ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி

Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி

Post by satyabalu »

ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி
அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக முக்கியமானது,
சிறப்பானது, பிரசித்தி பெற்றது மனித உடலும், குதிரை முகமும் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும்.
ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவேகிடையாது. அத்தகைய கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி
தேவிக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி.அறியாமை எனும் இருளில் இருந்து
ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.

ஹயக்ரீவர் மந்த்ரம்
``ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே''

``இந்த பாடலுக்கு ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற
தேகத்தை உடையவரும், சகல கல்விக்கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ
வரை நான் உபாசிக்கிறேன்'' என்று அர்த்தமாகும்.
"வெள்ளைப் பரிமுகன்'' என்று ஸ்ரீதேசிகனால் பிரார்த்திக்கப்பட்டவர் ஸ்ரீஹயக்ரீவர்.

ஹயக்ரீவர் வரலாறு
வேதங்களின் கரைகண்டவன் நான் என்ற செருக்கு கொண்ட பிரம்மாவின் கர்வத்தை
அடக்குவதற்காக மது கைடபர்களைத்தோற்றுவித்த மஹாவிஷ்ணு அவர்கள் மூலம்
வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து கவர்ந்து மறைத்து வைத்தார்.
பிறகு நான்முகனின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து மீனாக அவதரித்து மதுகைடபர்களைக்
கொன்று வேதங்களை மீட்டு, பின்னர்வெள்ளைப் பரிமுகனாகத் தோன்றி அவ்வேதங்களைத்
தூய்மைப்படுத்தி நான்முகனுக்கு உபதேசித்தார். ஸ்ரீ தேசிகனுக்குபரத்யட்சமாகக் காட்சி தந்தது
போலவே மதகுருவான ஸ்ரீவாதிராஜருக்கும் காட்சி தந்தருளியவர் ஸ்ரீஹயக்ரூவர்.



ஸ்ரீவாதிராஜர் கி.பி. 1480 வாக்கில் வாழ்ந்த மகான். இவர் ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த
பிரசாதமான நன்றாக வேக வைத்தகடலைப் பருப்பு,துருவிய தேங்காய், வெல்லம்
சேர்த்து, நெய்விட்டுக் கிளறிய "ஹயக்ரீவபண்டி'' என்ற பெயர் கொண்டபதார்த்தத்தை
தினந்தோறும் ஒரு தட்டில் வைத்து தலை மீது வைத்துக் கொண்டிருப்பார்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமான் ஒரு வெள்ளைக் குதிரை வடிவில் இவருக்குப் பின்னால்
வந்து நின்று இரு முன்னங்கால்களை இவர்தோள்களின் மீது வைத்து
அதைப் புசிப்பது வழக்கமாம்.

கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில்
தனது மடியில் லட்சுமி தேவியுடன்இவர் அருள்புரிகிறார்.
இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற
கலைகளிலும் சிறந்து விளங்குவதற்குஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை
வணங்கலாம். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்திகுறைவாக உள்ளவர்கள்,
பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9-ம் அதிபதிகளின் திசை
நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக
ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம்.செங்கல்பட்டு அருகில்
செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை
ஆகியவைஹயக்ரீவ ஸ்தலங்கள் ஆகும். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள
தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

ஔஷத மலையில் ஸ்வாமி வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவர் எப்படி காட்சி
தந்தாரோ, அதே கோலத்தில் இங்கு இவரைதரிசிக்கலாம். புதன்கிழமையும்,
திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஹயக்ரீவரை வழிபட ஞானமும்
அறிவும்மேம்படும். ஞாபக சக்தி கூடும்.

‘ஓம் வாகீஸ்வராய வித்ம
ஹேஹயக்ரீவாய திமஹி
தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’

என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால்,
படிப்பில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிகமதிப்பெண் பெறலாம்.
கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். குதிரை முகத்தையுடையவராக,
தூய்மையான ஸ்படிகம் போன்றஉடலையுடைய, தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள
ஸ்ரீஹயக்ரீவரை மனத்தில் தியானித்து, ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக்கூறுபவர்களுக்கு
எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.
குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும். இதைக் கூறுவதற்கு நியமநிஷ்டைகள்
கிடையாது. உச்சரிப்பில் தவறுநேர்ந்தாலும் மன்னிப்பார். இதை
எல்லோரும் நாள்தோறும் ஒருதடவையாவது கூறி எல்லா வளமும் பெறலாம்.

நன்றி : கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172-230033 / 9443330203

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி

Post by thanjavooran »

திரு சத்யாபாலு அவர்களே.
அருமையான தொகுப்பு. காலதிற்கேற்ற கடு மருந்து. தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் மாணவர்களுக்கு கண்டிப்பாக இந்த பாடலின் மனனம் பயனளிக்கும்.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரன்
28 11 2014

Post Reply