Kanchi Maha Periyava

Post Reply
arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

எவ்வள‌வு அழகான வியாக்கியானம்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

காஞ்சி சங்கரமடத்தில்… மடத்து வாத்தியாராக இருந்து, மகா பெரிமேச்சேரி பட்டு சாஸ்திரிகள்கிட்ட ஆறாயிரம் ரூபாயை உடனே கொடுத்துடு
நன்றி-பால ஹனுமான்.
யவருக்கு உண்டான கைங்கர்யங்களை மிகுந்த சிரத்தையுடன் செய்து வந்தவர் மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். மெத்தப் படித்தவர்; காஞ்சி மகானை கண் கண்ட தெய்வமாகவே எண்ணி போற்றி வருபவர்!
காஞ்சி மகான் இருந்தபோதே, அவரது ஜன்ம நட்சத்திரமான அனுஷ நாளில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வேத பாராயணம், பாதுகாபிஷேகம் என்று விமரிசையாகக் கொண்டாடினார் பட்டு சாஸ்திரிகள். இதற்காக தன் பாதுகைகளையும் 32 ரூபாயையும் கொடுத்து, அனுஷத்தைக் கொண்டாடுவதற்கு பட்டு சாஸ்திரிகளுக்கு ஆசிர்வாதம் செய்தார், மகா பெரியவர்! சாஸ்திரிகளின் இல்லத்தில்… பெரியவாளின் பாதுகைகளைக் கொண்டு, மாதந்தோறும் அனுஷ நட்சத்திர உற்ஸவம் நடைபெறும். மகா அனுஷ நட்சத்திர உற்ஸவம் மேற்கு மாம்பலம்- அயோத்தியா மண்டபத்தில் கொண்டாடப் படும். துவக்கத்தில் சொந்த செலவில், இந்த வைபவத்தை கொண்டாடி வந்தார் சாஸ்திரிகள். பின்னர், காஞ்சி மகானின் அருளுக்குப் பாத்திரமான அன்பர்கள் இவரது சேவைக்கு உதவினர்; உதவியும் வருகின்றனர்.
2001-ஆம் வருட மகா அனுஷ உற்ஸவம், அயோத்தியா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமிநாதன் (மகானின் பூர்வாஸ்ரமப் பெயர்…சுவாமிநாதன்) என்ற பக்தர், இரண்டு பித்தளை சொம்புகளை பட்டு சாஸ்திரிகளிடம் கொடுத்து, ”மகா ஸ்வாமிகளுக்குப் பஞ்ச லோக விக்கிரகம் வடித்து, உற்ஸவம் நடத்துங்கள்” என்று கூறி விட்டு நகர்ந்தார். இதை மைக்கில் அறிவித்ததுடன், பித்தளை சொம்பு கொடுத்தவரை கௌரவிக்கும் விதமாக, ‘சுவாமிநாதனை மேடைக்கு அழைக்கிறேன்’ என மைக்கில் கூறினார் சாஸ்திரிகள். ஆனால், சுவாமிநாதன் வரவே இல்லை. எனவே, ‘இது ஸ்வாமிகளின் விருப்பம் போலும்’ என தீர்மானித்த அன்பர்கள், அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொருவரது வீட்டில் இருந்தும் சொம்பு மற்றும் பழைய பாத்திரங்களை கொண்டு வந்தனர். பஞ்ச லோக விக்கிரகம் வடிப்பதற்குத் தேவையான உலோகங்கள் வந்து சேர்ந்ததும், அவற்றை சுவாமிமலையில் உள்ள ஸ்தபதி ஒருவரிடம் வழங்கி, விக்கிரகம் வடிக்கும் பணியை ஒப்படைத்தார் பட்டு சாஸ்திரிகள்.
இதையடுத்து, பெரியவாளின் மகா ஜயந்தி நாள் நெருங்கும் வேளையில் (வைகாசி மாதம்), தான் வடித்த மகா பெரியவாளின் விக்கிரகத்துடன் பட்டு சாஸ்திரிகளின் இல்லத்துக்கு வந்தார் ஸ்தபதி. சாஸ்திரிகள் சொன்ன கால அவகாசத்துக்கு முன்னரே வேலையை முடித்திருந்தார் ஸ்தபதி. இதுகுறித்து மகிழ்ச்சியடைவதற்கு பதில் கவலைக்குள்ளானார் சாஸ்திரிகள். காரணம்? விக்கிரகம் வடிப்பதற்காக ஸ்தபதிக்கு முன்பணம் கொடுத்திருந்தார் சாஸ்திரிகள். இப்போது மீதத் தொகையான ஆறாயிரம் ரூபாயை ஸ்தபதிக்கு தர வேண்டும். ஆனால், சாஸ்திரிகளிடம் பணம் இல்லை. எனவே தயங்கியபடி, ”இப்ப பணம் இல்லையே…” என்றார். உடனே ஸ்தபதி, ”பரவாயில்லீங்க. பணம் வந்ததும் கொடுங்க!” என்று கூறிச் சென்றார்.
தன் உண்மையான பக்தன் கஷ்டப்படுவதைக் கண்டு காஞ்சி மகானுக்கு பொறுக்கவில்லை போலும்!
கணேஷ்குமார் (கடம் விநாயக்ராமின் சகோதரரின் மாப்பிள்ளை) என்பவர், மகா பெரியவாளின் தீவிர பக்தர்; அப்போது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் இரவில்… இவரின் கனவில் தோன்றிய பெரியவாள், ‘மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்கிட்ட ஆறாயிரம் ரூபாயை உடனே கொடுத்துடு’ என்று கூறி மறைந்தார். சட்டென்று விழித்த கணேஷ்குமார், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அசதியில் அப்படியே தூங்கிப் போனார். அப்போது எவரோ வந்து தன்னை தட்டி எழுப்புவது போல் உணர்ந்தார் கணேஷ் குமார். இதன் பிறகு, கனவு குறித்து யோசித்தவர், சென்னையில் உள்ள உறவினர் மூலம் பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாயை கொடுக்கும்படி தெரிவித்தார். மறுநாள்! பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கண்ணில் நீர் மல்க வாங்கிய சாஸ்திரிகள், உடனே பூஜை அறைக்கு ஓடிச் சென்று, மகா பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன் விழுந்து நமஸ்கரித்தார். ஸ்தபதிக்கு பணத்தை பட்டுவாடா செய்தார்; பஞ்ச லோக விக்கிரகத்தை பூஜிக்கலானார்!
இந்த விக்கிரகத்தைக் கொண்டு, மாதந் தோறும் சாஸ்திரிகளின் இல்லத்திலும் மகா அனுஷ நாளில் அயோத்தியா மண்டபத்திலும் உற்ஸவ வழிபாடுகள் நடந்தேறும். கொடியேற்றத்துடன் துவங்கி, ஹோமங்கள், வேத பாராயணம், கச்சேரிகள், விக்கிரக ஊர்வலம் என்று அமர்க்களப்படும் விழாவில்… தினமும் 108 குடங்களில் திரவியங்கள் மற்றும் மலர்கள், விபூதி ஆகியவை சேகரித்து அபிஷேகம் செய்யப்படும். தவிர 1008 சங்காபிஷேகம், 1008 இளநீர் அபிஷேகம், பாதுகைக்கு 1008 வடைமாலை மற்றும் 1008 ஜாங்கிரி மாலை ஆகியவையும் சார்த்தப்படுகிறது.
”என் காலத்துக்குள்ளேயே மகா பெரியவாளுக்கு ஒரு கோயில் கட்டணும்னு ஆசை” என்கிற பட்டு சாஸ்திரிகளுக்கு வயது 91. இவர் மகன் சந்திரமௌலியும் இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Sri Rathnagiriswarar Temple Sadas - Padmabushan Sri TN Seshagopalan

Sri Mahaperiva HH Sri Chandra Sekarendra Saraswati Swamiji (Maha Swamiji) of Kanchi Kamakoti Peetham Shatabdi Celebrations - Vedic Sadas

This Sadas got blessings from THEIR HOLINESS Sri Jayendra Saraswati Swamiji and Sri Vijayendra Saraswati Swamiji...

Listen at:

http://www.youtube.com/watch?v=jd2EFhshOHA

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

That smile is a fake…not a hoax..
Trying to hide something
Like to know as to what it can be….
Is it depression?
Can it be that hurt is behind?
Or trying to hold up a tear?
Crippled..Physically and mentally
The wings are not able
To take to the places which one likes…
His Lotus feet!
Hear people scolding…..
And suggest to shed negative thinking..
Can one think more positively?
Than seeking HIS Lotus feet?
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பக்தி இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்.

சிருஷ்டியில் பலவிதமான சக்திகள் பல்வேறு வஸ்துக்களிடம் வியாபித்திருக்கின்றன. இயற்கையைப் பார்த்தால் ஒன்றின் சக்தியைவிட இன்னொன்றுக்குச் சக்தி அதிகம்; அதையும்விட இன்னொன்றுக்கு அதிகம் சக்தி; என்கிற ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது.

பௌதிகமான நமக்குக் கொஞ்சம் சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கனம் தூக்குகிறோம். மாடு நம்மைவிட அதிக கனம் தூக்குகிறது. ஒட்டகம் அதையும்விட அதிக பளு தூக்கும். யானையால் அதற்கும் அதிக கனத்தைத் தூக்க முடிகிறது.

புத்தி பலத்தைப் பார்ப்போம். தாவரங்களைவிடப் புழுவுக்கு அதிக அறிவு இருக்கிறது. புழுவை விட எரும்புக்கு அதிக புத்தி இருக்கிறது. எறும்பைவிட ஆடு மாடுக்கு அதிக அறிவு. அவற்றைவிட மனிதனுக்கு புத்தி அதிகம்.

இந்த ரீதியில் யோசித்து ஆராய்ந்து பார்த்தால் இந்த பௌதிக பலம், புத்தி பலம் எல்லாம் பூரணமாக இருக்கிற ஒர் ஆதார வஸ்துவும் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது.

அதைத்தான் ஸ்வாமி என்கிறோம்.

நாம் நம் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டுகிறோம். குருவி தன் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு கூட்டைக் கட்டுகிறது. இந்த உலகத்தை எல்லாம் நிர்மாணிக்கிற புத்தியும், சக்தியும் கொண்ட ஒன்று இருக்கிறதல்லவா? அதுதான் ஸ்வாமி.

ஒன்றிலிருந்து ஒன்றாக சக்தி அதிகமாகிக் கொண்டே போகிற இயற்கையிலிருந்து இப்படி ஈசுவர தத்துவத்துக்குப் போகிறோம்.

