KavithaigaL by Rasikas
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi:
நன்றி !
இது மிகவும் அதிகம்.
நன்றி !
இது மிகவும் அதிகம்.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
395
அறுவர் துணை !
நாடுவோர் நாடட்டும்;
தேடுவோர் தேடட்டும் !
சாடுவோர் சாடட்டும் !
வாடவும் கூடுமோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
02.03.2015.
அறுவர் துணை !
நாடுவோர் நாடட்டும்;
தேடுவோர் தேடட்டும் !
சாடுவோர் சாடட்டும் !
வாடவும் கூடுமோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
02.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
396
இளமை திரும்பும் !
சிறு அடிகள் சிவக்கச் சேற்றில் அளைந்தது
திரும்பவும் வருமோ ?
மறு பிறவி உண்டெனில் இற்றைக் காட்சிகள்
திரும்புவதும் கூடுமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
02.03.2015.
இளமை திரும்பும் !
சிறு அடிகள் சிவக்கச் சேற்றில் அளைந்தது
திரும்பவும் வருமோ ?
மறு பிறவி உண்டெனில் இற்றைக் காட்சிகள்
திரும்புவதும் கூடுமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
02.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
397
பிறவி
பூவெடுத்துப் பெட்டியிலே
பூட்டி வைத்தால் காயாதா ?
மாவெடுத்துப் போட்ட கோலம்
காற்றடித்தால் கலையாதா ?
கோலெடுத்துக் கடைந்து வைத்த
புது மோரும் புளிக்காதா ?
காலெடுத்து வைத்ததுமே
கணக்குத் தொடங்குதையா !
ப்ரத்யக்ஷம் பாலா,
03.03.2015.
பிறவி
பூவெடுத்துப் பெட்டியிலே
பூட்டி வைத்தால் காயாதா ?
மாவெடுத்துப் போட்ட கோலம்
காற்றடித்தால் கலையாதா ?
கோலெடுத்துக் கடைந்து வைத்த
புது மோரும் புளிக்காதா ?
காலெடுத்து வைத்ததுமே
கணக்குத் தொடங்குதையா !
ப்ரத்யக்ஷம் பாலா,
03.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
398
இயற்கை
மட்டவிழ் தாமரை மறுபடி சேருமோ ?
விட்டநாள் மறுபடி வரத்தான் கூடுமோ ?
கட்டிவைத்த சோறு கெடாதிருக்குமோ ?
விட்டில் மாட்டே நிகழ்வதனைத்தும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
04.03.2015.
இயற்கை
மட்டவிழ் தாமரை மறுபடி சேருமோ ?
விட்டநாள் மறுபடி வரத்தான் கூடுமோ ?
கட்டிவைத்த சோறு கெடாதிருக்குமோ ?
விட்டில் மாட்டே நிகழ்வதனைத்தும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
04.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
399
குடிமகன் ஆசை
பாட்டில் கள்ளு குடிச்சுக் குடிச்சுப் பூஞ்சை உடம்பு துடிக்குதே;
வாட்டிப் பொசுக்கும் வெய்யில்வந்து வேலை செய்யத் தடுக்குதே.
போட்டி போட்டு துட்டுசேர்த்து பேட்டை ராசா ஆகணும்;
வேட்டி சட்டை நல்லாப் போட்டு வீரநடை நடக்கணும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.03.2015.

