kavithai yenral yenna ?

Post Reply
Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

kavithai yenral yenna ?

Post by Ponbhairavi »

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

கவிதை என்றால் என்ன

வாக் அர்த்தாவிவ சம்ப்ரோக்தௌ வாக் அர்த்த பிரதிபத்தையே
ஜகதப் பிதரம் வந்தே பார்வதி பரமேஸ்வரௌ
வாக்கு அர்த்தம ,அதாவது சொல் பொருள் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை .ஒரே பொருளை பல மொழிகள் பலவாறாக கூறுகின்றன .ஒரே மொழியில் கூட ஒரு பொருளைக்குறிக்க பல சொற்கள் இருக்கின்றன .இதே போல் ஒரே சொல் ஒரு மொழியில் ஒரு பொருளையும் வேறு மொழியில் அதே சொல் வேறு பொருளையும் குறிக்கலாம் ( வெள்ளம ; தமிழ் ,மலையாளம் )ஒரு வேடிக்கையான சம்பவம் :பஸ்சில் நல்ல கூட்டம் ;ஒரு தெலுங்குகாரர் தன் குடையை கைக்குள் இடுக்கிக்கொண்டு கீழே இறங்குகிறார் ..குடையின் வளைந்த பிடி பின்னால் நின்றுகொண்டிருந்த தமிழரின் காதில் மாட்டி இழுத்தது .அவர் குடையை இழுத்து அலறினார் :”காது காது”.. என்று.. தெலுங்குகாரர் பதிலுக்கு “ நாது நாது “ என்று குடையை விடாப்பிடியாக இறுக்கி கொண்டாராம் .
புதுச்சேரிக்காரர் ஒரு ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து சவாரி செய்து கொண்டிருக்கிறார் .வண்டியை வேகமாக ஓட்டிச செல்பவர் அவருடைய கன்னட நண்பர்...புதுச்சேரிக்காரர் திடீர் என அலறினார் : “ மாடு ,மாடு.”.. குறுக்கே வந்த மாட்டுக்கு தன் உயிரின் மேல் இருந்த பிடிப்பினால் அதுவும் தப்பியது நம் நண்பர்களும் மயிரிழையில் உயிர் தப்பினர் . புதுச்சேரிக்காரர் எரிச்சலுடன் கேட்டார் “ மாடு நோடலை “
வந்த பதில் “நோட மாடலை”- அவர் கண்ணாடி போடலை.

