Annadhana Sivan

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Annadhana Sivan

Post by venkatakailasam »

சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”

கோயில் திருவிழாக்களில், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள், கூட்டம் கூட்டமாகப் பங்கேற்கிறார் கள். பத்து நாட்கள் நடைபெறும் உத்ஸவங்களின்போது, உண்ண உணவும் தங்குவதற்கு வசதியான இடமும் ஏற்பாடு செய்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லாத வர்களும்கூட, கவலைப்படாமல் வந்து குவிகிறார்கள்! ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து நீர்மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் என்று விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்ஸவத்தின்போது, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, இப்போது பாதாம் பால், ரோஸ் மில்க் என்று ஏகதடபுடல். ஆங்காங்கே அன்னதானம் வேறு! இதற்கெல்லாம் முன் னோடியாய் இருந்த ஒருவரை இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் (சென்ற சிவராத்திரியின் போது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்ததாக அமர்க்களப் பட்டதே, அதே தேப்பெருமாநல்லூர்தான்!) 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியவர் இராமசுவாமி. இவர் நடத்திய அன்ன தானங்களினாலேயே இவருக்கு `அன்னதான சிவன்‘ என்னும் புகழ்ப் பெயர் உண்டாயிற்று!


காஞ்சி மடம் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாட்களில், மகாஸ்வாமிகளிடம் அன்புடனும், நெருக்கத்துடனும், ஏன்? உரிமையுடனும் பழகிய பெருமகனார், அன்னதான சிவன்! தமது வாழ்க்கையை காஞ்சி மடத்துடன் பிணைத்துக் கொண்டவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மிராசுதார் கயத்தூர் சீனிவாச ஐயர்தான் அன்னதான சிவனுக்கு இன்ஸ்பிரேஷன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயில் களில் நடைபெறும் உத்ஸவங்களில் எல்லாம், சீனிவாசய்யர் செய்த அன்னதான வைபவங்களில் அவருக்கு உதவியாக, தம் சிறு வயதில் ஓடியாடி வேலை செய்தார் சிவன். பின்னாளில் தம் சொத்து, சுகம் அனைத்தையும் இதற்காகவே அர்ப்பணித்து விட்டார். பிரபலமான திருவிழாக்களுக்காகக் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு படைப்பதைத் தம் வாழ்க்கையின் `மிஷன்’ என்று ஆக்கிக் கொண்டார் சிவன்.

திருச்செங்காட்டங்குடியின் அமுதுபடித் திருவிழா, அம்பர் மாகாணத்தின் சோமயாக விழா, காரைக்கால் மாம்பழத் திருவிழா, காவிரிப்பட்டணத்து ஆடி அமாவாசை, மாயூரம் துலா (ஐப்பசி) மாத உத்ஸவம், திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவார விழா, நாச்சியார் கோயில் தெப்பம், திருவிடை மருதூர் தைப்பூசம், கும்பகோணத்து மாசி மகம், எட்டுக் குடி பங்குனி உத்திரம் என்று பெருந்திரளான மக்கள் கூடும் உத்ஸவங்களில் எல்லாம் அன்னதான சிவன் தன் தொண்டர் படையோடு களமிறங்கி விடுவார்!

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உணவருந்தும் இடம் என்றாலும், சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் எல்லாம் படுசுத்தமாக இருக்குமாம்! ஏழைகள் தானே அன்னதானத்திற்கு மொய்க்கிறார்கள் என்கிற அலட்சிய பாவத்தில் சுத்தமும், சுகாதாரமும் இரண்டாம்பட்சமாகி விடும் இந்த நாட்களில், பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்திச் சென்ற அந்த நாளில் சிரத்தையோடு செயல்பட்டார் சிவன்!

இலை போட்டுப் பரிமாறும் இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவே துடைப்பம் வண்டி வண்டியாக வந்து இறங்கும் என்றால், உணவுப் பண்டங்களுக்குக் கேட்கவா வேண்டும்? ஆயிரக்கணக்கில் அரிசி, பருப்பு மூட்டைகள், மளிகைச் சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைக்கட்டுகள்; அடுப்பு எரிக்க விறகு நூறு வண்டிகளில், ஊறுகாய்க்கான நெல்லிக்காய் மட்டும் இரண்டு மூன்று வண்டிகளில்! மலைப்பாக இருக்கிறதல்லவா?

