Tamil and Veda Blog

Post Reply
MaheshS
Posts: 1186
Joined: 02 Feb 2010, 22:36

Tamil and Veda Blog

Post by MaheshS »

Hi All,

This is a blog by my uncle Sri S Swaminathan who resides in London. He used to work for Dinamani [Madurai], BBC World Service as a news presenter. He is an avid researcher in the field of Tamil and Hindu history. You can follow the blog from the following link.

Tamil and Vedas Blog

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tamil and Veda Blog

Post by cmlover »

Thanks
Do encourage him to participate in this forum and post his research findings to be discussed by our membership.

thanjavooran
Posts: 2990
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tamil and Veda Blog

Post by thanjavooran »

திரு மகேஷ்,
இந்த சுட்டியை காணும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. நன்றி. மிக அருமை.
எனக்கு நண்பரின் மூலம் கிடைத்த தகவலை இந்த தொகிப்பின் மூலம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர ​



கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.
பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்க்கா நுஸாரிணாம்
ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம்.
கரிகாலன் இதில் தன்னை 'அரிகாலனாகிய கரிகாலன்' என்கிறான். 'அரி' என்றால் விரோதி என்று அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற
வீராதி வீரன்தான் என்று அரிகாலன் சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்?. வேத சாஸ்திர மார்கத்தை அநுசரிக்காதவர்கள் அனைவரும்தான்
அவனுடைய விரோதிகள். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.


​​பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார ​
வளர்த்தவர்கள் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு. "பல்யாகசாலை முதுகுடுமிப்
பெருவழுதி" என்றே ஒரு சங்ககால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. வழுதி என்றால் பாண்டியராஜா. பிற்காலத்திலும் கல்வெட்டுகளில் எங்கு பார்த்தாலும்
தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத இறையிலி' யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக
வழங்கப்பட்ட பல கிராமங்கள் சதுர் வேதி மங்கலம் என்ற பெயரில் உள்ளன.
வெளிதேசத்து விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் பாஷையில் வார்த்தையிருப்பதில்லை. நம் தேசத்துக்கு வந்த ரேடியோ,
டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை
உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.
வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிறமாதிரி தமிழ் நாட்டின் ஆதி நாகரீகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வந்தவை என்றால், யாகம், வேதம் முதலிய
பதங்களுக்குப் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே வேதம் என்பது மறை என்றும், யாகம்
என்பது வேள்வி என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை சமஸ்கிருத பண்டிதர்கள் - தமிழ் புலவர்கள்
இருவருமே ஒப்புக் கொள்வார்கள். வேட்டலிலிருந்து வேள்வி வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம், வேரைப் போலவே வெளியில்
தெரியாமல், அதாவது எல்லாரிடமும், புழக்கத்துக்கு வராமல், அதை ரக்ஷிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்து இருக்க​
​வேண்டும் ​
என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தைகள்தான் மறை. வைதிகப் பண்பாடும்,
​ ​
யக்ஞ அநுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப் போயிருந்தாலொழிய,
அந்த நாகரீகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாக்கியிருக்க முடியாது.

வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறைத் தத்துவமாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே கற்க வேண்டும் என்பதால் தமிழில்
எழுதாக்​ கிளவி ​என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியிலேயே பாடம் பண்ணுவதால்தான், வேதத்துக்கு சமஸ்கிருதத்திலும் "ச்ருதி" என்று பேர்.
மறை என்பதைப் போல் வேத ரக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கிற நேர் வார்த்தை ஸமஸ்கிருதத்திலேயே இல்லை.
வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு ஷடங்கங்கள் என்று பெயர். அதிலிருந்துதான் மத சம்மந்தமான எந்தக் காரியத்தையும் சடங்கு என்று சொல்கிற வழக்கம்
இருந்து வந்திருக்கிறது. வைதிக அநுசரணையை தமிழ்நாட்டின் தொன்று தொட்ட பழக்கம் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.
தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம்​ *​
​. வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம்.
அப்புறம்தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில்
திருவள்ளுவரும் சொல்கிறார்.
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஒம்பல் தலை.
பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி,
அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள்
​​ ​​இருப்பதாக வைதிக நம்பிக்கையைலேயே, மூதாதைகளைத் தென்புலத்தார் என்கிறார்.
​​
இந்த ஐந்து பேருக்கும் பாகம் பிரித்துத் தருவது நாமாகச் செய்வது. இது தவிர ராஜ ஆக்ஞைக்காக விளைச்சளில் ஆறில் ஒரு பங்கு வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வரி போக மீதமுள்ளதை மேலே சொன்னபடி ஐந்தாகப் பிரிக்க வேண்டும். தனக்கு என்று அதில் ஒரு பங்குதான் வைத்துக் கொள்ளப்படுகிறது. பித்ருக்களை
உத்தேசித்துக் சிலருக்கு அன்னமாக ஒரு பங்கு போகும். கோயில்களுக்கு ஒரு பங்கு போதும். விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போகும். வசதியற்ற விருந்தாளிகளுக்கு
ஒரு பங்கு போதும். வசதியற்ற உறவுக்காரர்களுக்கு ஒரு பங்கு போகும். பாக்கி ஒரு பங்குதான் ஒருத்தனின் சொந்தக் குடும்பத்துக்கு. வைதிகமும், வள்ளுவரும்
விதிக்கிற இந்தத் தர்மத்தைவிடப் பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோ பகாரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற
தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். திருவள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நூல்களும் சரி,
மறையின் மறையின் மரபில் வந்தவைதான்.
​​திருவள்ளுவர் வைதிகத்தைத்தான் சொன்னார். ​
​ஔவையார் ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒரு நாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது
என்கிறாள். ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தாலும், வேதியா! வேதகீதா! சந்தோகன் காண், பெனழியன் காண் என்றெல்லாம்
வேதங்களையும் அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவானைத் துதிக்கிறார்கள். க்ஷேத்திர வர்ணனைகளிலெல்லாம், ஊர் முழுக்க ஹோமப் புகை
சூழ்ந்திருக்கிறது. வேத சப்தம் ஒரே கோஷமாகப் பரவியிருந்தது என்று அவர்கள் சொல்லாமலிருப்பதில்லை.
இந்தத் தமிழ் நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்ஜ நஞ்சமில்லை. நிலமாகவும் பணமாகவும்
வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.
இப்போதும்கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்ராயங்கள் கொஞ்சம் தலைதூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ்
ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவில்லை என்பதுதான் என் அபிப்பிராயம்.

​*(GS : திருக்குறளின் மீது பெரும் பற்று உடையவரும், நம்மில் பலருக்கும் தெரிந்தவருமான ஸ்ரீ ஓங்காரநந்த ஸ்வாமிகளும் இதே ​
​கருத்தை உடையவர்.
திருக்குறளை ​
​தலையானதொரு வாழ்வியல் நூலாகக் கொண்டு அதற்கு ​
​அறவழியில் ​
​விளக்கம் சொல்பவர் என்பது இங்கு நோக்கத் தக்கது) ​

Post Reply