ஒரு சொல்லில் இருந்து அதாவது ஒரு ஓசை குறிஈட்டில் இருந்து ஒரு பொருளுக்கு செல்லும் பாதை தான் மொழி. .இப்பாதை நேரடியாகவும் இருக்கலாம் ( அறிவியல் உரை நடை )இப்பாதை 5 நட்சத்திர ஹோட்டல் , பூங்காக்கள் இவற்றில் காணப் படுவது போன்று வளைந்து நெளிந்து செயற்கை மேடு பள்ளங்கள் புல் வெளிகள் பூச்செடிகள் . கோணலான நீச்சல் குளங்கள் வழியாகச் செல்வதாகவும் இருக்கலாம்.. இதனால் பயன் எதுவும் இல்லை தான் . ஆனால் இது மனதுக்கு இன்பம் தரும் அழகு உணர்ச்சியின் வெளிப்பாடு.
இவ்வாறு சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள பாதையில் விளையாடுவது தான் கவிதை .
அனுமன் கடலைத்தாண்டி பறந்து சென்று சீதையைக் கண்டு இலங்கையில் தீயை வைத்துத் திரும்பினான்.
இக்கருத்து கம்பனின் கையில் எப்படி மாறு படுகிறது என்று பாருங்கள்.
ஐந்திலே ஒன்று பெற்றான் ஐந்திலே ஒன்றைத் தாவி
ஐந்திலே ஒன்று ஆறாக ஆரியர்காக ஏகி
ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
ஐந்திலே ஒன்றை வைத்தான் ...
ஒரு சாதாரண வாக்கியத்தில் பஞ்ச பூதங்களை நுழைத்து ஐந்து என்ற சொல்லை ஐந்து முறை பயன் படுத்தி பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரத்துடன் தொடர்பு கொள்ள வைத்து இரண்டு வரியில் சொல்வதை நான்கு வரிகளுக்கு நீட்டி சொல்கிறான். அதிலும், அனுமன் என்ற சொல்லோ ராமன் என்ற சொல்லோ சீதை என்ற சொல்லோ கிடையாது.!
சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள பந்தத்தை வைத்து விளையாடுவது தான் கவிதை.
ஏன் விளையாட வேண்டும்?
எல்லா விளையாட்டுக்களும் எதற்காகவோ அதற்காகத் தான்-- .ஒரு பொழுது போக்கு . ஒரு திறமையை வெளிப்படுத்தி உள்ளத்திற்கு ஒருஉற்சாகத்தையும் சிறுது நேரம் தன்னை மறக்கசெய்யும் இன்பதையும் தருவதறகாகத் தான்..ஒரு பந்தை நடுவில் போட்டு அதை 22 பேர் மாற்றி மாற்றி ஒன்றரை மணி நேரம் உதைத்து விட்டு இறுதியில் அதை நடுவிலேயே வைத்துவிட்டு வருவதில்லையா? இது அணி விளையாட்டு.. தனி விளையாட்டும் உண்டு . ஒரு நீச்சல் குளத்தில் 30 அடி உயரத்திலிருந்து இரண்டு மூன்று குட்டிகரணம் போட்டு உடலை நீட்டு வாக்கில் பம்பரம் போல் சுற்றி நீரில் குதிப்பது. ஒரு விளையாட்டு . ஒரு நீண்ட சதுரம். ஒரு மூலையில் ஒரு இளம் பெண் நின்று பெருமூச்சு ஒன்றை நீட்டி இழுத்து விட்டு உடனே மேலே எழும்பி முன்னும் பின்னுமாக இரண்டு கரணம் போட்டு எதிர் முனை விளிம்பில வந்து பொத்தென்று குதித்து நிற்பார்.. சாதாரணமாக நடந்து சிரமமில்லாது. வரக்கூடாதோ என்று தோன்றும்..வாதாபி கணபதிம் பஜே என்று ஒரு தரம் சொன்னாலே புரிகிறதே அதை ஏன் 12 தடவை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்?
விளையாட்டுக்களில் விளையாடுபவர்களுக்கும் இன்பம் லக்ஷக்கணக்கில் .காண்பவர்களுக்கும் இன்பம் .சங்கீதத்தில் பாடுபவருக்கும் இன்பம் கேட்பவர்களுக்கும் இன்பம் கவிதையும் அப்படித்தான்..
எல்லா விளையாட்டுகளுக்கும் பல விதிகள், கட்டுபாடுகள் உண்டு.சொல் விளையாட்டான கவிதை விளையாட்டுவிதிகள் தான் யாப்பு -.விதிகள் எத்தனைக்கெத்தனை கடுமையானவையோ அத்தனைக்கத்தனை விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கும்.கவிதை விதிகள் எவ்வாறு கட்டுபாடுகளை விதிக்கின்றன? சொல்லிலிருந்து பொருளுக்குசெல்லும் பாதையில் தான்.
ஒரு சொல்லுக்கு என்னென்ன தன்மைகள் ? முதலாவதாக அதன் ஒலி செவிக்கு இன்பம் தரும் சொற்களை கவிஞர்கள் விரும்புவார்கள்.. அடுத்தது சொல்லின் நீளம் கவிதை வரிகளின் தாள கதிகளுக்கு ஏற்ப நீண்ட சொற்களோ அல்லது சிறிய சொற்களோ பயன்படுத்தப் படும் தாள நடை தான் கவிதைக்கு மூச்சுக்காற்று போன்றது. கவிதையே பாட்டு என்று சொல்லும் அளவிற்கு ஓசையின்பமும்(எதுகை ,மோனை ..).நடை இன்பமும் இசை ஆகின்றன .
தமிழ் இலக்கியத்தில் கவிதை விளையாட்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பே காணப்படுகின்றது .நக்கீரரின் சித்திரக்கவிதை ( ஒரு தேரின் வடிவில் அமைந்த எழுக்கூற்றிருக்கை )மிகவும் சிறப்பானது .(ref post no 271 in If you area venba buff.) பலவித பா வடிவங்களும் ஆசு கவி சிலேடை என்று பல வித அலங்காரங்களும் தமிழுக்கு பெருமை.. பின்னாலிருந்து வாசிக்கும்(palindrome) வகைகளும் உண்டு.. இதில் ஒரு நூதன வகை கிழே காணலாம்
க வி மு தி யா ர் பா வே
வி லை ய ரு மா ந ற் பா
மு ய ல் வ து று ந ர்
தி ரு வ ழி ந து மா யா

