தனிச் செய்யுட்கள்

Post Reply
sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

தனிச் செய்யுட்கள்

Post by sankark »

உனையே நினைந்துரு குமவள் நிலைநீ உணராயோ 
துணையாய் வருவே னெனவொரு மொழிநீ பகராயோ 
மருகா நிலையளித் தவள்மனம் பதறா தருள்வாயே 
திருவே பெருமரு ளேயுனை அடைந்தாள் மகிழ்வாளே (1)

தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே 
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே 
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)

சினமேத விர்ந்துளமே குளிர்ந்தினி தானமொழி 
தினமும னுதினமும் நாம்பயின் றாலதுவே 
உலகெங் கிலும்மனிதர் குலமிசை வாய்வாழ
நலம்நல்கும் வளமூட்டும் வழியாய்க் கண்டேன் (3)

ஏதேனும் பா வகையுள் பொருந்துமா எனத் தெரியவில்லை!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பகையை மறநகை யைப்புரி மனிதா மனிதா
இகத்தில் பரசுகத் தைப்பெறும் வழியே வழியே
இகழ்ச்சி ஒருபுகழ்ச் சியிவை சமமே சமமே
மகிழ்ச்சி குறைபட் டாலதுவாழ் வோசீர் வாழ்வோ (4)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: தனிச் செய்யுட்கள்

Post by arasi »

edEnum pA vagaiyuL porundAviDil enna?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

arasi wrote: 21 May 2022, 21:33 edEnum pA vagaiyuL porundAviDil enna?
:) adhuvum sari! periya poruttillai. Osai.ozhungil punaiyapattavai.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

caught vadasi yathi and so inspired by tvamasi mama jIvanam tvamasi mama bhushanam

தாழ்சடையான் இடப்பாகம் தானுகந்த அம்மையால்
ஊழ்வினையை ஊடறுத்து வீடேகும் இப்பிறப்பில்
தாழ்விலாத பெண்ணாளே தானுவந்தெ னைக்கொண்டாய்
வாழ்வெனக்கு நீயன்றோ என்சீரும் நீயன்றோ

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தேமதுரத் தாய்த்தமிழில் யாமவளைப் பாடுகிறோம்
மாமதுரைச் சொக்கநாதர் கைப்பிடித்த மும்முலையை
காதுகுளிர் தீந்தமிழில் பண்ணிசைத்துப் போற்றுகிறோம்
யாதுமவள் செய்கையாம் யாமவள்கைப் பாவையாம்

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மூவுலகும் மூவடியால் முன்னளந்த முதலவனைத்
தீவளர்த்து ஓத்திசைக்கும் வேதியரும் மற்றவரும்
காவளர்ந்த தேன்சொரியும் மாமலராற் றாந்தொழுது
நீர்வளரும் காவிரியின் தீவினிலே கண்டனரே

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தனதாவி தானுகுத்தாள் போனாள்வெந் தீயில்
எனதாவி போகாதோ தான்

விடையேறி ஊர்வானைச் சேர்ந்தாளே பெண்ணாள்
விடையாரிங் கேபகர்வ ரோ

குன்றிட்ட சோதியாய் என்வாழ்வில் நின்றாளைச்
சென்றங்கு என்றுகாண் பேன்

மஞ்சாடு விண்ணேகிச் சென்றாளை என்சொல்வேன்
நெஞ்சோடு தான்கலந் தாள்

கையறு நிலை குறட்பா

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கடைநாளினில் துணையாகிட மணமாகிய எவரேனும்
இடைநாளினில் உயிர்நீங்கிப் பிரிவாகிடும் விதிக்கேதும்
தடையுளதோ அருளாளா உலகெல்லாம் உடையானே
விடைகூறாய் விடையேறிப் புள்ளூரும் ஓரிறையே

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பைந்நாகப் பாய்சுருட்டிப் பின்விரித்து சொன்னவன்னம் செய்தானை
அந்நாகம் காத்தானை ஆழிநிற நின்மலனைக் காண்மின்
மாமலராள் மண்மடந்தை தங்கோவை இன்னமுதை நன்றேநீர்
சேமமுறப் பாதையி தேசேவிப் பீர்நாரண னைநிதம்

