KavithaigaL by Rasikas

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

அறு துயில் நீக்கி உவந்துவந்து திருமலையில் வாழும் நெடியவனே !
பெரு வாழ்வு அளித்திடும் திருமகள் உறை மார்பா!
துரிதமுடன் பாஞ்சாலிக்கு துகில் அளித்த கரியவனே !
ஆயிரம் ஆயிரம் கோபியருடன் ஆயர்பாடியில் களித்த ஆலிலை கண்ணா !
அழகிய வதனா! வேங்கடவா!
நீயே பரமன்! ஜீவனை உவந்து காத்து
உன்பாத கமலங்களில் இருத்தி முக்தி அளிக்கும் நாள் எந்நாளோ !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(171)
பணமா பெரிது?

பணமா பெரிது? நட்பன்றோ பெரிதென்றான்!
............பணம் கொடுத்தேன்; பணத்துடன் பறந்தது நட்பு.
தனமா பெரிது? உறவன்றோ பெரிதென்றார்!
............தனம் அளித்தேன்; தனத்துடன் மறைந்தது உறவு.
செல்வமா பெரிது? நிம்மதிதான் பெரிதென்றார்!
............செல்வம் இறைத்தேன்; அந்தோ! இழந்தேன் நிம்மதி.
பொருளா பெரிது? புண்ணியமே பெரிதென்றார்!
............பொருள் அழித்தேன் - புண்ணியம்? யாரே அறிவர்?

ப்ரத்யக்ஷம் பாலா,
22.04.2012.

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

venkatakailasam wrote: துரிதமுடன் பாஞ்சாலிக்கு துகில் அளித்த கரியவனே !
Nice coinage!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

PB
I guess you meant
பொருள் அளித்தேன்
It is a pity, the shower of all that தேன் did not sweeten life :D

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(172)
அழகு

அலையிடை ஆதவன் எழவும்
இலையிடை சிந்திய ஒளியில்
கலையெழில் வண்ணம் கண்டேன்;
சிலையெனச் சிலிர்த்து நின்றேன்!


ப்ரத்யக்ஷம் பாலா,
23.04.2012.

.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

http://www.thehindu.com/health/medicine ... Y_HY.email.
When I saw the photo in this news item, I was inspired to write this.
காரியம் யாவிலும் கை கொடுப்பேன் என்றாய்
கையும் கொடுத்தாய், காரியமும் முடிந்தது
காலும் தளர்ந்தது, உடலும் உள்ளமுமே
இன்றும் கை கொடுக்கிறாய், கை பிடிக்கிறாய்
உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை
நம் இருவருக்குமோ அந்த இறைவனே துணை
இறைவா எம் இருவரையும் பிரித்திடாதே
பிடித்த கை பறித்திடாதே!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Beautiful!
பிணைத்த கை என்றும் பிரித்திடே
ரிணைத்த மனமும் தகர்த்திடேர் - அணைத்த
யீருடலும் உயிரும் அன்றுபோலென்றுமோ
ர் சேரும் வகையருள் இறைவா!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Nice ones Punarvasu and CML.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

To me by my grand daughter...

குழந்தை ஒன்று நீந்தி வந்தது ..
நீந்தி வந்த குழந்தை காலை கட்டியது
காலை கட்டிய குழந்தை மடியில் தவிழ்ந்தது..
வளர்ந்து விட்ட குழந்தை கையை பிடித்து நடந்தது
பட்டம் பெற்ற குழந்தை கலெக்டர் ஆனது ..
கலெக்டர் ஆன குழந்தயை கடத்தி சென்றனர் ..
குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்தது..
உறக்கமும் போனது...
ஈசா...ஏசுவே ..குழந்தையை காத்து அருள்வாய் கர்த்தரே.
Last edited by venkatakailasam on 04 May 2012, 08:57, edited 1 time in total.

arasi
Posts: 16876
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

How sad! Is it based on a true story?

The card you have topped it with is moving and gives hope.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

Collector paul Menon of the District Sukma in chattisgar was abducted about 15 days back by Naxalites ..he belongs to Tamil Nadu..

