KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

530
கங்கை வரும் !

நம்ம வீட்டு வாவியிலும் கங்கை பொங்கி வரும் !
நாம் எல்லோரும் ஐயாவாள் ! தைய தக்க தையா !

கங்கா ஸ்நானம் ஆச்சாவென களிப்போமே மறந்ததா ?
எங்குமுள கிணற்றிலெல்லாம் கங்கை நீர் பெருகிடுமே !

கற்பனையே உண்மையென கதைத்துக் குதிக்கலாம்.
விற்பனையும் செய்யலாம்; வீணருக்கா பஞ்சம் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
21.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

531
சுவாமி !

சாவதற்கு சற்று முன்பு சன்யாசி ஆகிவிட்டால்
கூவக் கூட்டம் வரும் குதித்துக் குதித்தாடும்.
சொட்டு நிலம் வளைத்து சமாதி கட்டிவிடும்.
கொட்டு தாரையொடு கூச்சலிடும் ஆண்டாண்டு !

ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

532
பயன் என் கொல் ?

போதுமென்ற மனம் கொண்டால் பொருட்களின் பயன்தான் ஏது ?.
ஏதும் வேண்டாம் எனிலோ ஏனோ இருக்கவேண்டும் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2018

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: KavithaigaL by Rasikas

Post by kvchellappa »

Iruppthum iRappathum IRaivan arulanro?
iruppin viruppu veRuppaRRU irutthal Iraivan urai anro?
(I cannot write poems - Being is bliss).

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

533
சூர்ய காயத்ரி

அவ்வொளிமய ஆதவனின் சுடர்மிகுக் கதிர்கள்
எமதுள்ளம் புகுந்து மிளிரச் செய்யட்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
10.09.2017




तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्यधीमहि ।
धियो यो नः प्रचोदयात् ॥

தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந ப்ரசோதயாத்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

534
கடவுள் வாழ்த்து

வெள்ளாடை தரித்தானை, வீர்யமுடையானை,
வெண்ணிறத்தானை, நாற்கையானை,
இன்முகத்தானை மனத்தில் இருத்துவோம் !
இடரனைத்தும் விலகிவிடும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
23.06.2018




शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோபசாந்தயே.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

535
ஆர்ப்பாட்டம்

கேடுகள் தீர்ந்திட கூச்சல் தேவையா ?
தேடினால் நிம்மதி நாடி வந்திடும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
24.06.2018.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

அன்றைய உணவினை அன்றே ஈட்டாது,
ஆறு தலைமுறைக்குச் சேர்த்து வைத்து,
அதுவும் போதாதென அடுத்தவன் சொத்துக்கும்
ஆசைப்படும் ஆறறிவு படைத்த மாக்கள்,

இயற்கையன்னையைச் சூறாடாதிருக்க,
இயம்பியதுதான் போதுமென்ற வசனம்;
ஏதும் வேண்டாமென்றிருப்பவன்,
எடுப்பவனுக்கு ஈடுகட்டவென்றறிவோம்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

536
உபாயம்

வெட்டிப் பேச்சு ஓங்கி ஒலிக்கும்.
வெட்டிப் பேசு; ஓடி ஒளியும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
25.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

537
அதௌ கீர்த்தனாரம்பத்திலே

இதோ ஒரு சப்பளாக்கட்டை. இதோ ஒரு ஏகதந்தி.
ஏதோ ஒரு பாட்டெடுத்து இட்டத்துக்கு மெட்டமைத்து
தத்தோம் தித்தோம் என்று தாறுமாறா கூச்சலிட்டு

ஏடாகூடமாக எதையெதையோ சொல்லிவைத்து
ஆடாத ஆட்களையும் ஆட்டம் போடவைத்தால்
ஓடான சில வயிறை ஒருவாறு நிரப்பிடலாம்.

ஈஸ்வரோ ரக்ஷது.

