If you are a venpA buff (in tamil script)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

பிரமாதம் ஸ்ரீதர் அய்யா.
தமிழ் மணம் கமழும் பாடல். கிராமப்புற காட்சியை கண் முன்னே நிறுத்துகிறது.
எல்லோருக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துகள்.
இப்புத்தாண்டு மங்களகரமாக இருக்க பிரார்த்திப்போம். நன்றி.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Thank you CML and MSM.

I was persuaded to join a group of devotees in reciting the tenth decad of nammazhwar's tiruvaimozhi yesterday, and was so moved when I came across this particular verse which provided inspiration.

http://dravidaveda.org/index.php?option ... le&id=2939

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

What a கவி நயம்!
But I thought that ஏலோ = அந்தோ gives a feeling of sadness.
Hence I took the liberty of cutting a 'leg' (கால்) from your lyric and it is now
பாலுள பாத்திரம் பொங்கு மேலே
- - பசுநெய் பச்சரிசியும் சேரு மேலே
நாலுகை வெல்லமும் ஏலமும் பச்சைக்
- - கருப் பூரமும் மணம் கமழுமேலே
மேலுள சூரியன் மிக மகிழ்ந்தே
- - மேதினி மீதருள் பொழியு மேலே
சூலுள பயிர்தரு விளை நிலங்கள்
- - செழிக்கும் இப்பொங்கல் பொங்கல்பொங்கலே!

மேலே shows the rising up of the prosperous ingredients (symbolizing the cornucopia of the harvest season). Note that the previous word is in the imperative commanding nature to promote the prosperity!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Yes CML, it sounds good with your changes. The 'rising up' imagery does suit the pongal theme.

The 'AlO' ending as used by nammazhwar is meant to convey sadness of the nAyikA at her separation from Krishna, but at first I felt 'ElO' did fit a joyous mood. It also gave a folksy touch (like in 'ElElO ailasA').

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

Sridhar,
You are on a roll! Great!
Funny, I felt that the ElO was fun and AlO was a bit sad. CML took care of that!

Ponbhairavi!
Super kavidai!
Thanks to sankark for this veNbA thread and MSM who has joined in! In our days, MSM stood for something else ;)

Thanks all, kavidaigaL flourish at Rasikas.org!!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Ponbhairavi
To followup on you

தெள்ளுதமிழ் முள்ளுதமிழ் உள்ளேயும் புகுந்து
கள்ளமிலா உள்ளத்தால் படிக்கிறோம் களிக்கிறோம்
குள்ளர் எமக்கு எட்டாத பிறவற்றுள்
வள்ளலார் பின் நிற்போம் ஒளிந்து

எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல்
வேறொன்றறியோம் பராபரமே

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

Dear All: Belated Pongal wishes. Hope the festivities bring lots of music and auspiciousness in your lives.
I guess I broke the convention by not posting in the new members thread. Will do it shortly. Here is the gist. I am an ordinary rasika of CM who migrated from enjoying/memorizing film music tunes to CM due to circumstances/people around. Live in California. Was a silent reader for a few months, but this venBa thread was too attractive/inspiring to keep quiet. Very glad and honoured to meet all of you rasikas/poets. Regards & love.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Warm welcome msm:
We are happy you decided to become visible and vocal - our good fortune..
Continue to contribute..

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff

Post by Ponbhairavi »

தை மகளே வருக !
மார்கழியில் கோதைதை –மனம் கவர்
பஜனையில் துக்கா ராம கதை –மேலும்
நில மகளாம் சீதைதை –பகவத்
கீதை மேதை களுக்கேற்ற கதை
இசையோடு இன்பத்தை தந்திடும் நாதத்தை
தை தை சதங்கை யொலி நடனத்தை
கா தை கிழிக்கும் பட்டிமன்ற வாதத்தை
போதையென உண்டு களித்திருப்போர் –ஒரு புறம

மெத்தைக் கடியிலும் கத்தை கத்தை யாய்
பணத்தை புதைக்கும் பாவிகள் வர்க்கத்தை
நாட்டை சிதைக்கும் நயவஞ்சகர் கூட்டத்தை
மேகத்தை கிழித்துவரும் வருணனின் சீற்றத்தை
கண்டு பதைதைத்து கலங்கி நிற்போர் மறுபுறம
இடையே
நம்பிக்கை மணங்கமழ் நன் மலர் கொத்தை
தையலாம் தை மகள் தன் கையில் ஏந்தி வந்தாள்

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

aDi Sakkai (tai)!
kavi vETkai (tai)!

poymai ozhigavena (tai)!
pudumai pugundiDavE (tai)!