Happily he was released now..

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(173)
செல்லாத காசு

வல்லமை இருந்தும் வில்லேந்தி நின்றும்
வெல்லாது இருந்தால் செல்லாத காசே.
வல்லமை கூட்டம் பலகோடி இருந்தும்
கல்லாது இருந்தால் செல்லாத காசே.


ப்ரத்யக்ஷம் பாலா,
24.04.2012.

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(174)
கடிமணம் (காண்க: குறுந்தொகை 25 )

மறைவானோ எனைவிட்டு என்னருமைக் காதலன்?
விரைவாக மனைவாழ்வு கொண்டிட நினைந்து
மறைவாக முடித்திட்டோம் கடிமணம் அன்று; -- எனக்கு
இரைதேடி நின்றிருந்த கொக்கொன்றே சாட்சி!


ப்ரத்யக்ஷம் பாலா,
01.07.2006.

.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Very good one PB.
(காண்க: குறுந்தொகை 25 )

That made me look up the original - such beautiful lines! Found one version here

Here is my interpretation - this is in aRu seer viruttam (mA, mA, kAy in each half-line):

அன்று மாலை மாற்றுங்கால்
--- அவனும் நானும் தனித்திருந்தோம்
கெண்டை மீனைக் கவர்ந்திடவே
--- கொக்கும் நீரைப் பார்த்திருக்கும்
ஒன்று கூடிச் சேராமல்
--- ஒருவன் வாக்குத் தவறிடுமோ?
சென்று நானும் முறையிட்டால்
--- சாட்சி சொல்ல எவருண்டு ?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Thanks, sridhar_rang.
Here is one more Kurunthogai for you.

(175)
கூந்தலின் வாசம் (காண்க: குறுந்தொகை 2)

உள்ளதைத் தேடும் உருவண்ணத் தும்பியே!
உள்ளதை உள்ளபடி உண்மையாய்க் கூறிடு.
தூமயில் என்னவளின் கூந்தலின் வாசம்போல்
பூமியில் பூக்கின்ற பூவெதற்கும் உண்டோ?


ப்ரத்யக்ஷம் பாலா,
07.05.2012.



Kurunthogai 2:-
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அறிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

.

arasi
Posts: 16876
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

kavidaiyin nayam aRiyuminda rasigar kuzhAm--
kavi mEl kavi punaiyum,gavanathai Irkkum--
irundadaiyellAm kATTum--kaLiyuDanE
pudidAip punaium, perumidam aDaiyum...

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Pratyaksham Bala wrote: Kurunthogai 2:-
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
தேனைத் தேடி வாழ்ந்திடுவாய்
--- தும்பீ உண்மை சொல்வாயோ
கான மயில்போல் மெல்லியலாள்
--- களையாய் வரிசைப் பல்லுடையாள்
நாணம் கலந்த நட்புடையாள்
--- நீளக் கூந்தல் மணமதுபோல்
காணக் கிடைக்கும் மலருண்டோ
--- காமம் இன்றிச் செப்பிடுவாய்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

அரும்பு மலரும் தோட்டம்
வாசம் வீசும் மலர்கள்
பூ கொய்யும் மகளரின் புன்னகை
காமம் மொழியும் கண்கள் ..
தயிர் பிசைந்த விரல்கள்..
கணவனை விளிக்கும் கரங்கள் ..
அவன் புகழ்தலை கேட்கும் செவிகள் ..
சுற்றும் விழிகள்
வேண்டுவதோ இன்னுமும் இனிக்கும் இரவுகள்..

arasi
Posts: 16876
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

koyvadO kodi nIril thiLaithu
kuDi pAnamAik kamazhum
maNamuDai kozhunduth thEyilai

iruvarum pagirndarunda--
Tea for two--
iniyum vENDuvadennavO? ;)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(178)
கலக்கம் (காண்க: குறுந்தொகை 28)

முட்டிக் கொள்ளவா? மோதிக் கொள்ளவா?
கட்டுண்டு மோகத்தில் கூச்சலிட்டுக் கதறவா?
பிரிவுத் துயரில் துடித்திடும் என் நிலை
சிறிதும் அறியா ஊரும் உறங்கும்!


