KavithaigaL by Rasikas

Post Reply
arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

சிரிதர்,
நல்லதோர் மனிதரை, எழுத்தாளரை இழந்து விட்டோம்.
அவர் உமக்களித்த ஊக்கம் உம்மை மேலும் எழுதிட வைக்குமென நம்புகிறேன்...

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

"மல்லிகை மலர் வாசம் மணக்கும் -பவழ
மல்லி போதையாய் மனம் கிறங்கும்
கண் கவர் கதம்பம்,கட்டு மருக்கொழுந்து இம்
மண்ணின் வளத்தால் ஈசன் புகழ் இசைக்கும்"

உங்கள் புகழ் மணக்கும்
சென்று வாருங்கள்

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

சிந்திக்கவும்

மின்சாரத்தின் பகட்டு ஒளியினிலே
மண்விளக்குகள் தோற்றனவே!
தீபங்களின் வரிசையெனும் தீபாவளி
பட்டாசுகளின் வெடி ஒலியிலே தோற்றதுவே!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Image
குடியானவன்

காணி நிலம் பயிரிடவேண்டிக்
கேணி தோண்டி நீர்நிலை செய்து,
ஏணிவைத்து நன்னீரிறைத்துப்
பேணிப் பயிர் அறுவடை செய்து,
சாண் வயிறு நிறைத்திட்டு
மாண்பு மிக வாழ்ந்ததெங்கே? இன்று

மாரி பொய்த்து, நீர்வற்றி,
ஏரிகளெல்லாம் மனைகளாகி,
ஊரிழந்து, உறவிழந்து,
சீரழிந்து, செல்வமிழந்து,
காரி உமிழ் வாழ்க்கை, நகர்ச்
சேரிதன்னில் வாழ்கின்றோமே!

nadhasudha
Posts: 381
Joined: 22 May 2006, 06:40

Re: KavithaigaL by Rasikas

Post by nadhasudha »

Sharing a composition that I recently wrote about my dad(ponbhairavi)on his childhood pranks. While I have previously written கவிதை this is the first time it has come out as a song. These are all true incidents which he has related to me and are part of family stories.

விக்ஷமக்காரக்கண்ணன் பொல்லாத விக்ஷமக்காரக்கண்ணன்
நாளுக்கொரு நாடகமாடி நாள்தோறும் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு நக்கல் செய்யும் ராஜகோபாலன் அவன்

நண்பர்களோடாடி மகிழ்வான் -தின்னையிலே
கோரமான கதைகள் சொல்லுவான்
வேண்டாம் ராஜு போதும் என்றால் - அவர்கள்
வேண்டாம் ராஜு போதும் என்றால்
நாளை கேட்டே தீரவேண்டும் என்றே கூறி ஓடிடுவான்

தம்பியுடன் சேட்டை செய்யுவான்
நடுவில் கொஞ்சம் தம்பியைத்தான் வேலை ஏவுவான்
போடா அம்பி என்று சொன்னால் - தம்பி அவனை போடா அம்பி என்று சொன்னால்
உன்னை நாளை சேர்க்க மாட்டேன் என்றே கூறி விரைந்திடுவான்

கோவில் மதில் ஏறி குதிப்பான் - அங்கே
காயம் பட்டால் மூடிமறைப்பான்
அம்மாவுக்கு தெரிந்து விட்டால் - அவன் அம்மாவுக்கு தெரிந்து விட்டால்
அப்பாவிடம் சொல்லாதென்று கூறிவிட்டு பறன்திடுவான்

தங்கையைத்தான் வம்புக்கு இழுப்பான் - வேண்டுமென்றே பாடங்களை தப்பாய் கற்பிப்பான்
அப்பா ஒரு கேள்வி கேட்டால் - அவளை அப்பா ஒரு கேள்வி கேட்டால்
வசமாக மாட்டி விட்ட திருப்தியுடன் ஓட்டம் பிடிப்பான்

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

பறவை, விலங்கினத்தின் சாபம்

Post by vgovindan »

யாருக்கு வேண்டும் உங்கள் கருணை?
ஊருக்கு உபதேசம் செய்யும் மனிதா!

