Vintage Vignettes...

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

பஞ்ச‌ பட்ச பரமான்னமும் எலையிலே ரொம்பி இருக்க, வந்தவாள் நாக்கிலே ஜலம் ஊற, விருந்து ஆரம்பிச்சுதாம். அவ்வளவுதான், எலை மேலே இருந்த அத்தனை பட்சணங்களும் மறைஞ்சே போச்சாம். அட, எலையாவது அசைஞ்சுதான்னா, அதுவும் தரையோடே ஒட்டிண்டுடுத்தாம். .. கொஞ்சம் பொடி மட்டையைக் கொடுக்கிறீரா?"

வலது காலால் நிற்பதை விடுத்து, இரும்பாய் கனக்கும் சரீர சுமையை இடது காலுக்கு மாற்றிக் கொள்கிறேன்.

"அடியே, கோமதி நாட்டுப் பெண் பொறாந்தாத்துக்குப் பொறப்பட்டுப் போய்ட்டாளாமே? ஏதேதோ காதிலெ விழறதே?"

"அதையேன் கேக்கறே? அவளோட பிடுங்கல் தாங்காமதான். கோமதி கீழே இருந்து யாரால் குப்பை கொட்ட முடியும்டீ?"

"ஆமாமாம். அவள்தான் மனுஷாளை நாக்காலெ சொழட்டி எறிஞ்சுடுவளே? ஆமாம், இன்னிக்கு அடைக்குப் போடணும்னியே,அரைச்சுட்டியோ?"

"அதுக்கென்னடீ அவசரம்? இன்னிக்கு நாளூம் கெழமையுமா பெருமாளை சேவிச்சுட்டுப் போகலாம்னு வந்தேன். எப்போ இந்தக் கூட்டம் கரைஞ்சு சேவையாறதோ? வடாம் வேறெ ஒலரப் போட்டிருக்கேன். வானம் மூடிண்டு வரதே? மழைத் தூத்தல் போடாதெ இருக்கணும்."

கடிகாரத்தின் பெரிய முள் ஒரு சுழற்சியை முடித்துக் கொண்டு, இரண்டிலே வந்து நின்று, நிம்மதியாக சாய்ந்துகொண்டு சற்று ஓய்வு எடுக்கிறது.

இரண்டு கால்களும் ஈய குண்டாய் கனக்க, நான் நிலை மாறுகிறேன். இது தலை கீழ் ப்ராணிகளின் வாசஸ்தலம் என்பதை நாசிக்கு நினைவுறுத்தும் நெடி. எல்லாம் வல்ல அவன் சன்னிதியில் உள்ளம் உருகாவிட்டாலும் உடலெல்லாம் ஓடி வழியும் வியர்வை. மூலை முடுக்கு சந்துகளிலெல்லாம் நிறைந்து, சலித்து நிற்கும் பக்த கோடிகள் வரிசையின் நெறிசல், அவனை அடையும் வழி குறுகலானதுதான் என்பதை உணார்த்துகிற‌து.

கடிகாரத்தின் அசுர வேகத்துடன் நத்தை நடை பயிலுகிறது மனித வரிசை. கடைசியிலே...

சந்தனத்தின் சுக‌ந்தம், அவன் பாதத் துளியின் பரிமளம், மல்லிகை, தாமரை, துள‌சி, கற்பூரம், சாம்பிராணி இவை கலந்த இனிய மணம். இருளை அகற்றியும் அகற்றாத மங்கிய, ஆனால் சுடர் ஒளிரும் விளக்குகள், எல்லாவ‌ற்றிற்கும் மேலாக அவன், எம்பிரான்...

"என் பாதம் அடைந்தோர்க்கு அருளுண்டு,'' என மேலும் கீழுமாக அமைந்த இரு கரங்கள். அவன் உதட்டிலே இழையோடும் புன்னகையின் தெறிசல்....

* * *

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Vintage Vignettes...

Post by Pasupathy »

தமிழில் ஒரு சுவையான விருந்து....

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Vintage Vignettes...

Post by thanjavooran »

வரிசையில் வதை பட்டு நின்றாலும்
கடைசியில் அவன் தாள் தரிசனமே சுகம்.
அரசி ஜி அருமை போங்கள்!
தஞ்சாவூரான்.
29 07 2014

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Vintage Vignettes...

Post by Pratyaksham Bala »

"தெறிசல்" - புதியதொரு சொல்லாக்கமாகத் தெரிகிறது !
சிதறல் என்று பொருள் கொள்ளலாமா?

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

சில வரிகளுக்கு முன்பு வரும் 'நெறிசல்' இதை 'ட்ரிகர்' செய்திருக்கலாம்.
ஐம்பது வருடங்களுக்கும் முந்தைய புதுச் சொல்?!!

நீர் கூறும் பொருளிலேதான் இதைப் பயன் படுத்தியிருக்கிறேன்...

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

அடடா! நெரிசல் நெறிசல் என்றாகி விட்டதோ?

எப்படியானாலும், ஒலிப்பதிலே இரண்டும் ஒன்றே என்று சாஹித்யங்கள் பகுதியிலே சொல்லக் கேட்டதுண்டு ;)
ஏதானாலும், தவறு என் தட்ட‌ச்சிலேதான்...

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

நீங்க‌ளும் நானும்


யார், யார்,
இவர் யாரோ?
...............................


எல்லாவற்றிற்கும் இந்த பாழாய்ப் போன, கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்க வேண்டிய, மேல் வீட்டில் குடியிருக்கும் மூளையார்தான் காரணம். அயனான சந்தர்ப்பத்தில் மக்கர் பண்ணி, நாலு பேர் நம் மண்டையை உருட்டும் அளவுக்கு திரிசமன் செய்யும் திறனுடையவர், என்னைப் பொறுத்த வரையில் இவர்தான்.

பாலத்தின் மேலே நின்று, சூரியாஸ்தமனத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். யாரோ முதுகில் வெகு உரிமையோடு ஒரு ஷொட்டுக் கொடுக்கிறார்கள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். ஆறாம் க்ளாஸ் ஹிஸ்ட்ரி புத்த‌கத்தில் ஒன்றாம் எலிஸபெத் ராணியின் பட‌த்தைப் பார்த்தாற் போலிருக்கிறது அந்த முகம்...