ப்ரத்யக்ஷம் பாலா,
26.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

538
மாற்றம்

மெத்தப் படிப்பதெல்லாம் சித்தம் தெளிவதற்கே.
எத்தனை பார்வையுண்டோ அத்தனையும் அறியவேண்டும்.
முன்னோர் சொன்னதெல்லாம் முடிவெனக் கொள்ளலாமோ ?
இன்னமும் மாற்றம் வரும். இயல்பெனக் கொள்ள வேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
27.06.2018

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

539
சின்னா பின்னம்

சதி செய்து பின்னே விதி என்றுரைத்தனர்.
மதி மங்கிப் போனதே. கதி ஏதும் உண்டோ ?
துதி செய்து பாடினும் பதில் ஏதும் கிட்டுமோ?
எதில் போய் முடியுமோ ? நதி மடிதான் விடிவோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
28.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

540
கடல்கடந்த கிச்சாமி

மடைதிறந்து கதறினார் மலையொத்த கிச்சாமி.
நடையிடையில் அன்னையுடல் நாதியின்றிக் கிடந்தது.

கடல்கடந்து சென்றதனால் கதியில்லை என்றனர்.
உடலெடுக்க மறுத்தனர் உறவினர் அனைவரும்.
சங்குச்சாமி சொன்னாரென சாதியில் விலக்கினர்.

“எங்குமுண்டோ இக்கொடுமை ? ஏனிந்த மடத்தனம் ?”
பொங்கினார்; சாடினார். “பொல்லா மடையர்காள் !
இங்கேயே எரிப்பேன் ! இவ்வீடே மயானம் !” என்றார்.

ஊர்கூட்டித் தவித்தனர்; ஊளையிட்டுக் கூவினர்.
‘பார்கூடிப் பழிக்குமே’ பதறினர் பாவிகள்.

“யாரென்ன சொல்வது ? யாமெல்லாம் சோதரர் !”
சேர்ந்தனர்; சுமந்தனர். சுடுகாடு அழைத்தது !

கிச்சாமி அன்னையுடன் கீழ்மையும் எரிந்தது !
அச்சாமி அறிந்ததும் அவர் அடிவயிறும் எரிந்தது !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.06.2018.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

திருவடியிணை

இறைவா நின் திருவடியிணை விட
இயலாது இயலாது

ஈன்றெடுத்துப் பாலூட்டி
இரவு பகல் விழித்திருந்து
தாலாட்டி வளர்த்த அன்னை,

தன்பசியும் நோக்கிடாது
தனயனென்று சோறளித்துக்
காத்திட்ட தந்தையோடு,

கைப்பிடித்துக் காதலித்தென்
மெய்யுறவாய் பலகாலம்
துணை நின்ற மனைவியுமே,

ஈரைந்து திங்கள் தவமிருந்து
இல்லாளும் ஈன்றெடுத்த
இனிய மழலை மக்களுடனே

உற்றாரும் உறவினரும்
உழைத்தீட்டிய செல்வங்களும்
ஏனிந்த உயிர்தானுமே

ஆணை நீ இடுவாயாகில்
ஆண்டவா தயக்கம் சிறிதின்றி
பேரவாவுடன் இக்கணமே

விடத்துணிவேன் - ஆயின்
இறைவா நின் திருவடியிணைதன்னை
இயலாது நான் விட்டிடவே.


(Inspired by Kanaka Dasa's 'Toredu jivisabahude')

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

மனிதப் பிறவி

வேண்டுவனே பிறவிகள் தொடர்ந்து,
வேண்டுவனே மற்றெந்தப் பிறவியும்;
வேண்டேனே மனிதப் பிறவி மட்டும்.

பாறை, மண், கல், செடி கொடி, ஊர்வன,
பறவையினம், விலங்கினமாயினும் கூட,
பல நூறு கோடிப் பிறவிகள் நீ தருவாய்;

உள்ளதனை நீ சுருட்டினாலும், அடுத்து,
உலகங்களைத் திரும்ப நீ நீட்டினாலும்,
உனதடியிணை நான் மறந்தே போயினும்,

உன்னையுள்ளபடி கண்டுகொண்டேன்;
உனதருள் என்றும் எனக்குண்டு - ஆயின்,
உன்மத்தம் பிடித்தலையும் மனித இனம்,

தனக்கே நீயென்று தறிகெட்டலையுதைய்யா;
தவமும், நெறிகளும், வழிபாட்டு முறைகளும்,
தவறி இன்று வெறும் பேராசை மிகுந்ததந்தோ!

மற்ற இனங்கனைத்தும் மனிதனுக்கு இன்று,
மாத்திரம் உணவானது கண்டிலையோ, சொல்;
மனிதப் பிறவி வேண்டேன், வேண்டேனே.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

delete

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

post deleted andwithdrawn by the author

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

541
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 1

அரியைப் பாடிடு, அரியைப் பாடிடு,
        அரியைப் பாடிடு அறிவிலியே !
அரியைக் காணவுள அரியவொரு நாளில் - நீ
        உருப்போடுவது உதவிடாதென்றறி !