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மஞ்சுலாவு வரைமுகட்டில் மதியடர்ந்த ஆம்பொழுதில்
நெஞ்சமிகக் குழைவுறவே தந்தலைவி நெருங்கமித
மிஞ்சியதோர் காதலெனும் வெள்ளமதில் மூழ்கியவன்
கஞ்சமல ரடியிணைக் கீடுளதோ வென்றயர்ந்தான்

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: தனிச் செய்யுட்கள்

Post by arasi »

All such lovely verses, sankark!
#8 and #9 bring tears to one's eyes...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: தனிச் செய்யுட்கள்

Post by thanjavooran »

மூவுலகும் மூவடியால் முன்னளந்த முதலவனைத்
தீவளர்த்து ஓத்திசைக்கும் வேதியரும் மற்றவரும்
காவளர்ந்த தேன்சொரியும் மாமலராற் றாந்தொழுது
நீர்வளரும் காவிரியின் தீவினிலே கண்டனரே

அரங்கநாதரை அருமையாக கண் முன் நிறுத்திவிட்டீர்கள். வாழ்க வளமுடன்!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

@arasi
@thanjavooran
நன்றி

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

panchaprEtAsanA

ஐந்துபெரிது எட்டுபெரிது என்றுமாயும் மாந்தரேநீர்
ஐந்துமெட்டும் மேலோர்மூன் றுமாயதொழில் செய்வோரை
மஞ்சமாக்கி மேலிருந் தாட்டுவிக்கும் ஒன்றேயாம்
வஞ்சியவள் தாள்பணிந்து மாயைநீங் கிஉய்வீரே

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஒன்றிரண்டும் மேலிரண்டு மாயவற்றை மஞ்சமாக்கி
ஒன்றிரண்டும் மூவிரண்டு மாயகோள்கள் மேனிறுத்தி
ஒன்றிரண்டும் மேலுமொன்றை ஓத்துவாக்கி ஓதுவார்க்கு
ஒன்றுயானே ஒன்றுயானே என்றுநின்றாள் தாள்சரண்

திருச்சந்த விருத்தத்தின் ஓசையொழுங்கை ஒட்டியது

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 21 May 2022, 18:08 உனையே நினைந்துரு குமவள் நிலைநீ உணராயோ 
துணையாய் வருவே னெனவொரு மொழிநீ பகராயோ 
மருகா நிலையளித் தவள்மனம் பதறா தருள்வாயே 
திருவே பெருமரு ளேயுனை அடைந்தாள் மகிழ்வாளே (1)

தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே 
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே 
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)

சினமேத விர்ந்துளமே குளிர்ந்தினி தானமொழி 
தினமும னுதினமும் நாம்பயின் றாலதுவே 
உலகெங் கிலும்மனிதர் குலமிசை வாய்வாழ
நலம்நல்கும் வளமூட்டும் வழியாய்க் கண்டேன் (3)

ஏதேனும் பா வகையுள் பொருந்துமா எனத் தெரியவில்லை!

தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)

-- கலித் துறை.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 05 May 2023, 12:25
sankark wrote: 21 May 2022, 18:08 உனையே நினைந்துரு குமவள் நிலைநீ உணராயோ 
துணையாய் வருவே னெனவொரு மொழிநீ பகராயோ 
மருகா நிலையளித் தவள்மனம் பதறா தருள்வாயே 
திருவே பெருமரு ளேயுனை அடைந்தாள் மகிழ்வாளே (1)

தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே 
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே 
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)

சினமேத விர்ந்துளமே குளிர்ந்தினி தானமொழி 
தினமும னுதினமும் நாம்பயின் றாலதுவே 
உலகெங் கிலும்மனிதர் குலமிசை வாய்வாழ
நலம்நல்கும் வளமூட்டும் வழியாய்க் கண்டேன் (3)

ஏதேனும் பா வகையுள் பொருந்துமா எனத் தெரியவில்லை!

தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)

-- கலித் துறை.
நன்றி

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

காதலில் வீழ்ந்தவர் கோடியில் ஆகுவார்
மோதலும் காதலில் அங்கமே அங்கமே
நீங்கினில் வெந்திடும் பக்கலில் தண்ணென சேர்கையில் தன்மையாய்
யாங்கனே இந்நெருப் பு

changed a bit to bring it all into கூவிளம் சீர்
Last edited by sankark on 16 Jun 2023, 14:54, edited 1 time in total.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கண்ணாரக் கண்டேனே கல்லாலின் கீழிருந்து
வண்ணமாய் வாசிக்கும் நால்வர்க்கும் எல்லாமும்
சொல்லாமற் சொல்லிடுந் தான்தோன்றி தன்னையேத்
தில்லையில் கால்தூக்கி யே

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

இரண்டும் இன்னிசை வெண்பா.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 16 Jun 2023, 21:16 இரண்டும் இன்னிசை வெண்பா.
🙏

ஒரு நேரிசை வெண்பா

நேற்றாகி இன்றாகி நாளையு மேயாவாய்க்
கூற்றுவனைக் கூத்துவிக்கும் கோதாய்நீ - மாற்றாதே
தேற்றமாய் நின்கடைக் கண்பாராய் பூவினுறு
நாற்றமேத் தீயினுட்தெ றலே

பரிபாடல் சொல்லாளுமையைத் தழுவியது

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

கடைசியில் கலித்தளை அமைந்துள்ளது. அதை சரிசெய்தால் நேரிசை வெண்பா ஆகிவிடும்.

இப்போது உள்ள அமைப்பை வெண்டுறை எனலாமா?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

சரியாகச் சொன்னீர். காய்முன்நேர் வேண்டும், மலர் ஆகிவிட்டது

நேற்றாகி இன்றாகி நாளையு மேயாவாய்க்
கூற்றுவனைக் கூத்துவிக்கும் கோதாய்நீ - மாற்றாதே
தேற்றமாய் நின்கடைக் கண்பாராய் பூவினுறு
நாற்றமேநீ தீக்குட் தெறல்

வெண்டுறை - பயில வேண்டும்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
வெண்டுறை :-
இது வெண்பாவினம்
எளிய பா அமைப்பு; கடுமையான விதிகள் கிடையாது.

குறைந்தது 3 அடிகள்; அதிகபட்சம் 7 அடிகள் கொண்டிருக்கும்.
எப்படிப்பட்ட சீரும் இருக்கலாம்.
தொடக்கத்தில் உள்ள சில அடிகள் ஏதேனும் ஒரு சீர் எண்ணிக்கை கொண்டும்; பிறகு வருகின்ற அடிகள் ஒரே அளவிலான குறைந்த சீர் எண்ணிக்கை கொண்டும் இருக்கும்.
அல்லது, கடைசி அடி மட்டும் சீர் எண்ணிக்கை குறைந்து வரலாம்.
சந்தஒழுங்கு (வாய்ப்பாடு) கிடையாது.

எதுகை கட்டாயம் இல்லை; இருந்தால் அழகு.
தளை காண வேண்டாம்.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஒரு குறள்

செத்தாரோ செப்பாதார் செப்புவோர்க் கண்டதில்லை
தத்தையே விந்தை யிதே

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

sankark wrote: 18 Jun 2023, 16:46 ஒரு குறள்

செத்தாரோ செப்பாதார் செப்புவோர்க் கண்டதில்லை
தத்தையே விந்தை யிதே
செத்தாரோ செப்பாதார் செப்புவோர்ச் செத்தாரோ
தத்தையே விந்தை யிதே

a bit of a tweak. this makes one wonder how many great poems have gone through changes while maintaining the idea unchanged at the core.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