"அடேயப்பா! என்னடீயம்மா அப்படியோ...ரு யோசனை? "

இதென்னடா வம்பு? இவ்வளவு சுவாதீன‌த்துடன் பேசுமிந்த‌ எலிஸபெத் ராணிyuDan விளையாடிய தோழியோ நான்? இல்லை, இருபதாம் நூற்றாண்டில், மூன்றாம் திட்ட காலத்தில் பாரத மண்ணிலே பாதம் பதித்து, நம்மிலிருந்து பல கோடி மைல்கள் தூரத்தேயுள்ள அருண பகவானின் அழகைத்தான் ரசித்துக் கொண்டிருந்தேனோ?

நான் பேந்தப் பேந்த விழிக்கிறேனென்பது சட்டென்று எதிரே இருப்பவள் முக மாறுதலில் தெரிகிறது.

"ஏண்டியம்மா, நானொருத்தி இத்தனை நாள் கழித்து உன்னைப் பார்க்கிறேன், அதில் ஒரு சந்தோஷமா-- ஒண்ணயும் காணோமே?"

நல்ல வேளையாக, ஆபத் பாந்தவனாக, 'ஹே, ஆதி மூலமே! இம் முகத்தின் உரிமையாளி யார்? என்னைக் காப்பாற்றேன்!' என்று மனதுக்குள்ளே நான் கதறிக் குமையும் போதே, என்னருகில் வந்து நின்ற பஸ்ஸுக்கு ஆயிரம் அஞ்சலிகள் செலுத்தினேன்.
"ஐயோ, பஸ் வந்து விட்டதே!" என்று கூவினேன்.

"சரி, பின்னாலே எப்போவாவது சாவகாசமாகப் பார்ப்போம். நீ கல்கத்தாவுக்கு வந்தால், என் வீட்டுக்கு வராமலிரு! கெட்ட கோபம் வரும்!"

கல்கத்தாவா? எலிஸபெத் ராணிக்கு அங்கே என்ன வேலை? ஒரு வேளை, கிழக்கிந்தியக் கம்பெனியை ஸ்தாபிதம் செய்யப் போகிறாளோ? சே சே! என்ன அபார சரித்திர அறிவு எனக்கு! அது விக்டோரியா ராணி காலத்தில் அல்லவா?
தவிர, இது அணு யுகத்தின் ஆரம்ப காலமாயிற்றே?

எலிஸபெத் ராணியே பரவாயில்லை என்றாக்கி விட்டாள் இன்னொருத்தி...

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

"என்ன? சௌக்யமா?"

சினிமா க்யூ வரிசையிலே எனக்குப் பின் நின்ற பெண்மணிதான் குரல் கொடுத்தாள். ஏதோ பத்திரிகையிலே, சோப்பு விளம்பரத்திலே, இல்லை, இரயில் பயணத்திலே--இல்லை, எங்குமே பார்த்தறியாத புத்தம் புது முகம்.

"சௌக்யந்தான்" என்று சொல்வதற்குள் என் முகத்தில் வழிந்தோடிய அசட்டுக் களை என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது. வந்தது ஆபத்து!

"என்னைத் தெரிகிறதா?"

போச்சு! இந்த நாசமாய்ப் போன பூமி பிளந்து என்னை அப்படியே விழுங்கி விடாதா? இல்லை, இந்தப் பாழாய்ப் போன காற்றுத்தான் ஒரு சுழலடித்து இந்தப் புது முகக்காரியை க்ருஸ்மஸ் தீவுக்கு அடித்துச் செல்லலாகாதா?

அப்படி ஒன்றும் நடக்க வில்லை.

"என்ன முழிக்கிறாய்? ஊம், யாரென்று சொல், பார்க்கலாம்!" ந‌கக்கண்களில் ஊசியைச் செலுத்தி, 'கொலை செய்த‌து நீதானே?' என்று யாரோ கேட்கிறார்கள். அசட்டுத் துணிச்சலுடன் சொல்கிறேன்."ஹி ஹி, உங்களைத் தெரியாதா?"

" பின்னே சொல்லு, பார்ப்போம்!" விடாக் கண்டி!

"இதென்ன கேள்வி? வீட்டில் எல்லோரும் சௌக்யந்தானே?" இதுதான் தப்பித்தல் முறைகளின் ந‌ம்பர் ஒன் விதி. மனுஷன் இல்லை மனுஷி என்று பிறந்தால், வீடொன்றிருக்காதா? அட! அதிலே இவள் ஒருத்திதான் தனிக்காட்டு ராணியாய் வாசம் செய்வாளாக்கும்!

"எல்லாரும் சௌக்யந்தான். விமலாதான் ரொம்ப இளைத்துப் போய் விட்டாள்." ( யாரது விமலா?)

"அவள் ரொம்ப சீரியஸாகப் படுத்திருந்ததுதான் உனக்குத் தெரியுமே!" (அடக் கட‌வுளே! அவள் இந்த உலகத்தில் வந்து பிறந்ததோ, வளர்ந்ததோ கூட எனக்குத் தெரியாதே?)

"பாபு பாஸ் பண்ணி விட்டான்." (அவன் என்ன பேபி க்ளாஸா, பி.ஏ யா, ஐ ஏ எஸ்ஸா?). உனக்கு சந்தோஷமாக இருக்கும்."

"இஹி," (இருக்காதா பின்னே?).

"ஸச்சுவும் இன்னிக்கு சினிமாவுக்கு வருவேன்னு ஒரே பிடிவாதம்." (அது கைக் குழந்தையா, காலேஜ் பாவையா?).

" நான் கமலியை மட்டும்தான் கூட்டி வந்தேன்." அவளுக்குப் பின்னாலிருந்து கமலி என்னும் ஒன்று என்னை எட்டிப் பார்க்கிறது. எனக்கு தைரியம் வந்து விட்டது. ஒரே போடு போடுகிறேன்.

