‘தனி மனிதச் சுதந்திரம்’

Post Reply
kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

‘தனி மனிதச் சுதந்திரம்’

Post by kvchellappa »

இது உண்மையா? அமெரிக்க நண்பர்கள் கூறட்டும்.
Whatsupஇல் வந்தது.

எனக்கு மிகவும் பிடித்த நண்பர் Narenthiran PS எழுதியது. மிஸ் பண்ணாதீர்கள். இப்படியான போஸ்ட்டை படித்து நாளாகிவிட்டது.

தனிமை அமெரிக்க வாழ்வின் பெருந்துயரங்களில் ஒன்று. ‘தனி மனிதச் சுதந்திரம்’ என்கிறபெயரில் அமெரிக்கர்கள் குடும்பவாழ்க்கையை, உறவுமுறைகளை முழுமையாகச் சிதைத்துவிட்டார்கள். இன்றைய இந்தியர்கள் காப்பியடித்துக் கொண்டிருக்கும் மேற்கத்திய கலாச்சாரம் இயற்கைக்கு முரணானது. கணவனும், மனைவியும், பெற்றோர்களும், பிள்ளைகளும் பணம் என்கிற ஒன்றை மட்டுமே குறியாக்கி அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கர்களிடையே இன்றைக்குக் காணப்படும் மனச்சிதைவுக்கும், கலாச்சார அழுகளுக்கும் அடிப்படைக் காரணமே அவர்களின் தனிமைதான் என்று உறுதியாகச் சொல்வேன்.

அமெரிக்க அரசாங்க நடைமுறைகளும் குடும்ப உறவுச் சிதைவை ஊக்கப்படுத்துகின்றன. பிளவுபட்ட குடும்பத்தின் ஒவ்வொரு தனி உறுப்பினனும் தனித்தனியே பொருளீட்டியாக வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் வீடு வாங்குவார்கள், கார் வாங்குவார்கள், மருத்துவ செலவு செய்வார்கள், பிற அத்தியாவசியச் செலவுகள் செய்வார்கள். அதன் மூலமாக அவர்கள் ஒவ்வொருவரும் ‘தனித்தனியாக’ அரசாங்கத்திற்கு வரிகட்டுவார்கள். அதுவே அமெரிக்க அரசிற்குத் தேவையே அன்றி, ஒன்றுபட்ட குடும்பம் ‘ஒற்றை’ வரியை மட்டுமே கட்டுவதல்ல.

நான் சொல்வது உங்களுக்கு அதிசயமாகத் தெரியலாம். ஆனால் நடைமுறை அதுதான். எங்கெல்லாம் பிடுங்கமுடியுமோ அங்கெல்லாம் பிடுங்குவது அமெரிக்க அரசின் வேலை. அது இல்லாவிட்டால் இத்தனை போர்கள் நடத்த பணம் எங்கிருந்து வரும்?

உங்களின் பதினெட்டு வயது நிரம்பிய மகளோ அல்லது மகனோ கல்லூரிக்கு படிக்கப் போவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வீடு திரும்புவது என்பது அனேகமாக நிச்சயமில்லை. அவர்களே ஒரு வேலை தேடிக் கொண்டு அமெரிக்கச் சுழலி மாட்டிக் கொண்டு தவிப்பார்கள். மீண்டும் அவர்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டிற்குத் திரும்பது என்பது முடியவே முடியாத காரியம். விலைவாசியும், மாதாந்திர அத்தியாவசிய செலவுகளும், மருத்துவச் செலவுகளும் நிறைந்த அமெரிக்க வாழ்வில் முட்டி மோதி மூச்சடைத்துக் கிடக்க்கும் பெற்றோர்களால் அவர்களைப் பராமரிப்பது என்பது முடியாத காரியம். அமெரிக்க சிஸ்டம் அதனை அனுமதிப்பதில்லை. எங்கேயாவது போய் வேலை செய், எனக்கு வரி கொடு என்பதுதான் அமெரிக்கச் சித்தாந்தம்.

விளைவு, ஏறக்குறைய ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் வரையிலான அமெரிக்கர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வேலை செய்வது, வீட்டிற்கு வருவது. மிஞ்சிப்போனால் வருடந்த்திற்கு ஒருமுறை எங்காவது வெக்கேஷனுக்குப் போவது. அல்லது அக்கம்பக்கத்து மாலுக்கோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுக்கோ போவது. அவ்வளவுதான் அவன் வாழ்க்கை. அதற்கு மேலே என்ன செய்தாலும் பணம் செலவளிக்க வேண்டும். எனவே வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவன்தான் அதிகம். இரண்டு பெற்றோர்களும் வேலை செய்கிற வீட்டில் வசிக்கிற மகன் சும்மா இருப்பதில்லை. சரியான கண்காணிப்புகள் இல்லாததால் போதை மருந்து உபயோகம் அல்லது இண்டர்நெட்டில் வன்முறை விளையாட்டுக்கள்.