ஒன்றுக்கு ஒன்று மாறாக pair of opposites என்கிற எதிரெதிர்ச் சக்தி ஜோடிகளையும் நாம் இயற்கையில் பார்க்கிறோம். கடும் பனிக்காலம் என்று ஒன்று இருந்தால் கடும் வெயில் காலம் ஒன்று இருக்கிறது. இரவு என்று ஒன்று இருந்தால் பகல் என்பதாக ஒன்று இருக்கிறது. மிருதுவான புஷ்பங்கள் இருப்பதுபோல் கூரான முட்கள் இருக்கின்றன. தித்திப்புக்கு மாறாக கசப்பு இருக்கிறது. அன்புக்கு எதிராக துவேஷம் இருக்கிறது. எதற்கும் எதிர்வெட்டாக ஒரு மாற்று இயற்கையில் இருக்கிறது. இந்த ரீதியில் ஆலோசனை செய்தால் மனித மனசுக்கு மாற்றாகவும் ஒன்று இருக்கத்தானே வேண்டும்? மனித மனஸின் சுபாவம் என்ன? ஆசாபாசங்களில் முழுகிச் சஞ்சலித்துக்கொண்டே இருப்பது; திருப்தியே இல்லாமல் தவிப்பது. இதற்கு மாறாக ஆசாபாசமின்றி, சஞ்சலமே இன்றி, சாசுவத சாந்தமாகவும் சௌக்கியமாகவும் திருப்தியாகவும் இருக்கிற வஸ்துவும் இருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட வஸ்துதான் ஸ்வாமி.

இயற்கையில் சகலமும் மாறிக்கொண்டிருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் நாம் மாறாததாக நினைக்கிற மலையும், சமுத்திரமும்கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. இயற்கையில் எதுவுமே சாசுவதம் இல்லை. இதற்கு எதிராக மாறாமலே ஒன்று இருக்கத்தான் வேண்டும். அது தான் ஸ்வாமி என்பது.

இயற்கையில் படிப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்று என்றும், அதே இயற்கையில் எந்த ஒன்றுக்கும் மாறுதல் உண்டு என்றும் அம்பாள் காட்டி, இந்த இரண்டாலும் கடைசியில் பரமாத்ம தத்துவம் ஒன்று இருந்தாக வேண்டும் என்று உணர்த்துகிறாள்.

அது இருந்து விட்டுப்போகட்டுமே. அதை எதற்கு உபாஸிக்க வேண்டும் என்று கேட்கலாம். நாம் எப்படி இருக்கிறோம்? எப்போதும் எல்லையில்லாத தேவைகளோடு (wants) இருக்கிறோம். பரமாத்மா ஒரு தேவையும் இல்லாமல் இருக்கிறார். இத்தனை தேவையுள்ள நாம் அற்ப சக்தியோடு இருக்கிறோம். ஒரு தேவையும் இல்லாத பரமாத்மாவோ ஸர்வசக்தராக இருக்கிறார். நாம் ஒரே பள்ளமாக இருக்கிறோம். அவர் பரம உன்னதமாக இருக்கிறார். அவர் சக்தியிலும் ஞானத்திலும் மட்டும் உயர்ந்தவர் என்பதில்லை; தயையிலும் உயர்ந்தவராக இருக்கிறார். அதனால்தான் அவரைத் தியானித்தால் பள்ளமாக இருக்கிற நம்மையும் தூர்த்து நிரம்பச் செய்கிறார். நாம் குறைந்தவர்கள்; அவர் நிறைந்தவர். நம் குறையைத் தீர்த்து நிறைவாகச் செய்ய அந்த நிறைவால்தானே முடியும்? அப்படிச் செய்கிற கருணா மூர்த்தி அவர். நாம் உபாஸித்தால் நம் குறைகளைப் போக்குகிறார்.

குறை இருக்கிறது என்றால் எதுவோ தேவைப்படுகிறது என்று அர்த்தம். அடியோடு தேவையே இல்லாவிட்டால் அப்படியே நிறைந்து விடலாம். நம் குறைகளை நிவிருத்தி செய்கிற பரமாத்மா கடைசியில் நமக்கு எதுவும் தேவையே இல்லை என்ற நிறைவையும் தந்துவிடுவார். அப்போது அந்த உயர்ந்த மேடு நம்மைத் தூர்த்துத் தூர்த்து, பள்ளமாயிருந்த நாமும் அதோடு சமமாக, அதாகவே ஆகியிருப்போம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

திரு வேங்கட கைலாசம் அவர்களே,
ஓரறிவு படைத்த தாவரம் முதல் ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக சார்ந்திருப்பது/ இயக்கப்படுவது ஒரு சக்தியினால் தான். தெள்ள தெளிவாக விளக்கப்பட்டுள்ளது மனதிற்கு இதம் அளிக்கின்றது.. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
தஞ்சாவூரான்
08 10 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Clarity in thought process and its expressions...none can match Maha Periava..

Here is a photo taken When Swaminathan...Maha priava was student...

Image

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Thanks for the picture which is a collector's item!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
: மஹா பெரியவா : பூஜை முறைகள்

“அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல
சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’
பி. ராமகிருஷ்ணன் -ஒரு பழைய குமுதம் பக்தி இதழ்.
அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!
காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.
ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.
காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.
அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.
அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்
.
சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.
காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.
மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.
அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.
புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.
“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’
பரமா சார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.
சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.
எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்
.
அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

முயன்றாலும் முடியவில்லை
காரணமும் புரியவில்லை!
என்று கிட்டும் விடுதலை!
'நான்' என்ற அகந்தை அழிய!
'நானே' என்ற பெருமை தொலைய!
'எனது' என்ற மடமை கழிய!
அளித்தவன் நீ இருக்க
சாதித்தவன் 'நான்' என்ற ஆணவம் அகல!
தாயினும் மேலாக வேங்கடவன் என்னை
காத்தருளும் தயாநிதியே…..
வழிகாட்டும் தெய்வமே!
கர்ம ஆசை பந்தம் தீர்த்து
'ஓம்' என்னும் பரணவ நாதத்தில்
என்னை இணைத்தருள்வாய்!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

I never knew that Periyava & Tagore had met each other…Very interesting incident….

It was Navarathri time and Periyava was in Calcutta. It was a grand celebration at Periyava’s camp. Everyday there was a ‘Navaa Varna Pooja’, Sumangali Pooja, Kanya Pooja & many more. She never missed it out. She is a Mami settled in Calcutta. She was also a regular visitor to Sri Rabindranath Tagore’s ashram. After about nine long days to Periyava’s camp, she had been to Tagore’s ashram. Any Calcutta-vaasi is naturally a ‘Devi Upasaka’. And Tagore was a ‘Sri Vidya Upasaka’ but he did had some modern thoughts. Tagore’s command on Literature is known well. Mami had visited Tagore after a short break. Tagore was asking her where were she on those days. She explained that Periyava had come & there were Navavarna pooja, Sumangali pooja, Kanya pooja, etc.

Tagore understood that Periyava was also a Devi Upasaka’.

Tagore , “Does Swamiji do Kanya Pooja with any child or only with Brahmin child?”

Mami, “No! Periyava never deviates from the tradition. He does Kanya Pooja only with Brahmin child”.

Tagore, being one of the world’s highly respected (nobel) liberates , quoted one of the namas from the Sri Lalitha Sahasra Namam : “Aa’brahma keeda Janani” and said “He is a great Devi Upaska, won’t he know the meaning of it? It means SHE is the source of everything, from tiny insects all the way to Brahma (who creates the world). Still he is thinking having only a Brahmin child for Kanya Pooja!”

Mami was very upset to hear someone like Tagore taking a jig at Periyava. She came back to Periyava’s camp & her face was still dull.

Periyava asked, “நேத்தைய பூஜைக்கு வரலையோ?” (“Didn’t you come to puja yesterday?”)

Mami, “இல்லே பெரியவா, தாகூரை பாக்க போய் இருந்தேன்…” (“No – I went to meet Tagore.”), she couldn’t decide ‘to say or not to say’.

Periyava understood and asked “ஏன்? அவர் என்ன பத்தி எதாச்சும் சொன்னாரோ?” (“Did he say anything about me?”)

She couldn’t with hold, told everything what he said with tears.

Periyava smiled & said, “அவரை அதுக்கு அப்புறம் மூணு அக்ஷரம் இருக்கு, அதையும் சேத்து படிக்கச் சொல்லு!” (“There are three more askharams – ask him to include them while reading”.

Now Mami caught up with enthusiasm. She knows there is a fitting reply but couldn’t get it. Was asking Periyava, what it means.

Periyava, “முதலில் அவரிடம் சொல்லு. அப்புறம் பாக்கலாம்…” (“First go and tell, let us see later”)

So without any other way Mami quickly went back to Tagore & said what Periyava said.

Tagore recollected “Aa’brahma keedajanani Varnaasrama Vidhayini Nijaakjaroopa Nigama PunyaaPunya Phalapradha!” Repeated it mentally few times. “Aha! Aha! Is this the way to understand the Devi’s Sahasranama? I never knew it. HE has replied. Swamiji has replied my very own question”.

Tagore told with a bit of excitement and also quickly begged down, “Swamiji is a Mahaan! Have you told what I told to him. Oh! It’s a mistake.”

Immediately, he found out the next step being a honest literal “I must have his darshan. Please arrange but not openly because evry Swamiji will put pressure on me to visit. But I must have his darshan!”

Mami came back satisfied to Periyava. Tagore did have darshan when Periyava visited a ‘Sethiji’s home’ unknown to common public.

Tagore wrote in his daily, “There are Mahaans even today whom I’ve to visit & STILL learn!” of course, without naming Periyava.

Many devotees have said – few devotees have had darshan. Tagore is fortunate to hear from ‘Devi’ herself, this time. Probably out of his Upasana or out of Periyava’s Karunyam …

A share from Shri. mahesh..

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

vk,
Sorry for questioning again. What is the meaning of question of Tagore? What is the meaning of reply by Maha Periava? This is not clear from the article. Without this clarification, the purpose of the article is very limited. We are, particularly I am, totally clueless about the question and meaning.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Wonder what the writer is trying to justify !
Here is the relevant portion of Shri Lalita Sahasranama:-

-----------------------------------------------------------------------

आब्रह्म कीड जननि
Abrahma kIda jajani
She has created all beings from worm to Lord Brahma

वर्णाश्रम विधायिनि
varNAshrama vidhAyini
She who created the four fold division of society

निजंग्न रूप निगम
nijagna rUpa nigama
She who gave orders which are based on Vedas

पुन्यपुन्य फल प्राध
punyapunya phala prAdha
She who gives compensation for sins and good deeds

-----------------------------------------------------------------------

As for the statement: "Tagore did have darshan when Periyava visited a ‘Sethiji’s home’ unknown to common public", it is a convenient excuse to escape cross checking !

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

pb,
Thanks for posting these nAmAvaLi portions. From the article, I understand that Maha Perava wanted Tagore to refer to three 'aksharas'. I think this should be three 'words'. In that case, it would refer to 'varNASrama vidhAyini' (varNa ASrama vidhAyni).

Even at the peril of being branded as 'nAstik', I humbly submit that Maha Periava, being a sannyAsi, is beyond the bounds of varNa and ASrama. Therefore, this statement contradicts 'varNASrama vidhAyni'. Obviously, there are some people who have their own axes to grind and they would not mind fabricating stories.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

With my little knowledge, I tried...

Abrahma kIda jajani
When Ambal has created all beings from worm to Lord Brahma, why Periva choose only a Brahmin Kanya Stree for Kanya pooja was the question posed by Tagore...

Periava wanted Tagore to refer to the next three words( slokas) ...1) varNAshrama vidhAyini 2) nijagna rUpa nigama and 3) punyapunya phala prAdha...

