Kanchi Maha Periyava

Post Reply
kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

ராமர் கதை சொல்லும் இடத்திலெல்லாம் கைகூப்பி இருக்கும் ஹனுமான் ராமர் இருக்கும் இடத்தில் இல்லாமல் இருப்பாரா என்று நினைத்துக்கொள்ளலாமே.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா கொடுத்த PRESCRIPTION

பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்

அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸுதான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்தது!

சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே ["அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்"என்று ஆழ்வார் பாடியது போல்] பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான்.

"எனக்கு தலைவலி தாங்க முடியலே பெரியவா.... அதோட மறதி ரொம்ப இருக்கு. பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே... பெரியவாதான் காப்பாத்தணும்"அழுதான்.

"கொழந்தே! நா..... வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா..... வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்....."

பையன் நகருவதாக இல்லை. பெரியவாளிடம் prescription வாங்காமல் போவதாக இல்லை. அதற்கு மேல் அவனை சோதிக்க பெரியவா விரும்பவில்லை.

எனவே அவனிடம்,"சரி, நான் சொல்ற வைத்யம் ரொம்ப கடுமையா இருக்குமேப்பா! ஒன்னால follow பண்ண முடியாதேடா கொழந்தே!..."

"அப்டீல்லாம் இல்லே பெரியவா...... ஒங்க வார்த்தைப்படி கட்டாயம் நடக்கறேன்!"

வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பையன் முகம் ப்ரகாஸமானது.

"ரொம்ப சந்தோஷம். அந்தக் காலத்துல, முகத்தளவைன்னு ஒரு கணக்கு உண்டு. அதுப்படி, நாலு பெரிய்....ய்ய படில அரிசி, கோதுமை மாதிரி எதாவுது ஒரு தான்யத்தை அளந்து ஒரு பையில கட்டி ..... சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அதுமாதிரி, அந்த தான்யத்தை ஒன்னோட தலையில வெச்சுண்டு, தெனோமும் ஒரு மைல் தொலைவு நடக்கணும்! செய்வியா?.... முடியுமா?..."

"கட்டாயம் நடக்கறேன்....."

"இரு .... இரு.... இன்னும் நான் முழுக்க சொல்லி முடிக்கலே! ஒரு மைல் தொலைவு நடக்கறச்சே.... யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசப்....டாது! சிவ நாமாவோ, ராம நாமாவோ சொல்லிண்டிருக்கணும்! அந்த தான்யத்தை அன்னன்னிக்கி எதாவுது சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ,..க்ராம தேவதை கோவிலுக்கோ எதுவானாலும் சரி, குடுத்துடணும்! இல்லாட்டா.... யாராவுது ஒரு ஏழைக்கு அதைக் குடுத்துடணும்! இதுமாதிரி பதினோரு நாள் பண்ணினியானா..... ஒன்னோட தலைவலி போய்டும்; ஞாபகசக்தியும் நன்னா வ்ருத்தியாகும்..."

பையனுக்கு ஒரே சந்தோஷம் !"நிச்சயம் நீங்க சொன்னபடி பண்றேன் பெரியவா"விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான்.

பெரியவாளின் அநுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்ததால், அவர் சொன்ன எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு பண்ணினான். ஒரே வாரத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தான்... அழுது கொண்டு இல்லை! சிரித்த முகத்துடன் வந்தான்!

"பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! "என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா..... பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா"

அவன் சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.

உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது அல்ல. கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும் போதே நமக்குக் கிடைக்க வேண்டும். நல்லது செய்தால் நல்லது விளையும். இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம் இல்லை. பிரதி பலன் கருதாது நீ செய்யும் கர்மங்களுக்கு கிடைக்கும் ஆனந்தமே மோக்ஷம். இது இப்பிறவியிலேயே கிடைக்கும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Moksha is not an experience to realize after we die and go to some other place. It needs to be experienced right here while we live in this world. If we do good things we reap good benefits. There is no point in getting Moksha if all through our life we complain about good and bad experiences. Moksha is nothing but a blissful state for all the Karmas we do without any expectations. That can be attained in this Janma itself. – Sri Kanchi Maha Periyava

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
பெரியவாளின் அம்மா வீட்டில் எதிரொலிக்குது வேத கோஷம் ..!!!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!
ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.
ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.
பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’ என விரும்பினார் பெரியவாள்.
காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி, பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவரிடம் பெரியவா, ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொன்னதும், நெகிழ்ந்துவிட்டார் அவர்.
அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா, சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.
என்ன நினைத்தாரோ… சட்டென்று அன்பரிடம்”ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?” என்றவர், ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி, ”இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.
‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.
பிறகென்ன… அந்த வீடு, விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!
பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.
வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால், நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி, வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்!
அருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்று, அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால், ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

திருமணவரம் அருளும் மகான் சித்தமல்லி பூஜ்யஸ்ரீ சுப்ரமண்ய யதீந்திராள்

பூஜ்யஸ்ரீ சுப்ரமண்ய யதீந்திராள் சித்தமல்லி கிராமத்தில் 1866ம் ஆண்டு பெரிய தனவந்தரான கோதண்டராம ஐயர் என்பபவருக்கும் செங்கம்மாள் என்பவருக்கும் மகனாகப்பிறந்தார். இவர் இளம் வயதிலேயே சாஸ்த்திரம் மற்றும் வேதங்களைக் கற்று மிக பண்டிதராக விளங்கினார். மஹாமகோபாத் யாய மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் கல்விகற்றார்.
ஒருநாள் ராஜீ சாஸ்திரிகள் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது சரியாக கவனிக்காதால் குருவின் கோபத்திற்கு ஆளானார். ஆனால், அந்தபாடத்தை யும், வேதாந்தத்தையும் அதேநாளில் ஆற்றிய உரையின் மூலம் குருவின் அன்புக்கு பாத்திரமானார்.
மகாபெரியவாள் 1908 பட்டத்திற்கு வந்தவுடன் இவரும் ஒரு குருவாக இருந்து வேதங்கள் முதலியவற்றை அவருக்கு கற்றுத் தந்தார். மடத்தில் சிலகாலங்கள் தங்கி வரவு செலவு கணக்குகளை பார்த்தார். மடமானது மிக்க பணக் கஷ்டத்தில் இருந்தபோது தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

ஒரு சமயம் பெரியவாள் உபன்யாசம் செய்து கொண்டிருந்த பொழுது அவசர வேலையாள் இவரை தொடர சொல்ல இவரும் உபன்யாசத்தை தொடர்ந்து எல்லாருடைய பாராட்டுதல்களைப் பெற்றார். பெரியவா இவரை நடமாடும் நுõலகம் என்று ஒரு பட்டம் கொடுத்தார்.

அவருக்கு ஓலைச்சுவடிகள் படிக்கத்தெரியும். அவருக்கு இருந்த ஞாபகசக்தியால் அவர் ஏக "சங்ஹாக்ரஹி ' என்று அழைக்கப்பட்டார். அதாவது ஒரே நேரத்தில் படிக்கவும். எழுதவும் அதே வேகத்தில் வெளிப்படுத்தவும் உள்ள திறமை உள்ளவர் என்று அர்த்தம்.
ஒரு முறை மயிலாடுதுறை யில் யாத்திரை மேற்கொண்டிருந்த மகாபெரியவாள் அருகே உள்ள கிராமமான கோழிகுத்தியில் சரஸ்வதி அம்மாள் என்பவரது இல்லத்தில் தங்கி இருந்தபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஒரு நாள் திரண்டு இருந்த பக்தர் கூட்டத்தில் நடுவே உரை நிகழ்த்தினார் மகாபெரியவாள். தனது பேச்சில் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்த்திரிகளை வெகுவாகப் புகழ்ந்தார். பொதுவாக ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது. பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது.கல்வி பணம் இரண்டும் இருந்தால் அங்கே குழந்தை செல்வம் இருக்காது. இவை மூன்றும் ஒருசேர உள்ள வீட்டில் யாருக்கேனும் உடல்நலக்கோளாறு இருக்கும். ஒருவேளை இவை நான்கும் சுபமாக <உள்ள வீட்டில் நிம்மதி இருக்காது. இது பரவலாக நாம் பார்க்கக்கூடிய நிஜம். ஆனால், இதற்கு விதிவிலக்கானவர் சித்தமல்லி சுப்ரமண்ய சாஸ்த்திரிகள் பக்தி,பிடிப்பு,செல்வம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு என ஒருங்கே பெற்றவர். இவர். இது இறைவனின் அருள் இப்போது அவருடைய மகளின் கிரஹத்தில் தங்கிய படிதான் உரைநிகழ்த்திக் கொண்டிருக்கிறேன் என்றாராம்.
சுப்ரமண்ய சாஸ்திரிகள் மகாபெரியவாளைச்சந்தித்து எனக்கு ஆபத்சந்நியாசம் வழங்குங்கள் என்றாராம். இதையடுத்து சில நாட்களில் சுப்ரமண்ய சாஸ்திரிகளின் உடல்நிலை மோசமானது அப்போது காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இருந்து சாஸ்திரிகளுக்கு ஆபத்சந்நியாசம் வழங்குவதற்காக இரண்டு பண்டிதர்கள் சித்தமல்லி வந்தனர். ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டால் மூன்று நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கலாம். அவர் உடல் நிலைமோசமானது . அவருக்கு சந்நியாசம் கொடுக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் சாஸ்திரிகள் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது. மறுநாள் தர்மப்படி சாஸ்திரிகள் வேறு இடத்தில் தங்கவேண்டும். அதற்காக மடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. அங்கிருந்து அனைவருக்கும் ஆசி அளித்தவர் கிலோகணக்கில் கற்பூரத்தைக் கொண்டு வந்து ஏற்றச்சொன்னார். கற்பூரம் கொழுந்து விட்டு எரியும் போது சாஸ்திரிகள் சிரசில் இருந்து ஆத்மஜோதி புறப்பட்டு கற்பூரஜோதியுடன் இரண்டற கலந்து வானவெளியில் செல்வதைக்கண்டதாக சொல்வர்.
அதேநேரத்தில் காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மகாபெரியவாள் அதோ சுப்ரமண்ய சாஸ்திரிகள் மோட்சத்துக்கு போய்கொண்டிருக்கிறார் பாருங்கோ என்று உடன் இருந்த சிஸ்யர்கள் மற்றும் பக்தர்களிடம் வானத்தைக்காட்டிச் சொன்னாராம். இது நடந்தது 1933ம் ஆண்டில்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

கொஞ்சம் பழைய சம்பவம் இது..காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும்.
‘சதஸ்’ என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.
மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு
இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு
உணர முடியும். ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல்
பறக்கும் வாதங்கள்
பூதாகரமாகக் கிளம்புகின்ற சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார்.
பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.
இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது.
அதாவது படிப்பு விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற
அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே

ஆரம்பித்து வைத்திருந்தார்.
அது ஒரு வெள்ளிக்கிழமை….வழக்கம் போல பண்டிதர்கள் பலரும் காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து
கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும்
சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.
சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள்
வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள்,பண்டிதர்கள்
ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு
நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப் பெற்றுக் ண்டார்.முழு நூறு
ரூபாய் நோட்டை சம்பாவனையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம் தெரிந்தது. காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை
வாங்கியவன்- சிறு வயது பாலகன் ஒருவன். “அவனுக்கும் நூறு ரூபாய்….எனக்கும் நூறு ரூபாய்தானா?” என்கிற வாட்டம்தான் அது.

பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா? “என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.
தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல்
“சந்தோஷம் பெரியவா..நான் புறப்படுகிறேன்” என்று தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு
வெளியேறினார்.
உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா
அந்தப் பரப்பிரம்மம்.
“சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும் சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று” என்று ஓர் உயர் அதிகாரி மகானின் காதில் சென்று
பவ்யமாகச் சொன்னார். “சரி…தரிசனத்துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா” என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.
முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான
கனிகள்,புஷ்பங்கள்,கல்கண்டு முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை
வைத்து விட்டு குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில்
கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார். பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன பூக்கிள்ளலுடன்
திரும்பக் கொடுத்தார்.

உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக்
கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, “பெரியவா……..ஒரு விண்ணப்பம்…” என்று இழுத்தார் வக்கீல்
“சித்த இருங்கோ…” என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.
அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான். “சின்னக்
காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்…..நீதான் பார்த்திருப்பியே..அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம்
பஸ் ஸ்டாண்டுல பாரு..பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா” என்றார்.
உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன்.மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,
பெரியவா சொன்னபடி கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது. நடத்துனர்
டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான்.ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த
ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார்.
அவர் அருகே போய், “பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார்” என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார்
ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், “அம்பீ…..முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது
காசு வீணாகிப் பொயிடுமேடா” என்றார்.
சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, “அது என்னமோ தெரியல.. உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை
என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ..கையோட உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்” என்று அடமாகிப் பேசிக்
கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே “ஐயரே [ஐயங்காரே]… அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது
காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும்.
போய்ப் பாரேன்.
அவனவன் தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?” என்று சிடுசிடுவென்று சொல்ல….வேஷ்டியில் சுருட்டு வைத்திருந்த
கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார்
ஐயங்கார் ஸ்வாமிகள்.

மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான்
சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. உள்ளே நிழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து
விட்டார், ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.
“என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீராக்கும்?” என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது ஐய்யங்கார்
ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களை
ச்சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.
சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென “பெரியவா…ஒரு விண்ணப்பம்..” என்று முன்பு ஆரம்பித்த
மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.
“சித்த இருங்கோ…உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்..” என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு “வக்கீல் சார் இவரோட
அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ” என்றார் காஞ்சி மகான்.
இவருடைய அட்ரஸை நான் ஏன் குரித்துக் கொள்ள வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம் இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச்
சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கோன்டார் வக்கீல்.
“நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே…அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து.அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட்
வாங்கிடுங்கோ” என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.
ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். “முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்?” என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும்,
எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்? யார் அவர்?
அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய மாட்டேங்குதே?” என்று குழம்பி தவித்தபடி மடத்தை விட்டு
வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.
பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக் காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது. விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல்
ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம் போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.
சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக் குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார் காஞ்சி ஸ்வாமிகள்.



விஷயத்துக்கு வருவோம். சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட
சென்னை வக்கீல், “பெரியவா…ஒரு விண்ணப்பம்……நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை ஆரம்பிச்சுட்டேன் …” என்று தொய்வான குரலில் இழுத்தார்.
“உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே.”
“இல்லே பெரியவா…என்னோட விண்ணப்பத்தை நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே…”.என்று தயங்கினார் வக்கீல்.
“உன்னோட விண்ணப்பம் என்ன…. கஷ்டப்படற- வேதம் படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம் அனுப்பணும்னு ஆசைப்படறே…அதானே?” என்று
புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம்.
வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை.”ஆமாமாம் பெரியவா….அதேதான்…அதேதான்!”
இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்….நீ தேடற ஆள் அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக் கூட்டிண்டு
வந்துட்டானே அந்தப் பொடியன்? இப்ப என்ன பண்றே…”-பெரியவா இடைவெளி விட்டார்.
“பெரியவா சொல்லணும்…நான் கேட்டுக்கணும்….”- வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர் பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. ஏன்னா நாலு மாசம்
வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா, ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, “சும்மா
மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா”னு சொல்லித் தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன் காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அவ்ளோதான்.”
“பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிடறேன்” என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில்
விழுந்து வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி
அடைந்தார் அந்த மகான்


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
பெரியவாளின் அற்புத விளக்கம்"‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’

கவிராயரின் ஸ்ரீரங்கநாதப் பாடல்

அதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.

முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.

எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.

(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)

அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா? அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.

‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’

என்று முதல் கேள்வி.

‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’

அதுதான் பல்லவி.

அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த

இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)

‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.

உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.

காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.

அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?

கோசிகன் சொல் குறித்ததற்கோ?

கோசிகன் என்பது குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு ஏற்பட்ட பெயர். ராமர் அவதார காரியமாக முதல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.

அப்போது பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’ – சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.

தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?

“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’

அந்தச் சொல்லை இவர் ‘குறித்தது’, அதாவது consider பண்ணியது, பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண்டாயோ?” என்று அடுத்த கேள்வி:

அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?

வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.

ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹாஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!

பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால்,

ஈசன் வில்லை முறித்ததற்கோ?

என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார். ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்திற்குப் போனார். போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்.

அதுவும் இல்லையென்றால்,

பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

அப்புறம் பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர் – வந்தார். ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதை நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டாவிட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார்.

அவருடைய சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.

‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்றால்:

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கிவிடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.

இன்னும் ஒரு காரணம் – கேள்வி:

மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்

வழிநடந்த இளைப்போ?

’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’

‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.

இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாகக் கேட்கிறார்.

தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத்

துறை கடந்த இளைப்போ?

‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்ததென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா?

மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின்

மிசை கிடந்த இளைப்போ?

’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’

காசினி மேல் மாரீசன் ஓடிய

கதி தொடர்ந்த இளைப்போ?

’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக்கணும். அப்படிப்பட்ட ‘காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’

அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!

‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை,

ஓடிக் களைத்தோ?

என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார்.

தேவியைத் தேடி இளைத்தோ?

’அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’

மரங்கள் ஏழும் தொளைத்தோ?

’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’

கடலைக் கட்டி வளைத்தோ?

”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”

அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.

இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமானபடியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத்தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம்ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையேதான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….

லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.

அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர்களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.

பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Periyava Radio

Periyava Radio launched, playing Maha Periyavaa doctrined topics 24 X 7, including HIS own Periyava Kural
1. Desktop users can visit below website and start tuning in..
http://periyavaradio.net
2. Android App -- search for "Kanchi Sankara", install and go to Periyava Radio Section
https://play.google.com/store/apps/details
3. iOS App to be published shortly
4. Alternately you can install TuneIn (http://www.tunein.com) and search “Periyava” and you can listen.
More details can be found at http://periyavaradio.net/
Thanks in advance!
Schedule of Playlists
Time (IST) Category
6:00 AM to 6:30 AM Suprabhatham (by day of week)
6:30 AM to 6:45 AM Aditya Hrudayam
6:45 AM to 7:30 AM Ganapathi Atharvasheeresham and other Vedic Chanting
7:30 AM to 8:00 AM Morning Stotra Seva
8:00 AM to 9:00 AM Periyavaa Kural (Our Master's Voice)
9:00 AM to 10:00 AM Ganesa Sarma Upanyasam
10:00 AM to 11:00 AM Devotee Experience
11:00 AM to 12:00 PM Thevaram/Thiruvasagam
12:00 PM to 1:00 PM Indra Soundararajan speeches
1:00 PM to 3:00 PM Guru Bhajans
3:00 PM to 4:00 PM Periyavaa Mahimai
4:00 PM to 5:00 PM Devotee Experience
5:00 PM to 6:00 PM Pradosha Kaala Seva
6:00 PM to 6:30 PM Sahasranama Seva (by day of week)
6:30 PM to 7:00 PM Evening Stotra Seva
7:00 PM to 8:30 PM Veda Dharma Sastra Paripalana Sabha Lectures

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Today, January 8th, is the Mukthi day of Sri Maha Periva as per the English Roman Calendar.Here is a Daily sheet calendar of Periva Siddhi day, carefully preserved by a devotee. And, as we are aware, this clock stopped when Jagathguru Sri Maha Periva left His mortal frame. The time is 2.57pm on Jan 8th 1994.

