KavithaigaL by Rasikas
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
deleted.
Last edited by Pratyaksham Bala on 12 Feb 2011, 16:52, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(45)
இனிமை
காலைக் குளிர் இதமும்,
சாலை மர நிழலும்,
சோலைக் குயில் ஒலியும்,
மாலை வெயில் அழகும்,
. . . . . . . .வேலைச் சுமை குறைக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
26 .09 .2006
inimai
kAlaik kuLir idamum,
chalai mara nizhalum,
cholaik kuyil oliyum,
mAlai veyil azhagum,
. . . . .vElaic cumai kuRaikkum!
Pratyaksham Bala.
.
இனிமை
காலைக் குளிர் இதமும்,
சாலை மர நிழலும்,
சோலைக் குயில் ஒலியும்,
மாலை வெயில் அழகும்,
. . . . . . . .வேலைச் சுமை குறைக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
26 .09 .2006
inimai
kAlaik kuLir idamum,
chalai mara nizhalum,
cholaik kuyil oliyum,
mAlai veyil azhagum,
. . . . .vElaic cumai kuRaikkum!
Pratyaksham Bala.
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
The warmth in a chilly dawn
The shade of a wayside tree
Cuckoo cooing in a lawn
Even light shining in glee
Eat away the chore from work
The shade of a wayside tree
Cuckoo cooing in a lawn
Even light shining in glee
Eat away the chore from work
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(46)
பஜ கோவிந்தம்
கீதையும் சஹஸ்ர நாமமும் பாடு!
விஷ்ணுவின் உருவைச் சிந்தையில் சூடு!
சித்தம் தெளிந்திட நல்லோரை நாடு!
நித்தம் வறியோர்க்கு உதவிட ஓடு!
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
30௦.04 .2007.
BHAJA GOVINDAM (Tamil)
gItaiyum sahasra nAmamum pADu!
viSNuvin uruvaic cindaiyil shUDu!
cittam teLindiDa nallOrai nADu!
nittam vaRiyOrkku udaviDa ODu!
Pratyaksham Bala.
Sanskrit verse by Sri Sumati, disciple of Sri Sankaracharya.
गेयं गीता नाम सहस्रं
ध्येयं श्रीपति रूपमजस्रम्
नेयं सज्जन सङ्गे चित्तं
देयं दीनजनाय च वित्तम्
gEyam gItA nAma sahasram
dhyEyam shrIpati rUpamajasram
nEyam sajjana sangE cittam
dEyam dInajanAya ca vittam
.
பஜ கோவிந்தம்
கீதையும் சஹஸ்ர நாமமும் பாடு!
விஷ்ணுவின் உருவைச் சிந்தையில் சூடு!
சித்தம் தெளிந்திட நல்லோரை நாடு!
நித்தம் வறியோர்க்கு உதவிட ஓடு!
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
30௦.04 .2007.
BHAJA GOVINDAM (Tamil)
gItaiyum sahasra nAmamum pADu!
viSNuvin uruvaic cindaiyil shUDu!
cittam teLindiDa nallOrai nADu!
nittam vaRiyOrkku udaviDa ODu!
Pratyaksham Bala.
Sanskrit verse by Sri Sumati, disciple of Sri Sankaracharya.
गेयं गीता नाम सहस्रं
ध्येयं श्रीपति रूपमजस्रम्
नेयं सज्जन सङ्गे चित्तं
देयं दीनजनाय च वित्तम्
gEyam gItA nAma sahasram
dhyEyam shrIpati rUpamajasram
nEyam sajjana sangE cittam
dEyam dInajanAya ca vittam
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
. . . . . . . .
TODAY'S SPECIAL!
(46)
பார்வை
வாடிய பூக்கூட வளமாய்த் தெரிந்தது;
சூடிய பழையதும் புதிதாய்த் தெரிந்தது!
ஆடிய கூத்தெலாம் அழகாய்த் தெரிந்தது;
ஓடிய போதெலாம் ஒயிலாய்த் தெரிந்தது!
. . . . . . . .காதலுக்குக் கண்ணுண்டு;
. . . . . . . .கற்கண்டாய்ப் பார்க்குமது!
ப்ரத்யக்ஷம் பாலா,
09.05.2004.
pArvai
vADiya pUkkUDa vaLamAit terindadu;
shUDiya pazaiyatum pudidAit terindadu!
ADiya kUttelam azagAit terindadu;
ODiya pOdelAm oyilAit terindadu!
. . . . . . . .kAdalukkuk kaNNuNDu;
. . . . . . . .kaRkaNDAip pArkkumadu!
Pratyaksham Bala.
cmlover:
Please bless this with your English version!
.
TODAY'S SPECIAL!
(46)
பார்வை
வாடிய பூக்கூட வளமாய்த் தெரிந்தது;
சூடிய பழையதும் புதிதாய்த் தெரிந்தது!
ஆடிய கூத்தெலாம் அழகாய்த் தெரிந்தது;
ஓடிய போதெலாம் ஒயிலாய்த் தெரிந்தது!
. . . . . . . .காதலுக்குக் கண்ணுண்டு;
. . . . . . . .கற்கண்டாய்ப் பார்க்குமது!
ப்ரத்யக்ஷம் பாலா,
09.05.2004.
pArvai
vADiya pUkkUDa vaLamAit terindadu;
shUDiya pazaiyatum pudidAit terindadu!
ADiya kUttelam azagAit terindadu;
ODiya pOdelAm oyilAit terindadu!
. . . . . . . .kAdalukkuk kaNNuNDu;
. . . . . . . .kaRkaNDAip pArkkumadu!
Pratyaksham Bala.
cmlover:
Please bless this with your English version!
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(48)
பஜ கோவிந்தம்
மூச்சை அடக்கு; புலனையும் அடக்கு.
நிலையானது எதுவென நித்தமும் சிந்தி.
ஜபத்துடன் கூடிய சமாதி நிலையில்
மனதைக் கட்டு; ஒருநிலைப்படுத்து!
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.
BHAJA GOVINDAM (Tamil)
mUcchai aDakku; pulanaiyum aDakku.
nilaiyAnatu etuvena nittamum shindi.
japattuDan kUDiya samAdi nilaiyil
manadaik kaTTu; orunilaippaDuttu!
Pratyaksham Bala.
Sanskrit verse by one of the disciples of Sri Sankaracharya:-
प्राणायामं प्रत्याहारं
नित्यानित्य विवेकविचारम्
जाप्यसमेत समाधिविधानं
कुर्ववधानं महदवधानम्
prANAyAmam pratyAhAram
nityAnitya vivEkavicAram
jApyasamEta samAdhividhAnam
kurvavadhAnam mahadavadhAnam.
.
