Nakaicchuvai

Post Reply
kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Nakaicchuvai

Post by kvchellappa »

From Amrithavarshini:

இலக்கியச் சுவைகளுள் மோனையைப் போல் முதலில் நிற்பது நகைச்சுவை. “அது மனித குலத்திற்கு வாய்த்த வரம், அந்தரங்கத்தைப் புலப்படுத்தும் ஒளிச்சரம்” என்பார் தெலுங்குக் கவிஞர் சி.நாராயண ரெட்டி.“பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர் புன்னகை” என்று கவிக்கோ அப்துல் ரகுமானும், “பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்று பேராகும்” எனக் காவியக் கவிஞர் வாலியும் புன்னகையைச் சொல்லோவியமாக வடிப்பர். “ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் இதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது” எனச் சிரிப்புக்குப் புகழாரம் சூட்டுவார் கவிப்பேரரசு வைரமுத்து.“என்னைப் பொறுத்த வரை பிரார்த்தனை எவ்வளவு புனிதமானதோ அதே போல் சிரிப்பும் புனிதமானதாகும்” எனச் சிரிப்பின் சிறப்பினைப் பறைசாற்றுவார் ஓஷோ.“பொதுவாகவே, அறிவைத் துலக்க, ஆன்மாவை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள, உடம்பில் வியாதிகள் வராமல் தடுத்துக் கொள்ள நகைத்தல் நல்லது” என மூதறிஞர் வெ.சாமிநாத சர்மா கூறியிருக்கிறார். நகைச்சுவையின் தனிச்சிறப்பு ஒரு கருத்தை நகைச்சுவையோடு சொல்லும் போது அந்தக் கருத்து கேட்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். நகைச்சுவைக்கு உள்ள தனிச்சிறப்பு அது.நேர்காணல் ஒன்றில் இக்கருத்தினை விளக்க எழுத்தாளர் சாவி காட்டிய உதாரணம்சாப்பிட வந்தவர் ஓட்டல் சர்வரிடம் கேட்கிறார். 'இதோ பார்! நீ கொண்டு வந்து வைத்த கோழி பிரியாணியில் ஒரு ஈ செத்துக் கிடக்குது!''இவ்வளவு பெரிய கோழி செத்துக் கிடக்குதே, அது உங்க கண்ணில் படலே. சின்ன ஈ செத்துக் கிடப்பது மட்டும் பெரிசாத் தெரியுதாக்கும்!' என்றார் சர்வர். 'எப்போதோ படித்த இந்த நகைச்சுவையைத் துணுக்கை நினைத்துச் சிரிக்கும் போதெல்லாம் கூடவே அதில் பொதிந்துள்ள கருத்தும் என்னைச் சிந்திக்க வைக்கும்' என்றார் சாவி. ஒரு தடவை திருக்குறளார் வீ.முனிசாமியும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு ரயில்வே 'கேட்'டருகே டிரைவர் காரை நிறுத்தினார்.கலைவாணர், “என்னப்பா ஆச்சு?” என்று கேட்டார். “'கேட்டு' சாத்தியிருக்கிறான் ஐயா!” என்று டிரைவர் சொன்னார். உடனே கலைவாணர் திருக்குறளாரைப் பார்த்து, “பொய் சொல்லுகிறான்,பார்த்தீர்களா? 'கேட்டு' சாத்தினான் என்று சொல்லுகிறானே, நம்மைக் கேட்டா சாத்தினான்?” இயல்பான நகைச்சுவை என்பது இது தான்! சொல் விளையாட்டின் மூலம் கலைவாணர் இங்கே நயமான நகைச்சுவையை தந்தார்.மூவகை நகைச்சுவைகள் நகைச்சுவையில் முறுவலித்தல், அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என மூன்று வகைகள் உண்டு. முதலாவது புன்முறுவல்; அதாவது, குமிண் சிரிப்பு. இடைப்பட்டது அளவான சிரிப்பு; மூன்றாவது வெடிச் சிரிப்பு. 1925-ல் பெர்னார்ட் ஷாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதும் வழக்கமான நகைச்சுவை உணர்வோடு ஷா கூறினார்“இந்த ஆண்டில் நான் நுால் ஒன்றும் எழுதவில்லை. உலகம் அதைக் கண்டு மகிழ்ந்து, எனக்கு நன்றி பாராட்டிச் செய்த செயல் இது.” படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பைத்தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து சொற்பொழிவின் இடையே சொன்ன நகைச்சுவை“ஒருவன் 'நான் என்ன பிராணி என்றே எனக்கு தெரியவில்லை' என்று நண்பனிடம் கூறினான்.'ஏன்?' என்று நண்பன் கேட்டான். அதற்கு அவன் சொன்ன பதில்... 'பூனையைப் பார்த்து எலி பயப்படுகிறது; எலியைப் பார்த்து கரப்பான் பூச்சி பயப்படுகிறது; கரப்பான் பூச்சியைப் பார்த்து என் மனைவி பயப்படுகிறாள்; மனைவியைப் பார்த்து நான் பயப்படுகிறேன். நான் என்ன பிராணி என்றே தெரியவில்லை!'” கேட்பவர் இடையே அளவான சிரிப்பைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. அறிஞர் அண்ணாதுரை பேசிய கூட்டத்தில் சில முரட்டு இளைஞர்கள் அவருக்கு முன் வந்து, “ஆணையிடுங்கள் அண்ணா, எங்கள் தலையையே உங்களுக்குத் தருகிறோம்” என்றார்கள். “தம்பிகளே! உங்கள் தலைகள் வேண்டாம்; இதயங்கள் தாருங்கள் போதும்!” என்றார் அண்ணாதுரை.காரில் திரும்பி வரும் போது நண்பர்கள் கேட்டார்கள்: “இதயங்கள் தாருங்கள், தலைகள் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?” “ஆமாம், அவர்கள் தலைகளில் என்ன இருக்கிறது? அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று அண்ணாதுரை சொன்னதும் நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வெடிச் சிரிப்பை எழுப்பும் அற்புதமான நகைச்சுவை இது! 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'- சிரிப்போம், மகிழ்வுடன் வாழ்வோம்