Read at: http://periva.proboards.com/…/mukthi-ma ... glish-roma

புழுதியில் எட்ட கிடந்த வேங்கடவன் என்னை
கிட்ட வந்து கை தூக்கி விட்டவன்!
இவன் யாரோ என்று எண்ணாமலே!
அண்டாதவர்க்கும் அருளும்
மனமுடையான்! கருணையே வடிவானவன்!
சாந்தி அளிக்கும் எழிலுடை சிவகுரு!
காற்றும்,கனலும்,புனலும்,மண்ணும்,வெளியும்
அகிலம் நேசிக்கும் அவனேயன்றோ!
கருணை பொங்கும் அவன் விழிகளை
காணாத கண்களும் கண்களோ!
கொஞ்சும் அவன் மொழியை
கேளா செவிகளும் செவிகளோ
உதடுகளில் தவிழும் புன்னகையில்
மயங்காத மனமும் உண்டோ!
நடமாடிதிரிந்த செங்கமல பாதங்களை
துதிக்காத வாழ்க்கையும் வீணே!
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Namaste
With Sri Periyava’s anugraham here are our latest updates to Sri Adi Shankara Stutis- YOUTUBE channel
Maha Periyava Upanyasam- Iswaryam Indu Maule- Audio with English subtitles
and
Maha Periyava Upanyasam- Iswaryam Indu Maule- Audio with English Transliteration

We hope to reach a wider audience of Maha Periyava devotees who don’t read/understand Tamil, but will enjoy and benefit from His upanyasams. Feedback and suggestions for this project is very valuable and we seek your help in spreading the word around. Please share the link

https://www.youtube.com/channel/UCPiV-Z ... SYnnYWICkg with family, friends, local Anusham groups and all other Periyava devotees. Comments & suggestions can be sent to mahaperiyava101@gmail.com.

ஸ்ரீ மஹா பெரியவா ஶரணம்
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

MahaPeriyava
A share

Experience of Villu Paattu Vidwan Sri Subbu Arumugam

வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது, பெரியவாள் திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானம், சேர நாடு என்றெல்லாம் ஆரம்பிக்காமல், ‘பரசுராம க்ஷேத்திரம்’னு ஆரம்பிக்கச் சொன்னதைப் பற்றி ஏற்கெனவே சொன்னேன்.
ஆனால் எனக்கு காலடியில் பிறந்த ஆதிசங்கரர்தான் காஞ்சியின் பீடாதிபதியான மஹா பெரியவாள்; அவருக்குரிய அனைத்து சீலமும், சிறப்பும் இவருக்கும் உண்டு. இருவருக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் என் கண்களுக்கோ, மனசுக்கோ புலப்படவில்லை. ஆகையினாலே, பெரியவாளிடமிருந்து உத்தரவு வந்ததும், ‘காலடி முதல் காஞ்சி வரை’ என்பது தான் அந்த வில்லுப்பாட்டுக் கதையின் தலைப்பு என்று என் மனத்துக்குள் தோன்றியது.
காஞ்சிபுரத்தையடுத்த பங்காருப்பேட்டையில்தான், ‘காலடி முதல் காஞ்சி வரை’ கதையை வில்லுப்பாட்டில் அரங்கேற்றம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பங்காருப்பேட்டைக்குப் போய் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பாக, மடத்துக்குப் போய், பெரியவாளை தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெறுவதே திட்டம். மடத்துக்குச் சென்று பெரியவாள் தரிசனத்தின்போது, சுப்பு ஆறுமுகம் வந்திருக்கார். பங்காருப்பேட்டையில இன்னிக்கு அவரோட காலடி முதல் காஞ்சி வரை வில்லுப்பாட்டு முதல் புரோகிராம்” என்று பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும், இங்கேயே சொல்லேன்; நானும் கேட்கிறேன்” என்றார். சற்றும் எதிர்பாராத இந்த வார்த்தைகளால் நான் திகைத்துப் போனேன். கதை சொல்லும் வில்லும், இதர வாத்தியங்களும் கூட காரில்தான் இருந்தன. அவசரம் அவசரமாக ஓடி, அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, பெரியவாள் முன்னிலையில் அமர்ந்து கதை சொல்வதற்குத் தயாரானோம்.
மனத்தின் ஒரு மூலையில், ‘பங்காருப்பேட்டையில் எல்லோரும் கதை கேட்கக் காத்துக் கொண்டிருப்பார்களே!’ என்ற நினைப்பும் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கச் சொல்லி, பெரியவாள் கையசைத்தார். பரசுராம க்ஷேத்திரத்திலிருந்து கதையை ஆரம்பித்தேன். எனக்குத்தான் அவர் (ஆதிசங்கரர்) தான் இவர்; இவர் (மஹா பெரியவாள்) தான் அவர் ஆயிற்றே! காலடிக்கும், காஞ்சிக்குமாக மாறி, மாறி இருவரது திவ்ய சரிதத்தையும் கலந்து சொல்லத் தொடங்கினேன்.
ஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில்
வந்ததுவோ!ஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ!
காமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட
ஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட
காமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச் சொல்லினளோ!
கலகல சிரிப்பினில் அன்னை கானமழை பொழிந்தனளோ!
உதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ!
காத்திருக்கும் நாளை அல்லோ காமகோடி பீடமல்லோ!
அனுஷம் நட்சத்திரமோ! அவதாரம் சரித்திரமோ!
ஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும் ஒன்றோ!
ஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ!
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!
தட்சிணா மூர்த்தியோ! சனாதனக் கீர்த்தியோ!
தருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ!
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!”
இப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்) தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன். இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி தூங்கப் பண்ணிட்டியே! ” என்று சொல்லிச் சிரித்தார்.
பெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,
நடித்தாரே!
நாடகம் தனில் அவர்
நடித்தாரே!
உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!
என்று பல்லவியும், சரணமாக
கடவுள் கொடுத்தது மானிட வேடம்!
கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!
இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!
எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!
(நடித்தார்)
என்று சொன்னேன். உடனே மஹா பெரியவா, “இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” என்று கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சொன்னேன்.
மேற்கண்ட வரிகளில் சொல்லப்பட்ட விஷயம் எல்லா பக்தர்களுக்கும் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, மாணவன் சுவாமிநாதன் மஹா புத்திசாலி. ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக் கூடத்துக்குப் பள்ளிக்கூட உதவி ஆய்வாளர் வருகை புரிந்தபோது, உயர் வகுப்பு மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னபோது, அபாரமாகப் படித்துக் காட்டிய சுவாமிநாதனது திறமையைப் பார்த்து, வியந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் சுவாமிநாதனுக்கு டபுள் புரமோஷன் வழங்கப்பட்டது.
பத்து வயதில், திண்டிவனத்தில், கான்வென்ட் பள்ளியில் ஃபோர்த் ஃபாரம் படித்துக் கொண்டிருந்தபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய ‘கிங் ஜான்’ நாடகத்தை பள்ளிக்கூடத்தில் நடத்த ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடகத்தின் முக்கியமான ஆர்தர் இளவரசர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான மாணவன் என்று பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்.
இரண்டே நாள் ஒத்திகையில், தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, ஆர்தர் இளவரசராக அற்புதமாக ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களைப் பேசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவர் மஹா பெரியவா.
இதைத்தான் நான் வில்லுப்பாட்டில் சொல்லும் போது நடித்தார்.. நாடகம்தனில் அவர் நடித்தார்!… உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தார்! கடவுள் கொடுத்தது மானிட வேடம்! கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்” என்று சொன்னேன்.
இதில் விசேஷம் என்னவென்றால், மானிட வேடம், கிங் ஜான் வேடம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் ரசித்து, எங்க! அதை இன்னொருதரம் சொல்லு” என்று கேட்டார். சந்தோஷமாக அந்த வரிகளைப் பாடிக் காட்டினேன்.
இந்த வரிகள் எந்த அளவுக்குப் பரவலாக ரசிக்கப் பட்டது என்பதற்கு இன்னொரு பெருமைமிகு உதாரணம், ஒருமுறை எம்.எஸ். அம்மாவை சந்தித்த சமயத்தில், அவர் ஒரு குழந்தையைப் போல, நீங்க பெரியவா கதைய வில்லுப்பாட்டுல சொன்னபோது, ஒரு பாட்டை ரெண்டு தடவை சொல்லச்சொல்லி கேட்டாளாமே? அதைச் சொல்லுங்க” என்று கேட்க, ‘இதுவும் அந்த மஹா பெரியவாளோட அனுக்கிரஹம்’ என்று சந்தோஷப்பட்டு, அந்தப் பாட்டை நான் சொன்னேன். அவர் கண் களை மூடி, கரகோஷம் செய்து, இந்தப் பாட்டைக் கேட்கிறவா நிச்சயம் உருகித்தான் போயிடுவா!” என்று சொன்னதோடு, பெரியவா பாதத்த கெட்டியா பிடிச்சுண்டிருக்கேள்! அவரோட அனுக்கிரஹத்துல அமோகமா இருக்கணும்!” என்று வாழ்த்தினார்.
இதற்குள், பங்காருப்பேட்டையில் கதை கேட்பதற்குத் திரளான கூட்டம். நான், மடத்தில் பெரியவா முன்னால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும், அங்கே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள், அறிவித்தபடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை, ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கில்லை. சுப்பு ஆறுமுகத்துக்கு மடத்தில் கதை சொல்லச் சொல்லி உத்தரவாகி இருக்கு. அதை முடித்துவிட்டு, அவர் இங்கே வருவார். அவர் வந்த பிறகு வில்லுப் பாட்டு புரோகிராம் ஆரம்பமாகும்” என்று அறிவித்து விட்டார்கள்.
மடத்தில் கதை சொல்லி முடித்துவிட்டு, நான் பக்திப் பிரவாகத்தில் பெரியவாளைப் பற்றி திருப்புகழ் சந்தத்தில் ஒரு ஆசுகவி பாட, ஆறுமுகம், என்னை ஆறுமுகம்னு பாடறானே!” என்று சொல்லி ஆசீர்வதித்ததை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.
(அருள் பொழியும்)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ்ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரில எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது.
வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார்.
அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா.
இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் .
பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. இப்படியே பண்ணிண்டு இருக்கா.
சதஸ் முடிஞ்சது. அவாளை கூப்டு அப்டின்னா.
அந்த அம்மா வந்தா. பெரியவா அவ கிட்டே சொன்னா. “நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.”
நிறைய சந்தோஷங்களை தெரிவித்த பின் மேலும் தொடர்ந்தார் பிரபு.
“ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு.” நான் எப்பேர்ப்பட்டவன்?
இவர் இப்படி கேட்டவுடன் அந்த அம்மா சொன்னாள்.
“ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.”
ஹாங் ஹாங் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா.
“இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு” என்றார்.
அந்த அம்மா சொன்னார்.
“நீ நூறு வயசு இருப்பே, போ என்றாள்” அவள், ஆசிர்வாதம் செய்வது போல
தொடர்ந்தாள் அவள்,
“நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.”
இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும். பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா.
இதை முக்கூர் டைரில எழுதி இருக்கார்.
ஆச்சிரியம். நடந்தது என்ன?
1994 ஜனவரி 8 சித்தி ஆனா, பெரியவா. மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.
அந்த பதிவிரதை சொன்னது என்ன?
நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே – நாலு அனுஷம் நக்ஷத்ரம் கொறஞ்சுது.
ஜனவரி 8, அனுஷம், அன்னியோட அவதார பூர்த்தி.
அப்புறம் தான் தோணித்து.
இன்னும் ஒரு நாலு மாசம் இருந்திருக்கக் கூடாதா, நூறு வயசு பூர்த்தி. செஞ்சுரி போட்டிருக்கலாமே?
பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?
பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!
ஆச்சிரியம். பெரியவா சரித்ரம் தோண்டத் தோண்ட இப்படி பல விஷயங்கள்..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
"அருகம்புல் மாலை"

(நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.)

ஒரு பக்தையின் அனுபவம்…

நன்றி-பால ஹனுமான்.
-
நானும் என் மைத்துனர் பெண் ஜானாவும் அடிக்கடி காஞ்சி சென்று பெரியவளை தரிசனம் செய்வோம். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி வெவ்வேறு காணிக்கைகளை சமர்பிப்போம்.

ஒரு சமயம் நாங்கள் காஞ்சிபுரம் போக நினைத்தபோது ” இந்த முறை பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலை கொண்டு போகலாம்” என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் மாதிரி அமைத்து பெரியதாக அருகம்புல் மாலை மிக அழகாகத் தயாரித்துக் கொண்டு போனோம்.

அடுத்த நாள் காலை ஸ்ரீ மடத்திற்குப் போகும்போது எட்டு மணி ஆகிவிட்டது. பெரியவா எல்லோருடனும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் கொண்டு போன மாலைப் பொட்டலத்தையும் கல்கண்டுப் பொட்டலத்தையும் எதிரில் வைத்து விட்டோம். பெரியவா அதை எடுத்து ஓரமாகக் தள்ளி வைத்து விட்டார். அதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்கவில்லை. நாங்களும் நின்றபடியே தரிசனம் செய்து கொண்டிருந்தோம்.

சுமார் பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் கையில் ஒரு பிள்ளையார் வெள்ளிக் கவசம் நல்ல வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. பெரியவா உத்தரவுப்படி அவர்கள் ஊர் கோவிலில் பிள்ளையாருக்கு வெள்ளிக் கவசம் செய்து அதை பெரியவா அனுக்ரஹத்திற்காக எடுத்து வந்திருக்கிறார், அந்த பெண்மணி. பெரியவா அந்தக் கவசத்தை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் ” அதை எடு ” – என்று கையைக் காட்டினார்.

ஓரமாக இருந்த அருகம்புல் மாலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொடுத்தார், அவர். ‘பொட்டலத்தில் என்ன இருக்கிறது ?‘ என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார் ?

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்குச் சாற்றினார். அளவெடுத்தது போல் மாலை அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தன் மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலு பக்கமும் திரும்பி திரும்பி தரிசனம் கொடுத்தார்கள், பெரியவாள். நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம்.

கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார். அப்படியே அதை அப்பெண்மணி கையில் கொடுக்கச் சொன்னார் பெரியவர்கள்.

நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

சித்திரை பிறந்தது..!!
வசந்தத்தை நினைவூட்டும்
பூத்து குலுங்கும் செடி கொடிகளும்
மலர்ந்த தாமரையும்
கரையும் புள்ளினங்களின் இறைச்சலும்
பட்டாம் பூச்சிகளின் சிறகசைப்பும்
வேங்கடவன் என் நெஞ்சத்தை நிறைத்தது!
பேரானந்தம் பெற்றானை
சீரளிக்க வல்லானை
தீவினைகள் தீர்பானை
தத்வமறியாமல் நிம்மதியை
அங்கும் இங்கும் ஓடி தேடி திரியாமல்
உன்னுள் தேடினால்
தன்னுள் உன்னை காட்டி அருள்வான்!
இதயம் கசிந்துருகி துர்முகி வருட நன்நாளில்
சேவிக்க வேண்டும் என் ஐயனை! venkat k

collage courtesy: balhanuman.wordpress.com
Venkata Kailasam's photo.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸங்கீதமும் ஸ்த்ரீகளும்

மாதுர்யம் என்றதும் ஸங்கீதம் நினைவுக்கு வருகிறது. ஸங்கீதம் உத்தமமான கலை. பகவத் ஸந்நிதியிலேயே ‘ஈஸி’ யாகக் கொண்டு நிறுத்துகிற கலை. நன்றாக் இசையமைத்துப் பாடும்படி மஹான்கள் நிறைய நிறைய நம் தேசத்தில் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏராளமான ஸாஹித்யகர்த்தாக்களும் சிக்ஷை சொல்லிக் கொள்ள வசதியாக முறைப்படி ராகம், தாளம், அமைத்துக் கீர்த்தனங்கள் பாடியிருக்கிறார்கள். ஸ்த்ரீகளுக்குத்தான் இயற்கையாகவே இனிமையான குரல் இருக்கும்படியாக அம்பாள் ப்ரஸாதித்திருக்கிறாள். அதனால் அவர்கள் ஒழிந்த பொழுதில் ஸங்கீதம் அப்பஸிக்கலாம். ஸபா, ஸம்மானம், புகழ் -ஆகியவற்றுக்காக இல்லை. அதெல்லாம் போட்டியிலும், அஹம்பாவத்திலும், ஸ்த்ரீகளுக்கு வேண்டாத வெளி வியாபகத்திலும் இழுத்து விடலாம். ஆகையால் அதற்காக இல்லாமல் ஆத்ம ஸந்துஷ்டிக்காகவும் பகவத் ப்ரீதிக்காகவும் பெண்களை ஸங்கீத அப்யாஸம் பண்ணச் சொல்கிறேன். நம் அகத்திலே ஒரு சுபகார்யம், நவராத்ரி, மற்ற பண்டிகை என்றால் கூடியிருக்கிறவர்களுக்கு ஸந்தோஷம், பகவான் நினைவு இரண்டையும் அளிப்பதாகப் பெண்கள் பாடலாம். ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால், அதிலே வேடிக்கையும் இருக்க வேண்டுமாகையால், கேலிப் பாட்டுகள் கூடப் பாடலாம். வாழ்க்கையில் இதெல்லாமும் அதனதன் அளவுக்கு உட்பட்டு வேண்டியதுதான். இல்லாவிட்டால் உப்புச் சப்பே இருக்காது; ஒரே உம்மணாமூஞ்சியாகிவிடும். வீணா வாத்யம் அம்பாளுக்கு ரொம்பவும் ப்ரீதி, அவளுடைய ஸ்வரூபமாகவே மதிக்கப்டும் ஸ்த்ரீ பிரஜைகள் வீணை கற்றுக் கொள்ளலாம். ப்ரதி சுக்ர வாரமும் ஸாயரக்ஷையில் அம்பாளுக்கு வீணாகானம் ஸமர்ப்பணம் செய்யலாம். கோவிலுக்குப் போய் அப்படிப் பண்ணலாம். ஆனால் அங்கே இதேமாதிரி இன்னும் பல பேரும் வந்தால் போட்டி ஏற்படும். அகத்திலேயே, அம்பாள் பிம்பமோ யந்த்ரமோ படமோ இருக்குமே, அதற்கெதிரில் ஒரு கால்மணி-அரைமணி வீணை வாசிக்கலாம். வாயால் பாடிக்கொண்டே வாசிக்கலாம். ஒரளவுக்கு மனஸ் குவிந்து கானம் பண்ணினாலும் போதும், அதில் கிடைக்கிற விச்ராந்தி தெரியும்.

அகத்தோடு இருந்துகொண்டு பெண்கள் இப்படிக் கலைகளை வ்ருத்தி செய்வது ரொம்பவும் நல்லது. அவர்களுடைய ‘நேச்ச’ருக்கு ஏற்றது. பகல் பொழுதை உழைப்புக்கும் கலைகளுக்குமே அவர்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும். உழைக்கிற ‘ஸ்பிரி’ட்டோடு உழைத்தால் அதுவே ஒரு கலைதான்! ‘நம் அகத்துக்காக, நம் மநுஷ்யர்களுக்காகவாக்கும் செய்கிறோம்?’ என்கிற உணர்ச்சியே உழைப்பில் ஒரு உத்ஸாஹத்தை ஊட்டி, அதையும் ஒரு கலையாக்கிவிடும்.

இதுவரை நான் சொன்ன மாதிரியெல்லாம் ஸ்த்ரீகள் இருந்தால், வீட்டோடு இருப்பதில் பொழுது போகவில்லை என்றில்லாமல் பொழுது போதவில்லை என்றே ஆகிவிடும்!

ஸ்த்ரீகள், உத்யோகத்துக்குப் போகாமல் நாள் முழுதும் நல்ல பொழுதாகக் கழிப்பதற்கு எனக்குத் தெரிந்த (this is the trademark of Periyava!!) யோஜனையைச் சொன்னேன். நல்ல பொழுது என்பது அவர்களுடைய உடம்பை உறுதி பண்ண உதவி பண்ணுவதோடு மனஸைப் பெண்மை என்பதன் மாதுர்யத்தில் குழைக்கவும் உபகாரம் பண்ணவேண்டும் என்ற அபிப்ராயத்தில் சொன்னேன்.

