Aanmeekam...

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

கண்நோய் தீர்க்கும் தலம்
காஞ்சீபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் முருங்கை மரத்தின் நிழலில் ஜோதி லிங்கமாக எழுந்தருளி இருக்கும் கச்சபேஸ்வரரை சூரியன் தேவ வடிவாக வழிபட்டதாக கூறப்படுகிறது.

இங்கு சூரிய தேவன் ஒரு தீர்த்தம் (குளம்) அமைத்து பெருமானுடன் இஷ்டசித்தீஸ்வரர், ஞான சித்தீஸ்வரர், யோக சித்தீஸ்வரர், தர்ம சித்தீஸ்வரர் மற்றும் வேத சித்தீஸ்வரர் ஆகிய லிங்கங்களை எழுந்தருள செய்து வழிபட்டுப் பேறு பெற்றதாக காஞ்சீபுரம் தல புராணம் கூறுகிறது.

இந்தக் கோவிலில் சூரியன், விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று விளங்கும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதயத்தில் நீராடி ஜோதிர் லிங்கத்தை வழிபட்டு சூரியனையும் வழிபடுவோர் நோய் நொடியின்றி வாழ்வர் என்பது ஐதீகம். குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

ஒருமுறை ‘மயூரசர்மன்’ என்ற கவுடதேச மன்னன் விதி வசத்தால் தன் இரு கண்களையும் இழக்க நேரிட்டது. இந்த தலத்து மகிமை அறிந்து இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி மீண்டும் அவன் பார்வை பெற்றதாக புராணம் கூறுகின்றது.

வடமொழியில், புலமை பெற்ற அவன், கண்பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் சூரியனை துதித்து இயற்றிய நூல் தான் ‘சூரியசதகம்’ ஆகும்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

பன்னிரண்டான் = துவாதச ஆதித்யர்கள் (?)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

.
திருமூலர் எழுதிய திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரத்தில், பிராணாயாமம் என்ற தலைப்பில் இந்தப் பாடல் உள்ளது.

Check this
http://www.thevaaram.org/thirumurai_1/s ... Order=DESC

THIS
http://www.tamilvu.org/slet/l4100/l4100 ... 18&pno=254

AND THIS
http://www.thevaaram.org/thirumurai_1/o ... ield=10305
.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

The suggested explanation is notional. Here is

என் விளக்கம்

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.v

பன் = பன்மை (plurality)
இரண்டு = two
பன்னிரண் டானை = The one who has the plurality of two
i.e., சக்தி சிவமென்று இரண்டாக பிரிந்து காணப்படுபவன்
(or சிவன் விஷ்ணு என்று இரண்டாக பார்ப்பவன்)
அவனுக்கு பகல்இரவுள்ளது (i.e., Light and darkness)
பாகன் = பக்குவ நிலை அடையாதவன்

In other words the one who did not realize the Unity of God Siva and is confused
by the duality is disturbed by the duality in life (good and bad symbolized as light and darkness). That arises due to
மாயை. Once one is released from that illusion (get the advaitic knowledge) then he
has no duality - it is one "light" eternal!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

tirumandiram-3 - prANAyama - Verse 577

Post by vgovindan »

Meaning given by Dr B Natarajan ('tirumandiram' published by SrI Ramakrishna Mutt, Mylapore - Page 93)

"Learn to Control Breath and Master Death

The elephant that is twelve-mAtra breath
Is awake night and day;
The mahout (jIva) knows not the elephant;
When mahout learns to control elephant
The elephant knows not night and day;
(In eternity it exists)

The 12 mAtra breath is an elephant that is awake night and day. jIva is the mahout. The mahout should learn how to control the elephant.
The elephant symbolizes 'ego', and it is in that sense that Siva is said to have killed and skinned the elephant."

Please also refer to 'tirumandiram-3 - kAyasiddhi (13) - verse 5 - where பன்னிரண்டங்குலம் is mentioned in regard to prANa.

http://www.thevaaram.org/thirumurai_1/o ... ield=10313

Please also refer to 'yoga SikhA upanishad' - chapter 4 - verse 17 - 'dvAdaSAngula' (பன்னிரண்டங்குலம்)

http://nitaaiveda.com/All_Scriptures_By ... anisad.htm

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

திருமந்திரம் :: 5. பிராணாயாமம்

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.

பன்னிரண்டு அளவு சுவாசம் உள்ளே செல்லவும் வெளியே செல்லவுமாக இருக்கிறது. சூர்ய கலை சந்திர கலை என்று வெறும் காற்றின் பயணமாய் இருக்கிறது. ஆன்மா விழித்த (சகஸ்ரம் அடைந்த) பின் பிராணன் சக்தி இரவு பகல் என்று பாராமல் இயங்க ஆரம்பிக்குமே.

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: Aanmeekam...

Post by erode14 »

it is Anmikam only. நண்பர் ராஜேஷ் கர்கா உரையாடலாய் எழுதியதிலிருந்து:

நீ இப்போ நாகரிகம்ன்னு சொன்னியே. அது நாகரிகமா இல்லை நாகரீகமா?”
“நாகரீகம் எல்லாம் இல்லை நாகரிகம்தான். இதே மாதிரி தேசீயம், மார்க்கசீயம், காந்தீயம் அப்படின்னு எழுதறாங்க. இது எல்லாமே தப்பு. தேசியம், மார்க்கசியம், காந்தியம் இப்படித்தான் எழுதணும். இயம் அப்படின்னா ஆங்கிலத்தில் -ismன்னு சொல்லற மாதிரி.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Science of Pranayama by Swami Sivananda

Post by vgovindan »

Please refer to the link regarding 'Science of Pranayama' by Swami Sivananda -
http://www.dlshq.org/download/pranayama.htm

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

erode14 wrote:it is Anmikam only. நண்பர் ராஜேஷ் கர்கா உரையாடலாய் எழுதியதிலிருந்து:

நீ இப்போ நாகரிகம்ன்னு சொன்னியே. அது நாகரிகமா இல்லை நாகரீகமா?”
“நாகரீகம் எல்லாம் இல்லை நாகரிகம்தான். இதே மாதிரி தேசீயம், மார்க்கசீயம், காந்தீயம் அப்படின்னு எழுதறாங்க. இது எல்லாமே தப்பு. தேசியம், மார்க்கசியம், காந்தியம் இப்படித்தான் எழுதணும். இயம் அப்படின்னா ஆங்கிலத்தில் -ismன்னு சொல்லற மாதிரி.
I beg to differ. The words are derived using sanskrit grammar on taddhita affixes.
ईयं is appropriate. See Kale's Higher sanskrit grammar chapter on taddhita affixes (article 340)...

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: Aanmeekam...

Post by erode14 »

oh.. i will tell him mAmA.. oh.. so only we say sanathsujAtheeyam?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

But he is correct in respect of नागरिकं which is derived from नगरं using the वुञ‌ pratyayam!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Hindu prayer for healing..
Listen to various padhikams at this link..

http://www.shaivam.org/siddhanta/pal.htm

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

தண்ணீருக்கு H2O என்று சூத்திரம் சொல்கிறார்கள்.

அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதர்வண வேதத்தில் தான் முதன் முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது.

அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராணவாயு ஒரு பங்கும், இன்னொரு வாயு(ஹைடிரஜன்) இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள்.

பாருங்க! நம்ம வேதங்களில் இருக்கிற கருத்தைத்தான், வெளிநாட்டார் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நாம் ஆன்மிகத்தை அறிந்து கொள்ள மறுக்கும் தன்மையால் விளைந்த கொடுமை இது !!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

அதர்வண வேதத்தில் ... பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது.
அப்படியா? எங்கே?
அந்த சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை அளித்தால் பொருளறிய ஏதுவாக இருக்கும்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Yes!
Without a full reference this is difficult to interpret..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

The link is from...

http://www.dinamalar.com/aanmeegamnews_ ... ws_id=7086

It is for Sanskrit scholars to find out the veracity of this...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

This was read before.
The posting in this forum sounded like an endorsement of the claim!
Such references would be worthwhile if given with additional inputs.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

This is pseudo science - interpreting vedas to suit modern science.
There was no concept of oxygen and hydrogen during vedic times !
Again the sentence is incomplete, let alone where it occurs in the Veda.
As it is I will translate it as:
ஒரு பிராணனுக்கும் மற்றவை இரண்டுக்கும்...

srkris
Site Admin
Posts: 3497
Joined: 02 Feb 2010, 03:34

Re: Aanmeekam...