ப்ரத்யக்ஷம் பாலா,
07.05.2012.



குறுந்தொகை 28
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅஒல் எனக் கூவுவேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(179)
மலரும் முகம் (காண்க: குறுந்தொகை 167)

கெட்டித்தயிர் பிசைந்த காந்தள் பூவிரலை
கட்டிய ஆடையிற் கசக்கித் துடைத்து
சட்டிபுகை மேலெழுந்து மையிட்ட கண்கலக்க
கெட்டியாய்க் கூட்டிய கவின்மிகு புளிக்குழம்பை
இட்டமுடன் கணவன் இரசித்துப் புசிக்கும்போது
மட்டிலா மகிழ்ச்சியில் மலரும் மங்கைமுகம்.


ப்ரத்யக்ஷம் பாலா
09.05.2012.



குறுந்தொகை 167
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(180)
கடவுள்

கனவில் கண்டதாகக் கதை சொல்லித் திரியாதீர்!
உமக்குள் தேடும்; ஒருவேளை உணரலாம்.


ப்ரத்யக்ஷம் பாலா.
.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

http://i40.tinypic.com/1zzlv8z.jpg

குறை காணும் உலகில் நிறை காண வேண்டினேன்
பகை காணும் தரணியில் நகை காண நல்கினேன்..
அம்மா என்று கூவினேன் ஏனென்று குரல் கொடுத்தாய்
சாத்வீகமான எண்ணங்களை தா …
ஏச்சும் பேச்சும் சீண்டலும் மனதை தீண்டாமலிருக்க அருள் புரிவாய் ..
புகழும் இகழ்வும் ஒன்றே என எண்ணி என் கதை தொடர வேண்டி நின்றேன் ..
தாயே அபிராமி …

சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து ...

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(181)
உரிமைக் குரல்

கற்றுக் கறவைகள் காத்துக் கிடக்கட்டும்.
சற்றே கோபியர்கள் கோபித்து இருக்கட்டும்.
ஓங்கி உலகளந்த உத்தமனே! மன்னவனே!
ஏங்கித் தவிக்கும் எமக்கும் அருள் பொழிவாய்!

ப்ரத்யக்ஷம் பாலா,
13.5.2012.

.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Kannan responds to Pratyaksham Bala:

சற்றே எனது நிலையுணர்வீர் மானிடரே
கற்றுக் கறவைகள் கோபியர் - மற்றுள்ள
வானவர்கள் நிற்கும் வரிசை பெரிசாச்சே
சேனல்ஸேல்ஸ் மூலம் வருவீர்

Over to Channel Manager, Shri Manavala Mamunigal: (channel = guru parampara)

ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே வுடைய(ன்)
ஆன குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர் !
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(182)
கூட்டத்தில் கேட்டகுரல் கடமையாய் பதித்துவைத்தேன்;
தீட்டியுள்ள இச்செய்தி கேட்டவர்க்கும் கிடைத்திருக்கும்!
.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

கண்ணா ! இந்த சிறுசுகளை பார்..
வேண்டுவது சோறும் நிழலும் ...
செல்வத்தை நாட வில்லை ..
ஏன்? ஏன் ? இந்த பாராமுகம் ?
வினை பயன் என்று கூறி விட்டு ஓடி விடாதே ..
கோபியருடன் ஆடவும் ராதையுடன் கூடவும் ..
மாயன் நீ..
பார்த்தனுக்கு சாரதியாய் இருந்தும்
நான் சாரதியும் இல்லை ரதமும் இல்லை
ஐந்து குதிரைகளும் இல்லை...
செல்லும் பாதையும் நான் இல்லை...
நான் ரதத்தில் செல்பவன் மட்டுமே..
என்று கூற வில்லையா..
சொல் கண்ணா..
ரதத்தில் செல்பவன் மாயமாய் மறைந்து போகிறாய்
நீ சென்ற ரதமும் சாம்பலாய் போனது ..
வினை களை
எடுத்து சென்றது யார் கண்ணா..?
மயமான நீயா அன்றி சாம்பலான ரதமா?...
நான் வேறு செயல் வேறு என்று கூறவில்லையா....
வினை வந்தது எவ்வாறு..?
உண்மை...எது கண்ணா ? ஏன் இந்த மாய பேச்சு ?
ஆதரவு அற்றவர்களுக்கு எல்லாம் ஆதரவான பரம் பொருளே ..
இந்த சிருசுகளுக்கும் ஆதரவு தா ...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