எல்லா தர்மங்களுக்கும் ஆணிவேர் பெண்கள்தான்

எப்படியாவது ஸ்த்ரீத்வம் – பெண்மை – என்பதற்கு லக்ஷணமாக இத்தனை ஆயிரம் வருஷங்கள் இருந்து வந்திருக்கிற உத்தம குணங்களையும், உசந்த வாழ்க்கை முறையையும் செத்தே போய் விடாமல் முடிந்த மட்டும் ஆக்ஸிஜனைப் ‘பம்ப்’ பண்ணி ரக்ஷித்துத் தந்தாக வேண்டும். அதுதான் இன்றைக்குத் தலையான கார்யம். ஏனென்றால் ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: – ‘எல்லா தர்மங்களுக்கும் பெண்டுகளே ஆணிவேர்’ – என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அவர்கள் வீணாகப் போனால் லோகமே போனது போனதுதான். புருஷ ஜாதி வீணாய்ப் போனால் அவ்வளவு ஹானியில்லை. ஸ்த்ரீ ஜாதியின் தார்மிக பலம் அவனைக் காப்பாற்றி எழுப்பிவிடும். அவள் விழுந்தால்தான் ஸமுதாயத்துக்கே வீழ்ச்சி. “ஸ்த்ரீகள் கெட்டுப் போனால் எல்லாமே போய்விடுமே?” என்றுதான் அர்ஜுனனும் கீதாரம்பத்தில் (கீதை ஆரம்பத்தில்) அழுகிறான்.

ஸ்த்ரீக்கு ஸ்த்ரீத்வம் இருக்கவேண்டும், பெண் பெண்ணாக இருக்கவேண்டும் என்பதற்கு இத்தனை சொல்லி முட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதை என்ன சொல்கிறது? ‘காலத்தின் கோலம்’ என்கிறார்களே, அப்படிக் கலி புருஷன் எல்லார் மனஸிலும் புயலாகப் புகுந்து பண்ணுகிற வெறிக் கூத்தால்தான் இப்படி ஏற்பட்டிருக்கிறது.

போகப் போக விளைவு விபரீதமாகும்

போட்டிக்கு இடமே இல்லாத இடத்தில் போட்டி ஏற்பட்டு ஆணுக்குப் பெண் சளைப்பதா என்று ஏற்பட்டு, அதில் ஒரு பெரிய vicious circle -ஆக (விஷக் கூட்டமாக) ஒன்றைத் தொட்டுக்கொண்டு ஒன்றாகத் தப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

ஸ்த்ரீத்வத்தை விட்டுப் பெளருஷத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமலே, பொருளாதார உயர்வுக்காக என்று தப்பாக நினைத்துக்கொண்டு ஒரு பெண் வேலைக்குப் போனாலுங்கூட அதன் தொடர்ச்சியாக அந்த ‘அட்மாஸ்ஃபிய’ரில் அவளுக்குத் தன்னையறியாமல் பெளருஷ அம்சங்கள் வந்து சேர ஆரம்பித்துவிடும். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய ஸ்த்ரீத்வம் மேலும் மேலும் மரத்துக் கொண்டே போய், அந்த அளவுக்குப் பெளருஷமும் கூடிக் கொண்டே போகும். அதனால் ப்ரக்ருதி தர்மத்தின் ப்ரதம விதியாகப் பெளருஷ வன்மைக்கு மாற்றாக ஸ்த்ரீத்வ மென்மை லோகவாழ்க்கையை ஸமன் செய்து அழகு படுத்தவேண்டும் என்று இருப்பது சிதிலப்பட ஆரம்பிக்கும். இன்றைய அடங்காப்பிடாரி லோகத்துக்கு அத்யாவச்ய மருந்தான அடக்கம் என்பது ஸ்த்ரீகளை விட்டுப் போக ஆரம்பித்துவிடும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் அவர்களுக்கும் தாட்பூட் வந்துவிடும்.

இதன் விபரீதம் ஆரம்ப காலத்தில் தெரியாமல் எல்லாம் நல்லதாகவே ஓரு ஸமதர்மப் புரட்சி நடந்ததாகத் தோன்றலாமானாலும் போகப் போக இப்படி ஸ்த்ரீ-புருஷாள் அடங்கிய முழு ஸமூஹமுமே அடங்காமைக் கோலம் கொண்டால் லோகமே க்ரூர ம்ருகங்களோ அல்லது அஸுர ஜாதிகளோ ஒருத்தருக்கொருத்தர் சண்டை பிடித்துக் கொள்வது போன்ற நித்ய நரகமாகிவிடும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Periyava

My experience with an Uber driver today

எப்போதும் போல இன்றைக்கும் uber taxi யில் வரும்போது பேச்சு கொடுத்துகொண்டே வந்தேன். அரசியலில் நடக்கும் அநியாயங்கள், பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடக்கும் மத மாற்றங்கள் , அதனால் ஏற்படும் திசை மாறல்கள் இதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டே வரும்போது நான் கூறினேன் "இன்றைய கால கட்டத்தில் சாய்பாபா, மஹா பெரியவர் போன்ற மகான்கள் திரும்பவும் பிறந்தால் தான் நமக்கு விடிவு காலம் "என்ற ரீதியில் பேச்சு திரும்பிகொண்டிருந்தது . பாபாவை பற்றி தெரிந்து இருக்கலாமே தவிர மஹா பெரியவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு எண்ணம் தோன்றியது. இனிமேல் நமது டிரைவர்

"மகா பெரியவாளா அவரை போன்ற தெய்வம் இனியும் பிறக்கவே முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானால் நினைத்துகொள்ளுங்கள். ஆனால் அவரை பற்றி நினைத்தாலோ பேசினாலோ எனக்கு மயிர் கூச்செரிகின்றது. நான் சென்னையில் சூளைமேடில் வசிக்கிறேன். எனக்கு ஒரு 10/12 வயது இருக்கும் . (அப்போது பெரியவாளுக்கு 93 வயதிருக்கும்) இதே ஏப்ரல் மாதம் ஒரு பகல் வேளை . மகா பெரியவர் ஒரு கூண்டு வண்டியை பிடித்துகொண்டு நடந்து காலில் பாதுகை கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ என்னென்னவோ அவரிடம் கொடுக்கிறார்கள். ஒருவர் ஒரு மூட்டை காசுகளை சமர்பிக்கின்றார். அதை அப்படியே எல்லாருக்கும் பிரித்து கொடுக்கிறார். பட்சணங்கள் சமர்பிக்கபடுகின்றன. அவைகளும் உடனேயே distribute செய்யபடுகிறது. நாங்களும் ஓடி ஓடி அவைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அப்போது சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த பட்ட பகலில் திடீரெண்டு ஒரு மேகம் மேலே கடக்கிறது. உடனே ஒரு மணி நேரம் விடாது மழை கொட்டி தீர்த்தது. இது எப்படி சார் , நம்பவே முடியவில்லை."

அடுத்து ஒரு நிகழ்ச்சி, அண்மையில் நடந்தது.
"சார், நான் ஒரு businessman . கிட்டத்தட்ட 60/70 லட்சங்கள் நஷ்டம் அடைந்து இருக்கிறேன், ஊர் முழுக்க கடன்கள், cheque bounce கேஸ் என்று மிகவும் தொல்லையில் இருந்தேன். அப்போது கால் டிரைவராக வேலை பார்த்து கொண்டிருந்தேன் (என்னுடைய 6/7 வண்டிகளை விற்றுவிட்டு திரும்பவும் வாழ்கை நடத்துவதற்காக இந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன்). அப்போது என்னுடன் ஒரு குடும்பம் காஞ்சிபுரம் வந்தது. வேறு வேலையாக வந்தவர்களை நான் மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு அழைத்து சென்றேன். நானும் மனமார வேண்டிக்கொண்டேன். "பெரியவா , நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு தாங்க முடிகிற அளவுக்கு என் கஷ்டங்களை குறையுங்கள் ". நீங்கள் நம்ப மாட்டீர்கள். அங்கிருந்து திரும்பிவந்தவுடன், என் நிலைமை மாறியது, என்னை தொந்திரவு செய்தவர்கள் எல்லாம் காணாமல் போயினர். நானும் மெல்ல மெல்ல கஷ்டப்பட்டு முக்கால் வாசி கடன்களை அடித்துவிட்டேன். இன்னும் ஒரு 6/7 மாதங்கள் கஷ்டப்பட்டால் எல்லா கடனையும் அடைத்துவிட்டு நிம்மதியாக என் குடும்பத்தை பார்த்துகொள்வேன். "

அதற்குள் நான் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டேன். எப்போதும் போல என்னுடைய பாட்டை பாடினேன் " பெரியவாளை எப்போதும் வணங்குங்கள். உங்களால் முடிந்து உதவியை எல்லா ஜீவராசிகளுக்கும் செய்யுங்கள் "என்று நன்றி கூறி விடை பெற்றேன்.


வேதப்பொருள் சொன்ன விழுமிய தெய்வம்

யஜுர்வேதத்தின் மத்ய மணி போல விளங்குவது ஸ்ரீருத்ரம். இதனுள் ஒரு மந்த்ரம்

शिवा रुद्रस्य भेषजी तया नो मृड जीवसे ॥
ஸி²வா ருத்³ரஸ்ய பே⁴ஷஜீ தயா நோ ம்ருʼட³ ஜீவஸே ||

என்று.

இதற்குப் பொருள் சொன்ன ஸாயணர் முதலியவர்கள் வேதத்திற்குப் பொருள் சொல்லும் வழியில் ஜீவஸே என்றால் வாழ்வதற்கு என்று நான்காம் வேற்றுமை. ம்ருட என்று ம்ருடய என்பதன் மருஉ. என்று பொருள் கூறி அனைவரும் பரமேச்வரனின் மங்களவடிவமான மருந்து நாங்கள் வாழ்வதற்காக எங்களை மகிழ்வடைய செய்யட்டும் என்று பொருள் கூறினர். ஆனால் நடமாடும் தெய்வம் சொன்ன பொருளைப் பாருங்கள்.

ம்ருட - ஹே சிவனே சிவா - அன்னை பராசக்தி ஜீவஸே - ஜீவஸி

என்று பதங்களின் பொருளை மாற்றி அன்னை பராசக்தி ருத்ரனுக்கு மருந்தாக இருக்கிறாள். தயா - அவளால் ஹே சிவனே நீ எங்களுக்காக வாழ்கிறாய்..

இந்தப் பொருளைக் கூறிவிட்டு, இதை மனத்தில் இறுத்தித்தான் பகவத்பாதர்களும் தவ ஜனனி தாடங்க மஹிமா என்றெல்லாம் ஸௌந்தர்ய லஹரியில் பாடியதாக வேறொரு பொருளைக் கூறியது நடமாடும் தெய்வம்.

வேதத்தை மூச்சுக்காற்றாகக் கொண்ட பரமேச்வரனைப் பற்றியது ருத்ரம், அவர் அவதாரமான பகவத்பாதர்கள் ஸௌந்தர்யலஹரியில் இப்படிப் பொருள் செய்தார். அதை மறுபடியும் அவதாரமெடுத்த தெய்வம் எல்லோருக்கும் கூறியது.

என்ன பாக்யம்...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Periyava

My experience with an Uber driver today

எப்போதும் போல இன்றைக்கும் uber taxi யில் வரும்போது பேச்சு கொடுத்துகொண்டே வந்தேன். அரசியலில் நடக்கும் அநியாயங்கள், பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடக்கும் மத மாற்றங்கள் , அதனால் ஏற்படும் திசை மாறல்கள் இதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டே வரும்போது நான் கூறினேன் "இன்றைய கால கட்டத்தில் சாய்பாபா, மஹா பெரியவர் போன்ற மகான்கள் திரும்பவும் பிறந்தால் தான் நமக்கு விடிவு காலம் "என்ற ரீதியில் பேச்சு திரும்பிகொண்டிருந்தது . பாபாவை பற்றி தெரிந்து இருக்கலாமே தவிர மஹா பெரியவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு எண்ணம் தோன்றியது. இனிமேல் நமது டிரைவர்

"மகா பெரியவாளா அவரை போன்ற தெய்வம் இனியும் பிறக்கவே முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானால் நினைத்துகொள்ளுங்கள். ஆனால் அவரை பற்றி நினைத்தாலோ பேசினாலோ எனக்கு மயிர் கூச்செரிகின்றது. நான் சென்னையில் சூளைமேடில் வசிக்கிறேன். எனக்கு ஒரு 10/12 வயது இருக்கும் . (அப்போது பெரியவாளுக்கு 93 வயதிருக்கும்) இதே ஏப்ரல் மாதம் ஒரு பகல் வேளை . மகா பெரியவர் ஒரு கூண்டு வண்டியை பிடித்துகொண்டு நடந்து காலில் பாதுகை கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ என்னென்னவோ அவரிடம் கொடுக்கிறார்கள். ஒருவர் ஒரு மூட்டை காசுகளை சமர்பிக்கின்றார். அதை அப்படியே எல்லாருக்கும் பிரித்து கொடுக்கிறார். பட்சணங்கள் சமர்பிக்கபடுகின்றன. அவைகளும் உடனேயே distribute செய்யபடுகிறது. நாங்களும் ஓடி ஓடி அவைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அப்போது சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த பட்ட பகலில் திடீரெண்டு ஒரு மேகம் மேலே கடக்கிறது. உடனே ஒரு மணி நேரம் விடாது மழை கொட்டி தீர்த்தது. இது எப்படி சார் , நம்பவே முடியவில்லை."

அடுத்து ஒரு நிகழ்ச்சி, அண்மையில் நடந்தது.
"சார், நான் ஒரு businessman . கிட்டத்தட்ட 60/70 லட்சங்கள் நஷ்டம் அடைந்து இருக்கிறேன், ஊர் முழுக்க கடன்கள், cheque bounce கேஸ் என்று மிகவும் தொல்லையில் இருந்தேன். அப்போது கால் டிரைவராக வேலை பார்த்து கொண்டிருந்தேன் (என்னுடைய 6/7 வண்டிகளை விற்றுவிட்டு திரும்பவும் வாழ்கை நடத்துவதற்காக இந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன்). அப்போது என்னுடன் ஒரு குடும்பம் காஞ்சிபுரம் வந்தது. வேறு வேலையாக வந்தவர்களை நான் மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு அழைத்து சென்றேன். நானும் மனமார வேண்டிக்கொண்டேன். "பெரியவா , நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு தாங்க முடிகிற அளவுக்கு என் கஷ்டங்களை குறையுங்கள் ". நீங்கள் நம்ப மாட்டீர்கள். அங்கிருந்து திரும்பிவந்தவுடன், என் நிலைமை மாறியது, என்னை தொந்திரவு செய்தவர்கள் எல்லாம் காணாமல் போயினர். நானும் மெல்ல மெல்ல கஷ்டப்பட்டு முக்கால் வாசி கடன்களை அடித்துவிட்டேன். இன்னும் ஒரு 6/7 மாதங்கள் கஷ்டப்பட்டால் எல்லா கடனையும் அடைத்துவிட்டு நிம்மதியாக என் குடும்பத்தை பார்த்துகொள்வேன். "

அதற்குள் நான் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டேன். எப்போதும் போல என்னுடைய பாட்டை பாடினேன் " பெரியவாளை எப்போதும் வணங்குங்கள். உங்களால் முடிந்து உதவியை எல்லா ஜீவராசிகளுக்கும் செய்யுங்கள் "என்று நன்றி கூறி விடை பெற்றேன்.


வேதப்பொருள் சொன்ன விழுமிய தெய்வம்

யஜுர்வேதத்தின் மத்ய மணி போல விளங்குவது ஸ்ரீருத்ரம். இதனுள் ஒரு மந்த்ரம்

शिवा रुद्रस्य भेषजी तया नो मृड जीवसे ॥
ஸி²வா ருத்³ரஸ்ய பே⁴ஷஜீ தயா நோ ம்ருʼட³ ஜீவஸே ||

என்று.

இதற்குப் பொருள் சொன்ன ஸாயணர் முதலியவர்கள் வேதத்திற்குப் பொருள் சொல்லும் வழியில் ஜீவஸே என்றால் வாழ்வதற்கு என்று நான்காம் வேற்றுமை. ம்ருட என்று ம்ருடய என்பதன் மருஉ. என்று பொருள் கூறி அனைவரும் பரமேச்வரனின் மங்களவடிவமான மருந்து நாங்கள் வாழ்வதற்காக எங்களை மகிழ்வடைய செய்யட்டும் என்று பொருள் கூறினர். ஆனால் நடமாடும் தெய்வம் சொன்ன பொருளைப் பாருங்கள்.

ம்ருட - ஹே சிவனே சிவா - அன்னை பராசக்தி ஜீவஸே - ஜீவஸி

என்று பதங்களின் பொருளை மாற்றி அன்னை பராசக்தி ருத்ரனுக்கு மருந்தாக இருக்கிறாள். தயா - அவளால் ஹே சிவனே நீ எங்களுக்காக வாழ்கிறாய்..

இந்தப் பொருளைக் கூறிவிட்டு, இதை மனத்தில் இறுத்தித்தான் பகவத்பாதர்களும் தவ ஜனனி தாடங்க மஹிமா என்றெல்லாம் ஸௌந்தர்ய லஹரியில் பாடியதாக வேறொரு பொருளைக் கூறியது நடமாடும் தெய்வம்.

வேதத்தை மூச்சுக்காற்றாகக் கொண்ட பரமேச்வரனைப் பற்றியது ருத்ரம், அவர் அவதாரமான பகவத்பாதர்கள் ஸௌந்தர்யலஹரியில் இப்படிப் பொருள் செய்தார். அதை மறுபடியும் அவதாரமெடுத்த தெய்வம் எல்லோருக்கும் கூறியது.

என்ன பாக்யம்...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ! மஹா பெரியவர் – எஸ். ரமணி அண்ணா
“மஹா பெரியவரின் மந்திர கடிகாரம் !”

ஒரு முறை பரிவாரங்களுடன் திருநெல்வேலி செல்லும் வழியில் புதுக்கோட்டையில் முகாமிட்டுருந்தார் காஞ்சி ஆச்சார்யாள். மெயின் ரோட்டில் இருந்த ஒரு பெரிய சத்திரத்தில் தங்கி இருந்தார். அங்கு வந்து சேர்ந்த அன்று இரவு, ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜையை முடித்து விட்டு அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள்.

தனக்குப் பணிவிடை பண்ணும் நாகராஜன் என்ற இளைஞனை அருகில் அழைத்து, “அப்பா நாகு…நாளைக்கு விடியகாலம்பற மூணரை மணிக்கெல்லாம் நான் எழுந்து ஸ்நானம் பண்ணி ஆகணும். நீ ஞாபகம் வெச்சுக்கோ” என்று கட்டளை இட்டார் ஆச்சார்யாள்.

உடனே அந்த இளைஞன் நாகு மிக அடக்கத்துடன், “உத்தரவு பெரியவா. நீங்க ஆக்ஞாபித்தபடியே சரியா மூணரைக்கு, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர’ னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா” என பவ்யத்துடன் தெரிவித்துக் கொண்டான்.

பெரியவா புரிந்து கொண்டு, லேசாகப் புன்னகைத்தபடியே, “மூணரை மணிக்கு ஒங்களை எழுப்பி விட்டுடறேன்னு சொன்னா அவ்வளவா நன்னா இருக்காதுங்கறதாலே, “ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர’ னு சொல்லி எழுப்பறேங்கறியாக்கும்” என்று நாகுவைப் பார்த்து பளிச்சென்று கேட்டார். நாகு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். என்ன பதில் சொல்வது என்று அவனுக்குப் புரியவில்லை.

“சரி..சரி. அப்டியே பண்ணு !” என்று கூறி விட்டு, உள்ளே சென்று விட்டார் ஆச்சார்யாள். இரவு மணி பதினொன்று. சத்திரம் உறக்கத்தில் ஆழ்ந்தது. பெரியவாளும் சயனத்துக்குச் சென்று விட்டார். நாகுவுக்குத் தூக்கமே வரவில்லை. கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அந்தச் சத்திரத்தில் சுவர்க் கடிகாரமோ, அலாரம் டைம்பீசோ இருக்கவில்லை. மடத்திலும் இல்லை. நாகுவிடம் இருப்பதோ அவனுடைய மாமா, ‘பூணூல்’ கல்யாணத்தில் பரிசளித்த ரொம்பப் பழைய வாட்ச் ஒன்று தான். பெரியவாள் உடனேயே எப்போதும் இருக்க வேண்டி உள்ளதால், அதையும் கையில் கட்டிக் கொள்வதில்லை. அது நாகுவின் பழைய டிரங்க் பெட்டிக்குள்ளேயே அடைக்கலமாகி இருக்கும். ஒவ்வொரு நாளும் நாகு அதற்கு ‘கீ’ கொடுக்க எடுத்துப் பார்ப்பதோடு சரி…அப்புறம் தொடுவதில்லை.