Post by srkris »

அதர்வண வேதத்தில் ... பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது.
The Vedas as far as I know contain no ślokas. Śloka is a post-Vedic form of the Anustubh chandas, and the Ramayana is the first known major literature to use them consistently (although I know of Buddhist slokas that apparently pre-date the Ramayana), see http://en.wikipedia.org/wiki/Shloka

If anyone has access to any of the Atharva Anukramanis, can you check if any of the mantras are composed in the form of ślokas?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

As per Sanskrit dictionary 'aNu' is 'an atom of time' equivalent to 54,675,000th part of one muhUrta of 48 minutes. Accordingly, it works out to 5.2e-5 seconds.
Does this sound anything familiar to modern scientific terms?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

In science class, the teacher asked, “Ryan, what is the formula for water?”



Ryan: “H, I, J, K, L M, N, O.”



Teacher: “That’s not what I taught you!”



Ryan: “But you said the formula for water was… H to O…”

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

venkatakailasam wrote:The link is from...

http://www.dinamalar.com/aanmeegamnews_ ... ws_id=7086

It is for Sanskrit scholars to find out the veracity of this...
I have done a complete search of Atharva Veda samhita.
The word 'prANaM' occurs eleven times there.
There is no such quote as cited !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

I too did a search; could not find the quote.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

திரும்பிய கிருஷ்ணன்

இது ஒரு அதிசயத்தின் கதை
பீறே கவுடாவுக்கும் பீச்சம்மாவுக்கும் பிறந்தவன் திம்மப்பா. திம்மப்பாவுக்கு கிருஷ்ணகுமாரியின் மீது மோகம். அவளை எப்படியாவது அடையவேண்டும். ஆனால், வேறொருவன் போட்டிக்கு இருந்தானே!. இருவருக்கும் கொலை சண்டை. திம்மப்பாவுக்கு கிருஷ்ணனிடம் எல்லையில்லாத பிரேமை. ஆதலால் திம்மப்பாவுக்கு "வேண்டாம் சண்டை. விட்டுக்கொடு அவளை" என்றான் கிருஷ்ணன். கிருஷ்ணகுமாரி மீது இருந்த ஆசை கிருஷ்ணன் சொன்னதை நிராகரிக்க வைத்தது. பலன்? சண்டையில் தோற்று உயிர் தப்பியதே கிருஷ்ணன் அருளால் தான். கிருஷ்ணன் சொன்னதை கேட்காமல் போனோமே என்ற தாபம் திம்மப்பாவை அடியோடு மாற்றியது. அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணபக்தர் வ்யாசராஜர் ஊருக்கு அப்போது விஜயம் செய்தார். பஞ்சு நெருப்போடு இணைந்துவிட்டது . திம்மப்பா இப்போது கனகதாசா ஆனார். கிருஷ்ண ஸ்மரணையில் திளைத்தார். எண்ணற்ற கிருதிகளை கண்ணன் மேல் இயற்றினார், பாடினார், சமூக சீர்திருத்த சேவை, வேதாந்தம் ஆகியவற்றிலும் ஈடுபட்டார் சிறந்த கிருஷ்ணா பக்த துறவியானார்.

கிருஷ்ணனை தரிசனம் செய்ய அவரது ஆவல் அவரை சுண்டியிழுக்க உடுப்பி சென்றார். கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. ஏன்? பிறவியில் மேல் வகுப்பு இல்லையாம்? கிருஷ்ணா என் மனத்தில் உள்ள உன்னை வெளியே இங்கு கோவிலில் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்று பிரயாசை பட்டார். உள்ளே செல்ல முடியாது. எப்படியோ மெதுவாக உள்ளே நகர்ந்துவிட்டார். யாரோ பார்த்து முறையிட நிரவாகத்தார் குற்றம் செய்ததற்காக அவர் விழிகளை குருடாக்க கட்டளையிட்டனர். அவரது தேனினுமினிய பாடல்களை கேட்டு தண்டனையின்றி அவரை கோவிலை விட்டு வெளியேற்றினார்கள்.
அவர் கோயிலின் பின்னே சென்று சுவற்றின் பின் நின்று “ஹே. கிருஷ்ணா! “நான் உன் பக்தனல்லவா? எனக்கு உன் தரிசனம் கிடைக்கவில்லையே. பிறவிப்பயன் என்னை உன் தரிசனம் கிட்டாமல் செய்கிறதே!” என குமுறினார்
இங்கு தான் இப்போது தான், அந்த அதிசயம் நிகழ்ந்தது. கிருஷ்ணன் கர்பக்ரஹத்தில் கிழக்கே வாசலை பார்த்து நின்றவன் மேற்கு பக்கமாக திரும்பி சுவற்றை பார்த்து நின்று கொண்டான்.. கர்பக்ரஹ பின் சுவர் பிளந்தது. பிளவின் வழியே சுவற்றுக்கு பின்னால் விரட்டப்பட்ட கனக தாசரை பார்த்தவாறு கிருஷ்ணன் நின்று கொண்டான். கனகதாசருக்கு திவ்ய தரிசனம் கிட்டியது. பிளந்த சுவர் ஒரு ஜன்னலாக மாற்றப்பட்டு (கனகன கிண்டி என்று பெயர்) இன்று வரை கிருஷ்ணனை உடுப்பியில் அந்த ஜன்னல் வழியாகவே தரிசனம் செய்கிறோம். தவறு செய்த அனைவரும் கனகதாசர் காலடியில் விழுந்தனர் என்பது எல்லா கதைகளிலும் வரும் ஒரு வழக்கமான வாக்கியம். ஆனால் அன்று முதல் நினைத்த போதெல்லாம் கிருஷ்ணன் கனகதாசர் முன் தோன்றினான். நாம் எப்படி ஒருவரை யொருவர் பார்க்கிறோமோ அவ்வாறே கிருஷ்ணனும் பக்தரும் சந்திப்பது வழக்கமாயிற்று. ..

English version is here.. http://www.boldsky.com/yoga-spiritualit ... 41110.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Read here..the misuse of temple property...

http://epaper.dinamalar.com/PUBLICATION ... tml?Mode=1

And also read

Freeing temples from state control at..

http://www.thehindu.com/opinion/lead/fr ... 594132.ece

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ராமாயணத்தில் கேயோஸ் தியரி

கேயோஸ் சித்தாந்தத்தின் படி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பு கூட ஒரு புயலுக்கு காரணமாக இருக்க முடியும் அல்லது வந்திருக்க வேண்டிய புயலை வரவிடாமல் தடுத்திருக்க முடியும் என விளக்குகிறது.

ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களின் ராமாயண சொற்பொழிவு காலை ஏழு மணியளவில் சென்னை தி.நகரின், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அலேமலுமங்கா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

ராமாயணத்தை விளக்கமாகவும் விரிவாகவும் சுவைபட சொல்லி வருகிறார் ஸ்வாமிஜி.

இன்று ராவண சம்ஹாரத்தின் ஆரம்பம் எது என்பதை காண பின் நோக்கி விளக்கி வந்தார்.

ராமர் ராவணனை ஏன் கொன்றார்?

அவன் சீதாதேவியை கவர்ந்து சென்றதால் கொன்றார்.

சீதாதேவியை ராவணன் ஏன் கவர்ந்தான்?

சூர்ப்பணகையின் போதனையால் கவர்ந்தான்.

சூர்ப்பணகை ஏன் அவ்வாறு போதித்தாள்.?

