POONTHAANAM

Post Reply
RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

POONTHAANAM

Post by RSR »

Sharing a nice article on Poonthanam - Malayalam poet, philosopher and devotee of Krushna
----------------------
இந்த படத்தில் ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி க்ருதி எழுதிக்கொண்டிருப்பவர். ஸ்ரீகுருவாயூரப்பனின் பரம பக்தனான பூந்தானம் நம்பூதிரி.
பூந்தானம் என்பது அவரது இல்லத்துப்பெயர் (கேரளத்தில் நம்பூதிரி ப்ராஹ்மணர்களின் குடிகளை இல்லங்களால் identify செய்வர், ஒவ்வொரு நம்பூதிரி குடம்பமும் ஒரு இல்லம் அல்லது மனையை சேர்ந்தவர்களாக இருப்பர் ) அவரது இயற்ப்பெயர் யாருக்குமே தெரியாது.
பூந்தானமும் ஸமான்ய மனிதனைப்போலவே வாழ்வை தொடங்கினார். திருமணம் நடந்தேறியது. திருமணம் கழித்து நெடுநாள்களாகியும் குழந்தை இல்லை. ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் ஒரு குழந்தை பிறந்தது.
சந்தோஷத்தில் திளைத்தார் பூந்தானம், தன் குழந்தையின் சோறுண்ணல்(அன்ன ப்ராசனம்) நிகழ்வை வெகு விமரிசையாக நடத்தினார். பல பந்துக்களை அழைத்து மகிழ்ந்தார். ஆனால் அந்த கண்ணனின் எண்ணம் வேறாயிருந்தது. தவழ்ந்து மகிழ்ந்து கொண்டிருந்த பிஞ்சு மேலிருந்து கீழிருந்த தொட்டியில் விழுந்து மாய்ந்தது.
தவமாய் தவமிருந்து பெற்றதை அவனே எடுத்துக்கொண்டான். துக்கம் தாளாமல் கலங்கினார். உலக வாழ்வை வெறுத்திருந்த அவரின் மேல் அந்த முகில்வண்ணனுக்கு கருணை பிறந்தது.
புல்லாய், பூவாய்,மரமாய் பல்மிருகமாய், பறவையாய்,பேயாய் எத்தனை பிறவிகளாய் இறைவனை எண்ணி தேடினாரோ அதற்கெலாம் பயனாய் பூந்தானத்திற்கு அப்பிறவி அமைந்தது.
மகவையிழந்த பின்னர், அந்த குருவாயுபுரத்திலே மம்மியூர் ஸ்ரீ ஶிவபெருமானோடு அமர்ந்திருந்த மாறாக்குழந்தையாம் ஸ்ரீ குருவாயுரப்பனை தர்சனம் பண்ணினார். அவருக்கு அடைந்த பரமானந்தம் அளவற்றதாய் இருந்தது. அன்றுமுதல் அந்த அப்பனே கதி என்றானார்.
உண்ணும் போதும் உறங்கும் போது உண்ணிக் கண்ணனே உறைந்தான். பகவான் பகவத் கீதையில் கூறும் பக்தியோகத்தில் திளைக்கத் துவங்கினார்.
பக்தி யோகியானார். ஸதா ஸர்வ காலமும் பகவத்ஸ்மரணையில் ஆழ்ந்தார். பக்திபெருகிவழியும்போது எந்தவொரு மஹானுக்கும் பிறக்கும் பக்திமாலைகள் இவர் திருவாயில் இருந்தும் துளிர்த்து.
அவர் பக்தி எந்த அளவுக்கு முற்றியதென்றால் தன்னுடைய விரசிதங்களில் அவர் கூறுகிறார்
” உண்ணி கண்ணன் என் மனத்தே ஆடும் போல் என் முன்னே வேண்டுமோ ஒரு மகன்”
என்று பொருள்பட மலையாளத்தில் பாடுகிறார்
------------------------

Post Reply