Aanmeekam...

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

"மங்கை அழுதாள், வான் நாட்டு மயில் கள் அழுதார், மழவிடை யோன் பங்கின் உறையு குயில் அழுதாள்,

பதுமத்து இரு ந்த மாது அழுதாள், கங்கை அழு தாள், நாமடந்தை அழுதாள்,

கமலத் தடங் கண்ணன்

தங்கை அழுதாள், இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் "

‘இந்த உலகுக்கே தாயாகிய சீதை’, ஒரு அரக்கியை, “அன்னையே!” என்று அழைத்த விசித்திரம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர், இறைவியின் மனத்தில் தோன்றும் நுட்பமான உணர் வுகளைக் கூட, எல்லா மனிதர்களும் ஆழ்ந்து அனுபவிக்க முடியும் என்பதை க் காட்சி ப்படுத்துகிறார். கம்ப ராமாய ணம் யுத்த காண்டத்தில்வரும் காட்சி இது. இந்திர ஜித்தின் அம்பில் லட்சு மணன் மயங்கு கிறான், தம்பியின் நிலையைக் கண்டு கதறிய ராமரும் பக்கத்திலேயே சோர் ந்து விழுகிறார்.
இதைப் பார்த்த ராவணன் யோசித்தான், ‘அசோகவனத்தில் இருக்கு ம் சீதையை நான் எவ்வளவோ கெஞ் சிப் பார்த்துவிட்டேன், கொஞ்சிப் பார் த்து விட்டேன், மிரட்டிப் பார்த்து விட் டேன், ஆனால் அவள் என் ஆசைக்கு இணங்கவில்லை, தன் கணவன் வந் து தன்னை மீட்டுச் செல்வான் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாள். இப் போது, அந்தக் கணவனே அடிபட்டு வீழ்ந்து விட்டான். இந்தக் காட்சியைச் சீதை பார்த்தால், அவளுடை ய நம்பிக்கை விலகி, என்மேல் காதல் வருமல்லவா?’ ராவணன் கை தட்டினான். புஷ்பக விமானம் தயா ரானது. சில பெண்கள் சீதை யை அதில் ஏற்றி அழைத்துச் சென்றா ர்கள். ராம லட்சுமணரின் நிலை மையைக் காட்டினார்கள்.
அசோகவனத்துக்குள் நுழைந்த பிற கு, சீதை இப்போதுதான் முதன் முறையாக வெளியே வருகி றாள். அதுவும் இப்படிப்பட்ட ஒரு கோரக் காட்சியைப் பார்ப்பதற் காக! அப் போது சீதையின் கதற லை ஓர் அழகான பாடலில் காட்சிப் படுத்து கிறார் கம்பர்:

மேலே கண்ட பாடல்...

மங்கை அழுதாள், வான் நாட்டு மயில் கள் அழுதார், மழவிடை யோன் பங்கின் உறையு குயில் அழுதாள், பதுமத்து இரு ந்த மாது அழுதாள், கங்கை அழு தாள், நாமடந்தை அழுதாள், கமலத் தடங் கண்ணன்
தங்கை அழுதாள், இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் ராம -லட்சுமணரைப் பார்த்த சீதை அழுதாள், அவள் அழுவதைப் பார் த்து, வானுலகத்தில் இருக்கும் மயில் போன்ற தேவதைகள் அழுதார் கள், ரிஷப வாகனத்தில் உலா வரும் சிவனின் இடப்பக்கம் வசிக் கிற, குயில் போன்ற பார்வதி தேவி அழுதாள், செந்தாமரை மலரில் அமர்ந்தி ருக்கும் மகா லட்சுமி அழுதாள், சிவனின் ஜடாமுடியில் வசிக்கிற கங்கை அழுதாள், பிரம் மனின் நாவில் வாழும் சரஸ்வதி அழுதாள், தாமரை மலர் போன்ற பெரிய கண்களை உடைய திருமா லின் தங்கையாகிய துர்க்கை அழு தாள்.
அட, அவர்களெல்லாம் அழுதது கூடப் பரவாயில்லை, இரக்கமே இல்லாத அரக்கியர்கள், அவர்கள் கூட சீதையைக் கண்டு தளர்ந்து போனார்கள், அழு தார்கள் என்கி றார் கம்பர். அதன்மூலம் எல்லா உலகங்களில் உள்ள எல்லாரும் சீதைக்காக இரங்கினார்கள் என்று உணர்த்துகிறார். இவள் இப்படி அழுவதைப்பார்த்து விட்டு, திரிசடை என்ற அரக்கி வருந்தி னாள். விபீஷணனின் மகளான அவள் சீதையைத் தேற்றுவதற் காகப் பல விஷயங்களை எடுத் துச் சொன்னாள். ‘‘இதெல்லாம் எங்க பெரியப்பாவும் அவர் மக னும் செய்யற மாயை, நீ இதை நம்பி அழாதே, ராமனுக்கும் லட் சுமணனுக்கும் எந்த ஆபத்தும் இல்லை!’’ என்றா ள்.
சீதை ஒருவழியாகத் தேறினாள். ஆனாலும் அவளுக்கு முழு நம்பி க்கை வரவில்லை. ‘‘அவங்க இப்படி விழுந்து கிடக்கறாங்களே’’ என் றாள்.
‘‘நாளை காலை எழுந்துடுவாங்க’’ என்றாள், திரிசடை. ‘‘உனக்குக் கவலையே வேண்டாம்!’’ அப்போது, சீதை சொல்கிறாள்: ‘‘அன்னை நீ உரைத்தது ஒன்று ம் அழிந்திலது, ஆதலாலே உன்னையே தெய் வமாக் கொண்டு இத்தனை காலம் உய்ந்தே ன், இன்னம் இவ் இரவு முற்றும் இருக்கின் றேன்.’’ உலகுக்கே தாயாகிய சீதை, இப்போது திரிசடையை, ‘‘அன்னையே’’ என்று விளிக்கி றாள். ‘‘இத்தனை நாளா, நீ சொன்னது எதுவும் தப்பா நடக்கலை, அதனால, இப்பவும் உன்னை நான் நம்பறேன். நான் இந்த அசோக வனத்துக்கு வந்தது லேர்ந்து, நீ ஒருத்திதான் எனக்குத் தெய்வம், இத்தனை நாளா உன்னைதான் வழி பட்டு வாழறேன்.’’
இது ஒரு நுட்பமான உளவியல் காட்சி. என்னதான் கடவுளாகவே இருந்தா லும், துன்பம் வரும்போது ஆறுதல் சொ ல்லவும் அரவணை க்கவும் ஒருவர் வேண்டும்! ராமனுக்கு லட்சுமணன், அனுமன், சுக்ரீவன்போல, சீதைக்குத் திரிசடை!
அப்படித் துவண்ட நேரங்களில் நமக்காகத்தோள் கொடுத்தவர்களு க்கு வெறுமனே நன்றி சொன்னால் மட்டும் போதாது, அவர்களைக் கடவுளுக்கு இணையாக மதிக்கவேண்டும். திரி சடையைச் சீதை ‘உன்னையே தெய்வமாக் கொ ண்டு’ என்று மனம் உருகிப் போற்றியது போல! ‘‘ திரிசடை, இப்படி ஒரு கொடுமையான காட்சி யைக் கண்ணெதிரே பார்த்தப்புறமும் நான் இன் னும் உயிரோட இருக்கேன்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம், உன் மேல நான் வெச்சிருக்கற நம்பிக்கை தான்’’ என்றாள், சீதை. ‘‘நீ சொல்றதை நம்பி, நான் ஒரே ஒரு ராத்தி ரிமட்டும் காத்திருப்பேன். அதுக்குள்ளே இவங்க கண் முழிக்கணும்.’’ ‘‘அது கண் டிப்பா நடக்கும், கவலை வேண்டாம்!’’ என்றா ள், திரிசடை. அவள் சொன்னது அப்படி யே நிகழ்ந்தது.
அனுமன் ஒரே இரவில் பறந்து சென்று மருந்து மலையைக் கொண் டுவர, அந்த மூலிகைகளில் இருந்து வீசிய காற்று ராம லட்சுமண ரையும் மற்ற வானரர்க ளையும் உயிரோடு திரும்பக் கொண்டுவந்து விட்டது. அழுகை மறந்து சிரித்தாள் சீதை, கூடவே இந்த உலகமும் சிரித்தது!
Share from Mannargudi Sitaraman Srinivasan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Post 199...CML..." I will be much obliged if you can guide me to any publication wherein the word-for-word meaning in Tamil or English is rendered for the Vedas, especially the Rig Veda.."