இன்று கந்தர் அநுபூதி தொடர்பு ஏற்பட அதன் சந்த அமைப்பில் ஈர்க்கப்பட இரண்டு

அகமும் குளிர்ந்திடக் கண்பஞ் சடையச்
சகமும் பிறபொருள் யாவும் மறைய
உனைநா னுணரும் படியே அருள்வாய்
தினையாள் தனையழ காய்மரு வியவா

சகியே சகியே இனியென்ன குறை
முகில்போ லக்கருங் கூந்தலு டையாய்
மகிழ்வாய் மனத்தேகு டிகொண்டா னவனே
புகழுக் குரியபர தேவிதன் மகனே

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

2) கலி விருத்தம்

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 03 Jul 2023, 23:36 2) கலி விருத்தம்
time to go brush up on pAvinam and all that stuff..

One more

திருநாள் இதுபெரு கியதவ னருளே
வருமோ இதுபோ லினியொரு நாளும்
திருமால் மருகன ழகன்த னையே
திருவின் எழிலுடை பிணையடைந் தனளே

இதுவும் கலி விருத்தமோ ?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

Yes!
Meets the two conditions -- four alavadi + yedugai.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 04 Jul 2023, 09:49 Yes!
Meets the two conditions -- four alavadi + yedugai.
thanks!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
அளவடிகள் நான்கும், அடி எதுகையும் கொண்டிருப்பது கலிவிருத்தம்.

-----
மோனை கட்டாயமில்லை. இருந்தால் சிறப்பு.
எந்தவகைச் சீரும் வரலாம்.
எனவே சந்தஒழுங்கு / வாய்ப்பாடு கிடையாது.
தளை காண வேண்டாம்.
-----

ஆனால் இப்போது பலரும் சந்த ஒழுங்கும் மோனையும் இருப்பதை எதிர்பார்க்கிறார்கள். இது விதிகளைக் கடினமாக்கி புதியவர்களைச் சற்று மிரட்டுவது போலத் தோன்றும்.

எனினும், மோனையும் சந்தஒழுங்கும் கவிதைக்கு அழகூட்டி மிளிரச்செய்கிறது என்பதை உணரலாம்.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

https://www.dinamani.com/weekly-supplem ... 13930.html

kandhar anubhuthi seems to be made of kaliviruththams!

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95 ... E%E0%AF%8D

sandha ozhungu - must?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஆழ்ந்து அனைத்தையும் உள்வாங்க வேண்டும்!

பாவினங்கள் பாவிற்குறிய இலக்கணத்துக்கு சில விலக்குகள் அளிக்கின்ற போலும்

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தானானா x 4 அல்லது (தேமாங்காய்)
தானனானா/தானனனா x 4 (கூவிளங்காய்)
இறுதி அடி (x 2) + கடைச்சீர் நாள்/காசு

அல்லது
தானனா x 4 (கூவிளம்)
இறுதி அடி (x 2) + கடைச்சீர் நாள்/காசு

இது வெண்பா அளிக்க ஒரே சீரில் அமைந்த ஓசை ஒழுங்கு உடையது

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

உலகத் துறைமறை யவர்பிறர் புகழும்
சுலபத் தருள்புரி சங்கரன் மகனே
தகுமோ தாமத மறுபடைத் தலத்தோய்
நகுமோ உலகமு மருள்புரிந் திடினே*

*நகுவா ருளரென அருள்புரிந் திலையோ

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கருவேல் விழியாள வளைப்பெரி யோனாம்
பெருவ யிறவன ருளைக்கொடுப் புணர்ந்த
திருவும் மருகுறும் அழகுறு மருகா
பெருவே லுடையறு முகத்தென தரசே

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 05 Jul 2023, 09:40 உலகத் துறைமறை யவர்பிறர் புகழும்
சுலபத் தருள்புரி சங்கரன் மகனே
தகுமோ தாமத மறுபடைத் தலத்தோய்
நகுமோ உலகமு மருள்புரிந் திடினே
நிலைமண்டில ஆசிரியப்பா

