Kanchi Maha Periyava

Post Reply
thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
Periyava’s advice to a rich indian settled in the U.S Once in Sri Kanchi , there were some people standing near periyava to have dharshan & his blessings . A richly looking person in his early 60s , came there with his family. They were all in very costly dress & jewels . When his turn came he sat down on the floor opposite to Periyava (a rope was tied as a fence) . Periyava just looked at him .
Rich man started to speak in his Malayalam accent Tamil: “ Periyava ! I am in the States for the last 25 years . But , I honestly married our Indian girl & came to India only for that purpose . This is my bharyal (wife ) & these are my puthrans & puthris ! ( sons & daughters) . Though we are in the states we strictly follow our Indian Brahmin traditions & customs only . I perform sandhyavandhanam daily in the morning & evening . See , I don’t even miss any annual shraddham ( pithru karma ) of my father & mother . Whatever is required for this purpose I can easily get them from here . I am very much particular about it , you know Periyava ? yes ! ( ekalamana enai petthava nalla paragathi adaiya naan evvalavu venumnalum selavu pannu thayar Periyava ! ) I am ready spend any amount for my late Parents to let them get the good position There in the Heaven . ) Because of two reasons . Firstly they are my Parents who gave me this body .. Secondly , I should be the role model to my son , isn’t it ? . Then only , he will follow all these & do these karmas to me too in future ? If WE the periyava go in the right direction & create a raja paattai ( Royal path ) surely the next generation too will go in that same right direction smoothly & easily . Pithrukkalai vida osandha periya dheivam yaaru irukka , Periyava ? ( other than the pithrus , which other God is in the higher level than them ) And, Finally , I shall be very happy , atleast if some people learn from me & follow these to show their sense of gratitude to their late parents & pithrus , Periyava ! I am right , isn’t it ? What do you say , Periyava ? “

All the people standing nearby including the Mutt people , were furiously looking at him b’cos of his ill manners & boasting blabberings. So long Periyava was just looking at the floor with his head down . Now , slowly lifted his head & began to ask him questions
“ ( nee indha shraddhatthukku samanlam ingerundhu varavazhaikka etthanai selavaradhu ? ) How much it costs to import the required items to perform a shraddham there ?
Looking around very proudly , he said some amount in dollars & the equivalent Indian rupees , in his manner .
Periyava “ Oh! It costs that much ? I didn’t think it would cost that much ! What about the shraddha manthras & a purohith to conduct it ? “
“ That’s not a big thing at all Periyava . Nowadays science has grown much. And I take advantage of it for such good reasons only . There is one instrument called tape recorder & cassettes . I recorded all the manthras through my permanent family purohith at my home here . And use it while I perform the shraddha there. Mansirundha margam undunnu solluva, illiya ? ( they say that if there is will , there is a way , isn’t it ? )
Periyava: “ Oh ! So there is a way like this to perform the shraddha scientifically too ! “
“ Saraiyaach chonnel Periyava ! “
Periyava: “ To come here & go back to YOUR States , how much it costs , each time ?”
Then , he replied elaborately about the different plane fares & other costly expenses & said finally “ But , I always come & go back in executive class only For the reason to avoid some unwanted elements of the lower class passengers who will take advantage to move with us equally , & sometimes , it will become dangerous too to the people like me.

Periyava: “ Do you visit India every year & when ? “
“ Oh ! That I can’t say , Periyava . Because , both officially & un officially I visit here . When I visit officially I come alone . But every year unofficially visiting India during the Christmas Holidays there & also during the Navarathri season without fail. For navarathri I come with my full family, because of 2 reasons . Modhalle, andha Ambal, Lokamatha, ellathaiyum aattip padaikira Akilaanda koti nakai illainna indha lokam edhu? (Firstly, if that Super most power is not there , then how can this World will be there ? “) Secondly, to create intimacy & affection with these religious functions & festivals & to understand their value , I bring my children here . Money is not the only criteria in life . These types of good characters must be absorbed by them to become the best citizen in future .

Periyava:“ “ So , you earn plenty there & spend lavishly only to bring up your children properly & to satisfy your pithrus ! And, you have a good chance of coming to India both officially & unofficially. From the way you explained here , I can understand that , you are meeting the particular relatives only to suit your ‘ standard ‘, because you want to avoid unnecessary low level people to take advantage to come near you !

(Now the other people’s face became bright with smiles as they had understood where Periyava’s talk is leading to ! On the contrary , the rich man’s group began to make curves in their bodies . The main person was simply staring at Periyava to avoid others’ eyes. )
You can spend any amount to import anything required from here to perform the pithrukaryams there only to suit your convenience. And, who advised you to do all this pithrukaryams there? How will they be able to take their pindams offered by you there in that para desa (foreign) bhoomi? They can & are allowed to accept the pindams & the monthly therthams (new moon Tharppanam) & Mahalaya tharppanams & shraddhams in this Bharatha punya bhoomi only. That’s all the more reasons that we, the Indians Brahmins are refrained from crossing the sea/going abroad. These pithru karmas are done to get their blessings & for the welfare of our family & the future generation too. Yes! You are right in saying that there is no dheivam superior than the pithrus. Each time, when you did the shraddha there, they all came there eagerly & hungrily too to receive the pindams & to bless you all . On the contrary, they couldn’t do so & had to return back with empty stomach & cursing you all in all these years . You are able to programme well in advance to come to India to celebrate the Super most power during the Navarathri . And, you thought it was colossal waste to visit India to perform the Pithrukaryam alone Now , all your poor pithrus are awaiting here eagerly & very hungrily to receive your pindams & therthams . Immediately tell your family shasthri to perform the pithru karmas for all these 25 years in one shraddha at the right place convenient to you & him . The pithrus will be very happy at this & bless you all .

The rich man’s ego disappeared & with tears rolling down his cheeks fell at feet of the Real Guru/God who was smiling and happily & blessing them all .

The rich man got up & said in a crying tone & flapping his cheeks “ Mahaperiyava , En dheivame . en kannaith thirandhuttel . ( O! my God . you have opened my eyes . ) thappup pannitten , Maha thappup pannnitten Periyava . ( I have done blunder ) Ippove poyi Periyava uttharavuppadi itthanai varusha shraddhatthaiyum kandippa seyyaren . ( immediately I shall certainly perform the shraddha of all these years’ balance as per the order of Periyava . ) Enga ellaraiyum Periava periya mansudan mannicchu prasadham tharanunun vendikkiren ! idhukku mela enakku onnum sollath theriyale . ! “ ( I request that periyava should forgive us all with great karuna & give us prasadham . I don’t want more to say ) .

Periyava gave them the prasadham of fruits kalkandu kumkum flower and a blouse bit to his wife & said. (Ellarum madatthula aaharam pannittu ambalaiyum darsanam pannittu pogalam. shraddhamlam pannittup oorukkup poradhukku munnadi vandhuttup po) All of you have your meals here in the mutt & visit the Kamakshi temple & proceed. After finishing with the pithru karma, before returning back to your country , visit here again & go ) ellarum shemama iruppel ! ( all of you will be very much alright ) & lifted His palms to them & others too & blessed with His eternal & divine smile !
The rich man & his family again did a sashtaanga namaskaram saying “ adhudhan Periyava venum , adhudhan venum ! ) That’s why we want Periyava ) & slowly went back with bright faces .
The man with full of ego and who spoke about him in volumes to Periyava, says “ I don’t what to say more you have opened my eyes . “
Who else can advise so eternally to such a person without wounding his heart & to realize his great blunder for 25 years to his pithrus ? Further how beautifully HE had got him the blessings of his pithrus too to relieve him from the permanent curse too . Oh ! splendid . Nobody in the world would have tolerated this much lorry load of ego & correct him too in such a mild manner & bless him also !!! This is the foremost lesson we all should learn from our GURU !

JAYA JAYA SANKARA HARA HARA SANKARA

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Mahaperiyava Deekshanya Paarvai
Both the kidneys did not function. Survival was very difficult. He had spent a lot of money visiting several specialists and took the medicines prescribed by them, but all was in vain.

The man came to Periva and poured out his grief. Generally, Periyava would show kindness and compassion towards devotees who come with such problems, but on that day He spoke quite harshly.

“People commit mistakes and adharma, and come here when they have a problem. They don’t realize their faults at all. What can I do?”

Why this sudden outburst from Periyava? – no one could understand.

After a while, Periva said, “This man’s ancestors had established a Trust for doing dharma activities. They had left behind land which gave a good yield. It was intended to erect water booths (தண்ணீர் பந்தல்) and carry out the dharma activities. But this man has sold the land, and gobbled up all the money”.

The man who came with kidney problems felt very guilty. “Henceforth, I will erect water booths (தண்ணீர் பந்தல்) and carry out the dharma activities”, promised the man.

Periyava at once softened!

“Are you aware of Vasambu? (வசம்பு Acorus calamus also called as Common Sweet Flag — a medicinal plant) You will get it in traditional stores selling herbal medicines. Grind it and apply under your belly regularly”, said Periyava.

The man came again for darshan after about ten to twelve days. Even before Periva could ask, he said “There is no trouble now!”

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

இன்று மாப்பிள்ளைக்குப் பெண் தேடும் படலம் மிக நீளமானது. ஒரு வருடம், இரண்டு வருடம் என வருடக்கணக்கில் பெண் தேடி, கடைசியில் எதிர்வீட்டுப் பெண்ணைப் பேசி, மணம் முடிப்பார்கள். வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு, நெய் தேடி அலைந்த கதைதான்!

இந்த விஷயத்தை மகா பெரியவா கதையோடு சொல்லும் விதம் அழகானது; அற்புதமானது! இதோ, அவர் வாய்மொழியாகவே கேட்போமே!
'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளின் பெற்றோர், பந்துக்களுக்குள்ளேயே ஒரு முறைப் பையனைப் பார்த்து, அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ, ''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.
அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள்.
ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். 'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணினால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.
ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.
அவளைத் தவிர, அந்தப் பிள்ளையாரிடம் வேறு யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை; வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக்கொண்டு 'ஒன்றுக்கு’ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், 'அடடா, இந்தப் பிள்ளையாரையும்விட உயர்ந்தது இந்த நாய்தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்திக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டாள்.
வழியில், அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது. ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக்கொண்டு அதட்டினான்; முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அவனையே அதட்டி அடிக்கிற இவன்தான் எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.
இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!


'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி, லௌகிகமாக ஒரு கதை சொல்வர்.


''எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.
ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது?

நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.

'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.
நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி.
அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'
என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறார், மகா பெரியவா! நாம்தான் உண்மையை அறிந்து தெளிய வேண்டும்

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

From post in FB by Mannargudi Sitaraman Srinivasan

என் நாத்தனார் பிள்ளைக்கு திடீரென்று கழுத்தில் ஒரு வீக்கம். வலி என்றால் அப்படி ஒரு வலி. 'கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம். உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்' என்று சொல்லி விட்டார்கள் டாக்டர்கள். என் நாத்தனாருக்கு வயிற்றை கலக்கியது. பணச் செலவு, ஆஸ்பத்திரி வாசம் என்பது ஒரு புறம் இருக்க. டாக்டர்களின் பேச்சும் உற்சாகமளிப்பதாக இல்லை.

'மன்னிக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரிடம் ரொம்ப பக்தி உண்டே... அடிக்கடி ஓடிப்போய் சேவித்துவிட்டு வருவாள். அவரிடம் என்ன தெய்வீக சக்தி இருக்கோ தெரியவில்லை. நாமும்தான் போய் பார்த்துட்டு வருவோமே...!'

அவர்கள் காஞ்சிபுரம் சென்ற நாளில் பெரியவா காஷ்டமௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டு கொண்டார்கள். மௌனமாயிற்றே. பதில் சொல்லவில்லை. எதுவுமே பேசாமல் தன் கழுத்தை தடவி கொண்டே உள்ள போய்விட்டாராம்.

என் நாத்தனாருக்கு மிகவும் ஏமாற்றம். 'பெரியவாளை பற்றி கூடை கூடையாக சொல்வாளே மன்னி... இப்படி ஜாடை கூடக் காட்டாமல் போயிட்டாரே என்ற ஏக்கம்.

நாளைக்கு ஆபரேஷன். 'தொண்டை என்னோவோ போலிருக்கு, அம்மா...' என்று பையன் சொன்னதை கேட்டதுமே என் நாத்தனார் கதி கலங்கி போய்விட்டார்.