Meaning that Ambal who created everything also created four divisions of society and she had also ordered/indicated the functions of each....If we follow her instructions ,it will be considered a good deed and otherwise it will be a bad deed..Based on this, she gives reward or punishment ...

Choosing a Brahmin for kanya pooja is as per her desire only.........

corrections welcome..

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

This is what I understand:-

The last three 'aksharas' referred to by Periyava were: पुन्यपुन्य, फल and प्राध.

He tried to justify his preference for a Brahmin girl for Kanya Pooja, by quoting the above three 'aksharas'. He explanation was that Shri Lalitha Devi, who created the four-fold division of the society (वर्णाश्रम विधायिनि) would bless you as ordained (निजंग्न रूप निगम) -- If Kanya Pooja was done to a Brahmin, Kshatriya, Vysya or Sudha girl, correspondingly the reward would be: पुन्य (merit), पुन्य (merit), फल (profit) or प्राध wage/compensation.

Since Periyava desired 'Punya' instead of the material rewards of profit or wage, his preference was for a Brahmin girl for the Kanya Pooja ! A Sanyasi true to the Varnasrama Dharma !

Sundara Rajan
Posts: 1081
Joined: 08 Apr 2007, 08:19

Re: Kanchi Maha Periyava

Post by Sundara Rajan »

The last line should be "puNyApuNya" = puNya + apuNya ( puNyam + pApam).

Maha periyava was initiated into sanyAsa at the tender age of 13, around 1905 AD, at a time in history when varnAsrama tradition was strictly followed in Tamil country. While adhering to such tradition, PeriayavA evolved over time, slowly changing with changing times, yet within bounds of his Asrama. He gave up the use of palanquin or for that matter any vehicle in later life. He accepted devotees belonging to all castes as well as all religions. The Tagore episode cited must have taken place when PeriyavA was still in his twenties or early thirties and less cathOlic in his outlook. As far as Vedic rites are concerned, there is no middle path, either you strictly follow the rules or don't do the rites, is the dictum.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள் இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும் துறவிக்குக்
கடுமையான கட்டுப்பாடுகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு காலை வேளை. அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.
மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி வந்தார்.
நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார். எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.


சொந்த விவகாரம் - சிக்கல் - பிரச்னை பெரியவாளிடம் தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார்.
கண்கள் கெஞ்சுகின்றன - ;என்மீது தங்கள் அருட்பார்வை படட்டுமே!' என்று உதடுகள் துடிக்கின்றன.
'நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?' என்று. அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே விரும்பினார்.
'ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது' என்று விதி தடுக்கிறதே?.

அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான்
காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா அருகில் செல்ல முடியும்.
இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது? விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை
பெரியவா அழைத்தார்கள்.

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."
தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.

"ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.அவர்
திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர் நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.."

(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில் ஒரு புதைபொருளும் இருக்கிறது)

தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய ஒருவரையே, "பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி
நில்லு.....போதும்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு வந்துவிட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும்
அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே, செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.

டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.
பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று.
அம்மையாரின் கண்களில் நீர்....ஆமாம்.ஆனந்தக் கண்ணீர்!

பிறை சூடி அல்லவா,அவருக்குப் பதில் கூறியிருக்கிறது. அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும்
செவிடரிடம் ஒரு ஜாடை; 'நீங்களும் போகலாம்'

துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில், ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது



பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பம். \அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக
இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில் முகாம்.

பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப
அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு
போனார்.

ஆனால், இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்!
மாலையோடு வீடு திரும்பினார். அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ.
பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள்.

"இல்லே, இல்லே, அம்பாளும், பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்!
ஆமா. இது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.

மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும், பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில்
உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு! "பெரியவா வரா!
பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார். உடனே வீடுகளுக்குள்
இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு
வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல்
இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த வேகம், உண்மையான
மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!

பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு, சற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாக
பூஜை ரூமுக்குள் போய், முன்தினம் "பெரியவாளுக்குத்தான்!" என்று முத்ரை குத்தப்பட்டு, ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை
அப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவது போல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக் கொண்டார்!

சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்! ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்!
இப்படி ஒரு பரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்! திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம்
நடந்தார். சற்று நின்று திரும்பி, "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்.

அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்! நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக்கிண்ணம் குடுக்கணும் என்று சொல்லி,
ஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ! அவர்கள் நேற்று பேசியதை ஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா' வெள்ளிக்கிண்ணம்
எங்கே?' என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

பகவான் ஸர்வவ்யாபி! என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!


ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
தாயும் ஆனவர்
==============
ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன் பெண்னை அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தாள்.
"ரொம்ப நாள் கழிச்சு, முழுகாம இருக்கு. அதான் கவலையா இருக்கு. நல்லபடியா குளி குளிக்கனும். சாமி ஆசீர்வாதம் பன்ணனும்.
பெரியவா கையை தூக்கி ஆசி வழங்கினார்கள்.
தாயார் தொடந்து பேசினாள், “ரொம்ப ஏழைங்க நாங்க, வாய்க்கு ருசியா பதார்தங்களை வாங்கி கொடுக்க முடியலை. சாம்பலைத் துண்ணுது”
அந்த சமயம் ஸ்டேட் பேங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டி தயிர் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
"நீயே அந்த டப்பாவை, அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்...”
தயிர் டப்பா இடம் மாறியது.
கோபாலய்யர் (என்ஜினீயர்) பிற்ந்த நாள். வழக்கபடி ஒரு டின் நிறைய இனிப்பு - உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார், வேத பாடசாலை மாணவர்களுக்காக.
“கோபாலா! அந்த டின்னேட, எல்லாத்தையும் அந்தப் பொண்கிட்ட கொடுத்திடு...”
டின் இடம் மாறியது.
அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார்.
“அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு...”
ராமுவுக்க்கு பரம் சந்தோஷம்... பெரியவாளே சொல்கிறார்கள் என்று. அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.
தாயும் மகளும் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அசோக் நகர் ராமுவைப் பார்த்து, “எவ்வள்வு ரூபாய் கொடுத்தே?” என்று பெரியவா கேட்டார்கள்.
பல பேர் எதிரில் தொகையைச் சொல்வதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்தது.
“பெரியவா சொன்னார்கள் என்றால், லட்சக் கணக்கில் கொண்டு வந்த் கொட்டுவதற்குப் பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் எம்மாத்திரம்?’ என்று நினைத்தார்.
“நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது. அதை கொடுத்தேன்...’
“நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லலையே”
“இப்போதெல்லம் டெலிவரிகாக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போனால் கூட மூனு, நாலு ஆயிரம் ஆயிடறது...”
சில நிமிஷங்களுக்கு பின் பெரியவா சொன்னார்... “நீ வெறும் ராமன் இல்லை... தயாள ராமன்...”
“போதும் ! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும்...” என்று நெஞ்சுருக்கச் சொன்னார் ராமுஎன்கிற ராமன்...”

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

தமிழ் அறிஞர் பெரியசாமித்தூரன் சிறந்த தேசியவாதி. பல சிறந்த பாடல்களை எழுதியுள்ளார். அவர் ஒரு சமயம் யோகி ராம்சுரத்குமாரிடம் சென்று தனக்கு முருக தரிசனம் கிடைக்க யோகியார் அருள வேண்டும் என யாசித்து நின்றார்.

யோகி, “காஞ்சிபுரம் செல். மகா பெரியவரைப் பார். அவர்தான் முருகன்” என்றார். வியப்பில் ஆழ்ந்த தூரன் உடனே தேனம்பாக்கத்தில் இருந்த மாமுனிவரை தரிசிக்க வந்தார். கிணற்றுக்கு அருகில் இருந்த மகா பெரியவரைத் தரிசித்தவுடனேயே புளகாங்கிதம் அடைந்தார். அதுவரை மௌனமாக இருந்த மாமுனிவர் தூரனின் அருகில் வந்தார். “எனக்கு தரிசனம் கிடைத்து விட்டது. பெரும் பேறு பெற்றேன்” என்றார் தூரன்.

மகானோ, பேச்சை திசை திருப்பும் விதமாக, “உங்கள் கால் எப்படி இருக்கிறது?” என்று குசலம் விசாரித்தார்.

“தரிசனம் கிடைத்துவிட்டது; தரிசனம் கிடைத்து விட்டது” என்றே தூரன் சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர பெரியவா கேட்டதற்கு பதில் தரவில்லை.

தூரனின் மகள் ‘கொஞ்சி கொஞ்சி வா! குகனே!’ என்ற கமாஸ் ராகப் பாடலைப் பாட இடமே தேவலோகமானது. பிறகு தூரன் ‘புண்ணியம் ஒருகோடி செய்தேனோ’ என்ற கீரவாணி ராகப் பாடலையும், ‘என்ன பெருந்தவம்’ என்ற சகானா ராகப் பாடலையும் இயற்றினார்.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

VKailasam,
Thanks for bringing the moving background to Turan's songs!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Source: Ddivathin Kural Vol 7

சரணாகதி

புத்தியைப் படுக்கப் போடுகிறதுதான் சரணாகதி. அதற்கு அடையாளமாகத் -தான் பௌதிக கார்யமாக, 'ஸிம்பாலி'க்கா நமஸ்காரம் என்று ஆக்கிக் கொடுத்திருக்கிறது. புத்தி என்று மூளையை ஸம்பந்தப்படுத்தித்தானே சொல்கிறோம்? பாதத்துக்கு மேலே எட்டாம் சாணாகத் தலையுச்சியிலிருக்கிற அந்த மூளையை பூமி மட்டத்தில் படியவிட்டுத்தானே கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணுகிறோம் 'கீழ்ப்படிதல்' என்ற உள்பாவத்திற்கே நமஸ்காரம் வெளியடையாளம். வேதத்திற்கு, வேதத்தின் பரம தாத்பர்யமான ஈச்வரனுக்கு, மூளை கீழ்ப்படியும் சரணாகிதக்கு அடையாளமாக சரீரம் கீழே பூமியில் படியும் படிக் கிடக்கிறதே நமஸ்கார க்ரியை.
இங்கே புத்திக் கார்யமில்லை. அதன் இடத்தில் 'ச்ரத்தை', 'நம்பிக்கை' என்ற உணர்ச்சி இருக்கிறது. ப்ரத்யக்ஷமாக ஒன்றைத் தெரிந்துகொள்வதில் - ஜ்வாலை வீசினால் உஷ்ணம் என்று, பணிவாடை வீசினால் குளிர் என்று, இப்படிப் பிரத்யக்ஷமாக அநேகம் தெரிந்துகொள்வதில் - இது உஷ்ணந்தான், இது குளிர்தான் என்று புத்தி எப்படி ஸந்தேஹமில்லாமல் நிச்சயமாக இருக்கிறதோ அந்த மாதிரியே, அப்ரத்யட்சமான பரலோக, ஆத்மலோக விஷயத்தில் வேத - சாஸ்த்ரம் சொல்கிறதுதான் ஸத்யம் என்ற நிச்சயமான உணர்ச்சியாக அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்குத்தான் 'ச்ரத்தை' என்று பெயர். அந்த ச்ரத்தையை மூலதனமாகக் கொண்டால் அது நம்மைக் கொண்டு போய் நிறுத்தும் பரிபூர்ணமான கீழ்ப்படிதலுக்கே 'சரணாகதி' என்று பெயர். அங்கே நம் புத்திக்கு வேலை இல்லை, எந்தக் கேள்விக்கும் இடமில்லை.



