Tit bits in Tamil

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

kaLLiyuNDu, chappAthik kaLLiyuNDu
veLLaiyAi veLLiyAi adan SORuNDu

ingum adan pugazh pADuvar rasigar
engum nOi nivAraNi enum soRkETTu

SOTRuk kathAzhaiyA, pin SOrillaiyA?
mATRu, chappAthiyum kaLLiyumA?

en manam kavar kaLLi!
pinnum Adiraik kaLiyE paDai 8-|

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Do you know....

Barnyard Millet == குதிரைவால்
Finger Millet == கேழ்வரகு
Foxtail Millet == தினை
Kodo Millet == வரகு
Little Millet == சாமை
Pearl Millet == கம்பு
Proso Millet == பனிவரகு
Sorghum Millet == சோளம்

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

சொற்பொளி வாளரின் கவ ளை

வளி மேள் விளி வைத்து காத்திருந்தார்
பெருந்த ளைவர் வந்தார் .அருகே ஓடினார்
சாளையில் கள் தடுக்கி குளி யில் வி ளுந்தார்
காள் சுளுக்கு !
உட ள் மு ளு தும் நள்ள வளி
மறுநாள் காளை இரு பள் விளுந்தது
ஒரே தளை வளி
மாளையில் தமி ளி ல் சொற்பொளி வு ஆற்ற வேண்டுமே !
என்ன குளப்பமிது எள்ளோரும் ப ளி ப்பரே !!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

:-) : - ))


ஊளல் ஒளிப்போம் எனவொறு சூலுரைமேர்க்
கொல்லச்செத் துப்போம் வளி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

''கூளானாளும் குடித்துக் குழி'' அல்லது ''கூலானாழும் குழித்துக் குடி''
எது சரி?

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

naLLa pEchu pEsugirIrgal! Eppadi ippadi eLuDavum seigiRirgalO?

ippadiyE eLLOrum eLudik kondirundAL, ulla tamiLum OdipOgum. eLLORumE kavaNamAi irungal.
unmaiyE soLgirEN...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

It is the bane of writing Tamil in Roman letters.
I myself have great difficulty understanding her!
Of course you can use Tamil script at the Forum in the Tamil section...
Arasi could not help :)
Somebody "lead kindly light" :)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

பேசுவது நான இல்லை .எழுத்துக்கும் புடவைக்கும் தலைப்பு முக்கியம்.

உ வே சா வும் பாரதியும் கண்ட தமிழ் மொழியை உய்விக்கப் பிறந்தவர்களே தாம் தான் என உரிமை கொண்டாடி மார் தட்டிக்கொள்ளும் "சொற்பொழிவாளர்கள் " பேசும் லக்ஷணம் இது என்பது தான் சோகம்
Last edited by Ponbhairavi on 04 Feb 2014, 08:14, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

தமிழ் இனி மெள்ள சாகும்!
(மெள்ளுவது நம் தளை முறையே!)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

karnAdaga sangIta priyarE!

tamil valarga! I mean, tamizh vaLarga!

My disability :( helps in some ways--think of all the non-tamizh folks who can 'understand tamizh but can't read it' when they happen to land on this page!

To be familiar with roman script is not a bad thing. Why should even some tamizh scholars have a problem reading transliteration, I wonder ;)

What will we do without it in getting to know the words of songs which are in different languages, and we are not familiar with them? I remember having trouble with it initially. However, very soon, we get to read in any language quickly, once we get familiar with it.What a boon it is! Ask any frequent visitors to the Sahitya Section!

True, I need to catch up with all of you in the golden years circle at Rasikas.org :-?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

I agree with you in principle. But at least in the Tamil section you should use our hoary Tamil script.
There is a Tamil keyboard which Vkailasam can introduce you to...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

arasi..try to use it..I have given the link earlier..
http://www.lexilogos.com/keyboard/tamil.htm
See if you want to type:
கா...click with the mouse on க and click on ஆ..
you will get கா...
similarly click on க and on ஐ you can get கை..

now, your transliteration, if translated back to tamil will be like this:
நள்ள பேசு பேசுகிரீர்கல்! ஏப்பதி இப்பதி எளுடவும் செஇகிறிர்கலோ?

