்பது பொய்யாகிவிட்டால் மக்களும் குறைகளை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் வந்துவிடும். குற்றம் குறைகளை சகித்துக் கொள்ளாத ஒரு சமுதாயத்தில் தான் ராம ராஜ்யம் மலர முடியும். ராம ராஜ்யம் என்பது பூமியை சொர்க்கத்துக்கு இணையாக உயர்த்தும் முயற்சி. அந்த முயற்சிக்கு ராமர் கொடுத்த விலை, தன் உயிரான மனைவியை காட்டுக்கு அனுப்பியது.

அப்படி அவர் தன் உயிரை காட்டுக்கு அனுப்பிவிட்டு நடைபிணமாக வாழ்ந்த வாழ்க்கைதான் ராமாயணத்திற்கே காவிய அந்தஸ்த்தை வழங்குகிறது.

ராமர் லக்ஷ்மணரிடம் அன்னையை காட்டுக்கு அழைத்து சென்று விட்டுவிடும் படி கூறுகிறார். அன்னை ராமரிடம் சொன்னால் வனத்திற்கு செல்ல மனம் வராது என்பதால் சொல்லாமலேயே கிளம்புகிறாள். (இரண்டொரு நாளில் வந்துவிடுவோம் என்ற எண்ணம் அவளுக்கு) அப்பொழுது ராமர் தன் அறையில் கண்களில் நீர் வழிய அமர்ந்திருக்கிறார். அதன் பிறகு அது பற்றி ராமர் யாரிடமும் பேசுவதில்லை. அவர் தானும் காட்டுக்குப் போகப்போவதாக சொல்லியிருந்தால் மீண்டும் தம்பிகள் மூவரும் நாங்களும் வருகிறோம் என்பார்கள். மக்களில் பாதி பேர் பின்னாலேயே வருவார்கள். அவர் வேறு என்ன தான் செய்திருக்க முடியும்?

அவர் அன்னையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் தொடவில்லை. அலுவல்கள் முடித்தவுடன் தனிமையில் அன்னையின் சிலை அருகில் வந்து அமர்ந்துவிடுவார். தன் சோகத்தைக் லக்ஷ்மணரிடம் கூட அவர் சொல்லவில்லை. சொன்னால் அன்னையை கூட்டிவர வேண்டும் என லக்ஷ்மணர் கிளம்பக் கூடும்.
ராமர் எப்படி வாழ்ந்திருக்கிறார் பாருங்கள்.

மனதுக்குள் ஒரு மென்மையான சோகம். அதை வெளிப்படுத்த முடியாத கடமையுணர்ச்சி. அன்னையின் மீதான காதலும் பிரிவின் ஏக்கமும் ஒரு புறம் இதயத்தை துளைக்க மக்கள் நலனுக்காக மட்டுமே செயல் பட்ட அந்த பரந்த மனம்.

அதிவேகமாக சுற்றும் ஒரு பம்பரம் நிற்பது போல தெரியும். ராமரின் நற்பண்பும் அத்தகையது தான்.
அதிசுத்தமான கண்ணாடி தான் இருப்பதையே காட்டிக் கொள்ளாது.ராமரின் நல்ல மனம் அப்படிப்பட்டது தான்.

I can see only cruelty ...of Sri Rama ....Perhaps, since my mind is small and views narrow..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

சிதம்பர ரகசியம்!!
ஸ்ரீ நடராஜரின் வலது பக்கத்தில்
திரை ஒன்று இருக்கும். அந்த திரைக்கு
பின்னே உள்ள கற்சுவற்றில், தங்கதிலான‌
வில்வ மாலை சாத்தபட்டிருக்கும்.
ஸ்ரீ சிவா என்கிற இரண்டு சம்மேளன‌
சக்கரங்கள் அமைந்து இருப்பதை தரிசிக்கலாம்.
( சக்தியும் சிவனும்).
அதன் மேலே புனுகு ஜவ்வாது எப்போதோ சாத்தபட்ட நிலயில் இன்றைக்கும் அப்படியே இருப்பதை பார்கலாம்.
ஞானம் என்னும் சக்தியை
மாயை என்னும் திரை மூடி இருக்கிறது.
மனம் ஒருமுகபட்டு, மாயையை விலக்கி
பார்த்தால்,ஞானம் என்னும் தெளிவை பெறலாம் என்பதே இதன் தத்துவம்.
இதுவே சிதம்பர ரகசியம்!!

courtesy: Sakthi ?Vikatan 18-02-14 issue

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

(pineal gland)
Image

சிவனின் மூன்றாவது கண் என்பது என்ன?

கூம்பு சுரப்பி (pineal gland) மூளையின் மிக முக்கியமான பகுதியாக நெற்றி மத்தியில் ஒரு கூம்பு வடிவ சுரப்பி உள்ளது. நீங்கள் குழந்தைகளுக்கு மண்டை மென்மையான பகுதியை ஏககாலத்தில் உணர முடியும். இது அடிப்படையில் மிகவும் முக்கியம். இந்த இடமே கூம்பு சுரபி உள்ள இடம்.
அதை மனதின் கண் அல்லது மூன்றாவது கண் அல்லது ஆறாவது அறிவு என கூறலாம் . இதில் என்ன சிறப்பு என்றால் ஆற்றல் மற்றும் இரத்தம் வேறு எந்த சுரப்பி விட ஒரு பரந்த அளவு மனித உடலில் இதன் வழியாக அதிகம் பாய்கிறது . அது Pitutary சுரப்பி செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்த கூம்பு சுரப்பி நம் கண்கள் எந்த உயிரணுக்களால் உண்டானதோ, அதே உயிரணுக்களால் தான் இந்த சுரப்பியும் உண்டானது . எனவே இந்த சுரபிக்கு பார்க்கும் வல்லமை உண்டு. நாம் கண்களை மூடிகொண்டவுடன் நமக்கு தெரியும் பல விதமான வண்ணங்கள், மாதிரி வடிவங்கள் எல்லாம் இந்த சுரபி மூலம்தான்.

இந்த கூம்பு சுரப்பி அல்லது 'மூன்றாவது கண்' விழித்தெழுந்த போது அல்லது ஒருனிலைபடுதும்பொது , ஒரு முறை விண்வெளி நேரம் தாண்டி பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சுரபி செயல்பட்டு ஒரு அதிக உணர்வு ஒரு நகரும் அதிர்வெண் எழுப்புகிறது ..

இந்த கூம்பு சுரப்பி செயல்படுத்துவதன் மூலம் ஒரு பிரபஞ்சத்தின் நேரடி உடல் அனுபவம் இருக்க முடியும். ரிஷி விஸ்வாமித்திரர் ஒரு மிக முக்கியமான உதாரணம் ஆகும். வேதவியாசர் மற்றும் ரிஷி வால்மீகி எதிர்காலத்தில் இரு பிரபஞ்சத்தய் ஒரே சமயத்தில் பார்க்க முடிந்தது இதனால்தான்.

அடிப்படையில் 'சிவபெருமான்' மாய மூன்றாவது கண் என்று சொல்வது இந்த சுரபியைதான்.

இதையேதான் சிவ யோகா என்று கூறபடுகிறது.
சிவ யோகா என்பது மூன்றாவது கண் திறக்கும் ஒரு நுட்பமாகும் . மூன்றாவது கண் ஒரு உலகளாவிய புராண வரலாறு கொண்ட ஒரு புதிரான உறுப்பு. இதுவே தான் சிவன் மத்தியில் உள்ள நெற்றி கண் ஆகும்.