ராமர் அவள் காதலை நிராகரித்ததால்.

ராமரிடம் அவள் எப்படி காதல் கொண்டாள்?

ராமரை வனத்தில் கண்டதால்.

ராமர் வனம் வர காரணம்?

கைகேயியின் வரம்.

கைகேகி ஏன் அந்த வரங்களை கேட்டாள்?

ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்ததால்.

தசரதர் ஏன் அவ்வாறு அறிவித்தார்?

தன் காதோரம் ஒரு முடி நரைத்திருந்ததை கண்டு தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்தார்.

தசரதரின் காதோரம் முடி நரைப்பதற்கும் ராவண சம்ஹாரத்திற்கும் இருக்கும் இந்த மறை முக தொடர்பு தான் கேயோஸ் சித்தாந்தம்.

இந்த மறைமுக தொடர்பை உணர்ந்ததால் தான் ராமாயணத்தை பாடிய எல்லா பெருங்கவிகளும் தசரதருக்கு முடி நரைக்கும் காட்சியை பாடியிருக்கிறார்கள் என விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் விளக்கினார்கள்.

காளிதாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று ராவணன் செய்த பாவத்தால் தசரதருக்கு முடி நரைத்தது என பாடினாராம்.

நம் இதிகாசங்களில் பொதிந்துள்ள இது போன்ற அற்புதங்களை உணராதவர்கள் சிலர் மேற்கத்திய விஞ்ஞானம் புரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் உயர்ந்ததெனவும் இந்திய ஞானம் தாழ்ந்தது எனவும் கூறி வருகிறார்கள். ....



http://thirumbiparkiraen.blogspot.in/20 ... -post.html

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

காக்கா ஏறப் பனம்பழம் விழுந்ததாம் - அர்த்தமில்லாத இம்மாதிரி கட்டுக்கதைகள்தாம் நம் நாட்டு கலாச்சாரத்தையும், இலக்கியங்களையும், அறிவு நூல்களையும் கேலிக் கூத்தாக்கி சித்தரிக்க வாய்ப்பளித்துள்ளன. ஒரு யுகபுருஷனின் அவதாரத்திற்கு இப்படியொரு மட்டமான விளக்கம் தேவையில்லை.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

இறையெனும் ஈர்ப்பு!

யோகரதோ வா போகரதோ வா
ஸங்க ரதோ வா ஸங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ

பொருள் : ஒருவனுடைய சுற்றுப்புற சூழ்நிலை எப்படி இருந்தாலும் அவன் மனது மட்டும் எப்போதும் இறைவன் பால் ஈர்க்கப்பட்டு இருந்தால், அவன் மகிழ்ச்சியாகத்தான் இருப்பான். அவன் அஷ்டாங்க யோக வழியில் இருந்தாலும் சரி, உலக போகங்களில் திளைத்து இருந்தாலும் சரி, அவனைச் சுற்றி உற்றார் உறவினரின் கூட்டம் இருந்தாலும் சரி, யாரும் இல்லாமல் தனியாக இருந்தாலும் சரி - எப்போதும் ஆனந்தம்தான்!

கோரா என்பது அவர் பெயர். பொம்மை செய்ய பிசைந்து கொண்டிருந்த மண்ணில், தன் குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் போகுமளவுக்கு விட்டலன் மேல் பக்தி. இதனால் கோபம் கொண்ட அவர் மனைவி துளசி, ஒரு பெரிய ரம்பத்தை எடுத்து விட்டல் சிலையை வெட்டப் போனாள். ஹேய் துளசி, நில்லு என்று அவள் கையைப் பிடித்தார் கோரா. திமிறிய துளசி, விட்டல் மீது ஆணை, என்னைத் தொடாதீர்கள் என்றாள்.

அவ்வளவுதான்! கோரா கும்பர் தன் மனைவியைத் தொடவே இல்லை. துளசி தனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசையால், தன் சகோதரி சாந்து பாயை தன் கணவருக்குத் திருமணம் செய்து வைத்தாள்.

நடந்தது எதுவும் அறியாத துளசியின் தந்தை கோராவிடம், மாப்பிள்ளை! நீங்க துளசியின் மீது அன்பு வைத்திருப்பது எனக்குத் தெரியும். என் குட்டி மகள் சாந்துவும் சந்தோஷமாக இருக்கணும். விட்டல் மீது ஆணையாக துளசியை நடத்துவது மாதிரியே நீங்க சாந்துவையும் நடத்தணும் என்றார். துளசியைத்தான் கோரா தொடுவது இல்லையே! அதனால் சாந்துவையும் தொடவில்லை அவர்! விட்டல் மீது அல்லவா சத்தியம்! மீறுவாரா? இருவரையும் தொடவில்லை.

துளசியும் சாந்துவும் ஒருநாள் இரவு அவர் உறங்கும் போது, அவர் நம்மைத் தொடவேண்டாம், நாம் இருவரும் அவரைத் தொடலாமே... என்று கோராவின் இரு பக்கத்திலும் போய் அவரைக் கட்டிக் கொண்டனர். பதறிப்போன கோரா, பெரிய ரம்பத்தால் தன் இரு கைகளையும் வெட்டிக் கொண்டார்.

மண் பொம்மை செய்பவருக்கு கைகள் இல்லாமல் என்ன செய்வார்? விட்டல் நினைவில் காலால் மண் பிசைவார். துளசியும் சாந்துவும் பொம்மை செய்வார்கள். ஆனால், அவற்றை வாங்குவார் இல்லை! வருமானம் குறைந்தது. கடன் ஏறிற்று. வீடு ஏலத்துக்கு வந்தது. கோரா கலங்கவில்லை. விட்டலா, விட்டலா என்றே நாளைக் கழித்தார். அவர் வீட்டை ஏலத்தில் எடுத்தான் சியாமா என்ற பையன். கவலை வேண்டாம் உங்களுக்கு நான் இருக்கிறேன் என்றவன், அவருக்கு உதவியாக மண் பொம்மைகள் செய்து விற்று வந்தான்.

ஒரு நாள்.. கோராவிடம் வந்த நாமதேவர், என் விட்டல் உன்னிடம் இருக்கிறானே! அப்பா! என்ன தவம் செய்தாய்? என்றார். விட்டலா, பாண்டுரங்கா! உன்னை வேலை வாங்கிய என்னை மன்னித்து விடப்பா! என அரற்றினார் கோரா. எல்லாரும் பண்டரிபுரம் வாருங்கள் என்று கூறி மறைந்தான் விட்டல சியாமளன். எல்லாரும் பண்டரிபுரம் சென்றனர். நாமதேவர், பஜனை முறைப்படி கோராவுக்கும் ஜால்ரா கொடுத்தார். அதைப் பெற தம்மை அறியாமலேயே கை நீட்டினார் கோரா. வாழை குருத்து போல் இரு கைகள் நீண்டன. அவை கோராவின் கைகள்! எல்லோரும் ஆனந்தப்பட்டனர். பிரம்மத்தில் லயித்த கோரா கும்பருக்கு, விட்டலனே சேவகனாக வந்ததில் வியப்பில்லை அன்றோ!

http://temple.dinamalar.com/StoryDetail.php?id=36632

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

அதீத பக்தியினால் தன் குழந்தையைக் கொன்றார்.
வீட்டை இழந்தார். வருமானம் இழந்தார்.
மனைவி சோகத்தில் உழன்றாள்.
அவளுடைய சகோதரியின் வாழ்க்கையும் பாழானது.

இந்த நிலையில், சப்பைகட்டுக்கு ஒரு கட்டுக்கதை.
கை முளைத்ததாம்! கேட்டு வியக்க ஏமாளி கூட்டத்துக்கு குறைவில்லை!
பக்தி என்பதை பைத்தியக்காரத்தனமாக மாற்றிவிட்டனர்.