SaraNãgati – Surrender

To lay our Buddhi prostrate is SaraNãgati. To make it clear to our own minds symbolically only the act of doing 'Sãshtãnga Namaskãra' – 'साष्टाङ्ग नमस्कार' has been evolved. Eight parts of the body in the case of males and five parts of the body in the case of females are to touch the ground. In that, the most important part to be brought down from its high-altitude and attitude is the head! The Sãstrãs lay down the rules to which we have to lay ourselves down! You have heard of the Tamil word 'keezh padidal' – 'கீழ் படிதல்', that is what it is. For that inner submissiveness to Vedas and to God as the main message of the Vedas, the outer indication is this act of Namaskãra. When you do Namaskãra to others, you are indicating your submissiveness – 'keezh padidal' – 'கீழ் படிதல்' not to any man on earth but to the God in him!

Here there is no work for the brain, ego and Ahankãra. Instead there is trust, faith and belief known as Shraddha. When there is a heat wave, we know it and so do we know when there is cold breeze blowing. With such certainty and clarity we should know that in the unseen world of inner dynamics of Ãtma Loka, what Vedas say is the Truth, not meant for anyone's individual unfair advantage but one's own individual spiritual progress. This certainty is Shraddha. If we take that Shraddha as the capital input, it will take us to the state of implicit obedience known as SaraNãgati of complete கீழ் படிதல், where there is no work for our Buddhi and no place for any more questions!
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !

Read more: http://periva.proboards.com/thread/7945 ... z3HCxB98FI

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது"

இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தளம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .

இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா... பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீடிற்கு வரவேண்டும் என்று .

ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேத்தியதுக்காக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே வந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .

வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .

அப்போது மகான் நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே என்று கட்டளயிட்டார்

பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .

இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்ற இக்காலஹச்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலதைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .

ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது. இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Recently released...

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கிழக்கு வெளுத்தது!
பகலவனின் கதிர்கள்
நின் கருணை முகத்தில் பிரதிபலித்து
முழு மதி தண்ணொளியாய் மாறின!
துயிலெழுவாய் சந்திர சேகரா!
பூபாளத்தில் உதய கீதமிசைக்கும்
சோலை குயிலின் கூவுமிசையும்
புலம்பும் புள்ளோசையும்
எழும்பி ஓயும் அலையோசையும்
களி வண்டுகளின் ரீங்கார ஓசையும்
சலசலக்கும் தென்றலிசைக்கும் ஓசையும்
உன் செவியில் விழாதது ஏனோ?
அகிலமெல்லாம் நடமாடிய களைப்பா?
நடனமாடிய சோர்வா?
சுவாமி நாதா துயிலெழுவாய்!
பூத்து குலுங்கும் செடி கொடிகள்
தலையசைக்க முல்லையின்
மணம்மிளந்தென்றலில்
மிதந்து வர சுவாமி நாதனின்
புகழ் பாடும் காம்போஜி ராக பாடலை
கேட்டு மகிழ துயில் எழுவாய்!
அகில் புகை பரவி நிற்க
மணம் மிக்க மலர்களும்
கொன்றை மலர் மாலையும்
கொண்டு மௌலி பூஜை செய்திட
துயிலெழுவாய் தயாபரா!
மன நோய் நீங்கிடவும்
சஞ்சலம் போக்கிடவும்
அடைக்கலம் வேண்டி
நிற்கும் பக்தர்கள் மனமகிழ
அருள துயில் எழுவாய்
திரபுரசுந்தரி தன் மைந்தனே!
அரங்கன் பள்ளிகொண்ட காரணத்தை
விரிவாக விளக்கிய பெருமானே!
துயிலெழ மனமில்லையா!
நாடியவரின் துயர் தீர்க்கும் வேத வித்தகா!
பாடுபவரை அணைத்தருளும் அமுதா!
பிரணவம் ஓதிய தநயா!
குஞ்சிதபாதம் சூடிய நடனா!
திருமலை வாழ் வேங்கடவா!
பல்லாண்டு பாடினேன்! துயில் எழுவாய்!
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத்துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் பெரியவா.
போகும் இடங்களில் எல்லாம் அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை ஆசீர்வதித்தபடியே தனது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவா.
மகா ஸ்வாமிவேக வேகமான நடை அவருக்கே உரிய தனிச் சிறப்பு. அவருடன் சென்ற மடத்துப் பணியாளர் களால் ஸ்வாமிகளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் பாதங்கள் சிவந்தும், காயம் பட்டும் ரத்தம் கசியும் நிலையில் இருந்தன.
கர்நாடக எல்லையில் இருந்த ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார் ஸ்வாமிகள். ஸ்ரீபரமாச்சார்யாரது விஜயம் அறிந்த கிராம மக்கள் ஓடோடி வந்து அவரை நமஸ்கரித்தனர். பிறகு, சகல மரியாதைகளுடன் அவரை வரவேற்று ஆரவாரமாக அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் பெரியவாளிடம் வந்த பணியாளர்கள் சாஷ்டாங்கமாக அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து விட்டு, ‘‘மன்னிக்கணும் பெரியவா! கால்களில் ரத்தம் கசியுமளவு வேதனை. ஆகவே, இரவில் இங்கேயே தங்கிட்டு, நாளைக்குக் காத்தால புறப்பட அனுக்கிரகிக்கணும்!’’ என்றனர் கண்ணீர் மல்க.
அவர்களைக் கருணையுடன் நோக்கிய பெரியவா, எதுவும் பேசவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.
எப்போதோ காஞ்சி மடத்துக்கு வந்து தன்னிடம் ஆசிபெற்றுச் சென்ற கர்நாடகத்தைச் சார்ந்த டாக்டர் ஒருவரைப் பற்றிய நினைவு வர… அந்த டாக்டரது ஊரைச் சொல்லி, ‘அது எங்கிருக்கிறது?’ என்று கிராமத்து வைதீகர்களிடம் விசாரித்தார் பெரியவா. மகா பெரியவா குறிப்பிட்ட ஊர், அதிர்ஷ்டவசமாக அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகில்தான் இருந்தது.
பெரியவா உடனே மடத்தின் பணியாட்களை அழைத்த பெரியவா, ‘‘உங்களில் நடக்க முடிஞ்ச ரெண்டு பேர் மட்டும் அந்த ஊருக்குப் போங்கோ. அங்கே டாக்டர் நஞ்சப்பாவை பார்த்து, ‘பெரியவா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்’ங்கற விஷயத்தைச் சொல்லி… அழைச் சுண்டு வாங்கோ!’’ என்றார். அதன்படி மடத்து சிஷ்யகோடிகளில் இருவர் டாக்டர் நஞ்சப்பாவின் ஊருக்கு விரைந்தனர்.
அதன் பின் பெரியவா அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் தங்கிக் கொள்ள, மற்றவர்களை அந்தக் கிராமத்தின் வைதீக பிராமணர்கள் சிலர் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். டாக்டரது ஊருக்குச் சென்ற சிஷ்யர்கள், அவரைச் சந்தித்து மகா பெரியவா பக்கத்துக் கிராமத்தில் தங்கியுள்ளதைத் தெரிவித்ததுடன், சக சிஷ்யர் களின் உபாதை குறித்தும் பெரியவாளின் விருப்பம் குறித்தும் விளக்கினர்.
அந்த டாக்டருக்கு ஆச்சரியம்! ‘காஞ்சி மடம் சென்று பெரியவாளை நான் தரிசித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, எனினும் பெரியவா என்னை மறக்காமல் இருக்கிறாரே’ என்று அந்த மகானது நினைவாற்றலை எண்ணி வியந்தார். சற்றும் தாமதிக்காமல் மடத்து சீடர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.
கிராமத்தில், அம்மன் கோயில் முன்பாக காரை நிறுத்தி விட்டு மண்டபத்துக்குள் சென்ற டாக்டர், மகா ஸ்வாமிகள் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவரிடம் தொழில், குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்த பெரியவா, தம்முடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரும் மடத்துப் பணியாட்களின் பாதங்களைப் பரிசோதித்து, காயங்களுக்கு உரிய மருந்திட்டு, தேவைக்கேற்ப கட்டும் போட்டு விட்டார்.
அப்போது அவரிடம், ‘‘ஐயா, நீங்க ஒரு உபகாரம் பண்ணணும்’’ என்றனர் மடத்தின் பணியாட்கள்.
‘‘என்ன செய்யணும், சொல்லுங்க ளேன்.’’
‘‘ஒண்ணுமில்லே… கால்கள் குணமாக ரெண்டு நாளாகலாம். அதுவரை இங்கேயே தங்கிச் செல்லுமாறு நீங்கதான் பெரியவாகிட்டே சொல்லணும்.’’
அவர்களின் நிலைமை டாக்டருக்கு புரிந்தது. ‘சரி’ என்று சொல்லி, பெரியவாளிடம் சென்றவர் தரையில் அமர்ந்தார். பிறகு, ஏதோ சொல்ல முற்பட்டவரைக் கையமர்த்திய பெரியவா, ‘‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’ என்றார் பெரியவா.
டாக்டருக்கு வியப்பு. ‘பெரியவா தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில். அப்படியிருக்க அடுத்த வீதியில் தங்கி இருக்கும் பணியாளர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் நம்மிடம் சொல்கிறாரே!’ என்று அதிசயப்பட்டார் டாக்டர் நஞ்சப்பா.
‘‘கவலைப்படாதீங்கோ… ரெண்டு நாள் என்ன… அவாளோட கால்கள் குணமாகற வரைக்கும் இங்கே தங்கி, அப்புறம்தான் பொறப்படுவேன்’’ என்று அந்த நடமாடும் தெய்வம் புன்னகைக்க… கண்ணீர் மல்க கைகூப்பி நமஸ்கரித்தார் டாக்டர் நஞ்சப்பா.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Namadhu Dharmam-Full Version..

Maha Swamigal

read it/download it here:

http://www.mediafire.com/view/fpw25d48l ... ersion.pdf

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

காஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் – An analysis!

Article Source: Smt Akhila Shishir Krishnaswamy -> Professor Sridhar ->SoK.

It seems like a good astrologist has done some research. To me, it is similar to the fact that we can’t see the head or foot of parameswaran – here also, one can’t bring Periyava into time and space and measure Him in any way. You can’t be a human being to measure assess mahans/Iswaran..Still this will be of great interest to astrology students…

மஹா பெரியவர் என்றால் அவர் ஒருவர்தான் மஹா பெரியவர். அந்தச் சொல்லிற்குத் தகுதியானவர் அவர் ஒருவர் தான்!

சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைத்தான் சொல்கிறேன். காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து சிறந்தவர். வாழ்வது என்பது ஆண்டு எண்ணிக்கையில் அல்ல! சேவையை வைத்துக்கணக்கிட வேண்டும்.

1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்து, தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர்.