ப்ரத்யக்ஷம் பாலா
07.11.2006.



भज गोविन्दं भज गोविन्दं
गोविन्दं भज मूढमते ।
सम्प्राप्ते सन्निहिते काले
नहि नहि रक्षति डुकृङ्करणे ॥

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே ;
ஸம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ் கரணே .

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

43
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 5

அலைந்து செல்வம் ஈட்டும் வரையில்
        அருகே நிற்கும் நட்பும் உறவும்.
குலைந்த நிலையில், முதிர்ந்த வயதில்
        கூடிக் குலாவ யாரே வருவர் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.



यावद्वित्तोपार्जन सक्तः
स्तावन्निज परिवारो रक्तः ।
पश्चाज्जीवति जर्जर देहे
वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥ ५॥

யாவத் வித்தோ பார்ஜன ஸக்த :
ஸ்தாவன் நிஜ பரிவாரோ ரக்த :
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே .

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

542
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 9

நல்லோர் நட்பில் பற்றுகள் அகலும் ;
        பற்றிலா நிலையில் ஆசைகள் அழியும் .
ஆசைகள் அழியின் பரம்பொருள் தெரியும் !
        வாழ்வின் பேரின்ப நிலையும் அதுவே !

ப்ரத்யக்ஷம் பாலா
07.11.2006.



सत्सङ्गत्वे निस्सङ्गत्वं
निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥

ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஶ்சலதத்வம்
நிஶ்சலதத்வே ஜீவன்முக்தி:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

543
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 10

வயது முதிர்ந்தால் காமம் மறையும்.
        நீரது வரண்டால் தடாகம் மறையும்.
வசதி குறைந்தால் சுற்றம் மறையும்.
        உண்மை அறிந்தால் பிறவிகள் மறையும் !

ப்ரத்யக்ஷம் பாலா
29.04.2007.



वयसि गते कः कामविकारः
शुष्के नीरे कः कासारः ।
क्षीणे वित्ते कः परिवारः
ज्ञाते तत्त्वे कः संसारः ॥

வயஸி கதே க: காமவிகார:
ஶுஷ்கே நீரே க: காஸார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்த்வே க: ஸம்ஸார:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
vgovindan, rshankar :
Thanks ! Thanks !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

241
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 11

பணம், உறவு, இளமை எனப் பெருமை கொளல் வேண்டா;
        கணப்பொழுதில் அனைத்தையுமே அழித்துவிடும் காலம்.
சகம் அனைத்தும் மாயம் என உணர்ந்திருத்தல் வேண்டும்;
        பரம நிலை அடையும் முறை தெரிந்துகொள வேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா
19.05.2007.



मा कुरु धनजनयौवनगर्वं
हरति निमेषात्कालः सर्वम् ।
मायामयमिदमखिलं हित्वा
ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥

மா குறு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்;
மாயா மயமிதமகிலம் ஹித்வா
ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிஶ விதித்வா.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

38
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 12

காலையும்-மாலையும், இரவும்-பகலும்,
        கோடையும்-குளிரும்,   சென்றிடும்; வந்திடும்.
காலமும் கரையும்; ஆயுளும் குறையும்.
        ஆசை மட்டும் நிலைத்து நிற்பதேன் ?

ப்ரத்யக்ஷம் பாலா
12.05.2007.



दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायु:
तदपि न मुञ्चत्याशावायुः ॥ १

தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
ஶஶிர வசந்தௌ புனராயாத:
கால: க்ரீடதி கச்சத்யாயு:
ததபி ந முஞ்சத்யாஶாவாயு:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
thanjavooran:
Thanks !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

39
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 14

சடையோ, மொட்டையோ, சீர்செய்தமுடியோ,
        சாயத்துணி கொண்டு பலவித வேடமோ,
காண வேண்டியதைக் காணாத மூடர்கள்
        வயிறு நிரப்பிட வேடமிடும் வீணர்கள் !

ப்ரத்யக்ஷம் பாலா,
18.06.2007.



