Arulmigu Neelakanteshwarar

History, religion and culture
Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Arulmigu Neelakanteshwarar

Post by satyabalu »

"
Lord Shiva
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருநீலக்குடி- 612 108, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் - மாவட்டம்
திருநீலக்குடி நீலகண்டேசுவர் என்றாலே இந்த எண்ணெய் அபிஷேகம்தான் என்கின்ற அளவுக்கு இந்த அபிசேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியம் வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிசேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிசேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிசேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சுவாமி மேலேயே உவரி விடும். அதாவது எண்ணெய் முழுவதும் சிவலிங்கத்திற்குள்ளேயே(உறிஞ்சி) இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும். குடம் குடமாக கொட்டி அபிசேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது.
இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிசேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிசேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிசேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாகத்தானே இருக்கவேண்டும் ? ஆனால் இங்குள்ள ஈசனின் மேனி சொர சொரப்பாகவே இருக்கிறது."

Post Reply