செங்கோட்டை ஆவுடை அக்காள்

Post Reply
vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

செங்கோட்டை ஆவுடை அக்காள்

Post by vgovindan »

குப்பையில் கிடக்குதோர் மாணிக்கம்;
குப்பையைக்கிளறிய இக்கோழி கண்டது;
புடம் போடா சொக்கத்தங்கம் இது காணீர்;
குடம் குடமாய்க் குளித்தது போதும்; இஞ்ஞானக்
குடமுழுக்காடிடுவோம், வாரீர்.

https://www.google.com/amp/s/solvanam.c ... %2595/amp/

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: செங்கோட்டை ஆவுடை அக்காள்

Post by vgovindan »

ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல்

ஞான ரஸ கீர்த்தனைகள் (பக் 186)

(ராகம் - ஸாவேரி)

பல்லவி

ஆசையானேன் வெங்கடேச ஸ்வாமி மேலாசை ஆனேனே

அனுபல்லவி

ஆசையானேன் அவருடைய லீலையை தேசமெங்கும்
தேடியும் காணேன் கோசபஞ்சக மேல்விளையாடும்
வரத வெங்கடேசநாதன் மேலாசையானேன்         (ஆசை)

சரணம்

அகமுருகுதடி பெண்ணே, மோகம் பெருகுதடி, ஒருவகை
யாக வருகுதடி தேகஸாக்ஷியானவன் ஸரஸம்
அனேகமாமதை என்ன சொல்வேனடி போகபோக்ய ஸாதன
சித்கனபோதமாகிய ரதிவிலாஸன்மேல்   (ஆசை)

அடுத்த நாயகன் வந்து என்னை பிடித்தநாள் முதலாய் மானம்
கெடுத்த கலவியிலே மனம் பிடித்தமாகுதடி
படுத்தவுடனிது கடுத்துக்கொண்டு உடுத்த துகில் தன்னை
விடுத்து அடுத்தவேளையி லானந்தாமிருதம் குடித்து   (ஆசை)

என்னுள்ளம் குமுறுதடி பெண்ணே கடத்துக்குள்
வான் போலே ஜடத்துக்குள்ளே சிதாகாசத்தை கண்டேன்
தன்னையும் தானவன் கண்டுபடர்ந்த லீலைகள் செய்யும்
அவன்மேல் மோகமதாகினேன் அடியே, பெண்ணே     (ஆசை)

http://puthiyamaadhavi.blogspot.com/201 ... 0.html?m=1

(திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் எனப்படும் வேங்கடேச தீக்ஷிதர், ஆவுடை அக்காளுக்கு குரு எனப்படுகின்றது)

புல்லரிக்கச் செய்யும் இப்பாடல் முக்திவழி சிங்கார ரசத்தின் இலக்கணமோ!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: செங்கோட்டை ஆவுடை அக்காள்

Post by Pratyaksham Bala »

vgovindan wrote: 24 May 2019, 08:45 புல்லரிக்கச் செய்யும் இப்பாடல் முக்திவழி சிங்கார ரசத்தின் இலக்கணமோ!
தனது பழைய பாடல் ஒன்றை பதியத் துடித்திருப்பவர்க்கு இது நல்லதொரு வாய்ப்பு !

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: செங்கோட்டை ஆவுடை அக்காள்

Post by vgovindan »

யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: செங்கோட்டை ஆவுடை அக்காள்

Post by Pratyaksham Bala »

.
"செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த, ஸமரஸ) பாடல் திரட்டு"
நூலை இங்கே காணலாம்; படித்து ரசிக்கலாம்.

https://www.scribd.com/document/3732744 ... F%E0%AF%81

பல இடங்களில் பிற்காலத்தில் உதித்த பாரதி பற்றிய நினைவுகள் நிச்சயம் எழும் !

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: செங்கோட்டை ஆவுடை அக்காள்

Post by thanjavooran »

திரு ப்ரத்யக்ஷம் பாலா அவர்களே,
தொகுப்பினை அளித்தமைக்கு நன்றி. ஓய்வாக நிதானமாக படிக்க வாய்ப்பினை பெற்றதற்கு மீண்டும் நன்றி.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
26 05 2019

Post Reply