Hilarity in kutcheris ( In Tamil Script )

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by venkatakailasam »

As these posts are from a Tamil daily..translation has not been attempted...

( Source link: http://dinamani.com/music/article1389840.ece . )

புல்லாங்குழல்' பல்லடம் சஞ்சீவ ராவின் குரு சரப சாஸ்திரி என்பவர். மிகப் பெரிய வித்வான். புல்லாங்குழலுக்கு முன்னோடி அவர்தான். மூன்று வயதிலேயே அவருக்குக் கண் பார்வை போய்விட்டது. ஆனால் இயற்கையாகவே அவருக்குப் புல்லாங்குழல் இசைப்பதில் இருந்த ஞானம் அபாரமானது. 28 வயதில் காலமாகிவிட்டார், பாவம்.

திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் அந்த நாளில் பிரபலமான ஹரிகதை வித்வான். அவரது குழுவில் சரப சாஸ்திரியும் "ஃப்ளூட்' வாசித்துக் கொண்டிருந்தார். இவரது திறமையில் மயங்கிய பஞ்சாபகேச சாஸ்திரிகள் ஒரு நாள் "கஜேந்திர மோட்சம்' கதை சொல்லும்போது சொன்னாராம்-

""முதலை தனது காலைக் கவ்வியதும் கஜேந்திரன் என்கிற அந்த யானை ஆயிரம் முறை கதறியது. யாரும் வரவில்லை. அருகிலிருந்த ஒரு தாமரைப் பூவைப் பறித்தெடுத்து "ஆதிமூலமே' என்று அலறியபோது, பாற்கடலில் சயனித்திருந்த மகாவிஷ்ணுவால் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை. கையில் இருப்பதை எல்லாம் ஒவ்வொருவரிடம் கொடுத்துவிட்டு கருடன் மீதேறி கஜேந்திரனைக் காப்பாற்றப் பறந்து வந்து விட்டார். அப்போது, கிருஷ்ணாவதாரத்தில் அவர் உபயோகித்த புல்லாங்குழல் கண்ணில் பட்டது. அதை என்ன செய்தார் தெரியுமோ? நம்ம சரபனிடம் கொடுத்துவிட்டார் போலிருக்கிறது...!''

இதைக் கேட்டதும்÷கூடியிருந்தவர்கள் கரகோஷித்தனர்.

=====================

காரைக்குடி சகோதரர்களின் வீணை என்றால் அந்த நாளில் பிரசித்தம். வீணையில் "காரைக்குடி' பாணி என்றாலே தனி மரியாதை. காரைக்குடி சகோதரர்கள் சாம்பசிவ அய்யரும், சுப்பராம அய்யரும் ஒரு முறை ராமநாதபுரம் சமஸ்தானத்தில் வீணைக் கச்சேரி செய்வதற்காகப் போயிருந்தார்கள். புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளைதான் பக்க வாத்தியம். "சாவேரி' ராகத்தில் "ராமபாண த்ராண' கீர்த்தனையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். சேதுபதி ராஜா ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து பிரிட்டிஷ் ரெசிடென்டிடமிருந்து ஒரு முக்கியமான தகவல் கொண்டு வந்தார் ஒரு ஏஜென்ட். அந்த நாளில் பிரிட்டிஷாரின் பெயரைச் சொன்னால் சமஸ்தானங்கள் எழுந்து நிற்பார்கள். அந்த அளவுக்கு பயம். பிரிட்டிஷ் ரெசிடென்டை பகைத்துக் கொண்டால் ராஜ்யமே போய்விடும்.

காரைக்குடி சகோதரர்களின் "சாவேரி'யில் சொக்கிப் போயிருந்த சேதுபதி ராஜா, "ராஜ்யம் போனால் போகட்டும், இந்த சாவேரியைத் தவறவிட்டு விடக்கூடாது' என்று வீணை வாசிப்பு முடியும்வரைபிரிட்டிஷ் ரெசிடென்டின் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவில்லையாம்.

=====================

திருவிதாங்கூர் மகாராஜாவின் அழைப்பின் பேரில் திருவனந்தபுரம் சென்றிருந்தார் வீணை தனம்மாள். அப்போது ராமச்சந்திர பாகவதர் என்பவர்தான் திருவிதாங்கூர் சமஸ்தான வித்வான். அவரது வீட்டிலேயே வீணை தனம்மாள் தங்க ஏற்பாடாகி இருந்தது.