Image

சிவனே என்று இருப்பார் சிலர் ..
அவனே என்று இருப்பார் பலர்..
வசி வசி என்று இருப்பாரும் உண்டு..
அருளலாலளின் அமுதை உண்ண..
பாம்பு சித்தர் ஆடு பாம்பே என்ற உடன் ..
மேல் நோக்கி நகர்ந்தது அம்மா...
ஆறுமுக சக்கரங்கள் ஆறையும் கடந்து ....
வசியை கூடியது ஆடியது..
இருளும் நீங்கியது ஒளியும் தெரிந்தது ...
அமுதும் பொழிந்தது....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

வேண்டுபவர் வேண்டியதை வேண்டியபடி -தருவான்
வேண்டாதவர் வேண்டியதை தரமறிந்தும் ..


( அடியாருக்கு வேண்டுபவர் )
(வேண்டாதவர் ..அடியாரை வேண்டாதவர் ..)


சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

புன்னகை தவிழும் கண்ணனின் ஸ்பரிசத்தால்
மூங்கிற் குழலி நெளிந்தாளோ…
கண்ணனின் தேனுரும் இதழ்களை பருக துடித்தாளோ
பருகியதால் இனிய நாதத்தை இசைதாளோ...
மூங்கிற் குழலி செய்த தவம் தான்
எத்தனை பெரியாதம்மா ..
கண்ணனின் சேர்க்கைக்கு ..
கோபியரும் ராதையும் காத்திருக்க
இமயோரும் தேவரும் நோக்கியிருக்க
இதழ்களின் தேனை பருகி பருகி மூங்கிற் குழலி இசைக்கும்
நாதம் தான் எத்துணை எத்துணை இனியது ....
கோபியரை பிரிந்தான் ராதையை பிரிந்தான்
மூங்கிற் குழலியை பிரிய மறுத்தான் ..கண்ணன்
அவளிசைக்கும் நாதத்தில் மயங்கி …..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

This is to inform that the song lyrics posted by me so far in kavithaigal by rasikas are copyrighted ....
venkatakailasam

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

விஸ்வா… இது வரை நீ
மாயமான அகந்தையுடன் இருந்தாய்
அகந்தையுடன் பிறந்தாய்
அகந்தையுடன் வளர்ந்தாய்
தலை வணங்கா குணமுடையவனாய் இருந்தாய்
என்னிடம் இருந்த நந்தினியை இழுத்து செல்ல விழைந்தாய் ..
என்னுடன் பகையை வளர்த்தாய் ..
சகுந்தலை இடம் கொண்ட பெண் பாசத்தால்
இப்பொழுது உனக்குள் இருந்த 'தான்' என்ற அகந்தை அழிந்து போனது ..
கர்வமும் ஒடுங்கி போனது
என் காலடியில் கிடக்கிறாய் ...
இந்த அடக்கம் தான் உகந்த ஒன்று
அகந்தியும் கர்வமும் கூடா ஒன்று..எவருக்கும்
பிரம்ம ரிஷியாகும் தகுதியும் பெற்றாய்…..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

பிரியா வரம் தருவாய் அம்பிகையே ..பாலாம்பிகையே ...

பிரியா வரம் தருவாய் ...

சக்ரவாசினியின் புதல்வியே ..

அன்னையிடமிருந்து ப்ரியாதிருப்புவளே..

என்னையும் பிரியாது காத்தருள் அம்பிகையே !