இத்தகைய கட்டுக் கதைகள் ஹிந்து தர்மத்தை இழி நிலைக்கே இட்டுச் செல்லும்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


Purandara Dasa was born to a pawnbroker named Varadappa Nayaka. Varadappa Nayaka and his wife Lakshmi Bai had been childless for several years, and finally, after praying to Lord Srinivasa of Tirupati, they became proud parents of a child whom they called Srinivasa. The family are supposed to have hailed from Pandarapur in modern day Maharashtra but Purandara Dasa lived in Hampi during the latter part of his life.

Srinivasa Nayaka grew up and entered his father's business. However, unlike his father, he was a miser, so much so that it is said that he even baulked at spending money on treatment for his father's illness. His wife Saraswathi bai was the opposite: always wishing to contribute to charity much to the displeasure of her husband.

One day, Lord Vishnu in the guise of a poor priest visited Srinivasa Nayaka's shop who wanted some alms to perform the thread ceremony for his son. Srinivasa Nayaka, being a miser, asked him to return the following day, and kept the Brahmin coming for another six months. Finally, fed up with the Brahmin's persistence, he gave him one fake coin that he played with as a child. Vishnu as the priest then told Srinivasa's wife Saraswathi the pitiful story of how a miserly pawnbroker made him come to his shop every day for six months only to give him a fake coin in the end. Saraswathi's heart melted and she gave the Brahmin her nose ring as alms (a gift from her parents and thus not something that she got from her husband). The Brahmin promptly took the nose ring back to Srinivasa Nayaka's shop, where he wanted to pawn it for money. The pawnbroker recognized it, however, so he locked it up in his safe and hurried home. He demanded that Saraswathi produce her nose ring immediately. Struck with fear, Saraswathi locked herself in the kitchen and tried to swallow poison. Miraculously, the nose ring dropped from the heavens into her cup of poison and she was able to produce it for her husband. Upon returning to his shop, he opened the safe, only to find that the nose ring in the safe had vanished. This put his mind into a turmoil. After deep thought, he came to the conclusion that the brahmin was none other than Lord Shri Purandara Vitthala Himself. He recalled all the incidents that had transpired in the previous six months. Wonderstruck, he was ashamed of his miserliness, Srinivasa Nayaka decided to renounce all material belongings and become a dasa (servant)of god. Thus, Srinivasa Nayaka came to be Purandara Dasa. In gratitude for this event, he would later compose a song dedicated to his wife, for having shown him the path to God. From that day onwards he became a devotee of Shri Hari. The once Navkoti Narayana became a Narayana bhakta, the hands which sported gold and diamond rings now played the tamboora, the neck which used to be resplendent with golden chains now housed the tulasi mAla. The man who had turned away countless people away, now himself went around collecting alms and living the life of a mendicant. The Nayaka who would have lived and died an inconsequential life became the Great Purandaradasa, loved and revered even centuries after his death.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர
2 வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.

ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.

இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.

`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..?’ என்று கேட்டனர்.

அதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர். விவேகானந்தரும் அதை எதிர்கொள்ள தயாராக எழுந்தார்.

அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.

துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்!!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

அந்த வெள்ளையர் அவரை தாக்கத் தொடங்கினர்.
விவேகானந்தர் அமைதியாக தேவியை உபாசித்து தம் சிண்டு விரலை அசைத்தார்.
அதிலிருந்து இரண்டு நெருப்புப் பொறிகள் கிளம்பி அவ்விருவரையும்
குருடர்களாக்கியது. அவர் மகிமையை உணர்ந்த அவர்கள் அவர்
காலில் விழுந்து மன்னிக்க மன்றாடினர். கருணையுடன் அவர்
மறுபடியும் விரலை அசைத்தார். அவர்களுக்கு பார்வை திரும்பியது.

துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, அருளும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்!!


இப்படித்தான் (உண்மை கலந்த) கட்டுக் கதைகள் உருவாகுகின்றன... :D

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

CML..great find..

பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம், மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகியவற்றில் வரும் சாயரட்சை காலமாகும்.

ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும். பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள் சில உள்ளன. அவற்றைக் காணலாம்.

பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் – பலவளமும் உண்டாகும்.
தேன் – இனிய சாரீரம் கிட்டும்
பழங்கள் – விளைச்சல் பெருகும்.
பஞ்சாமிர்தம் – செல்வம் அதிகரிக்கும்.

நெய் – முக்திபேறு கிடைக்கும்.
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.
இளநீர் – நல்ல மக்கட்பேறு அமையும்.
எண்ணெய் – சுகவாழ்வு பெறலாம்.
சந்தனம் – சிறப்பான சக்தியை பெறுவீர்கள்.
மலர்கள் – தெய்வ தரிசனம் காணலாம்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

மாங்காடு தலத்தில் ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீசக்ரம் ராஜயந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது.

எட்டு மூலிகைகளால் ஸ்ரீசக்ரத்தை ஆதி சங்கரர் உருவாக்கியதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்றவையே சாற்றப்படுகின்றது. 18 இதழ் தாமரை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சக்ரத்துக்கு 18 முழப்புடவை கட்டுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் ஸ்ரீசக்ரத்திற்கே முக்கிய பூஜைகள் நடத்தப்படுகிறது. அதில் குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

தவம் இருந்த காமாட்சி மவுன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்தில் தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறுகையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான ``ஆதி காமாட்சி'' அம்மனை காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ஒரு ஆலயத்தில் கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு. அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது. மாமரத்தின் அடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

#133-ன் தொடர்ச்சி:-

அவ்விரு வெள்ளையரும் விவேகானந்தரின் சீடராக மாறினர்! ஞானானந்தா, கீதானந்தா என்ற பெயருடன் கடைசிவரை விவேகானந்தரின் பெருமைகளைப் பரப்பி வந்தனர்! இருவரது அதிஷ்டானங்களையும் கல்கத்தாவில் காணலாம். அங்கே தினசரி பூஜைகள் இன்னமும் நடந்து வருகின்றன... ...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான இரகசியங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் இரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Center Point of World's Magnetic Equator ).

(2)பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்" என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்தப் படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.

Listen to a song from Kranan..

Ullathil Nalla Ullam from Karnan

http://www.youtube.com/watch?v=rUpDInqxMZI

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Story of Lord Vithal at Pandarpur – Story of Panduranga Vittala..


Lord Vithal, or Panduranga Vittala, is an incarnation of Lord Vishnu and is worshipped in the world famous Pandarpur Rukmini Vithal Temple at Pandarpur in Maharashtra. There is an interesting story that explains about the incarnation of Lord Vithal at Pandarpur.

Once a devotee named Pundalik was traveling to Kashi and reached the Ashram of Saint Kukkut. He asked the sage the way to Kashi. Kukkut Rishi said that he did not know the way to Kashi and he had never been there.

Pundalik made fun of Kukkut Rishi for not knowing the way to Kashi and said that a holy man like him should have already visited Kashi. Kukkut Rishi kept quiet and did not bother to answer Pundalik.
During the course of the night Pundalik heard the voice of women in the ashram.

He came to out to look what was happening and saw that three women were sprinkling water on the Ashram and cleaning it.

On enquiry, Pundalik found out that the three women were Ganga, Yamuna and Saraswathi and they had come to clean the Ashram of Kukkut Rishi. Pundalik wondered how a saint like Kukkut who had not visited Kashi was such holy and powerful that the three holy rivers came down to purify his ashram.

The three women told Pundalik that piety, spirituality and devotion does not depend on visiting holy places or doing costly rituals but in performing one’s karma.

The three women told him that Sage Kukkut had served and nursed his parents most faithfully and devoted all his life to that one aim. He had thus accumulated Punya enough to earn Moksha and bring us down to earth to serve him.

Pundalik had left is old parents at home and was visiting Kashi to gain moksha and blessing. He did not bother to entertain the request of his parents to take them also to Kashi.

Pundalik now understood his mistake and rushed back home and took his parents to Kashi and on return started looking after them. From then onwards the care of his old mother and father came before everything else.

Lord Krishna was moved by the sincere devotion of Pundalik towards his parents. He decided to visit Pundalik’s home.