சிரமபரிகாரம் எல்லாம் முடித்து வீணை தனம்மாளிடம் ""நான் போய் பத்மநாப சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்து விடுகிறேன்'' என்று கிளம்பினார் ராமசந்திர பாகவதர். பாகவதர் கிளம்பியதும், தனம்மாள் வீணையை எடுத்து மீட்டி, "பைரவி' வாசிக்கத் தொடங்கினாராம்.

வீணை மீட்டிய சத்தம் கேட்டதும் வாசல்படியில் நின்றவர்தான் ராமசந்திர அய்யர். "பைரவி' முடியும் வரை அசையவில்லை.

""என்ன கோயிலுக்குப் போய் பத்மநாப சுவாமி தரிசனத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டு இன்னும் போகாமல் இருக்கிறீர்களே'' என்றாராம் தனம்மாள்.

""உங்க "பைரவி' கேட்க அவரே இங்கு வந்திருப்பார். நான் போய் என்ன பிரயோஜனம் என்று நின்றுவிட்டேன்'' என்றாராம் ராமசந்திர பாகவதர்.

=====================

"கோட்டு வாத்தியம்' சகாராம் ராவ் என்றொரு மகா வித்வான் திருவிடைமருதூரில் இருந்தார். மகாராஜபுரம் விஸ்வநாதய்யருக்கு முன்னால் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யருக்கு இவரிடம்தான் சிட்சை. அவருக்குத் தன்மானம் ரொம்ப அதிகம். அவரிடம் பேசவே பயப்படுவார்கள்.

ஒரு பெரிய மிராசுதார் வீட்டில் கல்யாணம். கச்சேரி வாசிக்க "சகாராம் ராவை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அவருக்குப் பசிக்க ஆரம்பித்தது. தனது சகோதரருடன் சமையல் கட்டில் நுழைந்து "சமையல் ஆயிடுத்தா?' என்று கேட்டிருக்கிறார். அங்கிருந்த சமையல்காரருக்கு இவர் யாரென்று தெரியாது. "என்ன பெரிய அவரசம்? கொஞ்சம் பொறுத்து நிதானமா சாப்பிடக் கூடாதா?' என்று எரிந்து விழுந்திருக்கிறார் சமையல்காரர்.

சகாராம் ராவுக்குக் கோபம் வர இது போதாதா? கோட்டு வாத்தியத்தை உறையில் போட்டு எடுத்துக் கொண்டு, மாட்டு வண்டி பிடித்து ரயிலடிக்குப் போய்விட்டார். விஷயம் கேள்விப்பட்டு மிராசுதாரும், மாப்பிள்ளையின் தந்தையும் ரயிலடிக்கே வந்து மன்னிப்புக் கேட்டு அவரை அழைத்துச் சென்றார்களாம். வித்வான்களுக்கு அந்த அளவுக்கு மரியாதை தந்தார்கள்.

=====================

சகாராம் ராவ் பற்றி இன்னொரு சம்பவம். ஒரு கச்சேரியில் இவரது வாசிப்பைக் கேட்டுவிட்டு, தனது பெண் கல்யாணத்துக்கு இவரது கோட்டு வாத்திய கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர். அப்பெல்லாம், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் என்றால் பெரிய பதவி. எல்லோரும் பயப்படுவார்கள்.

கல்யாணக் கச்சேரியில் இவரது வாசிப்பு, தான் முன்பு கேட்க கச்சேரியைவிட சுமாராகத்தான் இருந்தது என்பது சர்க்கிளின் அபிப்ராயம். அதை சகாராம் ராவின் முகத்துக்கு நேரே சொல்லியும்விட்டார் அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.

சகாராம் ராவ் சொன்னாராம்- "நாம் வேண்டுமானால் உங்களுடைய காக்கி உடுப்பையும் பதவியையும் பார்த்து பயப்படுவேன். வாத்தியம் பயப்படாதே, என்ன செய்ய?''