ANBUDAN<>KSR<>

Courtesy:பேராசிரியர் இரா.மோகன்

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nakaicchuvai

Post by arasi »

ஆம், வாய் விட்டுச் சிரிப்போம், நோய் விட்டுப் போகும் :)

நன்றி,செல்லப்பா. நல்லதோர் பதிவு...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

நெட்டில் சுட்ட ஒரு காமெடி.

டிகாக்ஷன் போடும் கலை!

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் –அந்
தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி.வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர்சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப்
போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால்வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்
திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது...மனைவி காப்பிபோடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க”என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளைஎட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராகஇருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம்மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்குஇருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால்எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடிபட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி
கணபதி ஒட்டிவைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம்.எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப்ஆகிவிட்டது.
காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும்மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவதுகலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாகசேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா…

மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்துஇருக்கும்.
அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால்சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதைஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார்அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகலஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சுமமூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படிபாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவேநுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்குகோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என்நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும்ஆயி
டுட்டுது…
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு,தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போகவேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான்அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான்சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலேஅம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்ககண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ்குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை
(குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாகஇறங்குமாம்.

ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டே
ன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தர வே
ண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமானகொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா,தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனைஎடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான்அடுப்பேற்றி
னேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி,தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அதுஇஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரதயுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில்கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர்இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.

”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள்
வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாகமறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில்மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலைசெய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்துஅலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும்பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும்விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒருஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துஅதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து

‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன்ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால்என்று ஜோடி பிரிந்தது.
செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கிமனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள்,

‘தூ தூ… என்று மனைவியின்கூப்பாடு.

”அழுத்தவே இல்லியா…”
கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி,உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னுதெரியாது?”

”எதை?”

”என் தலையை!”

மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம்பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் –வேலை முடிஞ்சிதுன்னு.”