விவகரத்து செய்வதனை ஊக்குவிக்கும் அமெரிக்கக் கலாச்சாரம் அவர்களின் பிள்ளைகளைப் பற்றி அதனால் அவர்களுக்கு உண்டாகும் மனச்சிதைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காரணம் புரியாத வயதில் பெற்றொர்களைப் பிரியும் குழந்தைகளின் மனது முழுமையாகச் சிதைவடைகிறது. அதுபோன்றவர்கள் எதிர்காலத்தில் மிகுந்த வன்முறை எண்ணம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். அதுபோன்றவர்கள் தங்களின் பெற்றோர்களை முழுமையாக நிராகரிக்கிறார்கள். அவர்களைக் கைவிடுகிறார்கள். It’s a vicious cycle.

மேற்கத்திய கலாச்சாரத்த உயர்வக நினைக்கும் இன்றைக்கு இந்தியர்களால் கூட்டுக் குடும்பமுறை தூக்கியெறியப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்நாள் முழுக்கத் தங்களுக்காக உழைத்த தங்களின் பெற்றோர்களை நடுவீதியில் துரத்தியடிக்கிறவர்களாக இன்றைய சமூகம் மெல்ல மாறிக் கொண்டிருப்பதனைக் காண்கிறேன். தன்னுடைய பிள்ளை அமெரிக்காவில் இருப்பதாக கண்கள் மின்னச் சொன்ன பெற்றோர்களை நினைத்துப்பார்க்கிறேன். தங்களின் நிலைமை இப்படியாகும் என்று ஒருபோதும் நினைத்திராதவர்கள் அவர்கள்.

அதேசமயம் அமெரிக்காவில் செட்டிலான மகனைக் குறை சொல்லி பிரயோஜனம் எதுவிமில்லை என்பதனையும் நாம் இங்கு கவனிக்கவேண்டும். தன்னுடைய பெற்றோர்களை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்படும் மகனுக்கு அது எளிதில் சாத்தியமாகக் கூடிய விஷயமில்லை. ஏனென்றால் செலவுகள் அப்படியானவை. அப்படியே அவர்கள் வந்தாலும் அமெரிக்க வீடு ஒரு தனிமைச் சிறை என்பதினை உணர்ந்து நொந்து போவார்கள். ஊரில் நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ வாழ்ந்தவர்கள் ஆளரவமற்ற அமெரிக்கச் சாலைகளில் யாருடன் பேசமுடியும்? உறவாடமுடியும்?

இந்தவிஷயத்தில் நானும் ஒரு குற்றவாளிதான். வயோதிக காலத்தில் தனிமையில் வாழும் என்னுடைய அன்னையை நினைத்து உள்ளுக்குள் ஊமைக் கண்ணீர் வடிக்காத நாள் இல்லை என்றாலும் என்னால் இயன்ற பண உதவியைச் செய்வது தவிர்த்து வேறேதுவும் செய்ய முடிந்ததில்லை. இங்கு அழைத்துவந்தாலும் இந்த ஊரின் தனிமைச் சூழலில் அவர்களால் வாழ முடியவில்லை. அதற்கும் மேலாக மாமியாரை அனுசரித்துப் போகும் மருகளை உலகம் அபூர்வமாகவே கண்டிருக்கிறது. It’s a universal problem. Nothing could be done.

கட்டுத்தளைகளை அறுத்துக் கொண்டு அமெரிக்காவை விட்டு விலகுவது என்பது எளிதான ஒன்றல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அப்படியே இந்தியாவிற்கு வந்தாலும் நான் என்ன செய்து வாழமுடியும் என்கிற தயக்கம் நம்மை இயங்கவே விடாது. தலைமுறைகள் மாறிவிட்டன. அடுத்த தலைமுறைக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இதே பிரச்சினைதான் என்னைப் போன்ற பலருக்கும் இருக்கும். இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

தனிமையைப் பற்றி எழுத ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன்.

காலையில் கண்விழித்துப் பார்க்கையில் கண்பார்வை முற்றிலும் மங்கலாகத் தெரிந்தது. இடது கண்ணில் உறுத்தல். கண்ணாடியைப் போட்டதும் எல்லாம் முப்பாரிமானத்தில் தெரிந்தது. Everything was blurry. எதுவுமே சரியாகத் தெரியவில்லை என்றதும் மனது பதைத்துவிட்டது. மனைவி, குழந்தைகள் இந்தியாவிற்குப் போயிருக்கிறார்கள். சனிக்கிழமையாதலால் என்னுடைய கண் மருத்துவர் கிட்டவில்லை. என்னை யாராவது எமெர்ஜென்ஸிக்கு அழைத்துப் போகவேண்டும் என்று நினைத்து இரண்டொரு நண்பர்களுக்குப் ஃபோன் செய்தால் ஒருத்தர் அட்லாண்டாவில் இருக்கிறார். இன்னொருத்தரின் குடும்பம் இந்தியாவிற்குச் செல்வதால் அவர்களை விமான நிலையத்தில் விட்டுவரப் போய்க் கொண்டிருக்கிறார்.