பஜ கோவிந்தம்
மூச்சை அடக்கு; புலனையும் அடக்கு.
நிலையானது எதுவென நித்தமும் சிந்தி.
ஜபத்துடன் கூடிய சமாதி நிலையில்
மனதைக் கட்டு; ஒருநிலைப்படுத்து!
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.
BHAJA GOVINDAM (Tamil)
mUcchai aDakku; pulanaiyum aDakku.
nilaiyAnatu etuvena nittamum shindi.
japattuDan kUDiya samAdi nilaiyil
manadaik kaTTu; orunilaippaDuttu!
Pratyaksham Bala.
Sanskrit verse by one of the disciples of Sri Sankaracharya:-
प्राणायामं प्रत्याहारं
नित्यानित्य विवेकविचारम्
जाप्यसमेत समाधिविधानं
कुर्ववधानं महदवधानम्
prANAyAmam pratyAhAram
nityAnitya vivEkavicAram
jApyasamEta samAdhividhAnam
kurvavadhAnam mahadavadhAnam.
.
Last edited by Pratyaksham Bala on 17 Feb 2011, 08:35, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(49)
ஒளிமிக்க எதிர்காலம்
எத்தனையோ உள நல்வழிகள்
. . . . . . . . .பொன்னான நற்பெயர் கொள்ள.
உத்திகள் பற்பல உண்டு;
. . . . . . . . .உணர்ந்து செயல்பட வேண்டும்.
நித்தமும் சிந்தித்தல் நன்று;
. . . . . . . . .நீடித்த நம்பிக்கை வேண்டும்.
எத்திசையும் நம் புகழ் மணக்க
. . . . . . . . .ஏற்றம் அடைந்திடு வோம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.
oLimikka etirkAlam
ettanaiyO uLa nalvazhigaL
. . . . . .ponnAna naRpeyar koLLa.
uttigaL paRpala uNDu;
. . . . . .uNarndu sheyalpaDa vEnDum.
nittamum shintittal nanRu;
. . . . . .nIDitta nambikkai vEnDum.
ettishaiyum nam pugazh maNakka
. . . . . .ETRam aDaintiDuvOm!
Pratyaksham Bala.
.
ஒளிமிக்க எதிர்காலம்
எத்தனையோ உள நல்வழிகள்
. . . . . . . . .பொன்னான நற்பெயர் கொள்ள.
உத்திகள் பற்பல உண்டு;
. . . . . . . . .உணர்ந்து செயல்பட வேண்டும்.
நித்தமும் சிந்தித்தல் நன்று;
. . . . . . . . .நீடித்த நம்பிக்கை வேண்டும்.
எத்திசையும் நம் புகழ் மணக்க
. . . . . . . . .ஏற்றம் அடைந்திடு வோம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.
oLimikka etirkAlam
ettanaiyO uLa nalvazhigaL
. . . . . .ponnAna naRpeyar koLLa.
uttigaL paRpala uNDu;
. . . . . .uNarndu sheyalpaDa vEnDum.
nittamum shintittal nanRu;
. . . . . .nIDitta nambikkai vEnDum.
ettishaiyum nam pugazh maNakka
. . . . . .ETRam aDaintiDuvOm!
Pratyaksham Bala.
.
Last edited by Pratyaksham Bala on 17 Feb 2011, 08:35, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(50)
பஜ கோவிந்தம்
வாடியது உடல்; வெளுத்தது தலை.
ஆடின பற்கள்; உதிர்ந்தன எல்லாம்.
கூடியது முதுமை; கிடைத்தது கைத்தடி.
ஓடியதா ஆசை? இன்னும் விட வில்லையே!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.05.2006.
BHAJA GOVINDAM (Tamil)
vADiyadu uDal; veLuttadu talai.
ADina paRkaL; udirntana ellAm.
kUDiyadu mudumai; kiDaittadu kaittaDi.
ODiyadA Asai? innum viDa villaiyE!
Pratyaksham Bala.
Sanskrit verse by Sri Hastamalaka, one of the disciples of Sri Sankaracharya.
अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम्
वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम्
angam galitam palitam muNDam
dashanavihInam jAtam tuNDam
vrudhdO yAti gruhItvA daNDam
tadapi na munjcatyAshApiNDam
.
பஜ கோவிந்தம்
வாடியது உடல்; வெளுத்தது தலை.
ஆடின பற்கள்; உதிர்ந்தன எல்லாம்.
கூடியது முதுமை; கிடைத்தது கைத்தடி.
ஓடியதா ஆசை? இன்னும் விட வில்லையே!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.05.2006.
BHAJA GOVINDAM (Tamil)
vADiyadu uDal; veLuttadu talai.
ADina paRkaL; udirntana ellAm.
kUDiyadu mudumai; kiDaittadu kaittaDi.
ODiyadA Asai? innum viDa villaiyE!
Pratyaksham Bala.
Sanskrit verse by Sri Hastamalaka, one of the disciples of Sri Sankaracharya.
अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम्
वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम्
angam galitam palitam muNDam
dashanavihInam jAtam tuNDam
vrudhdO yAti gruhItvA daNDam
tadapi na munjcatyAshApiNDam
.
Last edited by Pratyaksham Bala on 17 Feb 2011, 08:35, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Explicitly it is
ஓடியதா (உடல்) ஆசை?
.. the love of (attachment to) the (even shattered) physical body!
Actually the desire outlasts the life
यावत् जीव: तावत् आशा
यावत् आशा तावत् संसारं
(to be caught in the web of liife and death...)
ஓடியதா (உடல்) ஆசை?
.. the love of (attachment to) the (even shattered) physical body!
Actually the desire outlasts the life
यावत् जीव: तावत् आशा
यावत् आशा तावत् संसारं
(to be caught in the web of liife and death...)
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Let me complete my Sloka 
सी. एम् . एल् उवाच
यावत् जीवति तावत् आशा
यावत् आशा तावत् संसारं
चिन्तय एतत् वारं वारं
विन्दय गॊविन्द सत् पादं

सी. एम् . एल् उवाच
यावत् जीवति तावत् आशा
यावत् आशा तावत् संसारं
चिन्तय एतत् वारं वारं
विन्दय गॊविन्द सत् पादं
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ஸி எம் எல் அருளினார்:-
உயிருள்ளவரையில் ஆசை இருக்கும்;
ஆசை உள்ளவரையில் சுற்றம் இருக்கும்.
அசைபோட்டு இதை அடிக்கடி நினைத்து
சரணடை கோவிந்தன் பொற் பாதத்தை!
cml aruLinAr
uyiruLLavaiyil Asai irukkum;
Asai uLLavaraiyil sutRam irukkum.
asaipOTTu idai aDikkaDi ninaittu
saraNadai gOvindan poR padattai!