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம்தெரிவித்தேன்.
அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை…

”இதனுடைய மேல் பில்ட்டர்எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சிகாப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாகஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு
வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னாபொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல ஷாவனிஸம்!”v

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பிபோடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

முகச்சுவடியில் சுட்டது

நகைச்சுவைப்பதிவு

"எங்களுக்கும் காலம் வரும்..."படித்ததில் பிடித்தது...

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார்.

அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர்.

எப்படியாவது இன்று அவரைச் சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாகத் தீர்த்து வைக்க வேண்டும்.

அது முடியாவிட்டால் இனி மேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டி விட்டு வர வேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

வாடிக்கையாளரின் வீடானது அந்தத் தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.

தனது வண்டியை நிறுத்தி விட்டு, கேட்டினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

கேட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது.

அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது.

அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார்.

அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன.

அதனைப் பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.

"வணக்கம்" என்ற குரல் கேட்டது.

அதிர்ச்சியுடன் பின் வாங்கினார். பின் குரல் தொடர்ந்தது...

"தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்...
ஃபார் இங்க்லீஷ் பிரஸ் நம்பர் 2..." என்று சொன்னது.

என்னடா இது விளையாட்டு... என்று நினைத்தவாறே எண் 1ஐ அழுத்தினார்.

இப்பொழுது "தெரிந்தவர் என்றால் எண் 1ஐ அழுத்தவும். தெரியாதவர் என்றால் எண் 2ஐ அழுத்தவும். கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3ஐ அழுத்தவும். கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4ஐ அழுத்தவும். பேசியே அறுப்பவர் என்றால் எண் 5ஐ அழுத்தவும். நண்பர் என்றால் எண் 6ஐ அழுத்தவும். சொந்தக்காரர் என்றால் எண் 7ஐ அழுத்தவும். கூட்டமாய் வந்திருந்தால் எண் 8ஐ அழுத்தவும். பால், பேப்பர், தபால் காரர் என்றால் எண் 9ஐ அழுத்தவும். மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0வை அழுத்தவும்" என்ற அறிவிப்பு வந்தது.

ஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில் வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2ஐ அழுத்தினார்.

மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...

"வணக்கம்... வாருங்கள்... வீட்டின் முதலாளி பணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்" என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..." என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது.

கஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப் போய் விட்டார்.

பாடல் முடியும் முன்பே எண் 2ஐ அழுத்தினார்.

"அன்பரே... நீங்கள் முழுப் பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.

"நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்து விடும்... கிடைக்கும் என்பார் கிடைக்காது... கிடைக்காதென்பார் கிடைத்து விடும்..."

மனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நேரம் ஆக ஆக இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.

பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2ஐ அழுத்தினார்.

"மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க இயலாது. அவர் இப்பொழுது தூங்கி விட்டார். ஆனால் உங்களால் திரும்பிப் போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டுமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும்" என அறிவித்தது.

தன்னைத் தானே நொந்து கொண்டவராய், "உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் நூறு ரூபாயைப் போட, கதவு திறந்து கொண்டது.

தன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி வரை ஸ்டார்ட் ஆகவேயில்லை...

வேக வேகமாகத் தள்ளிக் கொண்டு, அந்த வீட்டை கோபமாகப் பார்த்தவாறே தன் வீடு நோக்கிக் கிளம்பினார்.

எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது....

"எங்களுக்கும் காலம் வரும்..."

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

*நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.*

திரும்பி வர
10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து
நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன்.
--------------------------
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல
பக்கத்து வீட்டுக்கு
பேப்பர் போட்டாச்சான்னு daily அவங்ககிட்ட வழிய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன்
வேற.
-------------------------
சமையல் கட்டு
பக்கம்
போக
வேணாம்

ஸிங்க்கு
காவி கலருக்கு
மாத்தினீங்கன்னா
சும்மா இருக்க
மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு
விளக்கேத்துங்க

ரெண்டு ஸ்லோகம்
சொன்னா நாக்கு
வெந்துடாது
------------------------
வாக்கிங் போறச்சே
டீ ஷர்ட்
போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம்

ஜிப்பா கலர்ல
Free size சுடிதார்
டாப்ஸ் இருக்கு

அனிதா அன்னிக்கு
வழிச்சிண்டு
சிரிச்சா
---------------------
Food coupon
க்ரெடிட் கார்டு
எங்கிட்ட இருக்கு...