"கண்ணா...கண்ணா...என்னடா; ஆச்சு..?"
வாந்தி ஆச்சு!
தேங்காய் ஓட்டின் ஒரு சில்லு வெளியே வந்து விழுந்தது. பையன் நிம்மதியாகி, "சரியாப் போச்சு' என்றான்.
மறுநாள் குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு போனார்கள்.
டாக்டர், பையனின் கழுத்தில் கையை வைத்து அழுத்தினார்.
'வலிக்கிறதா?"
"இல்லை..."
"ஆபரேஷன் தேவையில்லை.."
என் நாத்தனாருக்கு உடலில் புல்லரித்தது.
பெரியவாளின் தீவிர பக்த குடும்பங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது.

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

deleted

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Subject: THE VEDIC LANGUAGE

THE OLDEST LANGUAGE

It is common knowledge now that a spate of data on Maha Periyava is flooding emails and face book nowadays to the extreme joy of Periyava devotees. It does not matter who wrote what and which was the source of the information, inasmuch as the contents of such messages speak of the supreme soul who lived with us and there is rich and rewarding benefit ensues to the readers

I have summarised the information fitting conversation wherever needed to make it easy to follow:

Once four foreigners visited Kanchi Mutt to have dharshan of Maha Periyavaa. They were an Israeli, an Italian, a German and a British. They had come to do their Ph.D., in Philology on the topic of 'the most ancient languages in the Occidental and the Oriental world'. They were studying Latin, Hebrew and Greek languages in the Occidental part and Sanskrit and Tamil in the Oriental part.

Periyava was in his private quarters, performing his nithya karma and anushtanas and elaborate poojas ; they had waited and desired to take a photo of Him but His kaingaryams refused permission to photograph the Periyavaa. They were heartbroken that they could not take a picture. All the four of them were standing near a tree since morning waiting for the Periyava to finish his poojas and give dharshan. Many were already waiting like them

Some one asked them '' how come you all have been standing for the past 6 hours? One of them looked at his watch and exclaimed, 'oh my God, has it been 6 hours? He is a Man of Certainty and is Beyond Time!'

Periyavaa came in after 10 minutes. All went and prostrated to Him. Looking at the man (who had the camera hanging on his neck) who had wanted to take the photos, Periyavaa gestured with His hands indicating that he can take pictures now. He posed for three photos and stopped him before the fourth.

''Whey have you all come here and with what purpose? " asked Periyavaa.

''We have visited many places regarding our research on the most ancient language''

"Oh I see. Did you arrive at any conclusion as to which is the most ancient language?"

The Israeli replied, "Hebrew is the most ancient in the Occident; but in the Oriental, people say that both Sanskrit and Tamil are the oldest, we are confused and that is why we are here for Your opinion".

Periyavaa added "There is another language which is the most ancient than all these, it is the Vedic Language. It is the Source of even Sanskrit and Hebrew.'' Periyavaa thought for a while and then added

"There is a verse about Rebirth in Hebrew, can you recite it completely?" HE asked the Israeli by giving the man the first two words.

The Israeli recited it for 3 to 4 minutes. Swamigal looked around and asked some Mutt student boys, and addressed them

" You have all learnt Rig Veda, can you recite this particular verse? he suggested certain manthras to the boys."

Those boys recited the vedha manthra for about 5 minutes.

Periyavaa then addressed the Israeli ''Did you understand what these boys recited now?"

The four men remain quiet.

Maha Periyava smiled and turned to the boys and said "you all will definitely not understand what this man had recited in Hebrew!"

He then turned to the Israeli and said, " what you have chanted before is the same as what these boys chanted!"

The 4 foreigners were stunned and did not know what to respond. Periyavaa told them that he will prove it and asked for a paper and a pen.

"In Vedas it is mentioned that the world has been classified into 32 portions/regions. And in each of the 32 geographic regions, Vedas say how the Veda Aksharas have changed/pronounced in those places!"

He asked each of them which region they came from and then explained how a particular Veda Aksharam has been changed in the individual places! He asked the boys to recite the particular verse from Rig Veda again and told the men how each Aksharam in Rig Veda in that verse
will sound in their Regions!

"I will now say this verse with some difficulty as it has been a long time since I had Abhyasam. and the Mahan started to chant the manthra slowly, slightly differing from the basic sloka aksharam so that it matched how it will sound in Hebrew. After he recited the aksharams he asked the Israeli if he understood the recital of the manthra and aksharam and observed any familiarity.

To the Vedic boys He said, "I said the slokas in a slightly different form based on how each Aksharam will sound in Hebrew. Please do not think it is wrong; there is this injunction in the Vedas that it can be recited this way also."

To everybody's astonishment and surprise, the Israeli started to recite in Hebrew what exactly Periyavaa chanted the aksharas in a modified form, as it resembled Hebrew language. The Israeli therefore chanted it together with Him!!!

After this demonstration Periyavaa addressed all assembled there "I told you earlier, the same verse in Rig Veda is present ditto in Hebrew, but the Aksharas have changed slightly. (like we say "Yamuna" but in the North it is "Jamuna", "Va" in the south is "Ba" in West Bengal, "Paa" in Tamil is "Haa" in Kannada etc)

Therefore, the most ancient language in the world is the Vedic language!" Swamigal asked the the paper and pen to be supplied to the four men to prepare a table and fill it with how the Rig Veda Aksharams sounded in their language. This was completed in 15 minutes.

The Israeli was shocked and exclaimed, "this is something unimaginable!"

He asked him, "what do you think now? Do you now agree that everything has sprung from Vedas?"

The look on the Israeli was not convincing.

Periyavaa interpolated ''what are you thinking. May be the Vedas could have originated from Hebrew?"

The man nodded his head "yes, it could have been the other way also, may be the Vedas could have come from Hebrew".

Periyavaa replied smilingly "you have only the lock, whereas we have both the key and the lock! It is even mentioned in the Vedas as to which Maharishi from here in India went to your region and spread/taught Vedas in Israel!"

The man seemed to be convinced in the end that the Vedic language is the oldest and time honoured''

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Thanjavooran..Simply exhilarating...

Image

கோலம் கண்டேன்!
சுற்றிலும் செம்மண் பூசி இருக்கக் கண்டேன்!
வண்ண மலர் மாலை சாற்றிருக்க கண்டேன்!
வாச மிகு மலர்கள் தூவி இருக்கக் கண்டேன்!
நறும்புகை தூபம் காட்டி ஸ்லோகங்கள் இசைகக் கணடேன்!
ஐயன் நடுவினில் இருக்கக் கண்டேன்!
சுற்றிலும் அமைதி நிலவ கண்டேன்!
வலிக்கும் வேங்கடவன் என் உள்ளம் அவனிடம்
லயத்திருக்கக் கண்டேன்!
அவனிடம் நான் கொண்ட நேசத்தை
எண்ணி எண்ணி மனம் கொள்ளும்
ஆநந்தத்தை கண்டேன்!
என்னுள் மலர்ந்திருக்கும் குருவருள்
எனக்கு வழி காட்ட கண்டேன்!
venkat k

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Maha Periava

மதுரம்... மதுரம்!

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும் போது நறுமணத்தையும் பழமாக இருக்கும் போது மதுரமான சுவையையும் நமக்குத் தருக்கின்றன.

இந்த பழம் மதுரம் ஆவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும் இருந்து அதன் பின்னரே மதுரமாகிறது. மதுரம் என்பது தான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய்விடுகிறது. பழத்தில் மதுரம் நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது.

அது போல் இதயத்தில் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும். புளிப்பு இருக்கும் வரை பற்றும் இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பிலும் காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால் நிறைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றுப் போய்விடும். பழம் தானே விழுந்து விடும்.

படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமான ஒவ்வொருவரும் இப்படியே ஆனந்தமாக சம்சார விருட்சத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள். பழமாக ஆவதற்கு முன் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் வேண்டியிருக்கின்றதோ, அது போல் காமம், வேகம், துடிப்பு எல்லாமும் வேண்டியவைதான் போலிருக்கிறது.

புளிப்பு இருக்க வேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும். துவர்ப்பு இருக்க வேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும். ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல், பிஞ்சு அனவரதமும் பழமாகிக் கொண்டே இருப்பது போல் நாமும் மதுரமான அன்பை நினைத்துக் கொண்டே இருந்தால், மோக்ஷத்தை வெளியில் தேட வேண்டாம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ -அப்படி இருந்தால் தானாக மோக்ஷம் .

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம்" அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார்.

உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.

மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

“வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” - மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?”

மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். “ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Some hidden treasures...

Kamatchi Thai Madiyil - Padmashri Dr. Seerkazhi S. Govindarajan

http://www.youtube.com/watch?v=bHaTL6qbonA

Kalavaiyil Oru Naal - Padmashri Dr. Seerkazhi S. Govindarajan

http://www.youtube.com/watch?v=P70iwwMqob0

Mei Gana Guru Devan - Padmashri Dr. Seerkazhi S. Govindarajan

http://www.youtube.com/watch?v=TRQfSatcqUQ

Bharatham Muzuvathum - Padmashri Dr. Seerkazhi S. Govindarajan

http://www.youtube.com/watch?v=4MIdulZ1cDw

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Mahaperiyava Kanagabishekam Video - Part 1

http://www.youtube.com/watch?v=PwVoW0CQMmg

MahaPeriyava Kanakabhishekam - Part 2

http://www.youtube.com/watch?v=APm0jtySt1s

MahaPeriyava Kanakabhishekam - Part 3

http://www.youtube.com/watch?v=QZASN__Q0Rg

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Kanakabishegam Images Snaps taken from video and...Mixing by me: vk...

Maha Periava has enabled me with his blessings to compose 100 compositions on him so far and
Today I am posting the 100th one..

100. கனகாபிஷேகம்…..

கண்டிராத காட்சியை கண்டேனே!
ஏழுலகம் உய்ய நடமாடி
அகிலமுழுவதும் சுற்றி வந்த ஞான சேகரனின்
கால்கள் கடுத்தனவோ அன்றி முடங்கினவோ?

தீன பந்துவாக, எளியவனாகக்காட்சி தந்து
மனமெல்லாம் கொள்ளை கொண்ட மணிவண்ணா!
இகழ்வார் அவர்தம் நாத்திகம் பேசும்
கல்மனத்தையும் கசிய செய்து
அருளுரை வழங்கும் வித்தகா!

அடியவர்கள் உவந்து ஆதாரமாயிருக்கும்
எங்கும் நிறைந்த ஞானபிரம்மம் தாள் தன்னை
கைகளில் ஏந்தி இருக்கையில் அமர்த்தும்
காட்சிதனை கண்டேன்!

அபிஷேகத்திற்கு மணம் வீசும் கொன்றை மலர்
மாலைகள் சூடிய ஐயன்
அமர்ந்திருந்த பாங்கனை கண்டு களித்தேன்

மறையவர் முழங்கும்
வேதத்தின் சுவையை ரசித்தேன்...

அகில் புகை எங்கும் பரவி இருக்க கண்டேன்

நாதஸ்வரத்தில் சாவேரி ராக வர்ணம் இசைந்துவர
பெரியவரும் சிறியவரும் பெண்டிரும்
மன்னவரும் விண்ணவரும்
மகழ்ந்து மலர் தூவி நிற்க..

இளையவர் கனக காசுகளை எடுத்து தர
பெரியவர் அண்ணலுக்கு
அபிஷேகம் செய்வித்து ஐயனுக்கு
மனமகிழ்ந்து மகுடம் சூட்ட
கான குயிலின் ஜய ஜய சங்கர
அகிலமெல்லாம் ஒலித்தது….
venkat k

You can see in the pictures..Shri PV Narasimharao PM, Shri R Venkat raman Ex President, Shri Arjun Singh, and also Shri Shivaraj Patil

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

deleted..