When Lord Krishna visited Pundalik’s home he was serving food to his old parents.

Pundalik saw the Lord at his door but his devotion to his parents was so intense that he wanted to finish his duties first and then attend to his guest. Pundalik had reached such a stage that it didn’t matter to him whether the guest was a mere mortal or God. All that mattered was service to his parents.

Pundalik gave Lord Krishna a brick to stand on and asked Him to wait until his duty was completed. Lord Krishna was moved by the devotion of Pundalik to his parents and waited for him patiently.

Later when Pundalik came out he asked the Lord forgiveness for making Him wait. Lord Krishna blessed him and asked him to ask a boon.

Pundalik said what more can I ask when the Lord himself waits for me.

When Lord Krishna insisted that he ask a boon, Pundalik asked that the Lord should remain on earth and bless and take care of His devotees.

Lord Krishna agreed to stay there and is known as Vithoba or the Lord who stands on a brick. This form of the Lord Vithoba is Swayambhu which means that His idol has not been carved or etched but it came into existence on its own.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Watch the old Haridas movie :D

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Story of Lord Vithal at Pandarpur – Story of Panduranga Vittala.

Lord Vithal or Panduranga Vittala is worshipped in the famous Pandarpur Rukmini Vithal Temple at Pandarpur in Maharashtra. This story is about the Lord Vithal Temple of Pandarpur.

Once a devotee named Pundalik was traveling to Kashi and on the way reached the Ashram of Saint Kukkut. He asked the sage the way to Kashi. Kukkut Rishi said that he did not know the way to Kashi and he had never been there.

Pundalik made fun of Kukkut Rishi for not knowing the way to Kashi and said that a holy man like him should have visited Kashi. Kukkut Rishi kept quiet and did not bother to answer Pundalik.

During the course of the night Pundalik heard the voice of women in the ashram. He came to out to look what was happening and saw that three women were sprinkling water on the Ashram and cleaning it.

On enquiry, Pundalik found out that the three women, named Ganga, Yamuna and Saraswathi, had come to clean the Ashram of Kukkut Rishi. They were from the nearby settlement and they felt happy doing the free job of cleaning the Ashram of a great man.

Pundalik wondered how a saint like Kukkut who had not visited Kashi was such holy and powerful that the three ladies were offering free service to maintain the Ashram clean.

The three women told Pundalik that piety, spirituality and devotion does not depend on visiting holy places or doing costly rituals but in performing one’s karma. They told him that Sage Kukkut had served and nursed his parents most faithfully and devoted all his life to that one aim. He had thus accumulated Punya enough to earn Moksha.

Pundalik was stunned by the profound truth so simply presented to him by three village ladies.

Pundalik had left his old parents at home and was visiting Kashi to gain moksha and blessing. He did not bother to entertain the request of his parents to take them also to Kashi. He now understood his mistake and rushed back home and took his parents to Kashi and on return started looking after them. From then onwards the care of his old mother and father came before everything else.

He realised that, as the three village ladies told him, one need not go to Kasi or any other religious place and that sincerity and devotion to doing Karma would suffice. One could build a temple in his own area for his beloved God, and offer daily prayers.

Pundalik built a small temple for Lord Krishna at his own place, and started praying there. That is how a Vittho Temple was born at Pandarpur!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

வேடம் புனைந்தான் வேதனை தீர்த்தான்!!

மராட்டிய தேசத்து அவந்திபூர் நகரில் அன்று காலை, நாவிதர்களெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு முழுவதும் சேனாயி பற்றித்தான்.
""இப்படியும் ஒருவன் இருப்பானோ? சேனாயிக்கு அரசவை நாவிதன் என்ற அந்தஸ்து கிடைத்தது கொஞ்ச காலம் முன்பு. அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிய வேண்டாமோ?'' எத்தனையோ நாவிதர்கள்
அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். மன்னனோ முகமதிய மதத்தைச் சேர்ந்தவன். என்ன காரணத்தாலோ சேனாயியைப் பார்த்தவுடனேயே மன்னனுக்குப் பிடித்துவிட்டது. உடனடியாக சேனாயிக்கே ஆஸ்தான நாவித அந்தஸ்தைக் கொடுத்து விட்டான்.
பதவிசார்ந்து சேனாயிக்கு ஒரு பெரிய வீடு வழங்கப்பட்டது. மாதந்தோறும் கணிசமான ஊதியம் தரப்பட்டது. அவனது குடும்பப் பராமரிப்பை அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. இதைவிட வேறென்ன வேண்டும்? தினமும் காலைவேளையில் அரண்மனைக்குச் சென்று மன்னருக்கு முடிதிருத்தவேண்டும். அதுமட்டுமே பணி. ஆஸ்தான நாவிதன் என்பதால் வேறு யாருக்கும் அவன் முடிமழிக்கவும் கூடாது.
பிறகென்ன! அதிக வேலையே இல்லாமல் நிறைந்த ஊதியம்! ஒவ்வொருநாளும் தவறாமல் அரண்மனைக்கு சேனாயி போய்க்கொண்டுதான்இருந்தான்.

ஆனால், அவன் ஒரு பாண்டுரங்கப் பித்தன். பண்டரிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் கிருஷ்ணன் மேல் அவனுக்கு அபார பக்தி. செங்கல் மேல் நின்றுகொண்டு வரமருளும் கிருஷ்ணனைப் பற்றிய சிந்தனைதான் எப்போதும். சதா தியானத்தில் ஆழ்ந்து பரவச நிலைக்கும் போய்விடுவான். காலை வேளையில் மட்டும் அவன் மனைவி அவனை உலுக்கி அரண்மனைக்கு ஊழியம் செய்ய அனுப்பிவிடுவாள்.

இன்று வெளியூரிலிருந்து வந்த ஒரு பஜனை கோஷ்டி அதிகாலையில் கிருஷ்ண கானங்களை இசைத்தவாறு, அவந்திபூர் வழியாக பண்டரிபுரம் போயிற்று. பாடல்களைக் கேட்ட சேனாயி மெய்மறந்தான். தானும் அவர்களோடு பாடிக்கொண்டே பண்டரிபுரம் புறப்பட்டு விட்டான்.

மனைவியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவள் சொன்னதே அவன் காதுகளில் விழவில்லை. கிருஷ்ண நாமம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு மற்ற எந்த ஓசையும் அவன் செவிகளில் விழாதவாறு செய்திருந்தது. அவந்திபூரில் வாழும் பிற நாவிதர்களாலும் சேனாயியை நிறுத்த முடியவில்லை. அவர்கள்தான் கூடிக் கூடி தெருக்களில் நின்று பதட்டத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒழுங்கு தவறி யாரேனும் பணிக்கு வராதிருந்தால், அவர்களைச் சிரச்சேதம் செய்யவும் தயங்கியதில்லை அந்த மன்னன். இனி சேனாயியின் நிலை என்னவாகும்!

நாவிதர்களில் ஒருவனுக்கு சேனாயி மேல் கடும் பொறாமை. இது சேனாயியைப் பற்றி அரசரிடம் கோள்சொல்ல அரிய சந்தர்ப்பமல்லவா! அவன் பதுங்கிப் பதுங்கி அரண்மனை நோக்கி நடந்தான். அரசனைச் சந்தித்தான். தணிந்த குரலில் பேசலானான்:

""மகாராஜா! இன்று சேனாயி முடிமழிக்க வரமாட்டான்!''
""ஏன்! நல்ல ஊழியனாயிற்றே அவன்!''

