pathithoddhaarini-gangae by Smt.MS

Post Reply
RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

pathithoddhaarini-gangae by Smt.MS

Post by RSR »

(THAMIZH TRANSLATION BY RSR from English)
( KINDLY CONDONE ANY ERRORS ) 22-12-2016

https://sites.google.com/site/homage2ms ... ini-gangae
கங்கைத் தாயே!

எனது அதர்ம அவலங்கள்
அனைத்தையும் அகற்றி
உய்விக்கும் அன்னையே!

பிரமிக்கவைக்கும் உனது கடல் போன்ற பிரவாகம் ,
அடர்த்தியான வனங்கள் அலங்கரிக்கும்
இரு கரைகளையும்
அரவணைத்துச் செல்லும்
அழகே அழகு !

எண்ணிலடங்கா ஊர்களும், நகர்களும்,
உனது
பாதங்களைத் தொட்டு
புனிதமாயினவன்றோ!

பல கோடிக்கணக்கான மக்கள் ,
உனது புனித ஜல திவலைகள்
சிரசில் படும் பாக்ய தருணத்திலேயே
மேன்மையடைகின்றனர்

அன்னையே!
இந்த பாரத வர்ஷத்தில்,
கணக்கிலடங்கா யுகங்களாக .
நீ பிரவகித்து,
வறண்ட, பலனற்ற நிலமனைத்தையும்
உனது அழகு மிளிரும் அலை நடையால்
உயிரூட்டி செழிக்க வைக்கிறாய்.

நாரதன் இசையில் மயங்கி ,
மாதவன்
தனது அருட்கொடையாக
உன்னை வழங்கினான்.

பிரமனின் புனித கமண்டலத்தில்
நிரம்பி வழிந்து
சங்கரனின் ஜடை மீது
வானத்தில் இருந்து
நீ வந்து இறங்கினாய்.

காரிருளைக் களையும்
ஒளிக்கீற்று போல
வானுயரப் பனி படர்ந்த
மலைச் சிகரங்களிலிருந்து
சமவெளி நோக்கி விரைந்து ஓடி நீ
சாகரத்தில் சங்கமிக்கிறாய்.



அன்னையே!
வாழ்க்கையின் சுக, துக்கங்கள்
அனைத்தும் முடிந்து
எனது ஜீவித இறுதித் தருணங்களில்

உனது பிரவாஹ ஓசை
எனது செவிகளில்
இசையாக ஒலிக்கட்டும் !

எனது இமைகளுக்கு
முடிவிலா அமைதி தருவாய். !

அல்லலுற்று அடங்கி
இதயத் துடிப்பு ஒடுங்கும்
எனது ஜீவனுக்கு
அம்ருத நிலை தருவாய். !

அன்னையே!
பகீரதன் கொணர்ந்த பாகீரதியே !
ஜாஹ்னு முனி புத்ரியான ,ஜாஹ்னவியே!
புனித வாஹினியே!
என்றென்றும் ப்ரவஹிக்கும் கங்கைத் தாயே !

(என்னை உய்வித்தருள்க )

Post Reply