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
Periyava- Beshajam bishak- the physician and the medicine- Vishnu sahasranamam

அலகிலா விளையாட்டுடையான் 030/14.08.2014

மயிலாடுதுறை அருகில் உள்ள ஒரு கிராமம் கோழிக்குத்தி. அங்கு வசித்து வந்த ஹாலாஸ்ய நாதன் - சரஸ்வதி என்ற தம்பதியர் பெரியவாளிடம் பக்தி கொண்டு அவரை அவ்வப்போது தரிசித்து வருவதுடன் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பெரியவாளிடம் நேரிலோ அல்லது வீட்டில் அவர் திரு உருவப்படம் முன்போ முறையிட்டு அருள் பெறுவது வழக்கம். ஒரு முறை ஹாலாஸ்யம் தன் குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்று கருணைக்கடலை தரிசனம் செய்தார். பெரியவாள் மூங்கில் தட்டி மறைப்பால் செய்த குடிலில் இருந்து தரிசனம் வழங்கும் போது எதிரில் அறைக்கு வெளியே நின்ற ஹாலாஸ்யத்த உள்ளே வரும்படி அழைக்க அவர் மட்டும் உள்ளே சென்றார். பெரியவாளிடம் உரையாடிக் கொண்டிருந்த ஹாலாஸ்யத்தை திடீரென வந்த ஒரு பெரிய கருந்தேள் கொட்டிவிட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்தது. தாளாத வலியின் கடுப்பால் அவதியுற்ற ஹாலாஸ்யம் பெரியவாளையும் கொட்டிவிடும் என்று பதறி 'தேள் தேள்" என அலறினார்.

பிரேமையின் வடிவான பெரியவாள் சலனமில்லாமல் ஹாலாஸ்யத்தை பார்த்து 'என்ன தேள் கொட்டிடுத்தா? தேள் கொட்டினால் எப்படி இருக்கும்? என்ன பண்ணனும்? என வினவினார். 'தேள் கொட்டினா ரொம்ப வலிக்கும். மயக்கமாவரும்' என்றார் ஹாலாஸ்யம். 'இப்ப அப்படி எல்லாம் இருக்கா? இல்ல எறும்பு கடிச்சாப்பல இருக்கா? என்று பெரியவாள் கேட்டார். என்ன அதிசயம்! ஹாலாஸ்யத்தை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த கடுப்பு மறைந்து எறும்பு கடித்தது போல வலி குறைந்தது.

உடனே பெரியவாள் சிப்பந்தி ஒருவரை அழைத்து 'மூலையில் ஊறும் தேளை எடுத்து வெளியே போடு' என உத்தரவிட வந்த சிப்பந்தியும் சர்வ சாதாரணமாய் தேளின் கொடுக்கை சரியாகப் பிடித்து எடுத்து வெளியே போட்டார். இதைக் கண்ட அனைவருக்கும் உடம்பு வேர்த்தது. மஹான்கள் சந்நிதியில் விஷ ஜந்துக்கள் கூட தங்கள் இயல்பான தன்மையை இழந்து நல்ல குணம் பெறும் போலும்! இந்த உண்மையை நிதர்சனமாகக் கண்ட அனைவரும் வியந்தனர். பெரியவாள் சாக்ஷாத் வைத்தீஸ்வரனே என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

அன்றிலிருந்து ஹாலாஸ்யத்தின் ஊரில் யாருக்காவது தேள் கொட்டினாலோ விஷக்கடி என்றாலோ அவருடைய வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவரும் உடனே கை கால்களைக் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு நடமாடும் தெய்வம் திரு உருவப்படத்தின் முன் நின்று வந்தவருக்கும் திருநீற்றைப் பூசி பெரியவாள் திருநாமத்தை மூன்று முறை உரக்க அழைத்து மனமாற வேண்டுவார். உடனே விஷம் இறங்கி வலி தெரியாமல் போவது தான் பேரதிசயம். இது தான் நாடிவந்தவரின் பிணிக்கு மருந்தாகும் பெரியவாள் மஹிமை.

அலகிலா விளையாட்டுடையான் 030/14.08.2014 மயிலாடுதுறை அருகில் உள்ள ஒரு கிராமம் கோழிக்குத்தி. அங்கு வசித்து வந்த ஹாலாஸ்ய நாதன் - சரஸ்வதி என்ற தம்பதியர் பெரியவாளிடம் பக்தி கொண்டு அவரை அவ்வப்போது தரிசித்து வருவதுடன் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பெரியவாளிடம் நேரிலோ அல்லது வீட்டில் அவர் திரு உருவப்படம் முன்போ முறையிட்டு அருள் பெறுவது வழக்கம். ஒரு முறை ஹாலாஸ்யம் தன் குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்று கருணைக்கடலை தரிசனம் செய்தார். பெரியவாள் மூங்கில் தட்டி மறைப்பால் செய்த குடிலில் இருந்து தரிசனம் வழங்கும் போது எதிரில் அறைக்கு வெளியே நின்ற ஹாலாஸ்யத்த உள்ளே வரும்படி அழைக்க அவர் மட்டும் உள்ளே சென்றார். பெரியவாளிடம் உரையாடிக் கொண்டிருந்த ஹாலாஸ்யத்தை திடீரென வந்த ஒரு பெரிய கருந்தேள் கொட்டிவிட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்தது. தாளாத வலியின் கடுப்பால் அவதியுற்ற ஹாலாஸ்யம் பெரியவாளையும் கொட்டிவிடும் என்று பதறி 'தேள் தேள்" என அலறினார். பிரேமையின் வடிவான பெரியவாள் சலனமில்லாமல் ஹாலாஸ்யத்தை பார்த்து 'என்ன தேள் கொட்டிடுத்தா? தேள் கொட்டினால் எப்படி இருக்கும்? என்ன பண்ணனும்? என வினவினார். 'தேள் கொட்டினா ரொம்ப வலிக்கும். மயக்கமாவரும்' என்றார் ஹாலாஸ்யம். 'இப்ப அப்படி எல்லாம் இருக்கா? இல்ல எறும்பு கடிச்சாப்பல இருக்கா? என்று பெரியவாள் கேட்டார். என்ன அதிசயம்! ஹாலாஸ்யத்தை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த கடுப்பு மறைந்து எறும்பு கடித்தது போல வலி குறைந்தது. உடனே பெரியவாள் சிப்பந்தி ஒருவரை அழைத்து 'மூலையில் ஊறும் தேளை எடுத்து வெளியே போடு' என உத்தரவிட வந்த சிப்பந்தியும் சர்வ சாதாரணமாய் தேளின் கொடுக்கை சரியாகப் பிடித்து எடுத்து வெளியே போட்டார். இதைக் கண்ட அனைவருக்கும் உடம்பு வேர்த்தது. மஹான்கள் சந்நிதியில் விஷ ஜந்துக்கள் கூட தங்கள் இயல்பான தன்மையை இழந்து நல்ல குணம் பெறும் போலும்! இந்த உண்மையை நிதர்சனமாகக் கண்ட அனைவரும் வியந்தனர். பெரியவாள் சாக்ஷாத் வைத்தீஸ்வரனே என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. அன்றிலிருந்து ஹாலாஸ்யத்தின் ஊரில் யாருக்காவது தேள் கொட்டினாலோ விஷக்கடி என்றாலோ அவருடைய வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவரும் உடனே கை கால்களைக் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு நடமாடும் தெய்வம் திரு உருவப்படத்தின் முன் நின்று வந்தவருக்கும் திருநீற்றைப் பூசி பெரியவாள் திருநாமத்தை மூன்று முறை உரக்க அழைத்து மனமாற வேண்டுவார். உடனே விஷம் இறங்கி வலி தெரியாமல் போவது தான் பேரதிசயம். இது தான் நாடிவந்தவரின் பிணிக்கு மருந்தாகும் பெரியவாள் மஹிமை.

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend


அலகிலா விளையாட்டுடையான் 028/12.08.2014

கருணையின் ஆலயமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவாளின் அருள் அமுத கடலில் மிதக்கும் கோடானுகோடி அடியவர்களில் ஒருவர் தான் திருவனந்தபுரத்தில் வசிக்கும் ப்ரம்மஸ்ரீ மணிகண்ட சர்மா. திருநெல்வேலி சங்கர சுப்பய்யர் புதல்வரான இவர் ரிக்வேதத்தை முழுமையாக படித்து பின் வேத அங்கங்களை பெரியவாளின் விருப்பப்படி ஹாஸ்பெட்டில் உள்ள பாடசாலையில் படித்த மஹாபண்டிதர். 1961ஆம் வருடவாக்கில் இவர் ஹாஸ்பெட்டில் படித்துக் கொண்டிருந்த சமயம் இவரது தங்கை கோமதிக்கு கல்யாணம் நிச்சயம் செய்து பத்திரிக்கையை அனுப்பியிருந்தனர் பெற்றோர்கள்.

தங்கையின் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு பெரியவாளை தரிசிக்க சென்றார். அச்சமயம் பெரியவாள் பண்டரீபுரத்தில் இருந்ததால் அங்கு சென்று பத்திரிக்கையை சமர்ப்பித்து விண்ணப்பித்த மணிகண்ட சர்மாவிற்கு இன்ப அதிர்ச்சியாய் அருள் செய்தார் பெரியவாள். மணிகண்ட சர்மா தரிசிக்க சென்ற அன்று மும்பையில் இருந்து திரு.D.S.அனந்தராம் தம்பதிகள் தரிசனத்திற்கு வந்தனர். அவர்களும் பெரியவாளிடம் எல்லையில்லா பக்தி பூண்டவர்கள். அவர்கள் 10 பவுன்ன் சங்கிலி ஒன்றை தயார் செய்து கொண்டு வந்து ஸ்ரீ மஹான் திருவடியில் சமர்ப்பித்து தங்கள் கனவில் பெரியவாள் வந்து இதுபோல் சங்கிலி செய்து தருமாறு கூறியதாகவும், அதன்படி செய்து வந்திருப்பதாகவும் கூறினர்.

அலகிலா விளையாட்டுப் பிரியரான ஸ்ரீமஹாபெரியவாள் அனந்தராம் தம்பதிகளுக்கு மணிகண்ட சர்மாவை அறிமுகம் செய்து வைத்து மணிகண்ட சர்மாவின் தங்கை கல்யாணம் நிச்சயமானது, அவர்களின் குடும்ப சூழ்நிலை முதலியவற்றை விவரித்து தமக்களித்த 10 பவுன் நகையை எடுத்துக் கொண்டு கல்யாணத்திற்கு சென்று மணப்பெண்ணிற்கு அணிவித்துவிட்டு திரும்ப அந்த நகைகளை எடுத்து வந்துவிடுமாறு உத்தரவிட்டு லைப்ரரி சுப்ரமண்யம் என்ற பக்தரையும் கூட அனுப்பினார். அனைவரும் தூத்துக்குடி வந்து கல்யாணத்தை விமரிசையாய் நடத்தி வைத்தனர். பிறகு பெரியவாள் உத்தரவுப்படி அனந்தராம் தம்பதிகள் பெண்ணுக்கு அணிவித்த 10 பவுன் நகையை திரும்ப எடுத்துக் கொண்டு பண்டரீபுரம் வந்து விபரமனைத்தையும் பெரியவாளிடம் கூறினர். கருணைமலை அந்த 10 பவுன் நகையை கிரயமாக்கி அதை வங்கியில் டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியை மாதா மாதம் கல்யாணப் பெண்ணிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அதன்படி சிலவருடம் நடந்து வர, மணிகண்ட சர்மா படிப்பை முடித்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் குடும்ப நிலைமையும் நன்கு முன்னேற பெரியவாளிடம் சொல்லி சங்கிலி பணத்தின் வட்டி மாதா மாதம் வருவதை மாற்றி நிரந்தர வைப்பில் வைத்து வேண்டும் போது எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்க அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பணம் பன்மடங்காக வளர்ந்து சர்மாவின் தங்கைக்கும் பெண் பிறந்து வளர்ந்து அவளுடைய திருமணத்திற்கு அந்த நிரந்தர வைப்பு பணம் செலவு செய்யப்பட்டது.

பெரியவாள் அருள்பார்வை மணிகண்ட சர்மாவின் தங்கைக்கு மட்டுமின்றி தங்கை பெண்ணிற்கும் கிடைத்தது காரணம் என்னவென்றால் மணிகண்ட சர்மா பெரியவாளின் விருப்பமான வேதத்தையும், வேத அங்கங்களையும் பயின்றது தான். பெரியவாளின் விருப்பப்படி தர்ம வழியில் நாம் வாழ முற்பட்டால் குடி முழுவதையும் ஆண்டு அருளும் பெரும் பொறுப்பை அவரே ஏற்றுக் கொள்கிறார்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்...

ராஜராஜன் செய்த யுக்தி!


‘நம்பிக்குத் தும்பி சொன்னார்’ என்பார்கள். தும்பி என்றால் யானை. அதன் கைதான் தும்பிக்கை. ஸாக்ஷாத் கணபதியே சரித்திரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது. அவர் சொன்னதை நம்பி பிற்பாடு ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்ற நூலாகப் பாடினார். நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.