இப்பதியே எள்ளோரும் எளுதிக் கொந்திருந்தாள், உல்ல தமிளும் ஓதிபோகும். எள்ளோறுமே கவணமாஇ இருங்கல்.
உன்மையே சொள்கிரேண்...
I have used from
http://arunk.freepgs.com/cmtranslit/editor.php
to translate back to tamil..

தமிழ் ஓடி போய்விடும்ஂ!!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

From what Arasi writes, I think she is very comfortable with Tamil Phonetic typing. Then there are many simple
online sites which can achieve this:
for example,
http://www.higopi.com/ucedit/Tamil.html

1) Make sure Tamil Phonetic is chosen. ( in the menu)
2) Toggle F12 to switch from English to unoicode Tamil
3) Then start typing in English and see it appear in Tamil Unicode!

arasi will appear as அரசி ....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

Arasi
nIngaLorusirantaezhtthALar.
nIngalezhuthuvathaippaDikkasulabhamAkairukkavENDAmA?
EninthapiDivAtham
:D
when you write
adai sAppiDu I am confused as to whether you mean
அதை சாப்பிடு or அடை சாப்பிடு
I get confused. Why use phonetic Tamil when the Tamil script is unambiguous?

If you insist try Pasupathy's gateway...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image

ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன் ஏ.டி.எமை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”. இந்த ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது. ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன். வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.குளித்துகொண்டிருந்த பாரனுக்கு,இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம். 1967-ம் ஆண்டு ஜூன் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது. ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது. ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன். இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

நண்பரிடம் அங்க‌லாய்ப்பு


என்ன எழுதினாலும் அதைத் தமிழில் எழுது
என்னும் பிடிவாத்க்காரருக்கு இது ஒரு பதிவு--
என்னைப் பிடிவாதக்காரி என்று சொல்பவரே!
பின் தங்கியவள் நான்--சொல்கிறேன், கேளும்!

எண் தெரியுமோ, எழுத்தைப் போலே? ஊஹும்!
விண் தெரியும், மண் தெரியும், கணினி அறிவிலே
மண், வெறும் மண்! கணினி வித்தையிலும் தான்--களீ
மண்ணே மண்டையின் உள்ளும், சற்று கவனியும்!

நுண்ணிய மனோ அறிவு நிபுண‌ரே! என் சொல் மதியும்!

I did it! Well, with some typos, but thanks to VK and Pasupathy for your kind guidance :ymapplause:

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

நன்றி! மிக்க நன்றி!!
அக்ஷராப்யாசம் இனிதே நிறைவேறியது :)
நாங்கள் மகிழ ஒரு சிறு கதை படைக்கவும்.
தூங்கிகிடக்கும் தமிழ்க் கலை துளிர் விடட்டும்!

சொந்த கலை அனுபவங்கள் பற்றியும் எழுதலாம்.
(முக்கியமாக மாமன் அத்தையுடன் சிறுவயது அனுபவங்கள் பற்றி...)
காத்திருக்கிறோம்...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

ஆகா! இனி இக்குழுவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கட்டும்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image

கணவரின் மருத்துவ செலவுக்காக
மாரத்தான் ஓட்ட பந்தயத்தில்
கலந்து வெற்றி பெற்ற 61
வயது பாட்டி...!

என் கணவருக்கு, இருதய கோளாறு.
மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற
இடத்தில், அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு,
எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
வசதி இல்லாததால், தனியார்
மருத்துவமனையில் தான், ஸ்கேன்
எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு,
5,000 ரூபாய் கட்டணம்
தேவைப்பட்டது. விவசாய
கூலி வேலை மூலம், தினம், 100
ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என்
கணவரின் சிகிச்சைக்கு பணம்
இல்லை. அப்போது தான், மராத்தான்
போட்டி பற்றி அறிந்தேன். வேகமாகக்
கூட நடந்ததில்லை நான்.
கணவருக்காக, பந்தயத்தில் ஓடி,
பரிசை வெல்ல தீர்மானித்தேன்.
காலில் செருப்பு கிடையாது; 9 முழ
சேலையை வரிந்து கட்டி,
பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன்.
கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த
தியாகத்தையும் செய்ய தயாராக
இருக்கிறேன். இவ்வாறு அவர்
கூறினார்.