நடப்பது நடக்கட்டும் என்று நானே தட்டுத்தடுமாறி எமெர்ஜென்ஸிக்குப் போனேன். அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டொரு சொட்டு மருந்து எழுதித் தந்திருக்கிறார்கள். போட்டபிறகு கொஞ்சம் சுமாராக இருக்கிறது. அதன் காரணமாகவே இதனை எழுத முடிந்திருக்கிறது. வின்னும் முழுமையாக சரியாகவில்லை. திங்கட்கிழமை எனது கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

Yes, it’s a sob story. But it is my story. So you don’t have to worry about it.

கொடிது கொடிது தனிமை கொடிது. அதனினும கொடிது அமெரிக்காவில் தனிமை.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Post by vgovindan »

தமிழில் ஒரு வழக்கு - பட்டாத்தால்தான் தெரியும், பாப்பானுக்கு என்று. இதனை கற்பனயென்று ஒதுக்கவும் முடியாது, கதையென்று இரசிக்கவும் முடியாது. கடைசியில் எல்லோரும் தெய்வத்தினைக் குறை கூறி முடிப்பார்கள். நம்மைத் திருத்திக் கொள்வதற்கு வயது ஒரு தடங்கலில்லை. முயற்சி திருவினையாக்கும். கடவுளை நம்பாவிட்டாலும், நம்முள்ளிருந்து ஆட்சி செய்யும் மனச்சாட்சியைக் கேட்டுப் பார்க்கலாமே.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: ‘தனி மனிதச் சுதந்திரம்’

Post by arasi »

நண்படரிடம் கண் வைத்தியர், கவலைப்படக் கூடிய பாதிப்பு ஒன்றுமில்லை எனக் கூறி விட்டார் என நம்புகிறேன்...

செல்லப்பா,
இந்தப் பதிவு பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன?

கோவிந்தன்,
இரண்டு விஷயங்கள் இப் பதிப்பிலே முன் நின்றன. ஒன்று, அமெரிக்க நாட்டின் குறைபாடுகள். மற்றொன்று, இந்நாட்டின் கலாசாரக் கேடு. இரண்டிலும் ஓரள‌வுக்கு உண்மை காணலாம். ஆனால் இந்தப் பகிர்வில் ப்ளாக் அன்ட் ஒய்ட்--டாக எதையும் காணும் தன்மை ஒலிக்கிறது. நீங்கள் அதற்கு மூன்றாவது டைமென்ஷனைக் கொண்டு வருகிறீர்கள் :)
இது போல் பத்துப் பேர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், அவை ஒவ்வொன்றும் இந்தப் பார்வையிலிருந்து சிறிதாவது வேறுபட்டிருக்கும். இல்லை, இது போன்ற கருத்துடையவர் ஒத்துப் போகும்படியுமிருக்கலாம்.

இந்த நாட்டில் பல காலம் வசித்தவர்கள், நல்லவை பல பற்றியும், மற்றும் காலப்போக்கில் நலம் கெட்டுப் போன சிலவற்றையும் பற்றித் தங்கள் அனுபவங்களிலிருந்து விவரிப்பார்கள். இன்றைய அமெரிக்க நாட்டின் ஆட்சி நிலையிலே எதுவும் பேச இயலாதென்றும் சொல்லக்கூடிய வாய்ப்புm உண்டு!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: ‘தனி மனிதச் சுதந்திரம்’

Post by arasi »

சிந்தித்துப் பார்க்கையிலே, பொது இடத்திலே இது பதிக்கப்பட்டாலும், மேலும் இதைப் பற்றி மற்றுமொரு இடத்திலும் விவாதிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

கோவிந்தன்,
நீர் எழுதியதை நான் படித்த போது, அதில் தெரிந்த அக்கரை அவரது எண்ண‌ங்களுக்கு மற்றுமொரு டைமென்ஷனைக் கொடுக்கிறது, என எனக்குத் தோன்றியது. இத்தனை காலமாக ரஸிகாஸ் மூலமாகத் உங்களைத் தெரிந்ததனாலும் கூட.

குறைகளுடன், நிறைவுகளையும் அவர் கண்டிருப்பார், கண்டுகொண்டிருப்பார். இந்தப் பதிவிலே அது தெரியாததால்தான் இத்தனை தூரம் விவரிக்க வேண்டி வருகிறது. உதாரணமாக, நாங்கள் என்றோ விட்டு வந்த இந்தியா எவ்வளவு மாறியிருக்கிறது, மாறி வருகிறது! நாங்களும் அது பற்றிப் பிர‌லாபிக்கிறோம். ஆனால், அது மட்டும்தானா இந்தியாவிடம் எங்களுக்கு இருக்கும் உணர்வுகள்! இதற்கு மேல் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை...

Post Reply