பிறப்பறியோம், இறப்பறியோம்;
பிறிதோர் உலகமறியோம்;
நேற்றறியோம், நாளையறியோம்;
இன்று, இப்போதுண்டென்றே அறிவோம்;

பாசமென்றும், நேசமென்றும் நீங்கள் கூறும்
பசப்பு மொழியொன்றுமறிந்திலோம்;
மொழியறியோம், கல்வியறியோம்;
பழியறியோம், பாவ, புண்ணியமறியோம்;

இறைவனென்றொருவன் இருப்பதறியோம்;
குறையறியோம், குற்றமறியோம்;
உற்றவரென்றும், மற்றவரென்றுமறியோம்;
பற்றறியோம், காதலென்றுமறிந்திலோம்;

உன்னால் எம்மினங்கள் அனைத்துக்கும்
என்னாளும் உண்டாகுது பெருந்துயர், நீயறிவாயோ?
செல்லமாக எம்மை வளர்க்கின்றோமென்று,
பொல்லாக் கொத்தடிமையாக்கினாயே!

நாள் முழுதும் உனக்குப் பெண்துணை, ஆயின்
ஆயுளுக்கும் எங்களைப் புணராது செய்தாயே!
கருப்பை அரிந்து மலடாக்கி, சடமாக்கினாயே!
உருப்படுவாயோ, உன்மத்தம் கொண்ட மனிதா!

உன்னினம் அழிந்தே தீரும், சாபமிட்டோம், பிடி!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

548
டொய்ங் ...
(ஒரு பாடகர் கூற்று)

ஐயோ பாவம்னு அத் தம்புராவைச் சேர்த்தால்
குய்யோ முறையோன்னு குறைகூறிப் புலம்பறாரே !
பொய்யோ நிஜமோ ? பாவப்பட்ட ஜென்மமோ ? - இனி
மெய்யாலும் தவிர்ப்பேன் மேலே செல்லும்வரை.

ப்ரத்யக்ஷம் பாலா
09.10.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

549
ஆன்மார்த்தம்

விடை தேடி அனைத்தும் வீணே கரைந்ததே !
சடைமுடிச் சாமியே ! சகலமும் போனதே !
இடையிலே சிறுதுணி ஈரத்தில் இறுக்குதே !
கடைநிலை இதுவே ... காலனே ஓடி வா !

ப்ரத்யக்ஷம் பாலா,
25.10.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

550
அருளாளன்

தில்லைச் சிதம்பர நாதா, திக்கெலாம் போற்றிடும் தேவா !
முல்லை மலரணி மேதா, மூவுலகு ஏத்திடும் வீரா !
வில்லை அணி மலர்த் தோளா, வீரக் கனலேந்தும் ஈசா !
எல்லை இலா அருளாளா, எமதுள்ளம் சிலிர்க்குது ! ஆஹா !

ப்ரத்யக்ஷம் பாலா,
26.10.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

551
காஞ்சி

பஞ்ச கச்சம் பறந்தது அமளியில்
அஞ்சி ஓடினர் அனைத்து மக்களும்
---
கொஞ்சம் பொறுத்தால் கோடுகள் மறையும்
நெஞ்சம் தெளிந்து நேசம் விளையும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019



கோடு = bias, prejudice, dislike, aversion

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

தில்லை நோக்கினால்
தொல்லையுமுண்டோ?
முல்லை முகிழும் எங்குமே
சில்லெனவே படும் கனலுமே

எல்லையெல்லாம் அவன்-ஆயினும்
தில்லையென்றால் எல்லையேது!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

arasi wrote: 28 Oct 2019, 01:50 எல்லையெல்லாம் அவன்-ஆயினும்
தில்லையென்றால் எல்லையேது!
தில்லைக்கும், தில்லைனாநகனுக்கும்
எல்லை அந்த காளி, எல்லைக் காளி அல்லவே?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

552
மடமான் ஏக்கம்

வானை உரசுது வானுயர்த் தென்னை
ஆனை உரசுது ஆலடிக் கல்லை
பூனை உரசுது பூமரக் கிளையை
மானை உரசும் மாமயன் எங்கே ? எங்கே ? எங்கே ? ... ...