- மராத்தான் போட்டியில் வென்ற 61
வயதான லதா பேக்வான

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

கணவனைக் காக்க காரிகையாள்
காலில் செருப்பின்றி ஓடினாள் ஓடினாள்
ஓடி வெற்றியும் பெற்றாள்!
காலனும் அவளிடம் தோற்பான்!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

நன்றி நமனுக்கு

Post by vgovindan »

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எனும்
தொன்மொழிக் கூற்று பெண்ணுக்கு மட்டும் பொருந்துமோ?
இராப்பகலாகக் குடித்துக் கூத்தாடி மனைவி மக்களை வாட்டும்
கணவர்களுக்குப் பழமொழிப் பரிந்துரையென்னவோ?

குடிமக்களுக்குக் கல்வியும், சுகாதாரமும், பாதுகாப்புமே
கடமையெனக் கொள்ளாது, மதுபான விற்பனையும்
அரசு மேற்கொள்ளும் அவலம் இங்கல்லாது வேறெங்கு காணலாம்?
குட்கா எனும் பெயரால் புகையிலைப் புழக்கத்தைத் தடுப்பதுயெவரோ?

இத்தீயப் பழக்கங்களையொழிக்காது,
பல்லாயிரம் பெண்கள் மராத்தான் ரன்கள் ஓடினாலும்
பயனென்ன சொல்வீர்? - அவன் அப்படித்தான் எனும்
அவலநிலை மாறுமோ பெண்ணடிமை யொழியுமோ?

இந்திரன் முதலாக மற்ற தேவதையரும், கடமை மறந்து,
பெண்ணின்பத்தைத் தேடியலைவதாகத்தானே புராணங்கள் கூறும்?
காலனைப்போன்ற தரும தேவதையுண்டோ?
கடமை தவறாதவன் அவன் ஒருவனேயன்றோ?

தலையெழுத்தென நமக்கு நாமேயெழுதிக்கொண்டு,
நமனைக் குறைகூறுவானேன் மூச்சுக்கு மூச்சு?
நன்றி சொல்வேன் நமனுக்கே,
செவ்வனே கடனாற்ற அவனாவது உள்ளானேயென

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

ஒரு குருக்களின் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.

உடனே, அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்தார்,

“ ஐயா, என் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடக்கிறது.. தயவு செய்து, அதனை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள் ”

நகராட்சி அலுவலகத்தில், போனை எடுத்தவர் நாராயணசாமி, நக்கலாகச் சொன்னார்,

”குருக்களே, முதலில் இறந்த அந்த கழுதைக்கு செய்ய வேணடிய காரியங்களை எல்லாம் செஞ்சு முடித்துவிட்டு சொல்லுங்கள். நாங்கள் வருகிறோம்"

அதற்கு அந்த குருக்கள் சொன்னார்,

“அதற்கென்ன, பேஷாகச் செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட சொந்தக்காராளுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்"

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

திருக்குறள் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

Tirukkural in 37 languages!

01) Arabic 02) Bangla 03) Burmese 04) Chinese 05) Czech 06) Dutch 07) English 08) Fiji 09) Finnish 10) French 11) German 12) Gujarati 13) Hindi 14) Hungarian 15) Italian 16) Japanese 17) Kannada 18) Konkani 19) Korean 20) Latin 21) Malay 22) Malayalam 23) Marathi 24) Nederlands 25) Norwegian 26) Oriya 27) Polish 28) Punjabi 29) Rajasthani 30) Russian 31) Sanskrit 32) Saurashtra 33) Sinhalese 34) Spanish 35) Swedish 36) Telugu 37) Urdu

http://en.wikipedia.org/wiki/Tirukku%E1 ... anslations

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

There is the golden opportunity to translate into Eskimo and African languages!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

In how many languages has Geetha been translated?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

Check
http://in.answers.yahoo.com/question/in ... 506AAKGGCq
I read somewhere that Gita has been translated into 80 languages.
No list was given..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது…

find out meaning...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

நமது திருஞான சம்பந்தப் பெருமான் இயற்றிய இந்த பதிகம்
பொருள் விளங்குகிறதா என்று பாருங்கள்

திருமாலைமாற்று

யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா.