""அவன் அடுத்தவர்களை ஏமாற்றுவதில் கெட்டிக்காரன். கிருஷ்ண பக்தன் என்று சொல்லிக்கொள்வான். இன்று தன் பணி பற்றிய பொறுப்பே இல்லாமல் பண்டரிபுரம் சென்றுவிட்டான். வெளியூர் போவதானால் உங்களிடம் சொல்ல வேண்டாமா? அரசவை வேலை என்ன கிள்ளுக்கீரையா? ராஜாவின் ஊழியர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நடக்க முடியுமா? திடீரென்று பணிக்கு வராமல் இருந்ததற்காக நீங்கள் அவனுக்கு மரண தண்டனை கூட அளிக்க முடியும். சாமான்ய குற்றமா இது? போகட்டும். தாங்கள் அனுமதி அளித்தால் இன்றிலிருந்து நான் உங்களுக்கு முடிமழித்து விடுகிறேன்!''

இந்தப் பேச்சைக் கேட்டதும், மன்னன் அவனைக் கூர்மையாகப் பார்த்தான்.

""அடேய்! உனக்கு அரசவை வேலை கிடைக்காத பொறாமையால் இப்படிச் சொல்கிறாயா! சேனாயி உண்மையாகவே பண்டரிபுரம் சென்றுவிட்டானா என்று தெரியவில்லை. அவன் வருகிறானா என்று பார்க்கிறேன். அவன் பணிக்கு வராதிருந்தால் சட்டப்படி அவன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும். வேறு யார் பணியில்அமர்த்தப்பட வேண் டும் என்பதைப் பின்னர் முடிவுசெய்வேன். நீ போகலாம்''.

கோள்சொன்னவன் தளர்ந்த நடையோடு வெளியேறினான்.

பண்டரிபுரத்தில் செங்கல் மேல் இடுப்பில் கைவைத்து நின்று கொண்டிருந்த ருக்மிணி, தன்னருகில் அவ்விதமே நின்றுகொண்டிருந்த கண்ணனிடம், ""நீங்கள் சேனாயியைக் கைவிடலாமா?'' என்று கேட்டாள்.

""இதோ புறப்பட்டுவிட்டேன்,'' என்றார் கிருஷ்ணர். அடுத்த கணம் சேனாயியாக உருமாறினார்.

புல்லாங்குழல், சிறிய மரப்பெட்டியாக மாறியது. சங்கு சக்கரம் இரண்டும் கத்தி, கத்திரிக்கோல் என நாவிதத் தொழிலுக்கான உபகரணங்களாக மாறி பெட்டிக்குள் புகுந்து கொண்டன. அவந்திபுரம் செல்வதற்காக கிருஷ்ணர் செங்கல்லை விட்டு இறங்கியபோது ருக்மிணி நகைத்தாள்.

""நாதா! இந்த வேடம் அழகாகப் பொருந்துகிறது உங்களுக்கு. வாமனாவதாரத்தில் வருணாசிரமத்தின் முதல் வருணத்தைச் சேர்ந்த அந்தணராக உருமாறினீர்கள். ராமாவதாரத்தில் க்ஷத்திரியரானீர்கள். கிருஷ்ணாவதாரத்திலோ வைசியராக, இடையராக மாறினீர்கள். இப்போது நான்காம் வருணம் சார்ந்து நாவிதராக உருக் கொண்டிருக்கிறீர்கள். வர்ணாசிரமம் என்பது தொழில் சார்ந்த வேறுபாடே தவிர மற்றபடி எல்லோரும் சமமானவர்கள் தானே? ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு பாராட்டுவது கொடுமையான பாவம் அல்லவா? உங்களின் அழகியநாவிதத் தோற்றத்தைப் பார்த்தால் உங்கள் கழுத்தில் இப்போதே ஒரு மாலையிட வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு!''

""இந்தக் காலையில் மாலை வேண்டாம் ருக்மிணி. ஆண்டாள் மூலம் நிறைய மாலைகளைப் பற்பல காலைவேளைகளில் பெற்றுவிட்டேன். என் தொழில் முடிந்து நான் வந்த பிறகு, மாலையில் என் தொழில் நேர்த்தியைப் பார்த்து எனக்கு மாலை சூட்டு! சிரித்தவாறே சொன்ன கிருஷ்ணர் உபகரணப் பெட்டியைக் கையில் இடுக்கிக் கொண்டு ஒரே கணத்தில் அவந்திபுரம் சென்று அரசன் முன் நின்றார்.

""மன்னா! தாங்கள் இன்னும் தயாராகவில்லையா? மன்னர் வியப்போடு பார்த்தார்.

""அட... சேனாயியே தான். அப்படியானால் இவன் வரமாட்டான் என்று அந்த நாவிதன் பொய் சொல்லியிருக்கிறான்! வழக்கமாகவே சேனாயியைப் பார்த்தால் மனத்தில் சாந்தி பிறக்கும். இன்றோ அளவற்ற ஆனந்தமும் சேர்ந்து பிறக்கிறதே! மன்னன் முடிதிருத்திக் கொள்ள அமர்ந்தான்.

கத்தியைத் தீட்டித் தொழிலைத் தொடங்கினார் கிருஷ்ண சேனாயி.

""ஞானம் என்ற கத்தியால் ஆணவம் என்ற முடியை மழிக்க வேண்டும் அரசே! அப்படி வைராக்கியத்தோடு ஆணவத்தை நீக்கியவர்களுக்கு கடவுள் தரிசனமே கிட்டும். தாங்கள் மன்னராக இருந்தாலும் ஆணவமற்றவர்!'' முகச்சவரம் செய்தவாறே கிருஷ்ண சேனாயி உபதேசமும் செய்யலானார். மன்னர் பரவசத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

""சேனாயி! நீ உயர்ந்த கருத்துகளைக் கூறுகிறாய். அதைக் கேட்டால் மனம் தித்திக்கிறது!''

""அரசே! முன் ஒருமுறை இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறினேன். அப்போது என் கையில் சாட்டை இருந்தது. அன்று நான் சொன்னவற்றைக் கேட்டவர் பின்னர் மன்னரானார். இன்று என் கையில் சாட்டைக்கு பதிலாக கத்தி இருக்கிறது. ஆனால், ஏற்கனவே நீங்கள் மன்னராகத் தான் இருக்கிறீர்கள்''.

""சேனாயி! நீ பேசுவது எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால் உன் குரல் புல்லாங்குழல் ஓசைபோல் காதில் தேனாய்ப் பாய்கிறது''.
""அரசே! தொடர்ந்து புல்லாங்குழலை வாசித்தால் குரலும் அப்படி ஆகுமோ என்னவோ?'' பேசியவாறே தொழிலை முடித்து புறப்படத் தயாரானார் கிருஷ்ண சேனாயி.

""இன்று உன் தொழில் வழக்கத்தை விட மிக நேர்த்தியாக இருந்தது. உன் பேச்சும் கூட மிக இனிமை. வழக்கமான சம்பளத்தோடு இந்தா இன்றைய உன் பணிக்கான விசேஷ சன்மானம்!''

மன்னர் மகிழ்ச்சியுடன் ஒரு பொற்கிழியை சேனாயி கையில் அளித்தார். நெஞ்சில் லட்சுமியையே வைத்திருப்பவன் கையில் இப்போது லட்சுமி! கிருஷ்ணசேனாயி புறப்பட்டார்.

அதற்குள் மன்னர் தலையில் தடவிக் கொள்வதற்காக வெள்ளிப் பேலாவில் எண்ணெய் கொண்டு வைத்தார்கள் ஊழியர்கள். எண்ணெயைப் பார்த்தார் மன்னர். அதில் சேனாயியின் பிரதிபிம்பம் தெரிந்தது.

என்ன ஆச்சரியம்! சேனாயி தலையில் ஒரு மகுடம்! அதில் மயில்பீலி! சேனாயிக்கு எப்படி நான்கு கைகள் முளைத்தன! மன்னர் திகைத்துப் போய் நிமிர்ந்து பார்த்தார். கிருஷ்ண சேனாயி மனோகரமாக ஒரு முறுவல் பூத்தார். பின் விடைபெற்றுச் சென்றுவிட்டார். போகிற வழியில் உண்மையான சேனாயியின் உபகரணப் பெட்டியில், மன்னர் தந்த பொற்கிழியை வைத்துவிட்டுப் போனார் பாண்டுரங்கன்.

