Navakailayagangal

Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Navakailayagangal

Post by satyabalu »

"பாபநாசம் - திருநெல்வேலி.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள்.
1. பாபநாசம் - பாபநாசநாதர். - சூரியன். நட்சத்திரம் : கார்த்திகை , உத்திரம்
2. சேரன்மாதேவி - அம்மைநாதர். - சந்திரன். நட்சத்திரம் : ரோகினி ,ஹஸ்தம் , திருவோணம்.
… மேலும் படிக்க
பாபநாசம் - திருநெல்வேலி.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள்.
1. பாபநாசம் - பாபநாசநாதர். - சூரியன். நட்சத்திரம் : கார்த்திகை , உத்திரம்
2. சேரன்மாதேவி - அம்மைநாதர். - சந்திரன். நட்சத்திரம் : ரோகினி ,ஹஸ்தம் , திருவோணம்.
3. கோடகநல்லூர் - கைலாசநாதர். - செவ்வாய். நட்சத்திரம் : மிருகசிரீடம் , சித்திரை , அவிட்டம்.
4. குன்னத்தூர் (சங்காணி) - கோத்தபரமேஸ்வரர் (கைலாயநாதர்) - ராகு. நட்சத்திரம் : திருவாதிரை , சுவாதி , சதயம்.
5. முறப்பநாடு - கைலாசநாதர் - வியாழன். நட்சத்திரம் :புனர்பூசம் ,விசாகம் , பூரட்டாதி.
6. ஸ்ரீவைகுண்டம் - கைலாசநாதர் - சனி. நட்சத்திரம் : பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி.
7. தென் திருப்பேரை - கைலாசநாதர் - புதன். நட்சத்திரம் : ஆயில்யம் , கேட்டை , ரேவதி.
8. ராஜபதி - கைலாயநாதர் - கேது. நட்சத்திரம் : அசுவதி , மகம் , மூலம்.
9. சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் - சுக்கிரன். நட்சத்திரம் : பரணி , பூராடம் , பூரம்.
திருநெல்வேலியில் இருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நவகைலாயத்தில் ஒன்றான பாபநாசம். பேருந்து வசதிகள் சிறப்பு. ஆலயத்தின் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.
இறைவன் - பாபநாசநாதர் என்ற கைலாயநாதர்.
இறைவி - உலகாம்பிகை.
வரலாறு! அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார்.
அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.
தலத்தின் சிறப்புகள்!
நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
அம்மனின் சக்தி பீடங்களில் இது விமலை பீடமாகும்.
ராஜகோபுரத்தை அடுத்து நடராஜர் தனிச்சன்னதியில் ஆனந்ததாண்டவ கோலத்தில் இருக்கிறார். இவரை, "புனுகு சபாபதி' என்கின்றனர்.
கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த தலம் இது.
உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர்.
குருவைக் கொன்ற பாவம் இந்திரனைப் பற்றியது. பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நீங்காத பாவம், இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். பாவங்களைப் போக்கும் அற்புத்ததலம் என்பதால் பாபநாசம்.
எழிலான சிவாலயங்களில் ஒன்று!"

VK RAMAN
Posts: 5009
Joined: 03 Feb 2010, 00:29

Re: Navakailayagangal

Post by VK RAMAN »

It will be nice if English translation is given

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Navakailayagangal

Post by Pratyaksham Bala »


VK RAMAN
Posts: 5009
Joined: 03 Feb 2010, 00:29

Re: Navakailayagangal

Post by VK RAMAN »

Thanks PB. I can read Tamil but I am much faster in reading English although we speak Tamil at home. My reading skills come from reading Ananda Vikatan some 55 years ago and reading my parents letters in Tamil who did not know any other language; but I did not learn Tamil script during school days.

Post Reply