முதல் எழுத்துகளை மேலிருந்து கீழாக படித்து பின் கடைசிவரியின் கடைசி எழுத்திலிருந்து மேல் நோக்கி வசித்து கொண்டு போனால் முதல் வரியே வரும். இதே போல் இரண்டாவது எழுத்துகளை வாசித்து கடைசிக்கு முன் எழுத்திலிருந்து ( last but one ) மேல் நோக்கி வாசித்தால் இரண்டாவது வரியும் இதே போல் ( ப shape reading) மூன்றாவது நாலாவது வரிகளும் வரும்..( இது என் நினைவிலிரிந்து எழுதியது . திருத்தங்கள் அல்லது மேலும் விவரங்கள் வரவேற்கப் படுகின்றன )
பிரஞ்சு கவிதைகளிலும் இத்தகைய மொழி விளையாட்டு காணப் படுகின்றன பதி நேழாம் நூற்றாண்டில் மேட்டுக்குடி பெண்கள் உரையாடல்களில் ஒரு செயற்கை யான மிகையை ( preciosity உயர்வு நவிற்சி அணி ) யை புகுத்தினர் . சில உதாரணங்கள் :
காதலியின் கன்னம்=நாணத்தின் அரியணை
முகம் பார்க்கும கண்ணாடி=அழகின் ஆலோசகர்
இந்த நாற்காலியில் அமருங்கள் =உங்கள் ஸ்பரிசத்திற்காக கைநீட்ட்டும் இவ்வுரை யாடலின் உறு துணைவனின் தாபத்தை தீருங்கள்
1661 இல் இத்தகைய சொல்லாட்சிக்காக ஒரு தனி அகராதியே தொகுக்கப்பட்டது என்றால் மக்களுக்கு இதில் இருந்த மோகத்தைப் புரிந்து கொள்ளலாம் . போன நூற்றாண்டு தொடக்கத்தில் பாடு பொருள் என்னவோ அதே உருவில் கவிதை படைத்தார் Apollinaire எனும் கவிஞர் : உதாரணம் :நீரூற்று (cf; பிரபல பிரெஞ்சு கவிதைகள் :frenchliterature angelfire.com ).1960 இல் OULIPO என்ற இயக்கம் பல நூதன கட்டுபாடுகளை படைப்பிலக்கியதிற்கு ஏற்படுத்தியது.ஒரு உதாரணம் : E என்ற எழுத்தே வராமல் ஒரு வாக்கியம் எழுத முடியுமா? ஒரு வாக்கியம் அல்ல 300 பக்கங்களுக்கு ஒரு முழு நாவலையே இவ்வாறு எழுதி அளித்தார் G .PEREC என்ற எழுத்தாளர் 1969 இல்.
விளையாட்டு விதிகளில் மாறுதல்கள் செய்யபடுவது போல யாப்பு இலக்கண விதிகளிலும் அவ்வபோது மாறுதல்கள் எற்பட்டுகொண்டு தான் வருகின்றது .குறிப்பாக தமிழில் சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த சொற்கள் இன்று வழக்கிலிருந்து மறைந்து விட்டன .அவற்றை கொண்டு இப்போது கவிதை எழுதினால் யாருக்கும் புரியாது. சென்ற நூற்றாண்டில் தமிழ் கவிதையைப் புதுப்பித்தவன் பாரதி : “சொல் புதிது பொருள் புதிது சுவை புதிது ” என்று புதுக்கவிதையின் முன்னோடியாகத் திகழ்பவன் அவனே . தற்காலத்தில் புது கவிதையுடன் “ ஹை கூ “ என்ற ஜப்பானிய 3 வரி கவிதையும் பிரபல மாகி வருகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி . இது கவிதை விளையாட்டுக்கும் பொருந்தும் .;
உடல் ஆற்றலைகொண்டு விளையாடுபாவன் விளையாட்டு வீரன்
உருவ எழிலைகொண்டு விளையாடுபவர் நடன கலைஞர்.
வண்ணங்களைக் கொண்டு விளையாடுபவர் ஓவியர்
கற்களில் விளையாடுபவர் சிற்பி
ஒலிகளைப்புரட்டி விளையாடுபவர் இசைக் கலைஞர்
சொற்களைக் கொண்டு விளையாடுபவர் கவிஞர்.
இவை அனைத்திற்கும் திறமை கற்பனை அழகுணர்ச்சி உழைப்பு ஆகியவை தான் ஆதாரம்..இவை எல்லாம் கலைஞர்களுக்கு மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான மற்றவர்களுக்கும் இன்பம் தருவன . இது நிரந்தர இன்பம்- நினைக்கும் தோறும இன்பம்.
Last edited by Ponbhairavi on 11 Nov 2012, 14:35, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: kavithai yenral yenna ?