Please go through the preamble and get it if you like..I have not read..but a friend had suggested this one..

Rsikas of RG Veda..

http://www.exoticindiaart.com/book/deta ... da-NAE147/

Online reading of RIG VEDA is here...

http://wordspal.wordpress.com/2006/11/2 ... -rig-veda/

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!
260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.
தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.
கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.
மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.
நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.
அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
திருவேட்களம், சிதம்பரம்

கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.
-திருநாவு்கரசர்
சோழ நாட்டு வடகரை காவிரித் தலங்களில் இரண்டாவதான இத்தலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு. கோயிலின் அருகே மட்டுமல்ல, வாசலிலும் காய்கறிச் சந்தை அமைந்திருக்கிறது. ஆனால், கோயிலுக்குள் நுழைந்து விட்டால், சந்தையிரைச்சல் ஏதுமின்றி அமைதி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள கோயில் சுமார் 1910 வாக்கில் கானாடுகாத்த செட்டியார் என்பவரால் அமைக்கப்பட்டதாகும்.
தலபுராணம்
பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அனைத்து அஸ்திரங்களையும் கரைகண்ட அர்ச்சுனன், இறுதியாகப் பாசபத அஸ்திரம் வேண்டி சிவபெருமானைத் தொழுதிருந்தான்.
அப்போது, அவனைச் சோதிக்க முக்கண்ணன் அனுப்பிய பன்றியானது வில்லாளனின் தவத்திற்கு இடையூறு செய்ய, சினமுற்ற விஜயன் அதைத் துரத்த, அது கையில் அகப்படாமல் ஓடியவண்ணமே இருக்க, வெகுண்ட பார்த்திபன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.
அதே கணம், அங்கு தோன்றிய வேடனொருவன் அது தனது பாணத்தால் வீழ்ந்தது என்று சாதிக்க, வாய்ச்சணடை கைச்சண்டையாக முற்றி அர்ச்சுனனம் தன் வில்லால் வேடன் மண்டையில் ஓங்கியடிக்க, அந்த நொடியில் வேடன் உரு மறைந்து அங்கே சாம்பசிவன் நின்றிருந்தான். அர்ச்சுனனின் தவத்தைப் போற்றி, சங்கரன் அவனுக்கு பாசுபத அஸ்திரத்தையும் அருளினான். அத்தகைய புகழ் பெற்ற தலமாகும், அள்ளாமலை நகரில் அமைந்துள்ள திருவேட்களம் என்னும் இத்திருக்கோயில்.
மூலவரின் பெயர் பாசுபதீஸ்வரர்.
தாயாரின் திவ்யநாமம் சற்குணாம்பாள். அழகு தமிழில் நல்லநாயகி என்பர்.
தலச்சிறப்பு
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முதலாவது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம்.
அம்மன் சன்னதியில் அர்ஜுனன் தவம் குறித்த சிற்பங்களைக் காணலாம்.
சூரியனும் சந்திரனும் அருகருகே அமைந்துள்ல இக்கோயிலில், சூரிய சந்திர கிரகண காலங்களில் வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
வில்லாளனுக்கு அஸ்திரம் அளித்த பெருமான் சொல்லாடலிலும் குறைகளைப் போக்குவார் என்று புகழ் பெற்றார். பேச்சுக் குறைபாடு உள்ளோர் இங்கு பிரசாதமாக வழங்கப்படும் மண் உருண்டையை உண்டால், தங்கள் குறை நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
திருஞான சம்பந்தர் இங்கிருந்துதான் சிதம்பர ஆடல்வல்லானை தரிசித்தார் என்பர்.
அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றதாகும் இததலம்.
இங்கு நடராசன் முருகனாகவும், வேலன் முக்கண்ணனாகவும் தோன்றி அருள் பாலித்தனர் என்பர்.
தலப்பண்
கல்லாலே அடித்தவனும் சொல்லால் அடித்தவனும்
பல்லாண்டு வாழ்த்தியேதம் பிறவிக்கடன் தீர்த்தவனாம்
வில்லாலே அடித்தநல் விஜயனுக்கும் அருளீந்தான்
இல்லையொரு பெம்மான் அவன்போலே இவ்வுலகில்
ஓம் நமச்சிவாய!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Shri.Thnjavooran..Thank you...

சித்திரை செழுமதி
சேர் நன் நாளில்
பசுவுக்கு பதியான
திருவேட்களத்து
மாதேவன் பேர் பாடி
தேனும் பழம் கதலியும்
கலந்து தந்து
தாளிற் தலை குனிந்தால்
தாயாகி காக்கும் காஞ்சிநாதன்
குறை தீர்ப்பான் வாஞ்சையுடன்!!
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
This is a delightful message.

A message for all; especially those losing sleep over work tensions.
Best wishes.

In the Sri Rudram Chamakam every word ends with “Cha Me” (grant me) it is literally asking for the fulfillment of wishes and in the Agnihotra Mantra we have “Idam Na Mama” (This is not mine) it is chanted when offering. In Sri Rudram a seeker make a polite wish to the Lord and while making an offering to the Lord in the Agnihotra Mantra the seeker says that whatever he has to offer Him is not his.

If the asking is small the offering has to be huge, even nature does the same; for instance this earth wants a small seed in the same as lines as “Cha Me” but when it is time for it to give back the yield it says “Idam Na Mama” and offers everything it has without being selfish. “Cha Me” is common factor, as everybody wants but only few give back that which is got that too in multifold.

Why should one offer with the thought of “Idam Na Mama”?

This very thought of “this is not mine” will stop one from getting involved in the stress and strain that is engrossed in it. Here is a story which can throw light on how the feel of “Idam Na Mama” can lessen the burden on a persons mind.

There was a King who looked after his subjects very well and there was no problem what so ever in his land. As time passed trivial problem started pouring in every day and the King had to resolve them. He was getting old and felt his son was too young to find solutions to those problems. This thought was posing trouble; he was tense and lost sleep. He always thought what would happen after him. In search of a solution to this problem he went to his Kulguru and said, “I am getting weaker day by day and am unable to rule the kingdom, my son is just a kid to take over what should I do, Gurudev.”

Kulguru said, “If you are unable to find person who can rule the land, then I suggest you to hand over the kingdom to me, I will handle it.”

King was very much pleased he said, “By all means I am ready.”

At that very instant taking the water from the kamandalu, the King poured the water from his hand to the hands of the Kulguru symbolizing the exchange of the power.

King stood up to leave. “Where are you going?” asked Kulguru.

“I will go far away from this kingdom and live a life of a commoner.” said the King.

“What are you going to do for a living?” Kulguru asked.

“I am ready to accept any job that come my way.” said the King.

Kulguru told, “If you are ready to do any job, come and work for me. I have a huge kingdom and I cannot run it, I need a person who has a good experience and I find you very suitable for the job.”

King said, “Oh Yes! I am for it, I accept the job.”

Kulguru said, “Good, start you work from this moment rule the kingdom on my behalf. Do not forget that nothing is yours and you are on payroll.”

