LANGUAGE POLICY FOR INDIA

Post Reply
RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

LANGUAGE POLICY FOR INDIA

Post by RSR »

RSR-20-4-2017
நமது நாட்டில் இரண்டு மொழிக் குடும்பங்கள் உள்ளன.
1) ஸமஸ்க்ருத மொழியை அடிப்படையாகக் கொண்டவை
மராத்தி , குஜராத்தி , ராஜஸ்தானி, பஞ்சாபி,
ஹிந்தி, பெங்காலி .அஸசாமி , ஒரியா
2) திராவிட மொழிகள் குடும்பம் (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு).
———————————-
கால்டுவெல் பாதிரியார் , ஆராய்ச்சியின் முடிவு
. நேருஜி இதை முழு மனதுடன் ஏற்கிறார். எனினும், மொழிக்கலப்பு ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது . மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளும், ஏராளமான ஸம்ஸ்க்ருத பதங்களை தங்களுடைய மொழியில் உள்வாங்கி கொண்டுள்ளன. எழுத்து விஷயயத்தில் கூட, இந்த மூன்று திராவிட மொழிகளும், சம்ஸ்க்ருத மொழியின் ஒலிக்குறியீடுகளை ஏற்று பயன்படுத்தி வருகின்றன.
தமிழ் மட்டும், அந்த ஒலிக்குறியீடுகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிராகரித்து, மிகவும் எளிமையான ஒலிக் குறியீட்டு இலக்கணத்தை கைக்கொண்டது .. உதாரணமாக ராஜன் என்ற வடமொழிச் சொல் அரசன் என்று பயன்படுத்துவது ஒரு வகை. இது சரியல்ல. மற்றொரு எடுத்துக்காட்டு … ராமன் ..(இராமன்) , லக்ஷ்மணன் (இலக்குமணன்) லட்சுமி (இலக்குமி) இப்படி மாற்றியதால் மட்டும், அந்தச் சொற்கள் நல்ல தமிழ் ஆகிவிடாது. . கோன் , மன்னன் என்பவை தூய தமிழ் சொற்கள்.
சென்ற நூற்றாண்டின் தொடக்க காலங்களில், தமிழ் உரைநடையில், ஏராளமான சம்ஸ்க்ருத சொற்கள் பயன்பட்டு வந்தன. அறிஞர்களின் முயற்சியால்,, இப்போது குறைந்து காணப்படுகின்றன. இருந்தாலும், முற்றிலும் அவற்றை நீக்குவது சரியல்ல என்பது வையாபுரிப்பிள்ளையின் அறிவுரை. குறிப்பாக ஜெயலலிதா என்ற சொல் கண்டிப்பாக தமிழ் அல்ல. ‘ வேதவல்லி ‘ யும் தமிழ் அல்ல. கருணாநிதி தமிழல்ல. ஜெகத்ரக்ஷகன் தமிழல்ல.
பல ஆங்கில சொற்களை தமிழில் எழுதும்போது . பல சிக்கல்கள் வருகின்றன. எனவே வடமொழி சார்ந்த
JA, GA, DA, DHA, GA, ( ரோஜா , கங்கை, டமாரம்,தானம், கோகுலம்) போன்ற ஒலிக்குறியீடுகளை பயன்படுத்துவது இனிமையாக உள்ளது. ஆங்கிலத்தோடும் இயைந்து வரும்.
ஆங்கிலமும், ஸம்ஸ்க்ருதமும் இந்தோ ஐரோப்பிய குடும்பங்களை சார்ந்தவை. சம்ஸ்க்ருத ஒலிக் குறியீடுகள் தெரிந்தவர்கள், ஆங்கிலப் பதங்களை சரியாக உச்சரிப்பது காணலாம்.
—————————————————————–
தனது தனித் தன்மையை , பல நூற்றாண்டுகளாக காப்பாற்றி வந்திருக்கும் தமிழ் மற்றும் தமிழ் மக்கள் மீது, வடமொழி சார்பு கொண்ட ஹிந்தி மற்றும், பெர்சியன் சார்பு கொண்ட உருது ( ஹிந்துஸ்தானி) மொழிகளை திணிப்பது , பெரும் மனக் கசப்பு ஏற்பட வழிவகுக்கும்.
————————————————————–
பின்வரும் தீர்வு சரியாக வருமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பள்ளிப் பிள்ளைகள் முதலாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு முடிய, மூன்று மொழிகள் கற்க வேண்டும். 1) ஆங்கிலம் ( சர்வதேச மொழி) 2) தாயமொழி
3) ஹிந்தி அல்லாத திராவிட மாநிலங்களை சேர்நதவர்கள், வடநாட்டு மொழி )ஹிந்தி .. அதுபோல ஹிந்தி மாநிலங்களை சேர்ந்தவர்கள், ஏதேனும் ஒரு திராவிட மொழி ( தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்).
—————————————————————————————
என்னதான் இருந்தாலும், யாருக்கும் தாயமொழியில் சிந்தனை, வருவது போல மற்ற மொழிகளில் சரளமாக வருவது இயல்பல்ல. எனவே , அகில இந்திய வேலை வாய்ப்பு,உயர்கல்வி, அரசுப்பணி அனைத்திலும் ஹிந்தி கூடாது. ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.
———————————————-
அனைத்து இந்தியர்களும் ஹிந்தியை ஏற்கும் வரை, ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரும், நேருவும் கூறியுள்ளார்கள். நியாயமான அறிவுரை. இந்திரா காந்தியும் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
————————————–
தேசிய உணர்வு மொழியினால் மட்டும் ஏற்படுவது அல்ல. அது குறிப்பாக ஒரு மக்கள் திரள் தங்களது ஆயிரக்கணக்கான வரலாற்று நிகழ்வுகள், விழுமங்கள்,நினைவுகள். கதைகள், பற்றிக் கொண்டுள்ள பெருமித உணர்வு.
அவ்வகையில், இமயம் முதல் குமரி வரை , நமது தொன்மங்கள் மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
எந்த மொழியில் கூறப்பட்டாலும். ! அந்த ஒற்றுமை உணர்வை , மொழித் திணிப்பு கண்டிப்பாக சீர்குலைத்து பிரிவினை வாதம் மேலோங்க வழிவகுக்கும்.
கூறப்போனால், ஹிந்தி பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாயினும், பண்டைய இந்தியாவின், பண்பாட்டு , அறிவியல் மொழியாக என்றும் இருந்ததில்லை.
—————–
அந்தப் பெருமை ஸம்ஸ்க்ருதத்திற்குத்தான் உண்டு.

Post Reply