"என்ன கமலி, எப்படியிருக்கே?" ஒரு கணம் உற்றுப் பார்க்கிறேன். பாவாடையும் தாவணியும். இது ஹை ஸ்கூல்
ஸ்டேஜ் தான் என்று எடை போட்டு, குண்டு தைரியத்துடன் இன்னொரு கேள்வியை வீசுகிறேன். "ஸ்கூல் எல்லாம் எப்படி இருக்கு?"

கமலியின் முகம் வாடுகிறது.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

"என்ன இது நீ? பா...வ‌ம், அதுக்கு ஸ்கூல் ஃபைனலிலே போயிடுத்தே? ஒனக்குத்தெரியாதா?" ஏமாற்றமும் ஆதங்கமும் குரலிலே தொனிக்கிறது.

அத‌ற்குள் கௌண்டர் கையெட்டு தூர‌ம் வந்து விடுகிறது. டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வெகு வேகமாய் நகர்கிறேன் நான். ஐயோ! இன்னும் இரண்டரை மணி நேரம் புது முகத்தினருகிலா உட்கார வேண்டி வரும்?

பர பரவென்று டிக்கெட்டைக் கிழித்துப் போட்டு விட்டு, தியேட்டரிலிருந்து பிடிக்கிறேன் ஒரு ஓட்ட‌ம்...


அன்று கோயில் கடையிலே இன்னொருத்தியைப் பார்த்தேன். அடடா! பேர் கூட மற‌ந்து விட்டதே! எனக்கு அவளைத் தெரியுமே? இனிமேல் நானே தெரிந்தவர்களுடன் வலுவில் சென்று வார்த்தையாட வேண்டும் என்று சங்க‌ல்பித்துக் கொண்டு அவளருகே சென்றேன். ஒரு பெரிய ஹலோவைத் தவழ விட்டு முப்பத்திரெண்டுக்கும் சற்றுக் குறைவாகக் கொண்ட இரு பல் வரிசைகளைப் ப்ரகடனப் படுத்தினேன்.

சடாரெனத் திரும்பிப் பார்த்து, ஒரு கேள்விக் கொக்கியை முகத்தில் தாங்கி, அந்த ஏந்திழையாள் ஒரு நொடியில் என்னை விட்டு நகர்ந்து விட்டாள்.

எனக்கு போதி மர நிழலாடிற்று.

அடடா! இவளை எனக்குத் தெரியவே தெரியாதே! அன்று இரயில்வே ஸ்டேஷனில் யாரையோ வழியனுப்பப் போன போது, அந்த கம்பார்ட்மென்ட்டிலே உட்கார்ந்திருந்தவளைப் போலவே, இவளுக்கும் கிளி மூக்கு, அவ்வள‌வுதான், என்று ந‌ரம்பு மண்டலத்திலே நினைவு அலை மீட்டி வந்தது.

உண்மையாகத்தான் கேட்கிறேன், விந்தைகள் மலிந்த இப் புது உலகிலே, ஒரு பொத்தானை அழுத்தினால், எதிரே வரும் பிராணியின் குலம், கோத்திரம், சந்ததிகள் இத்யாதி அடங்கிய‌ பட்டியல் ஒன்றைக் கையில் கொடுக்கும் யந்திரம் ஒன்று இருக்கிறதா, சொல்லுங்கள்.

இல்லை, மனித வாடையே இல்லாத ஒரு தீவாவது...?

* * *

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Vintage Vignettes...

Post by maduraimini »

Wow, Arasi!
We all go through this stage in our life. someone talks to you like you are their best friend, and you cannot even remember their face ! With your humorous writing, you have brought out this phenomena to the forefront. It is hard when you are young as you have no excuse but try to get away from that person. All day and night you keep thinking who was the one who talked to you, Where did you meet her etc. As I get older, this happens more often, but thanks to my age I can tell them to their face (without any guilty feeling) 'sorry, I know your face, but can't remember the name as I am getting older,. This is a good excuse.


Thanks to all rasikas who pointed out that pottukadalai in your previous post was a girl and not a boy. The same excuse- I am getting older by the minute!

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Thanks, maduraimini (my M&M)!

Did you read sthala purANam which preceded this?
Will post a few more after 'family time' (in the coming weeks)...

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Vintage Vignettes...

Post by thanjavooran »

அரசிஜி படைப்புகளை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்
தஞ்சாவூரான்
02 08 2014

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Thanjavooran,
You have been such an encouraging person all these years! Thank you for that and for your contributions and for your friendly and positive presence. Your 'ji' added to my name is the only thing that surprises me, because it sounds somewhat formal, and we have known each other through Rasikas.org for a long time!

I'm pleasantly surprised that my 'old stuff' is read by some of you on Rasikas with interest :)

Will return with more after a spell...

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

புகை மயக்கம்
----------------------


மனப் படலிலே வந்து பூக்கும் அந்த நாளின் நினைவுகள்...காலணாவுக்குக் கமர்கட்டு வாங்கிக் காக்காய்க் கடி கடித்துப் பகிர்ந்து கொண்டதும், காதை வானொலிப் பெட்டிக்கருகே வைத்துக் கள்ளத்தனமாய் கிரிக்கெட் கமெண்டரி கேட்டதும், ஈர‌ச் சாக் பீஸால் கரும் பலகையில் எழுதியது உலர்ந்தது போல் பளிச்சிடுகிறது.

அது மட்டுமா? அரை கிளாஸிலிருந்து கல்லூரி கடைசிப் படி வரை ஒன்றாக நட‌ந்தவர்கள் நாங்கள். வகுப்பறைக்கு டிமிக்கி கொடுத்து சினிமா கொட்டகையில் ஆஜராவது, பேராசிரியர் வகுப்பில் கட்டுரையோடின்றிச் சென்று திட்டு வாங்குவது, காலேஜ் காரிடாரிலே, கமா, ஃபுல் ஸ்டாப் இன்றி அரட்டைஅடிப்பது ஆகிய அனைத்துத் திருப்ப‌ணிகளும் ஒன்றாக நிகழ்த்தியவர்கள் நாங்கள். இத்தகைய ஒட்டுப் ப்ளாஸ்த்ரி நண்பர்கள்தான் காலப் போக்கிலே பிள்ளையார் கோயில் தேங்காய்ச் சில்லுகளாய் எகிறிப் போனோம்.