400
மாற்றம்
கட்டுக் குடுமி போனதா ?
கட்டும் கச்சம் போனதா ?
நெற்றி ஓர் வண்ணம் போனதா ?
பற்றும் ஓர் திண்ணம் போகுமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.03.2015.
மாற்றம்
கட்டுக் குடுமி போனதா ?
கட்டும் கச்சம் போனதா ?
நெற்றி ஓர் வண்ணம் போனதா ?
பற்றும் ஓர் திண்ணம் போகுமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
401
பஞ்சாயதனம்
நான்கு நற்கற்களும் நற்சங்குப் படிமமும்
தான்தோன்றி உருவெனத் தெளிந்தே உணர்ந்து
தேன் பால் பூவெனத் தினம் உவந்தளித்து
நானிலம் அனைத்தும் நலம்பெற வேண்டுவர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
07.03.2015.
பஞ்சாயதனம்
நான்கு நற்கற்களும் நற்சங்குப் படிமமும்
தான்தோன்றி உருவெனத் தெளிந்தே உணர்ந்து
தேன் பால் பூவெனத் தினம் உவந்தளித்து
நானிலம் அனைத்தும் நலம்பெற வேண்டுவர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
07.03.2015.
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
three hai- ku poems.
மாறு வேஷம்
பச்சை இலைகள் கூட பல நிறங்களாய் மாறுகின்றன
இந்நாட்டு அரசியல் வாதிகளோ இவைகள்?
இது FALL பருவத்துக்கு ஏற்ற FALSE உருவம் .
வீர தாய்
நீங்களே உயிர்ப்பித்த இலைகளை உதிர்த்து
வெண்ணிற ஆடை அணிந்து விதவைக் கோலம் ஏனோ ?
பச்சையாய் இருந்த அவை தம் இச்சைக்கு நிறம் மாறியதால்..
திட நம்பிக்கை
தரையை மூடிய அரை அடி பனியில்
விண் முட்டும் மரத்துக்கு அந்திம காலமோ ?
இல்லை காத்திருப்பேன்,காலம் மாறும் , மீண்டும் பூத்து சொரிவேன் .

arasi
- Posts: 16877
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இறவா மரங்கள்
.......................
எம் நிலம் வந்தீர் நீர், பொன் பைரவி! மே-
-லும் பெண்டிர் தினமாம் இன்றே...
பச்சை இலைகளவள் பசலைகள்
இச்சையோடவையாடி வளர்ந்திட--
மெச்சினாள், உம் வழி செல்லுமென்றாள்
பின்னே வெள்ளைத் திரையில் மறைந்தாள்
என்றாலும், உள்ளுக்குள் சக்தி* வளர்த்தாள்--
என்னே இயற்கையன்னையின் திறன்!
மறு முறையும் மலர்ச்சியே! வசந்தத்
தறுவாயில் இலை மொட்டாய், பின் பிஞ்சு
நிறம் காட்டும் தளிரிலையாய், மற்றொரு சுற்று...
இறவா வரமாம் மரமே, மரமே! என்னைச் சுற்றி
அறமென, வரி வரியாய் நிற்கும் மரங்களே!
இறைவன் இதோ, இதோ என நிற்கும் நியாயங்களே!
*
*tree sap

