Tamil Book 'tamizhar vaLarttha azhagu kalaigaL'

Books on Carnatic Music and those for / by / on musicians.
Post Reply
vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Tamil Book 'tamizhar vaLarttha azhagu kalaigaL'

Post by vgovindan »

Here is the link for Tamil book 'tamizhar vaLartha azhagu kalaigaL' (Fine Arts developed by Tamils) by Mayilai Seeni Venkatasami -
http://www.tamilvu.org/library/lA417/html/lA417ind.htm
Some excerpts from the book -

சரிகமபதநி என்னும் ஏழு ஓசை கருவியாக இசைத் தமிழானது
ஏழ்பெரும் பாலைகளை வகுத்து, அவை நிலைக்களமாக நூற்றுமூன்று
பண்களைப் பிறப்பித்து, அவை தமது விரிவாகப் பதினோராயிரத்துத்
தொண்ணூற்றொன்று என்னுந் தொகையினவாகிய ஆதியிசைகளை யமைத்து,
இம்மையின்பமும் தேவர்ப் பரவுதலா னெய்தும் மறுமையின்பமும் பெறுமாறு
செய்கின்றது.
(விபுலானந்த அடிகளார் - யாழ்நூல்) (பக்கம் 26)

‘‘இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது? புலன்களின்
வழியே புகுந்து, கோளுக்குரிய புறமனத்தை வீழ்த்தி, குணத்துக்குரிய
அகக்கண்ணைத் திறந்து, அமைதி இன்பத்தை நிலைபெறுத்துதற்கென்று
இசைப்பாட்டு இயற்கையில் அமைந்தது. இஃது இசைப்பாட்டின் உள்ளக்
கிடக்கை. இதற்கு மாறுபட்டது இசைப்பாட்டாகாது.’’ (பக்கம் 118)

இசை ஏழு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவை தமிழ்ப் பெயர்கள்.
மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்பன வடமொழிப் பெயர்கள்.
இசை பிறக்கும் இடங்களாவன: மிடற்றினால் குரலும், நாவினால் துத்தமும்,
அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும், நெற்றியால் இளியும்,
நெஞ்சினால் விளரியும், மூக்கால் தாரமும் பிறக்கும். பக்கம் (123)

பதலை என்னும் தமிழ்ப் பெயர் தபலா என்று திரிந்து வழங்குகிறது.
பதலையும் தமிழ் நாட்டிலிருந்து மறைந்துவிட்டது.
ஆனால், தபேலா என்னும் பெயருடன் வடநாட்டில் இன்றும் வழங்கி வருகிறது. (பக்கம் 128)

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், நாகப்பட்டினம் முதலிய
இடங்களில் இருந்த நாகர் என்னும் தமிழினித்தைச் சேர்ந்தவர்களால்
இக்கருவி உண்டாக்கப்பட்டதென்றும், அதனால் இதற்கு நாகசுரம் என்னும்
பெயர் ஏற்பட்டதென்றும் கூறுகிறார்கள். (பக்கம் 133)

Post Reply