जटिलो मुण्डी लुञ्छितकेशः
काषायाम्बरबहुकृतवेषः ।
पश्यन्नपि च न पश्यति मूढः
उदरनिमित्तं बहुकृतवेषः ॥

ஜடிலோ முண்டீ லுஞ்சித கேஶ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஶ்யந்ந்யாபி ச ந பஶ்யதி மூட:
உதரநிமித்தம் பஹுக்ருத வேஷ:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

50
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 15

வாடியது உடல்; வெளுத்தது தலை !
        ஆடின பற்கள்; உதிர்ந்தன எல்லாம் !
கூடியது முதுமை; கிடைத்தது கைத்தடி !
        ஓடியதா ஆசை ? இன்னும் விட வில்லையே !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.05.2006.



अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम् ।
वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஶநவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சத்யாஶா பிண்டம்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

42
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 16

எதிரே அக்னி தகிக்க, பின்னே ஆதவன் பொசுக்க,
        இரவிலோ முகம் புதைத்தும் குளிர் வந்து வாட்ட,
உணவுக்கு அலைந்தும், மரத்தடி கிடந்தும்,
        ஆசையின் பிடிப்பு அகலுவது இல்லையே !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.06.2007.



अग्रे वह्निः पृष्ठे भानुः
रात्रौ चुबुकसमर्पितजानुः ।
करतलभिक्षस्तरुतलवास:
तदपि न मुञ्चत्याशापाशः ॥

அக்ரே வஹ்னி: ப்ருஷ்டே பானு:
ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷ: தருதலவாஸ:
ததபி ந முஞ்சத்யாஶாபாஶ:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

44
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 19

யோகத்தை நாடினும், இன்பத்தைத் தேடினும்,
        கூடிக் குலாவினும், தனிமையை விரும்பினும்,
அகத்தில் பரமனை ஆழ்ந்து நினைத்திரு;
        மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! மகிழ்ச்சியில் திளைக்கலாம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
07.11.2006.



योगरतो वा भोगरतो वा
सङ्गरतो वा सङ्गविहीनः ।
यस्य ब्रह्मणि रमते चित्तं
नन्दति नन्दति नन्दत्येव ॥

யோகரதோ வா போகரதோ வா
சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

54
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 20

கீதையின் வரிகளில் ஒன்றேனும் படி !
        கங்கையின் நீரில் துளியேனும் குடி !
‘கண்ணா !' என்றொரு முறையேனும் துதி !
        யமனை நினைத்துனக்கு பயமேது இனி ?

ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2008.



भगवद्गीता किञ्चिदधीता
गङ्गाजललवकणिका पीता ।
सकृदपि येन मुरारिसमर्चा
क्रियते तस्य यमेन न चर्चा ॥

பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி ஏன முராரீ சமர்ச்சா
கியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

544
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 21

மறுபடி பிறப்பு, மறுபடி இறப்பு ;
        மறுபடி தாயின் வயிற்றில் உதயம்.
விடிவும் இல்லை, முடிவும் இல்லையே !
        கோகுலக் கண்ணா ! காத்திடு என்னை !

ப்ரத்யக்ஷம் பாலா,
29.04.2007.



पुनरपि जननं पुनरपि मरणं,
पुनरपि जननी जठरे शयनम्।
इह संसारे बहुदुस्तारे,
कृपयाऽपारे पाहि मुरारे॥

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே ஶயனம் ;
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்த்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

545
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 24

உன்னிடம், என்னிடம், எங்கெங்கும் இறைவன் ! -- பின்
        வெறுப்புடன் வீணே ஏன் இந்த கோபம் ?
அனைத்திலும் நீயே இருப்பதை உணர் !
        அனைத்து இடத்திலும் பிரிவினை தவிர் !

ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2007.



त्वयि मयि चान्यत्रैको विष्णु-
र्व्यर्थं कुप्यसि मय्यसहिष्णुः ।
भव समचित्तः सर्वत्र त्वं
वाञ्छस्यचिराद्यदि विष्णुत्वम् ॥

த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு:
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத்யதி விஷ்ணுத்வம்

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

pb,
Many of the verses of 'bjhaja gOvindm' seem to be later addition. Though I have read them, they are not in standard literature.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

vgovindan wrote: 26 Aug 2018, 15:51 pb,
Many of the verses of 'bjhaja gOvindm' seem to be later addition. Though I have read them, they are not in standard literature.
Yes. I am providing only selected verses from the standard literature. If you find anything strange, kindly ignore.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

40
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 25

பகையோ நட்போ, மகவோ உறவோ,
        பகையும் வேண்டா; பரிவும் வேண்டா.
அனைவ ரிடத்தும் உனையே கண்டிரு;
        பிரிவு உணர்வை வேருடன் களைந்திடு.