உயிருள்ளவரையில் ஆசை இருக்கும்;
ஆசை உள்ளவரையில் சுற்றம் இருக்கும்.
அசைபோட்டு இதை அடிக்கடி நினைத்து
சரணடை கோவிந்தன் பொற் பாதத்தை!
cml aruLinAr
uyiruLLavaiyil Asai irukkum;
Asai uLLavaraiyil sutRam irukkum.
asaipOTTu idai aDikkaDi ninaittu
saraNadai gOvindan poR padattai!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
(8 lines; 2 shIr. With edugai and iyaibu.)
(51)
பிறவிப் பயன்
உரிய தொரு
பிரிய குரு
சொரிய அருள்
பிரியும் இருள்.
அரிய தொரு
கரிய திரு
பெரிய உரு
தெரிய வரும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2006.
piRavip payan
uriya toru
piriya guru
shoriya aruL
piriyum iruL.
ariya toru
kariya tiru
periya uru
teriya varum.
Pratyaksham Bala.
.
(8 lines; 2 shIr. With edugai and iyaibu.)
(51)
பிறவிப் பயன்
உரிய தொரு
பிரிய குரு
சொரிய அருள்
பிரியும் இருள்.
அரிய தொரு
கரிய திரு
பெரிய உரு
தெரிய வரும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2006.
piRavip payan
uriya toru
piriya guru
shoriya aruL
piriyum iruL.
ariya toru
kariya tiru
periya uru
teriya varum.
Pratyaksham Bala.
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
(8 lines; 2 shIr. With edugai and iyaibu.)
பயனுறு பிறவி
குரு பிரிய
இருள் செரியும்
உரு கரிய
வரும் தெரிய
உரு பெரிய
ஒரு உரிய
பொருள் வரில்
அருள் சொரியும்
When you lose the Acharya, all goes dark, the dark inner self (ignorance) gets manifested.
But
When the Great One (out of mercy) who is the fit object (for meditation ) manifests then there is a shower
of blessing (one is redeemed)...
பயனுறு பிறவி
குரு பிரிய
இருள் செரியும்
உரு கரிய
வரும் தெரிய
உரு பெரிய
ஒரு உரிய
பொருள் வரில்
அருள் சொரியும்
When you lose the Acharya, all goes dark, the dark inner self (ignorance) gets manifested.
But
When the Great One (out of mercy) who is the fit object (for meditation ) manifests then there is a shower
of blessing (one is redeemed)...
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
குரு வணக்கம் – 2
முழவுக்கலையின் முதன்மை வேந்தன்-எம்
முன்னோர்கள் முன் செய்த
முற்றிய தவப் பயன்.
முகந்தனில் மலர்ந்த முறுவல் மாறாது
மூவகைக் காலமும் ஐவகை ஜாதியில்
கைவகை ஜாலம் களிநடம் புரிபவன்.
சூர்யனின் கிரணங்கள் சூக்ஷ்மமாய் படர்ந்து
சுரங்களாய்த் தழுவியதில் சூல் கொண்ட ஸாகரம்....
பெருகவே கருக்கொண்டு பருகவே யிசைதந்து (வேயிசை)
உருகவே யாழ்த்திய (யாழ்) உமையாள்புரக் கார்முகில்.
என்றுமிரு தங்கமென ( மிரு தங்கமென )
குன்றா சுரங்கமாய் கன்றுக்குத் தாதியாய்
ஞானத்திற்காதியாய் (‘தா’ ‘தி’ – ‘ஆதி’)
ஸ்வாச லயம் ஓங்கிட – தகப்பன் (‘கிட – தக’)
ஈசனருள் தேங்கிட - துதித்து
தாள நயம் எங்கும் கிடந்திட (எங்“கும்கி”டந்திட)
தன்னிரகற்றுத் தாரகை போலே
உச்சத்தில் உறைகின்ற
ஆகாசா.... புதினம் புரிவாய்... [ஆகா, சாபு தினம் (தி–நம்)புரிவாய்]
புதிதாய்ச் செய்வாய்..
அறிதலாங்கு அளித்தென்னை (தளாங்,கு)
தெரிதலுக்குள் தள்ளிடுவாய்....
முப்புரம் எரித்திட்ட முக்கண்ணன் - அவனின்
மைந்தருள் கொம்பன்; முருகனின் அண்ணன்
முழு முதல் நாயகன் - மூஷிக விநாயகன்
திருவடி முகிழ்ந்து திறம்படத் திகழ்பவன்
திரையிலும் தோன்றியே
திசைகளை வென்றவன். (மிருதங்கச் சக்ரவர்த்தி)
குருவாய் வந்தெனை லகுவாய்த் தேற்றினாய் (குரு, லகு)
திருத்தம் செய்தென்னுள் திரிபினைச் சேர்த்தாய். திருதம்),
(திரிபு - permutation; சேர்வு - combination)
மனதினை மறைத்திட்ட மாத்திரை நீக்கி (மாத்திரை)
நியதியால் எந்தன் மார்க்கம் மலர்த்தினாய்,
நீ… யதியால் எந்தன் மார்க்கம் மலர்த்தினாய். (யதி, மார்க்கம்)
சித்தி அடைந்தோரே கலைஞராயாவர் – தம் (ஆவர் – தம்]
சித்தியால் சொல்லினை சிறப்பிக்க வைப்பர்.
அடைதல் என்பதே அகண்டதோர் வேதம்
அதற்காக பாதம் - நடைகள் பல காதம்....
கதியெனப் பணிந்தேன்; அதுவே போதும். (காக பாதம், நடை, கதி)
[ சிவராமன் சார் குறித்த நினைவுகளின் தாக்கமாய் 9.8.07. அன்று எழுதியது.
ஈரோடு நாகராஜன்,
சென்னை – 33]
முழவுக்கலையின் முதன்மை வேந்தன்-எம்
முன்னோர்கள் முன் செய்த
முற்றிய தவப் பயன்.
முகந்தனில் மலர்ந்த முறுவல் மாறாது
மூவகைக் காலமும் ஐவகை ஜாதியில்
கைவகை ஜாலம் களிநடம் புரிபவன்.
சூர்யனின் கிரணங்கள் சூக்ஷ்மமாய் படர்ந்து
சுரங்களாய்த் தழுவியதில் சூல் கொண்ட ஸாகரம்....
பெருகவே கருக்கொண்டு பருகவே யிசைதந்து (வேயிசை)
உருகவே யாழ்த்திய (யாழ்) உமையாள்புரக் கார்முகில்.