யோகா சாஸ்திரம் சொல்லும் மூன்றாவது கண் இந்த கூம்பு சுரப்பிதான்.
நடுநெற்றி மூலம் நடைபெறும் பார்வை செயல்பாடு இதுதான் .
சிவன் யோகாவின் முழு செயல்பாடு இந்த உழைக்காத கூம்பு சுரப்பியை விழித்துக்கொள்ள வைப்பதுதான் .
அது ஞானத்தை தனிப்பட்ட அணுகல் மூலம் தெரிந்து கொள்வதற்கும், எதிர்கால நிகழ்வுகள் பற்றி அறிந்தகொள்வதற்கும் உதவுகிறது . ஒரு மனிதன் யோக நிலை அடைவது என்பது இந்த சுரபி மூலமே ..
அந்த யோகா நிலையை அடைந்த கண்ணே சிவனின் நெற்றி கண் என்று கூறபடுகிறது.

Shared fro sage of Kanchi

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Some elucidations and some misconceptions cleared here
http://en.wikipedia.org/wiki/Pineal_gland

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் நமது பண்டைய கால ஞானிகள் பாம்பு வடிவத்தை மூலாதார சக்கரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சக்தியாக பார்த்தார்கள்.

புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி விட்டால் சீறிக் கொண்டு எப்படி கிளம்புமோ அதே போலவே யோக பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி தண்டுவடத்தை பற்றிக் கொண்டு சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி எழும்பும் என்று சொன்னார்கள்.

இதனால் தான் கடவுள்களின் உருவத்தோடு நாகத்தை சம்பந்தப்படுத்தினார்கள்.

பரந்தாமனின் பாம்பு படுக்கை பரமசிவனின் பாம்மனி எல்லாமே குண்டலினி தத்துவத்தை விளக்க எழுந்ததே யாகும்

இனி நாக வழிபாடு நம் நாட்டில் எப்போது இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்வோம்.
இந்திய துணைக்கண்டம் முழுவதுமே ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு, இருந்து வருகிறது.

சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம் போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை கொண்டு இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நாக வழிபாடு விரிவடைந்தன என சொல்லலாம்.

திருமாலும் சிவபெருமானும் மட்டுமே நாகங்களை துணையாக கொள்ளவில்லை. பல புத்தர் சிலைகளை பார்க்கும் போதும் மகாவீரரின் சில தோற்ற கோலங்களை காணும் போதும் ஐந்து தலை நாகம் அவர்களுக்கு குடைபிடித்து இருப்பது தெரிகிறது.

சிந்து சமவெளி நாகரிக காலத்திலும் அதற்கு முன்னரும் கூட நாகங்களை மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும்.

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம்.

வேதங்களில் பல இடங்களில் பாம்புகளை பற்றி விரிவான குறிப்புகள் வருகின்றன.

வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். ரிக், சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக பாம்புகள் சொல்லப்படவில்லை.

ஆனால் யஜøர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பழங்கால பாஞ்சல தேசத்திடில் தலைநகரம் அஹீ சத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம்.

இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கபட்டுள்ளது.
அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன

நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

குஷான மன்னர்களின் காலத்தில் இந்த நாக வடிவம் சிலை வடிவாக உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது.

கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும் புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.

பாம்புகளை பொறுத்த வரை எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும்.

பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகளும் காட்டப்படுகிறார்கள்.

இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.

பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பனிப்பெண்ணாக கருதுகிறார்கள்.

மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை முறையை விவரிக்கும் சங்க இலக்கியங்களில் நாக வழிபாடு சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம்.

பொதுவாக பாம்புகளை வழிபடுவது இந்து மதத்தில் உள்ள யோக சார மார்க்கத்தின் வழிபாட்டு முறையேயாகும்.

ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து இன்று கிராம தேவதைகளின் பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து விட்டன.

இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின் ஆன்மா பாம்பு வடிவத்தில் உலாவுவதாக உள்ள நம்பிக்கையே ஆகும்

நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக சாகடிக்க கூடாது என்று சொல்வதில் பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு

சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும்
மனித ஆத்மாவானது மனித சரீரத்தை தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின் உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம் என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள் சொல்கின்றன

இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம்

நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை சாகடித்தால் அவர்களின் தவத்தைக் கலைத்த பாவத்திற்கு ஆளாவோம்

எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாமென முன்னோர்கள் சொன்னார்கள்..

Yoga Asanas & Meditation ->https://www.facebook.com/pages/Yoga-Asa ... 506359940-> Janani Ramanar

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Aanmeekam...

Post by Ponbhairavi »

post 28 above.
e[quote]] அன்னையிடம் குறையில்லை என்பதையும் ராமரால் மக்களிடம் நிரூபிக்க முடியவில்லை. காரணம் அக்னிப் பரீக்ஷை இலங்கையில் நடந்திருந்தது. அதுப் பற்றி இங்கு சொன்னால் சிலர் நம்பாமலும் போகலாம். அதனால் அவருக்கு இருந்த ஓரே வழி அன்னையை துறப்பது தான். அப்படி அன்னையை அவர் துறந்து விட்டால் ராமர் குறையோடு அன்னையை ஏற்றார் என்பது பொய்யாகி விடும். குறையொடு அன்னையை ராமர் ஏற்றார் என்பது பொய்யாகிவிட்டால் மக்களும் குறைகளை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் வந்துவிடும். குற்றம் குறைகளை சகித்துக் கொள்ளாத ஒரு சமுதாயத்தில் தான் ராம ராஜ்யம் மலர முடியும். ராம ராஜ்யம் என்பது பூமியை சொர்க்கத்துக்கு இணையாக உயர்த்தும் முயற்சி. அந்த முயற்சிக்கு ராமர் கொடுத்த விலை, தன் உயிரான மனைவியை காட்டுக்கு அனுப்பியது.
[quote