யாகா யாழீ காயாகா தாயா ராரா தாயாயா
யாயா தாரா ராயாதா காயா காழீ யாகாயா.

தாவா மூவா தாசாகா ழீநா தாநீ யாமாமா
மாமா யாநீ தாநாழீ காசா தாவா மூவாதா.

நீவா வாயா காயாழீ காவா வானோ வாராமே
மேரா வானோ வாவாகா ழீயா காயா வாவாநீ.

யாகா லாமே யாகாழீ யாமே தாவீ தாயாவீ
வீயா தாவீ தாமேயா ழீகா யாமே லாகாயா.

மேலே போகா மேதேழீ காலா லேகா லானாயே
யேனா லாகா லேலாகா ழீதே மேகா போலேமே.

நீயா மாநீ யேயாமா தாவே ழீகா நீதானே
நேதா நீகா ழீவேதா மாயா யேநீ மாயாநீ.

நேணவ ராவிழ யாசைழியே வேகத ளேரிய ளாயுழிகா
காழியு ளாயரி ளேதகவே யேழிசை யாழவி ராவணனே.

காலே மேலே காணீகா ழீகா லேமா லேமேபூ
பூமே லேமா லேகாழீ காணீ காலே மேலேகா.

வேரியு மேணவ காழியொயே யேனைநி ணேமட ளோகரதே
தேரக ளோடம ணேநினையே யேயொழி காவண மேயுரிவே.

நேரக ழாமித யாசழிதா யேனனி யேனனி ளாயுழிகா
காழியு ளாநின யேனினயே தாழிச யாதமி ழாகரனே.

திருச்சிற்றம்பலம்.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

காளமேகப் புலவர்
venkatakailasam wrote:
find out meaning...
ஊன்றுகோல் கேட்கும்முன் உன்முடி|ந ரைக்கும்முன்
தோன்றும் எமனைக்கண்(டு) அஞ்சும்முன் விக்கி
இருமும்முன் செத்தே இடுகாடு சேர்முன்
ஒருமாவின் கீழ்ச்சிவனை ஓது

(ஒருமாவின் கீழ்ச்சிவன் = ஏகாம்பரன்)
(ஓது = துதி)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

AhA!
Excellent!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

sridhar_ranga...
The meaning that you have given is same as said by Maha perival:

காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,

முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

1940௦-ல் பதிப்பிக்கப் பட்ட "தனிப்பாடல் திரட்டு" நூலில் காளமேகப் புலவர் இயற்றிய 158 பாடல்களைக் காணலாம். இன்னும் பலருடைய தனிப்பாடல்களையும் படித்து ரசிக்கலாம்.
Check this: http://ta.wikisource.org/wiki/%E0%AE%A4 ... E%E0%AF%8D

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

Thanks PB for the reference..

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

திருமாலைமாற்று

If possible post the individual meanings.
These compositions are similar to 'PAdukA sahasram" chitrakavi of Vedanta Desikar...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

You can read the meaning in Tamil and English here:
http://www.visvacomplex.com/MaalaiMaaRRu4.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

Thanks Pasupathy
What a creative compositions!
Aren't we fortunate to have a language with such verstility!
Didn't Arunagirinathar compose one verse with with just one letter?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

You may be referring to this song :
http://murugan.org/audio/kanthar.anthaathi.htm

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் படிப்பின் போது திரு கந்தசாமி குருக்கள் எனும் தமிழ் ஆசிரியர் காளமேகப் புலவரின் பல கவிதைகளைக் கூறி எங்களை மகிழ்விப்பார். பாடப் புத்தகத்தில் இல்லாத இத்தகைய பாடல்களை அவர் இனிக்க இனிக்கக் கூறும்போது நாங்கள் அவரைப் பெருமைப் படுத்திப் பேசுவோம். அவர் என்னைப் புகழாதீர், புகழும் பெருமையும் காளமேகத்திற்கல்லவா அளிக்க வேண்டும் என்பார்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Pasupathy, Sir...

your post number 89 is perhaps best among one of the very few posts that I have come across...