என்றுமிரு தங்கமென ( மிரு தங்கமென )
குன்றா சுரங்கமாய் கன்றுக்குத் தாதியாய்
ஞானத்திற்காதியாய் (‘தா’ ‘தி’ – ‘ஆதி’)
ஸ்வாச லயம் ஓங்கிட – தகப்பன் (‘கிட – தக’)
ஈசனருள் தேங்கிட - துதித்து
தாள நயம் எங்கும் கிடந்திட (எங்“கும்கி”டந்திட)
தன்னிரகற்றுத் தாரகை போலே
உச்சத்தில் உறைகின்ற
ஆகாசா.... புதினம் புரிவாய்... [ஆகா, சாபு தினம் (தி–நம்)புரிவாய்]
புதிதாய்ச் செய்வாய்..
அறிதலாங்கு அளித்தென்னை (தளாங்,கு)
தெரிதலுக்குள் தள்ளிடுவாய்....
முப்புரம் எரித்திட்ட முக்கண்ணன் - அவனின்
மைந்தருள் கொம்பன்; முருகனின் அண்ணன்
முழு முதல் நாயகன் - மூஷிக விநாயகன்
திருவடி முகிழ்ந்து திறம்படத் திகழ்பவன்
திரையிலும் தோன்றியே
திசைகளை வென்றவன். (மிருதங்கச் சக்ரவர்த்தி)
குருவாய் வந்தெனை லகுவாய்த் தேற்றினாய் (குரு, லகு)
திருத்தம் செய்தென்னுள் திரிபினைச் சேர்த்தாய். திருதம்),
(திரிபு - permutation; சேர்வு - combination)
மனதினை மறைத்திட்ட மாத்திரை நீக்கி (மாத்திரை)
நியதியால் எந்தன் மார்க்கம் மலர்த்தினாய்,
நீ… யதியால் எந்தன் மார்க்கம் மலர்த்தினாய். (யதி, மார்க்கம்)
சித்தி அடைந்தோரே கலைஞராயாவர் – தம் (ஆவர் – தம்]
சித்தியால் சொல்லினை சிறப்பிக்க வைப்பர்.
அடைதல் என்பதே அகண்டதோர் வேதம்
அதற்காக பாதம் - நடைகள் பல காதம்....
கதியெனப் பணிந்தேன்; அதுவே போதும். (காக பாதம், நடை, கதி)
[ சிவராமன் சார் குறித்த நினைவுகளின் தாக்கமாய் 9.8.07. அன்று எழுதியது.
ஈரோடு நாகராஜன்,
சென்னை – 33]
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
I don't remember whether I posted this earlier in our forum, anyway, thanks to cml for reminding guru...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
erode14:
வார்த்தைகள் ஜாலம் மிகவும் அருமை!
தொடர்ந்து இன்னும் பல பாடல்கள் அளித்திட வேண்டுகிறேன்.
வார்த்தைகள் ஜாலம் மிகவும் அருமை!
தொடர்ந்து இன்னும் பல பாடல்கள் அளித்திட வேண்டுகிறேன்.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Erode
Reminded me of Avvayaar's vinayar akaval.
What a nice tribute to UKS sir!
My hearty compliments to him for having a dedicated shishya like you..
Do post more of your other selections...
Reminded me of Avvayaar's vinayar akaval.
What a nice tribute to UKS sir!
My hearty compliments to him for having a dedicated shishya like you..
Do post more of your other selections...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(52)
சாக்குப் போக்கு
ஊருக்கு உழைக்க வாவென அழைப்பேன்.
நோவெனக் கூறாதீர்! 'நோ'வெனக் கூறாதீர்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003.
shAkkup pOkku
Urukku uzhaikka vAvena azhaippEn.
nOvenak kURAdIr! 'nO'venak kURAdIr!
Pratyaksham Bala.
.
சாக்குப் போக்கு
ஊருக்கு உழைக்க வாவென அழைப்பேன்.
நோவெனக் கூறாதீர்! 'நோ'வெனக் கூறாதீர்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003.
shAkkup pOkku
Urukku uzhaikka vAvena azhaippEn.
nOvenak kURAdIr! 'nO'venak kURAdIr!
Pratyaksham Bala.
.
Last edited by Pratyaksham Bala on 20 Feb 2011, 08:54, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
சாக்கு நிறைப்பு (filling the sack (with grains))
ஏருக்கு உழைக்க வாவென அழைப்பேன்.
நோவெனக் கூறாதீர்! 'நோ'வெனக் கூறாதீர்!
ஏருக்கு உழைக்க வாவென அழைப்பேன்.
நோவெனக் கூறாதீர்! 'நோ'வெனக் கூறாதீர்!
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
போருக்கு வாயென்றால் சுற்றம் பேசுகிறாயே? - கண்ணன்
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
VGV
போருக்கு வாயென்றால் சுற்றிப் பேசுகிறாயே? - குப்பன்
போர் = வைக்கோல் போர்
சுற்றிப் பேசுதல் = circumlocution (out of laziness)
போருக்கு வாயென்றால் சுற்றிப் பேசுகிறாயே? - குப்பன்

போர் = வைக்கோல் போர்
சுற்றிப் பேசுதல் = circumlocution (out of laziness)
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(53)
பகவத் கீதா (2.37)
கிருஷ்ணர் கூறியது:
மரித்தால் சுவர்க்கம்; வென்றால் ராஜ்ஜியம்.
புரிந்ததா அர்ஜுனா? எழுந்திரு; போரிடு!
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.2006.
bhagavad gItA (2.37) (Tamil)
kriSNar kURiyatu:
marittAl swargam; vendRAl rAjyam.
purindadA arjunA? ezhundiru; pOriDu!
Pratyaksham Bala.
श्री भगवानुवाच :-
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय:
shri bhavavAnuvAca :-
hatO vA prApsyasi svargam jitvA vA bhokshyasE mahIm
tasmAduttiSTHa kauntEya yuddhaya krutanishcaya:
.
பகவத் கீதா (2.37)
கிருஷ்ணர் கூறியது:
மரித்தால் சுவர்க்கம்; வென்றால் ராஜ்ஜியம்.
புரிந்ததா அர்ஜுனா? எழுந்திரு; போரிடு!
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.2006.
bhagavad gItA (2.37) (Tamil)
kriSNar kURiyatu:
marittAl swargam; vendRAl rAjyam.
purindadA arjunA? ezhundiru; pOriDu!
Pratyaksham Bala.
श्री भगवानुवाच :-
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय:
shri bhavavAnuvAca :-
hatO vA prApsyasi svargam jitvA vA bhokshyasE mahIm
tasmAduttiSTHa kauntEya yuddhaya krutanishcaya:
.