King accepted the job and started ruling the kingdom on behalf of his Kulguru. After some months Kulguru came to the palace and asked the King, “How are you now? Do you still have tensions? How is your life going on?”

Gleefully the King replied, “Very happy Gurudev, I resolve the problem the whole day and have a peaceful sleep at. Nothing is mine. I only do my duty.”

Simply consider Him as the sole proprietor by saying “Idam Na Mama” and do your work all the tension will just vanish………!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Thanks!
Very informative.
Karmanye Vadhikaraste, Ma phaleshou kada chana,
Ma Karma Phala Hetur Bhurmatey Sangostva Akarmani

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

Ref # 205
Shri Venkatakailsam Avl,

செந்தமிழ் பாவினால் சிவனைப் போற்றும்
வந்தனைக்குரிய வேங்கடவா வணக்கம் பல- எந்நாளும்
அண்டியொர்கெல்லாம் அபயக் கரம் நீட்டும்
ஆண்டவனே வேண்டுகிறேன் நான் அமைதியுற

தஞ்சாவூரான்
04 05 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா

குண்டலிநீ யோகம் -அதி ஜாக்கிரதை தேவை.((ஸ்ரீ மஹா பெரியவா ))
அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன்.
ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பெயர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன.
‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள்.
அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி ] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரமசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.
நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்?

அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.
ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது. அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – “யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல.
அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்!
இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது ] – லேசில் நடக்கிற விஷயமில்லை.
சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள் பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிறவனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான்.
ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை.
பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ”பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்!” என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள்.
ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.
இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை.
அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான்.
அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை.
அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது.
இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.
லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள்.
ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.
‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷ தரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி.
ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.
அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை.
கர்ம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான்.
‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால் .........
நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **
என்கிறார். என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார்.
ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம்.
என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது.
‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் “விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை.
‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்!
ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.
அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது.
பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை.
ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!
நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியொரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா?
அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன்.
ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடாமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.
நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம்.
பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்.
காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு.
‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?
ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது.
எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருந்தாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது.
சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது.
அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் “ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….
உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார்.
அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.
அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது.
இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை.
ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தைச்] சொன்னேன்.
இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்.
‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது.
இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.
இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு.
குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.
க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை.
வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர் ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.
ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்:

மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம்.
குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.
(Courtesy: Mahesh Krishnamoorthy)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

A very realistic analysis!
Acharya has a way of making it easy to understand a very complicated topic.
Learn but don't do it!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

தற்க்கால சூழ்நிலயில் நிறைய யோகா மையங்கள் குண்டலினி பற்றி பேசுவதனை மகாபெரியவர்களின் இந்த விளக்கம் சிந்திக்க வைக்கின்றது

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

பேசுவது மட்டுமல்ல - ஆறு வாரங்களில் தீக்ஷை தருகிறேன் என்று, பணத்திற்கு 'யோகம்' என்ற பெயரில் ஊரை ஏமாற்றிக்கொண்டு திரிபவர்களைப் பற்றி மிகவும் எளிதாக அளித்துள்ள விளக்கம்தான் என்னே!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

நோய் தீர்க்கும் சதுரகிரி மலை..!

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
[theerththam.jpg]

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.

அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131

மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

An illuminating article on Siddhas!
There are more things in heaven and earth, Horatio,
Than are dreamt of in your philosophy.
- Hamlet (1.5.167-8), Hamlet to Horatio

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்கணமோ தேவையில்லை . உள்ளத்தில் எண்ணம் ஒன்றே போதுமே!

இது ஒரு சுவாரஸ்யமான விஷயம் . நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம் , பழனி , மதுரை போன்றவர் இருப்பது போல மலையாள தேசத்தில் வீட்டு பேரில் நிறைய பேர் இருக்கிறார்கள் . மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டுப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் . அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் காணாமல் போய் விட்டது . பரம கிருஷ்ண பக்தர் . பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதியவர். பாவம் ஒரு குறை அவருக்கு. வெகுநாளாக . மடியில் வைத்து கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே ? கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா ?
ஒரு பிள்ளை பிறந்தான் . அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது . எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் கூடியிருக்க அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்தக்குழந்தை இறந்து விட்டது எப்படி பட்ட சோகம் ??
குருவாயுரப்பன் என்ன செய்தான் ? “ பூந்தானம் கவலையே வேண்டாம் நானே உங்கள் பிள்ளை எங்கே உங்கள் மடி” என்று அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டான் . படுத்துக் கொள்ளட்டுமா” என்றான் . தன்னை மறந்து ஆனந்தப் பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது . " நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு ?"

கடல் மடியென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்தி ரசத்தில் மூழ்க, இது ஒருவருக்குப் பிடிக்க வில்லை . பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி தான் அவர் . குருவாயுரப்பன் மீது நாரயணீயம் எழுதியவர் . அவர் பூந்தானத்தை “ இவனெல்லாம் ஒரு கவிஞனா சம்ஸ்க்ரிதம் தெரியாதவன் , இலக்கணம் தெரியாதவன்” என்று இகழ்ந்தார் .
குருவாயூரில், கிருஷ்ணனுக்கு இது பிடிக்கவில்லை. ஒருநாள் பட்டாத்ரி தன்னைக் காண வந்தபோது " பட்டாத்ரி நான் சொல்கிறேனே என்று வருத்தப்படாதே, எனக்கென்னமோ உன் சம்ஸ்க்ரித இலக்கணம் தோய்ந்த ஸ்லோகங்களைக் காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்பப் பிடிக்கிறதே என்ன செய்ய? " என்றான் கிருஷ்ணன் .

அதற்கப்பறம் பட்டாத்ரி ஓடி சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார் என்பது சாதாரண விஷயம் . பாகவதத்திலும் கிருஷ்ண கானத்திலும் காலம் ஓட, ஒருநாள் கிருஷ்ணன் பூந்தானத்தை இனி தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசை மேலிட “ என்னிடம் வா” என்று அழைத்தான் .

பரம சந்தோஷம் அவருக்கு . “ யார் யார் எல்லாம் என்னோடு கிருஷ்ணனிடம் வருகிறிர்கள்?” என்ற அவர் அழைப்பைக் கேட்ட அன்பர்கள் தலை தெறிக்க ஓடிவிட்டனர் . அவர் வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண்மணி, “ அய்யா என்னையும் கிருஷ்ணனிடம் அழைத்து செல்கிறீர்களா?” என்று வேண்டினாள் . குறித்த நேரத்தில் உடலோடு பூந்தானமும், அந்த பெண்மணியும் கிருஷ்ணனோடு ஒன்றறக் கலந்தனர்.

பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்கணமோ தேவையில்லை . உள்ளத்தில் எண்ணம் ஒன்றே போதுமே!
Last edited by venkatakailasam on 19 May 2014, 20:05, edited 1 time in total.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

அகத் தூய்மையுடன் ஆண்டவனை நினைத்தாலே போதும்.
அவன் அருள் கண்டிப்பாக நமக்குண்டு. அருமையான தொகுப்பு.
நன்றி
தஞ்சாவூரான்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

Yesterday there was an Upanyasam on Sundarakandam by a 10 yrs old boy at Perambur Sangeetha sabha. At the end all the Rasikas were given a card consisting of the condensed Ramayanam. Sharing this with forum members.

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக்ரிஹத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண ஸோபிதம்
சூடாமணி தர்ஸனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானரசைன்ய சேவிதம்
ஸர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

இந்த ஒன்பது வரியில் அடங்கிய ஸ்ரீமத் ராமாயணத்தை பாராயணம் செய்தால் ஸகல காரியங்களும் வெற்றியடைந்து சுக சௌக்கியம் பெறுவர். ஸர்வ மங்களம் ஏற்படும்.
ஸ்ரீராமஜெயம்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

இது ராமாயண த்யான / தோத்திரப் பாடல்.