Mods..If necessary..you can open a corresponding thread other forums..Tamil

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Hilarity in kutcheris

Post by venkatakailasam »

அப்போதெல்லாம் கல்யாணத்திற்கு பட்டுப் புடவை வாங்க கடைக்குப் போனால் இரண்டு புடவைக்கு பத்து புடவைகளைத் தேர்ந்தெடுத்து வீட்டுக்கு கொண்டு போகலாம்.

அப்போதெல்லாம் கல்யாணத்திற்கு பட்டுப் புடவை வாங்க கடைக்குப் போனால் இரண்டு புடவைக்கு பத்து புடவைகளைத் தேர்ந்தெடுத்து வீட்டுக்கு கொண்டு போகலாம். பிடித்ததை எடுத்துக்கொண்டு மீதியை திரும்ப வந்து கொடுப்பார்கள். ஸ்திரீகள் கடைக்குப் போய் புடவைகளைத் தேர்ந்தெடுக்கும் சம்ஸ்காரம் அப்போது கிடையாது.

புல்லாங்குழல் வித்வான் பல்லடம் சஞ்சீவ ராவின் மகளின் திருமணம். அவர் ஸ்ரீரங்கத்தில் ஒரு கடையில் புடவை வாங்கிக் கொண்டிருந்தார். இரண்டு புடவைகளைத் தேர்ந்தெடுத்து வைத்துவிட்டார். கடைக்காரர் இன்னொரு 10 புடவையையும் வீட்டிற்கு கொண்டு போய் காட்டிவிட்டு கொண்டு வருவதற்கு கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கொடியாலம் ரங்கசாமி அய்யங்கார் என்பவர் சுதந்திர போராட்ட வீரர். பணக்காரரும் கூட. அந்த நாளில் திருச்சிக்கு வரும் தேசியத் தலைவர்கள் எல்லாம் அவர் வீட்டில் வந்துதான் தங்குவார்கள். அப்போது சித்தரஞ்சன்தாஸ் (சி.ஆர்.தாஸ்) அவர் வீட்டில் தங்கியிருந்தார். இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தபோது தங்களது வங்காள சங்கீதம்தான் உயர்ந்தது என்றும் அதற்கு நிகரான சங்கீதம் வேறு எதுவும் கிடையாது என்றும் வாதிட்டார் சி.ஆர். தாஸ். கர்நாடக சங்கீதம் பற்றி ரங்கசாமி அய்யங்கார் சொல்லிக் கொண்டிருக்கும்போது எதிர்த்தாற்போல இருந்த புடவைக் கடையில் பல்லடம் சஞ்சீவ ராவ் இருப்பது அவரது பார்வையில் பட்டது. உடனே வேலைக்காரர் ஒருவரை அனுப்பி சஞ்சீவ ராவை அழைத்து வரச் சொன்னார்.

""சித்தரஞ்சன் தாஸýக்கு நம்ம கர்நாடக சங்கீதத்தைப் பற்றி தெரியல. கொஞ்சம் புல்லாங்குழல் வாசித்துக் காட்டுங்கோ'' என்றார் கொடியாலம் அய்யங்கார். புடவை வாங்க வந்த பல்லடம் சஞ்சீவ ராவிடம் புல்லாங்குழல் ஏது? அதே தெருவில் ஒரு நடனக் குழு இருந்தது. வேலைக்காரரை அனுப்பி அங்கிருந்து ஒரு புல்லாங்குழலையும் கூடவே மிருதங்க வித்வானையும் அழைத்து வரச் செய்து சி.ஆர். தாஸýக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்தார் அய்யங்கார்.

சஞ்சீவ ராவ் "தேவகாந்தாரி'யில் "க்ஷீரசாகர சயனா'' வாசித்தாராம். அந்த வாசிப்பில் சி.ஆர்.தாஸ் சொக்கிப்போய், கொடியாலம் அய்யங்காரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ""இந்த சங்கீதத்துக்கு ஈடு இணை கிடையாது என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்'' என்று கூறி சஞ்சீவ ராவையும் பாராட்டினாராம்.

பல்லடம் சஞ்சீவ ராவ் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இரண்டு புடவைக்கும் பார்வைக்கு எடுத்துச் செல்ல இருந்த பத்து புடவைக்கும் கொடியாலம் அய்யங்காரே பணத்தைக் கொடுத்து ஒரு டஜன் பட்டுப் புடவைகளுடன் அவரை அனுப்பி வைத்தாராம்.