வேண்டியதை வேண்டியபடி தந்தருளும் தாயே …
கலையாத கல்வியும் மாறாத வசியமும் அழியாத செல்வமும்
தந்து அருள்பவளே .....
ஸ்ரீ வித்யாவின் சேயே...
‘ஐயும் க்லீம் சௌ …..’ உருவானவளே ...
குருவின் அருள் வேண்டி நின்றேன் …அம்பிகையே .....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

முத்து சுடர் ஒளி போல் முகத்தில்
மோகன புன்னகை ஒளிர ..
கூவும் குயிலின் இன்னிசை கண்ணன் குழலில் இசைய ..
தத்தி நடக்கும் தளிர் நடை அழகு ..
காணும் கண்கள் குளிர ..
இத்தலத்தில் யசோதை செய்த தவம் தான் எத்தனை பெரியதம்மா ...
நெஞ்சம் களித்திட நீலவண்ண கண்ணன் நேச கதைகள் மிக பேசி
தஞ்சம் என வரும் கன்னியர் உள்ளம் கலங்கிட பின் ஏசி ..
வஞ்சனை செய்யும் கள்வன் இவன் ..
ஊதும் குழல் இசையின் அரவம் கேட்டு ..
பசுவும் கன்றும் காடும் மலையும்
காற்றும் கடலும் ஓங்கார சுருதி கூட்ட…
தேடி அலைந்த ராதையின் உள்ளமும் உவந்து உவகை பெருக
நாடி வந்த கண்ணன் கூடி நின்ற
அழகு தான் கவியமானதோ!!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(183)
ஹா ராகவா !
(வதன ஸுஹாஸ்ய ரஸாளா)

அழகாக சிரிக்கும் முகம் - ஹா ராகவா!
மேகம் போன்ற கருமேனி - ஹா ராகவா!
மைக்கோடு திலகம் ஆனது - ஹா ராகவா!
நெற்றியிலே மலர் மாலை - ஹா ராகவா!
மார்பில் உயர் வைஜயந்தி - ஹா ராகவா!
நடந்தாலே நிலம் அதிரும் - ஹா ராகவா!
அழகான கவர்ச்சிப் பொக்கிஷம் - ஹா ராகவா!
கையிலே கம்பீர கோதண்டம் - ஹா ராகவா!
உயிர்கள் அனைத்துக்கும் உயிர் - ஹா ராகவா!


ப்ரத்யக்ஷம் பாலா,
01.06.2012.

.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

என்பில் அதனை வெயில் போல காயுமே
அன்பில் அதனை அறம்

கோடை வெயில் கொளுத்துகிறது
ஆற்றில் தண்ணீர் இல்லை
வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்களை
ஆள்பவர்கள் மனத்தில்
காரம் உண்டு வீரம் உண்டு
ஈரம் இல்லை
நீர் இல்லா ஆற்றில் மணல் தடம்
இப்போது அதுவும் கொள்ளை
எங்கெங்கும் flat
சிற்றறைகள் கொண்ட சிறைகள்
வாடகை பத்தாயிரம்
தண்ணீர் வாங்க ஐயாயிரம்
அருணா ஜலம் கருணா முர்த்தி !!
மக்கள் சேவையே மகேசன் சேவை
தவித்த வாய்க்கு தண்ணீர் –பணத்துக்கு
100 லாரிகளுக்கு முதலாளி
100 flat காம்ப்ளெக்ஸ்
இனி business மாற்றப் போகிறார்
மூலப்பொருள் தேடி 100 மைலா போவது !
சமூகப் பணி என்னாவது?
T.V. தொடர்கள் தயாரிக்க போகிறாராம்
தண்ணீர் மணல் வியாபாரம் விட்டு
கண்ணீர் வியாபாரம்
அது வற்றாதல்லவா ??..

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

யார் அவர்?