ப்ரத்யக்ஷம் பாலா,
29.04.2007.



शत्रौ मित्रे पुत्रे बन्धौ
मा कुरु यत्नं विग्रहसन्धौ ।
सर्वस्मिन्नपि पश्यात्मानं
सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ॥

ஶத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குறு யத்னம் விக்ரஹஸந்தௌ
ஸர்வஸ்மின்னபி பஶ்யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஞானம்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

546
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 26

ஆசை, கோபம், செல்வம், மயக்கம்
        அனைத்தையும் விடுத்து யாரென உணர் !
தன்னை அறிந்திடா மூடர் அனைவரும்
        இருளில் மூழ்கி வருந்துவர் நிச்சயம்.

ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2007.



कामं क्रोधं लोभं मोहं
त्यक्त्वाऽत्मानं भावय कोऽहम् ।
आत्मज्ञान विहीना मूढाः
ते पच्यन्ते नरकनिगूढाः ॥

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
ஆத்மஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே நரகனிகூடா:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

46
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 27

கீதையும் சஹஸ்ர நாமமும் பாடு!
        விஷ்ணுவின் உருவைச் சிந்தையில் சூடு!
சித்தம் தெளிந்திட நல்லோரை நாடு!
        நித்தம் வறியோர்க்கு உதவிட ஓடு!

ப்ரத்யக்ஷம் பாலா,
30.04 .2007.



गेयं गीतानामसहस्रं
ध्येयं श्रीपतिरूपमजस्रम् ।
नेयं सज्जनसङ्गे चित्तं
देयं दीनजनाय च वित्तम् ॥

கேயம் கீதாநாமஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜனஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

48
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 30

மூச்சை அடக்கு; புலனையும் அடக்கு.
        நிலையானது எதுவென நித்தமும் சிந்தி.
ஜபத்துடன் கூடிய சமாதி நிலையில்
        மனதைக் கட்டு; உயர்நிலை கிட்டும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.



प्राणायामं प्रत्याहारं
नित्यानित्य विवेकविचारम् ।
जाप्यसमेतसमाधिविधानं
कुर्ववधानं महदवधानम् ॥

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம் ।
ஜாப்யஸமேத ஸமாதிவிதானம்
குர்வவதானம் மஹதவதானம் ॥



பஜ கோவிந்தம்
முற்றும்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

547
துதி

ஐயோ என்று அழுதால் அவலம் தீர்ந்திடுமோ ?
ஐயனைப் பாடி நில் ! அகிலம் தேனாகும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
31.08.2018.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

pb,
I hope you are combining your translation of Bhaja Govindam as a blog.
I can help you to transliterate to other languages - Telugu, Kannnada and Malayalam

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

@vgovindan
Thank you very much for your kind offer! Surely I will seek your support in due course.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

(898)
ஓர் உருவில் சரி பாதி
தோடுடை இரு செவி யாளுக்கீந்த
முக்கண்ணன் மைந்தன் மூலவன்
நான் முகனை ஒறுத்தவனுக்கு மூத்தவன்
ஐங்கரத்தானை ப் பணி

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

547
(பழைது - விட்டுப் போனது.
எப்போதோ மறந்தது. எனினும் பதிந்து வைப்போமே.)



தெளிவு வரும் !

மதி குறை வென்பார்;
மதில் மேல் குரங்கென்பார்.
இது குறை யென்பார்;
இதில் மேல் அதுவென்பார்.
எதிர் மறை கொள்வார்;
எதி லும் குறைகாண்பார். -- ஒரு நாள்
மதி தெளி வாவார்;
முதிர் வில் நிறைகாண்பார்.

வாழ்க !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

காதல் பாதை

'நான்' இருந்தபோது அரி இல்லை;
அரி உள்ளான் இப்போது; 'நான்' இல்லை;
காதல் பாதை குறுகலானது;
இருவருக்கு இடமில்லை.

(கபீர் பாடலின் மொழிபெயர்ப்பு.)