உண்மையான சேனாயி வீடு திரும்பியபோது உபகரணப் பெட்டியில் இருந்த பொற்கிழியைப் பார்த்து விதிர்விதிர்த்துப் போனான். ஓடோடிப் போய் தான் தொழிலுக்கு வராததற்கு மன்னரிடம் மன்னிப்பு வேண்டினான்.

மன்னர் கண்களில் கண்ணீர் வழிந்தது. நடந்ததை அவர் விவரித்தபோது சேனாயியின் விழிகளிலும் நீர் திரையிட்டது. தன் பக்தனைப் பராமரிப்பவருக்குத் தரிசனம் தந்த கண்ணன் தனக்கு என்று தரிசனம் தருவான் என சேனாயி ஏங்கியபோது, கண்ணன் நகைத்தவாறே சேனாயி முன் காட்சி தந்து அருளாசி வழங்கினார்.

அவர் கழுத்தில் அவரது தொழில் நேர்த்தியை மெச்சி ருக்மிணி அணிவித்த பூமாலை கமகமவென மணம் வீசிக் கொண்டிருந்தது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

தாமாஜி பண்டிதர்-----

பேதரி... வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம். இவ்வூரில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற வேதியர் குலத்தவர். பெரும் தர்மசிந்தனை கொண்ட தாளாளர். மக்கள் இவரை ஆசானாகவும், நண்பராகவும், காக்கும் கடவுளாகவும் பாவித்தனர். இவரது அரும் குணங்களை அறிந்த அந்நாட்டு மன்னன் அவரை மங்களபட் என்ற ஊருக்கு அதிகாரியாக நியமித்தார். தாமாஜி அவ்வூர் மக்களிடையே தெய்வ பக்தியை வளர்த்தார். ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது உலக நியதி. அதன்படி மழை பெய்யாமல் வானம் வஞ்சித்தது. பஞ்சம் தலை தூக்கியது. மழைக்காலம்வரும் வரை மக்களை காப்பதற்கு தாமாஜி. தான் சேர்த்து வைத்திருந்த தானியங்களை எல்லம் வாரி வாரி வழங்கினார். இதனால் இவரது புகழ் பண்டரிபுரம் வரை எட்டியது. அங்கு வசித்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டிற்கு வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற தாமாஜி விருந்தே படைத்துவிட்டர். இலையில் உணவைக் கண்டதும் அந்தணரின் கண் கலங்கியது. சுவாமி ! கண்கள் ஏன் கலங்குகின்றன ? என பரிவோடு கேட்டார் தாமாஜி. அதற்கு அந்த அந்தணர், ஐயா ! நான் உணவு கண்டு ஒரு வாரம் ஆயிற்று. பண்டரிபுரத்தில் என் மனைவி மக்கள் பட்டினியாய் கிடக்கிறார்கள். அவர்களை நினைத்து கலங்கினேன், என்றார். சுவாமி ! கலங்க வேண்டாம். உணவு கொள்ளுங்கள் என அவரை ஆசுவாசப் படுத்தினார் தாமாஜி. பின்னர் ஐம்பது மூடை நெல்லை வண்டியில் ஏற்றி தகுந்த காவலுடன் அவரை பண்டரிபுரத்திற்கு அனுப்பிவைத்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் ஊர் சென்றார். இந்தச்செய்தி ஊருக்குள் பரவியது. இங்கே நாம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பண்டரிபுரத்திலிருந்து வந்த அந்தணருக்கு, தாமாஜி நெல் மூடைகளை ஏற்றி அனுப்பியிருக்கிறாரே ! இதை விடக்கூடாது. வண்டியை மடக்க வேண்டும், என கிராமமக்கள் முடிவெடுத்தனர். அதன் படியே மூடைகளை பறித்துச் சென்றுவிட்டனர். அந்தணர் புலம்பியபடியே தாமாஜியைக் காணச் சென்றனர். செய்தி கேட்ட தாமாஜி, சுவாமி ! உங்கள் ஒரு குடும்பம் உண்பதை பல குடும்பங்கள் உண்ண வேண்டும் என்பது என் அப்பன் பாண்டுரங்கனின் விருப்பம் போல் இருக்கிறது. போனால் போகிறது விடுங்கள். உடனே ஊர் சென்று உங்கள் மனைவி மக்களை இங்கேயே அழைத்து வாருங்கள், என கூறி செலவுக்கு சில வராகன்களை கொடுத்தார்.

இதையறிந்து சுற்றுப்புற பகுதி மக்களெல்லாம் மங்கள்பட் நோக்கி படையெடுத்தனர். எலும்பும் தோலுமாய் இருந்த அந்த எளிய மக்களைக்கண்ட தாமாஜி மிகவும் மனம் வருந்தினர். நம் களஞ்சியத்தை எல்லாம் காலி செய்துவிட்டோமே. இம்மக்களுக்கு என்ன செய்து ? என மனம் குழம்பினார். கண்ணீர் வழிந்தது. அந்த நேரத்தில் அவரது மனைவி, சுவாமி ! அரசாங்கத்திற்கு வரியாக வசூலித்த நெல் அம்பாரமாய் குவிந்துள்ளதே ! அதை தர்மம் செய்வோம். அடுத்த வருடம் நமது வயலில் விளைந்ததும் சேர்த்து அரசுக்கு செலுத்திவிடலாமே, என யோசனை கூறினாள். துள்ளி எழுந்தார் தாமாஜி. நிறைந்த மனதுடன் வந்த மக்களுக்கு அள்ளிக்கொடுத்தார். மக்கள் அவரை வாயார வாழ்த்திச் சென்றனர். இந்த விஷயம் மன்னனுக்கு எட்டியது. தன்னிடம் அனுமதி பெறாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டாரே என கோபப்பட்டான். தாமாஜி கைது செய்யப்பட்டார். காவலர்கள் அவரை விலங்கிட்டு அழைத்து வந்தனர். வழியில் பண்டரிபுரம் கோயில் வந்தது. காவலர்களிடம் அனுமதி பெற்று கோயிலுக்கு சென்றார் தாமாஜி. ஹே... பாண்டுரங்கா ! உன் மக்களுக்கு அளித்தது உனக்கே அளித்தது என தத்துவம் பேசுகிறாய். ஆனால் நீ சொன்னதுபோல செய்தால் தண்டனை கிடைக்கச் செய்கிறாய். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாயே ! நீ அருள் செய்தால் மழை பொழிந்து நாடு செழிக்க எவ்வளவு காலம் ஆகிவிடும். பஞ்சத்தை உண்டாக்கி மக்களை ஏன் வாடவிடுகிறாய் ? இது நியாயமா? என கேட்டார். இந்நேரத்தில் அரசவையில் மன்னன் வீற்றிருந்த போது வாட்ட சாட்டமான கரிய நிறம் கொண்ட யாரையும் வசப்படுத்தும் கண்களை உடைய வாலிபன் ஒருவன் தலையில் முண்டாசு கட்டி, முழங்காலுக்கு மேல் ஏறிய வேஷ்டி உடுத்தி வந்து நின்றான். அரசே ! நான் தலையாரி. தாமாஜி பண்டிதர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி நெல்லுக்குரிய தொகையான எண்பத்து நாலு லட்சம் வராகனை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதை பெற்றுக்கொண்டு ரசீது தாருங்கள், என்றான். தாமாஜி கைது செய்யப்பட்டு இன்னும் சிறிது நேரத்தில் அரசவைக்கு வர இருக்கும் நிலையில் இப்படி ஒருவன் வந்து நிற்கிறானே என மன்னன் திகைத்தான். இதற்குள் அந்த இளைஞன் தன் கையில் இருந்த சிறு மூடையை பிரித்து காசை கொட்டினான்.