அத்தனை பேருக்கு வேண்டிய தயி ருக்கு என்ன செய்தார்களாம் தெரியுமா? அன்னதானம் நடைபெறும் ஊரில் சில வாரங்களுக்கு முன்னதாகவே தயிரை சேகரிக்கத் தொடங்கி, கிடைக்கும் தயிரை எல்லாம் மரப் பீப்பாய்களில் நிரப்பி மூடி, மெழுகினால் அடைத்து சீல் வைத்து, அந்த ஊர்க் குளத்தில் உருட்டி விடுவார்களாம்! அன்னதானம் நடைபெறும் நாளில் பீப்பாய்களைத் திறந்தால் நேற்றுதான் தோய்த்த தயிர் போல், புளிப்பில்லாமல் சுவையாக இருக்குமாம்! ஆமாம்! திருக்குளங்கள்தான் அந்த நாளின் `கோல்ட் ஸ்டோரேஜ்.’

ஒரு ஊரில் அன்னதானம் என்றால், அதற்கு முன் நாள் இரவு வரை அதற்கான சுவடே தெரியாதாம். இரவோடு இரவாகப் பண்டங்கள் வந்து இறங்கி, பங்கீடு ஆகி, அதிகாலையில் அடுப்பு மூட்டி உலையேற்றினால், பசி வேளைக்கு அறுசுவை உணவு தயார். ஆளுயர அண்டாக்களில் சாம்பார், ரசம், பாயசம்! கொதிக்கும் போது உண்டாகும் வாசனையை வைத்தே உப்பு, புளி, காரம், வியஞ்சனங்கள் போதுமா போதாதா என்று தீர்மானம் செய்வார்களாம். முறத்தில் உப்பை வைத்துக் கொண்டு சிப்பந்தி ஒருவன் நிற்க, ருசிக்கேற்ற வாசனை வரும் வரை உப்பைப் போடுவது வழக்கமாம். முறம் கணக்கில் கொத்துமல்லி விதையை அரைத்து ரசத்தில் சேர்ப்பார்களாம்!

மூங்கில் பரண் கட்டி, ஏணி வைத்து ஏறி, மரச்சட்டத்தில் ராட்டினம் கட்டி, சிறு வாளிகளில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போலக் கொதிக்கும் குழம்பு, ரசத்தை மொண்டு பரிமாறுவார்களாம். ஆறிப் போன சாதமாக இல்லாமல், அதே சமயத்தில் இலை போட்டு விட்டு மக்களைக் காக்க வைக்காமல், சுடச்சுட அரிசிச் சாதம் வடித்துப் போடத் தனி டெக்னிக் வைத்திருந்தாராம் அன்னதான சிவன்!

அன்னதானம் முடிந்ததும், “இந்த இடத்திலா அத்தனையும் நடந்தது!” என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வகையில் இடத்தைச் சுத்தம் செய்யும் அள வுக்கு பெர்ஃபெக்ட் எக்ஸிகியூஷன்! இத்தனையிலும் அன்னதான சிவனது ஆகாரம் என்னவோ நாலு கவளம் பழையதுதான்!.

த.கி. நீலகண்டன் (நன்றி – கல்கி வார இதழ்)

courtesy...http://koottanchoru.wordpress.com/2010/ ... %E0%AE%B3/

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Annadhana Sivan

Post by venkatakailasam »

Here is another Annadhana Sivan..

Image

இடம் திருப்பூர் ரயில்வே மேம்பாலம், இருட்டு விழுந்து விட்ட மாலை நேரம். மேம்பாலத்தின் ஏற்றம் துவங்கி சற்று ஏறியும் விட்ட மேட்டில் இந்த சகோதரர் கொஞ்சம் கலங்கிய முகத்துடன் தன்னுடைய மூன்று சக்கர வண்டியை மேட்டில் தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதாய்த் தோன்றியது. என்னுடைய வண்டியை ஓரம் கட்டி விட்டு என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.
“வண்டியின் சங்கிலி கழன்று விட்டது வண்டி ஓட்ட முடியாமல் சரிவில் இழுக்கிறது, கால் மணி நேரமாக சிரமப்பட்டு நிற்கிறேன், நீங்களாவது வந்தீங்களே கொஞ்சம் சங்கிலியை மாட்டித் தந்தா நல்லா இருக்கும்” என்றார்.