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: KavithaigaL by Rasikas

Post by erode14 »

என்பில் என்றதும், வெளுப்பதற்காகக் கழற்றிப் போட்ட சட்டையின் பையில், எடுக்க மறந்து தங்கிவிட்டு, நனைந்தும் கசங்கியும் போன காகிதமொன்றைக் வெயில் பட வெளியில் வைத்தது நினைவுக்கு வந்தது. அது பணம் செலுத்தியதற்கான சீட்டு.

“ஆஹா.. என் பில் அதனை வெயில் காயுமே என்பது இதுதானா!”

பெருமழை ஒன்றிற்கான காத்திருப்பில்
கடந்து போகின்றன நாட்கள்.

வான்பொழிக வான்பொழிக

கழுத்துவரை நீரென்பது
கனவாகிப் போய்விடினும்
காலேனும் நனையட்டும்
வான்பொழிக வான்பொழிக

காலடியின் ஈரம் வேண்டி
கச்சியோனைத் தொழுகின்றேன்
காய்தலால் கட்டமா?
வான்பொழிக வான்பொழிக

கட்டங்கள் சொல்கின்ற
கணக்குகள் தரவேண்டாம்
பட்டங்கள் வந்துவிடும்
வான்பொழிக வான்பொழிக

தேடியே விதைக்கவும்
தேவைகள் தீர்க்கவும்
பாடியே பணிகின்றேன்
வான்பொழிக வான்பொழிக

நல்லாராய் ஒருவரேனும்
உண்டானால் பெய்திடுமாம்
உள்ளதுக்குள் நல்லவர்க்காய்
வான்பொழிக வான்பொழிக

பாலையாய்ப் போய்விடாமல்
காலையைக் பசுமையாக்க
ஓலையாய்த் தூதுவந்து
வான் பொழிக வான் பொழிக

மரங்கள் அறுத்துப் போட்டு
அறங்கள் தொலைத்த பின்னும்
வரங்களுக்காய் வெட்கமின்றி
வந்து நிற்கும் வணிகனாய்

வாசல் மிதிக்கவும்,
வானுலகு வேண்டவும்,
வாயிலாது போய்விட்ட
நாயினும் கடைமக்கள்

நாசர்களல்ல எப்பொழுதும்
நல்லவராய் மாறிவிடுவர்
நானிலம் உய்விக்க
வான்பொழிக வான்பொழிக.

arasi
Posts: 16876
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

aravarasE!
varuga, varuga!
vegu nATkaLAik kAthirundOm--
vAn mazhai pOl, varuga, varuga!

"marangaL aRuthup pOTTu,
aRangaL tholaitha pinnum
varangaLukkAi veTkaminRi
vandu niRkum..."

manam padiyum varigaL.

vAn mazhai pozhiga!
nan mazhai pozhiga!
nanRE pozhiga!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

வான்பொழிக வான்பொழிக
நோவா(Noahவ)து போல
உயிரினம் காத்து
வான்பொழிக வான்பொழிக

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

Singing a song for you..
As you are away and I am flying away..
Like the swan ..
This is not a quote!
But what I wrote..
Somewhere on this letter
A drop of water..nay, a drop of tear
You can find..
For you to hold it as a gift..
Yes..as a parting gift..
As I keep nothing with me as mine
Except warmth in the eyes
And, a smile on the lips...

arasi
Posts: 16876
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

VKailasam,
'VADith thavithu mazhai mugam pArkkum sAdakam pOl endan mAdhavanai ninaindu' of Ambujam Krishna comes to mind.
If only you have nADith thavikkudaDi in nATTaik kuRinji, one of her compositions!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(184)
சொர்க்கம்

சொர்க்கம் செல்ல வேண்டுமெனில் புண்ணியம் சேர்க்க வேண்டுமையா
புண்ணியம் சேர்க்க வேண்டுமெனில் தானம் செய்ய வேண்டுமையா
தானம் செய்ய வேண்டுமெனில் தனம் மிக வேண்டுமையா
தனம் மிக வேண்டுமெனில் தினம் உழைக்க வேண்டுமையா
தினம் உழைத்து பொருளீட்ட திறமை மிக வேண்டுமையா
திறமை மிக வேண்டுமெனில் ஆர்வம் மிக வேண்டுமையா
ஆர்வம் மட்டுமில்லாது அறிவும் மிக வேண்டுமையா
அறிவு மிக வேண்டுமெனில் அதிகம் படிக்க வேண்டுமையா
அதிகம் படிக்க வேண்டுமெனில் அதிகம் பணம் தேவை ஐயா


ஐயா! ஐயா!
அதிக பணம் தேவையையா!
தானம் செய்யுங்க ஐயா!