கொட்டக்கொட்ட விழுந்துகொண்டே இருந்தது. புத்தம் புதிய பொன் நாணயங்கள் ஜொலித்தன. மன்னன் மேலும் வியந்தான். இந்த சிறு மூடையில் இவ்வளவு நாணயங்கள் எப்படி இருந்தன என மெய்சிலிர்த்தான். இளைஞனை உற்றுப் பார்த்தான். ஏ தலையாரி ! உண்மையைச் சொல். நீ யார் ? எந்த ஊர் ? உன் பெயர் என்ன ? இதற்கு முன் உன்னை நான் பார்த்ததில்லையே ! புதிதாக வேலையில் சேர்ந்திருக்கிறாயா ? என கேள்வி மேல் கேள்வி கேட்டான். இதற்கு அந்த இளைஞன், மகாராஜா ! நான் ஒரு அனாதை. எனக்கென்று ஒரு பெயர் இல்லை. ஊரார் என்னை ஆயிரம் பேர் சொல்லி அழைப்பார்கள். யார் என்னை பிரியமாக மதிக்கிறார்களோ அவர்களிடமே தங்கிவிடுவேன். நீங்கள் சீக்கிரம் ரசீது கொடுங்கள். நேரமானால் பண்டிதர் கோபித்துக்கொள்வார், என்றான். ரசீதை பெற்றுக்கொண்டு அவன் அங்கிருந்து அகன்றான். அப்போது அரசவைக்கு தாமாஜி பண்டிதர் இழுத்து வரப்பட்டார். அவரை கட்டியணைத்த அரசன், பண்டிதரே ! என்னை மன்னித்துக் கொளளுங்கள். இப்போதுதான் தாங்கள் கொடுத்தனுப்பிய பணம் வந்து சேர்ந்தது. அறியாமல் உங்களை கைது செய்துவிட்டேன். பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டதாக நீங்கள் ஏன் முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை. காவலர்களிடமாவது சொல்லியிருக்கலாமே, என்றான். இதற்கு பண்டிதர், நான் பணமே கொடுத்து அனுப்பவில்லை. உங்களிடம் யார் கொடுத்தது? என்றார். இதன்பிறகுதான் வந்தவர் சாட்சாத் பாண்டுரங்கன் என்பது இருவருக்குமே புரிந்தது. தாமாஜியால் தனக்கும் இறைவனின் தரிசனம் கிடைத்ததை எண்ணி மன்னன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். இதன்பிறகு தாமாஜி அரசுப்பணியை உதறிவிட்டு பண்டரிபுரத்திலேயே தங்கியிருந்து, பூஜை செய்து தனது காலத்தைக் கழித்தார்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Gayathri is the Mother of all scriptures (Vedas). She exists, wherever Her name is chanted. She is very powerful. The One who nourishes the individual being is Gayathri. She bestows pure thoughts on anyone who worships Her. She is the embodiment of all Goddesses. Our very breath is Gayathri, our faith in existence is Gayathri. Gayathri has five faces, they are the five life principles. She has nine descriptions, they are ‘Om, Bhur, Bhuvah, Swah, Tat, Savitur, Varenyam, Bhargo, Devasya’. Mother Gayathri nourishes and protects every being and She channelizes our senses in the proper direction. ‘Dheemahi’ means meditation. We pray to her to inspire us with good intelligence. ‘Dheeyo Yonah Prachodayat’ - We beseech her to bestow on us everything we need. Thus Gayathri is the complete prayer for protection, no urishment and finally, liberation...

Sai

Destroy your ego; you have no need to seek liberation; you will be liberation itself. - Baba

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

கொல்லூர் மூகாம்பிகை திருக்கோயில் -


ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது.


பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Kollur is not found in the list of 51 'Shakti Pithas'.
However, it is considered as one of the seven 'Mukti Stalas' of Karnataka.
And it finds a place in the list of 51 famous Shakti Temples collated recently by someone.


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


காசிக்குச்செல்கிறீர்களா
காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்களைக் குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு.

விசுவேசம் மாதவம் டுண்டிம்
தண்டபாணிம்ச பைரவம்
வந்தே காசீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம்''

விஸ்வநாதர், பிந்துமாதவர், துண்டிவிநாயகர், தண்டபாணி, காலபைரவர், காசி மாதா, வராஹி, புனித கங்கை, அன்னபூரணி, மணிகர்ணிகா தீர்த்தக்கட்டம் ஆகிய பத்தும் அவசியமாக தரிசிக்கவேண்டியவை. இதில் தண்டபாணி காசியின் காவல் தெய்வம். காலபைரவர் கோயிலில், காசிமாதா சந்நிதி உள்ளது. "குஹாம்' என்றால் வராஹி. காசிமாதா சந்நிதிக்கு மேற்கில் உள்ள குகையையும் குஹாம் என்பர். பத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது நல்லது. வரிசைப்படி தரிசிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த தரிசனத்துக்கு "நித்திய யாத்திரை' என்று பெயர்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;
'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;
'அன்றே' என்னின், அன்றே ஆம்;
ஆமே' என்று உரைக்கின், ஆமே ஆம்;
'இன்றே' என்னின், இன்றே ஆம்;
'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் வரும் இறைவணக்கம் இப்படி உள்ளது....

அதேபோல் அருணகிரியாரும் ' உருவாய் அருவாய் உளதாய் இலதாய்' என்று சகுணத் தன்மையையும் நிர்குணத்தன்மையையும் ஒருங்கே போற்றுகிறார்.
"அழகான உடல், உயர்ந்த உறவுகள், அளவிலாத செல்வம், பெரும் புகழ் என எல்லாம் இருந்தாலும், மனதானது குருவின் பாத கமலங்களில் பற்று வைக்காவிட்டால், அவற்றால் என்ன பயன் என நான்கு முறைகள் கேட்டிருக்கிறார் ஆதிசங்கரர்.

"இந்தக் கருத்தை அப்படியே கபீரும் ஒரு தோஹாவில் பிரதிபலிக்கிறார்.

एक कह तो है नहीं दॊ कहूं तो गारी
है जैसा तैसा रहे कहे कबीरा बिचारी

ஏக் கஹ் தோ ஹை நஹி, தோ கஹும் தோ காரி
ஹை ஜைஸா தைஸா ரஹே, கஹே கபீரா பிசாரி

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

(உரையில் = உரை+இல் ; உரைக்க இயலாத)

கம்பனின் அடிகளை நினைவூட்டும் பொருட்டே மொழிபெயர்ப்பிலும் அதே நடை கையாளப்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பையும் இங்கே தருகிறேன்.

ஒன்றே என்னில் சரியன்று இரண்டு என்றுரைக்கின் தவறேயாம்
சொல்லற்று உரைப்பான் கபீர்அது என்றும் எதுவோ அதுவேயாம் "

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

As one of you mentioned I am sharing with you one of my recent pesonal experience!

About ten days ago, the sign of Spring was in the air and birds were chirping. It was evening and sun was bright and starting to set. I was in my car driving lazily enjoying the sereneity. I wanted to get away from the traffic and deviated to drive by the river side. The ice had not completely melted but water was flowing making a pleasant gurgling sound.
As I kept driving I suddenly realized that I was getting into an unknown territory. There was no traffic and suddenly it started getting darker. The weather had cooled down and started freezing. Suddenly it started snowng heavily alomst blinding. I pulled down by the road side to get my bearing. Unfortunately I had disconnected my GPS and kept it at home! I thought I will reverse the car and go back the way I came. But when I looked at the fuel gage it was just empty and the engine gurgled. Suddenly panic gripped me and I also did not have my cell phone with me since it was not a regular outing. There were no houses around but nothing but white snow all around and the snow started intensifying. And it started getting much colder. I knew the residual heat in the car will not last for long. Again I was not dressed for full winter assumng Spring was on its way.
My hands started going numb and the legs hurting with deep cold penetrating. My throat was going dry and I had no water bottle with me. I was cursing how I could be so stupid knowing the country and weather so well over the years. I did not want to venture out of the car though it was bright out side all white due to the light reflecting on the snow. It was getting bitter cold and I started losing consciouness and getting confused!

Is this the end?

Now I want you to guess and tell what happened then...

Post Reply