‘தானும் படுத்துத் தூங்கி விட்டால் விடியக் காலம் மூணரைக்குப் பெரியவாளை எப்படி எழுப்ப முடியும் ?’ என்ற விசாரம் நாகுவைத் தொற்றிக் கொண்டது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவன், நேராகப் ஸ்டார் ரூமுக்குப் போனான். டிரங்க் பெட்டியைத் திறந்து கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். நேராக ஸ்வாமிகள் சயனித்திருக்கும் அறைக்கு வெளியே சந்தடி இன்றி வந்து அமர்ந்தான். சத்தம் துளிக் கூட வெளியில் கேட்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் பண்ண ஆரம்பித்து விட்டான். திரும்பத் திரும்பப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். தனது கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக 3.30 . நாகு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டான். கைகளைக் கட்டிக் கொண்டு, ஸ்வாமிகள் சயனிக்கும் அறையைப் பார்த்தபடியே, சன்னமான குரலில், ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர..’ என நாமாவளி கோஷம் எழுப்பினான். சற்று நேரத்திலேயே அறைக் கதவு திறந்தது. சாட்சாத் ஸ்ரீ பரமேஸ்வரனே நடந்து வருவது போல சிரித்தபடியே மந்தகாசத்துடன் வெளிப்பட்டு, ‘சுப்ரபாத’ தரிசனம் அளித்தார் ஆச்சார்யாள். அந்த தரிசன பாக்கியம் அன்று நாகுவுக்கு மட்டுமே கிடைத்தது.

ஆச்சார்யாள், அந்த சத்திரத்து வாசற்படி வரை மெதுவாக நடந்து போய் விட்டு வந்தார். ஸ்நானத்துக்கு ஏற்பாடு செய்ய விரைந்தான் நாகு. சத்திரம் விழித்துக் கொண்டது.

அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் அதே மாதிரியே நாகுவின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாம கோஷம் எனத் தொடர்ந்தது.

நான்காவது நாள் இரவு, ‘தன் இடுப்பில் கைக் கடிகாரத்தைச் செருகிக் கொண்டு ஸ்வாமிகளின் அறைக்கு வெளியே விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் செய்தபடியே விழித்துக் கொண்டிருந்த நாகு, தன்னையும் அறியாமல் கண் அயர்ந்து விட்டான். திடீர் என்று, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்று ஒரு தெய்வீகக் குரல் நாகுவைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது. தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான். எதிரே, கருணை ததும்பச் சிரித்த முகத்துடன் ஆச்சார்யாள்.

ஸ்வாமிகள் வாத்ஸல்யத்துடன், “கொழந்தே, மணி சரியா மூணரை ஆறதுடாப்பா. அசதிலே நீ தூங்கிப் போயிட்டே போலிருக்கு. பாவம்..நோக்கும் நாள் பூரா கைங்கர்யம். சரீர சிரமம் இருக்குமோனோ ?” என்று சிரித்தபடியே கூறிவிட்டு, வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார். இடுப்பில் செருகி இருந்த கைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான் நாகு. மணி சரியாக 3.30.

மிகவும் ஆச்சர்யப்பட்டான் நாகு. ‘நாம குரல் கொடுக்காமலே எழுந்து வந்து ‘மணி மூணரை’ னு சரியாச் சொல்லறாளே பெரியவா !

இது எப்படி சாத்தியம் என்று மிகவும் குழம்பினான். அவன் காதுகளில் ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்ற அந்த நடமாடும் தெய்வத்தின் தெய்வீகக் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. இது வரை அவன் அப்படிக் கேட்டதே இல்லை.

அன்றிரவு பதினோரு மணி. பெரியவா, சயனத்துக்குச் சென்று விட்டார். ‘எப்படியும் இன்று இரவு கண்ணயரவே கூடாது’ என்று திட வைராக்கியத்துடன் ஸ்வாமிகளின் அரை வாசலில் வந்தமர்ந்தான் நாகு. கையோடு ஒரு சிறிய பித்தளை செம்பில் ஜலம். ஒரு வேளைஅசதியின் மிகுதியால் தூக்கம் வந்து விட்டால் கண்களைத் துடைத்துக் கொள்ளவே ஜலம்.

இரவு மணி 2 .30 . அது வரை தூங்காமல் தாக்குப்பிடித்து விட்டான் நாகு. ஆனால் தொடர் விஷ்ணு சஹஸ்ரநாம பாரயணத்தையும் மீறி அவனுக்குத் தூக்கம் வந்து விட்டது. தன்னையும் அறியாமல் கிழே சுருண்டு படுத்தான். உறங்கி விட்டான்.

கதவு திறந்தது. ஆச்சார்யாள் மெதுவாக வெளியே வந்தார். உறங்கிக் கொண்டிருந்த நாகுவைப் பார்த்தார்; அவனுக்குப் பக்கத்தில் இருந்த செம்பையும் பார்த்தார். புரிந்து கொண்டார். சிரித்தார்.

“ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாகு…எழுந்துறாப்பா” என மிருதுவாகக் குரல் கொடுத்தார் ஆச்சார்யாள். தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான் நாகு. எதிரே புன் முறுவலுடன் பெரியவா.

“நாகு, மணி சரியா மூணரை. பாவம்…இன்னிக்கும் முடியாம தூங்கிட்டே போலிருக்கு. சரி…சரி…ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்று சொல்லி விட்டு, வழக்கப்படி வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார் ஸ்வாமிகள். தனது கடிகாரத்தைப் பார்த்தான் நாகு. சரியாக மூணரை. வியந்து நின்றான். அன்று மதியம் பூஜையை முடித்து விட்டு, ஏகாந்தமாக அமர்ந்திருந்தார் ஆச்சார்யாள். மெதுவாக அவரருகே வந்து நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றான் நாகு. வாய் திறந்து அவன் ஒன்றும் பேசவில்லை.

ஸ்வாமிகளே பேசினார், “ஏண்டாப்பா நாகு…நீ நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பாத்தா, ஏதோ எங்கிட்டே கேட்டு தெருஞ்சுக்க வந்துருக்காப்லே படறதே. என்ன தெரியணும் ? கேளு…சங்கோஜப்படாதே.”

நாகு மிகவும் தயங்கினான். “அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா…” என்று இழுத்தான். உடனே ஸ்வாமிகள் புன்முறுவல் பூத்தபடியே, “ஒம் மனுசுலே என்ன கேக்க நெனச்சுண்டு நீ தயங்கறேங்கறது நேக்குப் புரியறது. ‘ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே…பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரைக்கு எழுந்துண்டு வர்றார் ? அவர் கிட்டே தான் ஒரு கடிகாரமும் இல்லியே…எப்படி முழுச்சுக்கரார்னு’ னு கொழம்பிண்டிருக்கே…இல்லியா ?” என்று கேட்டார்.

நாகுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாம் கேட்க நினைத்ததைப் பெரியவா சொல்கிறாரே என்று மலைத்தான்.

நாகுவுக்கு இப்போது தைரியம் வந்து விட்டது. “ஆமா பெரியவா…என்னன்னே தெரியலே. ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிப் போயிடறேன். பெரியவா தான் சரியா மூணரை மணிக்கு எழுந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள். நேக்கே ரொம்ப வெக்கமா இருக்கு. சரியா மூணரை மணிக்கு எப்படிப் பெரியவாளுக்கு…” என்று நாகு முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ஏதாவது கர்ண யக்ஷிணி (காதில் வந்து சொல்லும் தேவதை) காதுலே மணிய சொல்றதானு சந்தேகம் வந்துடுத்தோ நோக்கு ?” என்று கேட்டு விட்டு இடி இடி என்று சிரித்தார்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்…பெரியவா” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் நாகு.

பெரியவா சொல்ல ஆரம்பித்தார், “எங் காதுலே ஒரு யஷிணியும் வந்து சொல்லலே. எங் காதுலே மணி மூணரைங்கறதைச் சொன்னது ஒரு பஸ். அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ். பஸ். ஆச்சரியப்படாதே. மொத நாள் சரியா மூணரைக்கு நீ, ‘ஹர ஹர சங்கர…” சொல்லி எழுப்பி விட்டே. வெளியிலே வந்தே நான், வாசப் பக்கம் வந்தேனா…அப்போ ஒரு பஸ் சத்திர வாசலைக் கடந்து டவுன்குள்ளே போச்சு.

அடுத்தடுத்து ரெண்டு நாளும் பார்த்தேன். அதே மூணரைக்கு அந்த பஸ் சத்திர வாசலைக் தாண்டித்து. அப்புறமா விசாரிச்சேன். அது டி.வி.எஸ். கம்பெனியோட பஸ். மதுரைலேர்ந்து புதுக் கோட்டைக்கு விடியக் காலம் வர மொத பஸ்ஸுனும் சொன்னா…சத்திர வாசலுக்கு அந்த பஸ் விடியக் காலம் சரியா மூணரைக்கு வந்து தாண்டிப் போறது. ஒரு செகண்ட்…இப்படி அப்படி மாறல்லே. டி.வி.எஸ். பஸ் ஒரு எடத்துக்கு வர குறிப்பிட்ட டயத்த வெச்சுண்டே, நம்ம கடிகாரத்த கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்னு சொல்லுவா. அது வாஸ்தவம் தான். மூணு நாள் சரியா பார்த்து வெச்சுண்டேன். நாலாம் நாள்லேந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தான எழுந்துட்டுண்டேன்…வேற ஒரு ரகசியமும் இதுலே இல்லேடாப்பா நாகு…!” பெரியவா தன்னை மறந்து சிரித்தார்.

பதில் சொன்ன ஆச்சார்யாளின் முகத்தையே மெய் மறந்து பார்த்துக்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம் கூறுகிறார் : “மஹா பெரியவாள் சொல்கிற கதைகளை வில்லுப்பாட்டில் பொருத்தமான இடத்தில் நான் சொல்வது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், அவர் “ஏண்டா! இன்னிக்கு உன்னோட புரோகிராம்ல பால்கதை சொல்லுவியோ?” என்று கேட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. அது என்ன பால் கதை?”

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.

இதுதான், மஹாபெரியவாள் ரசித்துக் கேட்கிற பால் கதை. இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்.

நன்றி : ‘கல்கி’ – அருளே அறிவே

Shared from a friend

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஜே.டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர்,
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். அவர், ஹிந்து
சமயம்,பாரதப் பண்பாடு பற்றி நிறைய அறிந்திருந்தார்.
பாரதத்தில் பல துறவிகளையும்,மகான்களையும்
சந்தித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார்.எல்லோரும்
அறிவுபூர்வமான பதில்களைச் சொன்னார்களே தவிர.
இதயபூர்வமான பதில்களைக் கூறவில்லை - என்று,
அவருக்குத் தோன்றியது. "என் சந்தேகத்துக்குத் தெளிவு
கிடைக்காமலே நான் திரும்பிப்போக வேண்டியதுதானா?"
என்று நொந்து கொண்டிருக்கும் வேளையில்,
பெரியவாள் தரிசனம் கிடைத்தது.
'பெரியவா சிரிக்கும்போது, குழந்தை கிறிஸ்து
சிரிப்பது போலிருக்கிறது!... மானுடத்தை விஞ்சிய
ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது...'
இந்தக் 'குழந்தை' என் கேள்விகளுக்குப் பதில்
சொல்லுமோ?.. கேட்டுப் பார்க்கலாமே?
"சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில்,
எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய
காலகட்டத்தில், அழுத்தமாக விளக்கிக் கூறி,
மக்கட் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும்
என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?"
பெரியவாள் நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள்.
ஐதரேயத்தின், 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம' என்ற மகா வாக்யம்,
இந்த ஐரோப்பியனுக்குப் புரியவே புரியாது;
திடீரென்று பதில் வெளிப்பட்டது.
"பாரதம் சுதந்திரமடைவதற்கு முன், சுமாராகப்
பத்து சதவிகித மக்கள் தான் நேர்மை குறைந்தவர்களாக
இருந்தார்கள். எல்லாத் தொழிலாளர்களின் பேச்சிலும்
சத்தியமும் நேர்மையும் இருந்தன. கடன் கொடுத்தல்,
பண்டமாற்று முதலியன கூட, சொற்களின்
அடிப்படையிலேயே நடந்தன. பேச்சுத் தவறினால்,
பாவம் வந்து சேரும்; நமது சந்ததியினர்
துன்பப்படுவார்கள் - என்ற பயம் இருந்தது."
"இப்போது அதெல்லாம் போச்சு;..வயது வந்தவர்களுக்கு
வாக்குரிமை என்று சட்டம் போட்டார்கள். அந்த உரிமையைக்
கொடுக்குமுன், அதை அவன் எவ்வாறு உபயோகிப்பான்
என்று எண்ணிப் பார்க்கவில்லை. கல்வி அறிவில்லாத,
ஏழையான ஒருவனுக்கு, இவ்வளவு முக்கியமான உரிமை
கிடைத்தால் என்ன செய்வான்?..என்ன செய்வானோ,அதுவே
நடந்தது! வாக்குரிமை விலைபேசப்பட்டது."
"இது, முதலாவது வீழ்ச்சி."
'அடுத்து; புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட
பொது நல விரோதச் செயல்கள்.
"போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டால்...
அப்புறம், தண்ணீர் ஆதிசேஷன் தலை வரை போய் விடுகிறது.
வருமானம் அதிகரித்து விட்டதால், ஆடம்பரமான
வாழ்க்கையில் மனம் ஈடுபடுகிறது."
"எது வாழ்க்கைக்குத் தேவை? எது, சுகபோகம்?"
என்ற உணர்வு மரத்துப் போய் எதைக் கண்டாலும்
அனுபவிக்க வேண்டும் என்ற அசுரத்தன்மை வந்து விடுகிறது.
"எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்,
அந்த வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும்.
ஆனால்,சுகபோகங்களை எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கச்
செய்ய முடியுமா? அவ்விதம் கிடைக்கப் பெறாதவர்கள்,
நேர்மையைக் கைவிடுகிறார்கள்.!"
"வாக்குத் தவறாத நேர்மையும்,எளிமையுமே
.இரண்டு முக்கிய தேவைகள்.."
அரைமணி நேரம், வெள்ளம் போல் கொட்டித்
தீர்த்து விட்டார்கள்,பெரியவாள்.
ஐரோப்பியர், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித்
திக்குமுக்காடினார்.
சமுதாய நலனைப் பற்றி, இவ்வளவு ஆழமாகப்
பெரியவாள் சிந்தித்திருப்பது, மடத்துத்
தொண்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"வாக்குத் தவறாத நேர்மையும்,எளிமையுமே
.இரண்டு முக்கிய தேவைகள்.."
பாரிர் சிறந்த தயாபரா!
நீ ஒரு ராகமாலிகா!
கமகம் மாறா ராகம்!
மாசினை நீக்கும் மாயாமாளவம்
மங்களம் தரும் கல்யாணி!
சாந்தம் அளிக்கும் சங்கரன்!
வலிமை ஈந்தும் சண்முக பிரியன்!
நலிந்தவர்கும் அன்பும் பரிவும் ஈயும் மோகனன்!
கருணை மழையில் நனைக்கும் பிலஹரி!
ஆறுதல் சொல்லி அமைதியும்
நிம்மதியும் தரும் ஆனந்த பைரவன்!
கருணை வற்றாத சாகரம்
காருண்யம் பொங்கும் முகாரி
வறுமையை அகற்றும் ரதிபதி பிரியன்
அமைதி அளிக்கும் ஆபேரியின்
சிங்கார வேலன்.....
நீ என்றே உணர்ந்தேன்
வேங்கடவன் நானே! Penned by Sri. Venkata Kailasam

Shared with Shri. Mannargudi Sitaraman Srinivasan

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

மஹா பெரியவா அற்புதங்கள்

ஏகதண்டி ஸன்யாஸியை பாக்கறதே
தோஷம்

“கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்ற வசனப்படி, அபாரமான ஶசாஸ்த்ர புலமை, பாண்டித்யம் பெற்ற ஒரு மஹா வித்வானைப் பற்றி நம் பெரியவா கேள்விப்பட்டார். ஆனால் அந்த வித்வானோ, பெரியவாளின் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட ப்ரியப்படவில்லை!

காரணம்?

அவர் ஒரு வீர வைஷ்ணவர்!

வெறும், வீர வைஷ்ணவர் இல்லை…கடும் வீர வைஷ்ணவர்!

அவரைப் பொறுத்தமட்டில், “ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் ஶைவக் கோலத்தையும் மேற்கொண்டு, கையில் ஏக தண்டத்தை கொண்டுள்ள ஒரு ஸன்யாஸியை பார்ப்பதே பெரிய தோஷம்!”

பெரியவா.. பரிபூர்ண ஶசிவ மோ, பராசக்தியோ, ப்ரஹ்ம்மமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்தாலும், அவரிடம் அந்த யாதவ ஶசி ரோ ன்மணியின் குஸும்பு கலந்த ப்ரேமை அவ்வப்போது, எட்டிப்பார்த்துவிடும்! ஆனால், அதிலும் ஆட்கொள்ளும் அன்பே பரிமளிக்கும்.

“நீ வராட்டா போ!…. நா…..வரேன்” என்பது போல், அந்தப் பண்டிதர் இருந்த ஊருக்கு யாத்ரையாகச் சென்று, பெரியவா தங்கினார்.

அன்பு என்னும் வலையை வாகாக விரித்து வைத்துக் கொண்டார், இந்த பண்டிதர் மாதிரி நல்ல [பக்ஷிகளுக்காக] பக்தர்களுக்காக!

ஊரே தினமும் திரண்டு வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தபோதும், அவர் மட்டும் வரவேயில்லை!

‘எப்டியோ போ!’ என்று அவரை விடுவதற்காகவா வந்திருக்கிறார்?

வருவோர் போவோரிடமெல்லாம் இந்தப் பண்டிதரைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பண்டிதரின் காதுகளிலும், பெரியவாளின் தேஜஸ்ஸையும், வித்வத் பெருமையையும் பற்றி பலபேர் புகழ்ந்து பேசுவது எல்லாமே விழுந்தது. ஆனாலும் கமுக்கமாக இருந்து விட்டார்.

பெரியவா அவரை ஆட்கொள்ளும் தருணம் வந்தது !

ஸ்ரீமடத்தின் மஹா வித்வான் ஒருவரை அந்த வீர வைஷ்ணவரிடம் தகுந்த மர்யாதைகளுடன் அனுப்பி, முறைப்படி பெரியவா அவருக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் வீர வைஷ்ணவர் என்றாலும், உண்மையான வைஷ்ணவ லக்ஷணம் கொண்டவர். ஒரு பெரிய பீடாதிபதி, இத்தனை தூரம் நம்மை அழைத்திருக்கும்போது, நாம் அதை மதிக்காமல் இருப்பது அழகல்ல என்று தோன்றியது. எனவே மடத்து வித்வானிடம் வெளிப்படையாக பேசினார்.

“பெரியவா… இவ்ளோ தூரம் கூப்டு அனுப்பியிருக்கா…! மாட்டேன்னு சொல்லப்டா…துதான்! ஆனாலும், எனக்குன்னு செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறரதுக்கில்ல! அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம்… அதான் யோஜனையா இருக்கு…”

“ஒங்களோட ப்ரதிக்ஞைகள் என்னன்னு, சொன்னேள்-ன்னா… பெரியவாகிட்ட சொல்றேன்…”

பணிவோடு கேட்டார் ஸ்ரீமடத்து வித்வான்.