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 05 Jul 2023, 11:02 கருவேல் விழியாள வளைப்பெரி யோனாம்
பெருவ யிறவன ருளைக்கொடுப் புணர்ந்த
திருவும் மருகுறும் அழகுறு மருகா
பெருவே லுடையறு முகத்தென தரசே
"விழியாள" எனும் சீரை மாற்றி அமைத்தால் "மா, விளம், விளம், மா" என்ற சந்தஒழுங்கு கிட்டும்.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 05 Jul 2023, 14:49
"விழியாள" எனும் சீரை மாற்றி அமைத்தால் "மா, விளம், விளம், மா" என்ற சந்தஒழுங்கு கிட்டும்.
கருவேல் விழிமுழு மதிபழி யழகைப்
பெருவ யிறவன ருளைக்கொடுப் புணர்ந்த
திருவும் மருகுறும் அழகுறு மருகா
பெருவே லுடையறு முகத்தென தரசே

செய்தாயிற்று

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வானகத்து தேவருக்கும் வையகத்து மாந்தருக்கும்
தானவர்க்கும் தாண்டவாநின் தாள்கதி - தானுமாலுந்
தோற்றமாய தானலாது வேறிலானே வேட்டுவாநீ
தோற்றமிலி மாற்றமி லியேமாற்றமிலி யே
Last edited by sankark on 07 Jul 2023, 08:31, edited 2 times in total.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
கடைசி தளை ஆசிரியத்தளையாக உள்ளது.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

typing mistake - corrected.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

காவலன் றன்குண மாங்கயவர்க் கொப்ப
மாவளங் கொண்டாலும் நாடு கெடுமன்றோ
மீவள நாட்டினாய் நன்குணர்வாய்த் (நன்கிதைத்) தேர்ந்துநீ
சீர்வளர் ஆட்சியைச் செய்
Last edited by sankark on 21 Jul 2023, 12:30, edited 1 time in total.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அகம்

காமனோக் காமனோ யாரிவன் கூறடி
எம்மிளந் தாமரை மொட்டுகள் நோகுதே
நாணமோ விட்டது காமமோச் சுட்டது
வானுதல் வேர்த்ததென் னுள்ளமும் வெம்பவே

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அழுவத்தே ஆழமுங்கி ஆயிரஞ் செய்தாற்
பழவினைப் போகுமோப் பார்தனில் - வாழாதே
ஈயாம லாங்கிரப் போருக்கில் லையென
ஓயாதே ஓயாது தா

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 21 Jul 2023, 11:49 காவலன் றன்குண மாங்கயவர்க் கொப்ப
மாவளங் கொண்டாலும் நாடு கெடுமன்றோ
மீவள நாட்டினாய் நன்குணர்வாய்த் தேர்ந்துநீ
சீர்வளர் ஆட்சியைச் செய்
கொப்ப மாவளங் = ஆசிரியத் தளை.
இதை சரிசெய்தால் இன்னிசை வெண்பா எனலாம்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 21 Jul 2023, 14:53 அழுவத்தே ஆழமுங்கி ஆயிரஞ் செய்தாற்
பழவினைப் போகுமோப் பார்தனில் - வாழாதே
ஈயாம லாங்கிரப் போருக்கில் லையென
ஓயாதே ஓயாது தா
இன்னிசை வெண்பா

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 21 Jul 2023, 17:07
sankark wrote: 21 Jul 2023, 11:49 காவலன் றன்குண மாங்கயவர்க் கொப்ப
மாவளங் கொண்டாலும் நாடு கெடுமன்றோ
மீவள நாட்டினாய் நன்குணர்வாய்த் தேர்ந்துநீ
சீர்வளர் ஆட்சியைச் செய்
கொப்ப மாவளங் = ஆசிரியத் தளை.
இதை சரிசெய்தால் இன்னிசை வெண்பா எனலாம்.
காவலன் றன்குண மாங்கயவர்க் கொப்பினால்
மாவளங் கொண்டாலும் நாடு கெடுமன்றோ
மீவள நாட்டினாய் நன்குணர்வாய்த் தேர்ந்துநீ
சீர்வளர் ஆட்சியைச் செய்

ஆம். தளை சரி செய்தாயிற்று.

Post Reply