ப்ரத்யக்ஷம் பாலா,
14.6.2012

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(185)
பஜனை

உளம் உருகிப் பாடு; கைத் தாளம் போடு!
மனம் நிறைய ஆடு! அதற்கு உண்டோ ஈடு!


ப்ரத்யக்ஷம் பாலா,
15.6.2012

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: KavithaigaL by Rasikas

Post by erode14 »

இதழோடு இதழ்கள்
இருந்திடல் மட்டுமா..

விழிகள் கண்களைப் பார்ப்பதும்
மூச்சில் ஸ்வாசம் கலத்தலும்
மார்புகள் நெஞ்சை அடைதலும்
இடவலம் மாறியே இருகரங்கள் இணைதலும்
இடைதனைத் தேடியே அரையது அலைதலும்...

அடி மனதின் காதலை
அகமொன்று அறிந்திடலும்
தொடுவுணர்வின் செய்தியெல்லாம்
ஸ்பரிசத்தில் ஸ்புரித்தலும்

இருத்தலும் இணைதலும்
முத்தங்கள் தானடி...

இதழுக்கு மட்டுமன்றி
இணைகின்ற யாவைக்கும்.

#HappyKissDay :)

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: KavithaigaL by Rasikas

Post by erode14 »

எனக்குத் தெரியும்,
நீ ரோஜாப்பூ தான்.

வெப்ப மூச்சுக்கே
வாடிவிடும் இதழ் தான்.

காதல் தலைக்கேறி
கால் வரை சுட்டாலும்
காலை அடையும் வரை
வாடாத தலைப்பூ...

காதல் மனம் திளைத்து
காமம் கால் துளைத்து
கையில் ஏந்தி வந்தும்
கருகிடாத மலை பூ...

இவற்றை அறிவாயா நீ,
அடைந்திட்ட வெப்பம்
விஷக்காற்றுமல்ல;
விரிகின்ற சூடுமல்ல,
வேள்வி.
எரிகின்ற வேள்வி.

மோகத்தின் தணலையே
இகழ்ந்திட்ட இதழ்கொண்டு
யாகத்தின் தழலுக்கா
விலகிப் போவது!

எனக்குத் தெரியும்
நீ ரோஜாப்பூ தான்.

தெரிந்து கொள்ளேன்,
நீயும்.

#HappyKissDay

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

I am alone..alone with a faint heart…
Grieving and delighting..
Trembling to see the path behind me
And delighting to climb the last steps..
Preparing to see the the leaf wither..
In silence and In dusk and dawn..
And in the stillness of the night..
Sitting on the window sill…
peeping through the windows
Can I hope like an inquiring child..
As to when the leaf has to…

arasi
Posts: 16876
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Looking through the window lends us a vista
Looking within, the smallness of our selves

Gazing at a flower, the universe opens--
Ourselves, a pathetic pitiful speck

A life long lived has many gaping holes
Of regrets and misses--too many to count
Yet, how many riches, rewards!
All gained from without--
From out there, the entire everything--
Which we feel when the clinging me in us
for a moment dissolves, disappears!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: KavithaigaL by Rasikas

Post by venkatakailasam »

The tender flowers..
Blooming among the flowering sherbs and weeds..
Along a rocky tarrin……
The sunny breeze making them toss
Their head right and left..
As the Mangrove trees swaying in tune
While the older among them unable to move along..
It is hard not to be jealous of the noisy singing birds
Bringing joy to the heart weary and lonely..

arasi
Posts: 16876
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Let the birds cackle--
Noise is no sweet voice,
Of the music we can hear,
Even in silence...

Post Reply