அப்படிப்பட்ட அருமைத் தோழியைப் பார்க்கப் போகிறேன் என்றால்...?

எங்கோ வடக்கே, பாலைவனப் பிரதேசமொன்றிலே பணி புரியுமவள் காரியாலய வேலையை முன்னிட்டு என் இருப்பிடத்தைத் தாண்டித் தென் முனை செல்கிறாள். புகையிரத நிலயத்தில், மில்டன் வகுப்பைப் போலல்லாது, ஆஜராக முடியுமா, என்று கேட்டிருக்கிறாள்!

நாளை காலை நாலரை மணிக்கே எழுந்து அவளுக்குப் பிடித்தமான ரவா இட்லி தயார் செய்து, காப்பியோடு கிள‌ம்ப வேண்டும். அடேயப்பா! இத்தனை வருட‌ விஷயங்களை, கேவலம் பத்து ரயில்வே நிமிஷத் துளிகளில் பேசித் தீர்க்க வேண்டுமென்றால்...?

பகலும் இரவும் தயங்கி நின்று விடை பெறும் வேளை. கொள்ளிப் புகை கக்கி ஸ்டேஷனுக்குள் பிசாசாய் நுழைகிறது வண்டி...

"ஏய், எப்படி இருக்கே?" முகமெல்லாம் அசட்டுச் சிரிப்பு வழிய நான் கேட்கிறேன்.

"நீ சௌக்கியம்தானே?"

"ஊம், சௌக்கியம்தான். ட்ரெய்ன் லேட் போலிருக்கே?"

"ஆமாமாம், பத்து நிமிஷம் லேட்"

"மேலேயே இருக்குமே?"

"நோ, நோ! எக்ஸாக்ட்லி டென் மினிட்ஸ்"

"ஒரே கூட்டம் போலிருக்கே?"

"கூட்ட ந்தான்."

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

ஆயிற்று...மேலே பேச்சுச் சக்கரம் சுழலாது அமைதிப் பல்லிலே மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

அடடா! இந்த ரயில்வே ப்ளாட்ஃபாரமுக்குத்தான் என்ன சக்தி! விக்ரமாதித்தன் சிம்மாசனம் போல் இதற்கு இன்னொரு வித சக்தி--வண்டிக்குள் ஒருவரும், அதன் புனிதப் பரப்பிலே ஒருவருமாக இருக்கப்பட்ட காலத்திலே, வார்த்தைகளுக்கு ப்ரேக் போடும் ஒரு அபார சக்தி!

ஆனால், பாருங்கள், வண்டிக்குள்ளேயே இரண்டு பேரும் உட்கார்ந்திருந்தாலோ? அடடா, அவர் சீமை வாசியாக இருந்தாலும், பேச்சுத்தான் ரயில் வண்டி தண்டவாளத்திலே 'கட கட'ப்பது போல், என்ன நேர்த்தியாக நீளுகிறது!

இங்கே இவள், பூலோகத்திலே நான் அவதரித்து, எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த நாளிலிருந்து என் தோழி, அபூர்வமாக வந்திருக்கிறாள், என் நாக்குப் புரண்டு கொடுக்க மாட்டேன், என்கிறதே? நான்தான் அப்படியென்றால்,
இவளுக்கென்ன வந்தது? அதென்ன அப்படி மெழுகு மூஞ்சியாய் நிற்கிறாள்?

என் பார்வை புத்தகத் தள்ளு வண்டியின் கதம்ப வர்ண ஜாலத்தில் பாய்கிற‌து. "சீனாவின் அட்டூழியம்!" என்று பத்திரிகைத் தலையங்கமொன்று கொட்டைக் கண் விழிக்கிறது. அப்பாடா! டாபிக் கிடைத்து விட்ட‌து!

"பார்த்தாயா, இந்த அனியாயத்தை!"

"எதைச் சொல்கிறாய்?"

"அதுதான், இந்தச் சைனா இருக்கிறதே?"

"ஓ, எஸ், எஸ், எஸ்! இந்தச் சீன ஊடுருவலைத்தானே சொல்கிறாய்? ஆமாமாம், ரொம்ப அனியாயம், அக்கிரமம்! அதில் சந்தேகமே இல்லை..."

சம்பாஷணை மறுபடி இழை இற்றுப் போகிற‌து. ஈச்வரா! எப்போது இந்த வண்டி நகரும்?

யாரோ சொல்கிறார்கள், "அடடா! நீங்கள் இப்படி எழுந்து போய் விட்டால் எப்படி? உங்கள் இடம் பறி போய் விடும் போலிருக்கிற‌தே?"

தோழி ஒடிப் போய் தன் இடத்திலே உட்காருகிறாள்.

முதல் மணி அடிக்கிறது.

இவளோடு என்னவெல்லாமோ பேச நினைத்தோமே? ஒன்றாவது நினைவுக்கு வந்தால்தானே? மண்டை மரமாகி நிற்கிறேன் நான்.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

இடம் பறிமுதலாகப் போவது பற்றி எச்சரித்தவர்கள் அவளோடு வெகு சகஜமாக உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மரத்திலும் மின்சாரம் பாய்வது போல் மண்டையில் ஒரு கேள்விப் பொறி பிறக்கிறது. பேச விஷயம் கிடைத்து விட்ட‌து!

"அது யார்? உன் காரியாலய நண்பர்களா?"

"இல்லை, இப்போதுதான், திருச்சியிலே ஏறினார்கள்..."

அட தேவுடா! இங்கே வருஷக் கணக்கிலே அவளோடு அரட்டியடித்துத் திரிந்த நான் ஊமையாய், வ‌டித்த சிலையாய் நிற்க, இவர்கள்...

"இந்தாங்கம்மா, காப்பி! நீங்க வேறே, நாங்க வேறேயா? சந்துரு, அந்த இட்லி வடையை இப்படித் தள்ளுடா! அம்மாவுக்கும் கொடுக்கலாம்!"