“மொத்தம் மூணு ! ஒண்ணு…அத்வைத மடத்து ஏகதண்டியான ஒங்க பெரியவாளை, நா…. நமஸ்காரம் பண்றதுக்கில்ல;

ரெண்டாவுது… அவர் ப்ரஸாதம் எதுவும் குடுத்தா…. அத… ஸ்வீகரிச்சுக்கறதுக்கில்ல;

மூணாவுது… வித்வத் ஸம்பாவனை-னு ஸால்வை போத்தறது, அது இதுன்னு எதாவுது ஒங்க பெரியவா செஞ்சா, அதையுங்கூட ஏத்துக்கறதுக்கில்ல!…”

“கெட்டுது போ! நம்ம பெரியவாளோட ஐஶ்வர்யம் தெரியாம, அவரை அவமர்யாதை பண்ற மாதிரி, இப்டி கடுமையா கண்டிஷன் போட்ற இவரப்போயி, பெரியவா…எதுக்கு வரிஞ்சு வரிஞ்சு அழைக்கணும்?…”

அந்த மஹா ஸாத்வீகமான ஸ்ரீமடம் வித்வானுக்கே இப்படித் தோன்றியது.

“ரொம்ப ஸந்தோஷம். தேவரீர் சொன்னதை, எங்க பெரியவா கிட்ட தெரியப்படுத்தறேன்”

மர்யாதையோடு அங்கிருந்து கிளம்பி, நேராக பெரியவாளிடம் வந்தார்.

முகத்தில் ஸுரத்தில்லாமல் வந்தவரிடம்…..புன்னகையோடு குடைந்தார்…. கோவர்த்தனத்தை குடையாக பிடித்த நம் கோவிந்தன்……

“என்ன சொன்னார்?…”

“ஒண்ணும் ஸெரியா படல….பெரியவா”

பண்டிதரின் ஸுரத்தில்லாத முகத்தைப் பார்த்தார்……

“என்ன? ஸ்ருதி கொறஞ்சு போச்சு?…”

“ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படல பெரியவா…..! அவர் ரொம்ப நிர்தாக்ஷிண்யமா கண்டிஷன் போடறார்!…”

“ஓஹோ! அப்டியா? ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நீ நல்ல சேதின்னா கொணூந்திருக்கே!…”

“நல்ல சேதியா? அவர் ரொம்ப கறாரா கண்டிஷன் போடறார் பெரியவா…..”

“கண்டிஷன் போடறார்-ன்னா, அவர் முடிஞ்ச முடிவா…..வரவே மாட்டேன்னு சொல்லல… அவரோட ஏதோ கண்டிஷனுக்கு நாம ஒத்துண்டா…..வரேன்னு சொல்றார்-ன்னுதானே ஆறது? அந்த மட்டுல, நல்ல ந்யூஸ்தானே?….. ஸெரி…..என்ன கண்டிஷன் போட்டார்?…”

“சொல்றதுக்கே மனஸ் எடம் குடுக்கல…..”

“பரவாயில்ல…. சொல்லு! ...”

“மொத ப்ரதிக்ஞை, அவர் பெரியவாளை நமஸ்காரம் பண்ண மாட்டாராம்…..”

“பேஷா..!..அப்டியே இருக்கட்டும்….ம்ம்…மேல”

“ரெண்டாவுது…பெரியவா, எதாவுது ப்ரஸாதம் குடுத்தா, அவர் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்!….”

” அவ்ளோதானே!…ம்….”

“மூணாவுது…பெரியவா அவருக்கு வித்வத் ஸம்பாவனை-ன்னு ஸால்வை போத்தறது… அதெல்லாம் பண்ணினா, அதையும் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்”

பெரியவாளோ…. ஸஹஜமாக சிரித்துக் கொண்டே…

” இவ்ளோதானே? பேஷா அவரோட இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!…”

“எப்டி பெரியவா….? பெரியவாளை மதிக்கற மாதிரி தெரியல….அவர் இப்டீல்லாம் கண்டிஷன் போடறது…”

“பாரு! எனக்குத்தான அவரைப் பாக்கணும்-ன்னு இருக்கு? அவருக்கு இல்லியே? அப்டி இருக்கச்சே, அவர் கண்டிஷன் போடறதுல என்ன தப்பு? எனக்கு, அவர் நெஜமாவே ஒரு பெரிய வித்வத் ஸ்ரேஷ்டர், அவர்ட்ட புதூஸா ஏதோ கொஞ்சமாவுது க்ரஹிச்சுக்கலாம்-ன்னு இருந்தா, அவர் போடற கண்டிஷனை பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?...”

அனைத்தும் அறியும் அறிவிற்கு அறிவாய் இருக்கும் ஆச்சார்ய ஶ சிரோ-ரத்னத்துக்கு, வேறொருவரிடம் க்ரஹித்துக் கொள்ள என்ன இருக்கிறது?

வினயம், வினயம் என்ற ஒன்றை நமக்கெல்லாம் கற்றுத் தரவே, இந்த ப்ராக்டிகல் க்ளாஸ்!

உண்மையில் பெரியவாளே அந்த ஸ்ரீ வைஷ்ணவரின் க்ருஹத்துக்கு ஸ்வாதீனமாக, தானே விறுவிறுவென்று சென்றிருப்பார். ஆனால், விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியை, அவர் தன்னுடைய க்ருஹத்துக்குள், மனஸார வரவேற்காமல் போயிருக்கலாம்! என்பதாலேயே, அவரை அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் வைக்கக் கூடாதென்பதற்காகவே, பெரியவா அங்கே செல்லாமல், அவரைத் தன்னிடம் அழைத்திருக்கலாம்.

” போ! போயி அவரோட ப்ரதிக்ஞைக்கு எந்த பங்கமும் இல்லாத, இங்க வரலாம்-ன்னு சொல்லி, அழைச்சிண்டு வா…”

பண்டிதர் என்னவோ அரை மனஸோடு போய், அந்த வைஷ்ணவரை அழைத்து வந்தார், பெரியவாளுடைய ஸந்தேஷத்தை கூறி!

வைஷ்ணவருக்கு ஏக பெருமை!

ஸம்ஸ்க்ருத பாஷை…. கேட்கவும், பேசவும் மிகவும் அழகாக இருக்கும், அந்த அழகு இன்னும் கோடி மடங்கு அழகாக ஒலித்தது, நம் பெரியவா பேசியபோது!

அவர் உள்ளே நுழைந்ததும், பெரியவா அவரிடம், அழகான ஸம்ஸ்க்ருதத்தில், வைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகள் கலந்து, அவரை மிகவும் கௌரவமான முறையில் வரவேற்று, அவருக்கென போடப்பட்டிருந்த ஆஸனத்தில் அமரச் சொன்னார்.

வாக்தேவதையின் முன்னால் போடப்பட்டிருந்த மணையில், அவளுடைய அழகான வரவேற்பால் உண்டான ஒருவித நெகிழ்வும் ஒருசேர, அமர்ந்தார்…….!

அழகான வரவேற்பிலேயே லவலேஸம்….வைஷ்ணவரின் மனஸ் உருகியது.

வேதங்களும், “நமஹ நமஹ” என்று ருத்ரமும், சமகமும் போட்டி போட்டுக்கொண்டு நமஸ்கரிக்கும் நம் பெரியவாளை, நமஸ்காரம் பண்ணாமலேயேதான் அமர்ந்தார்!

ஸ்ரீ ராமானுஜருடைய [ப்ரஹ்மஸூத்ர] ஸ்ரீபாஷ்யம் பற்றியே அந்த வைஷ்ணவரிடம், நம் பெரியவா நிறைய “கேட்டுக் கொள்ள!!” ஆரம்பித்தார்!

ஆம்! முதலில், பெரியவா அவரிடம் கேட்டுக் கொள்வது போல் இருந்தது, போகப் போக…..அந்த வைஷ்ணவர் கேட்கக் கேட்க, ப்ரஹ்ம ஸூத்ரத்தை எழுதிய அந்த வேத வ்யாஸரே, பதில் சொல்வதாக மாறியிருந்தது!

வைஷ்ணவரின் முகம் பெரியவாளிடம் பேசப் பேச ப்ரகாசமாக ஆனது! ஏனென்றால், வாஸ்தவத்தில் அவரிடம் வித்யா கர்வம் இல்லை; நல்ல உயர்ந்த வித்யை இருந்தது. அதனால், பெரியவாளிடமிருந்து கல்பூரம் போல், நிறைய க்ரஹித்துக் கொண்டார்.

பண்பின் ஶசிகரமான பெரியவாளும், அவரை நிறைய ஊக்குவித்து, அவருடைய அறிவு ஸுரங்கத்திலிருந்து பாளம் பாளமாக பாண்டித்யத்தை வெளிக் கொண்டு வந்தார்.

வைஷ்ணவரும் கூட, இப்போது, “தான்…. ஒரு விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை; ஒரு ஞான ஹிமாத்ரியிடமிருந்து பொங்கியோடும், ஞான கங்கையில் மூழ்கி, குளித்து, குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறோம்“, என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார்!

அவருடைய வைஷ்ணவ ஸித்தாந்தத்திலிருந்து, அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்பதை, உயர்வு, தாழ்வு வித்யாஸம் காட்டாமல், ஸ்ரீ ஆச்சார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதை அங்கங்கே லேஸாக கோடிட்டு காட்டியதும், அந்த வைஷ்ணவரும் பரந்த மனஸோடு அதை ஸ்லாகித்துக் கொண்டார்.

இப்படியாக ரொம்ப நேரம், இந்த அழகான வித்வத் ஸம்பாஷணை நடந்து, மிக மிக இனிதாக, நன்றாக முடிந்தது.

“ஒங்களோட ஸ்ரமத்தை பாராட்டாம, நா….அழைச்சதை ஏத்துண்டு, இத்தன நேரம்……என்னை வித்வத் கடல்ல மூழ்கடிச்சுட்டேள் ! ரொம்ப ஸந்தோஷம்!…..”

மஹா ஸரஸ்வதி வீணையை மறைத்துவிட்டு, தண்டத்தை சுமந்து கொண்டு, தன் முன் “வினயத்தின்” ரூபமாக நிற்பதை, இப்போது அந்த வைஷ்ணவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

“பெரியவாளுக்கு தெரியாத ஶசாஸ்த்ர ஞானம்….. தாஸனுக்கு இல்ல! ஆனா… தாஸனுக்கு தெரியாத கருணை, பெரியவாளுக்கு இருந்தததுனாலதான், கூப்டு அனுப்பி, அனுக்ரஹம் பண்ணியிருக்கா!…….”

இதைச் சொல்லி முடிக்கும் போதே, அந்த வைஷ்ணவரின் ஹ்ருதயமும், கண்களும், குரலும் தழுதழுத்து….! அப்படியே “தண்டம்” போல் கீழே விழுந்து பெரியவாளை நமஸ்காரம் செய்ய முற்பட்டவரை……

“வேணாம்! ஒங்களுக்கு ப்ரதிக்ஞா பங்கமாய்டும்!……”

வினய ஸம்பன்னர் தடுத்தார்! அதில், நாமெல்லாம் பண்ணுவது போல், குத்திக் காட்டும் எகத்தாளம் கிஞ்சித்தும் இல்லை!

“ப்ரதிக்ஞை-ல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டு பண்ணினதுதானே? ஸன்னிதானத்ல…அதுக்கு ப்ரஶக்தியில்ல [தெய்வத்துக்கு அது பொருந்தாது!]…..”

கண்ணீர் துளிர்க்க, பெரியவாளை விழுந்து விழுந்து ஸேவித்துத் தீர்த்தார்!

ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயண ஸ்வரூபமாகவே நின்று, தன் பக்தனின் நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டார்….. “நாராயண! நாராயண!” என்ற நாமத்துடன்!

“பெரியவாளை நமஸ்காரம் செய்ய மாட்டேன்!” என்றவர், தானே… தன் நிபந்தனையை தகர்த்து எறிந்தார்!

அன்று, அங்கு சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் பரமபதமான ஸ்ரீவைகுந்தத்திற்கு மானஸீகமாக நிஸ்சயம் போயிருப்பார்கள்! ஏனென்றால், பகவானும் அப்படி! பக்தனும் அப்படி!

“பெரியவா…..தாஸனுக்கு மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்…”

தன்னையே ப்ரஸாதமாக தந்துவிட்ட நம் பெரியவா….அவருக்கு மந்த்ராக்ஷதையையும் அனுக்ரஹித்தார்!

“பெரியவா கையால… மந்த்ராக்ஷதை எதுவும் வாங்கிக்க மாட்டேன்..”

வைஷ்ணவரின் ரெண்டாவது நிபந்தனையும் “ஃபணால்!!”

குழைந்து போய் நின்று கொண்டிருந்த அந்த வைஷ்ணவ பக்தரிடம் இப்போது பகவானே குழைந்து போனான்!

“என்னோட ஆசைக்காக, ஒங்களோட மூணாவுது ப்ரதிக்ஞையையும் விடலாம்-ன்னு தோணித்துன்னா.. ஒரு மஹா வித்வான் வந்தும் கூட, நம்ம மடத்ல அவருக்கு ஸம்பாவனை பண்ணல-ங்கற கொறை… எனக்கு இல்லாம இருக்கும்….”

அம்மாடீ! வருமா இந்த பரந்த ஹ்ருதயம்!

ஸ்ரீ வைஷ்ணவர் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டார்!……. கண்ணீர் பொங்க, தழுதழுக்கும் குரலில்……

“பெரியவா எது பண்ணினாலும்…என்னோட பரம பாக்யமா ஏத்துக்கறேன்”

உடனே மிகவும் உயர்ந்த ஸால்வை ஒன்றை கொண்டு வரச்சொல்லி, ஸ்ரீமடத்திலிருந்து அளிக்கும் இந்த உயர்ந்த ஸம்பாவனையை, யாரை விட்டுக் குடுக்கச் செய்தார் தெரியுமா?…….

“கண்டிஷன் போடறார்.. பெரியவா!…” என்று பெரியவாளுடைய தூதராக ஸ்ரீ வைஷ்ணவரிடம் தூதாக நடந்த, அந்த மஹா வித்வானைக் கொண்டே, ஸம்பாவனை செய்யச் சொன்னார்…

நம்முடைய மனஸிலும், “மங்களம் சுஶப மங்களம்” என்று ஒரு கண்ணீர் கலந்த ஸந்தோஷம் பரவி நிறைவதை அனுபவிக்கலாம் !!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: Kanchi Maha Periyava

Post by PUNARVASU »

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்'என்ற பேராவது இருக்கிறது!மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

'ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா' என்றை (தைத்திரீய அரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்;நூறு ஜபிப்பது மத்யமும்;அதம பக்ஷம் பத்து.

காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஒய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸ¨ரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனதுக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்தீ என்று மூன்று பிரகாரமாக தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்!ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ!லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ளவேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.

ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். 'அந்த இரண்டு தானே முக்கியம்?அவைகளை மட்டும் செய்துவிடலாம்' என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோதுகூட தூளியை (புழுதியை) வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.

அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக்காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்!அவர், 'காணாமல் கோணாமற் கண்டு கொடு!ஆடுகாண் போகுது பார் போகுது பார்!என்று சொல்லி இருக்கிறார். "காணாமல்"என்றால் ஸ¨ரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம்கொடுக்க வேண்டும். "கோணாமல்"என்பதற்கு ஸ¨ரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கண்டு"என்பதற்கு ஸ¨ரியன் இருக்கும் போது என்று அர்த்தம். ஸ¨ரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். "ஆடு" என்றால் "நீராடு!" அதாவது "கங்கையில் ஸ்நானம் பண்ணு" என்பது அர்த்தம். "காண்" என்றால் "ஸேது தரிசனம் பண்ணு" என்பது அர்த்தம். "போகுது பார்" என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!" என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் ஸம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.

காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்கயத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ணவேண்டும்.

ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது !

ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்த காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும்

ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும்.

பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.

புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபால் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம்.

அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத சூத்ரர்களுக்கும் trustee (தர்மகர்த்தா) மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.

பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராஃதக் காலம் ஆனபின், அதாவது ஸ¨ர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸாங்க்ய காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும்.

அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது.அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் "கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு" என்று சொல்லுவதைப் போல், "எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு" என்று சொல்ல வேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவைனை எல்லாரும் பிரார்திப்போமாக!
*****

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: Kanchi Maha Periyava

Post by PUNARVASU »

ஓதுமவனைக் காத்திடும், அவன் மனை காத்திடும்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
காணாமல் கோணாமல் கண்டு கொடு, ஆடு,
காண். போகுது பார், போகுது பார்!
நூறு உயர்வு,்அதில்பாதி மத்திமம், அந்த
நூற்றில் ஒரு பத்தாவது குறையற ஓதுமவனைத்
தாயவள் காப்பாள். இது திண்ணம். இது திண்ணம்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

90 வயதில் அங்கப்பிரதட்சணம் - மஹாபெரியவா
These are some small incidents that tells that Periyava is not any human. He is parameswaran Himself who pretended to be an ordinary sanyasi in front of all of us!

காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம்.
கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார்.
ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார். நான் பெரியவாளிடம் நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா போகாமல் இருக்கலாமா? என்று கேட்டேன்.
அதற்கு பெரியவா இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை…மடத்தை நிர்வாகம் செய்கிறார் பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும் அது தான்முறை என்று சொல்லி விட்டார்.
கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலிலிருந்து தீர்த்தம்,சால்வை, புடவை எல்லாம் வந்தன. பெரியவா விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார்.
புடவையையும் மேலே போட்டுக் கொண்டார்.
என்னைப் பார்த்து என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது நான் போக வில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும் போகலாமா? என்று கேட்டார்.
ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி ஆவலாக இருக்குமோ அப்படி ஓர் ஆவல் ! என்னை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் விரும்பினால் போகலாம் என்றேன். நீதானே என்னை எங்கும் போகக் கூடாது என்று இங்கு கலவையில் உட்கார வைத்தாய் என்று நான் மூன்று வருஷங்களுக்கு முன் அவர் கால் சக்கரங்கள் அழியாமல் இருப்பதற்காகச் சொன்ன வார்த்தைகளை மீற முடியாமல் என்னிடம் கேட்டார்.
அன்று மாலை நான்கு மணிக்கு நடக்க ஆரம்பித்து மறு நாள் மாலை நான்கு மணியளவில் காஞ்சி போய்ச் சேர்ந்தோம். கோவிலில் சென்று அம்பாளை தரிசித்துப் புஷ்பம் போட்டு மாலை சார்த்தி புடவை சாத்தி அழகு பார்த்தார். பின் எங்களுக்குப் ப்ரசாதம் கொடுத்து ஆச்சார்யாள் சன்னிதிக்கு வந்து தரிசித்து அங்கேயே வாய் திறந்தவாறு படுத்து விட்டார். அவ்வளவு அசதி.
அப்போதுஅவருக்கு தொண்ணூறு வயசு.பின் பழமும் பாலும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். மூன்று பழத்துண்டுகளும் பாலும் சாப்பிட்டு துயில் கொண்டார். மறு நாள் கொட்டகைக்குச் சென்று ஸ்னானம் செய்து ஈரத்துணியுடன் காமாக்ஷிக்கு அங்கப்ரதக்ஷிணம் செய்தார். உடம்பெல்லாம் ரத்தப் புள்ளியாக தோற்றம். முதல் முதலாக காமாக்ஷியை அங்கப்ரதக்ஷிணம் செய்தவர் பெரியவா தான்!
அதே வேகத்தில் கிளம்பி 25 கிலோ மீட்டர் நடந்து கலவை சென்றுவிட்டார்!
சொன்னவர் பாலு ஸ்வாமிகள்.
இந்தத் தென்பும் மனோ திடமும் நம்மில் யாருக்காவது வருமா? சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேச்வரன்!
ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர ….

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by Rsachi »

yAntha pAntha - in which Thyagaraja kriti does it occur?

I read this story:
Image

I wish they had mentioned which kriti. I couldn't find these words in the kriti collection that I have.

Also, if yAntha means ra, shouldn't pAntha be pha? Why ma?