பீரோவ
உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும்
நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன்

நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க
*வேண்டாம்னுட்டு*
--------------------
பால் ஒரு வாரத்துக்கு
வேண்டாம்னுட்டேன்

அங்க ஸீன் க்ரியேட்
பண்ணாம
வெளில போய்
சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது
இடது புறமும் இருக்கு.

மாத்தி போட்டுட்டு
Uncomfortable-ளா
இருந்தது ஆஃபீசுலன்னு
புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு
அவுத்து போடறத
தண்ணில நெனச்சு
காயப்போடுங்க.

வளத்தவங்கள
சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த
உடனே பால்கனில
நின்னுண்டு
பல் தேய்காதீங்க..
A.M. மா... P.M. மா...
Confirm பண்ணின்டு
பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க
medical report
பர்ஃபெக்ட்டா இருக்கு.

அந்த
லேடி டாக்டரை
பாக்கவேண்டிய
அவசியமில்லை.
-----------------
என் தங்கையின்
பிறந்தநாள்
போன மாசமே
நாம அட்டண்ட்
பண்ணியாச்சு.
முடிஞ்சிடிச்சி.

நடு ராத்திரில
விஷ் பண்றேன்
பேர்வழின்னு
வழிய வேணாம்
---------------
பத்து நாள்
wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
------------------
அப்றம்
என் தோழிகள்
எல்லாமே
Out of station. .
------------------
கட்டக் கடேசியா
ஒண்ணு.

ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம. !!!
-----------------------
*இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்*

*என்னா வில்லத்தனம்...*

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

தாய் மொழியின் அருமை

Power of mother tongue

Son: அம்மா நீ என்கிட்டே பொய் சொல்லி இருக்கே
Mom : I told to u every time please speak in English.
Son : Ok Mom u lied to me.
Mom : When my son. ?..
Son : U said that my younger sis is an angel.
Mom : Yes, she is
Son : So why didn't she fly when I threw her from our balcony.
Mom : ayyo!!!! Saniyane, yengada pottu tholachha kuzhandhaya????? அய்யயோ சனியனே எங்கேடா போட்டுதொலைச்சே அவளை ????
Son : Talk in English Mom.. I was just kidding

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share

*சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள்*

ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...

நண்பர் 1 : தினமும் நம்ம ரவி அவன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறானே அவ்வளவு பாசமா அவனுக்கு மனைவி மேல?
நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!

மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!

டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!

Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...

*ஹார்ட் அட்டாக்'னா என்ன?*
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்...
உனக்கு படபடப்பா இருக்கும்..
அது உன்ன பார்த்து சிரிக்கும்..
உனக்கு கை கால் லேசா நடுங்கும்...
அது உன் பக்கத்துல வரும்...
உனக்கு வியர்த்து கொட்டும்...
அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......

அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?

கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''

"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"

ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.?!

(பரீட்சை ஹாலில்)
ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!

வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!

இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்

"கடலை எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்? "
"அளந்து ஊத்தும்போதுதான்...."..
(சுட்டது)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share

வங்கி...

வணக்கம் சாமி.. என் பேரு மாரியம்மா.. இந்த ஐநூறு ரூவா நோட்டை மாத்திக் கொடுங்க..

இந்த பணம் எப்படி வந்திச்சு.. Source of income..?

சோறுல்லாம் இல்லைங்க. காலையில ராவுல இட்லி கடை மட்டும்தாங்க.

ஓ, டிபன் கடையா.. சரி, டின் நம்பர், பேன் நம்பர் சொல்லு..