வண்டி நகர ஆரம்பிக்கிறது...

"வரட்டுமா? லெட்டர் போடு!"

" நீயும்தான்."

"ஆகட்டும்."

என் கை கடுக்கிறது.

ஆ! ஆருயிர் தோழிக்காக ஆசையுடன் கொண‌ர்ந்த ஆறிப் போய்க் கொண்டிருக்கும் இட்டலியும், ஃப்ளாஸ்கிலே காப்பியுமல்லவா?

வண்டி கண்ணுக்கெட்டாத தூர‌த்திலே ஓடிக் கொண்டிருக்கிற‌து...

* * * *

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Vintage Vignettes...

Post by thanjavooran »

அரசி,
இன்னுயிர் தோழியை கண்டவுடன் உலகமே மறந்துவிட்டதோ?
பேச நினைத்தை வெளிப்படுத்தவும் இல்லை, கொண்டு போன சிற்றுண்டியும் காப்பியும் அளிக்க படாமலேயே திரும்பிவிடதே. பரவாயில்லை இன்னும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும். நிரம்பவே ரசித்தேன்.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரன்
15 09 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Vintage Vignettes...

Post by Pasupathy »

ஏமாற்றத்தில் சிறிது சோகம் இழையூடுகிறது. அருமையான சித்திரம்!

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Thanks, Thanjavooran and Pasupathy :)

As you can guess, this 'friend' is an amalgam of many, but what triggered the musings is yet another thing--that we often feel a bit tongue-tied when we meet relatives and friends in a station in a short time frame, being distanced and divided (by their being in a train). It's an odd situation unlike our meeting them during visits when conversations just flow!

Yes, Pasupathy. I detected a tinge of sadness too in it. It was written a few years after I left college. We all went in different directions, and it had changed our lives. Leaving the country within a few years made it worse. I could not keep in touch with many of my friends. We really felt the distance which divided us (no E-mails, and of course, the phone was used very sparingly for long-distance calls, as you remember too!).

So, it's a delight to connect with my one special friend from college every time I'm in India, going to concerts together, talking to each other as if we never parted :)

If any younger person is reading this, the parting words in our days used to be: do drop a line! letter pODu!
Before our times, it used to be 'oru kAlaNA card pODu'!

I am still vary of talking on the cell phone. I use it just when I need to, and people give me 'the look' when they see me fumble with it...!

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Vintage Vignettes...

Post by maduraimini »

Arasi,

Pugai Mayakkam was wonderful. You have given us a pictutre of our behavior in a humorous way.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

சாக்கலேட்டு, பிச்சி, பப்பூட்டு...
...........................................

என் இரத்தம் கொதித்தது. என்னுள் உறங்கிக்கொண்டிருந்த நியாய உணர்வு சிலிர்த்துக் கொண்டு எழுந்தது.

"என்ன அரக்க குணம் உனக்கு! இன்னும் இரண்டரை வயது நிறம்பாத பிஞ்சுக் குழந்தையை சிறையில் தள்ள வேண்டுமென்கிறாயே?"

துர்காவதாரம் எடுத்து நின்றாள் நண்பி. கலைந்த கூந்த‌லும், வியர்வை வழிந்து நெற்றியெல்லாம் பரவிக் கிடந்த குங்குமமும், வரிந்து கட்டிய சேலையும் என‌--மேக்கப் கன பொருத்தம்.

"சொல்ல மாட்டாயோ? இது போல் இரண்டு பெற்றாயானால் தெரியும். லங்கா தகனத்துக்குப் போக வேண்டியவை வழி தவறி வந்து இங்கே குதித்திருக்கின்றன. அதுவும் இந்த சின்னப் பிசாசு இருக்கே?"

என்னுள் தாய்க்குல உணர்வு ஓலமிட்டது. புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு அலைகிறதே என்பதற்காக, அவள் தொந்தரவு சிறிது நேர‌மாவது இல்லாதிருக்கட்டுமே என்று, பள்ளிக்கூட சுவர்களிடையே அடைத்து வைக்கத் துணிகிறாளே இவள்?

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

அன்று பஸ்ஸுக்காக நின்றிருந்தேன். காலை இளம் சூட்டிலே மின்னிப் பளபளத்த கருந்தார் ரோடிலே, கால்களை உதைத்தவாறு, தொண்டைக் குழி வரள அழுது புரண்டு கொண்டிருந்தாள் ஒரு குழந்தை. சிவப்பு ஃப்ராக்கிலே சின்ன ரோஜா மொக்கு போன்ற ஒரு குழந்தை அப்படி அழுதால்? தாவி அவளைத் தூக்கினேன். புதியவள் ஒருத்தி என்பதாலோ என்னவோ, கண்ணை விரித்து வாயை ஒரு கணம் மூடினாள் அந்தச் சிறுமி. கன்னத் தளிர் பிரதேசத்திலே அவள் துக்கமெல்லாம் திரண்டு, உருண்டு வழிந்துகொண்டிருந்தது.

"ஊம், பஸ்ஸு வந்திருச்சு, இதை வாங்கி உள்ளே ஏற்று, சின்னைய்யா!!" என்றவாறு அக்காக்காரி பஸ் ஏறினாள்.
திமிறலும் அழுகையுமாக அவள் பஸ்ஸிலே ஏற்றப் பட்டதைப் பார்க்க எனக்கும் அழுகை வந்தது.

அக்கிரமம், அ நீதி. சுதந்திரமாகத் துள்ளி விளையாட வேண்டியவைகளை, இரண்டு வார்த்தைகள் வருவதற்குள் அவற்றின் பேச்சு சுதந்திரத்துக்கு தடை போட்டு, கண்டிப்பால் பிணத்து, அந்த தேவதைக் குழந்தைகளின் கற்பனை சிறகுகளைக் கத்தரித்து...சே சே!
*

"வீடிந்தால் மாமா பெண்ணுக்குக் கல்யாணம், இதுகளோடு போராடிக்கொண்டு கல்யாணத்துக்கு திவ்வியமாய்ப் போய் வந்து விட‌லாம்! இதுகளை சீவி முடிச்சு சிஙாரிச்சு அழைத்துப் போய் வருவதற்குள் அவள் பெண்ணுக்கே கல்யாணம் நிச்சயமாகி விடும்! அங்கே இந்த சின்னக் காளி சும்மாயிருக்குமா? அம்மா, அம்மா என்று என்னை அரைத்துத் தள்ளி விடாதா, ஓடி ஆடி உதவி செய்ய விடாது? " என் நண்பி அலுத்துக் கொண்டாள்.