poruL migu pulamai OngiDa (tai)!
pazhamaiyin mEnmaiyum polindiDa (tai)!

tai tai tai, taraiyengaNum
tamizh Ongavena manam ADum
tai tai tai!
takiTa takiTa tai tai ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

இக்கவிதையில் கற்றதை மனதை இருத்தி
கருத்தை ஆழ்நெஞ்சில் புதைத்து விடு!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

நம்மாழ்வார் நைந்துருகும் நற்பா நடையாலோ
தெம்மாங்குத் தேனடையில் தோய்த்தசொல் லினிப்பாலோ
செம்மாங்க னிச்சாறாம் தென்னாட்டின் மொழியாலோ
அம்மாயென் ஸ்ரீதரனே அருட்பாவுன் அருளாலோ ?

அம்மா.என் ஸ்ரீதரனே = என் அன்னை ஸ்ரீதேவியை அணிந்தவனே

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

பொன்பை.....ரவிக்கவிதை.....பூங்கவிதை.....போற்றும்தை
மென்மகளே.....தாவுன்.....வரத்தை.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

திருவாய் மொழிப்பாவில் திகழும் வனப்பாலே
குருவாய் வழிகாட்டும் சிஎம்எல்* அன்பாலே
திருமா மகள்கொழுநன் திவ்ய அருளாலே
ஒருபாவும் வருமோ இவையின்றி தன்னாலே?


*சிஎம்எல் = C M Lover(s) = Rasikas Community

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Sankark, waiting for your next!

சங்கரிக்கு நூறுகவி சண்முகர்க்கு மோருகவி
ஐங்கரர்க்குக் காப்புகவி செய்தனை - சங்கைப்
பிடித்தோர்க்கும் பண்ணுகவி பித்தனாயன் றொருநாள்
நடித்தோர்க்கும் நல்லகவி செய்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

கலக்கிட்டீங்க :D
msm
That is nice compliment to Ponbhairavi...
sridhar
Is the last one after Nakkeerar's response to Siva?
சங்கறுப்ப தெங்கள் குலம் etc..
(I don't remember it whole now :(

msk2
Posts: 19
Joined: 02 Jan 2011, 20:41

Re: If you are a venpA buff

Post by msk2 »

Google இருக்க ஞாபக சக்தி எதற்கு ?

சங்கறுப்ப தெங்கள் குலஞ்சங் கரர்க்கங் கேதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோ மினி‘
என்பது நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் பாடல்.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

No CML, that was based on this gem by kavi kALamEgham:

http://23-c.blogspot.com/2009/07/blog-post_6645.html

I still remember that dialog between Nakeerar and Siva from thiruviLaiyADal movie....Television hadn't come to Madurai until '83 or so and we didn't have one in our home till mid eighties. We boys would repeatedly listen to cassette tapes of movie sound tracks, especially tiruviLaiyADal and tillAnA mOhanAmbAL. Many of the dialogs are still fresh in memory including this one:

iRaiyanAr (Sivaji Ganesan; what majestic voice and dialog delivery he had!): angam puzhudi paDa aruvALil ney pUSi Sangadanaik keer keer ena aRukkum nakkeeranO em pATTai ArAindu Sollat takkavan? (the 'keer keer' was elongated to a 'keeeeeeeer keeeeeeeeer' to great effect by Sivaji)

nakkeerar (who was the actor? hardly a patch on Sivaji in creating similar effect): SangaRuppad(u) engaL kulam SankaranArkk(u) Edu kulam? Sangai aRindunDu vAzhvOm aranE um pOl irandunDu vAzhvadillai

That's it - an angry Sivaperuman opens his third eye and burns nakeeran to ashes. The PANDya king intercedes on poor nakkeerar's behalf, Siva cools off, Keeran comes back to life. Dharumi (Nagesh) gets his gift hamper of 1000 gold coins. Subham.

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: If you are a venpA buff

Post by erode14 »

Director A.P.Nagarajan did nakkeerar part.

sankark
Posts: 2346
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

sangaip pidiththaanukku ondru, marabukkaviall, paadal (trying my hands, so pardon my mistakes). Now I can't set it to tune in that raga. So anyone wishes to set it to tune, please do so.

