வாலறிவன் என்றாலென்ன

Post Reply
vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

வாலறிவன் என்றாலென்ன

Post by vgovindan »

கற்றதனால் ஆயபயனென்கொல், வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்.

இந்த செய்யுளிலே வரும் 'வாலறிவன்' என்ற சொல்லுக்குப் பொருளென்ன?
கருத்துக்களை வரவேற்கின்றேன்.
என்னுடைய கருத்துக்களை பிறகு கூறுகின்றேன்.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: வாலறிவன் என்றாலென்ன

Post by Ponbhairavi »

வாலறிவன் ; மெய் உணர்வினை உடையவன் என்கிறது பரிமேலழகர் உரை
பல்கலைக்கழக பேரகராதிப் படி தூய்மை நன்மை பெருமை மிகுதியான என்று கூறு கிறது .
ஆனால் கடவுளின் அறிவிற்கு தூய என்று certificate கொடுப்பதற்கு நம் யார் ?
சற்று critical ஆக பார்த்தால் சேட்டை செய்பவன் mischievous என்ற பொருளும் இருக்கிறது.
அலகிலா விளையாட்டு உடையான் என்ற மஹாகவி யின் கூற்று பொருத்தமாக இருக்கிறது.
இன்னொரு சிந்தனை ;வால் இருப்பதை மிருகங்கள் உணர முடியும் காண முடியாது. இறைவனை அறிவது என்பது உணரக்கூடியாது,காண முடியாதது என்று ம் கொள்ளலாம் போல் தோன்றுகின்றது.

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: வாலறிவன் என்றாலென்ன

Post by vgovindan »

பொன் பைரவி அவர்களே,
நன்றி.
என்னுடைய கருத்து.
அறிவன் என்ற சொல்லைப்பற்றி விளக்கம் தேவையில்லை.
ஆனால் வால் என்ற சொல்தான் புதுமையாக உள்ளது.

வடமொழியில் 'புச்சம்' என்று ஒரு சொல் உள்ளது. அது 'வால்' அல்லது 'கடைப்பகுதி' என்று பொருள்படும். ஆனால் இந்த 'புச்சம்' என்ற சொல் வேதாந்தத்தில் வேறுவிதமாக கூறப்பட்டுள்ளது. பரம்பொருளினை அறிவதற்கு 'நேதி', 'நேதி', 'நேதி' - இஃதல்ல, இஃதல்ல, இஃதல்லவென்று மும்மூன்றாக காணப்படுவனவற்றை - குணங்கள், நிலைகள் ஆகியவை - நிராகரித்தபின் எஞ்சி நிற்கும் பரம்பொருளுக்கு 'புச்சம்' என்று பெயர். இதனை 'பிரம்ம புச்ச'மென்றும் 'புச்சபிரம்ம'மென்றும் வழங்குவர். இதற்கான ஆதாரம் தைத்திரீய உபநிடதத்தில் காணப்படுகின்றது.

காஞ்சி மகான் இயற்றிய 'துர்கா பஞ்சரத்ன'த்திலும் 'பிரம்ம புச்ச' என்று வருகின்றது.

இதுபோல் 'உச்சிஷ்ட' என்ற சொல்லும் அந்த பிரம்மத்தினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. 'உச்சிஷ்ட' என்பதற்கு பொதுவாக 'எச்சில்' அல்லது 'மிகுதி' என்று கூறுவார்கள். உச்சிஷ்ட கணபதியென்று வழிபாடு உண்டு.

தீக்ஷிதர் கிருதிகளில் 'உச்சிஷ்ட கணபதி'யென்று ஒரு கீர்த்தனையும், 'நரசிம்ம ஆகச்ச' என்ற கீர்த்தனையில் 'பிரம்ம புச்ச' என்றும் வருகின்றது.

எனவே 'வாலறிவன்' என்ற சொல், அந்த பரம்பொளினை அறிந்தவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.

http://www.kamakoti.org/kamakoti/articl ... nishad.pdf

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: வாலறிவன் என்றாலென்ன

Post by sridhar_ranga »

vAlaRivan2 God, as pure intelligence

என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் காணப்படுகிறது.

vAl 01 1. youth, tenderness; 2. purity; 3. whiteness; 4. goodness; 5. greatness; 6. abundance

எனில், வால் எனும் சொல் இங்கு purity என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளதாகக் கருதலாமா?

மெய்யுணர்வு உடையவன் என்று பரிமேலழகர் கூறுவதும் pure intelligence (personified) உடன் ஒத்துப்போவதாகவே தோன்றுகிறது.

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: வாலறிவன் என்றாலென்ன

Post by vgovindan »

ஸ்ரீதர்,
அகராதியில் கூறப்பட்ட பொருள் எதுவும் 'அறிவன்' என்று சொல்லுடன் இணைந்து வரவில்லை என்பது எனது கருத்து.

பரிமேலழகரின் விளக்கம் சரிதான், ஆனால் ஆதாரமில்லை.

pattamaa
Posts: 749
Joined: 22 Nov 2009, 10:24

Re: வாலறிவன் என்றாலென்ன

Post by pattamaa »

valarivan = sarvagyan ; the one who knows everything/hidden things... as we say, paramacharya is sarvagyan, valarivar...

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: வாலறிவன் என்றாலென்ன

Post by vgovindan »

pattamma,
It is nice that we take overall meaning. But what does 'vAl' mean when 'aRivan' is well-known as 'knower'?
Is it because people gloss over the true meaning as Tamil Pandits do not want to accept that tiruvaLLuvar derived this word from Sanskrit - puccha?

sankark
Posts: 2393
Joined: 16 Dec 2008, 09:10

Re: வாலறிவன் என்றாலென்ன

Post by sankark »

it could simply also mean pure knowledge/consciousness (arivan can either mean one who knows or one who is knowledge). so valarivan could be parabrahmam in vEdA terms

Post Reply