காந்தி ஜெயந்தியன்று பாரதியின் நினைவு

Post Reply
kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

காந்தி ஜெயந்தியன்று பாரதியின் நினைவு

Post by kvchellappa »

காந்தியின் ஒரு உன்னத லட்சியம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை. அது காரணமாகவே அவர் கொல்லப்பட்டார்!
அவர் போன்று அந்த லட்சியத்துக்கு ப்பாடுபட்டவர்களில் ராஜாஜியும் பாரதியும் அடங்குவர்.
வாய்மை இதழில் வெளியான இதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்:

‘ஒரு மகமதிய ஸாது’ என்ற தலைப்பில் மஹாகவியின் கட்டுரை.
கம்பளி ஒன்றைப் போர்த்திக் கொண்டு மலைச் சிகரங்களில் எல்லாம் சுற்றித் திரிவதால் இவர் பெயர் கம்பளி ஸ்வாமி ஆயிற்று. இமயமலையின் ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்குப் போக ஒரு இரும்புப் பாலம் கட்டியவர். அதற்கென தான் பிரயாசைப்பட்டுச் சேர்த்த கொஞ்சம் பணத்தையும் செலவழித்தவர்.
இவரைப் பற்றி மஹாகவி பாரதியார் போற்றக் காரணம் இவர் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஒரு ஸாது என்பதால் தான்.
“கம்பளி ஸ்வாமி என்று இமயமலைப் பக்கங்களில் ஒரு ஸ்வாமி இருப்பதை நம் நேயர்கள் அநேகர் கேட்டிருக்கலாம்.
அவர் சில காலமாகத் தென் இந்தியாவிற்கு வந்து அநேக இடங்களில் உபன்னியாசம் வசய்து கொண்டிருக்கிறார்.
இப்போது பெங்களூரில் உபன்னியாசம் செய்தார்.அதில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டுமென்றும், இருவர்களின் மதமும் ஒன்றையே குறிக்கிறதென்றும், நம் மதக் கொள்கைகளைச் சரியாக அனுசரிக்க வேண்டுமானால் எல்லோரையும் சகோதரர்களாகக் கொண்டாலொழிய முடியாதென்றும் பேசினார். இவருடைய உபன்னியாசத்தைக் கேழ்க்க அநேக ஹிந்துக்களும் மகமதியர்களும் கணக்கில்லாமல் வந்திருந்தார்கள். இவர் பேசிய ஒவ்வவாரு பேச்சும் கேட்பவர்களுக்கு வெகு ஆனந்தத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.”

தேசம் ஒன்றே சிந்தனையில் பாரதியாரின் சொல் செயல் சிந்தனை அனைத்தும் தேச விடுதலை தேச ஒற்றுமை தேச முன்னேற்றம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது பல கட்டுளைகள் நன்கு விளக்குகின்றன. அவற்றில் ஒன்று இது!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: காந்தி ஜெயந்தியன்று பாரதியின் நினைவு

Post by Ponbhairavi »

புதுச்சேரியில் இன்றும் கம்பளிச்வாமி மடம் என்று ஒன்று இருக்கிறது .அந்த தெருவிற்கு கம்பளிச்வாமி மடத்து தெரு என்றே பெயர் வழங்கிவருகிறது.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: காந்தி ஜெயந்தியன்று பாரதியின் நினைவு

Post by arasi »

பாரதி கனவாம் பாரதம்...
-----------------------------------

எம்மதமும் சம்மதமே என நினைத்தவர் எத்தனை பேர்!
கம்பளியாரும்* அதில் அடக்கமே--முன்னம்
கும்ப‌னியார் கொடுமையெனும்--அந்த‌
வெம்புலியை சாடி, நாட்டு நலம் தேடி--
'சம்புவும் பிற தெய்வமுமொன்றேயென்பீர்--
நம் புவியில் வாழ்ந்திட இதொன்றே' என்றனரே !

இன்றைய உலகிலே--'டிவி ப்ராண்டு' ஏதானாலும்
அன்றைய செய்திகள் ஒன்றே என்பது போல்--
'சானல்' வேறானாலும், தெய்வம் மாறுவதில்லை--
கானல் நீரேயன்றோ சாதி மத வேற்றுமைகள்!

தெய்வம் எங்குமிருக்கும், நன்றொன்றே நினைப்பீரென்னும்--
மெய்யறிவீர், நல்லதொன்றே செய்திருப்பீர் என்று கூறும்
பேதம் கண்டு, அதைக் கற்பித்து* மாய்வீரோ, கேளிர்!
நாதம் பலதானாலும், தெளிவீர், கீதமொன்றே, அது ஒன்றே!


* Bharathi's words on Gandhi Jayanthi about kambaLi sAmiyAr
* kaRpithu can mean both imagined and taught...

Can't but think of Abdul Kalam who lived it...

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: காந்தி ஜெயந்தியன்று பாரதியின் நினைவு

Post by kvchellappa »

I thought for a moment I was reading a poem by Bharathi, but the reference to TV made me know the author for sure.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: காந்தி ஜெயந்தியன்று பாரதியின் நினைவு

Post by arasi »

கல்லில் ஊரும் சிறு எறும்பும் உயர் சிற்பமாகி விடுமோ?
புல்லென நான், வல்லவன் நம் வர கவியன்றோ? :)

Post Reply