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

553
சாமி சிரிக்கிறார் !

ஏதோ பல பெயரிட்டு ஏகமாய்க் கதைத்து
தீதோ நன்றோ அனைத்தும் திரித்துப் புகுத்தி
வாதோ வழக்கோ எல்லாம் புனைந்து கூட்டி
யாதோ எவரோ இட்டமாய் எழும்பி ஆட

சாமி சிரிக்கின்றார் !
எத்தனை கதைகள் எத்தனை பெயர்கள் எவ்வளவு கூத்து என்று !

ஓம் தத் ஸத் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

554
ஓவியர் தெளிவு
(அல்லது) கற்பனைக்குக் கடிவாளம்

அடியை வரைந்தால் அடிப்பேன் என்பர்
முடியைத் தீட்டினால் முடிப்பேன் என்பர்
தடியால் தாக்குவர் தனலாய் ஏசுவர்
கடித்துக் குதறுவார் கனலாய்க் கக்குவர்

ஏன் நமக்கு வம்பு ? எதுக்கு வீண் வாதம் ?
இச்சாமி போதும் ! இதையே படைப்போம் !

ஓம் தத் ஸத் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

555
தேசாந்திரி

பழமாய்ப் பொறுக்கி எடுத்தார்
அழகாய் நறுக்கிக் கொடுத்தார்
அழகாய்ச் சிரித்தான் அம்பி
நிழலாய்த் தொடர்ந்து சென்றான் - இனி
தழலாய்த் தகித்த போதும்
விழலாய் விழுந்து உழைப்பான்

மற்றொரு சிஷ்யன் கிடைத்தான் !
வெற்றியாய் உரக்கச் சிரித்தார் !

ப்ரத்யக்ஷம் பாலா,
02.11.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

556
சொர்க்கத்துக்கு வழி தேடி

புடவை ஒன்றைப்
போட்டார் அக்னியில்.
உடமை எல்லாம்
ஊருக்கு அளித்தார்.
சடமாய் மாறினார்
சாலையில் திரிகிறார்.
மடமை முழுதாய்
மதியை மறைத்தது.

செத்ததும் செல்வாரோ சொர்க்கம் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
02.11.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

557
மறுபடி காஞ்சியில் - இன்று !

சித்திரையில் ஒரு முறை.
இத்தினத்தில் ஒரு முறை.
கத்தியதோடு நின்றதா ?
கத்திச் சண்டை இல்லையே ?

எத்தனை சொல்லி என்ன ?
புத்தியில் பதிய வில்லை.
வித்தகன் யாரெனச் சொல்ல ?
மித்திரன் யாரெனக் கூற ?

ரத்தின நகைகள் வேண்டா !
தித்திப்பு வகைகள் வேண்டா !
பத்தியுடன் வேண்டு கின்றோம் .
அத்தி வரதா வா ! கா !

ப்ரத்யக்ஷம் பாலா,
06.11.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

558
ஜாக்கிரதை !

சித்திரப் பெண்ணே கேளு.
அத்திமரக் காட்டுக்குள்ளே
புத்தி கெட்டுத் திரியாதே
பத்திரமாய் வீடு எத்து.

ப்ரத்யக்ஷம் பாலா,
12.11.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

559
வியாபாரியின் அலம்பல்

மல்லி மருக்கொழுந்தே !
அல்லி மலர்ப் பெட்டகமே !
சல்லிக் காசு தேரவில்லை
மெல்ல வந்து வீரம் சொல்லு.