பிப்ரவரி 1907ம் ஆண்டில் அவருக்கு மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட 13 ஆண்டுகளை அவர் சிறுவனாக இருந்த கணக்கில் கழித்து விட்டால் சுமார் 87 ஆண்டுகள் இறைப்பணி செதிருக்கிறார். மக்களை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார். 87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்தவாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!

அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.

அவருடைய ஜாதகத்தை அலசுவதை ஒரு பாக்கியமாகக் கருதி, இன்று அதைச் செய்திருக்கிறேன்.
பிறப்பு விவரம்

•பிறந்த தேதி: 20.5.1894
•பிறந்த நேரம்: மதியம் 1.22 மணி
•பிறந்த ஊர்: விழுப்புரம்
•நட்சத்திரம்: அனுஷம்
•லக்கினம்: சிம்ம லக்கினம்
•ராசி: விருச்சிக ராசி
இயற்பெயர்: சாமிநாதன்
கல்வித்தகுதி: திண்டிவனத்தில் அப்போது இருந்த அமெரிக்கன் மிஸன் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர்
வேதபாடங்களைத் தனியாக ஒரு ஆசிரியர் மூலம் கற்றுத் தேர்ந்தவர்

படிக்கின்ற காலத்தில் இவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இப்படிச் சொன்னாராம்:
One day the whole world will fall at his feet!

•அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் உள்ளனர்.
•சுக்கிரன் உச்சம். அத்துடன் குரு பகவானுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.
•அஷ்டகவர்க்கத்தில் சுபக் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவர்கள் தங்களுடைய சுயவர்க்கத்தில் அதிக பரல்கள் பெற்று வலுவாக உள்ளார்கள். குருவிற்கு 6 பரல்கள், சந்திரனுக்கு 7 பரல்கள், சுக்கிரனுக்கு 6 பரல்கள்.
•வெற்றிகளுக்கு உரிய 3ம் இடத்து அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுத்துள்ளார். சுவாமிகள்மடத்தின் குருவாக பல ஆண்டுகள் திறம்படப் பணி செய்துள்ளார். செய்யும் வேலையில் சிரத்தையைக் கொடுத்ததோடு, பெரும்புகழையும் சுக்கிரன் கொடுத்தார்.
•சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு 10ம் இடத்து அதிபதியும் ஆவார். அவர் உச்சம் பெற்றதுடன், தன் வீட்டிற்கு 11ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.
•சிம்ம லக்கின ஜாதகம். வனங்களில் சிங்கத்திற்கு என்ன சிறப்போ, அதே சிறப்பு 12 லக்கினங்களிலும் சிம்ம லக்கினத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. நாயகர்களின் லக்கினம்.
•லக்கினாதிபதி சூரியன் கேந்திரங்களில் முக்கியமான பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இது ஒரு சிறப்பு
•லக்கினாதிபதி சூரியனுடன் லாபாதிபதி புதனும், பூர்வபுண்ணியாதிபதி குருவும் கூட்டாக உள்ளார்கள்.இதுவும் ஒரு சிறப்பு
•கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம். குருவும் சந்திரனும் கேந்திர வீடுகளில் எதிரெதிரே பலத்துடன் அமர்ந்துள்ளார்கள். ஜாதகரை அறவழியில் கொண்டு சென்றதுடன், பெரும் புகழையும் கொடுத்தார்கள்.
•புத ஆதித்த யோகம்: புதனும் சூரியனும் கூட்டாக இருந்தால் இந்த யோகம் உண்டாகும். புத்திசாலித்தனம், நிபுனத்துவம்,சாமர்த்தியம்,பிரபலம், மரியாதைக் குரியவாரக இருத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அதுவும் முக்கியமான கேந்திரத்தில் இருப்பதையும் பாருங்கள்
•ஆதியோகம்: சந்திரனுக்கு 6 அல்லது 7 அல்லது 8ல் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கேசந்திரனுக்கு 7ல் குருவும், புதனும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய பொறுப்பு தேடி வரும் சுவாமிகளுக்கு ஆன்மீக குருவாக பக்தர்களை வழிநடத்திச் செல்லும் பதவி கிடைத்தது.
•சாமரயோகம்: 7 அல்லது 8 அல்லது 10ம் வீடுகளில் இரண்டு நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள், மேதைத் தனம், பல கலைகளில் தேர்ச்சி ஆகியவை இருக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில் குருவும், புதனும் 10ல் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள்
•தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத, தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை – அதுவும் ஆன்மிகம் இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
•மஹா சுவாமிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.
•ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.
•விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்
•ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்
•ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 10ல்.
•சுவாமிகள் லெளகீக வாழ்க்கை (அதாவது பொருள் சார்ந்த உலகியல் வாழ்க்கை) வாழாமல் துறவியாக ஆனதற்குக் காரணம்.
•முதலில் பூர்வ புண்ணியம். பூர்வ புண்ணியாதிபதி குருவும், லக்கினாதிபதி சூரியனும் சேர்ந்து 10ம் வீட்டில் அமர்ந்து ஒரு மடாதிபதியாக ஆக்கினார்கள். இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
•லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் நேர் பார்வையில் இருந்தாலும், ஜாதகரின் வாழ்க்கை ஜாதகருக்குப் பயன்படாது – மற்றவர்களுக்குதான் பயன்படும். பயன்பட்டது.
•லக்கினத்தில் குறைவான பரல்கள் (24 பரல்கள் மட்டுமே உள்ளன). இரண்டாம் வீட்டில் குடும்பஸ்தானத்தில் சனி, கேது ஆகிய தீய கிரகங்கள். லக்கினத் திற்கு ஏழாம் அதிபதி சனி, அந்த வீட்டிற்கு எட்டில். இக் காரணங்களால் அவதிகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. ஜாதக மேன்மையினால், அவற்றைக் கொடுக்காமல் சின்ன வயதிலேயே காலதேவன் அவரைத் துறவியாக்கிவிட்டான்
ஆயுள்

•ஆயுள் காரகன் சனியின் நேரடிப் பார்வையில் எட்டாம் வீடு. எட்டாம் வீட்டுக்காரன் குரு கேந்திரத்தில். எட்டாம் வீட்டிற்கு அஷ்டகவர்க்கத்தில் 35பரல்கள். ஆகவே நீண்ட ஆயுள். பரிபூரண ஆயுள் சுமார் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.
•மூன்றாம் வீடு வாழ்வதற்கு உள்ள சக்திகளைக் காட்டும். எட்டாம் வீடு ஆயுளைக் காட்டும். அந்த இரண்டு வீடுகளுக்கும் 12ம் வீடு அவற்றிலிருந்து 12ம் வீடு – அதாவது 3ற்கு 12ம் வீடு 2. எட்டிற்கு 12ம் வீடு 7. ஆக 2ம் வீடும், 7ஆம் வீடும்தான் மாரக ஸ்தானங்கள். அதன் அதிபதிகள் தான் மரணத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் தாமதிக்கும் போது (அதாவது அவர்களுக்கு உரிய தசாபுத்திகள் வராதபோது) 3ம் அதிபதி அல்லது 8ம் அதிபதி அந்தவேலையைச் செய்துவிடுவார்கள்.
•சுவாமிகளுக்கு குரு திசை சூரிய புத்தியில் மாரகம் ஏற்பட்டது. குரு எட்டாம் இடத்ததிபதி. அவரோடு சூரியனும் கூட்டாக இருப்பதைக் கவனியுங்கள். குரு மகாதிசை சூரிய புத்தியில் அது நடந்தது. மஹா சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்கள்.
இத்தரையில் உதித்தெழுந்து இந்நிசியில எனையடைந்து
காதுதந்து குரல்கேட்டு குறைதீர்க்க வந்தீரோ
கற்பகமாய் கோமளமே!
எவ்வுறவும் குறையில்லா நிறைபெற்று நல்வாழ்வும்
சிறந்தோங்கி மனமகிழ திருவருளும் புரிவாயே
தாயுமான தீனதயாளா!

வேதம் நிலைபெற உலகம் உய்யும்” என்பதனை ஒரு நூறு வருடங்களுக்கும் மேலாக நமக்கு தெளிவுற உணர்த்தி நல்வாழ்வினை நாம் மட்டுமன்றி நமக்கு பின்னராய் வருன் சந்ததியினரும் அடையத் தான் வேதசம்ரக்ஷணராய் அவதாரம் எடுத்தாரோ அந்த வல்லபர்!!
முப்பத்திரண்டு அறங்களிலே மேலான அறம் பசுவுக்கு அருகம்புல்லை உண்ணத் தருவது என்றும், எப்படிப் பட்ட சாப தோஷங்களிலிருந்தும் கலியுகத்தில் நாம் விடுபடவேண்டுமாயின் கோசம்ரக்ஷணமும் தேவை என்பதையும் நமக்கெல்லாம் வரப்ரசாதமாய் அருளிய அந்தத் திருவடிகளில் அனுதினம் பணிவது தானே சிறப்பு.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

*தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) *(பண்பாடு)

*ஒரே எழுத்தாலான ஸ்லோகம்***
**
இங்கே யா, மா, c, j, கா, ணா என்ற ஆறே எழுத்துக்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் செய்யுள் செய்திருக்கிறது.
'சப்த சித்ர காவ்யம்'என்பதாக இப்படி சில அக்ஷரங்களை வைத்துக்கொண்டே சப்த ஜாலம் பண்ணுவதில் ஒன்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறேன்.
*மித்ராத்ரிபுத்ர நேத்ராய த்ரயீசாத்ரவ சத்ரவே -***
***கோத்ராரி காத்ர-ஜத்ராய கோத்ராத்ரே தே நமோ நம *: **
இது ஈஸ்வரன், விஷ்ணு இருவருக்கும் பொருந்துமாறு செய்த ஸ்லோகம்.
'மித்ர அத்ரி புத்ர நேத்ர'என்றால் மித்ரன் என்ற ஸ¨ர்யனையும், அத்ரி புத்ரனான சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவன். சிவன், விஷ்ணு இரண்டு பேரையுமே இவ்விதம் ஸ¨ர்ய-சந்திரர்களை நேத்ரமாகக் கொண்டவர்களென்று சொல்வதுண்டு. 'த்ரயீ சாத்ரவ சத்ரு'என்றால் வேத சத்ருக்களான அஸுரர்களின் சத்ரு. இதுவும் இருவருக்கும் பொருந்துவதே. 'கோத்ராரி கோத்ரஜ த்ர'என்றால் மலைகளுக்கு சத்ருவான இந்திரனுடைய குலத்தில் பிறந்த தேவர்களை ரக்ஷிப்பவர். சிவன் விஷ்ணு இருவரும் இந்த டெஃபனிஷனுக்கும் ஆன்ஸர் பண்ணுகிறார்கள். "கோத்ராத்ரே தே நமோ நம:"என்றால் "பசுவைப் பாலிக்கிற உனக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்"என்று அர்த்தம். பசுபதியான பரமேஸ்வரன், கோபாலனான மஹாவிஷ்ணு இருவருந்தான் இவ்வாறு நமஸ்காரத்துக்குப் பாத்திரமாகிறார்கள்!
இதையெல்லாம் விட அர்த்தம் சொல்ல ரொம்பக் கடினமாக, ஒரே ஒரு எழுத்தை வைத்தே ஒரு ஸ்லோகம் 'சிசுபால வத'த்தில் மாகன் பண்ணியிருக்கிறான். ஸீதை 'த' (ta) வை எடுக்கச் சொன்னாளென்றால், இவன் 'த' (da) ஒன்றை வைத்தே முழு ஸ்லோகம் செய்திருக்கிறான். சொல்வதற்கே சிரிப்பாக இருக்கிறது!
*தாததோ துத்ததுத்தாதீ தாதாதோ துததீததோ *:*
*துத்தாதம் தததே துத்தே ததாத தததோதத *:**
கொடுக்கிறவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா தானும் அருளைக் கொடுக்கிறார்;கொடுக்கமால் கெடுக்கிறவர்களுக்குத் தானும் கொடுக்காமல் கெடுதலே செய்கிறார் என்பது தாத்பர்யம்.