(ராமாயணம் முழுதும் இதில் அடங்கவில்லை.
ஒரே பாடலில் ராமாயணம் அடங்கும் "ஏக ஸ்லோகி ராமாயணம்" என்று ஒன்று உள்ளது.)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

ஆதௌ ராம தபோ வனாதி கமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹீ ஹரணம் ஜடாயு மரணம் ஸுக்ரீவ ஸம்பாஷணம்
பஶ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம்
பட்டாபிஷேகம்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

விளக்கம் அளித்து அதற்கு உண்டான சுலோகத்தையும் அளித்தமைக்கு உங்கள் இருவருக்குமே நன்றி.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

delete

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

.
एक श्लोकी रामायणम्
आदौ राम तपोवनादि गमनं हत्वा मृगं काञ्चनम् |
वैदेही हरणं जटायु मरणं सुग्रीव सम्भाषणम् ||
वाली निर्दलनं समुद्र तरणं लङ्कापुरी दाहनम् |
पश्चाद् रावण कुंभकर्ण हननं चेतद्धि रामायणम् ||

ஆதௌ ராம தபோ வனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம் |
வைதேஹீ ஹரணம் ஜடாயு மரணம் ஸுக்ரீவ ஸம்பாஷணம் ||
வாலீ நிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம் |
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ச ஏதத்தி ராமாயணம் ||
.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Thanks
My memory was incomplete!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

பசுவினுக்குல் மும்மூர்த்திகள்,முப்பெரும்தேவிகள், முப்பத்துமுக்கோடி தேவர்கள் !!

பசுவின் கோமியம்
பசுவானது புனித விலங்காக போற்றப்படுகிறது. பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளிக்கின்றனர் முன்னோர்கள். மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு கோமியம் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கோமியத்தில் உள்ள சத்துக்கள்

பசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவை அடங்கியுள்ளன. தாது உப்புக்களும், லாக்டோஸ், என்ஸைம் போன்றவை காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர், பாஸ்பேட், சோடியம், மாங்கனீஸ், சிலிகான், குளோரின், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. கார்பாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஆகியவையும் இதில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது....

நீரிழிவுக்கு மருந்து

பெங்களூருவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பசு கோமியத்தில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உள்ள எலிகளுக்கு வாய்மூலம் உட்கொள்ளும் வகையில் பசு கோமியம் 25 மிலி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவை விரைவில் நோயில் இருந்து விடுபடுவது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையில் ஏற்கனவே கோமியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய், புற்றுநோய், இதய நோய், பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு கோமியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக் கொள்வோர், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர். பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கவும், கோமியம் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, கோமியத்தில் இருந்து பல்வேறு மருந்துகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பசுவின் கோமியமானது மூன்றுவிதமான குறைபாடுகளான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை நீக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலில் இந்த மூன்று குணங்களும் அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கிறது. பசுவின் சிறுநீரை உபயோகிப்பதன் மூலம் இருமல், மைக்ரேன் தலைவலி, தைராய்டு, போன்றவை குணமடைவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோல்நோய்களை குணமாக்கும்

தோல் நோய்களான எக்ஸைமா, அரிப்பு, படை, சொரி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியத்தை பூசுவதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவைகளுக்கும் கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

பசுவின் கோமியமானது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. டென்ஷனை நீக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் இதயம், மூளையின் சக்தியை வலுவாக்குகிறது. அதேபோல் வயதாவதை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

நன்றி. அருமையான நோய் நிவாரணி. கலப்பிடமில்லாமல் உபயோகிக்கும் வகையில் கிடைக்குமா என்பதே ஐயம். மீண்டும் நன்றி

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Pictures of Narendra Modi as a Sadhu in his younger years
http://www.indiadivine.org/news/hinduis ... -modi-r724

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

.
காய், பழம், பூ + முறுக்கு !
.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

நம்மாழ்வாரின் அற்புதமான பாடல்......
====================================
உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன், அவன்!
மயர்வு அற மதிநலம் அருளினன் எவன், அவன்!
அயர்வு உறும் அமரர்கள் அதிபதி எவன், அவன்!
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

“பக்தி என்னதான் செய்யாது? எதைத்தான் சாதிக்காது? படிப்பறிவில்லாததொரு காட்டுமிராண்டி பரம பக்தர்களுள் தன் களங்கமற்ற பக்தியினால், முதன்மையானவனாக ஆகிவிட்டானே! இத்தனைக்கும் அந்த திண்ணன் செய்ததெல்லாம் உலகியலில் செய்யத் தகாத மஹாபாபங்களல்லவா? காட்டிலும் மேட்டிலும் நடந்து தேய்ந்த செருப்பினால் சிவலிங்கத்தின் மீதிருந்த நிர்மால்யங்களை அவன் களைந்தால், அதை வேதோக்தமாக செய்யப்பட்ட கூர்ச்சத்தினால் களையப்பட்டதாக இறைவன் ஏற்றுக் கொண்டார். பாத்திரம் இல்லாததால் தன் வாய் நிறைய தண்ணீரை உறிஞ்சிவந்து லிங்கத்தின் மீது அவன் எச்சில் நீரை உமிழ்ந்தால், அதை அவர் கங்காதி நதிகளிலிருந்து கொணர்ந்து ருத்ராபிஷேகம் செய்ததாக ஏற்றுக்கொண்டார். ருசியாக இருக்கிறதா? என தான் உண்டு பார்த்த மிச்சமான பன்றி மாமிசத்தை அவன் தந்தால், அதை சாஸ்த்ரோக்தமாக ஆசாரம் தவறாது செய்யப்பட்ட நிவேதனமாக அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வாறு ஏற்றுக் கொண்டு அவனை பக்தர்களுள் முதலாவதாக செய்துவிட்டாரே! என்ன அதிசயம்!” என வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள். கண்ணப்ப நாயனாரைப் பற்றி தன் ‘சிவானந்தலஹரி’யில். மேலும் அதே நூலில் பக்தியின் இலக்கணத்தையும் கூறுகிறார் அவர். “ஏறு அழிஞ்சில் மரத்தின் விதை தெறித்து எங்கே விழுந்தாலும் மேல்ல நகர்ந்து தாய் மரத்தில் ஏறி ஒன்றுவது போலவும், காந்தத்தை நோக்கி இரும்பு ஊசியானது நகர்ந்து ஒட்டிக்கொள்வது போலவும், தன் நாதனிடம் விரைந்து வந்து ஒரு பத்தினிப்பெண் ஒன்றுவது போலவும், மரத்தின் மேல் அருகிலிருக்கும் ஒரு கொடியானது வந்து படர்வது போலவும் கடலில் விரைந்து வந்து ஒரு நதியானது கலப்பது போலவும், இறைவனின் பாதங்களில் மனத்தாலும் செயலாலும் சென்று இயற்கையாக கலப்பதுதான் பக்தி எனப்படும்” என்கிறார்.

இறைவனிடம் நாம் கொள்வது மட்டும்தானா பக்தி? இல்லை, பக்தியில் மாத்ரு பக்தி, பித்ரு பக்தி, குரு பக்தி, பித்ருக்களிடம் கொள்ளும் பக்தி, பதிபக்தி, தெய்வ பக்தி எனப் பலவகை உண்டு. ஒவ்வொன்றாலும் மகத்தானவற்றை சாதித்தவர்கள் பலரைப் பற்றி நம் இதிகாச, புராண, சரித்திரங்கள் கூறுகின்றன.....Shared from FB

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

அனுமனின் தலையில் அமர்ந்தசனி !!!

ராவணனை அழிக்க வானரப் படைகளுடன் இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன். இந்தப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானரப் படைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும், பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக் கொண்டிருந்தன.