Could someone please enlighten me.
Thanks

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Kanchi Maha Periyava

Post by rshankar »

Rsachi wrote:Also, if yAntha means ra, shouldn't pAntha be pha? Why ma?
My interpretation - pa anta refers to the end (anta) of the pa varga of letters (the labials), which is ma (pa pha ba bha ma)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Rsachi wrote:yAntha pAntha - in which Thyagaraja kriti does it occur? ...
"yAnta bhAnta"
C1 of -
http://thyagaraja-vaibhavam.blogspot.in ... -raga.html

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by Rsachi »

Perfect. That is consistent ya - > ra, bha - > ma

Thank you sir.

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by Rsachi »

I also found a thread from 10 years ago!
http://www.rasikas.org/forums/viewtopic.php?f=11&t=1466

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Papanasam Sivan and Maha Periava

Read at this link..

https://vandeguruparamparaam.wordpress. ... sam-sivan/

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்
மாமுனியின் கருணையா – கொடையா

(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து...)

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல். வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும் ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி களிப்படைய, நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.
அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம் சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை சாலையைப் பெருக்கி எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.
இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது. அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது. தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள். தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.
சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம் காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால் தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது. நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.
‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள். அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும் அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள். மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள்
எல்லோரும் நகைத்தனர்
வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்
ஜனமே என்னை வெறுத்தது
என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள். (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய் எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான். நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம் நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.
மஹரிஷியே மாமுனியே
சித்தனே சுத்தனே
சர்வனே சத்தியனே
நீர் செய்த உபகாரங்கள்
கணக்காலே எண்ண முடியுமா
என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன.
ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்
பேரின்பம் என்றும் பொங்கிட
நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பெலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது.
“ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல் எங்களுக்கு யார் மூலமோ கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும் நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.

இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார். அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து 17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பெலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்

.
பக்தர் குறைக் கேட்டு
அச்சத்தை நீக்கி அருள காத்திருக்கின்றீரே
அக் கருணை எங்களைக் காத்தருளட்டும்!
(ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..)

மாமுனியே சரணம் சரணமையா!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

மாமி யார்?
சண்டி ஹோமப் பதிவுகளில் இந்தக் கேள்வி மறுபடி மறுபடி கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இதோ, மாமி.
சுமார் இருபத்தெட்டு வயது ஆகும் போது பூந்தமல்லி சாலையில் ஒரு ஜாகையில் வைத்து முதல் தரிசனம். ஸ்ரீ பெரியவா போகிற போக்கில் 'நீ அமோகமா இருப்பே' என்று சொல்லிவிட்டு மாமியை கடந்து சென்றார்.
பின், பெங்களூரு வாசம். எழுபதுகளின் பிற்பகுதி வரை குடும்ப பாரத்தில் ஸ்வாமி மாமி மனதில் ஓரமாய் உட்கார்ந்து கொண்டார். அதற்குப் பின் ஸ்ரீ பெரியவாளின் நேரடி, கனவு தரிசனங்கள். ஏராளமான கைங்கர்யங்கள், பிக்ஷைகள்.
சிருங்கேரியில் தங்கி இருந்த போது, தேவி மஹாத்மீயம் படித்துக் கொண்டு வருகையில் மாமாவின் வேஷ்டியை மேல் கொடியிலிருந்து எடுக்கும் போது கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டு அங்கேயே ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டு மயக்க மருந்து கொடுத்து கட்டுப் போட்டு வெளியே வரும் போது தேவி மஹிஷனை வென்று வெற்றி வாகை சூடி தன் படை சூழ ரதத்தில் பவனி வரும் காட்சி அவர் மனக்கண்ணில் தெரிந்தது.
அதிமஹா ருத்ரம், ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் (12 நாட்களுக்கு மேல், ஒரு நாளைக்கு சுமார் 4000 பேருக்கு சாப்பாடு, நஷ்டக்கணக்கு, அதற்கென புடவை, சமையலறை சாமான்கள் வியாபாரம்), அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஹனுமன் பவன ஹோமம். ஆஞ்சநேயன் அக்னியில் ப்ரதிக்க்ஷம்.
1994ல் ஸ்ரீ மஹா பெரியவா சித்திக்குப் பின் ஒரு வருடம் விடாமல் இன்று வரை ஸ்ரீ ஸ்வாமிகளின் ஜெயந்தி, வைகாசி அனுஷத்தில்.
பின், திருச்சிக்கு மாறினார். அகிலாண்டேஸ்வரி கோவில், ஸ்ரீ மடம் என்று ஸ்ரீ பெரியவா கைங்கர்யம் தொடர்ந்தது. ஆலயத்தில் நடந்த சண்டி ஹோமத்தில் அக்னி ஜுவாலைகளுக்கு இடையே அம்பிகை ப்ரத்திக்க்ஷமானாள்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் கொள்ளிடத்துக்கும், அய்யன் வாய்க்காலுக்கு இடையேயான (திருவரங்கத்தைப் போல்) பகுதியை தன்னிடமிருந்த பணத்தைப் போட்டு வாங்கி தன்னந் தனியே அங்கேயே இருந்து கொண்டு கோவிலைக் கட்டி இன்று ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி, தன் இரு மகன்கள், ஸ்ரீ வ்யாஸ பகவான், ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ பெரியவாளுடன் ஜகஜ்ஜோதியாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
* இன்னும் ஏராளமாக இருக்கிறது மாமியைப் பற்றி எழுத. சுமார் 50 பதிவுகளில் சொன்னதை இந்த ஒரு பதிவில் அடக்கி விட முடியாது. இன்றும் கூட ஒரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. யாரோ ஒரு விவசாயி முப்பது கட்டு வைக்கோலை வெளியூரிலிருந்து கொண்டு வந்து இறக்கி வைத்து விட்டு காசு எதுவும் வாங்காமல் போயிருக்கிறார், நாளைக்கு என்ன பண்ணப் போகிறோம் என்று மாமி கவலைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில். கோ ஸம்ரக்ஷணை தொடர்கிறது.
மாமிக்கு இப்போது தேவைப் படுவதெல்லாம் ஆஸ்ரமத்தில் சர்வீஸ் செய்ய ஸ்ரீ மஹா பெரியவா அத்யந்த பக்தர்கள். ஒவ்வொரு தம்பதியும் 3-5 நாட்களுக்கு சேவை செய்தால் கூட போதுமானது. ஆர்வம் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ளவும் (98430 18991). அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்.

Shared from: Krishnamurthy Krishnaiyer

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

தெரியறதா?

தெரியலை.

கட்டுரையாளர்: திரு.பிச்சை ஐயர் சுவாமிநாதன் அவர்கள்

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது
மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….

மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்‌ஷா ஓட்டி.

கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.
கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான்.

பெரியவர் கைமாறினார்.

பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது.

உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.

தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி. மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.

தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார் பெரியவா.

பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்?

ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான். அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவா. சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.

தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா.
இப்போது அங்கு இருப்பது மஹாபெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.

இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மஹாபெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்.

சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹாபெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.

காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹாபெரியவா தன் தலையில் வில்வமாலை ஒன்றை வைத்துக் கொண்டு ‘தெரியறதா” என்று கேட்டார் தீர்க்கமாக.
கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர் ‘ தெரியலை’ என்றார்.

இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹாபெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹாபெரியவா. தலையில் வைத்துக் கொண்டார். அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்து ‘இப்ப தெரியறதா? என்று கேட்டார் மஹாபெரியவா.

ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர் ‘தெரியலை’ என்றார் மீண்டும்.

ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹாபெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோ” என்றார் மஹாபெரியவா.

“ஊஹும்” என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.

அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா? என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியல’ என்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.

அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய் ‘இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்’ என்று சொல்லி அனுப்பினார்.
அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது.
தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது

காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம்.
காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?

அது மகா பெரியவாளுக்கும் அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறு ‘தெரியறதா’ என்று கேட்டார் பெரியவா.

அவ்வளவு தான்…அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.
மெள்ளச் சுதாரித்துக் கொண்டு ‘எல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவா’ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார். தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.

பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.

விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹாபெரியவா. ஓடோடி வந்தனர்.

‘இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.

உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள். தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமி… இனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்’ என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.

பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.

‘உனக்குப் புரியறதாடா பெரியவா ‘தெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?- முதலாமவன்.

இல்லேடா…என்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்? இது இரண்டாமவன்.

நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியல’னு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்கு’ என்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.

இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.

அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.

முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.

அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது.

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹாபெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹாபெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது.

ஆக, பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது.

சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹாபெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹாபெரியவா.

அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும் ‘தெரியல’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார். இதன் பின்னால் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும்?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

எனக்கு கல்பூரம் காட்டு!…
ஸமுத்ரகரையோரம் இருக்கும் மணல்களையும், வானத்து நக்ஷத்ரங்களையும் எண்ணுவது எப்படி அஸாத்யமோ… அப்படித்தான் நம் பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவித்த ஜீவகோடிகளை எண்ணுவது!

திருச்சியை சேர்ந்த ஒரு பக்தை ஸ்ரீமதி நாகலக்ஷ்மி. காமாக்ஷிதான் பெரியவா! என்ற அஸாத்ய நம்பிக்கை! ஆனால் பெரியவாளை வெளியூரில் வந்து தர்ஶனம் பண்ணுவதற்கு மனஸு முழுக்க ஆசை இருந்தாலும், குடும்ப சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

திருச்சிக்கு பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் பெரியவா முகாம். ஒருநாள் எப்படியோ ஸம்ஸார சூழலிலிருந்து விடுபட்டு, பெரியவாளை தர்ஶனம் பண்ண அந்த முகாமுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மா.

மத்யானவேளை. பெரியவா ஸ்ரீ சந்த்ரமௌளீஶ்வரர் பூஜை பண்ணிய மேடையிலேயே ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு, அங்கு வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நாகலக்ஷ்மியும் ஒரு தட்டில் கல்பூரத்தை ஏற்றிக்கொண்டு பெரியவாளான காமாக்ஷிக்கு, கல்பூர ஹாரத்தி காட்டுவதற்காக, பெரியவாளுக்கு அருகில் சென்று ஹாரத்தி தட்டை உயர்த்தியதும், படக்கென்று பெரியவா முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டுவிட்டார்!

‘யதேச்சையாக நடந்தது இல்லை’ என்பது போல், மறுபடி மறுபடி ஹாரத்தி தட்டு உயரும் போதெல்லாம், பெரியவா முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டுவிடுவார்!

கடைஸியில், பெரியவா ஏதோ முகத்தை கொஞ்சம் காட்டிய ஸமயத்தில், இந்த அம்மா ஹாரத்தி காட்டியதும், விருட்டென்று பெரியவா எழுந்து உள்ளே போய்விட்டார்!

” அம்பிகே! என்ன மஹாபாவம் செய்தேன்? அம்மா! காமாக்ஷி! ஏம்மா இந்த ஸோதனை?..”

பாவம்! அழுது கொண்டே, ஸ்ரீ சந்த்ரமௌளீஶ்வரருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீ த்ருபுரஸுந்தரிக்கு அந்த ஹாரத்தியை காட்டிவிட்டு, கண்ணீரும் கம்பலையுமாக முகாமுக்கு வெளியே வந்துவிட்டாள்.

“அம்மா…. அம்மா! நில்லுங்கோ! பெரியவா உத்தரவாறது…”

பின்னாலேயே ஒருவர் ஓடி வந்தார்…..

“என்னையா? பெரியவாளா?….. இருக்காது….”

நொந்த மனஸு, நம்ப மறுத்தது.

“ஒங்களத்தாம்மா….. கூப்படறார்…. வாங்கோ!..”

பெரியவா சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். தயங்கியபடி உள்ளே நுழைந்து நமஸ்காரம் செய்தாள்.

“எனக்கு காட்டணும்-னு கல்பூரத்தை ஏத்திட்டு, அங்க… பூஜைல அம்பாளுக்கு காட்டிட்டோம்-னு கொறைப்பட்டுக்காதே! ம்….! இப்போ ஹாரத்தி எடு….”

கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

தட்டு, கல்பூரம், வத்திப்பெட்டி எல்லாம் கைகள் நடுங்க, பையிலிருந்து வெளியே வந்தன!

ஆனந்தமும் ஒருவித ஷாக்-தானே!

இதோ…… தீபமங்கள ஜோதி நமோ நமோ….. !

ஜிலுஜிலுவென்று சுடர்விடும் கல்பூர தீபத்தை, பெரியவாளுடைய திருமுகமண்டலத்தை நோக்கி உயர்த்தி அந்த தீப ஒளியில் பெரியவாளைப் பார்த்தாளோ இல்லையோ…….

“அம்மா! அம்மா!…….”

மயங்கி விழாத குறையாக கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருக, கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அந்த பரமபக்தை!

என்ன கண்டாள்?……

செங்கையிற் கரும்புவில்லும், மலரம்பும், பாஶாங்குஶமும் கொண்டு, பங்கயத் திருவதன புன்னகையும் தான் கண்டு….. என்று ஸாக்ஷாத் பாரமாம்பிகையே அங்கு ‘ஜம்மென்று’ அமர்ந்திருக்கக் கண்டிருக்கிறாள்!

நாம-ரூபமில்லாத ப்ரஹ்மம், வேண்டியவர் வேண்டியபடி, இஷ்ட ரூபத்தில் காட்சி கொடுக்கும், அவரவர் பக்திக்கேற்ப!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share


சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. - காஞ்சிப் பெரியவர்

காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.

காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்… திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!

அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.

பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.

இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.

ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.

அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.

“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர்.

கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

தமிழில் ஒரு கதை. இளம்பெண்களின் கும்பல் ஒன்று ஆற்றங்கரைக்குச் சென்றுகொண்டிரு ந்ததாம். அங்கே ஒரு காவி உடை உடுத்த துறவி, ஒரு செங்கல் மீது தலைவைத்துப் படுத்துக்கொண்டிருந்தாராம். பெண்களில் ஒருத்தி "இதோ பாருடி, இந்தத் துறவிக்குத் தலையணை வேண்டியிருக்கு" என்று. சொல்லிவிட்டுப் பெண்கள் சென்றுவிட்டனர். இதைக் கேட்ட துறவி, தான் இனி செங்கல் கூட தலைக்கு வைத்துக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானித்து, செங்கல்லை எறிந்துவிட்டு, படுத்திருந்தானாம். பெண்கள் கும்பல் திரும்பி அதே வழியில் வரும்போது திரும்பவும் துறவியைக் கண்டனர். அதே பெண் திரும்பவும் கூறினாள் "பாருங்கடி, நாம் சொன்னதும் இவருக்கு ரோஷம் வந்துவிட்டது" என்று. இப்போது துறவி என்ன செய்வார்?

அதிலிருந்து அந்தத் துறவி தெரிந்துகொண்டது - உலகோரின் சொல்லுக்காக அஞ்சி ஒரு செயல் செய்வதோ, அல்லது செய்யாமலிருப்பதோ, தவறென்று.

எனவே, காஞ்சி மகாபெரியவர் மேனாவை விடுத்தது யாரோ ஒருவர் குறை கூறினதால் என்று நான் நம்பத்தயாராக இல்லை.

நான் தவறாகக்கூறியிருந்தால் மன்னிக்கவும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

அண்மையில் குளித்தலை அருகே ஒரு வாஜபேய யாகம் நடந்தது. அனுஷ்டித்தவர் மாத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ருக்வேத வித்வான் ப்ரஹ்மஶ்ரீ ராமக்ருஷ்ண ஆச்சார். அவரது யாக பூர்த்தி தினத்தன்று மாத்வ ஸம்ப்ரதாய பாலிமாரு மடத்தைச் சேர்ந்த ஸ்வாமிகள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் யாகம் செய்தவரின் தம்பி ருக்வேத வித்வான் ப்ரஹ்மஶ்ரீ தாமோதர ஆச்சார் பொதுசபையில் கூறியது மற்றும் அவர்கள் வெளியிட்டுள்ள புஸ்தகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் -

இன்று மாத்வ ஸம்ப்ரதாயத்தில் ருக்வேதத்திற்கு மக்கள் இருக்கிறார்களென்றால் அதற்குக் காரணம் காஞ்சீ காமகோடி பீடத்தின் 68வது ஆசார்யர் ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர். முன்பொருமுறை வேத பாராயணம் ஒன்று நடந்துகொண்டிருந்த பொழுது அநேக ஸ்மார்த்த வித்வான்கள், சில வைஷ்ணவ வித்வான்கள், தவிர ஒரே ஒரு மாத்வ வித்வான்தான் அமர்ந்திருந்து பாராயணம் செய்துகொண்டிருந்தார். அவர் பெயர் பத்மநாப ஆச்சார்.

எல்லோருக்கும் சம்பாவனை செய்யும்பொழுது பெரியவா அவரை அழைத்து “யாரிடம் அத்யயனம் செய்தீர்” முதலிய விவரத்தைக் கேட்டார். அவரது வேத குரு திருவானைக்காவல் மடத்தில் இருந்த ஒரு ஸ்மார்த்த கனபாடிகள். விவரங்களைக் கேட்டு பாராட்டி இருமடங்கு சம்பாவனை கொடுத்து அனுப்பினார்கள். அது ஆச்சார் அவர்கள் மிகவும் வறுமையில் இருந்த சமயம். இருப்பினும் வீட்டிற்கு வந்து மிகவும் மன உறுத்தலில் சரியாக தூக்கம் வராமலிருந்து மறுநாள் பெரியவாளிடம் சென்று கொடுத்த இருமடங்கு சம்பாவனையைத் திருப்பி ஸமர்ப்பித்து “எனக்கு இதற்குத் தகுதியில்லை. வேதம் போதுமான அளவு எனக்கு மனப்பாடமாக இல்லை.” என்று கூறியிருக்கிறார்.

பெரியவா சிரித்து “கவலைப்படாதே” என்று சொல்லி வேறிரண்டு வித்வான்களைக் குறிப்பிட்டு “அவர்களுடன் ஆவர்த்தி செய்து வா, வேதம் உனக்கு சித்திக்கும்” என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்கள். மேலும் “மாத்வ ஸம்ப்ரதாயத்தில் அத்யயனம் செய்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே பாடம் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடு. உனது மூன்று ஆண் பிள்ளைகளையும் வேதத்திற்கே சேர்ப்பி” என்று. அவரும் அவ்வாறே செய்தார். அவரது பிள்ளைகள் ராமக்ருஷ்ண ஆச்சார், பரசுராம ஆச்சார், தாமோதர ஆச்சார் மூவரும் ருக்வேத அத்யயனம் செய்தனர்.

அப்பொழுதே பெரியவா வேத ரக்ஷண நிதி ட்ரஸ்டை ஏற்படுபத்தும்பொழுது “இது சங்கர மடத்துடையது மட்டும் என்று யாரும் எண்ணக்கூடாது. வேதம் என்பது ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் எல்லோருக்கும் பொதுவானது.” என்று சொல்லி மாத்வ குழந்தைகள் வேதம் கற்பதற்கும் இப்படி தனி கவனம் கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள் பெரியவா.

பிறகு பத்மநாப ஆச்சாரிடம் பெரியவா “மாத்வ ஸம்ப்ரதாயத்தில் அக்னிஹோத்ரிகள் யாரும் இல்லை. ஆகவே அக்னிஹோத்ரம் எடுத்துக்கொள்.” என்று ஊக்குவித்தார். சில காலம் பிறகு ஸோம யாகம் செய்யவும், பிறகு அதிலும் குறிப்பாக வாஜபேய யாகம் செய்யவும் பெரியவா தான் ஊக்குவித்திருக்கிறார். 1980களில் இந்த யாகம் நடந்திருக்கிறது.