ஆனால், அங்கேயுள்ள நிர்வாஹஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி ஸீல் வைத்தார்களே தவிர அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்கப் பெர்மிஷன் தருவது என்று கேட்டார்கள்.

‘அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய அதாரிட்டி இல்லையே!’ என்று கைவிரித்து விட்டார்கள்.

சோழ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிஷந்தான்! சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும், பக்திமானும் மட்டுமில்லை; புத்திமானும்.

என்ன யுக்தி என்றால், ஆலய விக்ரஹங்கள் என்கிறவை வெறும் பொம்மை இல்லை, சின்னமோ, ஸிம்பலோகூட இல்லை, அவை ப்ராண பிரதிஷ்டை ஆனவையாதலால் ப்ராணனுள்ள, உயிருள்ள மூர்த்திகளே என்பதுதான் ஆஸ்திகக் கொள்கை. மநுஷ ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் ‘அர்ச்சாவதாரம்’ என்றே சொல்வது வழக்கு, முக்யமாக வைஷ்ணவ ஸித்தாந்தத்திலே அர்ச்சா என்றால் விக்ரஹம். இதை வைத்தே ராஜராஜ சோழன் யுக்தி பண்ணினான். என்ன யுக்தி என்றால், மூவர் விக்ரஹங்களுக்கு விமரிசையாகப் ‘புறப்பாடு’ செவித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், ‘முத்ரை வைத்தவர்களே வந்து விட்டார்கள். கதவைத் திறக்கணும்’ என்று கேட்டுக் கொண்டான்.

எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவாரஸொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்...

http://www.dinamalar.com/supplementary_ ... 19&Print=1

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ராமன் உணர்வு .........மஹா பெரியவா

மஹா பெரியவா ராமாயணத்தை பண்ணிய ஒரு ஆராய்ச்சியில் என்ன சொல்கிறா தெரியுமா:

"ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாயணங்கள் இருக்கின்றன.

அதில் ஏதோ ஒன்றில் இந்த வித்தியாசமான விஷயம் இருக்கிறது.

அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈஸ்வரனே சீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம்! "மரகத மணி வர்ணன்' என்பார்கள். அம்பிகையை "மாதா மரகத சியாமா' என்கிறார் காளிதாசர். முத்து சுவாமி தீட்சிதரும் "மரகத் சாயே' என்று மீனாட்சியைப் பாடுகிறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தைத் தாண்டி மூலகாரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருவருக்குப் பத்தினியாக பார்வதியாகி இருக்கிறபோது பச்சை நிறமாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள்.

ஸ்ரீராமன் சீதையை விட்டு காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணி விடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்துவிடுகிறது!

"காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதற்காக மனைவியை அழைத்துப் போக மறுக்கிறாரே... இவரும் ஓர் ஆண் பிள்ளையா' என்று அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள். "உம்மை மாப்பிள்ளையாக வரித்த என் பிதா ஜனகர், நீர் ஆண் வேடத்தில் வந்திருக்கிற ஒரு பெண் (ஸ்திரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே' என்று ராமரைப் பார்த்துச் சண்டை போடுகிறாள் சீதாதேவி. இது சாக்ஷாத் வால்மீகி ராமாயண வசனம்.

ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூட்சுமமாக ஞாபகப்படுத்தி விட்டாள் சீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவுக்கு வந்தது. அதற்கு அனுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக சீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.

ராமரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய இராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாசத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்து அசோகவனத்தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாசத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈசுவரனைக் கட்டிக்கொள்ள, அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஓடி வந்துவிட்டான். மகா சிவபக்தனாகையால் அவனுக்குத் தன்னுடைய ஈசுவரன்தான் சீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப் போச்சு என்கிற கோபத்தினால், இப்போது அவள் தலையீடு இருக்கக் கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு, சீதையைத் தூக்கி வந்து அசோகவனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராட்சச அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில், ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் இராவணனுடைய அன்பு விகாரப் பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது கொஞ்சம் தெரிந்தது.

ஆஞ்சனேயரைப் பார்த்தவுடனே இராவணன், "இவர் யார்? நந்தியெம் பெருமானா?' என்று நினைக்கிறான். "கிமேஷ பகவான் நந்தி' என்பது வால்மீகி ராமாயண வசனம். சீதாராமர்களின் பரமதாசனாக இருக்கப்பட்ட அனுமாரைப் பார்த்ததும், கைலாயத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் தாசனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல இராவணன் பேசுகிறான்.

அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும். ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம், அம்பாளின் ஸ்திரி ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே... இரண்டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களைச் சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயணணின் சகோதரி என்று சொல்வதற்கும் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.'

இனி நம்மை அழைக்கும் அத்யாத்ம ராமாயணத்தை தொடர்வோம்:

அயோத்யா காண்டம் - முதல் ஸர்கம்

ஒரு சமயம் ராமன் இரத்தின சிம்மாசனத்தில் அமர, சீதை நவரத்னம் பதித்த சாமரம் வீச தாம்பூலம் சுவைத்தபடி சம்பாஷித்துக்கொண்டிருக்க தேவரிஷி நாரதம் ஆகாசத்திலிருந்து இறங்கி எதிரே வருகிறார். ''தேவரிஷி நாரதரே வாருங்கள் எங்களைப்போன்ற சம்சாரிகளை நீங்கள் வந்து ஆசிர்வதிக்க நாங்கள் பாக்யசாலிகள் என்று ராமர் சொல்ல,
''ஆமாம் நீங்கள் சம்சாரி தான். லோக நாயகி, மாதா, மாயாதேவி உங்கள் மனைவி அல்லவா? உங்கள் மூலமாக தானே பிரம்மா,மற்றும் பிரஜைகள் தோன்றுகிறார்கள். விஷ்ணுவாக நீங்கள் இருக்கையில் அவள் சீதாதேவி, லக்ஷ்மி. சிவனாக இருக்கும்போது பார்வதி ஆகிறாள். பிரம்மாவாக இருந்தால் அவள் சரஸ்வதி, சூரியானாக இருக்கும்போது, அவள் பிரபா, இந்திரன் எனில் இந்திராணி, சந்திரன் எனும்போது ரோகினி, யமனாகையில் சம்யமினி. அக்னி என்றால் ஸ்வாஹா தேவி. மொத்தத்தில் உலகின் அனைத்து ஆணும் நீங்கள், பெண்மை விளங்கும் அனைத்து ஜீவராசிகளும் சீதா தேவி''

''அஹங்காரம், புத்தி, பஞ்ச பிராணன்கள், பத்து புலன்கள்'' இதன் மொத்த சேர்க்கை தான் பிறப்பு-இறப்பு அனுபவிக்கும் லிங்க சரீரம்.அந்த தேஹாபிமானியான சேதனனின் பிரதி பிம்பம் தான் ஜீவன். ஸ்தூலம், சூட்சுமம், காரண சரீரத்தோடு கூடியவனே ஜீவன். இவை ஒட்டாதிருப்பவன் பரமேஸ்வரன் அல்லவா? எப்போது நான் பரமாத்மா என்ற சிந்தனை ஏற்படுகிறதோ அப்போதே அச்சம் துயரம் எல்லாம் விடுபடுகிறதே. மனிதனாக பிறந்தவன் ஞானம் பயில வேண்டும். '' இவ்வாறெல்லாம் கூறிய நாரதம் ஒரு சேதியும் சொன்னார்:

''தாங்கள் ராவண சம்ஹாரத்துக்காக அவதரித்தவர். தாங்கள் இளவரசு பட்டாபிஷேகம் பண்ணிவைக்கப்பட்டு இங்கு ராஜ்ய பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்து அவதார காரணம் வாய்ப்பின்றி போகிவிடும் என்கிற கவலை எனக்கு. ''

''நாரதா கேள், என்னால் அறியப்படாத விஷயம் உண்டா? என் பிரதிஞ்ஞை நிறைவேறும். அவரவர்களின் முன்வினையால் உண்டாகும் நற் பயன்கள் குறையக்குறைய உலக சுமைக்கு காரணமான அசுர கூட்டத்தை அழிப்பேன். நாளையே தண்ட காரண்யம் செல்வேன். தோற்றத்தில் உன்னைப்போல் ஒரு முனிவனாக, 14 ஆண்டுகள் காட்டில் தங்கி, சீதையை ஒரு நிமித்தமாகக் கொண்டு ராவணனை நெருங்கி, அவனை குலத்தோடு அழிப்பேன். நீ தைர்யமாக கவலையின்றி செல்லலாம்'' என்று ராமர் சொன்னவுடன் திருப்தியாக நாரதர் ராமன் சீதையை வணங்கி தேவலோகம் திரும்பினார்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

A few moments with Paramacharya - N.A. Palkhivala - SPIRITUAL FORCE

I had the honour of calling on him at Kanchi before I west to Washington as the Indian Ambassador in 1977. I went to his little hut at Kanchi where he resides, a hut that would not be occupied perhaps by any labourer who is a member of a trade union. He eats food which contains nothing comparable to the calories which are supposed to be essential for a man's life and health.

And as the man came out dressed as sparsely as possible, he was a picture of sincerity, humility and spiritual force which leaves an indelible impression on anyone with some sensitivity. I thought that here was a man who was in total harmony with the elements around him, with nature.

He was in total harmony with the silence that is in the starry skies, the sleep that is among the lonely hills.

A great thinker once said that the higher a man is in God's grace, the lower he will be in his own esteem. And if that truth were ever vindicated and demonstrated by a living person today, it is by the sage of Kanchi. His total humility and his utter simplicity are just incredible. You have to meet the man yourself to realise how he personifies these great ancient virtues of our wonderful motherland.


http://mahaperiavaamyguru.blogspot.in/2 ... ya-na.html

When Rudyard Kipling was once speaking to the students of a University, he said, "One day, my young friends, you will meet a man who cares nothing for wealth or comfort or fame or glory and then you will know how poor you are." Every one who has met the sage of Kanchi knows how poor he is.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

I have got my first 100 compositions on MahaPeriava printed..
As yesterday, was Anusham, my Sons in law carried the copies to Kanchi.
HH Jayendrar who was kind enough to glance through
offered his blessings..
Later it was taken to the Athistanam …
Bala Periava also read it and offered his blessing. He wanted more copies to be distributed to devotees…

My elder Son in law Shri Sundar is from Mahendramangalam where Mahaperiva had his initial stay......His father Shri Krishnamurthy and brother Shri JayuKrishna are closely active in the matters relating to Kanchi Matam at Mahendra mangalam in the instillation of Mahaperiva vigraham at MM and construction of ChndraMouliswarar temple..

First page

மகா பெரியவா
கனகாபிஷேகம்
100

பாடல்கள்
( வேங்கட கைலாசம்)
திருவடி சரணம்

At Athishtanam

Image
Last edited by venkatakailasam on 04 Sep 2014, 09:42, edited 1 time in total.

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

வாழ்த்துக்கள். படித்து இன்புறுவோம். மேலும் விவரம் அறிய ஆவல்.
ஜெய ஜெய சங்கர
தஞ்சாவூரான்
04 09 2014

arasi
Posts: 16793
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

VKailasam,

Very happy to hear about the book. It's a reflection of your devotion to mahA periyavar. Some of us are familiar with the poems you have posted here. Good to know the family went to KAnchi with the copies...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அவர் சிரிப்புக் குறுகுறுப்புடனேயே கூறினார், 'என்னோட கணங்களுக்கு மத்தப் பெரியவாளை எல்லாம் விட நான் தான் ஒசத்தின்னு கதை கட்டியாவது ' பொறத்தியாருக்கு' காட்டிட்டா அதுதான் எங்கிட்ட பக்தி, எனக்கு கைங்கர்யம் ன்னு அபிப்ராயம்'.

நன்றி: தரிசனம் புத்தகம், 'மஹா பெரியவாளும் மகரிஷிகளும்' கட்டுரையில் ஸ்ரீ ரா கணபதி ...


காஞ்சி முனிவர் ஸ்ரீ மஹா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த சிலர், அவரை பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளுடன் தொடர்புறுத்தி இரண்டு விஷயங்கள் கூறுவதுண்டு. இரண்டுமே எனக்கு உண்மையானவை எனப் படவில்லை. ஆனாலும் இக்கிங்கரர்கள் கூறியதைக் கேட்டு நல்ல விஷய ஞானமுள்ள ஓரிரு பெரியவர்களுங்கூட அதைத் திரும்ப கூறியதைக் கேட்டபின், 'சரி, பெரியவாளிடமே கேட்டுவிட வேண்டியதுதான்' எனத் துணிந்தேன்.

