Chidambaram

History, religion and culture
Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Chidambaram

Post by satyabalu »

சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்

வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும். உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். இதன் ஒலியை கேட்பவர் ஆயுள் 12 வினாடிகள் அதிகரிக்கும்..!!

Post Reply