NaaraayaNeeyam - NaamakaraNam-episode

Post Reply
RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

NaaraayaNeeyam - NaamakaraNam-episode

Post by RSR »

44
https://guruvaayoorkshethram.blogspot.c ... ge_78.html

Image

பிரபுவே! வஸுதேவர்‌ சொற்படி ஜோதிட நூல்‌ வல்லுநரான கர்க்க முனிவர்‌ எவ்வித கர்மாவுமற்ற தங்களுக்குப்‌ பெயர்‌ சூட்டுதல்‌ (நாமகரணம்‌) முதலிய சடங்குகளை ஒருவருமறியாதவாறு செய்வதற்காகத்‌ தங்கள்‌ வீட்டிற்கு வந்தார்‌. (1)

2
அப்பொழுது மனம்‌ மகிழ்ந்த நந்தகோபன்‌ (குழந்தைக்குப்‌ பெயரிடல்‌ முதலிய மங்களச்‌ சடங்குகளைச்‌ செய்ய) ஆவல்‌ கொண்டு புன்முறுவல்‌ பூத்து' நிற்கும்‌ முனிவர்களில்‌ சிறந்த கர்க்க முனிவரை உரிய முறையில்‌ உபசரித்து, குழந்தையான தங்களுக்குச்‌ செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்களைச்‌ செய்யுமாறு வேண்டிக்‌ கொண்டார்‌. (2)

3
அப்பொழுது தளிர்‌ போன்ற தங்களது திருமேனியைத்‌ தீண்டியதால்‌ மயிர்க்கூச்செறிந்து நிற்கும்‌ கர்க்க முனிவர்‌ (நந்தகோபரிடம்‌), ஐயா! யதுகுலத்திற்கு ஆசிரியனாக இருப்பதால்‌ நான்‌ இதை (குழந்தைக்குப்‌ பெயரிடுதலை) மிகவும்‌ *ரகசியமாகச்‌ செய்ய வேண்டும்‌' என்று கூறி, தமையனோடு கூடிய தங்களுக்கு நாமகரணம்‌ (பெயர்‌ சூட்டுதலைச்‌) செய்தார்‌. (3)

4
பிரபுவே, குருவாயூரப்பா! ஆயிரம்‌ திருநாமங்களையும்‌, அளவிலா திருநாமங்களையும்‌ கொண்ட இவனுக்கு நான்‌ எப்படிப்‌ பெயர்‌ சூட்டுவேன்‌? எந்தப்‌ பெயரைச்‌ சூட்டுவேன்‌? என்று வியந்த கர்க்க முனிவர்‌ ரகசியமாகத்‌ தங்களுக்குப்‌ பெயர்‌ சூட்டினார்‌ (என்று கருதுகிறேன்‌). ப (4)

5
'க்ருஷி' என்ற வினையடிச்‌ சொல்லையும்‌, 'ண: என்ற எழுத்தையும்‌ கூட்டவே . ‘கிருஷ்ணன்‌’ என்ற சொல்‌ உண்டாகிறது. “க்ருஷி' என்ற வினையடிச்‌ சொல்‌ 'ஸத்‌' என்பதையும்‌, “ண” என்ற எழுத்து 'ஆனந்தம்‌' என்பதையும்‌ குறிக்கின்றன. ஆக 'க்ருஷி', 'ண' என்ற இரண்டும்‌ புணர ஸத்‌ சித்‌ ஆனந்தம்‌ ஆகிய பரமாத்மாவான பரமனே 'கிருஷ்ணன்‌' என்றாகிறது. இக்கருத்தை . மனதில்‌ கொண்டோ அல்லது அகில உலகின்‌ பாவங்களையும்‌ களைபவர்‌ என்ற தன்மையை நினைத்தோ, தங்களுக்கு 'கிருஷ்ணன்‌' என்ற பெயரைச்‌ சூட்டினார்‌. (5)

தங்களுக்குள்ள வேறு பல பெயர்களையும்‌, தங்கள்‌ தமையனுக்கு 'ராமன்‌' முதலிய வேறு பல பெயர்கள்‌ உள்ளதையும்‌ நன்கு விளக்கிக்‌ கூறி, (அந்த கர்க்க முனிவர்‌) தாங்கள்‌ ஸ்ரீபகவானே என்பதை வெளிப்படுத்தாது, 'மனித இயற்கையை மீறிய பெருமையுடையவர்கள்‌
இக்குழந்தைகள்‌' என்பதை மட்டும்‌ கூறிச்‌ சென்றார்‌ (6)

அந்த முனிபுங்கவர்‌ தங்கள்‌ பெருமையைப்‌ பற்றி (நந்தகோபரிடம்‌) பின்வருமாறு உரைத்தார்‌. “எந்த ஒருவன்‌ தங்கள்‌ மகனிடம்‌ அன்பு செலுத்துகிறானோ (பக்தி செய்கிறானோ), அவன்‌ (உலகில்‌) மாயையினாலும்‌, (அதனால்‌ உண்டாகும்‌) துன்பங்களினாலும்‌ கலக்கமுறுவதில்லை. எவன்‌ பகைமை கொள்கிறானோ, அவன்‌ அழிவது உறுதி.” (7)

“இக்குழந்தை பலபல அஸுரர்களை வெல்வான்‌. உற்றார்‌-உறவினர்களைக்‌ களங்கமற்ற பரமபதத்திற்கு அழைத்துச்‌ செல்வான்‌. இவனது மாசற்ற புகழை உலகமெல்லாம்‌ கேட்கும்‌” என்றும்‌ தங்களது பெருமைகளையெல்லாம்‌ கர்க்க முனிவர்‌ கூறினார்‌. .. (8)

இக்குழந்தை பகவான்‌ ஸ்ரீஹரியேதான்‌ என்று வெளிப்படையாகச்‌ சொல்லாமல்‌ சொல்லி, ‘இக்குழந்தையால்‌ நீங்கள்‌ துன்பங்கள்‌ அனைத்தையும்‌ கடப்பீர்கள்‌. இக்குழந்தையை நம்பியிருங்கள்‌' என்று தங்களை கர்க்க முனிவர்‌ மிகவும்‌ புகழ்ந்தார்‌. (9)


குருவாயூரப்பா! கர்க்க முனிவர்‌ இவ்வாறு கூறிவிட்டு, (அங்கிருந்து) சென்றபின்‌ நந்தகோபன்‌ முதலியவர்கள்‌ மிக்க மகி ழ்ச்சியடைந்து தங்களைச்‌ சீராட்டிப்‌ பாராட்டினார்கள்‌ அப்படிப்பட்ட தாங்கள்‌ கருணைகூர்ந்து எனது நோய்களைப்‌ போக்கியருள வேண்டுகிறேன்‌. (10)

Post Reply