ராகம்: குந்தலவராளி
தாளம்: ஆதி

பல்லவி
மாலே உனைப் பணிவது எந் | நாளே திரு ||
மாலே உனைப் பணிவது இந் | நாளே திரு ||
மாலே உனைப் பணிவது இந் | நாளே ஆங்கே ||

அனுபல்லவி
பாற்கடல் அரவணைத் துயில் | நாரணா பெரு ||
மாளே உனைப் பணிவது இந் | நாளே பெரு ||
மாளே உனைப் பணிவது இந் | நாளே திரு ||

சரணம் - மத்யம காலம்
பொய்கையும் பூதமும் நெஞ்சினில் தேக்கிய |
பேயும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடிய || (1)
பாணன் அடிப்பொடி சேரன் மூவரும் ||
பத்தியில் திளைந்து நிதமும் பாடிய || (2)
மங்கை குருகூர் நம்பியும் மழிசையும் |
தீந்தமிழாலே ஓதிய உயர்புகழ் || (3)
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மனதில்|
ஆடிக்கொண்ட அறிவுடை நம்பி|| (4)

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

sankark,
Yes, no problem in singing it at all, I found out as I hummed it. Madhyama kAla charaNam encompasses them all!

Erode,
kavi nayamum nagaich chuvaiyum koNara--
Sevikkiniya oli kUTTum aravarasarum vandIr ;)

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: If you are a venpA buff

Post by PUNARVASU »

தை தை என்று தை குதித்தோடி வர

தையுடன் கை கோர்த்து மாசிலா மாசி பவனி வர

எங்கு நீ எங்கு நீ என்று பங்குனி பின் வர

திரை விலக்கி புது வருடம் காட்ட சித்திரை வர

வைகையில் கள்ளழகர் இறங்க ஏதுவாய் வைகாசி வர

ஆனித்திருமஞ்சனம் கொண்டாட ஆனி வர

ஆடி ஆடி ஆடிக்கொண்டு தள்ளுபடி தரும் ஆடி வர

ஆவணி புரட்டாசி என பண்டிகை பூசைகள் நிறை மாதங்கள் வர

ஐப்பசி அடை மழை பட்டாசு நனை மழையென ஐப்பசி வர

கார்த்திகை தீப ஒளி தருமாய் கார்த்திகை வர

மாதங்களில் நான் மார்கழி என மாயக்கண்ணன் கூறிய

பாவை நோன்பு நோற்கும் மாதமாய் மார்கழி வர

மாதம் பனிரெண்டும் மனதையெல்லாம் நிறைக்குதே

வெண் பா இல்லை இது என்று தெரியும்,

பாவா இல்லையா என்றே தெரியாது

கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும்

தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினார்ப்போல்

உம் பாட்டுக்கு நான்பாட்டு எழுதிய பாட்டு

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

pollAch chiRagellam mayilinam engaiyil tAnE?

vAn kOzhikku vanda pEr (R)aip pArum!
bOOMi onRE teriyum adaRku, mayilaip pOlavE eninum--
It is Turk among turkeys ;)

ellA viN mINgaLukkum polivuNDu--
punarvasu enRAl, pin kETpAnEn?
varudattin mAdamellAm varum azhagai
vagaiyAik kURinIrE? vAzhga, vAzhga!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Everybody is on a roll!
Thanks folks for recalling the திருவிளயாடல் sequence. I didn't know that APN did the Nakkeerar.
That episode starring Sivaji is a masterpiece.
And Sridhar your Kavi (after kALamEgam) is simply superb. You have brought in, all the deities (especially the Siva family including his b-i-l) and let us followup with verses on them!
I enjoy the நயம் in the
பித்தனாயன் றொருநாள்
நடித்தோர்க்கும் நல்லகவி செய்
(Sundarar has done it superbly and Sivaji's dramatization in Thiruvarutchelvar with the majestic voice of TMS is just unforgettable).
sankark
You went one step further and composed a CM song in kunthalavarali! I am sure arasi caught on to it and rendered it privately to herself. I wonder when she will come out of her shell and start sharing her musical skills with us :D
Punarvasu
No apologies needed. Free rendering is just as delightful as 'grammatical' ones. While we just started the Tamil New Year, you have already taken us through the gamut of the whole year reminding us of what lies in waiting.

