Tiruvalangadu Sri. Neelakantan

Remembering musicians of the recent past
Post Reply
parivadini
Posts: 1190
Joined: 22 Oct 2013, 22:44

Tiruvalangadu Sri. Neelakantan

Post by parivadini »

Was shocked to know that the great rasika and the son of Violin Vidwan Thiruvalangadu Sundaresa Iyer - Shri. Neelakantan passed away a few months ago.

His generation were the last to have the skill to transport a listener to a different time through their narrations. I was fortunate to have 'time-travelled' through him to the concerts of TNR, MMI, Alathur and several others.

His knowledge and rasikatva was well acknowleged by great vidwans like Voleti. In fact, Voleti used to equate his rasikatva to that of Hanuman. I wrote a short post on facebook (in Tamil). Posting it here as well.

சென்ற வாரம் ஒரு உற்சாகமான உரையாடலுக்கு இடையில் திருவாலங்காடு சுந்தரேச ஐயரின் மகன் நீலகண்டன் மறைந்துவிட்டார் என்று தெரிய வந்தது.

கடந்த 12 ஆண்டுகளில் பத்து பதினைந்து முறை அவர் வீட்டில் சந்தித்த நினைவுகளும், எத்தனையோ நாட்கள் தொலைபேசியில் பேசியதும் அலையலையாய் செய்தியைக் கேட்டதிலிருந்து வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. ஐந்தாறு முறை ஒரு குறிப்பையாவது எழுதவிட வேண்டும் என்று நினைத்து எழுதத் தொடங்கி, தொடரப்பிடிக்காமல் அழித்துவிட்டேன்.

முதன்முறையாக அவரை சேலையூரில் சந்தித்த சில நாட்கள் கழித்து அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“நீ ஒரு காரியம் பண்ணு. அடுத்த தடவை பெங்களூரில இருந்து மெட்ராஸுக்கு வரும் போது ஸ்டேஷன்ல இறங்கினதும் நேரா நம்பாத்துக்கு வந்துடு.”, என்றார்.

அந்தப் பேச்சில் எந்தவொரு போலித்தனமும் இல்லை.

அவர் கூப்பிட்டதும் அடுத்த வாரமே நான் சென்றுவிடுவேன் என்று நம்பிக்கையாய் ஒலித்தது அவர் குரல்.

அவர் மறைந்த செய்தியைக் கேட்டதிலிருந்து, ‘நிச்சயம் வரேன்னு சொல்லு!’, என்று நெருக்கிய அந்தச் சன்னக் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்து மனத்தை பிழிகிறது.

இந்த அழுத்தம் குறையும் போது, வொலேடியின் ‘ராம தைவமா’-வில் 'ராக ராக’ எனும் போது உருகிக் கரைந்தபடி ‘அடாடாடாடா’ என்று ஸ்ருதியோடு சேர்ந்து சுஸ்வரமாய் ஒலித்து ரசிகானுபவத்தைக் கடத்தும் நீலு மாமாவின் குரல்....

நான் ஏதோ பிதற்றுகிறேன்.

அழுத்தம் குறைந்தால் மட்டுமென்ன? ரதசப்தமியின் போது ராஜரத்தினம் வாசிக்கும் வராளியையும், நன்றுடையான் கோயிலில் மதுரை மணி பாடிய காம்போதியையும், ஆலத்தூரின் ‘காருவேல்புலு’-வையும் அவர் வாழ்ந்தே காட்டுவாரே! அதில் ஒரு சிறு துகளையாவது இழுத்துக் கட்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டா?

”பாடினால் இவரைப் போலப் பாட வேண்டும். வாசித்தால் இவரைப் போல வாசிக்க வேண்டும்.”, என்று சில கலைஞர்களைக் கேட்கும் போது மனத்தில் தோன்றும். அதற்கு மேல் சங்கீதத்தில் என்ன இருக்கிறது என்கிற எண்ணம் கூடத் தோன்றும் - நீலகண்ட வாஜபேயரைப் போன்ற ரசிகரைச் சந்திக்காது இருந்தால். அவரைப் போன்ற ரசிகரைச் சந்தித்திருப்பின், ‘பாடவும் வேண்டாம். வாசிக்கவும் வேண்டாம். இவரைப் போல ரசிக்க மட்டும் முடிந்தால் போதும்.’, என்று தோன்றிவிடும்.

போய் வாருங்கள் மாமா. இனி இராமநாதபுரம் கிருஷ்ணனின் சஹானாவைக் கேட்க மனத்தின் உள்ளறைகளைத் துழாவ வேண்டாம்.

rajeshnat
Posts: 9906
Joined: 03 Feb 2010, 08:04

Re: Tiruvalangadu Sri. Neelakantan

Post by rajeshnat »

How old was shri neelakantan when he passed away

parivadini
Posts: 1190
Joined: 22 Oct 2013, 22:44

Re: Tiruvalangadu Sri. Neelakantan

Post by parivadini »

He was 89.

Post Reply