எனக்குத் தாங்கவில்லை. கொதி எண்ணையில் விழுந்த கடுகாய் வெடித்தேன்.

"அம்மா தாயே, அவ்வளவு தூரம் நீ கஷ்டப்பட வேண்டாம். பெரியவளை மட்டும் கூட்டிப் போ. சின்னதை நான் பார்த்துக் கொள்கிறேன்.ஒரு நாள்தானே?

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

ஒரு நாள்தான். ஆனால், அதுவே ஒரு யுகமாகி, யுக முடிவிலே வரும் என்கிறார்களே, அந்தப் ப்ரளயமுமாகி, அதன் சுழலிலே நான் சிக்கி...

உண்மையாகத்தான் கேட்கிறேன், ஒரு மென்மை உருவத்துக்குள்ளே இப்படி ஒரு ராட்சச பலம் எப்படிக் குடி கொண்டிருக்கிறது?

மாடிக்கும் கீழுக்குமாக ஐம்பது முறை ஒடி முழங்கால் முறிந்துவிட்டது. கம்பிக் கிராதிப் பக்கம் போய் எட்டிப் பார்த்து, நல்ல வேளை, அது கீழே விழுந்து கையைக் காலை உடைத்துக் கொள்ளவில்லை. சாக்கலேட், பிச்சி, பப்பூட்டு டப்பாக்களைக் காலியாக்கி, உருட்டி, நசுக்கி, கையையும் (என்) கீறியாகி விட்டது. 'மம்மு' பண்ணுகிறேனென்று சொல்லி, வாண‌லியில் மண்ணைக் கொட்டிக் கிளறிப் பார்த்தாயிற்று. காம்பில்லாது தோட்டத்திலிருந்து பறித்துக் கொண்டு வந்த அத்தனை பூவையும் கசக்கி, பூனைக்குப் போட்டாயிற்று. பௌடர் டின்னைத் தலை கீழாக்கித் தரையெல்லாம் தெளித்து, என் புதுப் புடவையால் துடைத்து முடிந்தது.

வேறு என்ன வேலை பாக்கியிருக்கிறது? பொழுது போனால்தானே? கொஞ்சம் பாடுவோமே என்று ஆரம்பித்து விட்டாள்.
"அம்மா! அம்மா! அம்மா கிட்டே போனும்! அம்ம்ம்ம்ம்மா, அம்மா! நிற்க‌வில்லை அவள் பாட்டு...

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

கல்யாண வீட்டுக்குள்ளே அந்தக் கண்மணிக் குழந்தையை நான் தூக்கிக் கொண்டு ஓடியதைப் பார்க்கவில்லையே நீங்கள்?

அம்மா, என் சம்சாரித் தோழிகளா! கன்னத்தில் போட்டுக் கொண்டு சொல்கிறேன். குழந்தை வளர்ப்பு மகா வித்தையிலே தினம் அந்தரக் கயிறு நடக்கும் உங்களை எவ்வளவு போற்றினாலும் தகும்...

*

இதோ, தீயாய் மலர்ந்து தாழ்ந்த மரக்கிளைகளிலே படர்ந்து செழித்த பூக்களைப் பார்த்தவாறு நடந்து கொண்டிருக்கிறேன்.
திடீரென்ற கலீரொலியில் பள்ளியிலிருந்து திரும்பும் மகவுக் குழாம். நடுவே, பளிச்சென்று கண்கள் மின்ன, கர கரப்பாய்க் கஞ்சி போட்ட உடையில், மிட்டாய்க் கன்னமும் சாக்க‌லேட் சிரிப்புமாய் ஒன்று என்னைப் பார்த்துச் சொல்லுகிறது. "குட் ஈவினிங் டீச்சர்!" நான் எப்போது டீச்சரானேன்?

பக்கத்திலே வரும் பெரியவளின் முகம் தெரிந்த முகமாயிருக்கிறது. "இப்போ எல்லாம் இவ அளுவறதே இல்லை."

"ஆமாம், டீச்சர். இப்போ ஸ்கூல்லே எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே!"

பட்டுப் பூச்சி விர்ரென்று பறந்து வீட்டுக்குள் மறைகிறது.

தெருவிலே, அவள் அன்று புர‌ண்டு அழுத இடத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறேன் நான்...

* * *

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Vintage Vignettes...

Post by Pasupathy »

ஒரு சிறிசு பெரிசுகள் நடுவே நடந்து கொள்வதற்கும், சிறிசுகள் நடுவே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்..... அருமையான பதிவு!

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Vintage Vignettes...

Post by maduraimini »

arasi,
Very nice. The friend who was blaming the mother found out how hard it is to deal with children in one day! Children are a pleasure and a treasure, but can be a pain sometimes! You have described this well. Thanks.

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Vintage Vignettes...

Post by thanjavooran »

அரசி அவர்களே .
அருமையான படைப்பு. ரசித்தேன்.
அது சரி இவர்களை வைத்து வீட்டினில் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்பினால் அங்கு இருக்கும் ஆசிரியைகளின் நிலைமையை சிறிது எண்ணிப்பார்ப்போமா? அவர்களும் மனிதர்கள் தானே.
தஞ்சாவூரான்
17 10 2014

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Thanks, Pasupathy and maduraimini :)
It's not easy for me to go back and think what I was thinking when I wrote this. To see how children's minds and emotions work, is always a fascinating thing to observe. After all musings, you come to the conclusion that you learn from them all the time, though they may address you as 'teacher' as this tot did :)

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

thanjavooran,
Our posts crossed. Thanks for the kind words!
Yes, how about the teachers? Wonder how much of a trouble we were when we were growing up ;)
Bless all mothers (*) and fathers (*)
And gurus (*)

Ramasubramanian M.K
Posts: 1226
Joined: 05 May 2009, 08:33

Re: Vintage Vignettes...