Talents galore!!
Thanks folks..

sankark
Posts: 2346
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

பித்தனாயன் றொருநாள் நடித்தோர்க்கும்

புவிவாழும் அந்தணர் தம்வேள்வி தனில்யில்வார்
அவியுண்ணும் வானவர்க்கும் மேலான மெய்ப்பொருளே
தில்லைத் தலத்துறை மங்கலனே இப்பிறவித்
தொல்லை ஒழித்த ருளே

1/20 - Fixed thalai. Red colored text to be removed
Last edited by sankark on 20 Jan 2012, 10:39, edited 2 times in total.

sankark
Posts: 2346
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

சங்கைப் பிடித்தோர்க்கும்

வண்டாடும் பூஞ்சோலை நீள்மதில் சூழரங்கா
வெண்டாம ரைமெல் லியலாள் கொழுநன்தன்
தந்தாய் கலிதனிலே மானிடரை உய்விக்க(த்)
தந்தாய் உயர்கீதை யே

ஈற்றடி
வந்தாய் மலையே ழிலே
எனவும் அமையும்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Good
We need one on ஐங்கரன் too!
Actually we should have started with him...
(I am not of course discounting the காப்பு with which you started...)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

@ புனர்வசு: way to go, wonderful job of creating your own garland of month names..
wanted to see how many month names can be accomodated in a kuRal and still have reasonable meaning, here is an attempt with only 3:

மனதை மயக்கிடும் மாசிலாப் பாவில்
புனர்வசு பங்கு நிசம்.

@ sankar/sivam - very good venba - looks like venba writing is second nature to you; one thaLai rule adjustment may be needed in the 1st line.

ஒழித்தருளிக் காத்திடும் ஓம்சிவ சக்தி
அழித்தாக் கிடுவதும் அஃதே.

@sankar/krishnan - another good one, let that aranganathan bring more and more verses here....

கீதை உரைத்திடும் கேடற்ற உண்மைக்குக்
காதைக் கொடுமன மே.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Fantastic msm
(hope you didn't mind my meddling for the benefit of our readers!}
Try some more...

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

@cml: not at all sir, & no it's definitely not meddling...; we are all writing for fun and enjoyment and for a bit of learning too, aren't we? - thanks

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

@cml: //We need one on ஐங்கரன் too!//

காப்புறுதி கையவனே கைப்பற்றும் மெய்யவனே
பாப்பொருளும் பண்ணும் அவனே.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Wow msm, those kuRaLs are amazing...

Sankark, enjoyed your latest venbAs on Siva and perumAL.

We have a venbA vEndar and a kuRaL arasar with us, in whose praise I can say:

வெண்பாவேந் தெங்கள்சங் கரனாவான் எம்எஸ்எம்
நுண்பாவாம் குறள்வல் லவன்

I continuously struggle with the grammar (the above kuRaL has multiple taLai errors!) and just can't stop wondering at the ease with which Sankar and msm produce such perfectly grammatical yet beautiful verses. You guys rock!

[update]after fixing grammar, but not quite the same:

வெண்பா அரசனவன் சங்கர்கே எம்எஸ்எம்
நுண்பா குறள்மன் னவன்[/update]
Last edited by sridhar_ranga on 20 Jan 2012, 00:37, edited 6 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

பலே பலே!

வெண்பாவில் சங்கரரும் குறள்பாட msmமும்
பண்பான ஆசு கவிபாட பொன்பைரவியும்
தனிப்பாடற்கரசியும் பழம்பாடல் ஸ்ரீதரரும்
நனிசொற்புனைபூசமும் இனிப்பலரும்
எந்தாய் தமிழன்னை பெற்றாள் இக்கணினிக் குழு மாட்டே..

தனிப்பாடற்கரசி I am referring to the superb blank verse collection
அவன் அவள் அது by our Arasi..

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

பட்டம்வேண் டாம்நண்பா பாட்டவனன் பாலன்றோ
அட்டைபோல் அண்டும் அகந்தையே * இட்டமாய்
பட்டம்போல் பாய்ந்து பறந்திடும்பாப் பைங்கிளியை
சட்டத்தில் இட்டால் சிறை.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

பட்டம் பரிசல்ல பணமும் பரிசல்ல பாப்புனைவீர்
இட்டமுடன் நூற்கும் பாவே நுமக்கு பரிசு

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

AhA!
dinam oru kavidai,
illai, p(h)ala kavidai--
paNbanbar ingu pakkuvamAi
vaDitteDukkum naR kavidai--

pATTum kaviyum SErndu
namai paNbuRach cheyyum
pal vidamAm SoR chuvai!

CML,
the title of the book is avaLgaLum avangaLum aduvum...

sankark
Posts: 2346
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

msm - fixed the first adi thalai. thanks for catching that.

msm - that aingaran kural - wouldn't avan be grammatically most fit than avanE (only nEr, niRai, nErbu & niRaibu allowed, right? avane would be niRai nEr?)