இறவா மரம் சுட்டும் தீராபிரச்னை
மாமியார் --நாட்டு பெண
மரத்தை தாங்குவது நாங்களே என்றன வேர்கள்.
வளர்த்தது நீங்கள் இனி தாங்க போவது நாங்களே என்றன விழுதுகள்
கேட்டு சிரித்தது அனைத்துக்கும் ஆதார மண்.!
மாமியார் --நாட்டு பெண
மரத்தை தாங்குவது நாங்களே என்றன வேர்கள்.
வளர்த்தது நீங்கள் இனி தாங்க போவது நாங்களே என்றன விழுதுகள்
கேட்டு சிரித்தது அனைத்துக்கும் ஆதார மண்.!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
402
108 திவ்யத் தலங்கள்
மலையாளச் செடிகொடி மரங்கள் மனமாளும் -
அலைகடலெனக் கூடி அன்பர்குழாம் தேற்றும் -
நூற்றெட்டுத் தலமாடி நீராடித்திரு பரசுராமன்
போற்றிட்ட பரமசிவன் பொற்பாதம் பணிவமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
08.03.2015.
http://www.shaivam.org/siddhanta/spke_108.htm
108 திவ்யத் தலங்கள்
மலையாளச் செடிகொடி மரங்கள் மனமாளும் -
அலைகடலெனக் கூடி அன்பர்குழாம் தேற்றும் -
நூற்றெட்டுத் தலமாடி நீராடித்திரு பரசுராமன்
போற்றிட்ட பரமசிவன் பொற்பாதம் பணிவமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
08.03.2015.
http://www.shaivam.org/siddhanta/spke_108.htm
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பச்சை துரோகம்.
பட்சிகளுக்கு தப்ப புழு பச்சை இலை தேடி வந்தது.
தன் கீழ் தவழ விட்டு தொட்டிலாட்டிய அவ்விலையை
அரித்து தின்றே கொழுத்து புழு.
வெள்ளை குல்லா.
ஆயிரம் காலத்து அரசு. (மரம்)
உளுத்து கொட்டி அழிவதோ ?
பட்டை இடுக்கில் வெள்ளை கரையான்கள்.
பட்சிகளுக்கு தப்ப புழு பச்சை இலை தேடி வந்தது.
தன் கீழ் தவழ விட்டு தொட்டிலாட்டிய அவ்விலையை
அரித்து தின்றே கொழுத்து புழு.
வெள்ளை குல்லா.
ஆயிரம் காலத்து அரசு. (மரம்)
உளுத்து கொட்டி அழிவதோ ?
பட்டை இடுக்கில் வெள்ளை கரையான்கள்.
-
arasi
- Posts: 16877
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இலையும் சொல்லும்...
...............................
மனிதருக்கெல்லாம், எப்போதுமே இலையுதிர் காலம்தானே?
கனிந்து, பழுத்த இலை விழுந்து, பின் மக்கி மடிவதுதானே?
மழு மழுப்பு இலை எப்படி விழுந்ததோ? கொடுமை!
புழுவின் உணவாகி மடிந்திட, பறவை கொத்தியதோ?
பார்த்துப் பார்த்திருந்தும், கேட்டுக் கேட்டிருந்தும்
வார்த்தையில் விரித்தும், எல்லாம் புரிவதெப்போதோ?.
...............................
மனிதருக்கெல்லாம், எப்போதுமே இலையுதிர் காலம்தானே?
கனிந்து, பழுத்த இலை விழுந்து, பின் மக்கி மடிவதுதானே?
மழு மழுப்பு இலை எப்படி விழுந்ததோ? கொடுமை!
புழுவின் உணவாகி மடிந்திட, பறவை கொத்தியதோ?
பார்த்துப் பார்த்திருந்தும், கேட்டுக் கேட்டிருந்தும்
வார்த்தையில் விரித்தும், எல்லாம் புரிவதெப்போதோ?.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
403
போற்றி ! போற்றி !!
குழலூதி குறவள்ளிக் கரம்கொண்ட கந்தா !
மழைதூவும் குற்றால மலைகொண்ட குமரா !
அழைக்காத பேர்களுக்கும் அருள்பொழியும் அன்பா !
பழம்பெரும் திருப்பதி பழநிமலை வாசா ! -- போற்றி ! போற்றி !!
ப்ரத்யக்ஷம் பாலா,
09.03.2015.

404
ஒருவர் கூற்று
"கொண்டதே கோலம் ! கொள்வதே முறை !
விண்டதே சரி ! வேறெல்லாம் பிழை !"
இத்தகை எண்ணம் எதுவரை செல்லும் ?
பித்தனின் பார்வை படும்வரை எனலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.03.2015.
ஒருவர் கூற்று
"கொண்டதே கோலம் ! கொள்வதே முறை !
விண்டதே சரி ! வேறெல்லாம் பிழை !"
இத்தகை எண்ணம் எதுவரை செல்லும் ?
பித்தனின் பார்வை படும்வரை எனலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
405
ஏக்கம்
வழிமேலே விழிவைத்து வாசலிலே காத்திருக்கேன்;
இழுத்தடிக்கும் எம்மனசை அடக்கிவைக்கத் தெரியலையே !
அழுகையிலே மூழ்கி நான் அன்னியமாப் போவேனோ ?
கிழக்கு வெளுக்கும் முன்னே கண்ணாநீ வருவாயோ ?