Post by Ramasubramanian M.K »

Arasi: I just happened to "troll" and find these "gems"!!!Rekindles old memories!!! How about writing for "THENDRAL" the magazine out of California so that it would reach a wider audience not necessarily interested in Music??
I need to learn how to type the posts in Tamil.

Any Suggestions for a digital neanderthal(even the neanderthals had they been alive would feel insulted by my comparison with them!!) !!!

May the "Karpanai" torrent pour incessantly!!!!!

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Ramesh,
nanRi!

As one neanderthal to another--For years, I was encouraged by CML and others to learn to post in tamizh, but I chickened out. Only this year, Pasupathy and VKailasam suggested two good web sites and guided me through learning the steps (I still goof up here and there!) I mostly use HiGopi.com.

I used to type my songs in tamizh, but did not know how to post them. I wanted to practice, and prose seemed a better bet for that.

What you see here are my half a century old writings which I wrote every week as a column when I worked for Dinamani as a sub editor :)

Ramasubramanian M.K
Posts: 1226
Joined: 05 May 2009, 08:33

Re: Vintage Vignettes...

Post by Ramasubramanian M.K »

Arasi: While working in Dinamani did you ever have a chance to come in contact with or read his columns--my friend the late A.K.Venkatasubramanian I.A.S.(Tamil nadu cadre).While he wrote mostly about public service he was also an ardent Tamil Scholar--very much liked by the then CM(Hon'ble MK) because of his lucid Tamil notes on Govt files_

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Ramesh,
My Dinamani days were of a short duration and soon after that, I left for England and in those days, you 'really' lived far away from your motherland and family :)
Your friend would have been just as young as we both were then (!). I don't think I remember meeting him. Perhaps he started writing for Dinamani after I left.

Have you explored the websites? Waiting for your 'ranja'kamAna kathaigaL!

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

பெயரில் என்ன இருக்கிறது?
..........................................................

"எது பெயரிட்டழைத்தாலும், ரோஜா ரோஜாதான்"...சொன்னது ஷேக்ஸ்பியரோ?

'ரோஜா ரோஜாதான்' என்றவாறு தண்டவாளத்தில் குதி போடுகிறது வண்டி. விடி வேளை.
சிறிய புகையிரத நிலயத்தைத் தாண்டி, என்னைச் சுமந்து செல்கிறது வண்டி.

பூங்குடியோ? என்னைப் பொறுத்த வரையிலே, அது புளியங்குடி வேப்பங்குடிதான். நம் கற்பனையாளர்களுக்குத்தான் அந்தப் பெயர் இனிக்கிறதே?

Contd a few posts later...
Last edited by arasi on 03 Nov 2014, 02:50, edited 1 time in total.

mahavishnu
Posts: 3341
Joined: 02 Feb 2010, 21:56

Re: Vintage Vignettes...

Post by mahavishnu »

Ramasubramanian M.K wrote:Arasi: While working in Dinamani did you ever have a chance to come in contact with or read his columns--my friend the late A.K.Venkatasubramanian I.A.S.(Tamil nadu cadre).While he wrote mostly about public service he was also an ardent Tamil Scholar--very much liked by the then CM(Hon'ble MK) because of his lucid Tamil notes on Govt files_
Sri MKR: I was just browsing through this section and ran into this post.
The late Sri AKV is my father-in-law! He was also a major Carnatic music lover and quite a historian.

I had no idea that you knew him. What a small world!

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Ramesh,
That's incredible! So, senior Ramesh (MKR) was speaking about your father-in-law!

mahavishnu
Posts: 3341
Joined: 02 Feb 2010, 21:56

Re: Vintage Vignettes...

Post by mahavishnu »

Arasi: Yes. MKR and I spoke offline and many other connections seem to be unraveling.
It is a small world indeed!

Here is a short obituary about my father-in-law that appeared in the Hindu http://www.thehindu.com/news/national/t ... e12996.ece

And a link to his political writings in his (possibly) last book http://www.amazon.in/Katchi-Aatchi-Meet ... 8183683126

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: Vintage Vignettes...

Post by vasanthakokilam »

(acting as remote hands for Arasi)

இல்லையென்றால், இவர்கள் கதைகளிலே அது அடிக்கடித் தலை நீட்டி, பசுமையழகு கொழித்து, இயற்கையன்னையின் எழில் வடிவமாய் மிளிர்ந்து, நெளிந்தோடும் நதியையும் தன்னில் தவழ விட்டுக்கொண்டிருக்குமா? அதன் கரையிலே, எழிலே உருவான கிராமக் கன்னியையும், அவள் கையிலே பொன்னாய் மின்னும் குடத்தையும் படைத்து, சுருள் கேசம்,
காளையுரு, மடிப்புக் கலையா தும்பைப் பூவுடையணிந்த நாகரீக யுவனையும் பட்டணக்கரையிலிருந்து அங்கே வந்து குதிக்கச் செய்யாதிருக்க முடியுமா இவர்களுக்கு? அட, இன்னும் கல்ப காலம் கிராமியக் கதையே எழுதட்டும் இவர்கள், ஆனால், காயாங்குடி, பழங்குடியாகியவற்றில் தங்கள் படைப்புகளை ஏன் உலவ விடக் கூடாதென்றுதான் கேட்கிறேன். அதென்னவோ, கிராமமென்றதுமே, பேனா நுனியில் வ ந்து ஆஜராவது பூங்குடிதான்.

ரோஜா ரோஜாதான், என்று தண்டவாளத்திலே தாளம் போடுகிறது வண்டி...