பேனுல்லாம் மாட்டலைங்க.. மரத்தடியில நாலு கீத்தைக் கட்டி மறைச்சிருக்கேன்.. டின்னுல கைகழுவ தண்ணி வச்சிருக்கேன்..

மரத்தடியா.. ? PWD  என் ஓ சி வேணும்.பொல்லுசன் கண்ட்ரோல் போர்டு அப்ரூவல் வேணுமே..

என் வீட்டுக்காரரை கேட்கறீங்களா..அவரு போய்ட்டாருங்க அய்யா..வேணுகோவாலு முழு பேரு..

அய்யய்யே .. பணத்தை கொடுத்துட்டு போம்மா. நான் கேட்டதெல்லாம் எடுத்துட்டு வா..அப்புறம் பாத்துக்கலாம்...வீட்டு நம்பர் சொல்லு..

கதவு இல்லைங்க..சாக்கு மறைப்புதான்.. அதில நம்பர் ஏதுங்க..

தெரு பேரு..

ரோட்ல ஒரு ஓரமா குடிசை போட்ருக்கேன்..அது தெரு இல்லைங்க..

சரி, பின்கோடு ..?

மண் ரோடுதாங்க..

ஈ மெயில் இருக்கா..

சாணியக் கரைச்சு வெளக்கமாத்தால சுத்தமா அடிச்சு வச்சிருக்கேன்.. ஈ எறும்பு ஒண்ணும் அண்டாது..

பேங்கு அக்கவுண்ட் நம்பரை கொடு..

பேங்கு எங்கயிருக்கு சாமீ...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share

பாட்டி : எத்தனை
நாளாடா இந்த பழக்கம்?

பேரன் : எந்த பழக்கம்?

பாட்டி - லாட்டரி சீட் வாங்குறது

பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே

பாட்டி - பொய் சொல்லாதே இப்போ தான் சட்டை பையிலே இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்து போட்டேன்

பேரன் : ஐயோ கிளவி அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

ஒரு பகிர்வு.
மன்னிக்கவும் ஆங்கிலத்தில். யாரேனும் சுவை குன்றாமல் தமிழாக்கம் செய்தால் மகிழ்ச்சி.

GRANDMA IN COURT..Hilarious

Lawyers should never ask grandmas a question if they aren’t prepared for the answer!

In a trial, a small-town prosecuting attorney called his first witness, an elderly grandmother to the stand. He approached her and asked; "Mrs. Jones, do you know me?"

She responded, "Why, yes, I do know you, Mr. Williams. I've known you since you were a young boy, and frankly, you're a big disappointment to me.. You lie, cheat on your wife, manipulate people and talk about them behind their backs. You think you're a big shot when you haven't the brains to realize you never will amount to anything more than a two-bit paper pusher. Yes, I know you.."

The lawyer was stunned! Not knowing what else to do, he pointed across the room and asked, "Mrs. Jones, do you know the defense attorney (the opponent's lawyer)?"

She again replied, "Why, yes, I do. I've known Mr. Bradley since he was a youngster. He's lazy, bigoted, and has a drinking problem. He can't build a normal relationship with anyone and his law practice is one of the worst in the state. Not to mention he cheated on his wife with three different women. One of them was your wife. ..Yes I know him."

The defense attorney almost died.

The judge asked both lawyers to approach the bench and in a quiet voice said: "If either of you rascals asks her if she knows me, I'll send you to jail for contempt of court",

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: Nakaicchuvai

Post by grsastrigal »

CHO's drama: Janata colony. His comedy will live for ever. WE need to have a separate thread for this genius !

(சோ' நடிக்கும் ஒரு நாடக காட்சி) ஜனதா நகர் காலனி எலக்ஷன்

ஜனதா நகர் காலனியில் ‘குடியிருப்போர் அசோஸியேசன்’ சார்பாக தேர்தல் நடத்தலாம் என்று முடிவெடுத்திருப்பார்கள்;

அப்போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் இது;

பாகவதர்: “என்னக் கேட்டா இந்த எலெக்ஸனே வேண்டாம்னு தான் எனக்குத் தோணறது”

காலனி வாசி: “என்ன...என்ன சொல்றாரு இவரு?”