406
பூசல்
கோயிற்படி யானைக்குக் கலரடிக்க ஓர் சண்டை,
வாயிற்படி மேடையிலே பாட்டுப்பாட ஓர் சண்டை;
உள்ளுக்குள் சண்டையொடு ஊரோடும் சண்டை !
உள்ளங்கள் பெரிதானால் ஒன்றுபடும் ஓர்நாளில் !
ப்ரத்யக்ஷம் பாலா,
13.03.2015.

407
கோபித்து என்ன பயன்?
நான் ஒருத்தி காத்திருக்கேன்; நீ எங்கோ போய்விட்டாய் !
ஏன் இந்த விதி எனக்கு ? என்ன தவம் செய்ய வேண்டும் ?
சொன்னதெல்லாம் பசப்பா ? பாவி நான் ஏமாந்தேனோ ?
என்றுதான் திரும்புவாயோ ? என் கதை முடிந்ததொன்றோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.03.2015.

408
சம்பாஷணை
"சிஷ்யா, செல்லுமிடம் சொல்வேன்.
இஷ்டம் இருப்பின் கேள்."
"குருவே ! நீர் கண்டதோ ? கண்ட
ஒருவர் தான் சொன்னதோ ?"
"யாரும் கண்டது இல்லை: சென்ற
யாரும் வந்ததும் இல்லை !"
"பின்னே ? கதையா ? கற்பனையா ?" -- "எல்லே !
இந்நேரம், இப்போதே, ஓடு ! ஓடிவிடு !!"
ப்ரத்யக்ஷம் பாலா,
15.03.2015.

409
கவனம்
நிழலுடன் போராடி நேரம்
விழலாகிப் போகுதா ?
குழலூதி மனம்மயக்கும் ஓர்
குழந்தையைப் போற்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
15.03.2015.
கவனம்
நிழலுடன் போராடி நேரம்
விழலாகிப் போகுதா ?
குழலூதி மனம்மயக்கும் ஓர்
குழந்தையைப் போற்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
15.03.2015.
-
arasi
- Posts: 16877
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
ஐயே, மெத்தக் கடினம்...
மடத்து சாமியார் மடக்கி மடக்கிப் போடுகிறார், மடையர்களே நாமென--
குடத்துக்குள் விடயமென்கிறார், எம்மை விட மாட்டாரோ? குமிந்தவை
இடறி விழுந்தால் கூடத்தில்--எண்ணக் குவியல்தான் எத்தனை?
அட, பார்ப்போமே, என்னதானவர் எண்ணத்திலுதித்தவையோ என்றால்--
பன்னிப் பன்னிப் பேசுகிறார், பல விஷயம் கொட்டுகிறார், வற்றா நீராய்--
இன்னிசை இதென்கிறார், அதன் பெருக்கிலே, இசையெங்கே, என்னவாயிற்று,
என்று விட்டால், விடா மழை, எமக்கு விடை தெரிவதுமெங்கே? வெறும்
மென்று தின்னும் வேலை எமதாச்சே? மடையர்களேயாமோ நாம்? வர வர
வரி வரியாய் எழுதவதே இங்கு வழக்கமாகி விடுமோ, யானறியேனே