Shared...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

114th stanza of ShishupAla VadhA composed by Māgha:-

दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः ।
दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥

In ShishupAla VadhA, there are a number of ingenious varieties, like, using only one consonant for every line; two consonants for the entire sloka; palindromes and a few complex palindromes.

http://en.wikipedia.org/wiki/Shishupala_Vadha

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

This one is from Kirātārjunīya:-

न नोननुन्नो नुन्नोनो नाना नानानना ननु ।
नुन्नोऽनुन्नो ननुन्नेनो नानेना नुन्ननुन्ननुत् ।।

http://en.wikipedia.org/wiki/Kir%C4%81t ... un%C4%ABya

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Sai baba's Birthday to day 23 11 2014.

For decades, M.S. and her husband were, like many in Madras, devout followers of the Paramacharya of Kanchi. One fine day, and I have this on good authority, Paramacharya asked M.S. to go Puttaparthi. M.S. was apparently puzzled by this command and wanted to know why she should go to Puttaparthi when she already had a Guru. The Paramacharya simply said: "Go and you will find the reason."

Incidentally, it is interesting that Ramana Maharishi also once sent some of his disciples to Puttaparthi in this same way. So, M.S. came and she instantly knew why she had been asked to come here. Thereafter she was a regular visitor, and sang many times in the Divine presence. Swami even visited her home in Chennai on many occasions...
http://media.radiosai.org/journals/Vol_ ... imusic.htm

குறை தீர்ப்பான் சாயி நாதன்
நிறை உள்ளம் அளிப்பான்
மறை ஓதும் அடியவரின்
குறை தீர்ப்பான் புண்ய ஸ்வூரபன்!
சாகர சாயி வேங்கடவன்
என் மனநோய் தீர்ப்பான்
முகம் மலரும் மோகன சிரிப்பு
கண்டால் மனக்கவலை ஓடிடும்
சோகங்கள் தீர்ந்திடும் !!
நோய் தீர்க்கும் தன்வன்திரி !!
கை தூக்கி தொழுதால்
கை கொடுத்து உதவுவான்
வேண்டி நின்றால்
ஏற்றம் தருவான்!
வரியவர் குறை தீர்க்கும்
அவனே தினகரன், பாஸ்கரன்,
ஞான பிரகாசன்…
சாயி சங்கரன்!!!
சந்தர சேகரன்!
பருத்திபுரவாசன்!
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

share from friend

On Periyava


பெரியவா சரணம்.

ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம், ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்ரம், முதலியவை மிகவும் ப்ரசித்தமானவை. அதேபோல் ஆசார்ய பக்த ஸ்ரேஷ்டரான "ஸரஸ கவி" ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா நமது பரமாசார்யர்களின் மேல் பாடியிருக்கிறார்கள். ப்ராதஸ்மரணீய மஹா புஷர்களான ஸ்ரீ ஆசார்யர்களை காலையில் ஸ்மரித்து இந்த ஸ்தோத்திரத்தை சொல்வது மிக்க மிக்க க்ஷேமகரம்.

ப்ராதஸ்மராமி பவதீய முகாரவிந்தம்
மந்தஸ்மிதம் ச ஜனிதாபஹரம் ஜனானாம்
சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷலக்ஷ்மீம்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும். அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன், என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.

ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி
ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி
வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

கலிதோஷத்தை நீக்குபவரே! அருளிதயம் கொண்டு, அங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே! கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே! காஞ்சி மடத்தின் அதிபதியே! காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். கை தூக்கி எனக்கருளுங்கள்.

வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்
பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்
ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

க‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும், குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே! எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

மத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய
யாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:
ப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

ந‌டையிலும், கூரிய‌ பார்வையிலும், வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே! க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

தக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்யரேண:
ஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்
ரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

வ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும், இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கி, ஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌.

விஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச மமாப்ராதும்
த்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபத்த தீக்ஷா:
ப்ராதஸ்மராமி யதிபுங்கவ தேனுகம்பாம்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

குறைக‌ளை, தோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே! குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரே! அனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானே! அருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே! காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

ப்ராதஸ்மராமி பவதீய பதாரவிந்தம்
யஸ்மாத் ப்ரயாந்தி துரிதாணி மஹாந்தி தாணி
ஆயாந்தி தாணி முஹரத்ய சுமங்களானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

எந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால், அனைத்து விதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ, ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ, அத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.

ஸ்னானாச்ச பானாச்ச நிஷேவனாச்ச
த்யானாச்ச பாபநி லயம் ப்ரயாந்தி
ஹே தீர்த்த பாதானுஸவம் பதம் தே
தீர்த்தம் ச தீர்த்திகரணம் பஜாமி
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

குளிக்கும்போதும், உண்ணும் [குடிக்கும்] போதும், தனியே துதிக்கும்போதும், தியானம் புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகி ஓடிவிடுமோ, [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டி, நல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.

இந்த அற்புத கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து அனுதினமும் ஆச்சார்யர் அருள் பெற்று இன்பயப்போமாக!

பெரியவா கடாக்ஷம்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Can someone post this in Sanskrit font?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »


Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

vgovindan:
THANKS !

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri Govindan,
Thanx for the link
Thanjavooran
25 11 2014

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

There seems to be a good number of typos (?) -- प्रतस्मरामि, जननानं, भवतोद्धरकटक्ष ... ... !

Is there any other version ?

satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Re: Kanchi Maha Periyava

Post by satyabalu »

"யக்ஞோபவீதம் (பூணூல்)

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? – மஹா பெரியவா
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ‘ தென்புலத்தார் ‘ என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்….. ‘ உத்தராயணம் ‘ என்பதில் மூன்று சுழி ‘ ண ‘ போட்டும், ‘ தக்ஷிணாயனம் ‘ என்னும்போது இரண்டு சுழி ‘ ன ‘ என்பது ‘ ண ‘ வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
” பிரதக்ஷணம் பண்ணுவது ” என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.
தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ‘ யக்ஞோபவீதம் ‘ என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ‘ ப்ராசீனாவீதம் ‘ என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ‘ நிவீதம் ‘ என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், ” நிவீதம் மநுஷ்யாணாம் ” – மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது"

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Manusmruti
2.44
कार्पासं उपवीतं स्याद्विप्रस्योर्ध्ववृतं त्रिवृत् ।
शणसूत्रमयं राज्ञो वैश्यस्याविकसौत्रिकम् ।।
The sacrificial string (of a Brahmana) made of cotton, (shall be) twisted to the right, (and consist) of three threads, that of a Kshatriya of hempen threads, (and) that of a Vaisya of woollen threads.

2.63
उद्धृते दक्षिने पाणावुपवीत्युच्यते द्विजः ।
सव्ये प्राचीनावीती निवीती कण्ठसज्जने ।।
A twice-born man is called upavItin when his right arm is raised (and the sacrificial string or the dress, passed under it, rests on the left shoulder); (when his) left (arm) is raised (and the string, or the dress, passed under it, rests on the right shoulder, he is called) prachInavIti; and nivItI when it hangs down (straight) from the neck.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Kanchi Maha Periyava

Post by Ponbhairavi »

I heard from a ECG technician that the line of the thread in upavIthi coincides with the axis of zero potential in the electrical activity of the heart.whether it has any relevance or significance I do not know.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Kanakabhishekam & Pada Puja:

Wonder whether Kanakabhishekam and Pada Puja are prescribed in any of the Grhya Sutras or Dharma Sutras.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

யாருக்குதான் தெரியும்
நீ யாரென்று கருங்குழல் கண்ணா!
தேடி தேடி வரட்டும்
உன் எழிலில் மயங்கட்டும்!
ஐயன் அன்றோ நீ!
நடனமாடும் தெய்வமன்றோ?
சந்திர சேகரா! சுவாமிநாதா!
லஷ்மி தன் தனயா!
பொய்யும் மெய்யுமல்லவோ!
ஒளி படைத்த கண்ணினை கண்டால்
கண்பட்டு போகுமே!
கள்ள சிரிப்பினை கண்டால்
மனம் சிலிர்த்து போகுமே!
வெண்ணையுண்ட வாயனோ!
மண்ணுண்ட மாயனோ!
என்னையாண்ட மன்னனோ!
யாருக்குதான் தெரியும்
நீ யாரென்று கருங்குழல் கண்ணா!!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"ஒரு நந்தனார் பரம்பரை பக்தனுக்கு ஆத்ம தரிசனம்
காட்டிய பெரியவா"(நன்றி-தினமலர்.)
===================================================
ஒரு சமயம், காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் காஞ்சி மகாபெரியவர் முகாமிட்டார். அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிய பெரியவர், தான் முகாமிட்டிருந்த அந்தணர் தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கலவைக்குச் செல்லும் வழியில் ஒரு கால்வாய் மதகு இருந்தது. அதன் இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.. பெரியவர் கலவைக்குச் செல்லும் போது, அந்த சுவர்களின் மீது பொருள் ஏதுமில்லை. திரும்ப வரும் போது, ஒரு சுவரில் பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை எல்லாம் இருந்தது
.
நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை.

இப்போது, இவை எப்படி இங்கு வந்தன என்று பெரியவருடன் சென்றவர்கள் முகத்தில் கேள்வி..!

பெரியவர் அந்தக் கேள்விக்குறியைக் கவனித்தார். நடந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று விட்டார். அங்குமிங்குமாக நடமாடினார். நாலு பக்கமும் மாறி மாறி திரும்பினார். தன்னுடன் வந்த தொண்டர்களிடம், சம்பந்தமில்லாத சில விஷயங்களைப் பேசினார்.
தொண்டர்களுக்கு, பெரியவர் எதற்காக இப்படி செய்கிறார் என்பது புரியவில்லை.

15 அடி தூரத்தில் அடக்க ஒடுக்கமாய், பக்திப் பரவசத்துடன் ஒருவர் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார். அவர் ஒரு திருக்குலத்து திருத்தொண்டர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் தான், அந்தப் பொருட்களை அங்கு வைத்திருக்கிறார் என்பதை பெரியவர் புரிந்து கொண்டார்.

ஒரு சிஷ்யரிடம்,""எதற்காக இந்தப் பொருட்களை அவன் இங்கே வைத்திருக்கிறான் என்று கேள்,'' என்றார்.