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்’என்ற அட்சரங்களைச் செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றினார்.

ராம லட்சுமணர்களை வணங்கி, "பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.

“எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்” என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, “ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.

“சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்தப் பாலம் அமைக்கும் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்” என்றான் அனுமன்.

“ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்தகால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கி விட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்தப் பாகத்தில் நான் பீடிக்கலாம்?” என்று கேட்டார் சனீஸ்வரன்.

“என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் குற்றமாகும். ‘எண் சாண் உடம்புக்கு தலையே முதன்மையாகும். எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரணப் பாறைகளைத் தூக்கி வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளைக் கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் எடையை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்று கூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

“சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்க வேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், “ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து இந்தப் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பெருமை பெற்றேன். பரமேசிவனின் அம்சமான தாங்கள் முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன்” என்றார்.

“இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்து விட்டீர்கள் அல்லவா?” என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், “அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

“ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்” என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார் !!!!

JAI SHREE RAMA Shared from FB

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

ஏற்றங்கள் தரும் யமாஷ்டகம் :

சனி பகவான் வழிபாட்டில், யமதர்மன் வழிபாடும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒருவரது வாழ்நாளில் சனி தசை நடக்கும்போதும், ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி பிடித்து வாட்டும்போதும், யம தீபம் ஏற்றி வைத்து யமாஷ்டகம் படித்து வழிபட, கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும். சனி பகவானின் அதிதேவதையான யமதர்மன், தடைகளையும் எதிரிகளையும் விலக்கி, நலம் விளைவிப்பார்.

தன் கணவன் சத்தியவானைக் கவர்ந்து சென்ற யமதர்மராஜனிடம் வாதம் செய்த சாவித்திரிதேவி அருளியதே இந்த யமாஷ்டகம்.

தபஸா தர்ம மாராத்ய புஷ்கரே பாஸ்கர; புரா;
தர்மம் சூர்யா சுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம்
ஸமதா ஸர்வ பூதேஷூ யஸ்ய சர்வஸ்ய சாக்ஷிண:
அதோயந்நாம சமகம் இதிதம் ப்ரணமாம்யஹம்
யேநாங்தங்ச க்ருதோ விஸ்வே சர்வேஷாம் ஜுலினாம்
கர்மாதி ரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
பிபர்த்தி தண்டாய பாபினாம் சுத்தி ஹேதவே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா சர்வஜுவினாம்
விச்வம் ஸகலயத்யேவ யஸ்சர்வேஷீச சந்ததம்
அதீவ துர்ணீ வார்யம்ச தம் காலம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாத மாராம்ச சர்வக்கோ மித்ரம்
புண்ய க்ருதோம் பவேத்
பாபிணாம் க்லேசதோ யஸ்தம்
புண்ய மித்ரம் நமாம்யஹம்
யஜ்ஜன்ம ப்ரஹ்மணம் சேந ஜ்வலந்தம் ப்ரஹ்ம தேஜஸா
யோத்யாய தீபரம் ப்ரும்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
யமாஷ்டக மிதம் நித்யம் ப்ராத: உத்தாய ய:படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி சர்வபாபாத் விமுச்யதே
யமாஷ்டகம் சம்பூர்ணம்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

நீர்மை கெட வைதாரும் நின்னொடு எதிர்த்தாரும்
சீர்மைபெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் -
நேர்மை இலா
வெவ்வுளத்தினேன் செய்மிகையைப் பொறுத்து
அருளி எவ்வுள் அத்தனே! நீ இரங்கு.
பிள்ளைப்பெருமாள்

பொதுப்பொருள்:

திரு எவ்வுள்ளூர் (திருவள்ளூர்) என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் என் தலைவனே! உந்தன் முன் அவதாரங்களில் உன்னை முறையில்லாமல் அறியாமையால் வசை பாடியவர்களும், உன்னை எதிர்த்துப் போரிட்டவர்களும்கூட சிறந்த முக்தியை அடையுமாறு உன் திருவடியில் சேர்ந்து அருள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, நேர்மையற்ற, கொடிய மனம் கொண்ட அடியேன் செய்த பிழைகளையும் பொறுத்தருளி, என்பால் இரங்குவாயாக.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!

ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை துõளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த <உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.

மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.

எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.

பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=32925

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ருத்ராக்ஷம் பற்றிய பல விஷயங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன . மிக்க நன்றி. இந்த ருட்ராக்ஷத்தில் தான் இயற்கையிலேயே துளை உள்ளது என்பது ஒரு கூடுதலான தகவல். தொகுப்பை அளித்தமைக்கு மீண்டும் நன்றி.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும்
கர்ணனை கொடை வள்ளல்
என்று சொல்வது பிடிக்கவில்லை.
அவருடன் வாதிட்டான்.
கண்ணன்
உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.
அர்ஜுனனை அழைத்து,
''இன்று மாலைக்குள் இந்தக்
குன்று முழுவதையும் நீ தானம்
செய்து முடித்து விட்டால், நான்
உன்னை கர்ணனை விட சிறந்த
கொடை வள்ளல் என்று ஒத்துக்
கொள்கிறேன்,''என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க
செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள்
வரவர,
தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க
ஆரம்பித்தான்.
எவ்வளவோ பிரயாசைப்பட்டும்
அவனால் அன்று மாலைக்குள்
பாதி அளவு கூட தானம்
செய்து கொடுக்க முடியவில்லை.
அப்போது அந்தப் பக்கம் கர்ணன்
வரவே, கண்ணன் அவனை அழைத்து,
''கர்ணா, இந்தத் தங்கக்
குன்றை நாளை காலைக்குள் தானம்
செய்து கொடுத்து விட வேண்டும்,
உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.
கர்ணனும், ''இது என்ன பெரிய
வேலையா?'' என்று கூறிக்
கொண்டே அந்தப் பக்கம் வந்த
வறியவர் இருவரை அழைத்தான்.
அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும்
இந்த தங்க மலையை தானம்
அளிக்கிறேன்.
வெட்டி உபயோகித்துக்
கொள்ளங்கள்,''என
்று கூறியபடியே,சென்று விட்டான்.
அப்போது கண்ணன் அர்ஜுனனிடம்
சொன்னார்,
''இப்போது உனக்கு வித்தியாசம்
தெரிகிறதா? உனக்கு முழுமையாகக்
கொடுக்கலாம் என்ற எண்ணம்
கடைசி வரை வரவில்லை..

நீதி: தானமோ அன்போ நம் மனதின்
ஆழத்திலிருந்து முழுமையாக
கொடுக்காதவரை அதன்
சிறப்பு தெரிவதில்லை

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அம்பு லிக்கொரு நட்டம் புரிந்தவர்,
அம்பு லிக்கொரு நட்டம் புரிந்திலார்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்தவர்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்திளார் ,
வம்பு லாவும் இதழியை வேட்டவர்,
வந்து செய்ய இதழியை வேட்டிலார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்தினார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்திலார்,
பம்பு வேலை விடமிட (று) ஆக்கினார்,
பாவை யாசை விடமிட (று) ஆக்கிலார்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்தவர்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்திலார்,
செம்பொன் மாளிகை அம்பலக் கூத்தனார்,
தினமும் எங்களை அம்பலத்(து) ஏற்றினார்,
தில்லை யம்பதி வாழ் நடராசனார்,
திருவு ளச்செயல் நன்றா இருந்ததே.

- இளஞ்சூரியர், முதுசூரியர், என்றபுகழ் பெற்ற இரட்டைப் புலவர்கள்


தமிழ்ப் புலவர்களில் அதிகம் பேசப்படாதவர்களுள் "இரட்டை புலவர்"களும் அடங்குவர். இதில் ஒருவருக்கு கண்பார்வை கிடையாது. மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களின் வெண்பாக்களில் முதல் இரு அடிகளை முதலாமவர் சொல்ல, ஈர்ரடிகளிரண்டையும் பின்னவர் முடிப்பார்.