பாகவதர்: “ஏன்னா நம்ம காலனில தகராறுன்னு ஒண்ணு கிடையாதே!”

சோ: “அதுக்காக தான் எலெக்சன் நடத்தப் போறோம். அப்புறம் தகராறு இல்லைங்கற குறையே உங்களுக்குத் தீர்ந்து போயிடும்”

காலனி வாசி: எப்பிடி?

சோ: “எலக்சன் வச்சா தகராறு வரும். அந்தத் தகராறைத் தீர்த்து வைக்க ஒரு தலைவர் தேவை, அந்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு எலக்சன் தேவை. அதனால தான் எலக்சன் நடத்தப் போறோம்.என்ன புரியறதா?”

கம்பர் ஜெயராமன்: சுப்புணி தயவு பண்ணி எந்த விசயத்தையும் நீ விளக்கமா சொல்லாத! ஒரே கன்ஃபியூஸனா இருக்கு!

சோ: டாக்டர் சார் உங்களுக்குக் குழப்பமா?!

கன்ஃபியூஸனா?! ஒரு இழவும் புரியலயா!

CHO- கரெக்ட்டா எலக்ஸன்ல ஓட்டுப் போடற மூடுக்கு வந்துட்டேள் நீங்க!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share

Prize winning joke of the year-

A man asked
Actor Vijayakanth,
"why Nareandra modi goes walking at evening not in the morning". Vijayakanth replied ''Brother, Modi is PM, not AM' '

Superb
Doctor: Which soap do you use?
Patient: K. P. Namboodiri's soap.
Doctor: Paste?
Patient: K. P. Namboodiri's paste
Doctor: Shampoo?
Patient: - K. P. Namboodiri's shampoo.
Doctor: Is K.P. Namboodiri an international brand?
Patient: No.
K. P. Namboodiri is my Roommate !

Ø A bookseller conducting a market survey asked a woman – “Which book has helped you most in your life?”
The woman replied – “My husband’s cheque book !!”

Ø A prospective husband in a book store “Do you have a book called, ‘Husband – the Master of the House’?
Sales Girl : “Sir, Fiction and Comics are on the 1st floor!”.

Ø Someone asked an old man : “Even after 70 years, you still call your wife
"Darling, Honey, Love".
What’s the secret?
Old man: I forgot her name and I’m scared to ask her.

Ø A man in Hell asked Devil: Can I make a call to my Wife ?
After making call, he asked how much to pay.
Devil : Nothing.
Hell to hell is Free.

Ø Husband to wife,
"Today is a fine day"
Next day he says : Today is a fine day. Again next day,
he says same thing.
Today is a fine day. Finally after a week, the wife can’t take it and asks her husband – since last one week, you are saying this “Today is a fine day’. I am fed up. What’s the matter?
Husband : Last week when we had an argument, you said, “I will leave you one fine day.”
I was just trying to remind you……

Have a laugh, laughter is the best medicine..
Joke time....

Argument between British and Indian.
British: we spoiled ur mother land for 200 yrs
"hahaha"

India:- "hahaha"
we r spoiling your mother tongue daily "hahahahahaha"

.................................

Teacher - what is d full form of MATHS..
Student- mentally affected teacher harassing student


Sardar in computr exam.
Exmnr- wht iz microsoft excel ?
Sardar - i thnk it iz a new brand of surf excel to clean d computer...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share
ஒருத்தரு , மன நிம்மதி வேணும்ன்னு...
ஒரு சாமியாரை பார்க்க போயிருக்காரு..

சாமியார்ட்ட
, "வாழ்க்கை அமைதியா , சந்தோஷமா போகணும் , அதுக்கு நா என்ன செய்யணும், சாமி "னு கேட்டுருக்காரு.

சாமியார், " உங்க, மனைவியோட சமையலை புகழ்ந்து பாராட்டியிருக்கிறீங்களா" னு கேக்கவும்

இவரும் ,

"கல்யாணமாயி, இந்த இருவது வருஷத்தில ஒரு நா கூட அவ சமையலை புகழ்ந்து பாராட்டுனதில்ல" னு ரொம்ப மெதப்பா பதில் சொல்லிருக்காரு..