410
பலத்த மழைக்கு ஒரு குடை.
அனல் வெயிலுக்கும் அதுவே தான்.
புயல் காற்றில் பறந்தது.
15.03.2015
பலத்த மழைக்கு ஒரு குடை.
அனல் வெயிலுக்கும் அதுவே தான்.
புயல் காற்றில் பறந்தது.
15.03.2015
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ஆஹா ! எப்போதாவது ஒருமுறை கேட்கும் பிரயோகம் !arasi wrote:... பன்னிப் பன்னிப் பேசுகிறார் ...
"பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே ?" என்பார் பாரதி, கண்ணன் பாட்டில்.
"பன்னுவார்க்கு அருளும் பரமேட்டியே" என்பார் வள்ளலார், திருவருட்பாவில்.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
411
நதியின் திசை மாறும்.
மழைபொழியும்; பெருக்கெடுத்தோடும்.
பெரிது உவக்கும் உலகே.
15.03.2015
-oOo-
நதியின் திசை மாறும்.
மழைபொழியும்; பெருக்கெடுத்தோடும்.
பெரிது உவக்கும் உலகே.
15.03.2015
-oOo-
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
412
விழிப்பு !
வரவர நேரம் வீணே கரையுது !
வரிவரியாய் வரைந்திருந்தால்
வருமானத்துக்கு என்ன வழி ?
அரஅர, அரிஅரி, கா, கா !
ப்ரத்யக்ஷம் பாலா,
18.03.2015.
விழிப்பு !
வரவர நேரம் வீணே கரையுது !
வரிவரியாய் வரைந்திருந்தால்
வருமானத்துக்கு என்ன வழி ?
அரஅர, அரிஅரி, கா, கா !
ப்ரத்யக்ஷம் பாலா,
18.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
413
வாழ்க்கை
பாச நெஞ்சங்கள் பலநூறு இருப்பினும்
ஏசுவார் மத்தியில் ஏதையா நிம்மதி ?
பூசலின் பயனென்ன ? பத்துக்காசு தேறுமா ?
வா ! சிவா ! வா, வா ! வந்தருள் புரிவாய் !
ப்ரத்யக்ஷம் பாலா,
20.03.2015.

414
சிவாய நம:
வரிவரியாய் வரைவார்; பிறிதொன்றும் வரையார் !
மரத்தடியே படுப்பார்; மற்றதெலாம் தவிர்ப்பார் !
அரியணை அளிப்பினும் அவரதை மறுப்பார் !
விரிந்த இமயத்தொரு வித்தகனை ஓதுவார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.03.2015.
சிவாய நம:
வரிவரியாய் வரைவார்; பிறிதொன்றும் வரையார் !
மரத்தடியே படுப்பார்; மற்றதெலாம் தவிர்ப்பார் !
அரியணை அளிப்பினும் அவரதை மறுப்பார் !
விரிந்த இமயத்தொரு வித்தகனை ஓதுவார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.03.2015.
-
sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
கயிலை வரையார்; கரும்பின் இனியார்;
மயிலை வளரும் மகேசர் - ஒயிலாய்ப்
புலித்தோல் புனைந்தவர் பொன்மேனி காண்பீர்
சிலிர்த்தே உணர்வீர் சிவத்தை!
மயிலை வளரும் மகேசர் - ஒயிலாய்ப்
புலித்தோல் புனைந்தவர் பொன்மேனி காண்பீர்
சிலிர்த்தே உணர்வீர் சிவத்தை!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
415
மதில்மேல் குரங்கா ?
பல்லுரு பரமனுக்கு இருக்குமதில் மேல்கீழ் கொளலாமோ ?
பல்லுரு பணியும் அடியார்க்கு, ரங்கா ! உன்னருள் உண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
22.03.2015.
மதில்மேல் குரங்கா ?
பல்லுரு பரமனுக்கு இருக்குமதில் மேல்கீழ் கொளலாமோ ?
பல்லுரு பணியும் அடியார்க்கு, ரங்கா ! உன்னருள் உண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
22.03.2015.
-
sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
எப்பொருள் எவ்வுருவில் காண்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் அவ்வரங்கன் மட்டுமே - இப்பொருள்
இங்கெவர்க்கும் எட்டாமல் போகலாம்! ஈஸ்வரனும்
பங்கயற் கண்ணானின் பங்கு !!
ஸ்ரீதர்_ரங்கா - 22/03/2015
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து
பேயாழ்வார்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்
பொய்கை ஆழ்வார்
மெய்ப்பொருள் அவ்வரங்கன் மட்டுமே - இப்பொருள்
இங்கெவர்க்கும் எட்டாமல் போகலாம்! ஈஸ்வரனும்
பங்கயற் கண்ணானின் பங்கு !!
ஸ்ரீதர்_ரங்கா - 22/03/2015
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து
பேயாழ்வார்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்
பொய்கை ஆழ்வார்
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
சொல்லாட்சி :-
415
'மதில்மேல்'.. 'குரங்கா' ?
-----
416
பரமன் !
அங்கும் இங்கும் தேடி
அலைந்திருக்க வேண்டா !
சங்கு சக்கரம் ஏந்தி
சமயத்தில் அருள்வானவன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
22.03.2015.
சொல்லாட்சி :-
415
'மதில்மேல்'.. 'குரங்கா' ?
-----
416
பரமன் !
அங்கும் இங்கும் தேடி
அலைந்திருக்க வேண்டா !
சங்கு சக்கரம் ஏந்தி
சமயத்தில் அருள்வானவன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
22.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
417
கூத்து
திருவிழாச் சந்தடி, திமிலோக இரைச்சல் !
விரும்பியது கண்டனர், வெகுவாய் களித்தனர் !
திருவிழாக் கூத்து திடீரென முடிந்தது ;
திரும்பினர் மக்கள் தினப்படி தொடர.