====================

தேவகோட்டையில் அருணாசலம் செட்டியார் என்ற ஒரு பெரிய தனவந்தர் இருந்தார். அவருக்கு பர்மாவில் எல்லாம் வியாபாரம் இருந்தது. அவருடைய வீட்டில் கல்யாண கச்சேரி. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பாடிக் கொண்டிருந்தார். கச்சேரி கேட்டுக் கொண்டிருந்த அருணாசலம் செட்டியார், "தேவகாந்தாரியில் "க்ஷீரசாகர சயனா' பாடுங்களேன்' என்று வேண்டுகோள் விடுத்தார். விஸ்வநாதய்யரின் பார்வை எல்லாம் செட்டியார் போட்டிருந்த வைரச் சங்கிலியில் இருந்தது.

""க்ஷீரசாகர உங்க வைரச் சங்கிலியைப் பார்க்கிறதே'' என்றாராம் விஸ்வநாதய்யர்.

""நீங்க "க்ஷீரசாகரா' பாடுங்க, அந்த வைரச் சங்கிலியை தருகிறேன்'' என்றார் செட்டியார்.

""நீங்க சங்கிலியைப் போடுங்க, அப்பதான் க்ஷீரசாகர வரும்''- இது விஸ்வநாதய்யர்.

இதற்குப் பின்னர், சற்றும் தயங்காமல் வைரச் சங்கிலியை எடுத்து விஸ்வநாதய்யர் கையில் கொடுத்துவிட்டாராம் செட்டியார். ஒரு கையில் சங்கிலியைப் பிடித்தபடியே தேவகாந்தாரி ஆலாபனை செய்து "க்ஷீரசாகர சயனா' பாடினார் விஸ்வநாதய்யர். "தாரக நாம' என்கிற இடத்தை பாடிக்கொண்டிருக்கும்போது மெய்மறந்த அருணாசலம் செட்டியார் எழுந்து நின்று சொன்னாராம்-

""என்ன செய்ய, அந்தக் கையில் போட என்னிடம் இன்னொரு வைரச் சங்கிலி இல்லாமல் போயிற்றே! இந்த தேவகாந்தாரிக்காக சொத்தையே உமக்கு எழுதிக் கொடுக்கலாமே!''

அப்படியெல்லாம் சங்கீத ரசிகர்கள் இருந்தார்கள்.

====================

சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.

தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெüரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.

நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் "அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்' என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.

அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம்?' என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், "ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.

பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்- "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!'



http://dinamani.com/music/article139118 ... vice=print

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by venkatakailasam »

பிரபல சங்கீத விமர்சகர் சுப்புடுவின் எழுத்தில் தூக்கலான குணங்கள் இரண்டு. ஒன்று துணிச்சல். இன்னொன்று நகைச்சுவை. இப்படி அப்படி என்றில்லாமல் ஒட்டுமொத்தமாய்த் தாக்கித் தகர்ப்பது அல்லது ஐஸ் மழை பொழிந்து கலைஞர்களை ஏகத்துக்குக் குளிரச் செய்வது என இரண்டு அதிகபட்ச எல்லைகளிலும் அவர் பேனா இயங்குவதுண்டு.

அவரது கலை விமர்சனங்களால் என்னவெல்லாம் நடந்தேறியிருக்கின்றன! நடனமாடும் ஹேமமாலினியும், யாமினி கிருஷ்ணமூர்த்தியும் கோர்ட்டில் அவரை எதிர்த்து வழக்காடினார்கள்! ஒருமுறை அரசியல் தலைவர் அந்தஸ்தை அடைந்துவிட்டார் சுப்புடு! தஞ்சையில் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள்! தம் நெஞ்சம் திறந்து அவர் எழுதிய விமர்சனங்களால் திருவையாறில் சட்டை கிழிக்கப்பட்டுத் தம் திறந்த நெஞ்சோடு வெளியேறினார்! ஏன்...ஒரு சங்கீதக் கச்சேரி நடைபெற்ற அரங்குக்கு வெளியே, "சுப்புடுவும் நாய்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று போர்டே எழுதித் தொங்கவிட்டுவிட்டார்களாம்! இந்த அறிவிப்பை அறிந்து சுப்புடுவுக்குப் பரம சந்தோஷம்!