சீதையை காட்டில் கொண்டு விட்டு வந்த பிறகு பொது மக்களிடையே நடந்த ஒரு குளத்தங்கரை (கற்பனை ) உரையாடல் :
1. ராஜா ராணியை காட்டிலே கொண்டு போய் விட்டு வந்துட்டாராமே ஏன்
2. யாரோ சொன்னாங்களாம் “இராவணனால் கொண்டு செல்லப்பட்டது தெரிந்தும் எப்படி அவரால் சீதையோடு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது” என்று அதனால் தான் ...
1. அங்கே இலங்கையிலே தான் தீ குளிச்சாங்க என்று பாத்தவங்க எல்லாம் சொன்னாங்களே
2. அதை சில பேர் நம்பலையாம்...
**-சில பேர் என்ன ,சுத்தி வளைச்சு பேசறே ..நான தான் நம்ப முடியாது ன்னு சொன்னேன்
1 அப்போ இங்கே மறுபடி ஒரு தடவை தீக்குளிக்கச் சொல்லணும் என்கிறாயா?
** ஆமாம்
2.இவனைப் போல ஆளுங்க சொல்லறுதுக்காக தீக்குளிக்கணும்.என்றால்
நம்ம ராணி தினப்படி குளியலே தீக்குளியலாதான் இருக்கவேண்டி வரும் .
1 .இப்படி யாரோ ஒருத்தன் சந்தேகப்படறான் என்பதைக்கூட ராஜா ராணி கிட்டே சொல்லலையாம் .
2 .ஏன்?
1 “ யாரோ சந்தேக படறாங்களா இல்லையா என்பது கேள்வி இல்லை ..என் கணவர் நீங்க என்னை நம்புறீங்களா இல்லையா” அப்பிடின்னு ராணி திருப்பி கேட்டு விட்டால் என்ன செய்யறது ன்னு தான் இருக்கும் .
**நான் சொன்னேன்னு கோவிச்சுகிட்டீங்களே.இப்போ என்ன நடந்தது பாத்திங்களா . நான் சொன்னது தப்புன்னா ராஜாவே என் மனைவி தூய்மை ஆனவர் என்கிறது தான் சத்யம் அப்பிடீன்னு சொல்லி இங்கேயே வைத்துக்கொள்ள வேண்டியது தானே . அவர் தான் சத்தியத்தை காப்பாத்தறவர் ஆயிற்றே ஏன் அப்ப டி செய்யலே ? பேசாமல் காட்டுக்கு அனுபிச்சுட்டா ரே. அப்ப டீன்னா என்ன அர்த்தம் ? நான் சொன்னது சரி ன்னு அவரே ஒத்துகிட்டார் ன்னு தானே அர்த்தம்? அவங்க சுத்தம் இல்லைங்கரதுக்கு இது தான் ஆதாரம்.
1-அட ப் போப்பா பெரிய ஆதாரத்தை கண்டுட்டார் இவரு .உன்னைப்போல ஆள் சொல்லறதை கேட்டு அவனவன் கர்ப்ப மாயிருக்கிற பொஞ்சாதியை காட்டுக்கு அனுப்ப ஆரம்பிச்சா காட்டிலே ஒரு பெரிய பிரசவ ஆஸ்பத்திரி கட்ட வேண்டியது தான் .
**-அப்ப நீ தான் சொல்லேன்.ராணியம்மா கேள்விக்கு ராஜா என்ன பதில் சொல்ல முடியும்
2 “ என் சொந்த நம்பிக்கையை பற்றி கேள்வியில்லை. நான ராஜா அதனால் நாட்டு மக்கள் நம்பிக்கை தான் முக்கியம் அப்ப டின்னு சொல்றது
1. அதுக்கு ராணி என்ன சொல்லுவாங்க தெரியுமா?..
2. இதோபார் நேரடியா அவங்களே பேசிக்கிட்டாங்கன்னா இப்படித்தான் இருக்கும்னு நான நினைக்கிறன். நியே பாத்துக்க
சீதை –ராஜா ராமனா இருக்கணும் என்றால் தானே அந்த கடமை .ராஜ் யத்தை உங்க தம்பி கிட்டே கொடுத்துட்டு சீதா ராமனா வாங்க. நாம இரண்டு பேருமே காட்டுக்கு போயிடுவோம்.உங்களுக்கு சத்தியம்னு தெரிஞ்சதை காப்பாற்ற ராஜா பதவியை தியாகம் பண்ணிடுங்க.. முன்பு ஒரு தடவை தியாகம் பண்ணினவர் தானே நீங்கள்.
ராமர் –அப்போ ராம ராஜ்ஜியம் என்றால் பூமியை வேறு எப்படி சொர்கத்துக்கு இணையாக உயர்த்துவது என்று தான் யோசிக்கிறேன்
சீதை : தன மனைவி தூ ய்மை ஆனவள் என்பது சத்தியம் என்று தெரிந்தும் , தன்னுடைய வாரிசை தன் வயிற்றிலே சுமக்கிறாள் என்று தெரிந்தும் அவளை காட்டுக்கு அனுப்பறது தான்.ராம ராஜ்ய தர்மமா?நானும் இந்நாடு பிரஜை தானே ? எனக்கு என்ன நியாயம் வழங்க போகிறீர்கள் .நீங்கள் என்னை காட்டுக்கு அனுப்பினால் அப்போது எப்படி பேசுவார்கள் தெரியுமா?
“பார்த்தாயா ராஜாவுக்கே சந்தேகம் இருக்கு. அதான் பேசாமல் காட்டுக்கு அனுப்பிவிட்டார் . “எனக்கு நம்பிக்கை இருக்கிறது””” “ என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே. ஏன்? “ என்று கேட்பார்கள் .என் மேல் இப்படி ஒரு களங்கம் அநியாயமாக விழுகிறதே அதை தடுக்க வேண்டிய கடமை கணவன் என்கிற முறையில் உங்கள் ஒருவராலே தானே முடியும் . அந்த கடமையிலிருந்து தவறுவது தான் ராம ராஜ்ய தர்மமா?
ராமர் :மக்கள் குரலை நான மதிக்கிறேன் என்று எப்படி நிரூபிப்பது ?
சீதை : இப்போது நான கர்பவதி . வயிற்றில் சுமந்து கொண்டிருப்பது உங்கள் வாரிசு.இப்போது என்னை கை விட்டால் களங்கம் எனக்கு மட்டுமன்று. பிறக்க போகும் குழந்தையின் மேல் களங்கததை சுமத்த உங்களுக்கு ஏது உரிமை ?
ராமர் :குழந்தை பிறந்து வயதிற்கு வந்த பின் என் மகன் தான் என்று சபையில் சொல்லிவிடுகிறேன் .
சீதை : எனக்கு ஏற்பட்ட பழி ?
ராமர் :எனக்காக எவ்வளவோ துன்பபட்டிருக்கிறாய் ..இதையும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள கூடாதா?.
சீதை : துன்பத்தை பொறுத்து கொள்ளலாம். பொய் களங்கத்தையும் அவமானத்தையும் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் .?
ராமன் : தர்மத்தின் வழிதான் என்ன ?
சீதை :இதோ நான சொல்கிறேன் .அரச பதவியை தம்பிகளிடம் விட்டு விட்டு என்னோடு வந்து விடுங்கள் .காட்டுக்கு போய் விடலாம்.வீணர்கள் பேச்சு நம் காதில் விழாத தூரத்திற்கு .என்னைமட்டும் காட்டுக்கு அனுப்பினால் யாரோ ஒருத்தன் பேச்சை நீங்கள் நம்பினீர்கள என்ற பழி மட்டுமல்ல , அதை சாக்காக வைத்து உண்மையிலே யே உங்கள் உள் மனதில் எங்கோ அந்த சந்தேகம் இருக்கிறது என்றாகிவிடும்.எனக்கும் உங்கள் வாரிசுக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமை யிலிருந்து தவறாதீர்கள்.
ராமன் ; ஆனால்..வந்து...
சீதை ; உங்களுக்கும் வீண் பழி வந்து சேரும். ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் எக்காரணத்துக்காகவும் தம் பதவியை துறக்கமாட்டார்கள் .மனைவி மக்களை வேண்டுமானாலும் கை கழுவி விட்டு தாம் பதவியிலேயே ஒட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள்.எக்காலத்திலும் இதுவே தான் இந்த நாட்டின் தலைஎழுத்து என்று ஆகிவிடும் . அதற்கு நீங்கள் முன்னோடியாக இருக்க வேண்டாம் .....

ராமர் என்ன செய்தார் என்பது தெரியும் .இத்தகைய உரையாடலை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்று அஞ்சி த்தானோ என்னவோ காரணம் எதுவும் கூட நேரடியாக சொல்லாமல் கங்கை கரைக்கு உலா அனுப்பி வைப்பது போல் நாடு கடத்திவிட்டார் தர்மத்தின் நாயகர்
.தன கணவனின்” “ மனோ தைரியத்தை” அறிந்து தானோ என்னவோ சீதை அவரை முன்பே” “ ‘ஸ்த்ரீயம் புருஷ விக்ரகம்”(ஆண் உருவத்தில் வந்த பெண் ) என்று சொன்னாரோ என்னவோ? பெண் மனதின் ஆழத்தை யார் கண்டது ?