பத்மநாப ஆச்சாரின் மகன்கள் ஒவ்வொருவரும் ருக்வேத மூலம் முடித்த பிறகு மேலும் பதம் க்ரமம் முதலியவையைக் கற்கவும் பிறகு ஷடங்கம் கற்கவும் ஊக்குவித்தார் பெரியவா. மேலும் அவர்களது ஸம்ப்ரதாயப்படி மாத்வ வேதாந்தம் கற்பதற்கு பம்பாயில் மாத்வ பண்டிதர் ஒருவரிடம் ஏற்பாடு செய்து அங்கு தங்குமிடம் மற்றும் ஊக்குவிப்புத் தொகை மாதாந்தரம் ௹ 200 ஏற்பாடு செய்தார்கள் பெரியவா.

நடுவில் ஒருசமயம் பெரியவா தரிசனத்திற்கு அவர்கள் வந்த பொழுது பெரியவா என்ன பாடம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு பதில் சொல்ல இவர்கள் தயங்கினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஆகிக்கொண்டிருந்த பாடம் மாயா வாத கண்டனம், அதாவது அத்வைதத்தைத் தவறு என்று சொல்வது. அத்வைத பீடாதிபதியான பெரியவாளிடம் எப்படி இதைச் சொல்வது என்று தயங்கினார்கள். அவர்களது தயக்கத்தைப் புரிந்துகொண்டு “பாதகமில்லை, சொல்லு” என்று ஊக்குவித்து நடந்த பாடத்தைச் சொல்லிக்காட்டும்படியும் தூண்டி கேட்டு மகிழ்ந்து சால்வை போர்த்தி ௹ 300 சம்பாவனையும் செய்து அனுப்பினார்கள்!

அத்வைதமென்றால் அதில் த்வைதத்திற்கும் இடம் உண்டு. ஏனெனில் நாமும் வ்யவஹார காலத்தில் த்வைதமாகத் தானே (அதாவது நீ வேறு நான் வேறு என்றுதானே) இருந்துகொண்டிருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர் பேரிலும் த்வேஷமின்றி அவரவர்கள் ஸம்ப்ரதாயப்படி அனைவரும் இருக்கவேண்டும் என்பதே பெரியவாளின் கருத்து.

தந்தை அக்னிஹோத்ரம் எடுத்துக்கொண்டதற்கு சுமார் 30 வருடங்களுக்குப் பிகு அவரது மகன்கள் மூவரும் மந்த்ராலயத்தில் அக்னிஹோத்ரம் செய்துகொண்டனர். அதிலும் மூத்த மகனை மந்த்ராலயத்தில் இருந்து மாத்வர்களிடையே வேதாத்யயனம் செய்தவர்கள் எண்ணிக்கை மேலும் பெருக ருக்வேத அத்யாபனம் செய்துவரும்படி ஆஜ்ஞாபித்தததும் பெரியவாளே. மூன்று மகன்களும் நமது இன்றைய பெரியவா நடத்தும் ஶ்ரீமடத்து அக்னிஹோத்ர ஸதஸ்ஸில் பங்கேற்றுள்ளனர். மூத்தவரும் நடுவரும் ஸோம யாகம் செய்துள்ளார்கள். (நடுவர் தற்சமயம் இல்லை. அவர் காலகதி அடைந்து அக்னிஹோத்ரிகளுக்கான சிறப்பு விதிப்படி அவரது சடங்குகள் நடந்தேறின.)

மூத்தவர் தற்சமயம் வாஜபேய யாகம் செய்திருக்கிறார். இளையவரும் ஸோம யாகம் செய்யவிருக்கிறார். அவரவர்கள் இருக்குமிடத்தில் மாத்வ ஸம்ப்ரதாய மாணவர்களுக்கு ருக்வேதம் சொல்லிவைத்து அவர்களது ஸம்ப்ரதாய ஆசாரங்கள் மற்றும் பூஜை முதலியவற்றையும் அக்னிஹோத்ரத்தையும் அனுசரித்து வருகிறார்கள். இன்றும் எங்கள் ஸம்ப்ரதாயத்தில் இவ்வாறு வேதம் அக்னிஹோத்ரம் ஸோம யாகம் முதலியவை தொடர்ந்து வந்து இத்தனை வித்யார்த்திகள் வேதம் கற்றிருப்பதற்குக் காரணம் பெரியவாளே என்றும் அவர்களது குடும்பங்களுக்கு பல வகையிலும் பெரியவா செய்த அனுக்ரஹத்தையும் சொல்லி மகிழ்கிறார்கள் பத்மநாப ஆச்சார் குடும்பத்தினர்.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

repeat, deleted.
Last edited by kvchellappa on 12 Jan 2017, 10:13, edited 1 time in total.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

Experience With Maha Periyava : January 8th 1994
https://www.youtube.com/watch?v=Fn8sEIlsVo0

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri KVC avl,
Excellent ! Thanx for sharing.

A share

கர்த்தர் யார் ?-
காஞ்சி மஹான்

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்.

ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன்
வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?

"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.

காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.

"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு!

திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார்.

அதுல அன்பைப்பத்தி, மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது.

அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு.


நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடியிலிருந்தே.... நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!

ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை பண்றேள்!

ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ பேசறதில்லை!

ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி !

ஒரு தாயார், தன்னோட கொழந்தை துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....

நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய் வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் !

எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர ஜனங்கள் ..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."

பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்!

உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.


ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!

"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்....

"கர்த்தர்...ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்!

ஆனா மத்தவாளை நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."

பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா.

அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை!

ப்ரசாரம் பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள்,சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது.

சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள் அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காடடியிருக்கிறார்கள்.

எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Artist Silpi’s works are indeed masterpieces.

Those were the Days, when, Ananda Vikatan used to bring some amazing sketches of Shilpi of almost all the Temples of Tamil Nadu and Bhaskara Thondaiman used to elaborately write about these Ancient Temples!

It was a moment in unsung history when the Mahaperivar of Kanchipuram granted Aritst Silpi an audience, a moment that the artist had waited for over a month foregoing his work; it was a moment that changed the life of Artist completely.

In the late hours of the night, after the entire world had sunk into deep slumber, a dialog commenced between two people. One was a revered saint, loved and respected by all and the other was an artist, talented but unsung. Within the sacred room, in the light of an oil lamp, the bright and clear eyes of the saint lit up as he whispered the truth to the painter. He said, “You have lived many lives, and in all of them you have worshipped the Lord sincerely. You have been a Sthapathi at various temples in your past lives where you have sculpted various forms of the Divine. This is your last birth. Do not dilute this sacred skill anymore. Take a vow that you shall paint the form of the divine alone hence forth. Your talent is divine, you are blessed, and you are already aware of the sciences of the Shila Shastra and Samudrika Lakshanam, you need no more education. Go into the world again, at sunrise tomorrow, with a goal to bring the divine into every home, through your paintings.”

The artist took leave and went across the land, to the remotest temples across the country to capture the very form of the Divine into his canvas. It was not an easy task that lay ahead, for the restrictions were tough, and only the orthodox and pure hearted could perform such a miraculous feet. He was told, “You shall not use your imagination, you shall not change anything that you see within the shrine chambers, you shall follow the law of Shilpa Shastra, and you shall capture the character of the Divine in various forms as described in the Samudrika Lakshanam. You shall not use extra lights, you shall work within the limited lamps lit within the chamber, and capture the changing swarupa(features) of the Divine as you meditate through the experience of painting. In this way, you shall capture the power of the Divine within the shrine chamber into your painting, the secret of which shall be expressed through the strokes of your brush.”

The artist did as told, and started a whole new life dedicated to the Lord, to his Guru, his guide who blessed his every breath through the rest of his life.

Artist Silpi, was a family man, and his wife was a staunch devotee of the Paramacharya. As age took over, she was unable to visit the saint at the Kanchi Matt and seek His divine blessings. She requested her husband to go and capture the essence of the Paramacharya in his painting and make a portrait that she could worship at home for the rest of her life. In the year 1956, Artist Silpi made another visit to the Saint to capture His portrait, for his wife. It was a difficult proposition as the Saint did anything but co-operate. He moved around, to make it extremely difficult for the artist, testing his devotion and his patience to capture His being. When it finally ended, the painter held a master piece in his hand. An expression of devotion, one that captured every finger and toe that the Saint otherwise hid, one that even captured the divine light the enveloped the form of the Saint. It was a true masterpiece. Within the color the Saint stares on, the clarity in His eyes so beautifully captured, the vilva leaves still so fresh, the divine glow of spiritualism in His being which no photograph could ever catch. The only lamp that lit the room lay at His feet, a light that lit up so much of his Divine form, this celebrated Saint has never been captured such. Within the chamber where he posed and watched an artist paint, He blessed this work by granting us a vision of His divine presence for the world to feel, to imbibe.

Kanchi Mahaperivar Sri Jagath Guru Chandrasekarendra Saraswathy Swamigal lives on in the painting of Artist Silpi.

Nadamadum Deivam!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

"மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?"-பெரியவா கேள்வி

(2)"விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?"

சொன்னவர்-பட்டு ஸாஸ்திரிகள்
நன்றி-பால ஹனுமான்.

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,"மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,"விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?"

...
யாரோ ஒருவர்,"விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்" என்றார். அனைவரும் "ஆம்" என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,"குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?" மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார்.........

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,"பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்" என்றார். அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,"ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா" என்று கேட்டார். ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், "என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், "ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்" என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,"இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்" என்றார். எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,"சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்" என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ரநாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். ஸ்ரீவாசுதேவர் கூறினார்,"உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே 'சுத்த ஸ்படிக' மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து 'சுத்த ஸ்படிகம்' உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்" என்றார்.

'சுத்த ஸ்படிகம்' அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. 'ஸ்வேதம்பரராகவும்' 'ஸ்படிகமாகவும்' இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த 'சுத்த ஸ்படிக' மாலையே உலகின் முதல் 'வாய்ஸ் ரிகார்டராக', அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது...........”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்..

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

thanjavooran wrote: A share

கர்த்தர் யார் ?-
காஞ்சி மஹான்
மன்னிக்கவேண்டுகின்றேன். இது உண்மையா அல்லது கட்டுக்கதையா? என் கருத்தில் இது நம்பத்தக்கதாக இல்லை. உண்மையென்றால், தயவு செய்து ஆதாரம் கூறவும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share



" நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!"

(தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்ப தாராளம்,!-தாயும் ஆன பெரியவாளுக்கு)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-143
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன் பெண்ணை அழைத்துக் கொண்டு பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள்.

"ரொம்ப நாள் கழிச்சு முழுகாமல் இருக்கு. அதான் கவலையாயிருக்கு. நல்லபடியா குளி குளிக்கணும்.
ரொம்பத் தொலைவிலேர்ந்து நடந்து வர்றோம்.சாமி ஆசீர்வாதம் பண்ணணும்" -பெண்மணி

பெரியவாள் கையைத் தூக்கி ஆசி வழங்கினார்கள்.

தாயார் தொடர்ந்து பேசினாள்; " நாங்க ரொம்ப ஏழைங்க சாமி, முழுகாமல் இருக்கிற மவளுக்கு, வாய்க்கு வேண்டிய பதார்த்தங்களை வாங்கிக் கொடுக்கக்கூட முடியலை. சரியா சாப்பாடு போடவும் வசதியில்லை. அடுப்புச் சாம்பலை துண்ணுது."

அந்த சமயம் ஸ்டேட் பாங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டித் தயிர் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

"நீயே அந்த டப்பாவை அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்."- தயிர் டப்பா இடம் மாறியது.

கோபாலய்யர் (என்ஜினியர்) பிறந்தநாள் வழக்கப்படி, ஒரு டின் நிறைய இனிப்பு - உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார். வேத பாடசாலை மாணவர்களுக்காக,

"கோபாலா! அந்த டின்னோட எல்லாத்தையும் அந்தப் பெண்கிட்ட கொடுத்துடு.." - டின் இடம் மாறியது.

அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார். "அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு."

ராமுவுக்குப் பரம சந்தோஷம்! பெரியவாளே ஆக்ஞை பண்ணுகிறார்கள்! அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தார்.

தாயும்,மகளும் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டு சென்றார்கள்.

அசோக் நகர் ராமுவைப் பார்த்து, "எவ்வளவு ரூபாய் கொடுத்தே?" என்று பெரியவாள் கேட்டார்கள்.

பல பேர் எதிரில் தொகையைச் சொல்வதற்கு அவருக்கு தயக்கமாக இருந்தது.

"பெரியவாள் சொன்னார்கள் என்றால், லட்சக் கணக்கில் கொண்டு வந்து கொட்டுவதற்கு பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள்.நான் எம்மாத்திரம்?"

பெரியவாள்,ராமுவிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. சொல்லாமல் தப்ப முடியாது.

"நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது.அதைக் கொடுத்தேன்..."

"நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க சொல்லலையே" - பெரியவா

"இப்போவெல்லாம் டெலிவரிக்காக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போனால்கூட மூணு நாலு ஆயிரம் ஆயிடறது.." - .ராமு என்கிற ராமன்.

சில நிமிஷங்களுக்குப்பின் பெரியவாள் சொன்னார்கள்;

" நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!"

"போதும்! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும்!" என்று நெஞ்சுருகச் சொன்னார், ராமு என்கிற ராமன்.
பெரியவாள் தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்ப தாராளம்,!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா சரணம் !!!

"மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ!"

சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு
சமர்ப்பிக்கும்போது பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.
அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.
"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை! பழத்த பாத்தியோ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு! ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே! நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"ம்ஹும்! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக,
"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?..அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறாப்ல கட்டி தொங்க விடுங்கோடா!" என்று சொன்னார்.
அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால கூட நினைக்க முடியாது.
சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக்கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?
வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]
மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு; வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ!" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!
சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ
சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார். மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழம்? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
courtesy Shri CRama avl

வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது: காஞ்சி பெரியவர்!

ஒரு சமயம் மஹா பெரியவர் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கி இருந்தார். ஒரு அரசமரத்தின் கீழ் இளைப்பாறிய அவர் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொள்வார். முன்னால் திரை போட்டிருக்கும். பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் சமயத்தில் மட்டும் திரையை விலக்குவார்கள்.

அன்று சென்னையில் இருந்து வீணை வித்வான் ஒருவர் பெரியவரைத் தரிசிக்க நண்பருடன் வந்திருந்தார். பெரியவரைத் தரிசனம் செய்த அவர் அவரது அனுமதி பெற்று வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பக்தர்கள் எல்லாரும் அந்த இசை மழையில் நனைந்து கொண்டிருந்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட தயாரானார் வித்வான்.

பெரியவர் அவரிடம் அந்த வீணையை என்னிடம் கொடு. நான் அதை வாசிக்கலாம் இல்லையா? என்று கேட்டார். பெரியவர் வீணை வாசிக்கப் போகிறாரா என்று எல்லாருக்கும் திகைப்பு. வித்வான் உட்பட..! ஆனால் எதற்காக வாசிக்க இருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.

வீணையைக் கையில் வாங்கிய பெரியவர் சுருதி கூட்டி வித்வானிடம் காட்டினார். நான் சுருதி கூட்டியிருப்பது சரியா இருக்கான்னு பாரு என்றார்.
வித்வானும் சரியா இருக்கு என்று சொல்ல பெரியவர் வீணை வாசிக்க ஆரம்பித்து விட்டார். சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்! வித்வான் பெரியவரின் பாதங்களில் விழுந்தார்.

கன்னத்தில் போட்டுக் கொண்டு பெரியவா! என்னை மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்! தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே கதறி அழ ஆரம்பித்து விட்டார். பெரியவர் வாசித்து முடித்தார். பின் வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது. கவனமாக இரு என்று சொல்லி ஆசிர்வாதமும் செய்தார்.

வித்வானுடன் வந்த நண்பருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. பின் நண்பர் வித்வானிடம் இங்கே என்ன நடந்தது? நீ தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே! பெரியவர் வித்யாகர்வம் கூடாது என்றார். அப்படி என்ன தான் இங்கு தவறு நடந்தது? என்றார்.
வித்வான் திகைப்பு கலையாமல் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
கைலாய மலையைத் தூக்க முயன்ற ராவணனின் கைகள் மலையின் அடியில் சிக்கிக் கொண்டன. அப்போது அவன் சாமகானம் இசைத்து சிவனை மகிழ்வித்து விடுதலை பெற்றான் இல்லையா! அது போல நானும் இங்கே சாமகானம் வாசிக்க துவங்கினேன். ஆனால் திடீரென எப்படி வாசிப்பது என்று மறந்து போய்விட்டது. இது யாருக்கு தெரியப்போகிறது என ஏதோ ஒன்றை வாசித்து நிறைவு செய்து விட்டேன். பெரியவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். என்னிடம் வீணையை வாங்கி அந்தப் பகுதியை சரியாக வாசித்து நிறைவு செய்து விட்டார்.

பெரியவர் ஸர்வக்ஞர் (எல்லாம் அறிந்தவர்). அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போச்சே! அபச்சாரம் பண்ணிட்டேனே! அதனால் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்றார்.

நமக்கு தெரிந்ததைச் செய்ய வேண்டும். தெரியாத விஷயங்கள் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இதன் மூலம் வாழும் தெய்வமான மஹா பெரியவர் நமக்கு தெரியப்படுத்தியுளார்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

ஏண்டா….அவன் என்ன சொன்னான்?
தேனம்பாக்க க்ஷேத்ரம். பெரியவா விஶ்ராந்தியாக கிணத்தடியில் அழகாக அவருக்கே உரிய பாணியில் உடலை குறுக்கிக் கொண்டு, கால்களை பின்னிக்கொண்டு அமர்ந்திருந்தார். அதிக கூட்டம் இல்லை. அனேகமாக எல்லாரும் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

யாருமில்லாத போதுகூட, எப்போதுமே, யாருக்காவது அனுக்ரஹம் நடந்துகொண்டே இருக்குமே!

பெரியவா தன் திருவிழிகளை சுழல விட்டார்……..

“ஏண்டா…..அங்க யாரோ நிக்கறாப்ல இருக்கே! என்னன்னு கேளு….….”

ஆம்! அங்கு ஒரு யுவா [இளைஞன்], கண்களில் பக்தி பரவஸம் மின்ன, இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பிக் கொண்டு தன்னை மறந்த நிலையில் பெரியவாளை தர்ஶனம் பண்ணிக் கொண்டிருந்தான்.

பாரிஷதர் அவனிடம் சென்று

” என்னடா…..கொழந்தே! பெரியவா தர்ஶனத்துக்குத்தான வந்த? கிட்டக்க போய் நன்னா தர்ஶனம் பண்ணிட்டு, நமஸ்காரம் பண்ணிக்கோப்பா! …”

அந்த பையனின் விழிகள் பெரியவாளை விட்டு அங்கே, இங்கே நகரவில்லை! இவர் சொன்னது அவன் காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை!

“ஆமா…….ஒனக்கு என்ன வேணும்? கிட்டக்க போப்பா..”

பொட்டில் அடித்தது போல் பதில் வந்தது

” நா………..பெரியவா மாதிரி ஆகணும்!!”

ஈஶ்வரா !………

பாரிஷதருக்கு உள்ளுக்குள் பயங்கர கடுப்பு !

“இங்க பாரு….இந்த மாதிரில்லாம் ‘தத்துபித்து‘ன்னு பெரியவாட்ட போய் கேக்கப்டாது! என்ன? புரிஞ்சுதா? ”

அந்தப் பையன் இவரைப் பார்த்து முழித்த முழிப்பில், அவன் கேட்காமலேயே, ஏகப்பட்ட அர்த்தங்கள் த்வனித்த கேள்விகள் பிறந்தன!

“பின்ன? பெரிய சக்ரவர்த்திகிட்ட போய், உப்பு, புளி வேணும்னா கேப்பா?…பகவான்கிட்ட பகவானையே கேக்காம, அழியற ஶரீர ஸௌக்யங்களை, ஸுக போகங்களையா கேப்பா?…..”

“ஸாதாரணமா எல்லாரும் கேக்கறா மாதிரி……வேலை, ப்ரமோஷன், கல்யாணங்கார்த்தி, வ்யாதி ஸொஸ்தம், படிப்பு, பதவி…ன்னு இப்டித்தான் கேக்கணும். என்ன? ஸரியா?…”

பையன் “ஒங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்!..” என்பது போல் அவரைப் பார்த்தான்.

