Significance in customs

History, religion and culture
Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Significance in customs

Post by satyabalu »

குழந்தை பிறந்த பதினோராவது நாள் புன்னியாவாசனம் செய்வது வழக்கம்.
தொப்புள் கொடி அறுத்த இடத்தின் கீழ்ப்பகுதியில் கறுப்புக் கயிறு கட்டி, அதில் செப்பினால் செய்யப்பட்ட நாய்க்காசைத் தொங்க விடுவார்கள்.
இது தேவையில்லை என்று தற்போதைய சமூகம் சொல்கிறது.
ஆனால் யோகாவில் காயகல்பம் கற்றவர்கள் அரை ஞாண் கயிறும் நாய்க்காசும் தேவை என்கிறார்கள்.
எமன் பாசக்கயிறுப் போட்டு உயிரை எடுத்துக்கொண்டு போகும்போது நமது புண்ணிய மூட்டையைச் சுமந்து செல்வது நாய்தான்.
அதைத்தான் நம் முன்னோர்கள் சூசகமாக குழந்தை இடுப்பில் பாதுகாப்பாக கட்டி வைத்தார்கள்.
நாய்க்கு நமது புண்ணியத்தை மோப்பம் பிடித்து உறிஞ்சும் சக்தி உள்ளது என்பது இந்துக்களின் நம்பிக்கை.
விஷயம் தெரிந்தவர்கள் நாயை வீட்டுக்கு வெளியே வைத்துதான் வளர்ப்பார்கள்.
கோவிலில் பைரவர் சந்நிதி வெளிப்பிராகாரத்தில் வெளியே செல்லும் முன்பாக தரிசிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும்.
வெளியே இருந்தாலும் நம் உயிர் மூச்சுடன் ஒட்டி ஓடி வருவது நாய்தான்.
ஆகவே நாய்க்காசுடன் கூடிய அரை ஞாண் கயிறு குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் ஐந்து வயது வரையிலாவது தேவை
அது தவிர கறுப்புக் கயிறு குழந்தைக்கு திருஷ்டி படாமலும் இருக்க உதவும்

Post Reply