ஒரு நாள் கேட்டும் விட்டேன் - இரு விஷயங்களையும் விண்டு கூறி,

'எங்கிட்ட கன்ஃபர்மேஷனுக்காக நீ இந்த சமாசாரத்தை பிரஸ்தாபிக்கிறதுலேருந்தே உன் மனசுலே என்ன அபிப்ராயம்னு புரியறது' என்று குறும்பு நகையுடன் மஹா பெரியவாள் கூறினார்.

'அது சரியாங்கறதுக்குத் தான்.....' என்று இழுத்தேன்.

'நீ ரெண்டு விஷயம் கேக்கறே. நீங்க, எழுத்தாளர்கள் ரெண்டு விஷயம் பத்தி எழுதினா ரெண்டுக்கும் ஒரே அபிப்ராயம் சொல்ல மாட்டேள். மாத்திச் சொன்னாத்தான் ருசி - இலக்கியச் சுவை ன்னு வெவ்வேறே தினுசா சொல்லுவேள். நானும் கொஞ்சம் அப்படியே பண்ணலாம் ன்னு பாக்கறேன்...ஆமாம், உனக்கு அப்பா ஊர் சிதம்பரம். அம்மா ஊர் கடலூர் இல்லையா?'.

எங்கிருந்தோ எங்கேயோ போய்விட்டாரே என்று தோன்றுகிறதா? அந்த அதிசயச் சித்தக்காரர் அப்படித்தான் செய்வார். அப்புறம் அந்த 'எங்கேயோ' வை 'இங்கேயே'வின் கூட ஓட்டிச் சேர்த்துவிடுவார். அவர் எங்கே எங்கே இழுத்துப் போனாலும் இன்பமாகத் தான் இருக்கும். அறிவுக்கோ, இதயத்திற்கோ, இரண்டிற்குமேயோ இன்பம் ஊட்டுவதாகத்தான் இருக்கும். நாம் கேட்ட விஷயத்தை விட்டுவிட்டு வேறே விஷயத்திற்கு போய்விட்டாரே என்பது கூட மறந்து போய் அவர் சொல்கிற விஷயம் நமக்கு இன்பமூட்டும். அவர் சொல்கிற விஷயம் மாத்திரமில்லை. அவர் சொல்கிற விதமும் தான். அந்த ரீதியில் இப்போது பேசிப் போனார். பேசியது சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் என்பது நினைவில் இருக்கட்டும்.

'வெள்ளைக்காரன் ஜில்லாக்கள் பிரித்ததில் சிதம்பரம், கடலூர் ரெண்டுமே தென்னார்க்காடு ஜில்லாவா இருந்தாலும் நம்முடைய பழைய நாட்டுப் பிரிவினையின் படி, சிதம்பரம் சோழ நாட்டையும், கடலூர் நடுநாட்டையும் சேர்ந்த ஊர்கள் தான். கொள்ளிடத்தை எல்லையா வெச்சு அதுக்கு வடக்கே தென்னார்க்காடு. தெற்கே தஞ்சாவூர் ன்னு புது ஜில்லாப் பிரிவினை. பழைய ஏற்பாட்டிலே ரெண்டு வெள்ளாறுகளுக்கும் இடைப்பட்ட தேசம் சோழநாடு என்று பிரிவினை. பாடல் பெற்ற ஸ்தலங்களில் எது எது எந்த நாட்டைச் சேர்ந்தது ன்னு போட்டிருக்கிற பொஸ்தகங்களை பார்த்தியானா தெரியும். சிதம்பரத்தை 'கோயில்' ங்கிற பேர்ல சொல்லி, அது 'சோணாடு' ன்னு போட்டிருக்கும். இன்னிக்கும் சிதம்பரத்துக் காராளோட பேச்சு வழக்கு இத்யாதிகளில் தஞ்சாவூர் வாசனை ஜாஸ்தி இருக்கும். நடுநாட்டுக்குன்னு பிரத்யேகமா இருக்கப்பட்ட வழக்குகள் கடலூரில இருக்குற மாதிரி சிதமபரத்தில இருக்காது.'

'இந்த கதை எதுக்குச் சொல்ல வந்தேன் ன்னா இப்ப நீ ரமண ரிஷி விஷயமா ரெண்டு சமாசாரம் கேட்டியோல்லியோ? அதுக்கு ரெண்டு தினுசா வேறே வேறே பதில் சொல்லப் போறேன்னேனோல்லியோ? ஒண்ணு உன் அப்பா ஆத்து வழில சொல்லப் போறேன். இன்னொண்ணு அம்மா ஆத்து வழில சொல்லப் போறேன்'.

'அபத்தமா ஒண்ணு இருந்தா அப்பா வழி ஒறவுக்காரா அதைப் 'பேத்தல்' ன்னு தானே சொல்லுவா?'

அபூர்வமாக ஏதோ சொல்லப் போகிறாரென்று காதைத் தீட்டிக்கொண்டு இருந்த நான், 'ஆமாம்' என்றேன். 'அதையே அம்மா வழி ஒறவுக்காரா எப்படிச் சொல்லுவா?'

'உளறல் ன்னு'

'இப்ப நீ ரெண்டு எங்கிட்ட கேட்டியே! அதுலே மொதல்ல கேட்டதுக்குப் பதில், 'பேத்தல்', ரெண்டாவதாகக் கேட்டதுக்கு பதில் 'உளறல்''.

இந்த அசட்டு எழுத்தாளனை உத்தேசித்துத் தலை எழுத்தையே ஆளவல்ல அந்த மஹா சமர்த்தர் இலக்கிய பாணியில் வெவ்வேறான முடிவு தெரிவிப்பதாக கூறி விளையாடியது தான் எத்தனை அழகு?

தன்னுடைய நகைச்சுவை சதுரத்தில் பெருமிதத்துடன் ஸ்ரீ சரணர் நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தார். நானோ அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டேன்.

'பொ..றத்தியாருக்கு' என்று தொனியை, பொடி வைத்து பேசி தமது 'கணங்களை' அவர் அனாயாசமாக வெயிலில் வாரிப் போட்டதும் கூட அழகுதான்!

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

Thanjavooran,
Please refer to my post #349 (quoted below) in response to your previous post #348 about meeting between Mahaperiava and a Vaishnava.
vgovindan wrote:Thanjavooran,
IMHO, Mahaperiyava would not have approved of publication of such material where he (Mahaperiava) is shown as superior. Persons of the stature of Mahaperiava do not have any such complexes. Let us not impose our complexes on Him. On the other hand, such publications might hurt feelings of others.
Today, please refer to post #391 of Venkatakailasam wherein the following quote - By Ra Ganapathi appears.

அவர் சிரிப்புக் குறுகுறுப்புடனேயே கூறினார், 'என்னோட கணங்களுக்கு மத்தப் பெரியவாளை எல்லாம் விட நான் தான் ஒசத்தின்னு கதை கட்டியாவது ' பொறத்தியாருக்கு' காட்டிட்டா அதுதான் எங்கிட்ட பக்தி, எனக்கு கைங்கர்யம் ன்னு அபிப்ராயம்'.

நன்றி: தரிசனம் புத்தகம், 'மஹா பெரியவாளும் மகரிஷிகளும்' கட்டுரையில் ஸ்ரீ ரா கணபதி ...

This is what I meant when I said that Mahaperiava would not approve of any comparisons.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Shri Govindan...

While posting, I was remembering you..

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Kamakoti Mutt Heads from Originator : -
Chronological list of Heads of the Matam, according to the mutt official account.

1. Sri Adi Sankara Bhagavatpada
2. Sri Suresvaracharya
3. Sri Sarvajnatman
4. Sri Sathyabodhendra Saraswati
5. Sri Jnanandendra Saraswati
6. Sri Suddhanandendra Saraswati
7. Sri Aanandaghanendra Saraswati
8. Sri Kaivalyanandayogendra Saraswati
9. Sri Krpa Sankarendra Saraswati
10. Sri Sureswara
11. Sri Sivananda Chidghanendra Saraswati
12. Sri Chandrasekharendra Saraswati
13. Sri Satchidghanendra Saraswati
14. Sri Vidyaghanendra Saraswati
15. Sri Gangadharendra Saraswati
16. Sri Ujjvala Sankarendra Saraswati
17. Sri Sadasivendra Saraswati
18. Sri Shankarananda Saraswati
19. Sri Martanda Vidyaghanendra Saraswati
20. Sri Muka Sankarendra Saraswati
21. Sri Chandrasekharendra Saraswati II
22. Sri Bodhendra Saraswati
23. Sri Satchisukhendra Saraswati
24. Sri Chitsukhendra Saraswati
25. Sri Satchidanandaghanendra Saraswati
26. Sri Prajnaghanendra Saraswati
27. Sri Chidvilasendra Saraswati
28. Sri Mahadeve11dra Saraswati I
29. Sri Purnabhodhendra Saraswati
30. Sri Bhodhendra Saraswati II
31. Sri Brahmanandaghanendra Saraswati
32. Sri Chidanandaghanendra Saraswati
33. Sri Satchidananda Saraswati
34. Sri Chandrasekharendra Saraswati III
35. Sri Chitsukhendra Saraswati
36. Sri Chitsukhanandendra Saraswati
37. Sri Vidyaghanendra Saraswati III
38. Sri Abhinava Sankarendra Saraswati
39. Sri Satchidvilaasendra Saraswati
40. Sri Mahadevendra Saraswati II
41. Sri Gangadharendra Saraswati II
42. Sri Brahmanandaghanendra Saraswati
43. Sri Anandaghanendra Saraswati
44. Sri Purnabhodhendra Saraswati II
45. Sri Paramasivendra Saraswati I
46. Sri Sandranandabhodhendra Saraswati
47. Sri Chandrasekharendra Saraswati IV
48. Sri Advaitanandabodhendra Saraswati
49. Sri Mahadevendra Saraswati III
50. Sri Chandrachudendra Saraswati I
51. Sri Kamachandrendra Saraswati
52. Sri Vidyateerthendra Saraswati (1297–1370)
53. Sri Sankaranandendra Saraswati (1370–1417)
54. Sri Purnananda Sadasivendra Saraswati (1417–1498)
55. Sri Vyasachala Mahadevendra Saraswati (1498–1507)
56. Sri Chandrachudhendra Saraswati II (1507–1524)
57. Sri Sarvajna Sadasiva Bhodhendra Saraswati (1524–1539)
58. Sri Paramasivendra Saraswati II (1539–1586)
59. Sri Atma Bodhendra Saraswati (1586–1638)
60. Sri Bodhendra Saraswathi (1638–1692)
61. Sri Advaitatma Prakasendra Saraswati (1692–1704)
62. Sri Mahadevendra Saraswati IV (1704–1746)
63. Sri ChandrasekharendraSaraswati V (1746–1783).
64. Sri Mahadevendra Saraswati V (1783–1813)
65. Sri Chandrasekharendra Saraswati VI (1813–1851)
66. Sri Sudarsana Mahadevendra Saraswati (1851–1891)
67. Sri Sri Chandrasekharendra Saraswati VII (1891 - February 7, 1907)0
68. Sri Sri Mahadevendra Saraswathi V (February 7, 1907 - February 13, 1907)
69. Sri Chandrasekharendra Saraswati Swamigal
(February 13, 1907 - January 3,1994)
70. Sri Jayendra Saraswati Swamigal ( January 3 1994 to till date)
71. Sri Vijayendra Saraswati Swamigal ( Uttara Peethadhipati )

thenpaanan
Posts: 640
Joined: 04 Feb 2010, 19:45

Re: Kanchi Maha Periyava

Post by thenpaanan »

Can someone clarify whether the kriti "sankarAcAryam" by subbarAma dIkshitar is on the Pontiff #66 or #67 in the list?

Thanks
-Thenpaaanan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Shri thenappan...

The Sankarabharana kriti “Sankaracaryam” extols Sri Mahadevendra Sarasvathi, the 65th Pontiff of the Kanci Kamakoti Peetam at Kumbakonam (which was then the seat of the mutt) circa 1860...

http://guruguha.org/wp/?p=739

I am not sure whether the link is that of Shri Govindan..

thenpaanan
Posts: 640
Joined: 04 Feb 2010, 19:45

Re: Kanchi Maha Periyava

Post by thenpaanan »

Many thanks.

-T
venkatakailasam wrote:Shri thenappan...