அவரும் அதுபற்றி கேட்க,""சாமிக்கு தான் வச்சிருக்கேன். எல்லாம் தோட்டத்திலே வெளஞ்சது...சாமி கோயிலுக்கு போறப்ப பாத்தேன்! திரும்ப இந்த வழியாகத்தான் வருவாங்கன்னு தெரிஞ்சு, வீட்டுக்கு ஓடிப்போயி எடுத்தாந்து, அவங்க கண்ணிலே படுற மாதிரி வச்சேன்! நாங்க பாலு, தயிரு தந்தா சாப்பிட மாட்டாங்க! அதனாலே தான் காய்கறிகளை கெடுத்தா சாப்பிடுவாங்களோன்னு நெனச்சு வச்சிருக்கேன்,'' என்றார் அந்த திருத்தொண்டர்.

பெரியவர் தன் சிஷ்யர்களை நோக்கி சைகை செய்து, அவற்றை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அத்துடன், ""குகன் கொடுத்ததை ராமன் ஏற்றுக்கொண்ட மாதிரி, நாளைக்கு இதெல்லாம் சந்திர மவுலீஸ்வரருக்கு (பெரியவர் தினமும் பூஜிக்கும் சிவன்) அர்ப்பணம்,'' என்றார்.

சரி...பெரியவர் அதற்காக அங்குமிங்கும் நடந்தார்! ஏன் மாறி மாறி திரும்பினார்? என்ற கேள்விக்கும் விடை வேண்டுமல்லவா! இதற்கும் பெரியவரே பதிலளித்தார்.

""ஏண்டா! என் முன்னாடி நமஸ்காரம் பண்றவாளுக்கு என் முதுகு தெரியுமோ?'' என சிஷ்யர்களிடம் கேட்டார்.

"தெரியாது' என்றார்கள் எல்லாரும்.

""என் முதுகைப் பார்க்கணும்னா என்ன பண்ணனும்? என்னை பிரதட்சணம் பண்ணனும் (வலம் வந்து வணங்க வேண்டும்). அவன் எதிர்லே நான் ஆத்ம பிரதட்சணம் பண்ணனும். அப்போ முன்னே, பின்னே, பக்கவாட்டிலே எல்லாம் பார்க்கலாம் இல்லியோ!'' என்றார்.

அப்போது தான், ஒரு சிவபக்தனுக்கு தன் முழு உருவத்தை யும் காட்ட பெரியவர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது எல்லாருக்கும் புரிந்தது. உடனே பெரியவர், "அவன் யார் தெரியுமா? நந்தனார் பரம்பரை' என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார். கருணாமூர்த்தியாக அனைவர் கண்களுக்கும் தெரிந்தார்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend


காஞ்சி மாமுனி மஹா பெரியவா

கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு -மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு
(காஞ்சி மாமுனி மஹா பெரியவா)

“இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு” என்று கூறுவார்கள்.


நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை நாம் அறியமாட்டோம்.


அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும்.


குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை.


கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான்.
மகான்கள் மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு!



ஒரு குக்கிராமத்தில் முகாமிட்டிருந்த மஹானை தரிசிக்க ஒரு மிராசுதாரும் அவரது உதவியாளரும் வந்திருந்தனர். வந்த பக்தர்கள் அனைவரிடமும் அன்பொழுக பேசி அருள் செய்யும் கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனி, அன்று வித்தியாசமாக உடன் வந்த உதவியாளரிடம் மட்டுமே கொள்ளைப் பேச்சு பேசினார்.



அழைத்து வந்த எஜமானரை ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. இது மிராசுதாருக்கு வருத்தமாக இருந்தது.


காரணமும் புரியவில்லை. தன்னிடம் பேசாமல் இருக்குமளவிற்கு தான் தவறு செய்ததாகவும் தெரியவில்லை. எனினும் யார் காரணம் கேட்க முடியும்? வருத்தம் வாட்டவே விடைபெற்றுச் சென்றார்.



முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் தள்ளி இருந்ததால், மடத்து வண்டியில் அவர்களை கொண்டு விடும்படி உடனிருந்த தொண்டருக்கு உத்தரவிட்டார்


ஞான மாலை. ரயில் நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்த தொடரை அழைத்து, “வண்டியில் போகும்போது மிராசுதார் என்ன பேசினார்? தன்னைப் பற்றி என்ன சொன்னார்?” என்று கேட்க, “அவர் ரொம்ப குறைப்பட்டுக்கொண்டார். பெரியவா அவரிடம் பேசாதது அவருக்கு ரொம்ப வருத்தமாய் இருந்ததாம்.


வழியெல்லாம் பெரியவாளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தன்னிடம் அன்பாய் பேசும் பெரியவா இன்று பேசாத காரணம் புரியவில்லை என்று அதே சிந்தனையில் இருந்தார்.” என்று கூறினார் தொண்டர்.



உடனே ஞானக்கடல், “எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” சொல்லிவிட்டு நகர்ந்தது ஞான மலை.

மறுநாள் மாலை தந்தி வந்தது. அதில் மிராசுதார் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதிர்ச்சி அடைந்த மடத்து சிப்பந்திகள் மேலும் பிரமிக்கும்படி பெரியவா சொன்னார்: “நான் அவனோட நேத்திக்கு பேசாததன் காரணம் கடைசியா அவனுக்கு என் நினைவாகவே இருக்கட்டும்னு தான். நான் பேசாததாலேயே அவன் என் நினைவாகவே இருந்தான்.” என்று கூறிய பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது


“எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” என்று பெரியவா கூறியதன் அர்த்தம்.


பகவான் கீதையில் “கடைசி நேரத்தில் தன நினைவாகவே இருந்து உயிர் பிரிந்தால் தன்னையே வந்து அடைவதாக” சொல்கிறார்


அல்லவா? அதனால் தான், தன் பக்தன் கடைசியில் தன நினைவாகவே இருந்து தன்னையே அடைந்து பிறவிப் பெருங்கடலை தாண்டட்டும் என்று அருள் செய்தார் போலும்


நம் கீதாசார்யரான பெரியவா. பிறக்கும் போதும், வாழும்போதும், இறக்கும்போதும் எப்பொழுதும் அருள் செய்யும் கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

... ...
... ...

"பார்வை நேரம் முடிந்து விட்டது. மிராசுதாரும் ஊருக்குப் போயாகி விட்டது. இனி எப்படிப் பேசுவது?" என்றார்.

மிராசுதாரோ தான் புறக்கணிக்கப் பட்டதாக எண்ணி எண்ணி வருந்தினார்; குமுறினார். மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார். முன்பே இருதய நோயால் அவதியுற்றிருந்த அவர் இதனால் அகால மரணத்தைத் தழுவ நேர்ந்தது.

இவரைப் போல அதீத பக்தி கொண்டிருந்தோரும் இருந்துள்ளனர்.