Last edited by Pratyaksham Bala on 22 Mar 2015, 15:46, edited 1 time in total.
-
sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
சொல்லாட்சி நன்று!
திமிகோல இரைச்சல்? திமிலோக என்றிருக்க வேண்டுமோ?
திமிகோல இரைச்சல்? திமிலோக என்றிருக்க வேண்டுமோ?
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
ஒப்புதல் வாக்குமூலம்
விரி சடையோன் ,நீள் முடியோன் ,நெற்றி கண் உதித்த
கரி முகத்தோன் தம்பி குன்றாடும் குமரனை
திரண்டு முன் நின்று திருமலையில் மறைத்ததால்
இரண்டு உருவமும் ஒன்றாய் இசைந்து
விரி சடையோன் ,நீள் முடியோன் ,நெற்றி கண் உதித்த
கரி முகத்தோன் தம்பி குன்றாடும் குமரனை
திரண்டு முன் நின்று திருமலையில் மறைத்ததால்
இரண்டு உருவமும் ஒன்றாய் இசைந்து
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
மிக்க நன்றி !sridhar_ranga wrote:சொல்லாட்சி நன்று!
தாங்கள் சுட்டியபடி திமிலோகம் என்பதே சரி.திமிகோல இரைச்சல்? திமிலோக என்றிருக்க வேண்டுமோ?
சரி செய்தோம். நன்றி !
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
418
உஞ்ச வ்ருத்தி ( उञ्छवृत्ति )
ஆதி காலம் :-
அறுவடைக்குப் பின்னாலே அவ்விடத்தில் தேடலாம் ;
சிறு தான்யம் சேர்க்கலாம் ; சிக்கனமாய் உண்ணலாம்.
கடந்த காலம் / நிகழ் காலம் :-
தெருத் தெருவாய்ச் சுற்றலாம் ; தெரிந்த வரையில் பாடலாம் !
தருவதெல்லாம் ஏற்கலாம் ; திரட்டியதைக் கொள்ளலாம்.
நிகழ் காலம் / வரும் காலம் :-
நெட்டில் பிக்ஷை கேட்கலாம் ! நிறைய அழுகை பாடலாம் !
பெட்டி நிறைய குவிக்கலாம் ! போட்டி போட்டு ருசிக்கலாம் !

419
சரணம்
காசுக்கு அலைந்து, காலமெலாம் கரைந்தது.
நேசங்கள் மறந்தன; நினைப்போர் யாருமில்லை.
ஊசிமேல் வாழ்க்கை, ஓயாத தொல்லைகள் !
வா, சிவா ! வா, வா ! வந்தெனக்கருள்வாய் !
ப்ரத்யக்ஷம் பாலா,
22.03.2015.
சரணம்
காசுக்கு அலைந்து, காலமெலாம் கரைந்தது.
நேசங்கள் மறந்தன; நினைப்போர் யாருமில்லை.
ஊசிமேல் வாழ்க்கை, ஓயாத தொல்லைகள் !
வா, சிவா ! வா, வா ! வந்தெனக்கருள்வாய் !
ப்ரத்யக்ஷம் பாலா,
22.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
420
சிவனடியார் கூற்று :-
"நடையாய் நடந்தேன்; நிரந்தரனைக் கண்டேன் !
விடைமேல் இருப்பவனை, விரும்பியதைத் தருபவனை,
கடைசி மூச்சுவரை கருத்திடை இருத்துவேன் !
அடைவேன் அவன் இடம் ! அதுவே சொர்க்கம் !"
ப்ரத்யக்ஷம் பாலா,
24.03.2015.