The Sankarabharana kriti “Sankaracaryam” extols Sri Mahadevendra Sarasvathi, the 65th Pontiff of the Kanci Kamakoti Peetam at Kumbakonam (which was then the seat of the mutt) circa 1860...

http://guruguha.org/wp/?p=739

I am not sure whether the link is that of Shri Govindan..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Periyavaa’s devotion for Adi Sankara is purest of the purest and this incident happened in 1983 at Satara where I was also a witness..
Indira Gandhi had a great respect and devotion for Periyavaa and hence for 1983 Sankara Jayanthi,she wanted to release a stamp on Adi Sankara. She didnt want to release it without getting permission from Periyavaa and hence she had sent Sri. C.Subramaniam,who was the min of agriculture and an ardent devotee of Periyavaa all the way to Satara..Normally Periyavaa treats all as equal and when CS came

He enquired “why he had come?”

CS said he has come to take the permission for the Sankara Stamp to be released..

Periyavaa thought for a sec and asked him with a smile:
“Permission means you have already decided to release the stamp and you have come here for a formal information to me or if ,I give an opinion ,that would be binding on the government!”

Cs said:”PM made it clear whatever Periyavaa says will be carried out(he was thinking that the stamp release would meet with His approval!)”

Periyavaa:”If you ask me,I am against a stamp for Acharya..He is such a great Avatar I dont want every one to lick His photo and paste in all the covers. His greatness can never ever diminish whether we mortals
(He inlcudes Himself too!) release a simple stamp or not.”

CS said:”I would convey the same to PM”

Periyavaa:”incase she is keen on releasing or already made arrangements,it is her wish I have made ‘my wish’ because you have come all the way and asked for it..”

The stamp was never released by Indira Gandhi..so much respect she had for Him.

Hara Hara Sankara..

Received by mail from a friend.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Due to varied opinions from different quarters regarding depiction of Sankaracharya in a postage stamp, India post decided to use a logo on the Advaita philosophy for the Sankaracharya stamp. The Advaita logo was designed by R.K. Joshi, the then Professor of Calligraphy at IIT, Bombay, and the stamp was released in 1989.

Stamp:-
Image

First Day Cover:-
Image

Decipher the Calligraphy in the FDC !

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

ahaM brahmAsmi

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Yes!
One of the four Mahavakyas.
From the Brihadaranyaka Upanishad.

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
“இதன் பேர் – பேத்தி இலை"

சொன்னவர்-(ஸ்ரீவைஷ்ணவா)-செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி
மஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது. நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது.
நான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்டங்கள். திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன். அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம் செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சென்று என் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி பரிஹாரம் கேட்டேன்.
ஒரு வெள்ளிக் குத்துவிளக்கில் லட்சுமி-சரஸ்வதி-பார்வதி ஆகிய மூன்று அம்பிகைகளை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார். அப்படியே செய்து வந்தேன்.
ஒருநாள், ஒரு பரதேசி என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். ஏதோ சில்லரைக் காசு கொடுத்தேன். அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, குறி சொல்பவன் போல், “குத்துவிளக்குப் பூஜையெல்லாம் உபயோகப்படாது… காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
தெருவில் வேறு எந்த வீட்டிலும் சென்று யாசிக்காமல் தெருவைக் கடந்து போய்விட்டான்.
இது என்ன தெய்வ வாக்கா? இல்லை, வெறும் பிதற்றலா? அல்லது, இத்தனை நாட்களாகச் செய்த விளக்கு பூஜையின் பலனா?
மனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.
‘காஞ்சிப் பெரியவாளை சேவித்துக் கேட்கலாமே’ என்று ஒரு யோசனை பளீரிட்டது. பெரியவாளை தரிசித்து, சேவித்து, என் கஷ்டங்களை திருச்செவி சாற்றினேன்.
‘கருந்துளசிச் செடி பூஜை செய்’ என்று அனுக்ரஹம் ஆயிற்று.
என் மனத்துக்குள் ஒரு சங்கல்பம். அந்தப் பரதேசி சொன்னபோது நான் தயங்கியதற்கும் காரணம் இருந்தது. துளசி மாடத்தில் துளசியை வைத்து நான் பூஜை செய்தால், அந்தச் செடி சில நாள்களிலேயே பட்டுப் போய்விடும். பெரியவாளிடம் என் சங்கடத்தை விண்ணப்பித்தேன்.
நான் கூறி முடித்தபிறகும், “நீ, கருந்துளசி பூஜையே செய்” என்றார்கள்.
கருந்துளசிச் செடி நட்டு, பூஜை செய்யத் தொடங்கினேன்.
ஆச்சரியம்! செடி கப்பும் கிளையுமாக, சிறு ஆலமரம் போல் செழித்து வளரத் தொடங்கியது.
துளசிச்செடி வளர வளர என் துன்பங்கள் குறைந்து கொண்டே வந்தன.
இன்றைக்கும் எங்கள் வீட்டில் கருந்துளசி நிறைய வளர்கிறது.
கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.பெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று
வருகிறார்கள்.
ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார். தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.
அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?” என்று கேட்டார்கள்.
பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.
“இதன் பேர் – பேத்தி இலை. இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம். தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒசத்தி! அபூர்வம்! எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன். கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.
பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.
உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள். எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன்!
அன்றுமுதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு?
ஜய ஜய சங்கர

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Kanchi Mahaperiyaval took sanyasa in a very tender age. After taking sanyasa, His Holiness observed all the orthodox rules of yati dharma meticulously throughout the day. Several scholars were appointed to teach Mahaperiyaval the prasthAna-traya bhASya, vEda-bhASya, tarka, mantra shAstra etc. Among the vedAnta acharyas of Mahaperiyaval, there was one great scholar of Andhra by name Br.Sri.Mandalika Krishna Sastry Garu who used to teach vEdAnta and prasthAna-traya bhASya to Mahaperiyaval who was then only a tiny tot of 10 years age.

One day, Krishna Sastry Garu was taking personal class of Brahmasutra Sankara Bhashya to tiny mahaperiyaval. In the middle of the class, Mahaperiyaval "seemed to be inattentive" and was in a blissful mood in communion with Kamakshi Paradevata. Krishna Sastry Garu, though this attitude to be otherwise and drew the mahaperiyaval's attention in the class.

Mahaperiyaval, politely repeated the entire adhikaraNAs of brahmasutra with sankara bhASya in chaste sanskrit and spoke extempore even on those adhikaraNAs that were yet to be taught by Krishna Sastry Garu. This incident occurred when Mahaperiyaval was barely 12 years !!

vandE guruM shankaraM..
Jaya jaya sankara

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால், அதெப்படி
என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல
தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.


'நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன' என்று
கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி
பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான
ஆத்மா என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால் அவைதான் இவருக்கு
ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.


ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும்
இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு
உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல. இவர்தான்
சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


'பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி
வைத்துக் கொண்டிருக்கிறான்.' [ஈச்வர; ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன்
ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.


இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார்.
'எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன' என்று
கூறுவபரே, 'என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை' என்கிறார். (ந
ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷு அவஸ்தித:). இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று
தத்துவம் பேசப்படுகிறது.


'இது என்ன குழப்புகிறாயே' என்றால், 'நான் எல்லாருக்கும் விளங்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச:
ஸர்வஸ்ய:) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:)' என்று ஒரு போடு போடுகிறார்.


'இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!' என்று தோன்றுகிறதா?


நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். 'நான் ஒருவருக்கும் விளங்க
மாட்டேன்' என்று பகவான் சொல்லியிருந்தால், 'ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம்பேருக்கும் விளக்க
மாட்டேன்' என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, 'நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்'
என்றால், 'ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது
விளங்குவேன்' என்றுதான் பொருள். பகவான் 'எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்'
என்றாரேயன்றி ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்' என்று சொல்லவில்லை. அப்படியானால்
அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.


அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். 'நான் எல்லாப்
பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை' என்று பகவான் முரண்பாடாகப் பேசியது
போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.


தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை
மிதித்துவிட்டு, "ஐயோ, பாம்பு, பாம்பு!" என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும்
பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை
என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.


மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப்
பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.


"இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது" என்று சொன்னால்
என்ன அர்த்தம்? மாலைக்குள் தான் பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது
எப்படியோ அப்படிதான். இரண்டும் உண்மைதானே?


பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் 'விழுங்கி' விட்டது. அவன் பார்வையில்
ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி 'இது மாலைதான்' என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.


மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு
ஆதரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.


பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த்
தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின்
நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில்
இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில்
உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம்
ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ
கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, 'என்னிடத்திலும் பொருட்கள் இல்லை;
நானும் பொருட்களிடத்தில் இல்லை' என்று கூறிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக
நினைத்தான் என்பதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள்
மாலை இருந்ததாகவோ சொல்லலாமா?


கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:


'அலங்கலில் தோன்றும் பொய்ம்மை


அரவுஎனப் பூதம் ஐந்தும்


விலங்கிய விகாரப் பாட்டின்


வேறு பாடுற்ற வீக்கம்


கலங்குவ தெவரைக் கண்டால்


அவர் என்பர் கைவி லேந்தி


இலங்கையில் பொருதா ரன்றே


மறைகளுக் கிறுதி யாவார்.'


அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. 'அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு' - மாலையில்
தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம்
என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும்
தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.


நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி
ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்...

Received by mail from a friend..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

வேலேந்தி சுவாமிநாதா
வழி நடந்தாய்
துணை நின்றாய்! தூயவனே!
சக்தி வடிவமே! வேத ரூபனே!
காஞ்சி நாதனே! சாந்த சுவரூபமே!
அன்னையினும் சிறந்த தந்தை!
ஓங்காரத்தின் ஒலியாய்
ஒலியில் எழுந்த வேதமாய்
வேதத்தின் நாதமாய்
நாதத்தின் லயமாய்
லயத்தின் மையமாய்
ஸ்ருதியாகி சிவமாகி
காலமாகி காலத்தை
கடந்த வெளியாகி
என்னுள் புகுந்து ஒளியாகி
நின்ற சுவாமிநாத சத்குருவே!
புழுவினும் சிறிய வேங்கடவன்
என் நானென்னும் அகந்தை அகற்றி
என் மன மலமகற்றுவாய்!
venkat k

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Experiences with Maha Periyava: Deergha Ayushman Bhavah

This is an incident that relates back to several years. When Periyava was giving darshan, four or five Vidwans who had come for darshan, were sitting on the floor.

During the course of his conversation (with the devotees), Periyava asked them, "When bhaktas do namaskarams to me, I bless them saying, “Narayana, Narayana”. What do you people who are samsaris say for blessing?"

We say, “Deergha Ayushman Bhavah”. That is the custom."

"What does it mean?"

“Remain saukyam for a long time is its meaning."

Periyava asked all the Vidwans present there, one by one. Everyone said the same meaning.

Periyava remained silent for sometime. Then he said, "The meaning all of you said is a wrong one."

The Pandits were taken aback. Every one of them was a bada bada Vidwan, and had earned the Shiromani title.

For the Samskrita Vaakyam “Deergha Ayushman Bhavah” even those with a little knowledge of Samskritam can tell the meaning. Such simple words! Yet Periyava says the meaning is wrong?

"Shall I tell it myself?..." The Pandits sharpened their ears.

"Of the twenty seven Yogas, one is named Ayushman. Of the eleven Karanas, one is the called the Bhava. Among the weekdays, the Saumya Vaasaram falls on a Wednesday. When all these three-on a Wednesday, the Ayushman Yoga and the Bhava Karana-occur together, that day is said to be shlagya. Therefore, if these three occur together, whatever good phalas would be got, I bless that you may get all those fruits..."

All the Vidwans got up together and did namaskarams to Periyava.

For the Vaakyam that four or five Siromanis and five or six Vidya-Vachaspatis had been repeating like a kilippillai (parrot) until then, what accurate and deeper meaning had this Jnana Pillai pointed out!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

A Photo taken in 1906...
Image

1956-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும் மெரினா’ வாக நாடங்களில் பரிமளித்தவர் என்றாலும் பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம்.தன் உருக்கமான எழுத்தால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர்.
-
பரணீதரன் கூறுகிறார்……

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்றஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம்வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் ‘சுவாமிநாதன்‘ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே,ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார்.கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு‘ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களைஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கிபோனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு‘ன்னு நீ நெனச்சியோ?’என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.

‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா.சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல்லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.