ப்ரத்யக்ஷம் பாலா,
16.11.2019.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

560
பக்திக் கிரக்கம்

சின்னக் கண்ணனுக்குச் சிங்காரமாய் மையிட்டு
இன்னும் அழகூட்ட இன்னம் ஒரு பொட்டு வைத்து
கன்னம் கண்படாதிருக்க கரியதோர் குறியும் இட்டேன் !
கண் மூடித் திறப்பதற்குள் கள்வனைக் காணவில்லை !

ப்ரத்யக்ஷம் பாலா,
18.11.2019.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

561
பர ப்ரம்மம்

அடுத்த வீட்டில் என் அருமை நண்பர்
கொடுத்த குரலுக்கு குதித்தோடி வருவார் - அவரை

"அப்பா" என்றழைப்பாள் ஆசைப் பெண்
"குப்பா" என்றழைப்பர் கூடும் நண்பர்
"ஐயா" என்றழைப்பார் அருமை அன்பர்
"பையா" என்றழைப்பார் அன்புத் தாத்தா - அவருக்கு

இப்பெயரே சிறந்தது என விடைக்கலாமோ ?
எப்பெயரும் அவருக்கு ஏற்றதே அன்றோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
22.11.2019

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

562
ஏக்கம்

"என்னத்தைச் சொல்லி அழ ?"
"எண்ணத்தைச் சொல்லித் தொலை !"

"கன்னத்தைக் கிள்ளிச் சென்ற
கண்ணனைக் காணவில்லை.
இனி எப்போ வருவானோ ?
இனிமைச் சொல் மொழிவானோ ?"

"இடம் தேடி வரும்வரையில்
நடந்ததை நீ அசை போடு !"


ப்ரத்யக்ஷம் பாலா,
19.11.2019

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

The last two lines say a lot about Kannan's path.
His 'eNNathaich chollitholai' made me chuckle!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

564
உபதேசம்

எல்லே ! கேளடா !
புல்லே ஆசனம் !
கல்லே ஆலயம் !
சொல்லே பூசனை !

ப்ரத்யக்ஷம் பாலா,
01.12.2013

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

565
படிகள்

களித்துக் குடித்துக் காட்டில் அலைந்து
ஒளித்துக் குமுறி ஓய்ந்து சிதைந்து
குளித்துத் தணலில் கோபம் தொலைத்து
விளித்துக் கதறு. வேடம் கரையும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
12.09.2012

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

The lost image file, listed at Post #159, is reproduced :-

26
ஆர்ப்பரிக்கும் ஆக்கள்

குழலோசை கேட்டுவந்த
        கறவையின் பால் கொணர்ந்து
தழலிட்டுப் பிறையிட்டுத்
        தளிர்க் கையால் மாதர்
முழங்கிக் கடைந்தெடுத்த
        மூவா வெண்ணெய், தங்கள்
அழகனுக்கே எனத் தெரிந்தே
        ஆர்ப்பரிக்கும் ஆக்கள் !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.03.2003

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

566
போகாத ஊருக்கு வழி

சுவர்க்கம் செல்ல வேண்டும் - ஆனால்
       சாக விருப்பம் இல்லை !
உவர்க்கும் காய்கள் வேண்டா - ஆனால்
       ஊறுகாய் நிறைய வேண்டும் !
எவர்க்கும் நன்மை செய்யேன் - ஆனால்
       ஏராள நண்பர் வேண்டும் !

எனிலே --

கவர்ச்சிக் கதைகள் கூறி உம்மைக்
       கலக்கக் கூட்டம் உண்டு ! ஓய் !