Last edited by Pratyaksham Bala on 20 Feb 2011, 08:55, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Humanist (materialist) Gita:
मृतॊ प्राप्स्य्सि न किंचित् प्राणभृत् लभसि भॊगम्
तस्मात् त्यज युद्धम् नर कुरु बहु जन सॆवा ॥
Dead you get nothing
Enjoy life while living
Oh Man! Hence shun war
Serve humanity at large
இறப்பில் இல்லை ஒன்றும்
உயிர்ப்பில் உண்டு போக சுகம்
போரைத் தவிர் மானிடா
மக்கள் சேவை செய்யடா
मृतॊ प्राप्स्य्सि न किंचित् प्राणभृत् लभसि भॊगम्
तस्मात् त्यज युद्धम् नर कुरु बहु जन सॆवा ॥
Dead you get nothing
Enjoy life while living
Oh Man! Hence shun war
Serve humanity at large
இறப்பில் இல்லை ஒன்றும்
உயிர்ப்பில் உண்டு போக சுகம்
போரைத் தவிர் மானிடா
மக்கள் சேவை செய்யடா
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(54)
பஜ கோவிந்தம்
கீதையின் வரிகளில் ஒன்றேனும் படி!
கங்கையின் நீரில் துளியேனும் குடி!
'முராரீ!' என்றொரு முறையேனும் துதி!
யமனை நினைத்துனக்கு பயமேது இனி?
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2008.
BHAJA GOVINDAM (Tamil)
gItaiyin varikaLil ondREnum paDi!
gangaiyin nIril tuLiyEnum kuDi!
'murArI' endRoru muRaiyEnum tudi!
yamanai ninaittunakku bhayamEdu ini?
Pratyaksham Bala.
Sanskrit verse by Sri Dridhabhakta, one of the disciples of Sri Sankaracharya.
भगवद् गीता किञ्चिदधीता
गङ्गा जललव कणिकापीता
सकृदपि येन मुरारि समर्चा
क्रियते तस्य यमेन न चर्चा
bhagavad gItA kincidadhItA
gangA jalalava kaNikApItA
sakrudapi yEna murAri samarcA
kriyatE tasya yamEna na carcA
.
பஜ கோவிந்தம்
கீதையின் வரிகளில் ஒன்றேனும் படி!
கங்கையின் நீரில் துளியேனும் குடி!
'முராரீ!' என்றொரு முறையேனும் துதி!
யமனை நினைத்துனக்கு பயமேது இனி?
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2008.
BHAJA GOVINDAM (Tamil)
gItaiyin varikaLil ondREnum paDi!
gangaiyin nIril tuLiyEnum kuDi!
'murArI' endRoru muRaiyEnum tudi!
yamanai ninaittunakku bhayamEdu ini?
Pratyaksham Bala.
Sanskrit verse by Sri Dridhabhakta, one of the disciples of Sri Sankaracharya.
भगवद् गीता किञ्चिदधीता
गङ्गा जललव कणिकापीता
सकृदपि येन मुरारि समर्चा
क्रियते तस्य यमेन न चर्चा
bhagavad gItA kincidadhItA
gangA jalalava kaNikApItA
sakrudapi yEna murAri samarcA
kriyatE tasya yamEna na carcA
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(55)
பகவத் கீதா (2.56)
ஸ்ரீ பகவான் (கிருஷ்ணர்) கூறியது:-
துன்பத்தில் துவளாதே;
இன்பத்தில் துள்ளாதே.
பற்றும், பயமும், சினமும் அற்றவன்
முற்றும் உணர்ந்த முனிவன் ஆகிறான்.
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2007.
bhagavad gItA (2.56) (Tamil)
shrI bhagavAn (krishNar) kURiyatu:-
tunbattil tuvaLadE;
inbattil tuLLatE.
patRum, bhayamum, shinamum atRavan
mutRum uNarnda munivan AkiRAn.
Pratyaksham Bala.
Sanskrit:-
भगवद्गीता (२-५६)
श्री भगवानुवाच
दु:खेष्वनुद्विग्नमना: सुखेषु विगतस्पृह:
वीतरागभयक्रोध: स्थितधीर्मुनिरुच्यते
bhagavadgItA (2.56)
duhkheSvanudvignamanA: sukheSu vigataspruha:
vItarAgabhayakrodha: sthitadhIrmunirucyate
.
பகவத் கீதா (2.56)
ஸ்ரீ பகவான் (கிருஷ்ணர்) கூறியது:-
துன்பத்தில் துவளாதே;
இன்பத்தில் துள்ளாதே.
பற்றும், பயமும், சினமும் அற்றவன்
முற்றும் உணர்ந்த முனிவன் ஆகிறான்.
மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2007.
bhagavad gItA (2.56) (Tamil)
shrI bhagavAn (krishNar) kURiyatu:-
tunbattil tuvaLadE;
inbattil tuLLatE.
patRum, bhayamum, shinamum atRavan
mutRum uNarnda munivan AkiRAn.
Pratyaksham Bala.
Sanskrit:-
भगवद्गीता (२-५६)
श्री भगवानुवाच
दु:खेष्वनुद्विग्नमना: सुखेषु विगतस्पृह:
वीतरागभयक्रोध: स्थितधीर्मुनिरुच्यते
bhagavadgItA (2.56)
duhkheSvanudvignamanA: sukheSu vigataspruha:
vItarAgabhayakrodha: sthitadhIrmunirucyate
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(56)
ஆவல் அடங்குவ தெப்போ?
ப்ரத்யக்ஷம் பாலா,
01.01.2011.
பல்லவி:
ஆவல் அடங்குவ தெப்போ? - என்
அனுபல்லவி:
தில்லையம்பல வாணன் நடராஜன் திருவடி காணத் துடிக்குமென் - ஆவல்
சரணம்:
தணலொடு ஓர் கையும் டமரொடு ஓர் கையும்
மருண்ட பெருவிழி மானொடு ஓர் கையும்
சுருளுடை கங்கையுடன் மருவுடைத் திங்களை
முடிமீது சூடியோன் திருவடி காணத் துடிக்குமென் - ஆவல்
Aval aDanguva deppO?
Pratyaksham Bala.
P:
Aval aDanguva deppO? - en
A:
tillaiyambala naTarAjA un tiruvaDi kANat tuDikkumen - Aval
C:
taNaloDu Or kaiyum DamaroDu Or kaiyum
maruNDa peruvizhi mAnoDu Or kaiyum
shuruLuDai gangaiyuDan maruvuDait tingaLai
muDimIdu shUDiyOn tiruvaDi kANat tuDikkumen - Aval
.
ஆவல் அடங்குவ தெப்போ?
ப்ரத்யக்ஷம் பாலா,
01.01.2011.