421
ஸ்மார்த்தர் கூற்று :-
"எவ்வுருவைப் பரமனென்று ஏற்றாலும் தகுமே தகுமே !
இவ்வுருவே பெரிது இதரவெலாம் சிறிதென்பார் சிலர்.
அவ்வுருவே மெய் அதில் மற்றவெலாம் பங்கென்பர் சிலர்.
எவ்வுருவும் ஏற்போம் நாம் ! எல்லாமே ஒன்றென்போம் !"
ப்ரத்யக்ஷம் பாலா,
25.03.2015.
குறிப்பு :-
போதும்; இந்த விஷயத்திற்கு முடிவில்லை !
அவரவர் கொள்கை அவரவர் கொள்ளட்டும்; மகிழ்ந்து இருக்கட்டும்.
இதை விடுத்து வேறு காணலாம்.

422
கோடைக்காலம் :-
வறுத்தெடுக்கும் வெய்யிலில்
வருந்தி உடல் வாடுகையில்
அருந்த நீர் கிடைத்ததோ ?
அருந்தவம் செய்தாயோ !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.03.2015.
கோடைக்காலம் :-
வறுத்தெடுக்கும் வெய்யிலில்
வருந்தி உடல் வாடுகையில்
அருந்த நீர் கிடைத்ததோ ?
அருந்தவம் செய்தாயோ !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
423
கடைநிறைய பாடல்நூல்.
இடையில் ஓர் பெருங் கூச்சல்.
இசை என் கேட்கவில்லை ?
26.3.2015
கடைநிறைய பாடல்நூல்.
இடையில் ஓர் பெருங் கூச்சல்.
இசை என் கேட்கவில்லை ?
26.3.2015
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
424
பாமரன் கூற்று
"உயிர் பிழைக்க உணவு வேண்டும்.
உணவு வாங்க துட்டு வேண்டும்.
உழைத்திருந்தால் துட்டு கிட்டும்.
உஞ்ச வ்ருத்தி வேண்டாங்கோ !"
ப்ரத்யக்ஷம் பாலா,
27.03.2015.
பாமரன் கூற்று
"உயிர் பிழைக்க உணவு வேண்டும்.
உணவு வாங்க துட்டு வேண்டும்.
உழைத்திருந்தால் துட்டு கிட்டும்.
உஞ்ச வ்ருத்தி வேண்டாங்கோ !"
ப்ரத்யக்ஷம் பாலா,
27.03.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
425
காணோம் !
வரப்போரம் நடந்து வயல்வெளி சென்றதுண்டு.
கரையோரம் கடந்து கடுவெளி கண்டதுண்டு.
தெருவோரம் நடந்து தினச் சந்தை போனதுண்டு
திரும்ப வருவதற்குள் கண்டதெல்லாம் காணோமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
28.03.2015.
காணோம் !
வரப்போரம் நடந்து வயல்வெளி சென்றதுண்டு.
கரையோரம் கடந்து கடுவெளி கண்டதுண்டு.
தெருவோரம் நடந்து தினச் சந்தை போனதுண்டு
திரும்ப வருவதற்குள் கண்டதெல்லாம் காணோமே !
ப்ரத்யக்ஷம் பாலா,
28.03.2015.
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
வரப்போரம் கண்ட துண்டு flat ஆக மாறியதே
கரையோரம் கண்ட துண்டு பிளாஸ்டிக் பை தொழில்கூடம்
தெருவோரம் கண்ட துண்டு ஏதோ கட்சி அலுவலகம்
திரும்பி வருகையிலே என் மனைவி மகளைக் காணவில்லை!
தூரத்தில் கேட்குது யாரோ ஓதும் மொழி புரியா மந்திரம்.
ஓ இன்று ராம நவமி !!
கரையோரம் கண்ட துண்டு பிளாஸ்டிக் பை தொழில்கூடம்
தெருவோரம் கண்ட துண்டு ஏதோ கட்சி அலுவலகம்
திரும்பி வருகையிலே என் மனைவி மகளைக் காணவில்லை!
தூரத்தில் கேட்குது யாரோ ஓதும் மொழி புரியா மந்திரம்.
ஓ இன்று ராம நவமி !!
-
sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
கவனத்திற்கு - அனுஷ்கா
கண்டதுண்டோ இத்திறமும்? கப்வெல்வான் என்றிருந்தோம்!
கண்டதுண்டம் ஆயிற்றெம் காமங்கள் - கண்டதெல்லாம்
ஓர்ஓவர் ஓர்கேட்ச்மிஸ் ஓர்ஓட்டம்! ஓநண்பீ!!
ஆருன்னைப் போச்சொன்னார் அங்கு?