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: If you are a venpA buff

Post by erode14 »

I got first prize, district level in mimicry and mono acting for that nakkeerar - sivan sequence. :)

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: If you are a venpA buff

Post by erode14 »

வெண்பாக்கள் ஏதுமறியேன். புதுக்கவிதை கொஞம் பழக்கமுண்டு. சமீபத்தில் எழுதி, ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டதை, have posted it here http://rasikas.org/forums/viewtopic.php? ... cb#p215130

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff

Post by Ponbhairavi »

சட்டத்தில் இட்டால் சிறை என்றே விட்டாலும்
வட்டமிட்டு சுற்றிஅங்கே வலம் வருமே -விட்டுப்
பைங்கிளிகள் போவதில்லை பழக்கத்தால் ரசிகாஸ்
அங்கத்தினர் நம்போன்றே அது.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

//msm - that aingaran kural - wouldn't avan be grammatically most fit
than avanE (only nEr, niRai, nErbu & niRaibu allowed, right? avane
would be niRai nEr?)//

you are 100% right; ஆஹா ! நல்ல தவறு (கண்டு) பிடிப்பு (error-catching) சங்கர் அவர்களே!

If I remember correct, only நாள், மலர், காசு, பிறப்பு - these are allowed as ஈற்றுச்சீர் in a venba.
Though பிறப்பு is நிரை-நேர் it has குறில் as the final அசை (syllable) as opposed to அவனே which is also நிரை-நேர் (புளிமா) but has 'னே’, the நெடில் as the final அசை, hence not allowed.

அவன் will work, though the emphasis created by ஏ-காரம் would be lost.

காப்புறுதி கையவனே கைப்பற்றும் மெய்யவனே
பாப்பொருளும் பண்ணும் அவன்.

not sure if another combination with the previous சீர் taken as கூவிளங்காய் , that is, as பண்ணுமவ, and the final siir as னே, will be acceptable. Only strong யாப்பிலக்கணம் experts can help us on this. Some may say பண்ணுமவ cannot be taken as கூவிளங்காய் but only as a கனிச்சீர் (தேமாங்கனி) which is absolutely not allowed in a venba.

May be this version sounds better?:

காப்புறுதி கையவனே கைப்பற்றும் மெய்யவனே
பாப்பண்ணு வானவ னே.

Thanks a lot for catching this. The richness of Thamizh language and the structure is amazing and pretty addictive.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

@erode14

ஈரோட்டார் ஈயும் இறைப்பா, இளங்கவிதை
தாராயென் பார்ரசி கர்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Sorry Arasi; I was not keeping the book in front while referring...
Do tell our members where theycan get a copy if they want... Thanks

Here is my invocation on Ainkaran composed in iambic pentameter for my english class (pre-independent India)
"May the God of elephant face
Now smile on us with light and grace
And all evils that round us rage
May He dispel from age to age"

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Dear Erode
Didn't know you were also a mimicry artist...
Can you re create and post that episode for us...

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

@CML - super verse..May Lord Gajanan bring more and more creative work (both music & poems) from members..
what is //iambic pentameter//, if I may ask?

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

@erode - //I got first prize, district level in mimicry and mono acting for that nakkeerar - sivan sequence.// - is there a video/audio recording of this that you can share with us ?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

msm
Too difficult to remember what transpired 68 years ago!
That is actually iambic tetrameter. From what I remember the iambus consists of two syllables. The mnemonic was
I am| bics march|from short| to long.
The rhyming is important. My teacher (Father Hawthorne) was impressed with my work and encouraged me to pursue Literature at London. Spirit of nationalism kept me back at bhArat and later disappointments banished me to NA!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

நன்றி CML அவர்களே!

ஆங்கில பாவிலக்கண விதிகளை மேலோட்டமாகவது தெரிந்துகொள்ள ஆவலாயிருந்தேன். பலரிடம் கேட்டும் பார்த்தேன். தங்கள் மறுமொழி மேலும் ஆய்வதற்கு ஒரு ஆரம்பம் கொடுத்தது. மிக்க நன்றி.

Wanted to write my response in Thamizh and I think managed to do it above. எழுத எழுத, பழகப் பழக தமிழின் அற்புதம், ஆழம், விரிவு, செழுமை எல்லாம் மெல்ல மெல்ல புரிகிறது.
என்ன, பொன்பைரவி சொல்வது போல் தமிழ்ப்பற்றும் (கர்நாடக சங்கீதம் போல) ஒரு அடிமையாக்கும் பழக்கம் தான்.

Thanks much sir.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

@Ponbhairavi - yes, it (thamizh poetry, that too traditional poetry) is indeed pretty addictive..

கொத்தத் தமிழ்க்கனி கூடுநிதங் கூவுகிளி
பித்துப் பிடித்திவர் போல்.

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

Mon ami, ponbhairavi and msm,
every morning a poetic feast! Thanks.

Post Reply