கால்களற்றவர் வழி சொல்ல, பார்வையற்றவர் அவரை தோள்களில் தூக்கிகொண்டு செல்வார். ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்று.மாற்று துணி ஒன்று தான். அவ்விரண்டுமே கந்தல் வேறு. ஒருமுறை அவ்விருவரும் மதுரையம்பதிக்கு விஜயம் செய்தனர்.

வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு, சொக்கரையும், மீனாட்சியையும் சந்திக்க உத்தேசப்பட்டு, ஆற்றில் இறங்கினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.

வைகையின் வெள்ள மிகுதியால், துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கி பிடிக்க முடியாத கால்களற்றவர் :

அப்பிலே தோய்த்திட் டடுத்தடுத்து நாமதைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?

(அப்பு - தண்ணீர்; தப்புதல் - தோய்த்தல்;
நீ தப்பின(தோய்த்த), அது உன்னைவிட்டுத்
தப்பி போச்சு

இதைக் கேட்ட அந்தகர் பாடுகிறார்
- செப்பக் கேள்
‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ’

“கந்தல் துணி - ஆயிரம் ஓட்டை - போனால்
போகட்டும் நம்மை பிடிச்ச துன்பம்
போச்சு போ” என்று.
முடவர் விடவில்லை

‘கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’
(அது எத்தனை கந்தையானாலும்
இரவிலே குளிருக்கு ஆகுமே)

இப்பொழுது முடிவாக,
பார்வையில்லாதவர் சொல்லுகிறார்

எண்ணாதீர்,
இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!’
(கலிங்கம் - ஆடை சொக்கலிங்கமுண்டு -
முண்டு என்றால் துண்டு;
இன்னொன்று மதுரை ஆண்டவன்
துணை உண்டு என்று).

அப்பொழுது துணி அலையில் தவிழ்ந்து
அவர் கைக்கு வர, இருவரும்
கரையேறுகின்றனர்.
There are many sites dedicated to the "இரட்டைப் புலவர்கள்"

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

இன்னும் 14 நாட்களே உள்ளன- திருவையாற்றில் அப்பர் திருக்கயிலை காட்சி விழா-2014 (26/07/2014)
ஆடி அமாவாசை அற்புதக்காட்சி: அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார்குளம் என்றும் சமுத்திரதீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷபவாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின் போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறு பெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்குகோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒரு முறை அழைத்தால் ஏழு முறை எதிரொலிப்பதைக் காணலாம்.
மாதர்ப்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங்கண்டறியாதன கண்டேன்.
""யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாறு சென்று திருக்கயிலைக் காட்சியைக் காண்போம்
பங்கேற்று பிறவிப் பயனைப் பெறுவோம்.
தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஆரூர் அமர்ந்த அரசேபோற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!!

Shared from : Krishnamurthy Natarajan

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

இரட்டைப் புலவரின் பாடல் ரசித்தேன்.
ஐயாரப்பன் ஆலயத்தில் ஏழு முறை ஒரு சுற்று தனில் ஒலிப்பதையும் சிறுவயதில் கேட்டுள்ளேன். தொகுப்புகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
தஞ்சாவூரான்
12 07 2012

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

மிக்க நன்றி...

இரட்டைப் புலவர்களைக் கொணர்ந்ததற்குமே...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை:

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி
கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி
பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று
வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ
சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று
வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்
போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து
கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா
ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய
சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த
திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம்
மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை
எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர்,
முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம்
இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர்
கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு,
கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்
அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்
புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும்
திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள்
மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து
ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான
சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின்
பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி,
சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்
தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள்
இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த
வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை
முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல்
புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த
பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி
தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள்
யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு
தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும்
கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள்
கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த
சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.
அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும்
இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட
வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.
இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம்
போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி.
இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில்
தொடங்கி,

ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை
நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்
பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை
வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப்
பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்
பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின்

ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம்,

சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும்
வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.
அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர்
திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5
அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய
சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும்
பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி
கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால்
நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப்
பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,
நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்,
குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள்
கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்
பட்டுள்ளது.
-
————————————
நன்றி: தினகரன்




Listen to the six kavacham here:

http://www.mediafire.com/?uupq134kvcbkv

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

மகா பெரியவாள் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி( ஒரு சிறுமி வடிவத்தில்)
ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது.

அங்கு எல்லோருக்கும் இந்தக்கோயில் தெரிந்திருப்பதால் மிக எளிதாக போகமுடிகிறது நேரு காலனி என்ற இடம் வர இந்தக்கோயிலைக் காணலாம் இந்தக்கோயிலில் அமர்ந்து அருள் பாலிக்கும் அன்னை ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி .......இவள் இங்கு அமர்ந்து அருள் புரிகிறாள். இந்த அம்பாள் இங்கு வந்து கோயில் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தவர் நம் மகா பெரியவாள் அவர்கள் தான். அவர்தான் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சுவாமிகள் பலவருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்........சுவாமிகள் பரங்கிமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் குழுவுடன் வந்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ. நந்தீஸ்வரர் கோயில் பரங்கிமலையில் இருக்கிறது.

வரும் வழியில் திரிசூலம் என்ற இடத்தில் திரிசூலநாதர், அம்பாள் திரிபுரசுந்தரியைத் தரிசித்து வரும் போது பவழந்தாங்கல் என்ற இடம் வந்தது. அங்கு பெரிய அரசமரம் நிழல் கொடுத்துக் கொண்டிருக்க சுவாமிகள் அந்த இடத்தில் களைப்பாறினார். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று பக்தர்கள் குழு சற்று நகர்ந்து நின்றுவிட்டனர். மகாபெரியவாள் தனித்துவிடப்பட்டார். திடீரென்று அந்த மகானுக்கு நாக்கு காய்ந்து போக நாவரண்டு விட்டது அவர் தன் சன்னமான குரலில் ஒரு சிஷ்யரை அழைத்தார். ஆனால் அவருக்குக்காதில் விழவில்லை.

அந்த நேரத்தில் சின்னப்பெண் கையில் சொம்புடன் வந்து நின்றாள்

"மஹாபெரியவரே இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே நான் கொண்டுவந்திருக்கிறேன். நீர் அருந்துங்கள்" என்றபடி சொம்பை நீட்டினாள். அவரும் நீரைப்பருகியபிறகு சொம்பைக்கொடுக்க அவளைப்பார்த்தபோது அந்தச்சிறுமி அங்கில்லை.

உடனே தன் சிஷ்யரை அழைத்து "நீங்கள் தண்ணீர் சொம்புடன் அனுப்பிய பெண் எங்கே?" என்று கேட்டார்

சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு..!

"எங்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள் ஒரு சிறுமியையும் அனுப்பவில்லையே "என்றனர் .

உடனே தியானத்தில் ஆழ்ந்த சுவாமிகள் வந்தது ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி என்பதை உணர்ந்தார்.

பின் அங்கிருந்த பக்தர்களை அழைத்தார்.

"இங்கு எங்கேயோ அம்பாள் புதைந்திருக்கிறாள் அவளை எப்படியேனும் வெளியே கொண்டு வந்து கோயில் கட்டுங்கள்" என்றபடியே தன் பாத யாத்திரையைத் தொடர்ந்தார்.