கண்டதுண்டோ இத்திறமும்? கப்வெல்வான் என்றிருந்தோம்!
கண்டதுண்டம் ஆயிற்றெம் காமங்கள் - கண்டதெல்லாம்
ஓர்ஓவர் ஓர்கேட்ச்மிஸ் ஓர்ஓட்டம்! ஓநண்பீ!!
ஆருன்னைப் போச்சொன்னார் அங்கு?
-
arasi
- Posts: 16877
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
தோல்வியில் வெற்றி...
கண்டதுமுண்டோ, 'கண்டோம், கொண்டோம்' என்பதெப்போதுமே?
விண்டிடவும் வேண்டுமோ, வாழ்வின் சுவையே அதில்தானென்று?
அண்டம் தரு வாழ்விலே கண்டு முண்டுகள் உண்டே! அறிவோமே?
சண்டை சர்ச்சரவில், சிண்டைப் பிடித்தாடும் போர்களிலுமே...
கண்டதெல்லாம் எமக்கே எனும் மமதையின் பிரகடனங்களெங்கும்--
சுண்டைக்காய் மனிதரின் சூழலில் நாம் கண்டவை--கண்டனமில்லை
குண்டுக் கட்டாய் வெற்றியை அள்ளி வர என்றும் இயலுமோ?
எந்த அணி வெற்றி பெறும்? அது எமதேயாகிடுமோ?
வந்தவருக்கெல்லாம் அது ஒன்றே அணியோ?
பந்தடிப்பவரும், பிடிப்பவரும் ஒரே சாராரோ?
பந்தயங்கள் கூறும் படிப்பினை இதே--
பந்தங்கள், சொந்தங்கள் தருமின்பம், வேதனை
எந்த விதமாயினும் நிரந்தரமே--அதிலே
தந்திரமோ, திறனோ, இருவருக்குமானாலும்,
ஒருவருக்கே வெற்றி--வேறு விதியுண்டோ?
அந்தமாய் வாழ தினம் ஒரு வெற்றி வேண்டுமோ?
அந்தக் கணம் துயரிலாழ்த்தும் nigazvE
அந்தமாய் எழுப்பும் வாழ்வெனும் மாளிகையின்
எந்தக்காலும் உயர்த்தி நிறுத்திடும், உறுதி தரும்
அந்தத் தோல்வியெனும் சிமிட்டிக் குழைவே!
* * *
அனுஷ்காவை மறக்கவில்லை. இன்று அவளும் ஏமாற்றம் மறந்திருப்பாளே

Arasi, arumai.
Welcome back! Thought you were missing for a short while. Hope all is well.
Yes, it's just a game of Cricket and one should have the grace to accept defeat......parantu kya karein, yeh dil maange more
Welcome back! Thought you were missing for a short while. Hope all is well.
Yes, it's just a game of Cricket and one should have the grace to accept defeat......parantu kya karein, yeh dil maange more
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi,
Yes, we missed you !
Your viewpoints are always thought provoking !
Yes, we missed you !
Your viewpoints are always thought provoking !
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
A good one !Ponbhairavi wrote:வரப்போரம் கண்ட துண்டு flat ஆக மாறியதே !