Shared from ... Ragunathan Chandrasekaran



Image

உன் மீது கொண்ட காதலால்
பணிந்து பாக்கள் புனைந்த பின்னும்
அம்மா என நான் அலறும்
குரல் கேட்கவில்லையோ!
ஆவின் குரல் கேட்டு அன்று ஓடிய பெம்மானே!
நீ ஈந்த கருணை என்னும் மலர்களை
என் உள்ளம் என்னும் நாரினால் தொடுத்து
ஆதார சுருதியுடன் பாக்கள் அமைத்தேன்!
குறை ஏதும் கண்டாயோ?
சோலைகள் சூழ் பொங்கு நதிகளினிடையே
படுத்துறங்கும் ரங்கனின் மோகனத்திற்கு
சீரான பொருளுரைத்த சுவாமிநாதனே!
பரம நிலை கண்ட பரமா!
கண்கள் மூடி மோன நிலையில்
என் துயரம் தெரியாதா
நின் சீ(ஷீ)ரடியை பற்றி அடைக்கலம் அடைந்த
வேங்கடவன் என்னை தள்ளி விடுதல் அழகா!
குற்றம் பொறுத்து குறை தீர்தறுள்வாய்!
venkat k

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Varagooran Narayanan
"மகான்கள் தீர்க்கதரிசிகள்! அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்"

நன்றி-பால ஹனுமான்.

க்ஷேத்திரங்கள் பலவற்றுக்கும் சென்று, அங்கு உறைந்திருக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும்; புண்ணிய நதிகளில்- தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. மகாமகம், கும்பமேளா போன்ற புண்ணிய காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவதை இன்றைக்கும் காணலாம்! புண்ணிய நதிகளில் நீராடினால்… பாவங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி பெருகும்!

‘கடலைக் காண்பதே விசேஷம். இதைப் பார்ப்பதே புண்ணியத்தைத் தரும்’ என்பர். ஆனால், சாதாரண நாளில், கடலில் நீராடக் கூடாது. ஆடி மற்றும் தை அமாவாசை, கிரகணம், மாசி மகம் போன்ற புண்ணிய காலங்களில் மட்டுமே கடலில் நீராடலாம். ஆனால் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் உள்ள கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் பெறலாம்.

காஞ்சி மகா பெரியவர், தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஆடி அமாவாசை புண்ணிய காலம் நெருங்குவதையட்டி, வேதாரண்யத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார் பெரியவாள்! அதற்கு தக்கபடி தனது யாத்திரையை அமைத்துக் கொண்டார் ஸ்வாமிகள்.

ஸ்ரீராமபிரான், காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு வார்த்தையையும் பேச மாட்டார்; செயல்பட மாட்டார் என்பர். மகான்களும் அப்படித்தான்… வெட்டிப் பேச்சுகளும் வீண் செயல்களும் அவர்களிடம் இருக்காது!

அவரைக் கண்டதும் மடத்து மேனேஜரை அழைத்த ஸ்வாமிகள், ”இவருக்கு ஆகாரம் கொடு; அப்படியே நல்ல வேஷ்டி- துண்டும் கொடு” என்றார். மேனேஜரும் அப்படியே செய்தார்.யாத்திரையின்போது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத் தங்கி, பூஜைகளை முடித்துக் கொண்டு பிறகு பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தபோது, அங்கு பசியால் வாடிய நிலையில், ஒருவர் வந்தார்.

பிறகு பெரியவாளிடம் வந்து, ”தங்களின் உத்தரவுப்படி உணவும் உடையும் கொடுத்தாச்சு. அவரை அனுப்பிடலாமா?” என்று கேட்டார்.

உடனே பெரியவாள், ”மடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ… அதேபோல இவரையும் கவனியுங்கள்; ராஜோபசாரம் செய்யுங் கள்” என்றார்.

மேனேஜருக்குக் குழப்பம்! இருப்பினும் பெரியவாளின் உத்தரவுப்படி, யாத்திரையில் புதிய நபரும் உடன் வந்தார்.

தினமும் மேனேஜரிடம், ‘அவருக்கு சாதம் போட்டாயா?’, ‘அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா?’ என்று விசாரித்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிகள்.

நாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீரென மது அருந்தி விட்டு வந்தார். கடவுளைத் திட்டினார்; மடத்து ஊழியர்களைக் கண்டபடி ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உடை தந்து ஆதரித்த பெரியவாளையும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.

இதைக் கண்டு பொறுமை இழந்த மேனேஜர், ஓடோடி வந்து, பெரியவாளிடம் விவரம் முழுவதும் சொன்னார். ‘இந்த ஆசாமியை அனுப்பி விடுங்கள்’ என்று வேண்டினார்.

இதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பெரியவாள். இம்மியளவு கூட அந்த ஆசாமி மீது கோபமே வரவில்லை ஸ்வாமிகளுக்கு!

”ஸ்வாமி! அந்த ஆசாமியை அனுப்பிடட்டுமா?” என்று மீண்டும் கேட்டார் மேனேஜர். ஆனால், பெரியவாள் மறுத்துவிட்டார்.

ஆடி அமாவாசை! இந்த நாளில் காஞ்சி மகா பெரியவாள், வேதாரண்யத்தில் சமுத்திர ஸ்நானம் செய்யப் போகிறார் எனும் தகவல் அறிந்து சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேதாரண்யத்துக்கு வந்து சேர்ந்தனர்.

ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம்; அதிலும் காஞ்சி மகானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங் கூட்டமாக கடற் கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகளும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்!

ஸ்வாமிகள் கடற்கரைக்கு வந்தார்; அவரை அனைவரும் நமஸ்கரித்தனர்; நீராடுவதற்காக கடலில் இறங்கினார் பெரியவாள்! அவரைத் தொடர்ந்து மூதாட்டிகள் உட்பட எண்ணற்ற பக்தர்கள் பலரும் தபதபவென கடலில் இறங்கினர்.

அவ்வளவுதான்! மூதாட்டிகள் சிலரை அலை இழுத்துச் செல்ல… பலரும் செய்வதறியாமல் தவித்து மருகினர்.

அப்போது… ஆரவார அலைகளைப் பொருட் படுத்தாமல் பாய்ந்து சென்று, மூதாட்டிகளை இழுத்து வந்து, கரையில் சேர்த்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல… பெரியவாள் உட்பட அனைவரையும் மது போதையில் ஏசினானே… அந்த ஆசாமிதான்!

இவற்றைக் கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். மகான்கள் தீர்க்கதரிசிகள்!

அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

மகான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே!

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

சில மூதாட்டிகளைக் கடலலை அடித்துச் செல்வதினின்றும் காப்பதற்கல்ல அந்தக் குடிகாரரை பெரியவா நிறுத்திக்கொண்டது. இதில் ஏதோ சூக்ஷ்மம் உள்ளது. அவருக்கு - குடிகாரருக்கு - இந்த நிகழ்ச்சியினால் ஏதோ நல்லது நடந்திருக்கவேண்டும். இந்நிகழ்ச்சி அதற்கு ஒரு வ்யாஜ்யம் தான். அதனால்தான் அவரை நிறுத்திக்கொண்டார் என்று நான் நம்புகின்றேன்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image


காஞ்சி நாதனின் கருணை அலைகள்
கடலில் எழும்பி வர கண்டேன்!
விண் வெளியில் அவனது ஓங்கார நடனத்தை கண்டேன்!
நிலம் தன்னில் அவன்தன் அருள் விளைய கண்டேன்!
தீயினில் வேங்கடவன் என் பாவங்களை அவன் பொசுகக் கண்டேன்!
சுவாசத்திலும் அவன் நாமத்தை பஜிக்க கண்டேன்!
அவன் தெய்வ வடிவில் ஐந்து பூதங்களும் அடங்க கண்டேன்!
venkat k
Last edited by venkatakailasam on 01 Oct 2014, 06:44, edited 2 times in total.

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
காஞ்சி மஹானும் கழஞ்சின் அளவும்
அவர் ஒரு கல்வெட்டறிஞர். பல கல்வெட்டுக்களைப் பார்த்தோம் என்ற வித்யாகர்வம் அவரிடம் இருந்தது. தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை எடுத்துக் கொண்டு காஞ்சித் தெய்வத்திடம் வந்தார் அவர். கட்டுரையை முன்னர் வைத்து செயற்கரிய செயல் புரிந்தாற்போல நின்றார். தெய்வம் வைத்த கட்டுரைகளைப் பிரித்துப் படித்து. அதன் பிறகு உரையாடல் துவங்கியது.
இந்தக் கல்வெட்டோட அர்த்தம் என்ன... தெய்வம்
விளக்கெரிக்க கழஞ்சுப் பொன் அரசன் குடுத்துருக்கான்... அறிஞர்
கழஞ்சுன்னா என்ன,,,
அஞ்சு பணவெடை ஒரு கழஞ்சு பெரியவா...
அப்படின்னா...
பத்து மஞ்சாடி அதாவது இருபது குன்றியெடை ஒரு கழஞ்சு பெரியவா...
புரியலையே...
அவர் இன்னும் இறங்கிக் கீழளவு வரை போனார்.
நீ ஏதோ சொல்ற... உன் ஆம்படையாள்ட்ட இந்த அளவெல்லாம் சொன்னாப் புரியுமோ....
புரியாது பெரியவா..
அப்போ ஸாதாரண ஆட்களுக்கு எவ்வளவுனு புரியாம நீ பாட்டுக்கு குன்றி, மஞ்சாடின்னா ஏதாவது ப்ரயோஜனம் உண்டோ...
தூக்கி வாரிப்போட்டது அவருக்கு. ஒரு நிமிடத்தில் தான் ஒன்றுமில்லாதவராக ஆனாற்போல ஒரு நினைவு..
என்ன பண்ண பெரியவா...
எத்தனை க்ராம்னு சொல்லு அப்போதான் புரியும். தெரிஞ்சுண்டு வா..
அவர் இரண்டு மாதங்கள் மண்டையை உடைத்து பற்பல கணக்குகளைப் போட்டார். அதன் பிறகு தெய்வ ஸன்னிதியில் வந்து நின்றார்.
பெரியவா. பார்த்துட்டேன். 2.1875 க்ராம் வர்றது பெரியவா..
அப்படியா.. நீ நாகஸ்வாமி போட்ட வேளஞ்சேரி செப்பேட்டைப் பார்த்திருக்கியோ..
இல்லை பெரியவா.
அதுல ஸம்ஸ்க்ருதத்துல நிஷ்கம்னு சொல்லி தமிழ்ல கழஞ்சுனு சொல்லியிருக்கு. அதுனால நிஷ்கம்தான் கழஞ்சுனு தெரியறது. நிஷ்கம் 4.2 க்ராம்னு டி.ஸி. ஸர்க்கார் சொல்லியிருக்கார். உலகத்தமிழ் மாநாட்டு ஆய்வேட்டிலேயும் சா.கணேசன் 4.4. க்ராம்னு சொல்லியிருக்காரே. நீ ஏன் பாதியாக்கிட்ட..
அவருக்குக் கண்ணைக் கட்டியது. பார்த்துட்டு வந்து சொல்றேன் பெரியவா.
இப்போது அவருக்கு கர்வம் கரைந்தோடியிருந்தது. ஆனால் அதன் பிறகு அந்தத் தெய்வத்தின் சரீர உபாதிக்கு இயலாமை காரணமாக இந்தத் தேடலும் விசாரணையும் இல்லாமலே போய்விட்டது..

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

As I have brought out in respect one of the posts about comparison, the same logic applies here also. Mahaperiava would not have approved of this kind of material being published which show people in poor light - particularly as conceitful etc. I do not know what is the source of these material and whether these are published with any thought about how the person concerned would feel.

I would rather say that presentation of facts in this article is not in good taste - the facts may be facts.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

As Nagasami and a few others had attributed different values to ‘kazhanju’, Sankaracharya desired to have the opinion of the expert who had called on him.

How jarringly a twisted corrupt mind has interpreted the conversation !

சரி, அடுத்தவருக்கு ஜால்ரா எப்போது ஆரம்பமாகப்போகிறது ?

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri Govindan Avl and Shri Pratyaksham Bala Avl,
ThanQ both for your views.

