Translation/adaptation of some 'tales from Shakespeare' by Mary Lamb by RSR

Post Reply
RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Translation/adaptation of some 'tales from Shakespeare' by Mary Lamb by RSR

Post by RSR »

https://shakespeare4tamils.blogspot.com ... -page.html
NAMES HAVE BEEN CHANGED FOR INDIAN STUDENTS
WINTERS TALE
https://shakespeare4tamils.blogspot.com ... -tale.html
ராஜசிம்மனும் , பிரேமசந்திரனும் சி று வயது முதல் ஒன்றாக வளர்ந்து விளையாடி மகிழ்ந்த உயிர்த் தோழர்கள். இருவரும் ராஜ குமாரர்கள்.
வயது வந்தபின்னர் அவர்கள், தத்தமது ராஜ்யங்களின் அரசர்களாக இருந்தனர். ராஜசிம்மன் மனைவி சுசீலா என்ற பேரழகி . கற்பில் சிறந்த உத்தமி. இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு இனிதாக வாழ்ந்து வந்தனர். ப்ரேமச்ந்திரனின் ராஜ்ஜியம் கடலுக்கு அப்பால் தூர தேசத்தில் இருந்தது. அதனால் பற்பல ஆண்டுகளாக அவர்கள் சந்திக்க முடியவில்லை. இருந்தாலும் ராஜசிம்மன், மனைவி சுசீலாவிடம், பல தருணங்களில் தனது பால்ய நண்பனைப் பற்றி இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது வழக்கம் ! . அதனால் சுசீ லாவும் ,பிரேமசந்திரன் பற்றி நல்ல கருத்து கொண்டிருந்தாள். தூர தேசத்தில் இருந்தாலும், இரண்டு மன்னர்களும் அடிக்கடி கடிதப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு சமயம் , ராஜ சிம்மனுக்கு ,தனது தோழனை எப்படியாவது மீண்டும் பார்த்து இனிமை நினைவுளைப் பகிர்ந்து கொள்ள தாங்க முடியாத ஆவல் தோன்றியது. எனவே அவன் தனது உயிர் நண்பனுக்கு தனது விருந்தினனாக பல நாட்கள் வந்திருந்து மகிழ்விக்க ஒரு கடிதம் எழுதினான்........
https://comediesmarylamb.blogspot.com/2 ... w=flipcard

Ranganayaki
Posts: 1760
Joined: 02 Jan 2011, 06:23

Re: Translation/adaptation of some 'tales from Shakespeare' by Mary Lamb by RSR

Post by Ranganayaki »

The Tamil was easy for me to read, so I enjoyed it! Will check out the others 🙂👍🏻!

Nice idea to change the names to make it relatable!

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Translation/adaptation of some 'tales from Shakespeare' by Mary Lamb by RSR

Post by RSR »

@2
@Ranganayaki
Thank you madam. Glad that you approve.
Regards.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Translation/adaptation of some 'tales from Shakespeare' by Mary Lamb by RSR

Post by RSR »

Here is the second tale - thamizh adaptation of Shakespeare's COMEDY OF ERRORS as retold by Mary Lamb ( 1800) meant for English schoolboys and girls. ( tamizh by RSR)
ரத்னபுரியும் , கனகபுரியும் அடுத்தடுத்த நாடுகள்தான் ! ஆனால் , அந்த நாடுகளுக்குள் கடுமையான விரோதம் இருந்தது. !. கனகபுரி நாட்டின் குடிமகன் ரத்னபுரிநாட்டில் காணப் பட்டால் , ஒரு கோடி தண்டனைப் பணம் தந்த பிறகுதான் விடுவிக்கப் படுவான். அவ்வாறு தர முடியவில்லை என்றால் உடனடியாக தலை கொய்யப்பட்டு .தண்டிக்கப் படுவான்.

இவ்வளவு கடுமையான சட்டம் இருந்த , ,ரத்னபுரியில் , கனகபுரியைச் சேர்ந்த செல்வந்த வணிகன் .கனககுப்தன் , வந்து சிக்கிக்கொண்டான். படை வீரர்கள் அவனை , ரத்னபுரியின் அரசன் ரத்னசேனனிடம் கொண்டு சென்றனர். அரசன் கனககுப்தனிடம் " ஏனப்பா! இந்த நாட்டின் சட்டம் உனக்குத் தெரியாதா ? இங்கே எதற்கு வந்தாய்? சட்டப்படி தண்டனைப் பணத்தை செலுத்தி, உனது நாட்டிற்கு போய்விடு " என்றான்.
கனககுப்தன் " அரசே! இவ்வளவு பெரிய தொகைக்கு , வெளியூர்க் காரன் நான் எங்கே செல்வேன்! என் வாழ்க்கையே துன்பமயம்! எனவே ,நான் மரணத்தை கண்டு அஞ்சவில்லை.. அதுவே எனது துன்பத்தில் இருந்து எனக்கு விடுதலை அளிக்கும் " என்று புலம்பினான்.
அது கேட்டு அரசன், " சட்டத்தை மீற எனக்கும் கூட உரிமையில்லை. உன் துயரக்கதையைக் கூறு ! நாங்கள் கேட்கிறோம் ! " என்றான்.
கனககுப்தன் " என் துயரக் கதையை விவரிப்பது மரணத்தை விட கொடிய தண்டனை.! இருந்தும் கூறுகிறேன்" என்று தொடங்கினான்.
(read more at..)
https://shakespeare4tamils.blogspot.com ... tamil.html
-----------------