ப்ரத்யக்ஷம் பாலா
11.12.2019.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: KavithaigaL by Rasikas

Post by RSR »

@Pratyaksham Bala
I am referring to post 443 in javali thread.
The sequence is 441 by Govindan, 442 by cmlover and then 443 by you.
And to make it worse, there is a red banner at the top relating to the post by Sri.Govindan.
-------------------
I know a bit of Tamizh.
I request you to somehow remove that.
-------------------

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

RSR wrote: 30 Jan 2020, 11:07 @Pratyaksham Bala
I am referring to post 443 in javali thread.
The sequence is 441 by Govindan, 442 by cmlover and then 443 by you.
And to make it worse, there is a red banner at the top relating to the post by Sri.Govindan.
-------------------
I know a bit of Tamizh.
I request you to somehow remove that.
-------------------
Please don't beat around the bush.
Can you explain why post 443 in javali thread should be removed ?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
@RSR
Please refer to Post #111 of Javali thread under General Discussions.
Let me repeat it here.

---------------------------------------------
RSR wrote: 29 Jan 2020, 11:09 @Pratyaksham Bala
...By the way,
1) Kindly remove the linc given to your tamil 'poetry' ( @69 in this thread) , It is inexcusably vulgar , insulting and arrogant on a very very erudite and dedicated scholar in this forum Sri.V.Govindan.
mods are requested to remove that at the earliest.
You have used harsh words.
Please mention which Tamil 'poetry' of mine, you are referring to ?


--------------------------------------------

Which poem of mine is "inexcusably vulgar, insulting and arrogant, on a very very erudite and dedicated scholar in this forum Sri.V.Govindan"?

Please do specify.
I have not written any poem on Sri vgovindan.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: KavithaigaL by Rasikas

Post by RSR »

@Pratyaksham Bala

I have mentioned your post number in gen discussion .
The sequence was around 442 by Sri.VG, and then a post by cmlover and then by you - giving redirect to your 'poem' in this thread.
Page 18 or 19 -I do not remember. There are so many pages.
For reference,
I have placed it in
https://sites.google.com/site/4techstrial/home/0-pbpoem
-------------------------------------------------
The wording of the 'poem' is very bad.
Clearly refers to Sri.VG.
I know that you are also an admirer of his scholarship and dedication.
I suppose you were carried away by the poetic frenzy. The 'podi' will not be missed by people who know Tamil and are prepared to locate the poem buried deep in page 18/19.
People just dont have time.
I get free time only after 9pm and in early forenoon.
As there are complaints that I am posting too often, I choose to post here,
I rarely visit this section as am not interested.
Why waste your scholarship ? You can give a nice translation of Dhyaana Slokam ( Sundarakaandam) in chaste Tamil.
The link is given in my last post in gen disc-> is telugu a cover....

I am giving the URL again here for your reference.
https://sites.google.com/site/dhyanaslokam/home

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

@RSR
Don't justify your folly.

Sri V Govindan started the Javali thread and refered to a Telugu Javali, giving the transliterated version of a few lines, and also its translation in Tamil ! Within three days and 60+ posts, he somehow got offended by the trend of dicussions, and said in Post #62 “Good Bye - as for this topic is concerned.”

Next day, on 7 Apr 2011, Sri vgovindan followed this up with post #443 in ‘Kavidaigal Thread’ where he conveyed. in Tamil, his frustration and unhappiness with the author of the Javali and those who support/enjoy such creations.
---
Moderator clarified that Sri vgovindan’s post refers to the Javali thread, and also gave the link.
I joined the Moderator in Post #445 to clarify once again that Sri vgovindan’s post #443 refers to the Javali thread.
---
Now, foolishly you drag my name and make nasty comments.
The subject of discussion was the Telugu Javali (referred to Sri vgovindan in the Javali thread) and its author & admirers, NOT any of my poems.

