Look forward to more! Have been reading a little at a time. Take that break. We all need one, it seems We will come back with renewed energy to our writing on the forum...
மறைபொருள் அவனைக் கொல்ல நீநினைப் பதுநடக் குமோடா குறையிலா உடன்பிறந் தவளை வாட்டினாய் பெருமை உண்டோ இறையவன் மறைத்தான் தன்னை காலத்தில் வீழ்வாய் நீயும் பறைகிறேன் உனக்கு நானும் மேலும் கொடுமைகள் செய்திடாதே (௭௮)
அங்ஙனம் உரைத்த துர்க்கை பாரினில் பலவி டத்தில் தங்கினாள் மனிதர் எல்லாம் பூசனை புரிந்தார் நித்தம் காசியில் அவள்பேர் அன்ன பூரணி என்றே ஆகும் காசிலா அவளை மக்கள் காளிஇ எனவும் சொன்னார் (௭௯)
தாதுறு மலர்கள் சூடிக் கேள்வனின் மடியில் இன்பம் தீதிலா வகையில் துய்த்துக் கோடிநாள் மகிழ வந்த கோதிலா வசுதே வன்ம னையாள் அண்ணன் கேட்டப் போதிலே தளைகள் நீக்கிப் பின்வரும் மொழிகள் சொன்னான் (௮௦)
தயவிலாக் குரூரன் யானுன் னையுமு றவைநட் பையென் நயமிலா செயல்கள் மூலம் தள்ளினேன் புறத்தே இன்று அந்தணன் ஒருவன் தன்னைக் கொன்றவன் நிலையில் வாழ்வில் அந்தகன் பிடியில் எங்கே செல்வனோ அறியா நின்றேன் (௮௨)