எனக்குத்தெரிந்து எந்தக் கதையும் இளம் புளிப்பாங்குடியை நிலைக் களமாகக் கொண்டதில்லை. அவர்கள் கதாநாயகிகளைத்தான் பாருங்கள். ஒருத்திக்காவது குப்பச்சி என்றோ, அபீதகுசாம்பாள் என்றோ பெயருண்டா? கண் இடுங்கிய காமாட்சியையும், பீப்பாயையொத்த லதாங்கினியையும், கிருஷ்ண வர்ண ஹேமாங்கினியையும்தான் அங்கே பார்க்க முடியுமா? சந்திர பிம்ப முகாரவிந்தத்திற்கும், துள்ளு கயல் விழிகளுக்கும், எட்பூ நாசிக்கும்,பவள வாய், சிலை மேனி வர்ணனைகளுக்கு அடிமையாகாதிருக்கத்தான் இயலுமா இந்தப் பேனா பிடிப்பவர்களுக்கு?

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: Vintage Vignettes...

Post by vasanthakokilam »

(one more time -- remote hands)

இன்னுமொரு வேடிக்கை. ஊர்களிலும், கதாபாத்திரங்களின் விஷய‌த்திலும் இவர்கள் இப்படியென்றால், தலைப்புக்கும் இவர்கள் படைக்கும் உலகத்திற்கும் நடுவே ஓடும் தங்கள் பெயர் விஷயத்திலும்தான். எழுத்தாள இனத்தின் ஆண் வர்க்கத்தினர் சிலருக்கு ஒரு நினைப்பு. தங்கள் படைப்பு அச்சேறுவதற்கான அஸ்திரம், மெல்லியலாள் ஒருத்தி பெயரில் எழுதுவதே என்பது. உறையை உதறிக் கதையைக் கையிலெடுத்து, பெண்ணொருத்தியின் பெயரைக் கதைத் தலைப்பின் கீழ் கண்டதுமே அதன் மாயப் பொடி கண்களிலே தூவப் பெற்று ஆசிரியப் பெருமகமன் அதை அந்தக் கணமே அச்சு வாகனமேற்றி விடுவார் என்னும் அசையாத நம்பிக்கை!

இதைக் கேளுங்கள். ஏனோ, சுவரடிப் பந்தான என் பல கதைகளை நான் எதிர் பத இனப் பெயரில் எழுதி அனுப்பியிருக்கிறேன்!

பெயரில் என்ன இருக்கிறது என்றானே? அவனுக்கு என் அண்டை வீட்டுக்காரரைத் தெரியுமா? அவருக்கு அதிசயமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அவர் பெயர் வைக்க பட்ட பாடு!

வட மொழி அகராதி, தேவி அஷ்டோத்திரப் புத்தகம், சினிமா நடிகைகள் பட்டியல்களென்று வாரிக் குவித்துக் கொண்டதோடல்லாமல், கண்ணில் படுபவர்களிடமெல்லாம் அவர்களுக்குப் பிடித்த பெயர்களைச் சொல்லச் சொல்லி, ஒரு நூறு பக்க நோட்டுப் புத்தகம் நிறையக் குறித்துக் கொண்டார். பிறகு அவற்றையெல்லாம் சல்லடை போட்டு சலித்து, சீட்டெழுதிக் குலுக்கிப் போட்டதில், அதிப் ப்ரகாசமாய் ஒரு பெயர் சீட்டிலே மின்னி நின்றது.

ஹீரா! ஆனந்தக் களி நிகழ்த்திய நண்பர் கூவினார். "அருமையா அமைஞ்சு போச்சு சார்! அடடா! பிரிட்டிஷ் ராணி மகுடத்தின் கோஹினூர் வைரம் போல், மற்றவரிடை மின்னுவாள் சார், என் குமாரத்தி!"

உண்மையாகவே, ஜொலிக்கும் நெருப்புத்துண்டின் அணைந்த ரூபமாய், வைரத்தின் மூலப் பொருளாய்த் திகழ்ந்த அந்தக் குழந்தையை இன்று எப்படிக் கூப்பிடுகிறார்கள், தெரியுமா? "ஹீ..."

ஹிஹ்ஹிஹ்ஹி, பெயரில் என்ன இருக்கிறது...?

* * *

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Thanks, VKokilam!
After posting the beginning of this essay last evening, for some reason (as if! It was my bungling something up :( ), I tried again this morning and again, no luck. So, asked janitor supreme if he could 'move the furniture' to the hall. Kind as he is, he did.

Hope the continuity is not lost, with first part and these two being separated...

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Vintage Vignettes...

Post by maduraimini »

Arasi-
Your latest skit was wondeful and I will say in one Tamil word- 'Pramadam'! Your comparison of the barrel like Latha (vine) and the dark skinned 'Hemangini (golden bodied) were clever . I remember reading your columns in Dinamani when I was in Madurai and laughing out loud. And it still brings a smile to my face and lightens up my days . Thanks to my aunt (your mother) who saved these, we are having a good time now.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Thanks, m&m! Yes, both our mothers were precious in their own ways... :namaste:

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Vintage Vignettes...

Post by RSR »

@arasi Madam,
சாக்கலேட்டு, பிச்சி, பப்பூட்டு..p-71,72,73,74
Really wonderful.
Now that so many young mothers in ThamizhNaadu
are employed in soul-grinding IT field, it fits exactly
It is never too late to resume your literary career as a pen-portraits writer..... Lamb and Goldsmith have shown the way. and Dickens , later.
And we have to place the portraits in present-day Thamih land to sound real and relevant. I am circulating it. and will give feedback of the IT generation of young mothers soon. ...Society has changed a lot in the last two decades and kalki and devan style has no takers now., but
'Lakshmi', 'anutthama' and 'choodaamaNi' still do.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Vintage Vignettes...

Post by RSR »

@arasi
Madam, Here is one feedback from a young working mother.
ref:சாக்கலேட்டு, பிச்சி, பப்பூட்டு..p-71,72,73,74

Wow !!! It is amazing.. I have been reading this multiple times and completely enjoyed reading those literal Tamil words. I am wondering if only an experienced Tamil lecturer/poet can narrate. I can relate with my current situation :) Beautifully narrated.


Thanks & Regards

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Vintage Vignettes...

Post by arasi »

Thank you, RSR.
Thanks to the young woman who got to read it and found it enjoyable amid her very busy life. It's interesting that she didn't find age-old tamizh expressions a hindrance to quick reading.

Post Reply