பல்லவி:
ஆவல் அடங்குவ தெப்போ? - என்
அனுபல்லவி:
தில்லையம்பல வாணன் நடராஜன் திருவடி காணத் துடிக்குமென் - ஆவல்
சரணம்:
தணலொடு ஓர் கையும் டமரொடு ஓர் கையும்
மருண்ட பெருவிழி மானொடு ஓர் கையும்
சுருளுடை கங்கையுடன் மருவுடைத் திங்களை
முடிமீது சூடியோன் திருவடி காணத் துடிக்குமென் - ஆவல்
Aval aDanguva deppO?
Pratyaksham Bala.
P:
Aval aDanguva deppO? - en
A:
tillaiyambala naTarAjA un tiruvaDi kANat tuDikkumen - Aval
C:
taNaloDu Or kaiyum DamaroDu Or kaiyum
maruNDa peruvizhi mAnoDu Or kaiyum
shuruLuDai gangaiyuDan maruvuDait tingaLai
muDimIdu shUDiyOn tiruvaDi kANat tuDikkumen - Aval
.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
பல்லாண்டு பல்லாண்டு
அரசியாருக்கும் அவர் கவித்திறனுக்கும்
அவர்தம் பக்திக்கும், பணிவுக்கும்
பல்லாண்டு பல்லாண்டு
அரசியாருக்கும் அவர் கவித்திறனுக்கும்
அவர்தம் பக்திக்கும், பணிவுக்கும்
பல்லாண்டு பல்லாண்டு
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
VGV
I support and reiterate your அருள் வாக்கு with a slight change
பல்லாண்டு பல்லாண்டு
அரசியாருக்கும் அவர் கவித்திறனுக்கும்
அவர்தம் பதிக்கும், பணிக்கும்
பல்லாண்டு பல்லாண்டு
I support and reiterate your அருள் வாக்கு with a slight change
பல்லாண்டு பல்லாண்டு
அரசியாருக்கும் அவர் கவித்திறனுக்கும்
அவர்தம் பதிக்கும், பணிக்கும்
பல்லாண்டு பல்லாண்டு
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
cml,
So it is agreed that there is a man behind every successful woman - aren't we?
So it is agreed that there is a man behind every successful woman - aren't we?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(57)
வெளிநாட்டு வேலை
தொடுவானம் நோக்கி
நெடுந்தூரம் ஏகி,
இடுப்பொடிய உழைத்துப்
படும்பாடு சிலவோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
veLinATTu vElai
toDuvAnam nOkki
neDundUram Egi,
iDuppoDiya uzhaittup
paDumpADu shilavO?
Pratyaksham Bala.
.
வெளிநாட்டு வேலை
தொடுவானம் நோக்கி
நெடுந்தூரம் ஏகி,
இடுப்பொடிய உழைத்துப்
படும்பாடு சிலவோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
veLinATTu vElai
toDuvAnam nOkki
neDundUram Egi,
iDuppoDiya uzhaittup
paDumpADu shilavO?
Pratyaksham Bala.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
VG,
I did miss seeing you and 'um kAriyam yAvilum kai koDukkum peNmaNi' that evening. Thanks for your kind words. Compared to your hard work, mine is easy and lazy work!
I did miss seeing you and 'um kAriyam yAvilum kai koDukkum peNmaNi' that evening. Thanks for your kind words. Compared to your hard work, mine is easy and lazy work!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Ok then! Here is the appropriate advance வாழ்த்து...
to the couple
பல்லாண்டு பல்லாண்டு
ரஸிகப்ரிய கோவிந்தனுக்கும்
அவர்தம் கைகொடுக்கும் பத்னிக்கும்
பல்லாண்டு பல்லாண்டு
Note: Just reminding that our Govindan is being conferred the coveted honour of Rasikapriya
on the 26th @ 6:00 PM at
Tattvaloka, 76 Eldams Road, Teynampet
Chennai
(as many of our membership who can must participate...)
to the couple
பல்லாண்டு பல்லாண்டு
ரஸிகப்ரிய கோவிந்தனுக்கும்
அவர்தம் கைகொடுக்கும் பத்னிக்கும்
பல்லாண்டு பல்லாண்டு
Note: Just reminding that our Govindan is being conferred the coveted honour of Rasikapriya
on the 26th @ 6:00 PM at
Tattvaloka, 76 Eldams Road, Teynampet
Chennai
(as many of our membership who can must participate...)
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
வெளிநாட்டில் ஏக்கம்
தொடுவானம் நோக்கி
தாய் நாட்டை ஏங்கி,
இடுப்பொடிய உழைத்துப்
படும்பாடு பலவே!
(Our heartfelt sympathies and support for our brothers and sisters
caught in the cross-fires in the foreign countries..)
தொடுவானம் நோக்கி
தாய் நாட்டை ஏங்கி,
இடுப்பொடிய உழைத்துப்
படும்பாடு பலவே!
(Our heartfelt sympathies and support for our brothers and sisters
caught in the cross-fires in the foreign countries..)
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(58)
நினைவுகள்!
அருவியில் திளைத்ததும்,
ஆற்றிலே அளைந்ததும்,
அருகம்புல் தொடுத்ததும்,
ஆலோலம் கேட்டதும்,
இருட்டிலே நடந்ததும்,
ஈரத்தில் சிலிர்த்ததும்,
இலுப்பைச் சுவைத்ததும்,
ஈச்சைமரம் ஏறியதும்,
உலக்கை பிடித்ததும்,
ஊற்றுநீர் எடுத்ததும்,
உருது படித்ததும்,
ஊமத்தை பிளந்ததும்,
எரு அள்ளிக் குவித்ததும்,
ஏர் ஓட்டி மகிழ்ந்ததும்,
எட்டிக்காய் கடித்ததும்,
ஏற்றம் இறைத்ததும்,
ஒருபொழுது கிடந்ததும்,
ஓமத்தீ வளர்த்ததும்,
ஒத்தையடி நடந்ததும்,
ஓடியாடிக் களித்ததும்,
. . . . . . . .ஒருபோதும் மறவாது!
ப்ரத்யக்ஷம் பாலா,
15.10௦.2006.
.
நினைவுகள்!
அருவியில் திளைத்ததும்,
ஆற்றிலே அளைந்ததும்,
அருகம்புல் தொடுத்ததும்,
ஆலோலம் கேட்டதும்,
இருட்டிலே நடந்ததும்,
ஈரத்தில் சிலிர்த்ததும்,
இலுப்பைச் சுவைத்ததும்,
ஈச்சைமரம் ஏறியதும்,
உலக்கை பிடித்ததும்,
ஊற்றுநீர் எடுத்ததும்,
உருது படித்ததும்,
ஊமத்தை பிளந்ததும்,
எரு அள்ளிக் குவித்ததும்,
ஏர் ஓட்டி மகிழ்ந்ததும்,
எட்டிக்காய் கடித்ததும்,
ஏற்றம் இறைத்ததும்,
ஒருபொழுது கிடந்ததும்,
ஓமத்தீ வளர்த்ததும்,
ஒத்தையடி நடந்ததும்,
ஓடியாடிக் களித்ததும்,
. . . . . . . .ஒருபோதும் மறவாது!