(முற்றும்.)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

TM Krishna On Maha Periavaa ----Sings

https://www.youtube.com/watch?v=UMHCf45k4Fs

Divine!!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Varagooran Narayanan
"இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?''
கட்டுரை-திருப்பூர் கிருஷ்ணன்
மார்ச் 04,2013,தினமலர்
பரமாச்சாரியார், காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி நிறைய அடியவர்கள் குழுமியிருந்தார்கள். பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அவரின் தெய்வீகப் பொலிவு நிறைந்த திருமுகத்தை மீண்டும் மீண்டும் தரிசிப்பதில் எல்லாருக்கும் ஓர் ஆனந்தம். சிலர் அவரிடம் வாய்விட்டுத் தங்கள் குறைகளைச் சொன்னார்கள். சிலர் மனத்தாலேயே அவரிடம் முறையிட்டார்கள். வேறு சிலர் உங்களையே தரிசித்தபின் எங்களுக்கேது குறை என்பது போல் நிம்மதியாய் அமர்ந்திருந்தார்கள்.
அப்போது ஓர் அடியவர் பரமாச்சாரியாரிடம் உரிமையோடு கேட்டார்.
பரமாச்சாரியார் தன் பக்தர்களின் வினாக்களுக்கெல்லாம் மிகுந்த பொறுப்போடு பதில் சொல்கிறவர் தானே! தம்முடைய இந்த வினாவுக்கும் கட்டாயம் பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்போடு கேட்டார்:
""சுவாமி! வெளிநாட்டைச் சேர்ந்தவரான பால்பிரண்டனுக்கு, அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்றுவெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே! அது பரமாச்சாரியாரின் நிஜமான தோற்றம்தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறாராமே! அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?''
இந்தக் கேள்விக்குப் பரமாச்சாரியார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.
தற்புகழ்ச்சியை முழுவதுமாகத் துறந்து விட்டவரும், தன் ஆற்றல்களை ஒருபோதும் பிரகடனப் படுத்திக் கொள்ளாதவருமான பரமாச்சாரியார், அந்தக் கேள்விக்கு பதில் சொன்னார். அந்த பதிலைக் கேட்டு, அவரைப் போன்ற மகானால் அல்லவோ, அத்தகைய பதிலைச் சொல்ல முடியும் என்று எல்லோரும் வியப்படைந்து, அவரை இருகரம் கூப்பி வணங்கினார்கள்.
அந்த பதில் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டாமா..........!
கே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை அலங்கரித்தவர். சிட்டி, சிவபாதசுந்தரம், வல்லிக்கண்ணன், க.நா.சு. போன்ற இலக்கிய ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை விசேஷமாகக் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. ரவீந்திரநாத் தாகூருக்கு அவரிடம் மதிப்புண்டு. தற்கால இலக்கியத்தின் ஒளிவீசும் நட்சத்திரங்களில் ஒருவரான அவர் தேச பக்தி, தெய்வ பக்தி இரண்டிலும் தோய்ந்தவர். காஞ்சிப் பரமாச்சாரியாரிடம் அவருக்கு விசேஷ மரியாதை இருந்தது
.
பால்பிரண்டன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர். தத்துவ ஞானி. பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்த யாத்ரீகர். 1898 அக்டோபர் 21இல் பிறந்து, 1981 ஜூலை 27இல் மறைந்தவர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது அவர் தம் நாட்களை இந்தியாவில் தான் கழித்தார். மைசூரு மகாராஜா ஸ்ரீகிருஷ்ண ராஜா அவரைத் தம் விருந்தினராகத் தங்கவைத்துக் கொண்டார். பால் பிரண்டன் தமது "தி க்வெஸ்ட் ஆப் தி ஓவர்செல்ப்' என்ற நூலை மகாராஜாவுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். 1940 இல் மகாராஜா இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு நெகிழ்ந்தவர் அவர்.
பிரண்டனுக்கு மிக உயர்ந்த ஆன்மிக நாட்டம் இருந்தது. அவரது ஆன்மிக நாட்டம் மதங்கடந்து எல்லா மதச் சான்றோர்களையும் போற் றுவது. முக்கியமாக இந்து மதத் துறவியரின் ஆன்மிக வெள்ளத்தில் அவர் திளைத்து வந்தார்.
பல இந்துத் துறவிகளைச் சந்திக்கும் எண்ணத்தில் அவர் சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்தார். முற்றும் துறந்த துறவியர் பலரைச் சந்தித்து அவர்களின் மகிமை உணர்ந்து அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். இந்து மதத்தின் சனாதன தர்மம் எத்தகைய அபூர்வமான ஆன்மிக நெறி என்பதை அறிந்து, நம் மதத்தின்பால் அளவற்ற மதிப்பும் ஈடுபாடும் கொண்டார்.
காஞ்சிப் பரமாச்சாரியாரைப் பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயங்கள் அவரை எவ்விதமேனும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனத்தில் தோற்றுவித்தன. பதவியையோ, புகழையோ பரமாச்சாரியார் மதிப்பதில்லை. ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டை அவர் பார்ப்பதில்லை. பணத்தின் மேல் அவருக்கு ஒரு சிறிதும் நாட்டமில்லை என்றெல்லாம் அவரைப்பற்றி அறிய அறிய, அவரைச் சந்திக்கும் வேட்கை பிரண்டன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஆனால் எவ்விதம் சந்திப்பது? யாராவது அறிமுகப்படுத்த வேண்டுமே? வெளிதேசத்தவரை மடாதிபதியான அவர் சந்திப்பாரா?
முன்னரே தமக்கு நன்கு தெரிந்தவரும் எழுத்தாளரும், நல்ல ஆங்கிலப் புலமை உடையவருமான கே.எஸ். வெங்கடரமணியை இதன் பொருட்டு அணுகினார். பால்பிரண்டனின் ஆன்மிக தாகத்தை உணர்ந்திருந்த வெங்கடரமணி, அவரைப் பரமாச்சாரியாரிடம் அழைத்துச் செல்ல மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.
1931, ஜனவரியில் ஒருநாள். ஆம்...
பால்பிரண்டன் பரமாச்சாரியாரைச் சந்திக்கும் அந்த நாள் வந்தது.
பரமாச்சாரியார் செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காலம். பால்பிரண்டனுடன் சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்றார் கே.எஸ். வெங்கடரமணி. பரமாச்சாரியாரிடம் பால்பிரண்டனது ஆன்மிக வேட்கையை எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்.
பரமாச்சாரியார் அந்த வெளிதேச மனிதரைக் கனிவோடு பார்த்தார். உலகளாவிய ஆன்மிகத்திற்கு எல்லையே கிடையாது என்கிறபோது, தேச வேறுபாடு எங்கே வந்தது? மத வேறுபாட்டைக் கூட சுவாமிகள் பொருட்படுத்தியதில்லையே? அவரவரும் அவரவர்மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு நிம்மதி காண வேண்டும் என்பதல்லவா பரமாச்சாரியாரின் உபதேசம்! காஞ்சி மடத்தின் அருகேயுள்ள மசூதியிலிருந்து மாலை நேரம் தொழுகை ஒலி கேட்கும்போது, அது இறைவனைத் தனக்கு நினைவுபடுத்துவதாகவும் எனவே அந்த ஒலியைத் தடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்திய மெய்ஞ்ஞானி அல்லவா அவர்!
பரமாச்சாரியாரின் அருட்பார்வை, அப்படியே பால்பிரண்டனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அந்தத் தெய்வீக மனிதரின் சந்நிதியில் பெரும் சாந்தியை உணர்ந்தது அவர் உள்ளம். இவரையே தம் குருவாக வரித்தால் என்ன! இவரிடமிருந்து ஏதும் உபதேசம் பெற்றால் என்ன!
பால்பிரண்டன் எதையும் வாய்விட்டுச் சொல்ல வேண்டியது அவசியமா? எதையாவது நினைத்தாலே போதுமே! தன் முன் உள்ள மனிதர்களின் மனதைப் புத்தகம் படிப்பதுபோல் படித்துவிடும் ஆற்றல் உண்டே பரமாச்சாரியாருக்கு! பால்பிரண்டனை அன்போடு பார்த்த பரமாச்சாரியாரின் அதரங்களிலிருந்து அருள்மொழிகள் புறப்பட்டன
.
""அன்பனே! உனக்கு ஒரு குரு வேண்டும்! அவ்வளவு தானே! நீ உபதேசம் பெற விரும்பு கிறாய் அல்லவா! நான் இங்கே ஒரு மடத்தைச் சார்ந்திருக்கிறேன். இந்த மடத்தின் மடாதிபதியாய் இருக்கிறேன். இந்த மடத்திற்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை நான் மீற முடியாது. உனக்கு உபதேசம் செய்யக் கூடிய ஆன்மிகவாதி திருவண்ணாமலையில் உள்ளார். ரமண மகரிஷி என்பது அவரது நாமம். நீ வெளிதேசம் திரும்புவதற்கு முன் கட்டாயம் அவரைச் சென்று சந்திப்பாய். உன் வாழ்க்கை மேலும் சிறப்படையும்''.
வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்தார் பரமாச்சாரியார். பால்பிரண்டனின் விழிகள் பக்திக் கண்ணீரால் பனித்தன.
சென்னை திரும்பினார் பால்பிரண்டன். அவரது நெஞ்சில் பரமாச்சாரியாரின் திருமுகமே நிறைந்திருந்தது. தாம் தங்கிய உணவகத்தில் தம் அறையில் இரவு படுத்து உறங்கினார். அவருக்கு ரமணரைத் தரிசிக்க நேரமில்லை. மறுநாளே விமானத்தில் சுவிட்சர்லாந்து புறப்பட வேண்டியிருந்தது. இன்னொரு முறைதான் அவரைப் பார்க்க வேண்டும்.
அவர் ஆழ்ந்து உறங்கியபோது திடீரென யாரோ அவரைத் தட்டி அழைத்ததுபோல் இருந்தது. திகைப்போடு கண்திறந்து பார்த்தார். அவர் தங்கியிருந்த அறைக்கதவு உள்ளே தாழ் போட்டுப் பூட்டித்தான் இருந்தது. ஆனால், அறைக்கு உள்ளே கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் பரமாச்சாரியார். எப்படி அறைக்குள் வந்தார் அவர்?
அவரைச் சுற்றிப் புனிதமான பொன்னொளி பரவியிருந்தது. மீண்டும் அதே கனிவான அருள் பார்வை...இது நிஜமா பொய்த்தோற்றமா! பால் பிரண்டன் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். நிஜம் தான். எள்ளளவும் பொய்யில்லை. அவர் தன்னைத் தானே கிள்ளிக் கொள்வதைப் பார்த்துப் பரமாச்சாரியார் முகத்தில் மெல்லிய குறும்பு கலந்தபுன்முறுவல். பரமாச்சாரியார் கனிவோடு தேனினும் இனிய மதுரக் குரலில் சொல்லலானார்:
""அன்பனே! ரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே. பயணத்தைத் தள்ளிப் போடு. ரமணரை நீ தரிசிப்பது மிக முக்கியம். அந்தச் சந்திப்பு உன் வாழ்வின் திசையை மாற்றும்!'' சொல்லிவிட்டுப் பரமாச்சாரியார் காற்றில் கலந்து மறைந்துபோனார்! இது கனவல்ல, நூறு சதவீத நிஜம் என்றுணர்ந்த பிரண்டனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. பிறகு, பிரண்டன் ரமணரைச் சென்று பார்த்தார் என்பது அவரது வரலாறு. இந்த சம்பவத்தைத் தான் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் பால்பிரண்டன்.
பரமாச்சாரியாரைக் கேள்வி கேட்ட அன்பர் இந்த சம்பவத்தைப் பற்றித்தான் கேட்டார்:
""சுவாமி! பால் பிரண்டனுக்கு நள்ளிரவில் காற்றுவெளியில் காட்சி கொடுத்தீர்களாமே! இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா!
கேள்வி கேட்டவரையே, பரிவோடு சற்றுநேரம் பார்த்த பரமாச்சாரியார் பிறகு ஒரு முறுவலுடன் சொன்னார்
:
""அதனால் தான் நான் எப்போதும் சொல்கிறேன். தூங்குவதற்கு முன் நல்ல நினைவுகளையே நினைத்துக் கொண்டு தூங்க வேண்டும்!''
சொல்லி விட்டுப் பரமாச்சாரியார் எழுந்து மடத்திற்குள் போய்விட்டார்.
அந்த பதில் மூலம் எல்லார் மனதிற்குள்ளும் போய்விட்டார். புகழைத் துறந்த அவரது பதிலைக் கேட்ட சிலர், கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள். தான் செய்த அற்புதத்தைக் கூடத் தானே ஒப்புக்கொள்ள மறுத்தவர்போல், புறந்தள்ளும் அவரது முற்றும் துறந்த துறவுநிலை கண்டு கேள்வி கேட்டவரின் கன்னங்களில் பக்திக் கண்ணீர் வழியத் தொடங்கியது

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

136-ஓரொருகால் எம்பெருமான்! எம் ஐயன்!
என்றே வாய் மொழி கூறி அவன் இயம்பிய
அற வழி நடவாமல் போனால் கிடைக்குமோ அவனருள்!
அனத்த மறையும் அனத்தமுறை ஓலமிட்டால்
போதுமோ! வாக்காலும் உள்ளத்தாலும்
தூய்மை காக்காது நின்று!
நாளை என்றொறு நாள் வருமா?
நாளையும் கடந்து விட்டால்?
குஞ்சித பாதம் சூடி வாச மலர் அணிந்து
முருவல் பூத்து கருணை பொழியும்
அருளாளனின் இன்சொல்லை
தவிர்த்து மன இருளை வளர்த்து
இடர் பட்டு மாய்வது நின்
குற்றமேயன்றி யார் குற்றம்!
உயிர்ச்சத்தும் அவனே உயிர் தரும் சத்தும் அவனே!
பட்ட மரமும் தழைக்கும் அவனருளால்!
தீயவையை விலக்கி வாழ்வில்
ஞான ஒளி காட்டும் ஜகத்குருவை
இறைஞ்சி வேண்டி நின்று
புது ஆண்டில் நலம் பெற்று
வாழ வாழ்த்தும் வேங்கடவன்!!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்றமனமே பொன் செய்யும் மருந்து.கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,மாரியம்மன் கோயில்,சிவன் கோயில் எல்லாவற்றுக்கும்அரும்பாடுபட்டுத்திருப்பணிகள்செய்தார்.பெரிய தொகை நன்கொடைகொடுப்பவர்கள் கூடஅவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டைகிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்கோயில் கொண்டுள்ளார்.இப்படி எத்தனையோ கோயில்கள்.ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.'எப்படி?'
என்றெல்லாம் கேட்கக்கூடாது.அது சிவரகசியம்!அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்துபையன்களை உடன் வைத்துக்கொண்டுசந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாகநின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்செய்யவில்லை பெரியவாள்.அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்புகொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்தஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர். பெரியவாள்,அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச் சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்சொன்னார்கள். எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரியபண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்."இவரைப் பார்த்திருக்கிறாயோ?""

இல்லை""

இவர் அட்ரஸ் தெரியுமோ?"

"தெரியாது""

எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?"(என்ன குறும்பு!)

"சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்குவீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்...!"பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.

ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்பார்த்ததில்லையே...

"இவர் சிவப்பழம்...பிரசாதத்தோட நெறய்யபழங்கள் கொடு..."

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?. அது எந்தவகை ஸித்தி?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?


Shared from a friend..

Post Reply