Thank you and also cml for prompting you...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

Thanks, Venkatakailasam.

FYI:
:-) There was a very good reason why I could respond quickly...to cml's query ! If you read the article by Mrs Chitra Murthy ( referred to in post 89), you may see a mention of one 'Thiruppugazh Adimai' S.Natarajan who taught her and many others the meaning for the complete Kandhar Andhathi. Most of his students can recite the entire KA and lecture on its meanings continuously without referring to any notes !

S.Natarajan , my brother, is no more; many of his meanings for Arunagiri's works can be found at www.kaumaram.com.. ( My blog has a few of his articles too..)
( All the fonts at kaumaram.com are not in Unicode...and hence may have to be converted to Unicode )

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

Thanks Pasupathy for that prompt response as well as the personal connection.
I frankly feel that the meaning is a bit far fetched :)
I like the Sivaji Ganesan's verse and explanation in Movie Mahakavi KaLidas
தாதைதூதோதீது
தத்தைதூதோதாது
தித்தித்ததூதிதை
துதித்துத்துதித்தோதுதி.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

:-) Probably based on Kalamegam (19th Century ) who composed several such poems. See, e.g. ;
http://natarajadeekshidhar.blogspot.ca/ ... st_29.html

Generally 'palindromic' poetry etc are mostly very difficult to understand in a direct manner. But it's always a fascinating challenge! ( That's why, as you probably know, I have tried a few such poems only incorporating simple Palindromic phrases or with the last lines of a poem only being simple Palindromes which can be easily understood .) e.g.
http://s-pasupathy.blogspot.com/2009/07/blog-post.html
http://s-pasupathy.blogspot.ca/2012/07/ ... st_09.html

The 'fascination' with such poetic gymnastics and word-play or chitra-kavi-s etc generally disappeared with time , finally with Bharathi declaring a new era where real poetry began to reign supreme.

But Sambanthar was a genius ...and originator of many poetic forms.... so was Arunagiri, who was the inventor of a new form as well. The story goes that the Kandhar Andhathi was a result of a competition with Villipuththooraar. The 'tough' form of KA shows that there might be some truth in that story about a competition, though there may be some doubts about rest of the story. Even now the only meaning for the KA is the one supposedly given by Villipuththooraar.... ! All books will say that.... So what you read is basically Villpuththooraar's urai for that KA -poem!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்?

அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது.

மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா.

நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க.

அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும், என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

கார் மேகம்போல் கவி பொழியும் காளமேகம்
பார் போற்றும் பதிவிறக்கும் பசுபதியும் பொருத
யார் வெல்வார் கூறுமின் தமிழ் அன்பர்களே?
You can give your answer in poetic form...
Here is mine
போர் புரியுமோ காளை பசுவுடன், பசுவோ கால்
சேர் மேகம் கொண்டிணையும் பதியுடன்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

மாசி மகத்தன்று
பசுவுக்கு பதியான
மாதேவன் பேர் பாடி
தாளிற் தலை குனிந்தால்
தாயாகி காக்கும் காஞ்சிநாதன்
குறை தீர்ப்பான் வாஞ்சையுடன்!!
venkat k

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

மேகம் மோகமாகி அத்தாகம் தீர்ந்த பின்னர்
ஆகும் பதி அப்பசுவிற்கு காளை .அதையே தன்
வாகனமாய் ஏற்று காரில் பவனிவரும் உமைப்
பாகனை காளை இரு கொம்புகள் இடை காண்

காரில் பவனி வரும் உமைபாகனை.=உமை ஒரு பாகனாய் ரிஷப வாகனத்தில் மேகத்திடையே பிரதோஷ காலத்தில் காட்சி தரும் சிவன் .........=car இல் பவனி வரும் பசுபதி

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

தந்தை பொருதுவதோ தன்மகவை? ஈதென்ன
விந்தை உரைத்தீர்? வழுத்துவார் செந்தமிழ்ப்
பாசமிகக் கொண்ட பசுபதியார் தன்னையே
ஆசுகவி காளமே கம்!

(வழுத்துதல் = to bless)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

ஆஹா!
கவிகளுக்கு வாழ்த்துக்கள்!
தமிழ் வாழ்க!

Post Reply