ப்ரத்யக்ஷம் பாலா,
15.10௦.2006.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
PB,
Every line a rich experience
Every line a rich experience

-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
"u fill up my senses, like a night in a forest..."
http://www.youtube.com/watch?v=C21G2OkHEYo
I happened to see this line in one my friend's facebook status update and saw the rest of the lines and tried in thamizh...
கானகத்தில் கலந்து நிற்கும்
காற்றாகிக் காரிருளும் போல...
வருடுகின்ற வசந்தத்தை
வாங்கிக்கொள்ளும் மலைகளென,
மழை நாளின் மகிழ்வானதொரு
மாலைக் காற்றில் நடையாக...
மணற்துகளை மலையாய்க் குவித்து
மூச்சடைக்கும் பாலைப் புயலென,
நீண்டு கிடந்து நீலமாய்,
நீங்காத அலைகளின்றி
நீள் விழிகள் இமை மூடிக்
கண்ணயர்ந்த கடலாக...
நீ நிறைக்கிறாய்; நீரிறைக்கிறாய்.
வா...
வந்து நிரப்பிவிடு - என்
ஜீவக் கலயங்களை
மற்றொரு முறை கூட,
மீண்டும் மீண்டும் சுவாசம் போல்
மீளாது காதல் செய்ய.
http://www.youtube.com/watch?v=C21G2OkHEYo
I happened to see this line in one my friend's facebook status update and saw the rest of the lines and tried in thamizh...

கானகத்தில் கலந்து நிற்கும்
காற்றாகிக் காரிருளும் போல...
வருடுகின்ற வசந்தத்தை
வாங்கிக்கொள்ளும் மலைகளென,
மழை நாளின் மகிழ்வானதொரு
மாலைக் காற்றில் நடையாக...
மணற்துகளை மலையாய்க் குவித்து
மூச்சடைக்கும் பாலைப் புயலென,
நீண்டு கிடந்து நீலமாய்,
நீங்காத அலைகளின்றி
நீள் விழிகள் இமை மூடிக்
கண்ணயர்ந்த கடலாக...
நீ நிறைக்கிறாய்; நீரிறைக்கிறாய்.
வா...
வந்து நிரப்பிவிடு - என்
ஜீவக் கலயங்களை
மற்றொரு முறை கூட,
மீண்டும் மீண்டும் சுவாசம் போல்
மீளாது காதல் செய்ய.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
AravarasE!
en kaNNil oru tuLiyAgi niRkiRadu um kavidai...
en kaNNil oru tuLiyAgi niRkiRadu um kavidai...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
An incorrigible Love Addict
(Bored with his current love and seeking new pastures)
கானகத்தில் கலந்து நிற்கும்
காற்றாகிக் காரிருளும் போல...
வருகின்ற வசந்தத்தை
தட்ங்கிக்கொல்லும் மலைகளென,
மணற்துகளை மலையாய்க் குவித்து
மூச்சடைக்கும் பாலைப் புயலென,
நீண்டு கிடந்து மணல் செறிந்து,
நீங்காத அலைகள் குன்றி
நீள் விழிகள் இமை மூடிக்
கண்ணயர்ந்த கடலாக...
நீ வதைக்கிறாய்; முள் தைக்கிறாய்.
போ...
போய்த் திறந்துவிடு - என்
ஜீவக் கலயங்களை
மற்றொரு முறை கூட,
மீண்டும் மீண்டும் சுவாசம் போல்
மறுபடி காதல் செய்ய.
(Bored with his current love and seeking new pastures)
கானகத்தில் கலந்து நிற்கும்
காற்றாகிக் காரிருளும் போல...
வருகின்ற வசந்தத்தை
தட்ங்கிக்கொல்லும் மலைகளென,
மணற்துகளை மலையாய்க் குவித்து
மூச்சடைக்கும் பாலைப் புயலென,
நீண்டு கிடந்து மணல் செறிந்து,
நீங்காத அலைகள் குன்றி
நீள் விழிகள் இமை மூடிக்
கண்ணயர்ந்த கடலாக...
நீ வதைக்கிறாய்; முள் தைக்கிறாய்.
போ...
போய்த் திறந்துவிடு - என்
ஜீவக் கலயங்களை
மற்றொரு முறை கூட,
மீண்டும் மீண்டும் சுவாசம் போல்
மறுபடி காதல் செய்ய.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
kavidaiyilE KAdal piRakkudaDi ikkaNam--
kavignarelAm kavidaiyuDan kAdal koNDu
pADugiRAr, pala Sol pinnugiRAr,
paDikka vegu nErti, kaDalum malaiyum maNalum
ivariDam konjiyum minjiyum iruppadellAm--
tam paNiyai nigazhttuvadE avaTRin nOkku--
manida manamanRO alaiyilum malaiyilum
mOdiyum mOhittum mODi Seidum
mOnamuTRum uzhalum, uyarndumirukkum?
'manamenum peNNE vAzhi nI kELAi'
enRAn kavi mannan--
kaRpanait tEr ERiyavan--
manam
mOnam
mounam
pinnum...
kavignarelAm kavidaiyuDan kAdal koNDu
pADugiRAr, pala Sol pinnugiRAr,
paDikka vegu nErti, kaDalum malaiyum maNalum
ivariDam konjiyum minjiyum iruppadellAm--
tam paNiyai nigazhttuvadE avaTRin nOkku--
manida manamanRO alaiyilum malaiyilum
mOdiyum mOhittum mODi Seidum
mOnamuTRum uzhalum, uyarndumirukkum?
'manamenum peNNE vAzhi nI kELAi'
enRAn kavi mannan--
kaRpanait tEr ERiyavan--
manam
mOnam
mounam
pinnum...
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
மோனமோ?
மௌனமெனக் காட்டுமோ?
வார்த்தைகள் தானே
வம்பின்றி வரப்படங்கும்;
வரம்பின்றித் தாக்குமே
வயப்பட்ட-வன்-நினைவு.
சப்தங்கள் உணரப்படுதல்
சந்தங்கள் சேராதபோது.
மனம் ஒருமை காக்கையில்
அமைதி வருமே யாக்கையில்.
அங்கே,
பின்னும் என்ன
முன்னும் என்ன..
பின்னிக்கிடத்தல் தான் என்ன..