சுப்புடுவுக்கும் செம்மங்குடிக்கும் இடையே பச்சைப் புல்லை தண்ணீர் தெளித்து போட்டால்கூடப் பற்றிக் கொள்ளும்! செம்மங்குடியைத் தொடர்ந்து தாக்குவதைக் கோட்பாடாகக் கொண்டவர் சுப்புடு. சுப்புடுவுக்கு ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சாவி. மயிலை ஆர்.ஆர்.சபாவில் நிகழ்ச்சி. பேச்சாளர்களில் செம்மங்குடியும் ஒருவர்! எக்கச்சக்க கூட்டம். சிலர் பேசிய பின் செம்மங்குடியின் முறை வந்தது. எழுந்தார். மைக்கைப் பிடித்தார்.

""சுப்புடு என்னைத் தொடர்ந்து கண்டனம் பண்ண வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அவர் கண்டனம் பண்ணினால்தான் எனக்கு நிறைய கச்சேரி "புக்' ஆகிறது. அப்படி ஒரு ராசி சுப்புடுவுக்கு!'' என்று வெகு விஸ்தாரமாகப் பேசினார் செம்மங்குடி!

""அடடா! செம்மங்குடி என்ன அழகாக மேடையில் பேசுகிறார்! பேசாமல் அவர் கச்சேரி செய்வதை நிறுத்திவிட்டுச் பேச்சாளராக இயங்கலாமே!'' என்று பரிந்துரைத்தார் சுப்புடு!

("சுவடுகள்' என்ற புத்தகத்தில் திருப்பூர் கிருஷ்ணன்)

Para 2 at..

http://dinamani.com/weekly_supplements/ ... 389014.ece

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by cmlover »

மிக்க நன்றி Vkailasam அவர்களே.
இவை சிதறிய கர்நாடக இசை முத்துக்கள்!
இவைகளை பொறுக்கவா கோர்க்கவா?
(பொறுப்பது எம் கடன், கோர்ப்பது உம் கடமை :D )

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by venkatakailasam »

A letter by Shri TN Rajaratnam Pillai..18-01-1944 kind courtesy Sreedevi..FB friend

Image

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by cmlover »

சக்கரவர்த்திக்கு முதலாளி யார்?

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by vasanthakokilam »

CML: Good question. I assume it is his patron. Who? His words show the necessary respect but not in the content. He seems to be upset about something with his patron.

TNR's over the top (printed) self identification in that letter is interesting. It indeed goes well with his photograph. Imagine if any artist does that today, how we will be all over him/her in this forum. ;) Different times!

BTW, CML, can you transcribe his tamil handwriting( and possibly transliterate it as well ) and post? I can read and understand what he is saying for the most part but there a few knots there.

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by rshankar »

vasanthakokilam wrote:a few knots there.
Just a few? :lol:

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by venkatakailasam »

மதுரை மணி அய்யரின் சகோதரி கணவரின் பெயர் வேம்பு அய்யர். டி.வி. சங்கரநாராயணனின் அப்பா. அவரைப் பற்றி முசிரி ஒரு முறை கூறினார் - "தஞ்சாவூர் ஜில்லாவில் பெரிய மிராசுதாராக இருப்பார். பெயர் என்ன என்று கேட்டால் பிச்சை என்று சொல்வார். அதுபோல இவர் பெயர் வேம்பு. ஆனால், இவரோட பாட்டு கரும்பு!'

=====================

ஓருமுறை திருவிசைநல்லூரில் அய்யாவாள் உத்ஸவம். கடைசி நாள்தான் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாடுவதாக இருந்தது. முதலிலேயே மதுரை மணி அய்யரின் கச்சேரி முடிந்துவிட்டது. ஆனாலும் அவர் கும்பகோணத்திலேயே தங்கியிருந்து மகாராஜபுரத்தின் கச்சேரியைக் கேட்டுவிட்டுத்தான் ஊருக்குத் திரும்பினார். ஏதாவது விழாவுக்கு மணி அய்யர் சென்றால் அடுத்த நாள் தமக்கு வேறு நிகழ்ச்சி இல்லையென்றால் ஏனைய கலைஞர்கள் பாடுவதைக் கேட்டுவிட்டுத்தான் ஊருக்குத் திரும்புவார். அதேபோல புதிதாக யாராவது பாடுகிறார்கள் என்றால் கேட்டு உற்சாகப்படுத்துவதை தனது கடமையாக கருதியவர் மதுரை மணி அய்யர்.