பி .கு 1-சீதை அசோக வனத்தில் இருந்தது பத்து மாதம். அது என்ன கணக்கு பத்து மாதம் ?(duration of pregnancy –a coincidence?) எந்த ராமாயணத் திலாவது விவரம் இருக்கிறதோ?
பி.கு.2 –இதை வெறும் இலக்கிய நோக்கில் மட்டுமே அணுக வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் .

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

இப்படியும் ஒரு தாய்…

யார், யாரையோ இந்தியத் தாய், பாரதத் தாய், இந்திய அன்னை, பாரத அன்னை, வீரத் தாய், புரட்சித் தாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் உண்மையான புரட்சித் தாய் யார் தெரியுமா?

ராமன் வனவாசம் போக வேண்டுமென்று தீர்ப்பாகிறது. அவனும் மரவுரி தரித்துக் கிளம்பத் தயாராகிறான். உடனே லட்சுமணன் தன் தாய் சுமத்திரையைப் பார்க்க விரைந்து செல்கிறான். அண்ணனுடன் தானும் காட்டிற்குப் போக அன்னையிடம் உத்தரவு கேட்கிறான்.

உடனே தாய் உள்ளம் களங்கியதா?, கண்ணீர் பெருக்கியதா? பாசத்தால் துடித்ததா? போகவேண்டாம் என்றெல்லாம் தடுத்ததா?

இல்லவே இல்லை ” மகனே! வனமே இனி உனக்கு அயோத்தி; தந்தையும் அரசனும் இனி இராமன் ஒருவன்தான்; சீதைதான் இனி உன் தாய். இனி நீ இங்கே க்ஷண நேரம் தாமதிப்பதும் குற்றம்” என்கிறாள். – எப்பேர்ப்பட்ட தாய்!

உடனே லட்சுமணன் தாயின் அனுமதி பெற்ற மகிழ்ச்சியோடு, பெருமிதத்தோடு கம்பீரமாக அண்ணனுடன் புறப்படுகிறான். அப்பொழுது சுமித்திரை திடீரென அவனை அழைக்கிறாள்.

“மகனே!” என்று அவள் அழைக்கவும், தாயின் உள்ளத்தில் ஏதேனும் சலனம் ஏற்பட்டுவிட்டதா, முடிவை மாற்றிக் கொண்டு விட்டாளா என்று தோன்றுகிறதா?. இல்லை. அப்படி இல்லை. அப்படி அவள் மாற்றிக் கொண்டாள் பின் எப்படி அவளால் புரட்சித் தாய் ஆக முடியும்?

அவள் சொல்கிறாள், ”இவனுடன் செல்லாதே!”

”என்ன, என்ன, இவனுடன் செல்லக் கூடாதா ஏன்?. முதலில் ’போ’ என்று அனுமதி தந்தவள் பின் ஏன் இப்படிச் சொல்கிறாள்” என்று சந்தேகம் வருகிறதா?

சற்று பொறுங்கள்.

அவள் சொல்கிறாள், “ இவனுடன் செல்லாதே! இவன் பின் செல்!”

பின்னவன்
அப்போதுதான், தன் தாயின் மனதில் உள்ளது லட்சுமணனுக்குப் புரிகிறது. லட்சுமணன் இராமனுடன் சமமாகப் போனால், அவனுக்குத் தானும் சமமானவன் என்ற எண்ணம் உண்டாகி விடுமாம்; அதாவது தானும் ஓர் அரசகுமாரன் என்பது நினைவிற்கு வந்து விடுமாம்; ஒருவேளை தன்னை இராமன் தம்பியென்றே நினைத்துக் கொள்ளவும் கூடுமாம் அவன். அப்படிப்பட்ட நினைவு வந்தால் வனத்திலே இராமனுக்குச் செய்ய வேண்டிய ஏவல்கள் செய்வதில் குறைகள் ஏற்பட்டு விடுமே! அது இழுக்கல்லவா?

அதனால் தான் சுமித்திரை,

” பின்னும் பகர்வாள் மகனேஇவன் பின்செல் தம்பி

என்னும் படியன்(று) அடியாரினில் ஏவல் செய்தி

மன்னும் நகர்க்கே இவன்வந்திடின் வாஅ தன்றேல்

முன்னம் முடியென்றனள்.”

என்கிறாள்.

மன்னவனுடன் பின்னவன்
அதாவது, “உன்னைப் பார்ப்பவர்களும் ’இவன் இராமன் தம்பி’ என்று தெரிந்து கொள்ளாமல் ’அவன் ஏவும் தொழிலைச் செய்யும் அடிமை’ என்று நினைக்கும்படி நடந்து கொள். இவ்விதமாகப் பணி செய்து, நகரத்துக்கு இராமன் மீண்டு வந்தால் நீயும் வா.” இல்லாவிடடால்…..

இல்லாவிடடால்… - ஒருவேளை ’இராமனுக்கு ஏதேனும் ஆபத்து நேருமாயின்’ என்பதைச் சொல்லவும் அஞ்சி – ’அதன்றேல் முன்னம் முடி’“ என்கிறாள்.

அதாவது “அப்படியில்லாமற் போனால், வேறு ஏதாவது அபாயகரமான சூழ்நிலைகள் வந்தால் நீ அவனுக்கு முன்னமே உயிரை முடித்துக் கொள்” என்று ஆசிர்வதிக்கிறாள்!

”அண்ணனைக் காக்க உன் உயிரைக் கொடு” என்று ஆசிர்வதிக்கும் இவளல்லவோ புரட்சித் தாய்! வீரத் தாய்! ஞானத் தாய்! பாரதத் தாய்!

இந்த அன்னையை அல்லவா நாம் பாரதத் தாயாக, இந்திய அன்னையாகப் போற்றி வணங்க வேண்டும்!!


Shared from Mannargudi Sitaraman Srinivasan

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

பொன்பைரவி அவர்களுக்கு,
சுந்தர காண்டம், 37-வது அத்தியாயத்தில், சீதை அனுமனிடம் கூறுவது - "இராவணன் எனக்கு ஒரு வருடம் அவதி கொடுத்திருக்கின்றான்; அதில் பத்து மாதங்கள் முடிந்துவிட்டன; இன்னும் ஒரு மாதம்தான் நான் பொறுப்பேன்; அதன்பின் உயிர் துறப்பேன்" என்கிறாள். ஆக, அந்த ஒரு மாதம் முடிவதற்குள் இராமன் சீதையை மீட்டான் என்று கொள்ளலாம்.

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

ராமாயணத்தின் பகுதியாகக் கூறப்படும் உத்தர காண்டம், உண்மையில் ராமாயணத்தின் பகுதியாயென நம்ப இயலவில்லை. யுத்தகாண்டத்தின் கடைசி அத்தியாயமான ராம பட்டாபிஷேகத்துடன் ராமாயணம் நிறைவு பெறுகின்றது. ஏனெனில், அதனில் 'பலஸ்ருதி' எனப்படும் ராமயாணத்தினைப் படிப்பதனால் ஏற்படும் பயன்கள் கூறப்பட்டுள்ளன. சீதை 11 மாதங்கள் பிறத்தியான் வீட்டில் சிறைப்பட்டிருந்ததை ஏற்க இயலாதவர்களால் புனையப்பட்ட கதை உத்தரகாண்டம் என்பர்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Regarding posts 28 and 33...
Here is the quote from Valmiki Ramayana which is the authority:
यदहं गात्रसंस्पर्शं गतास्मि विवशा प्रभॊ।
कामकारॊ न मॆ तत्र दैवं तत्रापराध्यति॥ (Valmiki Ramayana, Yuddhakanda 116.8)

Word for word meaning:

यदहं = If I
गात्रसंस्पर्शं = body contacted
गतास्मि = I was gone
विवशा = helpless
प्रभॊ = My Lord!