Post by Pratyaksham Bala »

.
படித்து வியக்க:-
http://www.tamilvu.org/library/l0B34/html/l0B34ind.htm

401-ஆவது பக்கத்தில்:-

17. சுழிகுளம்
சுழிகுளம் என்பது ஒரு செய்யுளை எவ்வெட்டெழுத்தாக நாலடியும் நான்குவரி
எழுதி, மேல் நின்று கீழ் இழிந்தும் கீழ் நின்று மேல் ஏறியும் முடிய உச்சரித்தாலும்,
அவ்வரி நான்குமேயாய் அச்செய்யுள் தானே முற்றுப் பெறுவது.

["செழித்தெழு நீர்குளத் தினுட்செறிந் தகைத்கொடு
சுழித்தடங் குவபோன்று அடக்குதல் சுழிகுளம்" - மா. 295]

வரலாறு :

"கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா"


என வரும்.

[கவிகளில் முதிர்ந்தார் பாடும் பாடலே விலையிடுதற்கு அரிய சிறந்த கவியாம்.
இடைவிடாது முயல்பவர் செல்வங்கள் அழிந்தும் அவை நீங்கா.]


.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: kavithai yenral yenna ?

Post by Pratyaksham Bala »

.
மாலை மாற்று:-

தேரு வருதே மோரு வருமோ
மோரு வருமோ தேரு வருதே


இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு:-
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE% ... 1%E0%AF%81


திருமாலைமாற்று
திருஞான சம்பந்தர் எழுதிய 11 மாலைமாற்று பாடல்களை இங்கே காணலாம்:-
http://www.tamilvu.org/slet/l4130/l4130 ... subid=1902


சமஸ்கிருதத்தில் மாலைமாற்று பாடல் ஒன்று இதோ:-
सकारनानारकास-कायसाददसायका ।
रसाहवावाहसार-नादवाददवादना ॥
.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: kavithai yenral yenna ?

Post by Pratyaksham Bala »

.
रामकृष्ण विलोम काव्यं (rAmakRiShNa viloma kAvyaM) by kavi sUrya is a Palindrome (mAlaimAtru). It is Ramayanam when read normally, and in reverse it is Mahabharatham!

Check this for the entire text in Sanskrit:-
http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf
.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kavithai yenral yenna ?

Post by cmlover »

Ponbhairavi
நன்றி!
அற்புதமான இலக்கிய சுவை நிறைந்த கட்டுரை
நல்ல ஹாஸ்யமும் கூட...
மேலும் எழுதவும்...
தீபாவளிக்கு திகட்டாத தித்திப்பு!
(என் போன்ற சக்கரை வியாதி உள்ளவருக்கு :D

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kavithai yenral yenna ?

Post by cmlover »

PB
Thanks for those superb links..

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: kavithai yenral yenna ?

Post by Pratyaksham Bala »

.
சிறு வயதில் நாங்கள் சிரித்துக் களித்த 'சுழிகுளம்' பாடல் !

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: kavithai yenral yenna ?

