Kumbha mela....

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Kumbha mela....

Post by venkatakailasam »

பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா நிருபர் ஒருவர் கும்பமேளா பற்றி ஓர் அவதூறுக்கட்டுரை எழுதினார். கும்பமேளா என்பது இந்தியக்குடும்பங்கள் தங்கள் வயது முதிர்ந்த பெற்றோரை கொண்டு வந்து கைவிட்டு விட்டுச் செல்லும் ஒரு விழா என்பது அவரது புரிதல். அவ்வாறு கைவிடப்படும் கிழவர்கிழவிகள் பிச்சை எடுத்து கங்கை கரையில் கூட்டம் கூட்டமாகச் சாகிறார்கள் என்று அவர் எழுதினார். அந்தக் கட்டுரை இந்திய ஆங்கில இதழ்களில் வெளிவந்தது. குமுதமும் அதை வெளியிட்டது.


இத்தகைய ஓர் அவதூறு வேறு எந்த சமூகத்தைப் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் ஆதாரம் என்ன என்று கேட்டிருப்பார்கள். குடைந்து எடுத்திருப்பார்கள். இந்தியா பற்றி ஏதும் சொல்லலாமே. நம் ஆங்கில ஊடகங்களே இந்த மக்களை மனசாட்சியற்ற குரூரமான மிருகங்கள் என்றுதானே நமக்குச் சொல்கின்றன. இந்த எளிய ஏழை மக்கள் நம்மூர் படித்த முற்போக்கினருக்கு அபபடி என்னதான் மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டார்கள் என்றுதான் புரியவில்லை.


ஆனால் இலஸ்டிரேட்டட் வீக்லி அந்த அவதூறை விசாரித்தது. ஆதாரம் கேட்டது. அமெரிக்க இதழ் அது அந்த நிருபரின் தனிப்பட்ட கருத்து என்று ஒதுங்கிக்கொண்டது. அந்த நிருபர் அதை அவர் ’கேள்வி’ப்பட்டதாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான், ஆனால் இன்றும் அந்த விஷயத்தை சொல்லிக்கொண்டிருப்பவர்காள் உண்டு. நான் கிளம்பும்போதுகூட ஒரு நண்பர் சொன்னார்.

Read at http://www.jeyamohan.in/?p=6793

read கும்பமேளா பயணம் 1 to 8 at the above link by Jayamohan

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kumbha mela....

Post by arasi »

நன்றி, விகே.

கும்ப மேளா பற்றிய சுட்டிகள் படிக்க முடியவில்லையே? 'எரர்' எனக் காட்டுகின்றனவே?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kumbha mela....

Post by venkatakailasam »

It is opening..

Post Reply