कामकारॊ = Lust motivated
न = not
मॆ = me
तत्र = (was) there
दैवं = Fate
तत्रापराध्यति = there was the blame

Based on this confession, you decide whether She was bodily pure or not!
Of course no question about mental purity...
(Don't invoke the expert testimony of Mr. Agni !)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Aanmeekam...

Post by Ponbhairavi »

Thanks vgovindan. I too have serious doubts about Uttarakandam. " இன்னும் ஈண்டு ஓர் திங்கள் இருப்பால் யான் " is also found in Kamban But the specification of the period still eludes.
1- any indication as to how many months or years after the pattabhishegam Rama sends his wife to the forest?
2-Why Rama has not relinquished his throne if he found that he could no longer be a role model for his citizen.

Thanks CML,
I do not know sanscrit unfortunately. This is news to me and I understand why pouranikars have always skipped this. I like your bold approach . Could you pl clarify To whom Sita is making this confession? to Thrijadai, Hanuman or Rama himself or Lashmana who is preparing the fire I read carefully your translation.Is there any contextual indication as to whether the verses quoted by you can by some subtle nuances be made to be only an allusion to the event of Ravana physically lifting Sita to his ratham , an event which the sanscrit knowing kamban has cleverly circumvented
Rajagopalan

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

You have asked certain queries to CML. However, I shall try to answer these -
The statement of sItA quoted by CML is made to rAma and the assembly where sItA was standing accused by rAma, before fire ordeal.

She makes a similar statement to hanumAn when the latter offers to carry her on his shoulders to join rAma - she says

"yadahaM gAtra saMsparSaM rAvaNasya gatA balAt |
anISA kiM karishyAmi vinAthA vivaSA satI || (sundara kANDa chapter 37:63)
(That I was forced into contact with Ravana was because, being helpless, without protector and having lost control of myself, I could not do anything.)

As per uttara kANDa, chapter 41, one month (based on bharatA's statement to rAma (verse 18)) after paTTAbhishEka, rAma enters aSOka vana (chapter 42) (not same as one in lankA where sItA was kept captive) along with sItA and remains there with her for two winters (as per commentary on verse 26) that is two years. After that, sItA becomes pregnant (verse 30). Then rAma comes to know of the criticism by a citizens (chapter 43) after which sItA is sent to forest. Therefore, to answer your query, rAma seems to have sent sItA to forest after (at least) two years and one month after paTTAbhishEka.

Regarding your query as to why rAma did not relinquish his throne, there seems to be no such mention in uttara khANDa of rAma feeling that he is no longer a role model for citizens.
Last edited by vgovindan on 10 Feb 2014, 20:02, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Aanmeekam...

Post by Ponbhairavi »

Thanks Govindan. So there are two confessions by Sita.Ok. I was also given to read the reference quite below:
http://creative.sulekha.com/a-comment-a ... 95972_blog
Now I get a clearer picture. Valmiki has prepared the reader's mind by the episodes of Ahalya and Sugrivan. Thanks to you and CML.

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

Ponbairavi,
I went through the link provided by you. I would like to make one remark. The agni parIkshA is not mere oath of innocence. sItA actually enters fire - please see the following verse -

EvamuktvA tu vaidEhI parikramya hutASanam |
vivESa jvalanaM dIptaM niSSankEnAntarAtmanA || yuddhakANDa - 116:29

Saying so, and going clockwise round the fire (as a mark of respect), sItA, for her part entered the flaming fire with a fearless mind.

(highlighted - is it nivESa jvalantaM?)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

It must be vivesa (entered) as otherwise there will be no verb and grammatically incorrect!
I believe this Agni pariksha is fire walking. In olden times folks were asked to prove their innocence by
walking on fire. Even today we witness fire walking rituals in temples. No wonder Sita came out unscathed!
Valmiki has indeed dramatized it to justify Rama's taking her back.
I have some questions. Rama was over sixteen at the time of marriage. How come Sita did not conceive during the
14 years in the forest? She conceived only after two years after the Pattabhishekam! Of course uttarakandam is of
suspicious origin...

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

cml,
In case of vanavAsa, it is understandable that SrI rAma and sItA lived an ascetic life, which SrI rAma vowed - and not a family life. However, from the following two verses, you may see that rAma and sItA lived a family life for twelve years after marriage. Even during this period sItA did not conceive.

samA dvAdaSa tatrAhaM rAghavasya nivESanE |
bhunjAnA mAnushAn bhOgAn sarvakAmasamRddhinI || sundara kANDa 33:17
tatastrayOdaSE varshE rAjyE cEkshvAkunandanam |
abhishEcayituM rAjA sOpAdhyAyaH pracakramE || 18

Enjoying human luxuries and endowed with an abundance of all enjoyments, I dwelt in the well-known abode of SrI rAma for twelve years.
Then in the thirteenth year, the King with his preceptor proceeded to install SrI rAma on the throne.

Therefore, from present day stand-point, we may not be able explain why sItA did not conceive.

In regard agnI parIksha, you may like to peruse the following verses -
On hearing that tail of hanumAn has been set on fire, sItA prays to Fire God as under -

yadyasti patiMSuSrUshA yadyasti caritaM tapaH |
yadi vA tvEkapatNitvaM SItO bhava hanUmataH || sundara kANDa 53:27
yadi kiMcidanukrOSastasya mayyasti dhImataH |
yadi vA bhAgyaSEshO mE SItO bhava hanUmataH || 28
yadi mAM vRttasampannAM tatsamAgamalAlasAm |
sa vijAnAti dharmAtmA SItO bhava hanUmataH || 29
yadi mAM tArayEdAryaH sugrIvaH satyasaMgaraH |
asmAdduHkhAmbusaMrOdhAcchItO bhava hanUmataH || 30

If service rendered to one's husband is any value, if austerities have ever been practised by me of if there is exclusive devotion in me to my husband, please prove cool to Hanuman.
If there is any compassion for me in the heart of that sagacious prince, or if any residue of good luck still exists in me prove cool to Hanuman.
If SrI rAma, whose mind is set on piety, fully knows me to be richly endowed with morality and ardently keen on being united with him, prove cool to Hanuman.
If the noble sugrIva, who is true to his promise, should be able to take me across this ocean of agony, prove cool to Hanuman."

After setting lankA on fire, when hanumAn reaches sea shore, he remembers, to his horror, that he did not bother about sItA also being affected by fire. Therefore, he becomes grief stricken. Then he consoles himself with these following words -

atha vA cArusarvAngI rakshitA svEna tEjasA |
na naSishyati kalyANI nAgniragnau pravartatE || 55:22
nahi dharmAtmastasya bhAryAmamitatEjasaH |
svacaritrAbhiguptAM tAM sprashTumarhati pAvakaH || 23
nUnaM rAmaprabhAvENa vaidEhyAH sukRtEna ca |
yanmAM dahanakAryaM nAdahaddhavyavAhanaH || 24
trayANAM bharatAdInAM bhrAtRRNAM dEvatA yA |
rAmasya ca manaHkAntA sA kathaM viniSishyati || 25
yad vA dahanakarmAyaM sarvatra prabhuravyayaH |
na mE dahati lAngUlaM kathaMAryAM pradhakshyati || 26

Or, it is possible the lady who is charming of all limbs has been protected by her own glory. The blessed lady would not perish, for fire does not burn fire.
Surely fire would not dare to touch the consort, protected on all sides by her own immaculate character of that pious minded prince (SrI rAma), who is endowed with immeasurable energy.
Surely it was because of SrI rAma's glory and the virtue of sItA that the fire, whose natural function it is to consume, could not burn me.
How should she, who is an object of adoration to the three brothers of SrI rAma, bharata and others, and is beloved of SrI rAmA's heart, perish?
Or how should this fire, whose natural function it is to burn and has power over all, yet which could not burn even my tail, consume the noble lady?