Accept your mistake and apologize for your silly tantrum.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: KavithaigaL by Rasikas

Post by RSR »

Nope!
You can copy and paste your 'poem' for others to see

RasikasModerator1
Posts: 40
Joined: 29 Nov 2009, 07:03

Re: KavithaigaL by Rasikas

Post by RasikasModerator1 »

Alright folks, enough of this for now. Take a breather.
RSR, if you have any such requests please send an email to the Admin rather than engaging in such 'fights' with the members. when we have time, we will take a look at what this is all about.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
கடுநிலை

இடியும் கோயிலில் உடையும் சிலை;
மடியும் நிலையில் நொடியும் அன்பர்;
ஒடியும் கோலில் துடிக்கும் நிலை;
விடியும் வாழ்வு கடிதில் கூடுமோ?


ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2007.



This poem was written in 2007, years before my joining this forum.

It describes -
the poor condition of a Temple;
the pathetic condition of the priest;
the sufferings due to lack of support;
and wonders whether better life would come soon.

It has nothing to do any particular individual.

The last line ‘விடியும் வாழ்வு கடிதில் கூடுமோ?’ is answered !

Thanks !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

--

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

ஊர்வலம் போகுது

Post by vgovindan »

அன்று என் மக்களிலோர் மகள் துவண்டு மடிந்தாள் - அன்றும் அழுதேன்.
இன்று அவளைத் துவளவைத்தோர் தூக்கில் துவண்டு மடிந்தனர் - இன்றும் அழுகின்றேன்.
கொல்பவனும் கொல்லப்படுபவனும் நானேயாகில், யாருக்கென அழுவேன்?
நீ கொண்டாடிக் கொண்டிரு - அதோ அங்கொன்றல்ல நான்கு ஊர்வலம் போகின்றது, காண்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

567
எதிரொளி

புருடன் ஒருவனே என்று புருவத்திடை இடுவர்.
கருவறை தன்னில் தனியே களிக்க நடம் புரிவர்.
திருவவன் அணைத்தான் என்றோர் தீக்குறியும் கொள்வர்.
கருத்திடை ஒன்றைக் கொண்டால் கருமம் எதிரொளிக்கும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
20.03.2020

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Disclaimer :
This is not addressed to any particular individual,
nor the contents refer to any particular individual.


568
கடாக்ஷம்

காலையிலே பாடகர் கைகூப்பி வருவார்;
காலிலே விழுந்து நீ கலத்திலே இடுவாய்.

மரத்தடியில் சோதிடன் மகிழ்ந்திடக் கதைப்பான்;
கரம்கட்டிக் குழைந்து நீ கனவிலே மிதப்பாய்.

பொருளொன்றும் அறிந்திடா போலியார் பிதற்றுவார்;
அருளாளர் என்று நீ அடிமையாய்க் கிடப்பாய்.

காமாலைக் கண்ணனே கடாக்ஷம் வேண்டுமா ?
பாமாலை சூடி நீ பரமனை வேண்டு !

ப்ரத்யக்ஷம் பாலா,
08.07.2013

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

569
எதிர் கொள்வோம் !

மிரட்டும் வைரஸா ? துரத்த வழிகிட்டும் !
விரட்டத் தெரிந்தோரை வம்பு என் செயும் ?
தனித்து இருப்போம் ! தாக்க இடம் கொடோம் !
இனிக்கும் நாட்கள் இதோ வந்து விடும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
22.03.2020

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

570
பேரருள்

அந்திப் பொழுதினில் அலைந்திடும் போது
தொந்தி கணபதி வந்தெனைக் காப்பான் !
விளையாடத் துணைக்கு நாடிடும் போது
இளையோன் வேலவன் அக்கணம் வருவான் !

பேசிக் களித்திட வேண்டிடும் போது
மாசில் கேசவன் ஓடியே வருவான் !
அன்பு வார்த்தைக்கு ஏங்கிடும் போது
அன்னை பார்வதி ஆறுதல் சொல்வாள் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.11.2013

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

கொரானா பாட்டா?