சாமியார், "அடுத்த தடவ சாப்பிடும் போது மனைவியின் சமையலை புகழ்ந்து பாருங்கன்னு" அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சிருக்காரு...

வீட்டுக்குப்போனவருக்கு அவரு மனைவி, சப்பாத்தியும் குருமாவும் மனைவி பரிமாறியிருக்காங்க !!

அத சாப்பிட்டு, கணவரும், ரொம்ப குஷியாகி , சப்பாத்தி, குருமா இரண்டையும் ஒரேடியா புகழ்ந்து, மனைவியையும் புகழ்ந்து தள்ளிட்டாரு...

இந்த திடீர் புகழ்ச்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மனைவிக்கு கோபம் வந்ததுச்சாம் !

கையில் இருந்த கரண்டியால் அவரு தலையில் "டங் டங்" ன்னு அடிச்சுக்கிட்டே..

"இந்த இருவது வருஷமா என்னைப் புகழாத நீங்க, இன்னிக்கி பக்கத்து வீட்டிலிருந்து வந்த சப்பாத்தியையும் குருமாவையும் புகழ்ந்து பாராட்ட எப்படித் தோணிச்சு " ???... ன்னு கேட்ட... மனைவியப் பார்த்த
கணவர் " ஙே.." என்று மயங்கினான்
😁😁😁😂😂

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share

மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"

கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு"

ம;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"

க;"என்னா சொன்னாங்க"

ம;"நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?

க; "ஏனாம்?

ம;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."

க;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்"

ம; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"

க; "கிடைச்சுட்டாங்க"

ம; "அப்படியா யாரு?"

க;"உங்கம்மா.இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்"

ம;"என்னது?பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?"

😜 🤜 உங்கம்மானா அம்ம்மா!  எங்கம்மானா சும்மாவா? 🤛💪

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share

> கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்.....,   பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய்  பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை..  Apple iphone 7 box அவர் கைல.
>
> பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100.
>
> அக்கா பேந்த பேந்த முழிக்க, மாப்பிள்ளை எரிச்சலோடு சொன்னார்....
>
> "இப்படி தானே இருந்து இருக்கும் எனக்கும்"😠😡😡😡😡😡
>
> 😂😂😂😂😂

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nakaicchuvai

Post by arasi »

எத்தனை வகை நகைச்சுவை! எல்லாவற்றையும் சேர்த்துப் ப‌டித்தேன். நன்றி தஞ்சாவூராரே!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share
Not to hurt anybody's feeling

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க" மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*
*தேய்ச்சி விடேன்டி!"*

*மனைவி: "ஏன்,*
*நீங்களே தேய்க்க கூடாதா?"*

*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*
*சொல்லி அனுப்பினார்,அதான்"*

😂😂😂😂😂
*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*

*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*

*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*

😝😝😝😝
கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்😍

இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் 😂😂

மகன்:
சகலை என்றால் என்னப்பா?

அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...

😳😡👊😁😁
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.." 😇

"ரொம்ப நீளம்னு எழுது..."😝😀😀

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nakaicchuvai

Post by arasi »

நகைக்கிறேன், ஆனால் சுவைக்க முடியவில்லையே? பெண்ணாய்ப் பிறந்ததாலோ? :)
அரக்கி'த்' தேய்க்கும் தைலம்--மேலும் சிரிக்க வைக்கிற‌து :)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

அரசியாரே ,
மன்னிக்க வேண்டுகிறேன். இனி இத்தவறு நேராமல் கவனமாக இருப்பேன்.
தஞ்சாவூரான்
16 02 2018

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nakaicchuvai

Post by arasi »

அடடா, நகைத்துக்கொண்டுதானே சொன்னேன்? அதனாலென்ன? அடுத்த முறை ஆண்கள் பற்றிய ஜோக்ஸ் ஆகப் போட்டு விடுங்களேன்! எப்படியிருந்தாலும், உமது செலெஷன் எல்லாம் ஏ ஒன் :)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share
கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்!
கால் கிலோ காஃபித்தூள்!👇🏻👇🏻👇🏻👇🏻
ஒரு உரையாடல்!

சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் தாயே, சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ ........

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nakaicchuvai

Post by arasi »

அடடா! ஆண்களும், பெண்களும் கூட ரசிக்கக் கூடிய பதிவு :)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

ஏம்மா!! காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ?? இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??

ஏன்யா ?? லூஸாய்யா நீ ?? இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே சொன்னே ??

🤔😝😛😜😂🤣😇

CRama
Posts: 2939
Joined: 18 Nov 2009, 16:58

Re: Nakaicchuvai

Post by CRama »

:D :D :D :D :D :D

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nakaicchuvai

Post by thanjavooran »

A share

*சிரிக்க சில நொடி!!....*

நபர் 1: சார் எங்கே கிளம்பிடீங்க?
நபர் 2: பசங்களுக்கு மொட்டை போடத்தான்...
நபர் 1: எங்கே?
நபர் 2: வேறெங்கே, தலையிலதான்.
நபர் 1: சார். கடிக்காதீங்க. எந்த ஊர்ல?
நபர் 2: மூத்தவன் திருப்பதிக்கு பழநிலையும், இளையவன் பழனிக்கு திருப்பதியிலும்.
நபர் 1: ஏன் சார், ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல அடிக்கக் கூடாதா?
நபர் 2: அதெப்படி சார் முடியும்? இவன் தல வேற, அவன் தல வேற.
நபர் 1: ஐயோ, அது இல்ல சார். ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதா?
நபர் 2: நான் பழனியில வேலை பார்த்தப்போ திருப்பதி பிறந்தான். திருப்பதியில வேலை பார்த்தப்போ பழனி பிறந்தான். திருப்பதிக்கு திருப்பதின்னு பேர் வெச்சதால, திருப்பதிக்கு திருப்பதியில மொட்ட அடிக்க முடியுமா?
திருப்பதி பழனியில பொறந்ததால திருப்பதிக்கு பழநியிலதான் மொட்டை போடறோம். பழனி திருப்பதியில பொறந்ததால அவனுக்கு திருப்பதியில மொட்டை போடறோம். ஆனால் இரண்டு வேலையையும் ஒரே நேரத்துல முடிச்சிடறோம்.
திருப்பதி போய் பழனிக்கு மொட்டை போட்டுட்டு அங்கிருந்து பழனி வந்து திருப்பதிக்கு மொட்டை போட்டுட்டு வந்துடுவோம். ஆனா இப்ப சில வருஷமா..........
நபர் 1: ஏன் சார்? என்ன ஆச்சி சார்?
நபர் 2: இல்லை, ஒருத்தரு சொன்னாரு. ஏன் சாமிக்குள்ள வித்தியாசம் பார்க்கறீங்கன்னு. அதனால ஒரு வருஷம் திருப்பதிக்கு திருப்பதியிலும், பழனிக்கு பழனியிலும் இன்னொரு வருஷம் திருப்பதிக்கு பழனியிலும் பழனிக்கு திருப்பதியிலும் மொட்டை போடறோம்.
இந்த தடவை திருப்பதியில் பழனிக்கும், பழனியில திருப்பதிக்கும் மொட்டை போட வேண்டிய முறை.
நபர் 1: அப்போ நான் வரேன் சார்.....
நபர் 2: எங்க கிளம்பிடீங்க?
நபர் 1: மொட்டை போடத்தான்.
நபர் 2: யாருக்கு?
நபர் 1: எனக்குத்தான்.
நபர் 2: எங்க?
நபர் 1: வேறங்க? தலையிலதான்.
நபர் 2: போங்க சார். நான் சொன்னதை என் கிட்டே திருப்பறீங்க. நீங்க எந்த ஊர்?
நபர் 1: பக்கம்தான். வடபழனி.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nakaicchuvai

Post by arasi »

pazham nilai, puduthiruppam :)

Post Reply