சங்கிலியை மாட்டிக் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் அது ஒரு பழைய டிவிஎஸ் 50 மூன்று சக்கர வண்டியாக மாற்றி ஓட்டிக்கொண்டிருக்கிறார், இருக்கைக்கு நுரைபஞ்சும், உறையும் கூட மாற்ற முடியாமல் ஒட்டப் பயன்படும் செல்லொ டேப்புகள் கொண்டு ஒட்டியிருக்கிறார். பின்னால் வைத்துக் கட்டப்பட்ட பிளாஸ்டிக் கூடையில் சாப்பாட்டுப் பொட்டலங்கள். சரி வறுமையிலுள்ள உணவு விற்கும் சிறு வியாபாரி என்று நினைத்துக் கொண்டு இந்த மாதிரியான இரண்டும் கெட்டான் நேரத்தில் வியாபரத்திற்கு கிளம்பினால் உங்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும் என்று நான் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் சவுக்கால் அடித்தது.

தம்பி நான் இதை விக்கிறதுக்காகக் கொண்டு வரல. எனக்கு கைல தொழிலும், குடும்பமும் இருக்கு. ஆனா குடும்பமும் இல்லாம, இருக்க வீடும் இல்லாம அதனாலயே வருமானமும் தேடிக்க முடியாம ரோட்டில கிடந்து சிரமப்படற பல பேர் நிறைய நாள் சோத்துக்கு என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சுப் பாத்து அவங்களுக்கு என்னால முடிஞ்சது இந்தக் கூடை நிரம்பற அளவுக்கு சோறாக்கி அவங்க இருக்கிற இடம் தேடிப் போய் அவங்க பசியாத்திக்கிட்டு இருக்கேன்.

இதைக் கேட்ட பிறகு அவரோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்கக் கூட என் மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை.
அவரோடு பேசிய அந்த நிமிடம் மண்ணையும் நீரையும் கொன்று அதில் காசு வளர்க்கும் இந்தத் திருப்பூரில் கூட மனிதம் வளர்க்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ற கேள்வியையும், நான் இருக்கும் போது கூட என் ஊரில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்விக்கான விடையையும் அது தந்தது.

அவரைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பி பல முறை முயன்ற பிறகு இந்தப் படம் கிடைத்தது. வழக்கம் போல எங்களைக் கடந்து விரைந்து, விரைந்து சென்று கொண்டிருந்த வாகனங்களின் ஒளிச்சிதறலால் இவரை இந்த அளவிற்கு மட்டுமே என் செல்பேசியால் படம் எடுக்க முடிந்தது……

எதுவுமே பேசத் தோன்றாமல் கொஞ்ச நேரம் அவருடன் நின்று கொண்டிருக்க மட்டுமே முடிந்தது கண்ணில் கொஞ்சம் நீருடன்…….

Ramanathan Panchapakesan via----Raju Mariappan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Annadhana Sivan

Post by venkatakailasam »

Image

இது போன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். “ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்" படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக் கொடுக்குறவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார். ” அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள். விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி. “அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க,ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பை விட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன். இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்கஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது” என அமைதியாய் கூறுகிறார் பாபுஜி .

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Annadhana Sivan

Post by venkatakailasam »

Image

இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்..

அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது..

இவர் சரியாக ஒரு நாளைக்கு ...பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த
பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன்

# ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும் இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்...

Shared from https://www.facebook.com/Tamilnews7

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Annadhana Sivan

Post by venkatakailasam »

Image

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்
இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச்
சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும்
காசு கேட்பதில்லை. பணத்துக்குப்
பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா? விசாரித்தபோதுதான்
மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு’ (100 பேர்
வரை), ‘பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100
மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்
மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் கேட்டால்,
“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.
ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர்
பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்
அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள்
பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.
மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும்
அவர்கள் ஜோலார்பேட்டையில
ேயே சுற்றித்திரிகின்றனர்.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத
வருக்குக்கூட
உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது”
என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்
வீடுகளில் கவனிக்க முடியாத
நிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான
உணவை அவர்களது குடும்பத்தினர்
வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின்
மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில்
இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை. வழக்க
மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக
சமைக்கிறேன். 5
கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்
மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய்
இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்
தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாக
இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
‘வாடி நிற்கும்' நாகராஜ்.

Post Reply