பழழந்தாங்கல் மக்களும் ஒருமனதாக அந்த இடத்தைத்தோண்ட கிடைத்தது ஒரு அம்பாள் விக்கிரஹம். குழந்தை வடிவில் இருந்தது. மேலும் தோண்ட இன்னொரு அம்மனும் கையில் தட்டுப்பட அவள் சண்டிகேஸ்வரி யாக இருந்தாள்.

எல்லோருக்கும் பரம சந்தோஷம். மஹாபெரியவாளிடம் அவர்கள் விஷயத்தைச்சொல்ல அவர் விக்ரபிரதிஷ்டை செய்ய வந்து அம்பிகைக்கு "ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி" என்ற நாமம் சூட்டினார்.

பின் என்ன கொஞ்சம் கொஞ்சமாக கோயில் கட்டும் பணி தொடர்ந்து கருவறை முன் மண்டபம் பரிவார தேவதைகள் எல்லாமே மகாபெரியவாள் சொற்படி அமைக்கப்பட்டு இன்று எல்லோருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

அவளைப்பார்க்க வேண்டுமானால் குறுகிய இடத்தில் படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும் ஐயப்பன் கோயில் படிகள் போல் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தேவதை இருக்கிறாள். மேலே அம்பாளின் அழகே அழகு. வர்ணிக்க வார்த்தைள் இல்லை.

அந்தக் கண்களை சொல்லவா புன்னகிக்கும் உதடுகளைச்சொல்லவா நீண்ட நேர்த்தியான நாசியைச்சொல்லவா .......எல்லாமே அத்தனை அழகு. நிச்சியமாக ஒரு தனி சக்தி நம்மேல் பாய்வதை உணர முடிகிறது, மாசி மாதம் அந்த ஆதவனும் ஆறு நாட்கள் காலை ஆறுமணிக்கு அம்பாள் மேல் தன் கிரணங்களைப்பாய்ச்சி வணங்குகின்றான்.

அம்பாள் அப்போது ஜ்வலிக்கும் அழகே அழகு!

இந்த நேரத்தில் சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது

சிவன் கோயிலில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல் இங்கு சண்டிகேஸ்வரி அமர்ந்திருக்கிறாள். குழந்தை பாக்கியம், கல்வி செல்வம் என்று பல வழங்கி பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் ராஜராஜேஸ்வரியை நாமும் தரிசித்து வணங்கி அவள் அருளைப்பெறலாமே

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

AAdi Pooram: Prayers to Amman:
Sri Kalikambal Temple
The temple is located at Thambu Chetty Street. Chennai city was once called Chennamman Kuppam in the name of Goddess Chennaman and later Chenna pattinam. The Kali of the erstwhile Chennamman Kuppam is today’s Kalikambal. The temple was once located inside the St George fort and later shifted here during the British regime. The temple has the sanctity of the two Pancha bootha Sthalams – Kanchipuram and Thiruvannamalai.
At the foot of the Goddess is present the Arthameru installed by Aadhi Shankarar….
Sri Kalikambal and Kamakshi are one and the same..

வங்க கடல் அலை இசையில்
மயங்கும் அன்னை அவள்
சென்னை நகரை காத்து நிற்பவள்
அருளை பொழியும் காளியவள்
காமதேஸ்வரரினன் சகியவள்
கந்த கோட்டம் வளர் கந்தனின் தாயானவள்
' யாதுமாய் நின்றவள்' அவள்..
ஐயன் தொழும் அன்னை அவள்!
காமாஷி என்றும் பெயருடையவள்
சாந்த ஸ்வரூபியானவள்
பெரியநாயகியாக நின்றவள்
நவராத்திரி நாயகியவள்
அபிராமியும் சிவகாமியும் அவளே
சங்கரியும் கல்பகமும் அவளே
நிம்பு மாலை சூடியவள்
வேங்கடவனின் கருத்தினில் நின்றவள்!
ஆதி சங்கரரும் பாரதியும்
சத்ரபதியும் போற்றி வணங்கியவள்
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

15 Amazing predictions for kalimyuga from bhagavatha purana

In the last canto of the Bhagavata Purana there is a list of predictions and prophecies,
about the dark times for the present age of Kali Yuga.
The following 15 predictions, written 5,000 years ago by Sage VedavyAsA,
are amazing because they appear so accurate.
Despite the negative tone of these prophecies,
there is still one bright spot for all of us, which is mentioned at the end


15 Most Amazing Predictions for Kali Yuga from the Bhagavata Purana


Prediction 1:
Religion, truthfulness, cleanliness, tolerance, mercy, duration of life, physical strength and memory will all diminish day by day because of the powerful influence of the age of Kali.
Source: Srimad Bhagavatam 12.2.1
sri-suka uvaca
tatas canu-dinam dharmah
satyam saucam ksama daya
kalena balina rajan
nanksyaty ayur balam smrtih

Prediction 2:
In Kali Yuga, wealth alone will be considered the sign of a man's good birth, proper behaviour and fine qualities. And law and justice will be applied only on the basis of one's power.

Source: Srimad Bhagavatam 12.2.2
vittam eva kalau nṝṇāḿ
janmācāra-guṇodayaḥ
dharma-nyāya-vyavasthāyāḿ
kāraṇaḿ balam eva hi


Prediction 3:
Men and women will live together merely because of superficial attraction, and success in business will depend on deceit. Womanliness and manliness will be judged according to one's expertise in sex, and a man will be known as a brahmana just by his wearing a thread.

Source: Srimad Bhagavatam 12.2.3

dāmpatye 'bhirucir hetur
māyaiva vyāvahārike
strītve puḿstve ca hi ratir
vipratve sūtram eva hi


Prediction 4:
A person's spiritual position will be ascertained merely according to external symbols, and on that same basis people will change from one spiritual order to the next. A person's propriety will be seriously questioned if he dos not earn a good living. And one who is very clever at juggling words will be considered a learned scholar.
Source: Srimad Bhagavatam 12.2.4
lińgaḿ evāśrama-khyātāv
anyonyāpatti-kāraṇam
avṛttyā nyāya-daurbalyaḿ
pāṇḍitye cāpalaḿ vacaḥ


Prediction 5:
A person will be judged unholy if he does not have money, and hypocrisy will be accepted as virtue. Marriage will be arranged simply by verbal agreement, and a person will think he is fit to appear in public if he has merely taken a bath.

Source: Srimad Bhagavatam 12.2.5

anāḍhyataivāsādhutve
sādhutve dambha eva tu
svīkāra eva codvāhe
snānam eva prasādhanam


Prediction 6:
A sacred place will be taken to consist of no more than a reservoir of water located at a distance, and beauty will be thought to depend on one's hairstyle. Filling the belly will become the goal of life, and one who is audacious will be accepted as truthful. He who can maintain a family will be regarded as an expert man, and the principles of religion will be observed only for the sake of reputation.

Source: Srimad Bhagavatam 12.2.6
dūre vāry-ayanaḿ tīrthaḿ
lāvaṇyaḿ keśa-dhāraṇam
udaraḿ-bharatā svārthaḥ
satyatve dhārṣṭyam eva hi
dākṣyaḿ
kuṭumba-bharaṇaḿ
yaśo 'rthe dharma-sevanam


Prediction 7:
As the earth thus becomes crowded with a corrupt population, whoever among any of ther social classes shows himself to be the strongest will gain political power.

Source: Srimad Bhagavatam 12.2.7

evaḿ prajābhir duṣṭābhir
ākīrṇe kṣiti-maṇḍale
brahma-viṭ-kṣatra-śūdrāṇāḿ
yo balī bhavitā nṛpaḥ

Prediction 8:
Harassed by famine and excessive taxes, people will resort to eating leaves, roots, flesh, wild honey, fruits, flowers and seeds. Struck by drought, they will become completely ruined.

Source: Srimad Bhagavatam 12.2.9

śāka-mūlāmiṣa-kṣaudra-
phala-puṣpāṣṭi-bhojanāḥ
anāvṛṣṭyā vinańkṣyanti
durbhikṣa-kara-pīḍitāḥ


Prediction 9:
The citizens will suffer greatly from cold, wind, heat, rain and snow. They will be further tormented by quarrels, hunger, thirst, disease and severe anxiety.