A share from my friend
ஜெய ஜெய சங்கர

பல வருஷங்களுக்கு முன்னால் ஒரு முறை நல்ல பனிக்காலம். பெரியவாளின் உதடுகள் ஒரே வெடிப்பாக வெடித்திருந்தது. பேசக்கூட முடியாமல் வேதனை இருந்தாலும் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல வருபவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அம்மாதிரி உதடு வெடிக்கும் பொது அடிக்கடி வெண்ணை தடிவிகொண்டே இருந்தால் வெடிப்பு சரியாகிவிடும். ஆனால் பெரியவா கடைகளில் விற்கும் வெண்ணையை தடவிகொள்ளமாட்டார். என்ன பண்ணுவது?
ஒரு பாட்டி ரொம்ப அக்கரையோடு ஐந்து சேர் பசும்பால் காய்ச்சி, உறை குத்தி தயிராக்கி அதை கடைந்து வெண்ணை எடுத்து கொண்டுவந்து பெரியவாளிடம் கொடுத்தாள்.
பெரியவா...... ஒதடு ரொம்ப பாளம் பாளமா வெடிச்சிருக்கு. ரொம்ப மடியா வெண்ணை கடைஞ்சு எடுத்துண்டு வந்திருக்கேன் பெரியவா ஒதட்டிலே தடவிக்கணும்" .... என்று வினயத்தோடு பிரார்த்தனை பண்ணிக் கொண்டாள்.
பெரியவாளுக்கு வெண்ணையை கண்டதுமே தான் துவாபர யுகத்தில் அடித்த கூத்து ஞாபகம் வந்துவிடுமாதலால் ரொம்ப சந்தோஷப் பட்டார்.
பெரியவா மட்டும் சந்தொஷப்படவில்லை.......இன்னொரு ஜோடிக் கண்களும் அந்த வெண்ணையை காதலோடு பார்த்தன!
அப்போது தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சின்னக் குழந்தை ஓடிவந்து பெரியவாளிடம் வெண்ணைக்காக குஞ்சுக்கையை நீட்டியது! சாக்ஷாத் பாலகோபலனே கேட்டது போல் அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. கேட்க்காமலேயே மோக்ஷ பர்யந்தம் [ தன்னையே ] குடுத்துவிடும் அந்த மஹா மஹா மாதா அப்படியே அத்தனை வெண்ணையையும் தூக்கி அந்த குழந்தையிடம் குடுத்து விட்டார்!
இதை பார்த்துக்கொண்டிருந்த பாரிஷதர்களுக்கு கொஞ்சம் முகம் சுருங்கியது! " ரொம்ப சரி....கொழந்தை கேட்டா, எதோ ஒரு எலுமிச்சங்காய் சைசில் உருட்டி கொடுத்தா போறாதா என்ன?
அப்படியே டப்பவோடயா தூக்கி கொடுக்கணும்? ... இப்போ உதட்டிலே தடவிக்க ஏது வெண்ணை?....
அவர்கள் உள்ளத்துக்குள் ஓடிய எண்ணங்களுக்கு பதில் வந்தது....
" ஏண்டா முகம் தொங்கி போச்சு ? கொழந்தை சாபிட்டாலே என்னோட உதட்டுப் புண் சரியாப் போய்டும் ".... சிரித்தார்
அன்று சாயங்காலமே, பெரியவாளுடைய உதட்டில் எல்லா பாளம் பாளமான வெடிப்பும் சுத்தமாக போய் விட்டிருந்தது! வெண்ணை கேட்ட பாலகோபாலன் அதை சாப்பிட்டு விட்டான் போலிருகிறது!
சரீரம் எதுவானால் என்ன? உள்ளிருக்கும் ஆத்மா ஒன்று தானே. ?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Source:-கல்கி
இசை வழியே ஈசுவரானுபவம்!

கல்வித் தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேசுவரனின் பத்தினியான சாஷாத் பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாகக் காளிதாஸர் "நவரத்தினமாலா' ஸ்தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற ஸப்த ஸ்வரங்களின் ஸாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.
ஸரிகமபதநி ரதாம் தாம்/வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாந்தம்! இப்படி சங்கீதத்தில் முழுகியுள்ள சிவகாந்தா (சிவனின் பத்தினி) சாந்தாவாகவும், (அமைதிமயமாகவும்) ம்ருதுன ஸ்வாந்தாவாகவும் (மென்மையான திரு உள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாஸர். அவளை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.
சாந்தாம் மருதுள ஸ்வாந்தாம்/குசபதாந்தாம் நமாமி சிவகாந்தாம்//
அவர் சுலோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல ஸங்கீத அநுபவத்தினால்தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாக - புஷ்பத்தைப் போல் மென்மையாக, கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.
சாக்ஷõத் பராசக்தியை இப்படி ஸங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். ஸங்கீதத்தில் தோய்ந்து ஆனந்தமயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளாதேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக் கொண்டேயிருக்கும். தெய்வீகமான ஸங்கீதம் ததும்பும் சன்னிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும்; சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும். இந்த சுலோகத்திலிருந்து ஸங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருணை ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது. வேத அத்யயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈசுவராநுபவத்தை தெய்வீகமான ஸங்கீதத்தின் மூலம், நல்ல ராக தாள ஞானத்தின்மூலம் சுலபமாகவும் சௌக்கியமாகவும் பெற்று விடலாம்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sangeetha Gnanamu by Nedanuri Krishnamurthy

http://www.youtube.com/watch?v=7228yhKwnzA

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri VK many thanx for sharing valuable details with Nedanuri's rendition

A share from my friend

JAYA JAYA SHANKARA
HARA HARA SHANKARA
Subject: Maha Periyava
.
Please visit the 7 you-tube videos whose link is given below and get His blessings. -

Treasure to be treasured.

Ch1 : Our Maha Periva's childhoodhttps://www.youtube.com/watch?v=M4ONhnXzKGE
Ch2 : The Kanchi Mutthttps://www.youtube.com/watch?v=iALXOUyQQ8Y
Ch3 :The reign of Our Jagadguruhttps://www.youtube.com/watch?v=10nblA7aZD4
Ch 4: The Reign of our Maha Periva-pt 2https://www.youtube.com/watch?v=wA5Iwq45mGA
Ch5 : Maha periva's knowledge of music and world affairs.https://www.youtube.com/watch?v=sFc8vZAcN8k
Ch6: The Jeevan Mukthi of Our Maha Perivahttps://www.youtube.com/watch?v=q4cvv8U-Rqo
Ch7 : The kanchi mutt's institutionshttps://www.youtube.com/watch?v=6KcGVMEuQ50


thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri VK many thanx for your prompt efforts.
Thanjavooran
03 10 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

காளிதாஸர் ‘ரகு வம்சம்’ என்று ஒரு காவியம் எழுதியிருக்கிறார். அதை ஆரம்பிக்கும்போது, இந்த ஜகத் முழுதையும் ஸ்ருஷ்டித்து, நடத்தி வரும் ஆதி தம்பதியான ஸ்வாமிக்கும் தேவிக்கும் நமஸ்காரம் செய்து, தமிழில் கடவுள் வாழ்த்து என்று சொல்லுகிறார்களே, அப்படி ஒரு ச்லோகம் செய்திருக்கிறார்.

அந்த ச்லோகத்துக்கு அர்த்தம், சொல்லையும் பொருளையும் போல ஒன்றை விட்டு மற்றதைப் பிரிக்க முடியாதபடி ஒன்று சேர்ந்திருக்கும் ஸ்வாமிக்கும் தேவிக்கும் எனக்கு நல்ல சொல்லும் உயர்ந்த அர்த்தமும் உள்ளதாக எழுதும் ஆற்றல் ஸித்திக்க வேண்டும்,” என்பது.

வாக் – அர்த்தவ் – இவ
ஸம்ப்ருக்தௌ வாக் – அர்த்த ப்ரதிபத்தயே!

ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேச்வரௌ!

இதிலே முடிவாக ‘பார்வதீ – பரமேச் வரௌ’ என்று வருகிறது. இதற்கு வெளிப்படையாகத் தெரியும் அர்த்தம், பர்வத ராஜகுமாரியானதால் பார்வதி என்று பேர் பெற்ற அம்பாளுக்கும், சிவ பெருமானுக்கும் காளிதாஸர் நமஸ்காரம் தெரிவிக்கிறார் என்பதாகும்.

ஆனால், எனக்கோ இதற்கு வேறு விதமாகவும் அர்த்தம் செய்யலாம் என்று தோன்றுகிறது. காளிதாஸரின் ஸப்ஜெக்ட்-மாட்டர் ரகுவின் பரம்பரையில் வந்த அத்தனை ராஜாக்களின் சரித்திரத்தையும் சொல்வதுதான். அந்தப் பரம்பரைக்கே மிகவும் பெருமை சேர்த்து, ‘ரகு குல திலகர்’ என்றே பெயர் பெற்றுள்ள ராமசந்திர மூர்த்தியின் திவ்ய சரித்திரத்தையும் மற்ற ராஜாக்களைவிட இந்த ‘ரகு வம்ச’ காவியத்தில் விஸ்தாரமாகப் பாடியிருக்கிறார்.

ராமர் யார்? ஸாக்ஷாத் மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் முக்யமான இரண்டு பேரில் ஒருத்தர். மற்றவர் க்ருஷ்ண பரமாத்மா. இவர்களுக்கு மூலவரான மஹாவிஷ்ணுவையும் விட இந்த இரண்டு அவதாரங்களைத்தான் நம் தேசம் பூராவும் அவர்களுடைய அவதார காலத்திலிருந்து அதி விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம்.

சீதையோ ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி அவதாரம். ருக்மிணி – ஸத்யபாமாக்களை ஜனங்கள் அவ்வளவாகக் கொண்டாடுவதில்லை. ஸீதைக்கே விசேஷ மஹத்வம் தருகிறோம்.

அப்படியிருக்க, காளிதாஸர் செய்த ச்லோகத்தில் பார்வதி – ப்ரமேச்வரர்களை மாத்திரம் சொல்லிவிட்டு மஹாவிஷ்ணு – மஹாலக்ஷ்மிகளை விட்டிருப்பாரா என்று யோசித்துப் பார்த்தேன்.

அப்படிப் பார்த்ததில் அவர் மஹா விஷ்ணு – மஹாலக்ஷ்மிகளையும் இந்த ச்லோகத்தில் சொல்லியே இருக்கிறா ரென்று தெரிந்தது.

எப்படி என்றால்: ‘பார்வதீ – பரமேச்வரென’ என்று வருவதை வேறே மாதிரி பதம் பிரித்தால் ‘பார்வதீப -ரமேச்வரென’ என்று வரும்.

‘ப’ என்று சொன்னாலே ‘பதி’ என்று அர்த்தம் உண்டு. பழங்காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பல ராஜாக்கள் தங்களுக்கு ‘ந்ருப நுங்கன்’ – அதாவது ‘ராஜாக்களில் சிரேஷ்டமானவர்’ என்று பட்டப் பெயர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ந்ருப’ என்றால் என்ன அர்த்தம்? ‘ந்ரு’ என்றால் ‘நர’- அதாவது ‘மனுஷ்யர்’ என்று அர்த்தம். ‘நரஸிம்ஹ’ ஸ்வாமியை ‘ந்ருஸிம்ஹர்’ என்றும் சொல்வதுண்டு.

இப்படித்தான் ‘ந்ருப’ என்பதில் ‘ந்ரு’ என்பது ஜன ஸமூஹத்தையும், ‘ப’ என்பது ‘பதி’ என்பதையும் குறிக்கும். ‘ந்ருப’ என் பது ஜனங்களுக்கு அதிபதியான ராஜாவைக் குறிக்கும்.
இப்படிப் பார்க்கும்போது ‘பார்வதீப’ என்பது பார்வதிக்குப் பதியான சிவ பெருமானைச் சொல்வதாகிறது.

‘ரமேச்வர’ என்பது ‘ரமா’வான மஹாலக்ஷ்மிக்கு நாயகனான மஹா விஷ்ணுவைச் சொல்வதாகிறது.

ஆகக்கூடி, காளிதாஸர் தம்முடைய ச்லோகத்தில் சிவ – விஷ்ணு பேதமில்லாமல் இரண்டு பேரையும் அவர்களுடைய தேவிமார்களின் பெயருடன் சேர்த்து நமஸ்காரம் தெரிவித்திருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு திருப்தி அடைந்தேன். இந்த ஸமரஸ பாவம் நம் எல்லோருக்கும் ஏற்ப, அத்தனை தெய்வங்களுமான ஏக பரமாத்மா அநுக்ரஹிக்க வேண்டும்!

-நன்றி கல்கி ( Balhanuman Blog)

Post Reply