Post by vgovindan »

அன்று ஏவியன் ஃப்ளூ வந்தபோழ்து
அனைத்துக் கோழிகளையும், குஞ்சுகளையும்
அழித்தெறிந்த, ஆணவம் நிறை மானிடா!
இன்று உன்னினம் நோயுற்றால்
ஆண்டவா! என்று கூக்குரல் கொடுப்பதேன்?
அனைத்தினங்களும் என் மக்கள், அறியாயோ?
நினைத்தபோழ்து, நினைத்தவிடத்தில் உனக்கு
நின்றருள் புரியவேண்டுமோ, சொல்
நிலைகெட்ட, நெறிகெட்ட வாழ்வு நீ வாழ
நீயென்ன தனிப்பிறவியோ? போடா போ,
உன்னினம் அழிந்தாலென்ன,
உலகம் அழிந்துபோமோ? உண்மை கேள்,
உன்னினம் மடிந்தால் மற்றினங்கள்
உண்மையில் செழிக்குமன்றோ. அழைக்காதே!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

maTRa inangaLukku irangum nIr manidaraith thuRappadum EnO?
manida kulam malinam koNDAlum, makkaLaith thuRakkap pOmO?
nAmellAm manidar, nammil nalladum, pala nallavarum uNDE?
ETRavai ERpOm, Enayavai taLLiDuvOm, iRaiyaruLil diDan koLvOm!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

தகாதது நிகழும்போது, கண்டுகொள்ளாது,
தனக்கென்று வரும்போது குரல் கொடுக்கும்,
தன்னை நல்லவரென்று கூறிக்கொள்வோரும்,
தகாத செயல்களுக்கு உடந்தையென சட்டமாச்சே.
அழிவென்று வரும்போது அனைவரும் சமமே.
அழிப்பவனும் நானே, அழிபவனும் நானே.
அறிந்துகொண்டு அமைதி கொள் ம(க்)களே.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Govindan,
"azhivenRu varumbOdu anaivarum samamE" How true!
Even at all other times, anaivarum samamE is the truth--and why do we humans forget it often times?
tAzhvu piRarkena tAnazhivAr enRa sAttiram BhArati sonnadu--adu: vAzhvu piRarkena TAnuyarvArenum sAttiramumE...

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

உண்மையுணரும் நேரம் கடந்துவிட்டதோ?

https://youtu.be/Xy_BIpqs0z8

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

571
ஊரடங்கு

பொல்லாத வினை கூடுமோ ?
பல்லாயிரம் பேர் மடிவரோ ?

அல்லாடும் நிலை மாறுமோ ?
உல்லாச மெலாம் திரும்புமோ?
வல்லார்கள் வழி சொல்வரோ ?
கொல்லாது அது ஓடுமோ ?

ஈஸ்வரோ ரக்ஷது !

ப்ரத்யக்ஷம் பாலா,
25.03.2020

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

572
கிட்டே வாராதே !

தொட்டுப் பேசினால் - கொரோனா
ஒட்டிக் கொள்ளக் கூடும் !
எட்டியே நின்று கதைப்போம்.

கட்டுப் பெட்டியாய் இருப்போம்;
இட்டத்துக்கு ஆட வேண்டாம்.
சட்டமும் போட்டாச்சு இப்போ.

விட்டுப்போன வேலை பார்ப்போம்.
திட்டமிட்டுச் செயல் படுவோம்.
கெட்ட நேரம் ஓடிவிடும் !

ப்ரத்யக்ஷம் பாலா
27.03.2020

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

573
கொரோனா

நவநவ உடைகள் வேண்டா.
சுவைமிகு கனிகள் வேண்டா.
அவையிவை பொருள்கள் வேண்டா.
இவையெலாம் தருமோ காப்பு ?

முகம் மறை கவசம் வேண்டும் !
அகம் நிறை தீரம் வேண்டும் !
சுகம் தரும் மருந்து வேண்டும் !
ஜகம் புகழ் பரனே வா கா !

ப்ரத்யக்ஷம் பாலா
30.03.2020

Post Reply