“வா…. வந்து நமஸ்காரம் பண்ணிக்கோ!….”

பெரியவா முன்னால் நின்ற இளைஞன், பெரியவாளுக்கு நான்கு முறை நமஸ்காரம் பண்ணினான்.

பேச்சே வரவில்லை!

கண்களோ… பெரியவாளின் அம்ருதவதனத்தை ஆனந்தமாக பருகிக் கொண்டிருந்தன!

இவன் வாயை திறந்து ஏதாவது ‘ஏடாகூடமாக‘ கேட்டுவிடப் போகிறானே என்று, பாரிஷதர் தானே முந்திக்கொண்டார்……

“இந்த பையனுக்கு.. பெரியவா அனுக்ரஹம் வேணுமாம்………”

உரத்த குரலில் அவனுக்கு பதிலாக பேசி விட்டார்.

பெரியவாளுக்கு ‘வயஸான‘தால் காது கேட்பதில்லை என்று எல்லோருமே சற்று உரக்க பேசுவார்கள் !

[“ஓஹோ!…எனக்கு காது கேக்காதுன்னு, கத்தியா பேசற? இரு… சொல்றேன்!…”]

பையனுக்கு ப்ரஸாதம் குடுத்தார். சென்றுவிட்டான்.

அப்பாடா! என்றிருந்தது…. அந்த பாரிஷதருக்கு….

இனிதான் சூடு!

அந்த பாரிஷதரை அழைத்தார்…..

” ஏண்டா……அவன்ட்ட ரொம்ப நேரமா பேசிண்டிருந்தியே?…… என்ன சொன்னான்?”

பாரிஷதரின் தொடை லேஸாக நடுங்குவது போல் இருந்தது.

என்னத்தை சொல்றது? உண்மையையா? பொய்யையா?…….

ஸத்யஸ்வரூபத்திடம் பொய்யா?

“இல்ல………வந்து…… அவனுக்கு…. பெரியவா மாதிரி ஆகணுமாம்! ……”

“நீ என்ன பதில் சொன்ன?...”

“…………….”

“இந்த மாதிரில்லாம் தத்துபித்துன்னு பெரியவாட்ட கேக்கப்டாது….ன்னு சொல்லிட்டியோ?”

ஸுமார் 25 அடி தள்ளி நின்று பேசியது…..!!!

“கடவுளே! தூண்டிலில் அகப்பட்டாச்சு. இவருக்கா காது கேட்காது? எல்லா தெசைலயும் கோடிகோடியா காதுகளும், கண்களும், கைகளும் வெச்சிண்டு, நம்ம முன்னால, ஒரு ‘ஸ்வாமிகள்’னு ஒரு வேஷம் போட்டுண்டு, காஷாயம் கட்டிண்டு உக்காந்துண்டு இருக்காரே!… இப்போ…. வகையா மாட்டிண்டேனே!”

“ஆ……..மா…..பெரியவா”

‘அப்பாடா! எப்படியோ உண்மையை பேசியாச்சு !’

மனஸ் லேஸாகியது. [அதுதான் ஸத்யத்தின் சிறப்பு]

ஆனால், அதோடு விட்டாரா?

இதோ ஒரு ‘குண்டு‘ வருகிறது……

“நீ…அப்டி சொல்லியிருக்கப்டாது.! அவன், ஏன் அப்டி கேட்டான்னு ஒனக்கு தெரியுமோ? ஒனக்கு என்ன தோணியிருக்கும்?…… அவன், என்னை மாதிரி பீடாதிபதியா ஆகணும்னு ஆசைப்படறதா நெனைச்சிண்டியோ?… குரு பீடத்ல ஒக்காந்துண்டுட்டா….. எல்லாரும்… ப்ரைம் மினிஸ்டர்லேர்ந்து… க்ரைம் மினிஸ்டர் வரை வந்து நமஸ்காரம் பண்ணுவா.! காணிக்கை குடுப்பா….! ஸாமான்ய விஷயத்த சொன்னாக் கூட, அத, வேத வாக்கா எடுத்துண்டு பேப்பர்ல போடுவா…! இப்டி நெனச்சு ஆசைப்பட்டுட்டான்னு தோணித்தோ?..……”

பாரிஷதர் மனஸை அப்படியே படம் பிடித்துக் காட்டும் போது, ‘அதெல்லாம் இல்லை’ என்று பொய் சொல்லவா முடியும்?

“………அதையே.. அந்த பையன் வேற விதமா ஏன் ஆசைப்பட்ருக்கக் கூடாது? இவர் பெரிய ஞானி.! பக்தர்! வேதஶாஸ்த்ர புராணங்கள்ள கரை கண்டவர்.! இவர் பேரை சொல்லிண்டு நெறைய நல்ல கார்யங்கள் நடக்கறது! கோவில் கும்பாபிஷேகங்கள் நடக்கறது! க்ராமியக் கலைகள் அபிவ்ருத்தியாறது..! இப்பிடில்லாம் இருந்தாலும், அவர் கொஞ்சமும் கர்வமில்லாம… தாமரை எலை தண்ணீர் மாதிரி இருக்கார்….! நானும் அந்த மாதிரி ஆகணும்! ஞானியா ஆகணும்!…ன்னு நெனைச்சிருக்கலாமில்லியோ?….”

நீண்ட பேச்சாக பெரியவா ரொம்ப நாளைக்கப்புறம் பேசியதால், பாரிஷதருக்கு கேட்க ஆனந்தமாகவும் இருந்தது. அதே ஸமயம் பட்டவர்தனமாக [தன்னைப்பற்றிய ஸத்ய விளக்கம்] எல்லாருக்கும் தெரிந்த பெரிய உண்மையை போட்டு உடைத்தார்!

பாரிஷதருக்கு வியர்த்துக் கொட்டியது.

“போ ! போயி…. அந்த பையன கூட்டிண்டு வா”

எங்க போய் தேடறது? எங்க போனானோ?

நாலாபுறமும் தேடிக் கொண்டு போனார்.

அதோ! அப்பாடா! ஶிவன் கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருந்தான்!

“கொழந்தே! பெரியவா கூப்டறா…. வாப்பா..”

அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டி போல் தாயை தேடிக் கொண்டு ஓடினான்…… அந்தக் குழந்தை.

ஏறக்குறைய ஐந்து நிமிஷம் பெரியவாளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ! பெரியவாளும் நடுநடுவே அவனை கடாக்ஷித்தார் …….நயன தீக்ஷை நல்கினார்..….

“டொக்….”

பெரியவாளின் விரல் சொடுக்கில் குறிப்பறிந்த பாரிஷதர், ஒரு தட்டில் ஒரு பழத்தை வைத்து பெரியவாளிடம் கொடுத்தார்.

அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். தன் அன்பையெல்லாம் குழைத்து, ஒரு அம்மாவானவள், தன் குழந்தையின் கையில் ஸாதத்தை பிசைந்து போடுவது போல, சில நிமிஷங்கள் பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த [ஞான] பழம், பையனுக்கு பெரியவாளாலேயே அவனுடைய கையில் அனுக்ரஹிக்கப்பட்டது!

அரிய ஞானப்பழமாக அதை அன்போடு எடுத்துக்கொண்டு, நமஸ்கரித்துவிட்டு வேகமாக போய் விட்டான் அந்த யுவா!

இல்லையில்லை!…. ஞானி!

மஹான்கள் தங்கள் கைகளால் நமக்கென்று கொடுத்த எதையும் ஸாதாரணமாக உடனே பங்கு போட்டு யாருக்கும் கொடுக்காமல், வாங்கிக் கொண்டவர் மட்டுமே ஸ்வீகரித்துக் கொள்ளுவதுதான் உத்தமம்! இது ஸுயநலமில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக, மஹான்களால் ஸங்கல்பிக்கப்பட்டு, தனியாக கொடுக்கப்பட்டது என்பதால், அதன் காரணத்தை அந்த மஹா புருஷர்களே அறிவார்கள்.

கர்மாவை கழிக்க பூமியில் பிறந்தாச்சு! கஷ்டமில்லாம ஓரளவு ஸௌகர்யமான வாழ்க்கை அமைஞ்சாச்சு! எல்லாத்துக்கும் மேல, கஷ்டமான ஜீவிதமோ, ஸுக ஜீவிதமோ, மஹா மஹா அவதாரமான பெரியவாளோட தர்ஶனமோ, ஸ்மரணமோ நிறையாவே கிடைச்சாச்சு! அவர் மேல அப்படியொரு அன்பும், பிடிப்பும் வந்தாச்சு! அவர் உபதேஸிப்பதை கடைப்பிடிக்கும் ஸௌகர்யமும் இருக்கு! பெரியவாதான் பகவான், காமாக்ஷி, ஶிவன், நாராயணன், பரப்ரஹ்மம் எல்லாம் தெரிஞ்சுண்டாச்சு!

அப்படியிருந்தும், இன்னும் எது நம்மை பிடிச்சு இழுக்கறது….?…. பூர்ணமா அவரே கதின்னு, அத்தனையையும் மனஸளவில் உதறிவிட்டு, அவரை ஶரணடைய?

மாயை!

இதுதான் நம் பதிலாக இருக்கும்.

ஆனால்…..பெரியவாளை விட மாயை powerful-லா என்ன?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

#பேசும்_தெய்வம்_பாகம் 2 J.K. SIVAN

'' #மண்டை_பிளந்து_ஆபரேஷன்''

''யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது மட்டும் தெரிந்து விட்டால் எப்படி இருக்கும்? ஒரு நிமிஷம் யோசித்தால் ''ஆஹா நமக்கு இன்னும் ரெண்டு மூன்று மாதங்களில் சம்பள உயர்வு, பதவி இன்னும் உயரப்போகிறது என்றால் இப்போதே அதிகாரம் பண்ண ஆரம்பித்து விடுவான். கையில் இருப்பதை தாம் தூம் என்று செலவழித்து விடுவான். அந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவனது செயகையால், நடத்தையால் உத்யோக உயர்வும் அதை தொடர்ந்து வரும் பண வசதியும் பயனற்று போகும்.

''#இன்னும்_117_நாள்_தான்_எனக்கு_
#இந்த_உலக_வாழ்வு'' என்று அறிந்து கொண்டவனும் தெரிந்து கொண்ட அந்த நேரத்திலேயே துடிக்க ஆரம்பித்து விடுவான். ஆகாரம் வெறுத்து தூக்கம் இழந்து, எதிலும் சோகம், ஏமாற்றம் அவனை 116 நாள் முன்பாகவே சிறுக சிறுக கொன்றுவிடும்.

எதிர்காலம் மனிதனால் அறியக்கூடாத ஒன்று என பிரம்மதேவன் நன்றாக புரிந்து கொண்டு தான் அதை இருட்டடித்து வைத்திருக்கிறான். எந்த விஞ்ஞானத்தாலும் சாமர்த்தியத்தாலும் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடியவில்லை.''

மார்க்க பந்து பெரிய லெக்சரே அடித்து ஓய்ந்தார்.

''என்ன சொல்கிறீர்கள் தாத்தா ஸார் ?''

'' வாஸ்தவம் நீங்க சொல்றது. இது பத்தி சமீபத்தில் ஒரு மகா பெரியவா சம்பவம் படித்ததை சொல்லட்டுமா?
என்று ஆரம்பித்தேன். அதன் சுருக்கம் தான் இது.

''பெற்றோர்கள் நிறைய செலவழித்து ரெண்டு குடும்பங்கள் இணைந்தன. சந்தோஷமான இளம் தம்பதிகள். எல்லா சௌகர்யங்களும் வசதிகளும் வாழ்க்கையில் இருந்தது.

ஆனால் கல்யாணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஒரு பேரிடி விழுந்தது! ஆம். அந்த இளம் கணவனுக்கு தலைவலி ஒருநாள் தாங்க முடியாமல் ஆபிஸ்க்கு லீவு போட்டு வீட்டு வைத்தியமாக, ரெஸ்ட். பிரயோஜனம் இல்லை. அவனுடைய டாக்டரை போய் பார்த்தான். அவர் சோதித்து காரணம் சொல்லமுடியாமல் ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். பல டாக்டர்கள் தங்களது சாமர்த்தியத்தை காட்டினார்கள். எல்லாவித டெஸ்டும் பண்ணியாகிவிட்டது. மூளைக்குள் ஒரு கட்டி உருவாகியிருந்தது. பெரிதாகி வருகிறது.

"மண்டை ஓட்டை துளை போட்டு கழட்டி, ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துடலாம். ரொம்ப ஈஸி!..." பெரிய டாக்டர் சுப்பாராயன் ஈஸியாக ''கால் கிலோ கத்திரிக்காய் வாங்குவதைப் போல் சொல்லிவிட்டதும் அந்த பையனின் மனைவிக்கு பாதி உயிர் போய் விட்டது.

''உயிருக்கு ஆபத்து இல்லையே?'' பையனின் அப்பா கேட்டார்.

''மதில் மேல் பூனை'' என்கிறார் சுப்பராயன்.

''பகவானை வேண்டிக்குங்கோ'' என்றாள் நர்ஸ் தங்கம். வயதானவள்.

''ராமரத்னம் பெரியவா பக்தர். காஞ்சிபுரம் ஓடினார். ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் இருக்கிறானே அவனே கதி. அவனை சரணடைவோம் என்று பெரியவாளை தரிசிக்க ஓடினார்.

"Honey Moon " குலு மணாலி போக பிளான் போட்ட இளம் தம்பதிகள் தேனிலவுக்கு பதிலாக தேனம்பாக்கம்.

வரிசையாக எல்லோரும் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருக்க வரிசை நகர்ந்தது. கண்களில் ஆறாக பக்தர் குடும்பத்தோடு மகா பெரியவாளுடைய திருவடிகளில் நமஸ்காரம் பண்ணினார் .

அந்த புது கல்யாணப் பெண் முழுதுமாக உடைந்து போய் அடக்கமுடியாமால் ஓவென்று கதறினாள். எல்லோரும் திடுக்கிட்டு நின்றுகொண்டிருக்க அவள் அழுது ஓயும் வரை பெரியவா மெளனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

"இவருக்கு தலைக்குள்ள tumour ன்னு சொல்லிட்டா பெரியவா..... ரொம்ப பயமா இருக்கு பெரியவா ...கல்யாணமாய் ரெண்டு மாசம் தான் ஆறது. காப்பாத்துங்கோ. பெரியவா என்ன சொன்னாலும் கேக்கறேன்....காப்பாத்துங்கோ பெரியவா! உங்களை விட்டா யார் இருக்கா எனக்கு?

குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா சஹிப்பாளா?

"ஆபரேஷன்ல எனக்கு நம்பிக்கை இல்லே.பெரியவா, அதுவும், மண்டையை திறந்து உள்ளே ஆபரேஷன் சரி வராது. விபரீத விளைவு ன்னு சொல்றா. நேக்கு சரியா படலே..பெரியவா " ராமரத்னம் திக்கி திக்கி அழுதுகொண்டே சொல்ல மகா பெரியவா மௌனமாக அந்த பையனை பார்த்தார்.

அங்கிருந்த எல்லோருக்குமே அதிர்ச்சி. மகா பெரியவா அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மோனம் கலைந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ?'' காது, கண் எல்லாவற்றையும் கூராக்கிக் கொண்டனர். தெய்வம் அந்தப் பையனைப் பார்த்து மெல்லிய குரலில் பேசியது.

"நீ என்ன பண்றே....காவேரிக் கரையோரமா இருக்கற எதாவது ஒரு க்ஷேத்ரத்துக்கு போ! ஸ்வாமி தர்சனம் பண்ணு! தெனோமும் விடிகாலம்பற காவேரிக் கரையோட களிமண்ணை நிறைய எடுத்து தலைல முழுக்க அப்பிண்டு அரை மணி உக்காரு. அப்புறம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், ஸ்வாமி தர்சனம், எல்லாம் பண்ணு. நல்ல ஆசாரமான எடத்ல தங்கணும். ஸ்வயம்பாகம் பண்ணி சாப்டணும்...... இப்டீயா ஒரு மண்டலம், நாப்பது நாப்பத்தஞ்சு நா...இருந்தாலே எல்லாம் செரியாயிடும்...கவலைப்படாம போ "

அந்த இளம் தம்பதிகளுக்கு மட்டுமா சந்தோஷம்? சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்த குடும்பம் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு அடுத்த நிமிஷமே நேராக, திருச்சி அருகே காவேரிக் கரையில் ஒரு க்ஷேத்ரத்தில் தங்கினார்கள்.

பழைய காவேரிக்கரையிலேயே இருந்த ஒரு சிவன் கோவில். அங்கே ஒரு இடம் பிடித்து தங்கினான் பையன் மனைவியோடு. பெரியவா சொன்னபடியே ப்ராத ( விடியல்) காலத்தில் #களிமண்_காப்பு, #ஸ்நானம், #ஸந்த்யா_வந்தனம், #ஸ்வாமி_தர்சனம், #ஸ்வயம்பாகம் (தானே மடியாக சமைத்து) எல்லாம் அழகாக சிரத்தையோடு. காலம் ஓடியது. நாற்பது நாள் ஆகிவிட்டது.

ரெண்டு பெரும் ஊருக்கு திரும்பினார்கள். தலைவலி காணோம். '' டாக்டரிடம் போய் பார்த்துடுவோம்'' . மனைவி சொன்னபடி இருவரும் சுப்பாராயனை சந்தித்தார்கள். வழக்கம் போல் டெஸ்ட் எல்லாம் எடுத்துவிட்டு ரிப்போர்ட் காகிதங்களை மேய்ந்தார். செக் பண்ணிவிட்டு,

"அட ஆச்சர்யமாக இருக்கே. ஒண்ணுமே காணுமே. #trace_இல்லையே! #கட்டி_கம்ப்ளீட்டா_கரைஞ்சு_போய்டுத்தே."

நீங்களே சொல்லுங்கள் அந்த ரெண்டு பெரும் உடனே என்ன செய்திருப்பார்கள்?

ஓடி வந்தார்கள் மகா பெரியவாளிடம். ஒண்ணரை மாசத்துக்கு முன் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டவள், இப்போது ஆனந்தம் தாங்காமல் கண்ணீர் விட்டாள். முகமெல்லாம் ஆனந்த சந்தோஷ பிரதிபலிப்பு. நன்றி உணர்ச்சியால் வார்த்தைகளே வரவில்லை.

"#பெரியவா.. #பெரியவா...." காலைத் தொடாத குறையாக கீழே விழுந்தவள் கணவனோடு எழுந்திருக்க மறுத்தார்கள். நிறைய பேர் காத்திருக்கிறார்களே . மடத்து உதவியாளர் மெதுவாக ஜாடை காட்டி அவர்களை எழுதிருக்க வைத்தார்.

''கை தொழுது அவரையே பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடமும் பையனிடமும் பிரசாதம் அளித்து விட்டு பேசும் தெய்வம் என்ன சொல்லியது?

"நா....என்ன பெருஸ்...ஸா பண்ணிட்டேன்? "#வைத்யோ_நாராயணோ_ஹரி" தெரியுமோன்னோ? நேக்கு ஒண்ணும் தெரியாது. போங்கோ க்ஷேமமா இருங்கோ "

பையனுக்கு தினமும் சொல்லும் ருத்ரத்தின் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அவரைப் பார்த்ததும் அப்போது தான் புரிந்தது ''#பேஷஜாம்_பிஷகு''

#வைத்தியத்துக்கே_வைத்தியம்_செய்பவர்ஆயிற்றே_அந்த_சிவஸ்வரூபம்.

pattamaa
Posts: 749
Joined: 22 Nov 2009, 10:24

Re: Kanchi Maha Periyava

Post by pattamaa »

shivaya namaha... periava sharanam.

பேஷஜாம்_பிஷகு - is from vishnu sahasranamam, not from sri rudram.. never the less...

shankarank
Posts: 4042
Joined: 15 Jun 2009, 07:16

Re: Kanchi Maha Periyava

Post by shankarank »

Sri Rudram also has the same references - pratamO daivyO bhishak , Siva viSvAha bhEshaji, Siva rudrasya bhEshaji

Post Reply