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Translation/adaptation of some 'tales from Shakespeare' by Mary Lamb by RSR

Post by RSR »

The third tale in the series.
TWELFTH NIGHT
தூது சென்ற பூச்செண்டு
கூர்ஜர நாட்டின் பிரபு , தனசேகரனுக்கு , இரண்டு குழந்தைகள். ஒரு புதல்வன் விஜயசேகரன் . ஒரு புதல்வி .புஷ்பமஞ்சரி . இருவரும் , இரட்டைப் பிறவிகள்! விஜயன் ஒரு சில . நிமிடங்கள் முந்திப் பிறந்தவன். . இருவரும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடை மட்டுமே அவர்களை வேறு படுத்திக் காட்டும். இருவரும் அற்புதமான வனப்பு மிக்க வடிவம் கொண்டவர்கள்.

ஒரே நேரத்தில் பிறந்த அந்த இரட்டையர் , ஒரே நேரத்தில், உலகை விட்டு அகலவும் . நேர்ந்திருக்கலாம்! நல்ல நேரம்., பிழைத்துக் கொண்டார்கள்.

அவர்களுக்கு பதினாறு வயது ஆகியிருந்தபோது , ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தனர் . திடீரென்று , ஒரு புயல் வீசியது. கப்பல் ஒரு பாறையில் மோதி உடைந்து விட்டது. அனைவரும் கடலில் தூக்கி எறியப்பட்டனர் .
நல்ல வேளையாக கப்பலின் மாலுமி , ஒரு சில படகோட்டிகளுடன் , ஒரு படகில் தப்பி , கரை சேர்ந்தான்.. அந்தப் படகில் புஷ்பமஞ்சரி யையும் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
தனது சகோதரன் விஜயன் இல்லாமல், தான் மட்டும் இவ்வாறு பிழைத்ததில் , மஞ்சரிக்குத் , துயரம் தாள முடியவில்லை . தனது தமையன் விஜயனை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள்..
மாலுமி " தாயே! ! நீ அழாதே! உன் அண்ணன் , ஒரு பாய்மரத்துணியைப் பிடித்துக் கொண்டு மிதந்து போனதை நான் பார்த்தேன். ,அதனால் .அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான். .நாங்களும் தேடி , எப்படியாவது அவனைக் கொண்டுவந்து விடுவோம் " என்று ஆறுதல் கூறினான்.
இதனால் , மஞ்சரி ஓரளவு நம்பிக்கை கொண்டாள் .
அவள் , மாலுமியிடம், " இது எந்த நாடு? நானும் என் அண்ணனும் சிந்துதேசம் காணப் புறப்பட்டு வந்தோம். இப்போது எங்கே இருக்கிறோம்? " என்று கேட்டாள் . அதற்கு அந்த மாலுமி
" இப்போது நாம் அந்த நாட்டில் தான் இருக்கிறோம்.". என்றான். "

உங்களுக்கு இங்கு யாரையும் தெரியுமா ? அதன் அரசன் யார்? என்று கேட்டாள் -- " நான் இங்குதான் பிறந்தவன். இந்த நாட்டின் தலைநகரம் சிந்துபுரம் , இங்கிருந்து அருகில் தான் உள்ளது. அதன் அரசன் பிரதாப்சிம்மன் , மிகவும் நல்லவர்." என்றான் அந்த மாலுமி.

அதற்கு மஞ்சரி " ஆமாம் ! என் தந்தையும் அவரைப்பற்றி என்னிடம்
அடிக்கடி .கூறியுள்ளார். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ? இல்லை என்று என் தந்தை கூறினார். " என்று கேட்டாள் மஞ்சரி!

" இன்னும் இல்லை ! "

" அது ஏன்! !புகழ் மிக்க மாமன்னர் ! நல்லவர் ! !இருந்தும் ஏன் கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்"

" அதுவா! சிந்துபுரத்தில், சிந்துஜா என்று ஒரு அழகான உயர்குடிப் பெண் மீது அவருக்கு ஒரே பித்தம் , ஒரு சில மாதங்களுக்கு முன் அவளது தந்தையும் , இன்னும் சில மாதங்கள் கழிந்து அவளது அண்ணனும் இறந்து , போனார்கள். , துக்கம் அனுசரிப்பதால்,அவள் எந்த ஆணையும் பார்ப்பதோ பேசுவதோ கிடையாது" என்று ஊரில் பேசிக்கொள்கிறார்கள். "

இது கேட்ட மஞ்சரி, தானும் தனது அண்ணன் பிரிவால் ,வாடுவது கொண்டு, சிந்துஜா மீது மிகவும் மரியாதை கொண்டாள் ,

" அப்படி ஒரு நல்ல . பெண்ணிடம் , பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? நீங்கள் ஏற்பாடு செய்ய முடியுமா " என்று கேட்டாள் மஞ்சரி.

" மிகவும் கஷ்டம். அந்த சீமாட்டி யாருடனும் பேசுவதில்லை! ராஜா கூ ட அவளை காண அனுமதி இல்லை!" என்றான் மாலுமி.

READ MORE AT
https://shakespeare4tamils.blogspot.com ... night.html

Post Reply