Under these circumstances, was agni parIkshA a simple drama that SrI rAma enacted knowing fully well that his wife cannot be burnt by fire? It would be a blasphemous to ask so. But it cannot escape notice.

'tatra daivaM tatrAparAdhyati' which you have quoted is a little intriguing. The same 'daivaM' is invoked by SrI rAma addressing lakshmaNa before proceeding to forest -

na lakshmaNAsmin mama rAjyavighnE mAtA yavIyasyabhiSankitavyA |
daivAbhipannA na pitA kathaMcijjAnAsi daivaM hi tathAprabhAvam || AyOdhyA kANDa 22:30

Our youngest mother (kaikEyI) ought not on any account be suspected of having brought about this interruption in my installation nor our father, both of whom are subject to the control of Providence; for you know Providence to be possessed of unfailing power.

Notwithstanding the statement of SrI rAma 'AtmAnam mAnushaM manyE', there is an undercurrent of knowledge of His avatAra kArya which He could not hide in spite of Himself.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

'AtmAnam mAnushaM manyE'
That is the key word. Rama considered himself an ordinary human being. One can do almost a historical analysis of Valmiki Ramayana bereft of poetic exaggerations.
Narada narrrates the Story to Valmiki which he made ito the 'Adi kAvya'.
Kamban has embellished and deified Rama as did Tulsi later. Thyagaraja has built the beautiful edifice of CM based on Him.
Krishna knew all along he was God incarnate whereas Rama was a perfect human being subject to all human foibles.
Under these circumstances, was agni parIkshA a simple drama that SrI rAma enacted knowing fully well that his wife cannot be burnt by fire? It would be a blasphemous to ask so. But it cannot escape notice.
I am trying to rationalize the episode. Indeed if there was an agni parIksha, indeed if Sita was just human, indeed if Rama himself was human what is the explanation?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டுப் பயலே

பல் போறியாம் படுக் காளிப் பயல்களோடுங் கூடி

சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி

தியங்காதே ஒரு வார்த்தை திரு வார்த்தை எனவே

ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனைத்தான்

அடியோடு வெரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை

பேய் மதியா நீ எனைத்தான் அறியாயோ எல்லாம்

பெற்றவன் தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே.....

Pratyaksham Bala
Posts: 4179
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

பாடல் 4838:-

பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.

"தத்துவ வெற்றி" எனும் தலைப்பில் திரு வள்ளலார் அவர்கள் படைத்த இருபது ஆசிரிய விருத்தப் பாடல்களுள் இதுவும் ஒன்று.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

Sanmaarga Sangam
சன்மார்க்கிகளே திருவடி மெய் பொருள் என்றால் என்ன என்று தெரியுமா? தெரியாதவர்கள் தேடுங்கள் ... நேரத்தை வீண் செய்ய வேண்டாம்...

இனிநீர் சமரச சன்மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து
மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே ~ஞான சரியை

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை
about an hour ago near Coimbatore
அன்புடைய என் சகோதர சகோதரிகளே வந்தனம்.

வள்ளலார் அடைந்த நிலை என்ன?அவருடைய தூல தேகம் என்ன ஆயிற்று?

ஜீவகாருண்யம்,பக்தி ,ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறியதால் அவர் தேகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.
பொன் வண்ணம்,பன்னிரண்டு வயது பருவம், நரை,திரை ,பிணி,மூப்பு, மலம்,ஜலம்,வியர்வை,ஆகாரம்,சாயை முதலியன இல்லாமை.ரோமம் வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமை. இந்த நிலையை வள்ளலார் அடைந்ததனால் சென்னையிலிருந்து திரு மாசிலாமணி முதலியார் என்பவர் வள்ளலாருக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒன்பது முறை அவரைப் போட்டோ பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் வள்ளலாரின் தேகம் போட்டோவில் விழவில்லை.அதனால்தான் வள்ளலாரின் போட்டோ இல்லை. அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்கவில்லை.இப்போது உள்ள படங்கள் எல்லாம் கற்பனையாக எழுதப்பட்ட உருவமேயன்றி வள்ளலாரின் உண்மை உருவம் அல்ல. வள்ளலார் சுத்த தேகம் அடைந்தார் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

அவருடைய தொடர்ந்த முயற்சியால் அடுத்து அவர் பிரணவ தேக நிலை அடைந்தார்.சுத்த தேகத்தில் அவர் அடைந்த நிலையோடு அவருடைய தேகம் ஐந்து முதல் எட்டு வயது பருவமாக மாறியது. அவரைக் கண்களால் பார்க்க முடிந்ததே தவிரக் கைகளால் பிடிக்கமுடியததாக ஆயிற்று. சுடர் போலத் தோன்றுமடா தூல தேகம் என்ற சித்தர் வாக்கும் இதை நிரூபிக்கின்றது.

இறுதியாக அவர் தேகம் ஞான தேகமாக மாறியது. ஞான தேகம் என்றால் அது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்கிறார் வள்ளலார். சில நாட்கள் வள்ளலார் தோன்றாமலும் இருந்திருக்கின்றார். 1874 ம் ஆண்டில் வள்ளலார் திருக் காப்பிட்டுக்கொண்டு மறைந்தது அனைவருக்கும் தெரியும்.ஆனால் 1870ம் ஆண்டே வள்ளலார் காணாமல் போயிருக்கிறார். வள்ளலாருடைய தலை மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார். தருமச்சாலையை நிர்வகித்து வந்திருந்த ஆனந்த நாத சண்முகநாத சரணாலய சுவாமிகளுக்கு 8-6-1870 அன்று எழுதிய கடிதத்தில் நம் பெருமான் இப்போது எவ்விடத்து எழுந்தருளி இருக்கின்றது? சாலை என்ன ஸ்திதியில் இருக்கின்றது?அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றார்கள் இது விபரங்களை உடனே கட்டளையிடும்படிக் கோருகிறேன். அந்தப் பக்கங்களிலிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுந்தோறும் மனம் துடிக்கின்றது.ஆதலால் உண்மை விடயங்களை உணர அருள் செய்தல் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை ஊன்றிப் படித்தால் வள்ளலார் தோன்றாமலேயே இருக்கும் நிலை பெற்றார் என்றும் உண்மை அறியாத ,மக்கள் வேலாயுத முதலியாரிடம் சில பல சொல்லியிருக்கின்றார்கள்.என்றும், உண்மையை உணரவேண்டி வேலாயுத முதலியாரும் தருமச்சாலையில் இருந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகளுக்குக் கடிதம் எழுதி இருக்கின்றார் என்றும் அறிய முடிகிறது. பிறர் கண்களுக்குத் தோன்றாமல் வள்ளலார் மறைந்திருந்தார் என்பது நிரூபணமாகின்றது
. இதற்குப் பதில் எழுதுவது போல் வள்ளலாரிடமிருந்து ஓர் அறிக்கை வெளியாகின்றது. வள்ளலார் அறிக்கை வெளியிட்ட நாள் 26-10-1870

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது.ஒருவனைப்பற்றி அநேகம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள் .என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன்.அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன்.அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாய் நடத்துங்கள்.