More at..

http://dinamani.com/music/article1392229.ece

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by cmlover »

அவர் மதுர மணி அய்யா!
அவருடன் சேர்ந்த வேம்பு கசக்கவா செய்யும்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by venkatakailasam »

மாயவரம் பெரிய கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது. அதில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி சந்நிதி மட்டும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அது ஏன் அப்படி என்று எனக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் நாதமுனி பேண்ட் என்பது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவில் ஐம்பது அறுபது பேர் இருப்பார்கள். டிரம்ஸ், கிளாரினெட் போன்று என்னென்னவோ வாத்தியங்கள் இருக்கும். அந்தக் குழுவினர் போட்டிருக்கும் யூனிபாரத்தையும் தொப்பியையும் அவர்களிடம் இருக்கும் மேல்நாட்டு வாத்தியங்களையும் பார்ப்பதற்கே கூட்டம் கூடும்.

மாயவரம் பெரிய கோயிலில் திருவிழா. நாதமுனி பேண்ட் குழுவினரின் இசையைக் கேட்க பட்டமங்கலம் தெரு முழுவதும் நிற்க இடமில்லாமல் கூட்டம். அன்றைக்கு திருவீழிமிழலை சகோதரர்களையும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். காளியாக்குடி ஹோட்டலுக்கு பக்கத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள்- சுப்பிரமணியப் பிள்ளை, நடராஜப் பிள்ளை- வாசிக்க வேண்டும். நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளைதான் தவில். அவருடைய தவில் சத்தத்தைக் கேட்டே இது நீடாமங்கலத்தின் வாசிப்பு என்று சொல்லிவிடுவார்கள். அவ்வளவு பிரபலம்.

more at...http://dinamani.com/music/article1394657.ece

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Hilarity in kutcheris ( In Tamil Script )

Post by venkatakailasam »

தியாகராயநகர் கிருஷ்ணகான சபாவில் எம்.டி.ராமநாதனின் கச்சேரி. கச்சேரிக்கு பாலக்காடு மணி அய்யரை ஒப்பந்தம் செய்யும்போதே அடுத்த நாள் தனக்கு வெளியூரில் நிகழ்ச்சி இருப்பதாகவும் அதனால் ஒன்பதரை மணி செங்கோட்டை பாசஞ்சரை மாம்பலம் ரயில் நிலையத்தில் பிடித்தாக வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருந்தார். ஏதோ ஞாபக மறதியில் எம்.டி.ராமநாதன் ஒன்பது மணிக்கு ராகம் தானம் பல்லவி எடுத்துவிட்டார். கச்சேரி முழுவதும் வாசிக்காமல் பாலக்காடு மணி அய்யர் எப்படி எழுந்துபோவது? ராக ஆலாபனை முடிந்த பிறகுதான் எம்.டி.ஆருக்கு பாலக்காடு மணி அய்யர் ஊருக்குப் போக வேண்டும் என்கிற நிலைமை நினைவுக்கு வந்தது. அடுத்த ஐந்து ஆறு நிமிஷங்களில் சுருக்கமாக தானமும் விரைவாக பல்லவி கல்பனா ஸ்வரமும் பாடி கச்சேரியை முடித்துக்கொண்டு விட்டார்.

மாம்பலம் ரயில் நிலையத்துக்கு மணி அய்யர் வந்து சேர்ந்தபோது செங்கோட்டை பாசஞ்சர் பிளாட்பாரத்திலிருந்து நகர்ந்து கொண்டிருந்தது. இன்னொரு வித்வானாக இருந்தால் அடுத்த நாள் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக தந்தி கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள். ஆனால் பாலக்காடு மணி அய்யர் அந்த ரகம் அல்ல.