Post by Ponbhairavi »

இதோ இன்னொன்று:

கரடி
ரயில்
டில்லி

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kavithai yenral yenna ?

Post by cmlover »

கரடி
ரயில்
டில்லி
:)
you beat me to it :D

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: kavithai yenral yenna ?

Post by Ponbhairavi »

thanks PB for having authenticated my quotation
CML;You are unbeatable.You are at all the threads at all the times whereas my presence is very restricted and I happened to be near the finish line thanksfor your appreciative kind words
I have opened a new thread because I thought that every one can share his perception of what is poetry (which includes reputed quotations also). Perhaps we can share here also the beauty of poems we are reading and enjoying incl those in other languages.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kavithai yenral yenna ?

Post by cmlover »

Sure!
All are welcome!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: kavithai yenral yenna ?

Post by sridhar_ranga »

The topic "கவிதை என்றால் என்ன" brought back memories of the "war" between Cho Ramaswami and poet Surada (pen name, short for Subbu Rathina Dasan - or Bharati Dasan's Dasan) which was carried on the pages of Ananda Vikatan many years ago, about which I had read here:

The extract below shows what Cho thought of modern Tamil poetry (puduk kavithai) that seemed to follow no rhyme or reason: :-)

இதுதான் கவிதையா? 'சோ'வின் (கேள்விக்) கவிதை

கவிதை என்றால் என்னவென்று இத்தனை
நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.
சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா
எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்
என்ன வென்று இப்போது புரிந்தது.

எழுதுவதை எழுதிவிடவேண்டும் - எதுகை மோனை
நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!
மறக்காமல் ஒன்றுமட்டும் செய்ய வேண்டும்
எழுதிய 'எஸ்ஸே'யின் வார்த்தைகளை உடைக்க வேண்டும்
வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு
அனுப்ப வேண்டும், அதுதான் கவிதை.

வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்
கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!
தற்காலக் கவிதைகளைத் தருபவர் கவிஞரல்ல கம்பாஸிடர்தான்
என்ற உண்மையை உடைத்துக்காட்டிய சுரதாவிற்கு நன்றி!
விகடனுக்கு நன்றி!

கவிதை என்றால் என்ன வென்றே தெரியாத எனக்கு
சுரதா சுலபமாக கவிதை யெழுத கற்றுத் தந்துவிட்டார்
இதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை!
மற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kavithai yenral yenna ?

Post by cmlover »

சரியாகத்தான் சொன்னார் சோ!
தோன்றியதை எழுதி அதை கவிதை என்கிறார்கள்.
கேட்டால் அதற்கு பெயர் "வசன கவிதை"யாம்!
அது இலக்கணத்திற்க்கு அப்பால் பட்டதாம் :)

வேறொன்று
வாயில் வந்ததெல்லாம் பாட்டாகுமா?
எதை வேண்டுமானாலும் எந்த ராகத்திலும் பாடலாம்.
தற்கால சினிமா பாட்டுகள் போல..

அட பொருள் இருந்தால் சரி!
அதற்க்காகத்தான் தெலுங்கில் பாடுகிறார்களோ?
வார்த்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொலை செய்யலாம் :)

நான்
http://www.rasikas.org/forums/viewtopic. ... &start=100
எழுதிய "அழகிய" கவிதைக்கு (அரசியார் ஆபோகியில் இசை அமைத்தது) எப்போது தான் சங்கீத அகாடமி விருது கிடைக்குமோ :)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: kavithai yenral yenna ?

Post by sridhar_ranga »

:)

braindrain
Posts: 587
Joined: 03 Feb 2010, 09:25

Re: kavithai yenral yenna ?

Post by braindrain »

I cant contribute here in thamizh...

MORE

A poem is at most
a conversation in the dusk
besides the ancient oven, when
they have all gone, and out of doors
the deep wood rustles; yes, a poem

is hardly more than a few words
that one has loved, and change
their place with time, so that
they now become a blot, at most
a hope without a name;

a poem is hardly more
than happiness, a talk
within the dusk, or all
that has forever gone, and is
no more than silence now.

Eliseo Diego (1920-1994), Cuba.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kavithai yenral yenna ?

Post by cmlover »

Nice one!
Is that a translation from spanish?

Post Reply