சென்னையில் இருக்கும் பிரம்ம ஞான சங்கத்தாருக்கு வேலாயுத முதலியார் கொடுத்த வாக்கு மூலத்தில் கூட வள்ளலார் அடிக்கடி மறைந்து இருந்ததைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறியுள்ளது:1855ம் ஆண்டில் சென்னையைவிட்டு சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர்,கருங்குழி என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலம் இருந்தார். அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பது உண்டு. இவர் எங்கு சென்றார் என்பதை அறிவோர் எவரும் இலர். இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.

ஞான தேகத்தின் தன்மை தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். தான் ஞான தேகம் பெற்றதை இவ்வாறு அடிக்கடி மறைந்து மறைந்து சோதித்துப் பார்த்திருக்கின்றார்.என்பதே உண்மை.
ஞான தேகம் பெற்ற வள்ளலாரால் யார் கண்ணுக்கும் புலப்படாமலும் இருக்க முடியும். அவர் நினைத்தால் மீண்டும் தோன்றவும் முடியும்.

வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்கிறார்களே ?

உண்மைதான். வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது உண்மையே. அவர் கலந்ததை அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் அந்த இறைவனோ வள்ளலார் இருந்த குடிசையைத் தேடி வலிய வந்து அவருடன் கலந்தான் என்பதே உண்மை. ஆதாரம் அருட்பா.

வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து
மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையிநூடே திருவடி சேர்த்து அருள்க
எனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருளமுதம்
நல்கியதன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு
குடிசையுள்ளும் நுழைந்தனையே ( திரு அருட்பா)

வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டதற்குச் சில ஆண்டுகட்கு முன்பே இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான்.ஆண்டவன் வள்ளலாருடன் கலந்ததை அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபின் நடந்ததாகச் சொல்வது தவறு.

வள்ளலாரின் தேகம் அணு அணுவாக மாறி உலகமெங்கும் பரவிவிட்டது என்று கூறுகிறார்களே?

வள்ளலார் தான் எழுதிய திரு அருட்பாவில் பலப் பலப் பாடல்களில் தான் என்றும் அழியாத தேகம் பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றார். உதாரணமாக:

காற்றாலே ,புவியாலே, ககனமதனாலே,கனலாலே,புனலாலே, கதிராதியாலே
கூற்றாலே,பிணியாலே, கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும்
செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்கவேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி
இறைவனைச் சார்வீரே

தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே போகம் எல்லாம் எந்தன் போகமதாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்க மேலேற்றி ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பளித்து என்னை ஆகம வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே
வள்ளலார் அழியாத தேகம் பெற்றுவிட்டதைப்\ பல பாடல்களில் கூறியுள்ளார்.
அவர் தேகம் அணு அணுவாகச் சிதையவில்லை என்பதையும் இவ்வாறு சொல்வோர் வள்ளலாரைப் பற்றிய உண்மையை அறியாதவர் என்றும் உணரவேண்டும்.
தேகம் அணு அணுவாகச் சிதைந்து போனால் அவருடைய அந்த உடம்பில் இருந்த அவரது உயிர் என்ன ஆயிற்று என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள். ?

வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார் என்கிறார்களே?

இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்புகளிலும், புகுந்து கொள்வோம் என்று வள்ளலார் கூறியது உண்மைதான். கார்த்திகை மாதம் உள்ளே போனவர் மார்கழி மாதமே வெளியே வந்துவிட்டார்.தை மாதம்தான் மீண்டும் வள்ளலார் தனது அறைக்குள்ளே நுழைந்து திருக்காப்பிட்டுக் கொள்கிறார்..அவர் எல்லோருடைய உடம்பிலும் புகுந்து கொண்டார் என்றால் அப்போதிருந்த மக்கள் உடம்பில் மட்டும்தானா இப்போதுள்ள நம் உடம்புகளிலும்கூட என்று சொல்லலாமா?
உண்மையிலேயே வள்ளலார் நமது உடம்பிலே புகுந்தால் நாம் இப்படியா இருப்போம் ?இதுவரை வந்த மக்கள் உடம்பில் எல்லாம் வள்ளலார் புகுந்து கொண்டார் என்றால் அவர்கள் எல்லோரும் இறந்துதானே போனார்கள் அந்த உடம்புகளில் எல்லாம் புகுந்து கொண்ட வள்ளலார் என்ன ஆனார்?வள்ளலார் யாருடைய உடம்பில் புகுந்து கொண்டாலும் வள்ளலார் புகுந்து கொண்ட உடம்பிற்கு மரணம் வராது. ஆனால் வள்ளலார் தவிர மற்ற எல்லோரும் மரணம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்துகொள்ளவில்லை. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்களைக் கண்டு அவர்கள் மீது மனம் இரங்கி அவர்கள் உடம்பில் புகுந்தாவது அவர்களைத் திருத்தலாம் என்று வள்ளலார் எண்ணினார். மக்கள் அந்த அளவிற்குப் புண்ணியம் பண்ணவில்லை. அதனால் வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்து கொள்ளவில்லை. சரி அப்பட்டியானால் அவர் என்னதான் ஆனார்?

வள்ளலார் ஒளி உடம்பு பெற்றார் என்கிறார்களே அது உண்மைதானே?

ஒளி உடம்பு பெற்றார் என்பது உண்மைதான்.நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் ஒரு சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியதை நினைவில் கொண்டுவாருங்கள்.அப்போது என்ன செய்தோம்.ஒருவன் கண்ணை மூடிக்கொள்வான். மற்றவர்கள் ஒளிந்துகொள்வார்கள்.கண்ணைமூடிக்கொண்டு இருந்தவன் ஒளிந்து கொண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். ஒளி என்ற சொல்லுக்கு ஒளிந்துகொள்ளுதல் என்று ஒரு பொருள் உள்ளது புரிகின்றதா? வள்ளலார் நமது கண்களுக்குத் தோன்றாமல் இருக்கும் ஒளி தேகம் பெற்றார் என்பதே உண்மை. ஒளி என்ற சொல்லுக்குப் பிரகாசம் என்று பொருள் கொண்டால் அவர் தேகம் தோன்றவேண்டும். ஒளியை மறைக்கமுடியாது.ஞான தேகம் என்பது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்றால் தோன்றாமல் இருக்கும் நிலையே ஒளி தேகம் என்பது. தோன்றவில்லை என்பதால் வள்ளலார் இல்லை என்று சொல்லி விடலாமா. இறைவன்கூடத் தோன்றவில்லை அவன் இல்லை என்றா சொல்கிறோம். ஆகாயம் கூடத் தோன்றவில்லை.அதனால் ஆகாயமே இல்லை என்றா சொல்கிறோம். இதுவும் வள்ளலார் கருத்துதான்.