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

படி தாண்டாப் பத்தினி

உண்டியில்லை, உடுப்பதற்கு
உடையென்ற சாக்கொன்றுண்டு, மானத்திற்கு;
உறைவிடமொன்றிருந்ததில்லை, என்றுமே;
ஊன்பசிக்குத் துணை வேண்டுமே! உண்டு;

கால்கடுக்கத் திரிந்து இரந்துண்டதுண்டு;
கடவுளைக் குற்றம் கூறித் தூற்றியதில்லை;
கள்ளம் புரிந்து கொள்ளையடித்ததில்லை;
கனவுகளோடு நல்லுறக்கம் நாளுமுண்டு;

படிதாண்டாப் பத்தினியவள் - தாண்டுதற்குப்
படியென்றொன்று இருந்தால்தானே!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

திருச்சிற்றம்பலம்

தான் அசையாது, தன்னின்று
தானே அசைவினைத் தோற்றுவித்து,
அசைவினில் இசைவினைக் கலந்து,
அத்தனை அண்டங்களையும்
அனவரதமும் கயிறொன்றில்லாது
ஆடும் பம்பரம்போல் ஆடவைத்து - என்
சித்தம்தனிலும் விளையாடி நிற்கும்
சிற்றம்பலத்துறை தற்பரமே!
உன்னை உணர்ந்துன்னுள்
உறைந்திடும் பேறுமுண்டோ, தமியேனுக்கும்?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

காளையின் துயரம்

குழந்தை பெண்ணெனில் வேண்டாமென
குப்பைத் தொட்டியில் போடும் மனித இனமே!
பெண்ணுக்கு ஆண் விகிதம் உலகினில்
பெருமளவுக்கு ஈடாகத்தானே உள்ளது?

எம்மை நோக்கிடுவீர், உண்மையறிவீர்;
எருதாகப் பிறந்தால், ஏன் பிறந்தாய், மகனே
எனப் பெற்றவள் பாடுகின்றாள் - ஏனெனில்
எருதே வேண்டாம், பசுதான் வேண்டுமென
எம்மைக் கசாப்புக் கடைக்கு விற்றனரே;
எங்கு நோக்கினும் இதுவே உண்மையாம்

யாரந்தக் கடவுள்? யாருக்குக் கடவுள்?
யாரறிவார் எமது துயரினை? கதியேதும்
காணாது கலங்கி நிற்கின்றோமே;
கண்டுகொள்ள யார்தான் வருவாரோ?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

ஓர் இடத்தில் ஆண் வேண்டாம்
ஓர் இடத்தில் பெண் வேண்டாம்
இனப் பெருக்கத்திற்கு இனம் இரண்டு
வேண்டுமென இறைவன் நினைத்தானோ?
அவனை விஞ்சிய பகுத்தறிவாளன்
ஓரினச் சேர்க்கையில் தவறில்லை
நுண்ணுயிர்கள் சில பால்இரண்டின்றி
பெருகுகின்றனவே என நினைத்தான்.
மனிதன் தன்னை நுண்ணுயிர் ஆக்கிக்கொண்டு விட்டான்
இவனுக்கு அறிவெதற்கு கொடுத்தேன்
இன உறுப்புக்கள் மட்டுமே போதுமே
என வருந்துகிறான் உலகியற்றியான்

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

340.
குமட்டல்.

மல்லிகை மலர் வாசம் மணக்கும் -பவழ
மல்லி போதையாய் மனம் கிறங்கும்
கண் கவர் கதம்பம்,கட்டு மருக்கொழுந்து இம்
மண்ணின் வளத்தால் ஈசன் புகழ் இசைக்கும்

இன்று பூக்கடைக்கு கீழே மூடிக்கிடந்த. சாக்கடையை
நன்று கிளறிட முடை நாற்றம் தாங்கவில்லை .
மூக்கை மூட வைத்த இம் மூடச் செயலால்
தக்க பயனடைந்தார் யாருமில்லை ,மனக்கசப்பு அனைவருக்கும்.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Ponbhairavi wrote: 11 Oct 2018, 22:46 340.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு


சென்று வாருங்கள் பொன் பைரவி ஐயா! தங்களை ஒருமுறையேனும் சந்திக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன் - இனி நடப்பதற்கில்லை. ஆண்டுகள் சில கடந்தாலும், இக்குழுமத்தில், குறிப்பாக இவ்விழையில் எளியேனுக்கு தாங்கள் அவ்வப்போது அளித்த ஊக்குவிப்பிற்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல. கண்களில் நீர்த்துளிகளுடன், ஸ்ரீதர்

Post Reply