Source: Srimad Bhagavatam 12.2.10

śīta-vātātapa-prāvṛḍ-

himair anyonyataḥ prajāḥ
kṣut-tṛḍbhyāḿ vyādhibhiś caiva
santapsyante ca cintayā

Prediction 10:
The maximum duration of life for human beings in Kali Yuga will become 50 years.


Source: Srimad Bhagavatam 12.2.11

triḿśad viḿśati varṣāṇi
paramāyuḥ kalau nṛṇām

Prediction 11:
Men will no longer protect their elderly parents.

Source: Srimad Bhagavatam 12.3.42

na rakshishyanti manujah
sthavirau pitarav api

Prediction 12:
In Kali-yuga men will develop hatred for each other even over a few coins. Giving up all friendly relations, they will be ready to lose their own lives and kill even their own relatives.

Source: Srimad Bhagavatam 12.3.41

kalau kakinike 'py arthe
vigrihya tyakta-sauhridah
tyakshyanti ca priyan pranan
hanishyanti svakan api

Prediction 13:
Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their livelihood by making a show of austerity and wearing a mendicant's dress. Those who know nothing about religion will mount a high seat and presume to speak on religious principles.

Source: Srimad Bhagavatam 12.3.38

sudrah pratigrahishyanti
tapo-veshopajivinah
dharmam vakshyanty adharma-jna
adhiruhyottamasanam


Prediction 14:
Servants will abandon a master who has lost his wealth, even if that master is a
saintly person of exemplary character.
Masters will abandon an incapacitated servant, even if that servant has been in the family for generations.
Cows will be abandoned or killed when they stop giving milk.

Source: Srimad Bhagavatam 12.3.36

patim tyakshyanti nirdravyam
bhritya apy akhilottamam
bhrityam vipannam patayah
kaulam gas capayasvinih

Prediction 15:
Cities will be dominated by thieves;
the Vedas will be contaminated by speculative interpretations of atheists;
political leaders will virtually consume the citizens;
and the so-called priests and "intellectuals" will be
devotees of their bellies and genitals.

Source: Srimad Bhagavatam 12.3.32

dasyutkrishta janapada
vedah pashanda-dushitah
rajanas ca praja-bhakshah
sisnodara-para dvijah


Despite all of these dark prophecies,
there is one good quality in this age of Kali yuga:


kaler dosha-nidhe rajann
asti hy eko maha gunah
kirtanad eva krishnasya
mukta-sangah param vrajet

"Although Kali-yuga is an ocean of faults,
there is still one good quality about this age:
simply by chanting the names of Krishna,
one can become free from material bondage
and be promoted to the transcendental kingdom." (Source: Srimad Bhagavatam 12.3.51)

So let us take advantage of this special spiritual gift given during the dark times of Kali yuga to quickly raise ourselves spiritually through chanting of God's holy names.---

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

DO NOT FAIL TO READ THIS...

வேதம் விட்ட கண்ணீர்..

Read at:

http://mahaperiyavaa.wordpress.com/2011 ... a-kanneer/

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

திரு வேங்கட கைலாசம் அவர்களே,
சுட்டியயை அளித்ததற்கு மிக்க நன்றி. வேதம் கண்ணீர் விட்டதுபோல் படிக்கும் பொழுது என்னுடைய கண்களும் ஈரமாகி விட்டன. என்னே மகானின் தீர்க்க தரிசனம்.
தஞ்சாவூரான்
07 08 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
ஸரோஷா கங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ |
ஹரா ஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸௌபாக்ய ஜனனீம்
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸ கருணா ||


தாயே சிவனிடத்தில் உன் பார்வை காதலின் கசிவு உள்ளதாகவும்
அவரைத்தவிர மற்றவர்களிடத்தில் அருவருப்பு உள்ளதாகவும்
கங்கா தேவியிடம் கோபத்துடன் உடையதாகவும் ,
சிவனின் லீலைகளில் வியப்புடையதாகவும்
சிவனின் அணியாகிய பாம்பினிடம் பயம் உடையதாகவும் ,
தாமரையின் அழகுக்குஅழகு சேர்ப்பதுபோல் சற்றுச் சிவந்திருப்பதால் வீரரஸம்
உடையதாகவும்

தோழிகளிடம் ஹாஸ்ய ரஸம் உடையதாகவும்
என்னிடத்தில் கருணை உடையதாகவும் விளங்குகிறது.

இங்கே ச்ருங்காரம்,பீபத்ஸம் ,ரௌத்ரம்,அத்புதம், பயானகம்,
வீரம், ஹாஸ்யம், கருணை என்ற எட்டு விதமான ரஸங்கள்
தேவியின் பார்வையில் இருப்பதாக வர்ணிக்கப் படுகிறது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள். 1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள். இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்த்து. எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.

1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள். இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான். ‘ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?’ என்று குறிப்பிட்டார்.

http://delhi2000.8m.com/Gw9mala.jpg

1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள். ” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன. அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார், “ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்”என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ,” என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான் என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை. ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து,” ‘சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார். ‘ அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், " தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? " என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார். தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார். (GS:முதன் முதல் நடந்த) கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8.9.1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா. நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிபிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்.
“ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார்.
அடிக்கல்நாட்டுவிழாவின் வெற்றிக்கான எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரானசிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பினபுறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7.6.1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

http://murugan.org/pix/dsc00886.jpg

மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார். அவ்வாறே அமைத்தார்கள். பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

சிற்ப கலா மண்டபம்

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

சிற்ப கலா மண்டபம்

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது எனபதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். “பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது. விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.” என்று ஆசி அருளினார். அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.

ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர

https://mail.google.com/mail/?ui=2&ik=1 ... 9232e07f3d

Image

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
அம்பாள் பற்றி ருசிகர தகவல்

நாம் யாருமே அம்பாளை பார்த்ததில்லை. அம்பாளின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருக்கிறதே? எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது. வைரத்தை எந்த பக்கம் பார்த்தாலும் ''டால்''அடிக்கிறமாதிரி. மஹா பெரியவா சில அற்புதமான சேதிகளை சொல்லியிருக்கிறதிலே கொஞ்சம் சுருக்கி, சுலபமா விண்டு தருகிறேன். ''அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்னு உருவகப்படுத்த ஒரு ஐடியா. ஒரு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பார்க்காதவா யோசனை பண்ணிப்பாருங்கோ அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. நூறு பேர் வேண்டாம். முடியாது நம்மால். ஒரு பத்துபேருக்காவது போடறமா? ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவன் கிட்டே யே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதே. மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும் மனஸினால் மகாபாபங்களை , விடாமல் நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவள் முகம் எப்படி ஜீவனோட சந்தோஷத்தில் கொப்புளிக்கும்? அவளுடைய அன்பையும், அதில் உருவாகும் ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை பண்ணக்கூட முடியாது எங்கே நான் எழுதறது? அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் ஆச்சே. அதால் தானே ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார்.. இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது? அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு தங்குமா?, தாங்குமா? அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் புரிய பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசு. வேறு வேறு ரூபம்.
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை. அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். காளிதாஸர் அவளை ''ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே'' என்று 'சியாமளா தண்டகத்தில்'ஸ்துதி செய்கிறார். வர்ணம் = நிறம் மட்டும் அல்ல.''அக்ஷரம்'' என்றும் அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது .மாத்ரு என்றால் தாயார் என்பது தெரியுமே. சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலம் பிரணவம்.(''ஓம்'') அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது. அ - சிருஷ்டி; உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ - ம - அ - என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது. -__._,_.___

Post Reply