கனமுடையேம் கட்டுடையேம் என்று களித்து இறுமாந்து இருக்கின்றீர் என்ற பாடலில் வள்ளலார் ஒளிப்பிடமும் அறியீர் என்கிறார்.அடுத்த வரியில் சினமுடைய கூற்று வரும் செய்தி அறியீரோ என்று கேட்கிறார். கூற்று வரும்போது ஒளிப்பிடம் அறிந்தால் கூற்றைத் தடுக்கலாம் என்று அறிகிறோம். ஞான சரியை முதல் பாடலிலேயே கடைசி வரியில் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே என்றார் . அடுத்த பாடல் முதல் வரியிலேயே புகும் தருணம் இது கண்டீர் என்று ஆரம்பிக்கின்றார். இதுதான் ஒளிப்பிடம். ஆக ஒளி என்ற சொல்லுக்கு இங்கே பிரகாசம் என்று பொருள் கொள்வது தவறு.ஒளிந்து கொள்ளுதல் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.

வள்ளலார் என்னதான் ஆனார்?

தன் தேகத்தை மறைத்துக்கொண்டார். !!வள்ளலார் ஞான தேகம் பெற்றுவிட்டதையும் அவரால் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைந்திருக்க முடியும் என்றும் முன்பே விளக்கப்பட்டுள்ளது. 30-1-1874 வெள்ளிக்கிழமையன்று மேட்டுக் குப்பத்தில் ஓர் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. சில நாட்கள் கழித்து அரசாங்கத்தார் வந்து கதவைத் திறந்து பார்த்ததில் அங்கு ஒன்றும் இல்லாதிருந்தது என்றும் நாம் அரசாங்கத்தாரின் அறிக்கையிலிருந்து அறிகிறோம்

. தான் என்ன செய்துகொண்டேன் என்று அவரே விளக்குகின்றார்.
பஞ்ச பூதங்களாகிய மண் ,நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகியவற்றில் மண் ,நீர்,நெருப்பு ஆகிய மூன்றும் நம்முடைய கண்களால் காணமுடிகிறது. காற்றைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் உணரமுடிகிறது.வானத்திலே அண்ணார்ந்து பார்த்தால் தெரிகிற நீல வண்ணம் ஆகாயம் அல்ல.சூரிய ஒளியின் நீல வண்ணம்தான் நமக்கு ஆகாயம்போல் தோன்றுகிறது. ஆகாயம் என்பது ஒன்றுமல்லாத ஒரு வெளிதான்.மண்,நீர்,நெருப்பு,காற்று ஆகிய நான்கும் தன்னைக் காட்டுகின்றன. ஆனால் ஆகாயம் மட்டும் தன்னைக் காட்டவில்லை.ஆகாயம் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை. வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்

மன் செய்துகொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்துகொண்டதை
நான் செய்து கொண்டேன்
முன்செய்துகொன்டதும் இங்ஙனம் கண்டீர் மூவகையாம் உடலாதியை நுமது
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன்னடி காணப்
பொருந்திக் கொடுத்தேன்
என் செய்துகொண்டாலும் செய்து கொள்கிர்ப்பீர் எனைப் பள்ளி எழுப்பி
மெய் இன்பம் தந்தீரே

வான் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை என்று வள்ளலார் தான் பெற்ற நிலையைதெளிவாகஅறிவிக்கின்றார்.

வள்ளலாருடைய தேகம் மண்ணில் புதைக்கப்படவில்லை,நெருப்பினால் தகனம் செய்யப் படவில்லை.எனவே வள்ளலார் இன்றும் தன் தேகத்துடன் இருக்கின்றார். அவருடைய ஞானதேகம் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. இதுவே உண்மை

வள்ளலார் இருக்கிறார் என்று நாம் அறிவதனால் நமக்கு என்ன நன்மை?
நாம் செய்த,செய்கின்ற வினையின் காரணமாக நமக்குத் துன்பம் நேரிடுகிறது.நாம் செய்த வினைக்குரிய பலனை இறைவன்தான் நமக்கு ஊ ட்டுகிறான்.தீவினை நல்வினை எனும் வன் கயிற்றால் இந்த ஜீவர்களை ஆட்டுகின்ற தேவே என்கிறது மகாதேவ மாலை.
மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவதற்கே வள்ளலாரை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறான்.இந்தச் செய்தியை வள்ளலார் தான் எழுதியுள்ள அகவலில் தெரிவிக்கின்றார்
. \
உலகினில் உயிர்களுக்குரும் இடையூ றெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக என்றனை

இந்த அகவல் வரிகளை ஊன்றி நோக்கினால் நமக்கு வரக்கூடிய இடையூறுகள் எல்லா வற்றையும் வள்ளலார் விலக்கவேண்டும் இது ஆண்டவன் வள்ளலாருக்கு இட்ட கட்டளை. இந்த உத்தரவு வேறு எந்த அருளாளருக்கும் தரப்படவில்லை .வள்ளலார் ஒருவர்தான் இந்த உத்தரவைப் பெற்றவர். இதை உணர்ந்து அவரிடம் போனால், அவரை வணங்கினால், நம்முடைய இடையூறுகள் விலகிப் போகும். இதை விட வேறு என்ன வேண்டும்?

ஆண்டவன் இத்துடன் நிற்கவில்லை. வள்ளலாரை அழைத்து நீ இந்த மக்களுக்கெல்லாம் துணையாய் இருப்பாயாக என்றும் ஆணை இட்டுள்ளான்

எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக் கருள் புரிந்து
எல்லோருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லோருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம்
எல்லோர்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே/

வள்ளலார் என்ன ஆனார் என்று தெளிவாகப் புரிந்ததா?
அதனால் நமக்கு என்ன நன்மை?
வள்ளலாரை யார் உண்மையாக வணங்குகிறார்களோ, யார் அவர் காட்டிய வழியாகிய ஜீவகாருண்யத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவது மட்டுமின்றி எல்லோருக்கும் அவர் துணையாகவும் இருக்கின்றார். இதைவிட வேறு என்ன பலன் நமக்கு வேண்டும்?
வள்ளலாரைச் சரணாகதி அடைந்ததால் நான் எவ்வளவோ நன்மைகளை அடைந்துள்ளேன்.அடைந்துகொண்டிருக்கின்றேன்

https://www.facebook.com/arutperumjothisiva

Pratyaksham Bala
Posts: 4179
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Ref: Post #47.

பாடல் 4:-

"கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே."

"ஞான சரியை" எனும் தலைப்பில் திரு வள்ளலார் அவர்கள் படைத்த 28 பாடல்களுள் இதுவும் ஒன்று.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 4

உலகீர்! நீவீர், உய்திக்குக் காரணமாய்ப் பொருந்தியுள்ள பொருளை அறியவில்லை. ஆயினும், `யாம் உய்ந்தோம், உய்ந்தோம்` என்று மயங்கி உரைக்கின்றீர். மலரில் மணம்போல உம்மிடத்து உள்நின்று தோன்றக்கூடிய சிவனை, யோக நெறியால் உள்ளத்தில் பொருந்தக்கண்டு, அதனால் உம் மயக்கம் நீங்கப் பெற்றால், தொன்று தொட்டு வருகின்ற பிறவிக்கு மூல காரணமாய் உள்ள ஆணவ மலம், கீழ்ப்பட்டு அடங்கிவிடும்.
==============================================

எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. 5

இயல்நூற் கல்வி, பாடல்களை ஓதுதல், மற்றும் அறுபத்து நான்கு கலைகளையும் பயிலல் இவையெல்லாம் இகழ்ச்சிக் குரிய பாசத்தால் விளையும் பிறவியை நீக்கமாட்டா. அதனால், நான் அப்பிறவியை அழிக்கும் முறையை. `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` எனப் பெயர்பெறும் மூச்சின் இயக்கங்களை நெறிப்படச் செய்யும் வகையால் அறிந்து கொண்டேன்

ஞான சரியை.......

Post Reply