ஸ்டேஷனுக்கு வெளியில் இருந்த டாக்ஸிக்காரரிடம் அடுத்தாற்போல ரயில் எங்கே நிற்கும் என்று கேட்டார். "நாம் தாம்பரம் போவதற்குள் ரயில் போயிருந்தால் செங்கல்பட்டில் பிடித்துவிடலாமா' என்பது அடுத்த கேள்வி. "அங்கேயும் ரயில் போயிருந்தால், திருச்சி வரை போனாலும் சரி. நான் கச்சேரிக்குப் போயாகணும். ஏற்றுக்கொண்ட கச்சேரியை என்னுடைய தவறுக்காக கேன்சல் பண்ணக் கூடாது' என்று கூறி டாக்ஸியில் கிளம்பிவிட்டார்.



கரூரில் நாயனாப் பிள்ளையின் சங்கீத கச்சேரி. அப்பொழுதுதான் சின்னப் பையனான பாலக்காடு மணி அய்யர் முதன்முதலில் நாயனாப் பிள்ளைக்கு கச்சேரி வாசிக்கப் போகிறார். புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா.

அந்த நாளில் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் கச்சேரிக்கு முதல் நாளே பாகவதரைப் பார்த்து, வணங்கி அடுத்த நாள் கச்சேரியில் என்ன பாடப் போகிறார்கள், பல்லவியை என்ன தாளத்தில் அமைத்துக் கொள்ள போகிறார்கள் போன்ற அடிப்படை சங்கதிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். நாயனாப் பிள்ளை தனக்கு வாசிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது பாலக்காடிலிருந்து வந்த ஒரு சிறுவன் என்று கேள்விப்பட்டபோதே சற்று முகம் சுளித்தார். தன்னைப் போன்ற முன்வரிசை வித்வானுக்கு ஒரு கத்துக்குட்டியை மிருதங்கத்தில் போட்டால் கச்சேரி சோபிக்காது என்று அவர் கருதியதில் தவறுமில்லை.

பாலக்காடு மணி அய்யருக்கு இந்த சம்பிரதாயத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. "அவர் பாடப் போறார். நான் வாசிக்கப் போறேன். தாளத்துக்குத் தாளம் பேசணும் அவ்வளவுதானே. இதுக்குப் போய் முன்னாலேயே பார்த்து என்ன பல்லவி என்ன தாளக்கட்டுன்னெல்லாம் கேட்டு தெரிஞ்சுப்பானேன்' என்று இருந்து விட்டார்.

அடுத்த நாள் தனது கையை அங்கவஸ்திரத்துக்குள் மறைத்தபடி வெளியே தெரியாதவாறு தாளம் போட்டுக்கொண்டு கச்சேரியைத் தொடங்கினார். பாலக்காடு மணி அய்யர் மிருதங்கத்தை நிமிர்த்தி வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தாராம்.

"என்ன தம்பி, வாசி!' என்று நாயனாப் பிள்ளை சொன்னபோது, "முதலில் நீங்கள் அந்த அங்கவஸ்திரத்துக்குள்ளிருந்து விரலை எடுத்து தாளம் போடுங்கோ, நான் வாசிக்கிறேன்!' என்று கூறிவிட்டார் மணி அய்யர்.

நாயனாப் பிள்ளைக்கு சிரிப்பு வந்ததாம். தான் எத்தனை பெரிய வித்வான், நான் போடும் தாளத்திற்கு வாசித்துவிடுவேன் என்று இந்த சின்னப் பையன் சொல்கிறானே என்கிற இளக்காரத்துடன் விவகாரமான தாளத்துடன் பாடத் தொடங்கினாராம். அதை சர்வ சாதாரணமாக பாலக்காடு மணி அய்யர் வாசித்து ஊதித் தள்ளிவிட்டபோதுதான் நாயனாப் பிள்ளைக்குத் தெரிந்தது இந்தச் சிறுவனிடம் எந்த வேலையும் பலிக்காது என்று. பின்னொரு நாளில் பாலக்காடு மணி அய்யரைப் பற்றி நாயனாப் பிள்ளை சொன்ன கருத்து- அந்தப் பையன் மிருதங்க வித்வான் இல்லேங்காணும், நந்தி தேவரின் அவதாரம்!

http://dinamani.com/music/article1399116.ece

Post Reply