ஆயிரம் இரைச்சல்கள்
நூறான ஓசையது..
நூறு ஓசைகள்
ஒன்றான இசையது.
என் இதழும் திறவாமல்
உன் செவியும் நுழையாமல்
பல் படாத பாடல் அது,
பாராமல் எழுத்துகள் கூட்டி
இவளல்ல இவனல்ல எனக்கழித்து
அவனும் அவளும் வகுத்து வாழ்ந்தும்
பெருக்கி நிறைந்தும்
வாழ்ந்திடுமே வெகு காலம்
யுகங்கள் கடந்த பின்னும்.
--------------------------------------------------------------------------
[என் இதழும் திறவாமல்
உன் செவியும் நுழையாமல்
பல் படாத பாடல் அது - it is not even a blue tooth transfer between two gadgets, என்று நீ - அன்று நான்]
மௌனமெனக் காட்டுமோ?
வார்த்தைகள் தானே
வம்பின்றி வரப்படங்கும்;
வரம்பின்றித் தாக்குமே
வயப்பட்ட-வன்-நினைவு.
சப்தங்கள் உணரப்படுதல்
சந்தங்கள் சேராதபோது.
மனம் ஒருமை காக்கையில்
அமைதி வருமே யாக்கையில்.
அங்கே,
பின்னும் என்ன
முன்னும் என்ன..
பின்னிக்கிடத்தல் தான் என்ன..
ஆயிரம் இரைச்சல்கள்
நூறான ஓசையது..
நூறு ஓசைகள்
ஒன்றான இசையது.
என் இதழும் திறவாமல்
உன் செவியும் நுழையாமல்
பல் படாத பாடல் அது,
பாராமல் எழுத்துகள் கூட்டி
இவளல்ல இவனல்ல எனக்கழித்து
அவனும் அவளும் வகுத்து வாழ்ந்தும்
பெருக்கி நிறைந்தும்
வாழ்ந்திடுமே வெகு காலம்
யுகங்கள் கடந்த பின்னும்.
--------------------------------------------------------------------------
[என் இதழும் திறவாமல்
உன் செவியும் நுழையாமல்
பல் படாத பாடல் அது - it is not even a blue tooth transfer between two gadgets, என்று நீ - அன்று நான்]
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
உங்கள் ஆசிகள்!!arasi wrote:AravarasE!
en kaNNil oru tuLiyAgi niRkiRadu um kavidai...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
இல்லை
அவர்களது ஆசுகள் (आंसु)
அவர்களது ஆசுகள் (आंसु)

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
[என் இதழும் திறவாமல்
உன் செவியும் நுழையாமல்
(நீலப்) பல் படாத பாடல் அது - it is not even a blue tooth transfer between two gadget
(என்னே கவி நயம்!!)
உன் செவியும் நுழையாமல்
(நீலப்) பல் படாத பாடல் அது - it is not even a blue tooth transfer between two gadget
(என்னே கவி நயம்!!)
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(59)
மின்னல்
சிரித்த போது மலர்ந்த முகத்தில்
. . . . . . . .சிவந்த கன்னம் கொஞ்சக் கண்டேன்; -- அவள்
திரித்த கோணி மறைவின் ஓரம்
. . . . . . . .நின்ற கால்கள் பின்னக் கண்டேன்; -- கண்
பிரித்த போது சிறிது நேரம்
. . . . . . . .பிடரி நரம்பு துடிக்கக் கண்டேன்; -- முன்
விரித்த வானில் கோடி விண்மீன்
. . . . . . . .பொன் பரப்பி மின்னக் கண்டேன்!
ப்ரத்யக்ஷம் பாலா,
01.02.2004.
minnal
shiritta pOdu malarnda mukattil
shivanta kannam konjak kaNDEn; -- avaL
tiritta kONi maRaivin Oram
nindRa kAlkaL pinnak kaNDEn; -- kaN
piritta pOdu shiRidu nEram
piDari narambu tuDikkak kaNDEn; -- mun
viritta vAnil kODi viNmIn
pon parappi minnak kaNDEn!
Pratyaksham Bala.
.
மின்னல்
சிரித்த போது மலர்ந்த முகத்தில்
. . . . . . . .சிவந்த கன்னம் கொஞ்சக் கண்டேன்; -- அவள்
திரித்த கோணி மறைவின் ஓரம்
. . . . . . . .நின்ற கால்கள் பின்னக் கண்டேன்; -- கண்
பிரித்த போது சிறிது நேரம்
. . . . . . . .பிடரி நரம்பு துடிக்கக் கண்டேன்; -- முன்
விரித்த வானில் கோடி விண்மீன்
. . . . . . . .பொன் பரப்பி மின்னக் கண்டேன்!
ப்ரத்யக்ஷம் பாலா,
01.02.2004.
minnal
shiritta pOdu malarnda mukattil
shivanta kannam konjak kaNDEn; -- avaL
tiritta kONi maRaivin Oram
nindRa kAlkaL pinnak kaNDEn; -- kaN
piritta pOdu shiRidu nEram
piDari narambu tuDikkak kaNDEn; -- mun
viritta vAnil kODi viNmIn
pon parappi minnak kaNDEn!
Pratyaksham Bala.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
IrODappanE!
pal paDAda pADaladu
nirOshTAvilO?
pal paDAda pADaladu
nirOshTAvilO?
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அது 'கெஞ்சும் உதடுகளை அஞ்சி மறைத்து நெஞ்சம் உருகி வஞ்சி பாடிய பாடல்'
-
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
nAnum konjam kadavuL AnEn
AzhahAna Angilathil
Than avala nilai koori
Azum mudhiyavar
Petravanai otrayAi
piLLai vitta sOhaK
kathai uraithu
yAchakam yenrillAmal
konjam urimayudanEyE
vAnkippOnar paNam
mAlayil oru madhukkadai vAsalil
mayangikkidandhAr
avar kangaLil kayamai therindhum
kAsu koduthEn nAn
nAn thavaru puriyap puriya
vaipputh thandhu konde irukkirAn
iRaivan
idho indhak kizhavanin
dhayavAl
nAnum kadavuL AnEn
konjam !
AzhahAna Angilathil
Than avala nilai koori
Azum mudhiyavar
Petravanai otrayAi
piLLai vitta sOhaK
kathai uraithu
yAchakam yenrillAmal
konjam urimayudanEyE
vAnkippOnar paNam
mAlayil oru madhukkadai vAsalil
mayangikkidandhAr
avar kangaLil kayamai therindhum
kAsu koduthEn nAn
nAn thavaru puriyap puriya
vaipputh thandhu konde irukkirAn
iRaivan
idho indhak kizhavanin
dhayavAl
nAnum kadavuL AnEn
konjam !